ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

உலகின் மிகவும் உயரமான கட்டடம் Burj Khalifaசூரிய மண்டலத்துக்கு அருகே 5 புதிய கிரகங்கள் : நாசா கண்டுபிடிப்பு


சூரியமண்டலத்துக்கு அருகே 5 புதிய கிரகங்கள் இருப்பதை கண்டுபிடித்து உள்ளதாக அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

டெலஸ்கோப் டெல்டா – 2 என்ற டெலஸ்கோப், ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விண்ணில் ஏவப்பட்டது. இதில் மிகப்பெரிய காமிரா பொருத்தப்பட்டு உள்ளது.

இந்த டெலஸ்கோப் தொடர்ந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை கண்காணித்து வருகிறது. இந்நிலையில் இந்த டெலஸ்கோப் 5 கிரகங்களை கண்டுபிடித்து உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

இந்த 5 புதிய கிரகங்களும் நெப்டினை விட பெரியவை. இந்த கிரகங்களுக்கு 4 பி, 5 பி, 6 பி, 7 பி, 8 பி என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த 5 கிரகங்களும் பூமியை விட 4 மடங்கு பெரியவை ஆகும்.

இவை சூரியனுக்கு நெருக்கமாக உள்ளன.அவை 3.2 நாட்கள் முதல் 4.9 நாட்களுக்கு ஒருமுறை தம்மைத்தாமே சுற்றி வருகின்றன.

சூரியனை விட இந்த 5 கிரகங்களும் அதிக வெப்பம் மிகுந்தவை என்றும், மிகுந்த பிரகாசமான இந்த கிரகங்களில் 1200 முதல் 1650 சென்டி கிரேடு வரை வெப்பம் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் நாசா அறிவித்துள்ளது.

2036-ம் ஆண்டு பூமியில் மோதும் ராட்சத விண்கல்


விண்வெளியில் கோடிக்கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. அவை எப்போதாவது பூமி ஈர்ப்பு விசைக்குள் வந்து பூமியை நோக்கி வேகமாக வரும். ஆனால் வரும் வேகத்தில் அவற்றில் தீப் பிடித்து நடுவானிலேயே சாம்பலாகி விடும்.

அளவில் சிறிய கற்கள் இப்படி சாம்பலாகி விடுவது உண்டு. பெரிய கற்களாக இருந்தால் எரிந்து சாம்பலாகாமல் அதன் மீது பகுதி பூமியில் விழுவதும் உண்டு. அதுவும் சிறிய அளவே இருப்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் சமீப காலங்களில் ஏற்படவில்லை.

இப்போது மிகப் பெரிய ராட்சத கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அது விண்ணில் தீப்பிடித்தாலும் கூட கல் பெரிய அளவில் இருப்பதால் பூமிக்கு பெரும் சேதம் ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.

இந்த கல் 350 மீட்டர் குறுக்களவு உள்ளது. அதன் சுற்று வட்ட பாதையில் இருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாக பூமி பக்கமாக வந்து கொண்டிருக்கிறது.

2029-ம் ஆண்டு இந்த கல் பூமிக்கு 30 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் வரும். அடுத்த 7 ஆண்டில் மேலும் பூமியை நோக்கி நகர்ந்து 2036-ம் ஆண்டு பூமி சுற்றுப் பாதைக்குள் நுழையும். உடனே புவி ஈர்ப்பால் ஈர்க்கப்பட்டு பூமியில் விழும்.

அப்போது பூமியில் பிரான்சு நாட்டு அளவுக்கு பெரிய பள்ளம் உருவாகும். பல லட்சம் மக்கள் உயிரி ழக்கவும் நேரிடும். பூகம்பம், சுனாமி, போன்ற இயற்கை பேரழிவு நிகழலாம்.

எனவே இதை நடுவானிலேயே அழிக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக ஆய்வில் ரஷிய விஞ்ஞானிகள் ஈடுபடுகிறார்கள். அவர்களுடன் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய விஞ்ஞானிகளும் ஆய்வு செய்கின்றனர்.

இது தொடர்பான விஞ்ஞானிகள் கூட்டம் விரைவில் நடைபெறும் என்று ரஷிய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் அனாடலி பெரிமினோங் தெரிவித்தார்.

வியாழன், 8 ஏப்ரல், 2010

இதயம் சில உண்மைகள்!


பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30) சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும்.


(எலி - நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.

2. மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும்.

3. நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

4. மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன .

5. ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்பு (pump) பண்ணுகிறது. (ஒரு பேரல் என்பது 117.34 லிட்டேர்கள் …நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்)

6. பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

7. நம் இதயத்தின் அளவு நமது கையின் ஒரு பிடி அளவே (clenched fist).

8. கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயமே.

9. நாம் இதயத்தின் மேல் கை வைஎன்றால் உடனடியாக நாம் நமது கையை நெஞ்சின் இடதுபக்கம் வைப்போம் ஆனால் இதயம் நெஞ்சின் நடுவில்தான் இரண்டு நுரைஈரல்லுக்கும் மத்தியில் இருக்கிறது. இதயத்தின் அடிபகுதி மட்டுமே சற்று இடப்பக்கம் சாய்ந்து இருக்கும் எனவேதான் நாம் அவ்வாறு உணருகிறோம்.

10. லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த சத்தம் உருவாகிறது.

வண்ண விளக்குகளால் மூளைக்கு ஆபத்து

வண்ண விளக்குகள் வசீகரமானவை. கண்களை கவர்ந்திழுக்கும். பலரும் விரும்புவதால் வண்ணவிளக்குகள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக பூஜையறை, படுக்கை அறை மற்றும் பெரியவர்களின் படங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் `ஜீரோ வாட்ஸ்பல்புகளாவது ஒவ்வொரு வீடுகளிலும் ஒளிரும்.


அமெரிக்காவின் எம்..டி. பல்கலைக்கழக நரம்பியல் வல்லுனர்கள், விளக்கு ஒளியால் ஏற்படும் நரம்பியல் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்கள். இதில் வண்ண விளக்குகளில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் மூளையைப் பாதிப்பது தெரியவந்துள்ளது.
இதற்காக ஆய்வகத்தில் பல வண்ண விளக்குகளுக்கு இடையே எலிகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டன. ஆய்வில் விளக்குகளை அணைக்கும்போது ஏற்படும் எலக்ட்ரிக் கதிர்வீச்சு மூளை செல்களான நிரான்களைப் பாதிக்கின்றன. அவற்றின் செயல்பாட்டை தடுப்பதால் பல விபரீத வியாதிகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக உடல் வலி, பார்கின்சன் என்னும் ஞாபகமறதி வியாதி, மூளை முடக்கம், இதயக் கோளாறுகள், நோய் எதிர்ப்பு அமைப்பு (இம்ன் சிஸ்டம்) செயல்களில் பாதிப்பு மற்றும் இன்னும் பல வியாதிகளுக்கு வழி வகுக்கிறது.
ஒவ்வொரு வண்ண விளக்கும் வேறுவேறு பாதிப்புகளை உருவாக்குவது குறிப்பிடத்தக்கது. சிவப்பு வண்ண விளக்கு நிரான்களை செயலிழக்கச் செய்கிறது. நீல வண்ண விளக்குகள் ஒரு வகை ஜீன்களைப் பாதிக்கிறது. மஞ்சள் விளக்குகள் வேறுவகை ஜீன்களைப் பாதிக்கிறது.
உடலியக்கம் பல மின்தூண்டல்களால்தான் நடைபெறுகிறது. இதற்கிடையே விளக்குகளை அணைக்கும்போது ஏற்படும் மின் அதிர்வுகள், மூளையை பாதிக்கிறது என்கிறது ஆய்வு.

புளுட்டோ கிரகம் பிரகாசமாக மாறுகிறது : நாசா


புளுட்டோ கிரகம் பிரகாசமாக மாறி வருவதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான `நாசா' தெரிவித்துள்ளது.புளுட்டோ கிரகம், சூரியனை கடந்த 248 ஆண்டுகளாக சுற்றி வருகிறது.இந்நிலையில், அது பிரகாசமாக மாறி வருவதாக தெரிவித்துள்ள 'நாசா', விண்வெளியில் சுற்றி வரும் ஹப்பிள் டெலஸ்கோப் எடுத்த படங்களின் அடிப்படையிலேயே இக்கருத்தை வெளியிடுவதாக கூறியுள்ளது.
இதற்கு முன்பு கடந்த 1994 ஆம் ஆண்டு, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் எடுத்த அனுப்பிய படங்களைவிட தற்போது எடுக்கப்பட்டுள்ள படத்தில் புளுட்டோவின் மேற்பரப்பு மிக தெளிவாகவும் பிரகாசமாகவும் இருப்பதாக `நாசா'தெரிவித்துள்ளது.
புளுட்டோ கிரகத்தில், சூரிய ஒளி படும் துருவத்தின் மேற்பரப்பில் உள்ள பனிக்கட்டி உருகுவதாலும், அதன் எதிர் துருவம் உறைவதாலும் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அது மேலும் கூறியுள்ளது.

உடல் எலும்புகள் பலமாக இருக்க....


உடல் எலும்புகள் பலமாக இருக்க வேண்டும் என்றால் சுண்ணாம்புச்சத்து தேவையான அளவு இருக்க வேண்டும். கூடவே, வைட்டமின் `டி’யும் தேவை.
இந்த சத்துகள் பால், தயிர், மீன், முட்டை, வெண்ணை ஆகியவற்றில் நிறைய காணப்படுகின்றன. இவற்றுடன் தினசரி, முளைவிட்ட கொண்டைக் கடலையும் சாப்பிட்டு வரவேண்டும். சூரியக் குளியலும் அவசியம். டாக்டர் யோசனைப்படி வைட்டமின் `டி’யை மாத்திரையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

சுண்ணாம்புச் சத்து அதிகம் கிடைக்க வேண்டும் என்றால் முட்டைகோஸ், தவிடு நீக்காத கோதுமை மாவில் செய்யப்பட்ட சப்பாத்தி, தண்டுக்கீரை, கேரட், ஆரஞ்சுப் பழம், பாதாம் பருப்பு, வால்நட் பருப்பு ஆகியவற்றையும் தெடர்ந்து உணவில் சேர்த்து வரவும்.

இதயம் வேகமாக துடித்தல், தூக்கமின்மை, தசைவலி, எரிச்சல் போன்ற பாதிப்புகள் தெரிந்தால் அது சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டின் அறிகுறியேதான்.

மேற்கூறிய உணவு வகைகளைத் தெடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், எலும்பு சம்பந்தமான நோய்கள் வருவதை தவிர்க்கலாம்.

கடன் அட்டை பின்(Pin) சிஸ்டம் மோசடி….


நாம் இப்போது வாங்கும் அனைத்து பொருள்களுக்கும் கடன் அட்டையை பயன்படுத்தி காசு கொடுக்கும் வசதி சிறு தெருக்களில் கூட வந்துவிட்டது இதற்காக அவர்கள் ஒரு பின் சிஸ்டம் உள்ள இயந்திரம் வாங்கி வைத்து நம் ஏடிஎம் அட்டையில் உள்ளதகவல்களை பயன்படுத்தி காசு எடுக்கின்றனர்.


ஆனால் ஒரு சில ஹக்கர்கள் நாம் பயன்படுத்தும் இந்த பின் சிஸ்டத்தின் தகவல்களை உலோகத்தில் ஏற்படும் பிழை மூலம் பின் சிஸ்டத்தின் தகவல்களை மாற்றியமைக்கப்பட்ட அட்டை மூலம் எளிதாக எடுத்து விடுகின்றனர் இதைப்பற்றி ஆராய்ந்து பார்த்ததில் சரியாக சில மொடல் பின் சிஸ்டம் உள்ள இயந்திரத்தில் இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் அட்டையுடன் வயர் இணைத்து கையடக்க ஹக்கிங் இயந்திரத்தில் சேர்த்துள்ளனர்.


இது எப்படி வேலை செய்கிறது என்று பார்த்தால் நாம் பயன்படுத்தும் அனைத்து வகை பின் சிஸ்டத்துக்கும் துணை செய்கிற மாதிரி இவர்கள் ஒரு எக்ஸ்ட்ரனல் சிறிய வகை கருவி ஒன்றை தயார் செய்து விடுகின்றனர்.


அடுத்தும் எந்த பின் சிஸ்டம்-ஐ கொள்ளை அடிக்க வேண்டுமோ அந்த பின் சிஸ்டத்துக்கு சென்று அங்கு இவர்கள் தயார் செய்து வைத்திருக்கும் ஏடிஎம் அட்டையுடன் (ஹக்கிங் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்) இதை அந்த பின் சிஸ்டத்துன் இணைத்தவுடன் ஆத்தண்டிங்கேசன் கேட்கும் இவர்கள் ஏடிஎம் சங்கேத கோடு கொடுப்பது போல் ஆம் என்று உறுதிபடுத்திவிடுகின்றனர்.


இதன் பின் என்ன நடக்கிறது என்றால் இதுவரை அந்த பின் சிஸ்டத்தில் யாரெல்லாம் ஏடிஎம் அட்டை பயன்படுத்தினார்களோ அவர்கள் அத்தனைபேரின் கணக்கு எண்ணும் சங்கேத வார்த்தையும் சிலநொடியில் அவர்கள் எடுத்து வந்திருக்கும் ஹக்கிங் இயந்திரத்தில் பதிவாகிவிடும்.


அடுத்த சில மணி நேரத்திற்குள் அத்தனை பேரின் வங்கிகணக்கில் உள்ள பணத்தையும் எளிதாக கொள்ளை அடித்து விடுகின்றனர் இப்படி திருட்டு போனதும் உடனடியாக நமக்கு தெரிவது நாம் கடைசியாக ஏடிஎம் பயன்படுத்திய அந்த கடைதான் அதனால் இனி “பின் சிஸ்டம்” வைத்துள்ள கடைக்காரர்கள் மற்றும் டிக்கெட் பதிவு செய்யும் இடத்தில் பின் சிஸ்டம் இயந்திரம் வைத்துள்ளவர்கள் தாங்கள் இனி அதிக அளவு சோதனையுடன் விழிப்பாக இருந்தால் தான் இது போன்ற குற்றங்களை தடுக்க முடியும்.


அதுமட்டுமின்றி இவ்வாறு உங்கள் இயந்திரம் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டால் இதற்கு புதிதாக அவர்கள் செயல்படுத்தியிருக்கும் கருவியை வாங்கி வைத்தால் கூட பிரச்சினைகளை பெரும்ளவு தவிர்க்கலாம் என்பது நம் எண்ணம்.

தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள்


இன்றைய நிலையில் அறிவியலின் வளர்ச்சி ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சாதனைகளை சாதாரணமாக நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம்.


இந்த அறிவியலின் அதிசயங்களையும் பிணுக்குத் தள்ளும் இயற்கையின் இயல்பான சில நிகழ்வுகளும் அவ்வப்பொழுது யாரும் எதிர்பாராமலே நடந்துவிடுகிறது . அந்த வகையில் ஒரு புதிய அதிசய நிகழ்வு விரைவில் வர இருக்கிறது இதுநாள் வரை தங்கம், வைரம், வெ‌‌ள்‌ளி என்று பல நகைகளை நம்மை அழகுபபடுத்துவதற்காக பயன்படுத்தி வந்தோம். ஆனால் இப்பொழுது அந்த அபரணங்களுக்கு விடுமுறைக்கொடுக்கும் தூரம் மிக அருகில் வந்துவிட்டது.


த‌ங்க‌‌ம், வெ‌‌ள்‌ளி, வைர நகைகளை இ‌னி மற‌ந்து விடு‌‌ங்க‌ள். விரைவில் வெளியாகவிருக்கும் பு‌‌திய வகை ஆபரண‌ங்க‌ள் உ‌ங்களை மேலு‌ம்
ஜொ‌லி‌க்க வை‌க்கும் அதிசய நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது. ஆம். தா‌ய்‌ப்பா‌லி‌‌ல் இரு‌ந்து நெக்லஸ், பிரேஸ்லெட் என்று 70 வகையான ஆபரணங்களை தயாரிக்க முடியும் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ல‌ண்ட‌னி‌ல் உ‌ள்ள நகை தயா‌‌ரி‌க்கு‌ம் குழு ஒன்று, தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்களை தயாரிக்கும் வித்தைகளை செய்து காண்பித்துள்ளது.


இந்த சாதனையின் முதல் முதல் தயாரிப்பாக இ‌ந்தக் குழு 'பா‌ல் நெ‌க்ல‌ஸ்'-களை‌த் தயா‌ரி‌‌த்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளனர் . இதை அடுத்து அந்த குழுவின் அறிக்கையில் .


‌பிரே‌ஸ்ல‌ெ‌ட் மற்றும் 70 பிறவகை ஆபரணங்களையும் இ‌ந்த ஆ‌ண்டு இறு‌திக்குள் தயாரிக்க இரு‌ப்பதாக அக்குழுவினர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.


தா‌ய்‌ப்பாலுடன் ‌‌வி‌னிகரைச் சேர்த்து (அ‌சி‌‌ட்டி‌க் அ‌மில‌ம்) ந‌ன்கு கொ‌‌தி‌க்க வை‌ப்பத‌ன் மூல‌ம் பா‌லி‌ல் உ‌ள்ள கே‌சி‌ன் புர‌த‌ம், இ‌ந்த கலவையை
‌பிளா‌ஸ்டி‌க் போ‌ன்று மா‌ற்றி விடுகிறது. ‌பி‌ன்ன‌ர் அதில் வண்ணம் பூசி (பெயிண்ட்) நாம் விரும்பும் வடிவில் அல்லது அச்சுகளில் ஊற்றி ஆபரணங்களாக மாற்றுகிறார்களாம்.


பிளாஸ்டிக் போன்ற தன்மை கொண்டிருப்பதால், அழ‌கிய வடி‌வி‌ல் நகைகளாக மா‌ற்‌றி விடுகிறார்களாம்.


தாய்ப்பாலை உபயோகித்து `குழந்தைகளின் தலை' போன்ற வடிவிலான நெக்லஸில் அணியக்கூடிய பதக்கம் (டாலர்) ஒன்றையும், தாய்ப்பாலுடன் உலோகத்தைச் சேர்த்து பிரேஸ்லெட் ஒன்றையும் பிரான்ஸ் நாட்டு நகை வடிவமைப்பாளர்கள் ஏற்கனவே உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .


இ‌துபோ‌ன்ற நகை வடிவமை‌ப்பை அவ‌ர்க‌ள் "பா‌ல் மு‌த்து‌" (milk pearl), எ‌ன்று கு‌றி‌ப்‌பிடு‌கி‌றார்கள். இந்த முறையில் உருவாக்கப்பட்ட ஆபரணங்களை செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் கண்காட்சியில் அவர்கள் வைக்க உள்ளார்களாம்.


என்றாலும், தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் உருவாக்கம், வர்த்தகரீதியில் இன்னமும் செயல்படுத்தப்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்று சொல்லலாம்.

அதிவேக Opera பிரவுசர் வெளியீடு


விண்டோஸ் இயக்கத்தில் இயங்குவதில் இதுதான் அதிவேக பிரவுசர் என்ற அடைமொழியுடன் களத்தில் இறக்கப்பட்டுள்ளது ஆப்பரா பிரவுசர் பதிப்பு 10.50. என்ற ஆப்பராவின் தளத்தில் இதனை டவுண்லோட் செய்திடலாம். இதில் தரப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் மற்றும் கிராபிக்ஸ் லைப்ரரி இரண்டும் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் புதுமையானவையாகும்.
இதனைப் பயன்படுத்துபவர்கள், எந்த இணைய தளத்திற்கும் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இதன் வடிவமைப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அத்துடன் தற்போது மற்ற பிரவுசர்களில் அமைந்திருக்கும் பிரைவேட் பிரவுசிங் வசதியும் தரப்பட்டுள்ளது. வழக்கமான மெனு பாருக்குப் பதிலாக ரேடியோ பட்டன் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு புள்ளியை அழுத்துவதன் மூலம், ஆப்பரா தரும் அனைத்து வசதிகளையும் பார்த்து அறியலாம்.

புதிய தொழில் நுட்பம் முழுவதையும் இது சப்போர்ட் செய்வதால், கண்களைக் கவரும் வகையில் இணைய தளங்களை அமைப்பவர்கள், இந்த பிரவுசரில் அவை நன்றாகக் காட்டப்படும் என நம்பி அமைக்கலாம். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 தொகுப்புகளின் ஏரோ கிளாஸ் இந்த பிரவுசரில் சப்போர்ட் செய்யப்படுகிறது.

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம்


உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் நமது உடலின் வெப்பநிலை கூடினாலோ, குறைந்தாலோ உடல் நோய்வாய்ப்படும். நமது இயக்கத்துக்கு ஏற்ப வெப்ப ஆற்றல் வெளிப்படும். மாறுபடவும் செய்யும்.
இப்படி உடல் இயக்கத்தால் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தை சேகரித்து அந்த ஆற்றலைக் கொண்டு எலக்ட்ரானிக் கருவிகளை இயக்க ஒரு கருவி தயாரித்துள்ளது எம்..டி. பல்கலைக்கழகம்.

நடப்பது, ஓடுவது என எந்த வேலையில் ஈடுபட்டாலும் குறிப்பிட்ட அளவில் ஆற்றல் செலவாகிறது. அதில் ஒரு பகுதி வெப்ப ஆற்றலாக வெளியேறுகிறது. இந்த வெப்ப ஆற்றலையும், சுற்றுப்புறத்தில் உள்ள காற்றில் உள்ள ஆற்றலையும் கிரகித்து மின்ஆற்றலாக சேமிக்கிறது இந்தக் கருவி. இதைக் கொண்டு 2 வாட் மின்சாரத்துக்கும் குறைவான பயன்பாட்டில் இயங்கும் எலக்ட்ரானிக் கருவிகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

செல்போன் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் கருவிகள் மிகக் குறைந்த மின் ஆற்றலில் இயங்கக்கூடியவை. எனவே இந்த கருவியில் சேமிக்கும் மின் ஆற்றலைக் கொண்டு இனி செல்போன்களை சார்ஜ் செய்ய முடியும். சார்ஜரை தேடிக் கொண்டோ, தூக்கிக் கொண்டோ திரிய வேண்டாம். அனைவரும் பயன்படுத்தலாம் இந்த லாபமான கருவியை.

ஏசரின் லிக்விட் மொபைல்

லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இயங்கும் ஏசர் நிறுவனத்தின் மொபைல் போன்கள் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
உலகின்முதல் ஆண்ட்ராய்ட் 1.6 ஹை டெபனிஷன் போனாக, ஏசர் நிறுவனத்தின் லிக்விட் மொபைல் ஸ்மார்ட் போன் வந்துள்ளது. குவால்காம் ஸ்நாப்ட்ராகன் (1GHz) என்ற ப்ராசசருடன் வந்துள்ள முதல் மொபைல் போனும் இதுவே. இதில் 3.5 அங்குல அகலத்தில் டச் ஸ்கிரீன் 480 x 800 பிக்ஸெல்களுடன் தரப்பட்டுள்ளது. ஜியோ டேக்கிங் இணைந்த 5 எம்பி கேமரா, ஆட்டோ போகஸ், எல்..டி. பிளாஷ், ஆக்ஸிலரேட்டர், செல்ப் டைமர், 2560 x 1920 ரெசல்யூசனுடன் தரப்பட்டுள்ளது.

புளுடூத், வைபி, .ஜி.பி.எஸ். (AGPS)தொழில் நுட்பம் இன்டர்நெட் நெட்வொர்க் இணைப்பிற்கு துணைபுரிகின்றன.3G/GSM/GPRS/EDGE நெட்வொர்க் தொழில் நுட்பம் இயங்குகின்றன. வைபி, புளுடூத் ஆகியவையும் தரப்பட்டுள்ளன.

உள்நினைவகம் 256 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம்.1350 mAh பேட்டரி தொடர்ந்து ஐந்து மணி நேரம் பேசிட வழி தருகிறது.

இந்த போனின் தனிச் சிறப்பாக இதன் மூன்று ஹோம் ஸ்கிரீனைக் குறிப்பிடலாம். இதனால் பயன்படுத்தும்போது ஒவ்வொரு ஸ்கிரீனிலும் வெவ்வேறு விட்ஜெட்டுகளை அமைக்கலாம். இதன் வீடியோ ஸ்ட்ரீமிங் திறன் மிக அருமையான மல்ட்டிமீடியா அனுபவத்தினைத் தருகிறது.

வெள்ளை, கருப்பு மற்றும் சிகப்பு வண்ணங்களில் உள்ள இந்த போன் ஸ்டைலான வளைவுகளுடன் ஸ்லிம்மாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் குறியீட்டு விலை ரூ.24,900. இது சராசரி இந்திய விலையைக் காட்டிலும் கூடுதல் என்பதால், பல சலுகைத் திட்டங்களை எதிர்பார்க்கலாம்

திங்கள், 5 ஏப்ரல், 2010

மனதை படிக்கும் கம்ப்யூட்டர் வடிவமைப்பு


பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள், மனிதர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை படிக்கும் வகையிலான கம்ப்யூட்டரை வடிவமைத்துள்ளனர்.

இதுகுறித்து, லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மற்றும் அவரது சகாக்கள் கூறியதாவது,

கம்ப்யூட்டரால், மனிதர்களின் மூளையை ஸ்கேன் செய்வதன் மூலம், அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை புரிந்து கொண்டு, அவற்றை அப்படியே வெளிப்படுத்த முடியும். இதற்காக, பத்து தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களிடம் ஆய்வு நடத்தப் பட்டது. இவர்களுக்கு சில பெண்கள் கடிதங்களை தபால் பெட்டியில் போடுவது, பேப்பர் கப்பில் காபி அருந்துவது போன்ற காட்சிகள் அடங்கிய, சில வினாடிகள் மட்டுமே ஒளிபரப்பாகக் கூடிய படம் காண்பிக்கப்பட்டது.

அதன் பின், அவர்கள் என்ன பார்த்தனர் என்பதை திரும்ப நினைவுப்படுத்தி பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அப்போது ஸ்கேனர் கருவி மூலம் மூளையில் ஏற்படும் ரத்த ஓட்ட மாறுதல்களை வைத்து, அதன் செயல்பாடு பதிவு செய்யப்பட்டது. பின்னர், அந்த எலக்ட்ரிக்கல் தகவல்களை, அதற்கென உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் புரோகிராம் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டவர்கள் நினைவு கூர்ந்ததை, 50 சதவீதம் துல்லியமாக வெளிப்படுத்தப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

எய்ட்ஸ் நோயை தடுக்கும் வாழைப்பழம்


வாழைப்பழத்தில் உள்ள ரசாயனம் மூலம் எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்கலாம் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எய்ட்ஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நோய் வரும் முன், தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காண்டம் பயன்படுத்தினால் எய்ட்ஸ் வராமல் தடுக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தற்போது, அமெரிக்க விஞ்ஞானிகள் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில் புது தகவலை கண்டுபிடித்துள்ளனர்.

வாழைப்பழத்தில் உள்ள கெமிக்கல் மூலம் எய்ட்ஸ் வராமல் தடுக்கலாம் என்பது தான் அது.வாஷிங்டன் நகரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். பொதுவாக தாவரங்களில் இருக்கும் ரசாயனம், நோய் தொற்றுகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை.

வாழைப்பழத்தில் இருக்கும் லேக்டின் என்ற ரசாயனம், எய்ட்ஸ் வராமல் தடுக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதை உறுதிப்படுத்தும் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொலைந்த எஸ்.எம்.எஸ் மீட்பது எப்படி?இது சிம்பியன் இயங்குதளம்(Symbian OS) பயன்படுத்தும் போன்களில் மட்டுமே சாத்தியம். முதலில் நமக்கு தேவை எப் எக்ஸ்ப்ளோரெர் (F Explorer) அல்லது எக்ஸ்ப்ளோர்(Xplore)
எப் எக்ஸ்ப்ளோரெர் (F Explorer) அல்லது எக்ஸ்ப்ளோர்(Xplore) நிறுவிய(Install) பின் C நீங்கள் அல்லது D டிரைவுக்கு(Drive) செல்ல வேண்டும்.
நீங்கள் எஸ் எம் எஸ்களை போன் மெமரியில்(Memory) சேமிப்பவராக இருந்தால் C டிரைவ், இல்லையெனில் D டிரைவ்.
டிரைவ்வில் நுழைந்த பின் சிஸ்டம்(System) போல்டருக்குள் சென்று பார்த்தால் மெயில்(mail) என்ற போல்டர் இருக்கும்.
அதனுள் 0010001_s,00100011_s என்று பல கோப்புகள் இருக்கும்.
இவை எல்லாம் நீங்கள் அழித்த குறுந்தகவல்கள்(SMSes).
இவற்றை டெக்ஸ்ட் வியுவர்(Text Viewer) உதவியுடன் பார்க்கலாம்

நோயைக் குணமாக்கும் ரிங்டோன்கள்

விதவிதமான ஒலிகள் கொண்ட மொபைல் ரிங்டோன்களுக்கு இடையே புதுமையாக வந்திருக்கிறது நோயைக் குணமாக்கும் ரிங்டோன்கள். ஜப்பான் நாட்டின் 'மாட்சுமி சுசுகி' என்ற நிறுவனத்தின் ரிங்டோன் தயாரிப்பாளர்கள் நீண்ட கால ஆய்வுக்குப் பிறகு இதை வடிவமைத்துள்ளனர்.

பலவிதமான அலைவரிசையில் இதமான இசைக்கருவிகளின் ஒலிகள் மற்றும் பறவைகளின் சப்தம் போன்ற இயற்கை ஒலிகளைக் கொண்டு இந்த ரிங்டோன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதைக் கேட்பவர்கள் சோகமாய் இருந்தாலும் சுறுசுறுப்படைகிறார்கள். சோம்பலாய் இருந்தால் குதூகலம் அடைகிறார்கள். தாலாட்டு கேட்பதுபோல விரைவில் தூக்கம் தூண்டப்ட்டு நிம்மதியாக உறங்குகிறார்கள்.

ஜப்பானில் தற்போது அறுவடைக்காலம். இதனால் ஏற்படும் வைக்கோல் மற்றும் தூசு அழற்சியை இந்த ரிங்டோன்கள் கட்டுப்படுத்துகிறது. வேலைக் களைப்பால் பொலிவிழக்கும் தொழிலாளர்களின் முகங்களையும் இந்த ரிங்டோன்கள் கிளர்ச்சி பெறச் செய்கின்றன.

எனவே இந்த ரிங்டோன்கள் ஜப்பானில் சக்கைபோடு போடுகின்றன.

செவ்வாய் கிரகம் செல்லத் தயார்..


விண்வெளி ஆய்வில் பல்வேறு உலக நாடுகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக சீனாவும் இந்தியாவும் நிலவுப்பயணத்தில் அதிக கவனம் செலுத்துகின்றன.


இந்த நிலையில் அமெரிக்கா, ரஷியா நாடுகள் சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதில் தீவிரம் காட்டுகின்றன. ஏற்கனவே அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிலையம் செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வுக் கலங்களை அனுப்பி உள்ளது. இந்த கலங்கள் அங்கு பல்வேறு ஆய்வுகளை செய்து தகவல்களை அனுப்பி வருகிறது.


இந்த தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்டமாக செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வு செய்யப்போகிறார்கள். இவர்கள் அங்கு தங்கி இருந்து பல்வேறு ஆய்வுப்பணிகளில் ஈடுபடப் போகிறார்கள். இந்த பயணத்துக்கு வீரர்களை தயார் செய்யும் பணிகள் ரஷியாவில் உள்ள விண்வெளி ஆய்வு நிலையத்தில் நடந்து வருகிறது.


பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு செல்ல சுமார் 250 நாட்கள் ராக்கெட்டில் பயணம் செய்ய வேண்டும். பின்னர் அங்கு 30 நாட்கள் வரை தங்கி இருந்து ஆய்வுகள் நடத்த வேண்டும். அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டால் சுமார் 240 நாட்கள் பயணம் செய்தால் தான் பூமியை வந்தடைய முடியும். ஆக மொத்தம் சுமார் 520 நாட்கள் பூமியை விட்டு விண்வெளியில் இருக்க வேண்டும்.


இதை தாங்கும் அளவுக்கு விண்வெளி வீரர்களின் உடல் தகுதி சிறப்பாக இருக்க வேண்டும். எனவே அத்தகைய தகுதி உள்ளவர்களை தேர்வு செய்ய சோதனைகள் நடக்கிறது. பல்வேறு உடல்தகுதி, கல்வித்தகுதி தேர்வுகளில் வெற்றி பெற்ற 11 பேர்களை தேர்ந்து எடுத்து அவர்களை ஒரு அறையில் 520 நாட்கள் அடைத்து வைத்து சோதனை செய்யப்போகிறார்கள். இந்த அறை ராக்கெட்டில் இருப்பது போன்ற உணர்வை தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ராக்கெட்டில் பயணம் செய்யும் போது இருக்கும் எடையற்ற தன்மையுடன் இந்த தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி அங்கு தங்கி இருந்து ஆய்வு நடத்துவது போன்ற ஒத்திகை மற்றும் பயிற்சிகளும் இவர்களுக்கு அளிக்கப்படுகிறது.


ரஷியாவைச்சேர்ந்த 5 என்ஜினீயர்கள், 2 டாக்டர்கள் மற்றும் பிரான்சு, பெல்ஜியம், இத்தாலி, மற்றும் சீனா ஆகிய நாடுகளைச்சேர்ந்த தலா ஒரு விண்வெளி வீரர்கள் இந்த சோதனைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சோதனைகள் அடுத்த மாதம் தொடங்கி 520 நாட்களுக்கு நடைபெறும். இவர்கள் தங்கி இருக்கும் போது அவர்களது உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து ஆலோசனைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

பீர் குடித்தால் பெண்களுக்கு மார்பக புற்று நோய் வரா...


பீர் குடிப்பது ஆண்களின் உடல் நலத்தை பாதிக்காது என்ற கருத்து நிலவுகிறது. தற்போது இது பெண்களின் உடல் நலத்துக்கும் நல்லது என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.


குறிப்பாக தினமும் ஒரு கோப்பை பீர் அருந்தும் பெண்கள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை ஜெர்மனியில் உள்ள ஹெய்டல் பர்க் கேன்சர் ஆய்வு மையம் நடத்தியுள்ளது. பீர் மதுபானத்தில் உள்ள சக்தி வாய்ந்த மூலக் கூறுகள் மார்பக புற்று நோயில் இருந்து பெண்களை காப்பாற்று வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


பொதுவாக பீர் மது பானத்துக்கு மனமூட்டுவதற்காக ஒருவகை மலரை பயன்படுத்துவார்கள். அதில் உள்ள ஷான்தோகியூமோல் உடல் உறுப்பில் இருந்து டெஸ்போஸ்டெரோன் மற்றும் ஆஸ்ட்ரோஜெனை அதிக அளவில் சுரக்காமல் தடுக்கிறது.


அது பி.எஸ்.ஏ. என்ற புரோட்டீன் அதிக அளவில் உற்பத்தியாகாமல் தடுத்து நிறுத்துகிறது. அது மார்பக புற்று நோய் வராமல் பெண்களை பாதுகாக்கிறது. இந்த ஆய்வு தற்போதுதான் முதல் கட்டத்தில் உள்ளது. தொடர்ந்து நடைபெறும் ஆய்வின் மூலம் மார்பக புற்று நோய் மட்டுமின்றி புற்று நோய் வராமல் தடுக்க பீர் உதவும் என்று தெரிய வரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வியாழன், 1 ஏப்ரல், 2010

உலகிலேயே மிகவும் சிறிய கிளி இனம் கண்டுபிடிப்பு


உலகிலேயே மிகவும் சிறிய கிளி இனம் பபுவா நியுகினியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பபுவா நியுகினியாவிலுள்ள வடக்கு தாழ் நில பகுதியில் வாழும் இந்தக் கிளிகள், 9 சென்ரிமீற்றருக்கு குறைவான உயரத்தையும் 11.5 கிராமுக்கு குறைவான நிறையையும் கொண்டுள்ளன.

அமெரிக்க கலிபோர்னிய விஞ்ஞான கல்விக்கூடத்தைச் சேர்ந்த கலாநிதி ஜக் டம்பச்சர் என்பவர் தலைமையிலான குழுவினரே இந்த அரிய பறவையை எதுவித பாதிப்புமின்றி பிடித்துள்ளனர்.

மீள வளர்ந்த மனித மண்டையோடு


விபத்தொன்றில் மண்டையோட்டின் அரைப் பகுதி சேதமடைந்த ஒருவருக்கு அப்பகுதி மீளவும் வளர்ச்சியடைந்துள்ள அதிசய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

ஹெக்ஸ்ஹாம் நகரைச் சேர்ந்த கோர்டன் ரிக்கே (72 வயது) இவ்வாறு மண்டையோடு மீள வளர்ச்சி பெற்றுள்ளது.

1995 ஆம் ஆண்டு கோர்டன் ரிக்கு ஏற்பட்ட விபத்தையடுத்து சேதமடைந்த மண்டையோட்டுக்குப் பதிலாக டைட்டானியம் தகடு பொருத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் மேற்படி டைட்டானிய தகட்டால் பக்க விளைவுகள் ஏதாவது ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறிய மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டபோது அத்த தகட்டுக்குள் இழக்கப்பட்ட மண்டையோடு மீள வளர்ந்திருப்பதை கண்டு அதிசயித்துள்ளனர்.

இது தொடர்பில் கோர்டன் ரி விபரிக்கையில், "என்னுடைய மண்டையோட்டின் அரைப் பகுதி ஒரு போதும் வளராது என மருத்துவர்கள் கூறியபோது அதிர்ச்சியடைந்தேன். ஆனால் தற்போது மண்டையோடு மீளவும் வளர்ந்துள்ளமை எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது'' என்று கூறினார்

தினசரி உணவாக அரைக் கிலோ மண்


இந்தியா, தமிழ்நாடு, கள்ளக்குறிச்சியில் நாளாந்த உணவாக அரைக் கிலோ மண்ணை சாப்பிட்டு வருகிறார் காய்கறிக்கடை வியாபாரி கோபி (வயது 25).

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த இவர் தினசரி சாப்பிடும் மண்ணோடு இடைக்கிடையில் களிமண், ஆற்று மணல் போன்றவற்றையும் ருசித்து சாப்பிட்டு வருகிறார். அத்துடன் ஏரிக் களிமண்ணை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்.

விழுப்புர மாவட்டத்தையே விசித்திரத்தில் ஆழ்த்தியுள்ள இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, மூன்று வயதிலிருந்தே இந்தப்பழக்கத்தை கொண்டுள்ள கோபி தனது காற்சட்டையில் தினசரி அரை கிலோவுக்கு மேலான மண்ணை சேமித்து வைக்கிறார். பின்பு அதை வைத்திருந்து நாள் முழுவதும் சாப்பிடுகிறார். இவ்வாறு சாப்பிடும் போது பெரிய கற்கள் தடைப்பட்டால் மட்டும் முடிவில் அவற்றைக் கீழே துப்பிவிடுவார்.

இது குறித்து கோபி கூறுகையில் "சிறு வயதில் இருந்து மண்ணை உணவாக சாப்பிடும் பழக்கம் உள்ளது. சிறு வயதில் குறைவான மண்ணை சாப்பிட்டு வந்தேன். பின்பு, தினமும் அதிகமான மண்ணை சாப்பிட்டு வருகிறேன். இதனால் எனது உடம்பிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதில்லை. மேலும், மண்ணைச் சாப்பிடுவதால் இயற்கை உபாதைகளிலும் இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை. எனக்கு நாளுக்கு நாள் மண் சாப்பிடும் ஆர்வம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை'' என மண்ணைச் சாப்பிட்டுக் கொண்டே தெரிவித்தார்.

உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள்


உலகிலேயே மிகக் குள்ளமான மனிதன் என்ற பெருமையை நேபாளத்தைச் சேர்ந்த கஜேந்திரா தபா மாகர் செவ்வாய்க்கிழமை பெற்றுள்ளார்.

2 அடி உயரடைய அவர் அன்றைய தினம் தனது 18 ஆவது பிறந்தநாளை தனது உயரத்திற்குச் சமனான உயரமுடைய கேக்கை வெட்டிக் கொண்டாடினார்.

அவர் சீனாவைச் சேர்ந்த 2 அடி 5 அங்குல உயரடைய ஹிபிங் பிங் என்பவரது சாதனையை முறியடித்துள்ளார்.

அவரது சாதனை உயரமானது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதியப்படவுள்ளது.

இந்நிலையில், உலகிலேயே குள்ளமான கஜேந்திராவுக்கு பொருத்தமான மணப்பெண்ணைத் தேடும் முயற்சியில் அவரது பெற்றோர் இறங்கியுள்ளனர்.

தனது பிறந்த தினத்தில் கஜேந்திரா விபரிக்கையில், "நான் தற்போது 18 ஆவது பிறந்த நாளில் காலடியெடுத்து வைத்து வயது வந்த ஒருவராக மாறியதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். நான் இந்த நாளுக்காக பல வருடங்களாக காத்திருந்தேன். ஒரு சிறுவன் என்னைப் போன்று சிறியவனாக இருப்பது விநோதமான ஒன்றல்ல. ஆனால் ஒரு வயதுக்கு வந்த மனிதனாக நான் இருப்பதை விசேடத்துவமானதாக கருதுகிறேன்'' என்று கூறினார்.

தலைநகர் காத்மண்டுவிலிருந்து 125 மைல் தொலைவிலுள்ள பக்லங் மாவட்டத்தில் கஜேந்திரா பிறந்தார். பிறக்கும் போது அவரது நிறை 600 கிராம் மட்டுமே இருந்ததாக அவரது தாயார் தனா மாயா கூறினார்.

அமெரிக்காவுக்கு விஜயம் செய்வதே தனது கனவு எனத் தெரிவித்த கஜேந்திரா, தனது வயதை ஒத்த இளைஞர்கள் போன்ற தோற்றம் இல்லாத போதும் அவர்களைப் போன்று பெண்கள் மீதான இரசனையைக் கொண்டுள்ளார்.

"நான் தலைநகர் காத்மண்டுவில் பயணம் செய்தபோது பல பெண்களைப் பார்க்க நேர்ந்தது. அவர்கள் எனது சொந்தக் கிராமத்திலுள்ள பெண்களை விட மிகவும் அழகாகவும் வித்தியாசமாகவும் இருந்தனர். தற்போது எனது பெற்றோர் எனக்குப் பொருத்தமான மணமகளைத் தேடும் முயற்சியில் களம் இறங்கியுள்ளனர். நான் எனது குடும்ப வீட்டில் மாடியொன்றைக் கட்டி அதில் எனது எதிர்கால மனைவியுடன் வசிக்கத் திட்டமிட்டுள்ளேன்" என அவர் மேலும் தெவித்தார்.

எனினும், நேபாளத்தில் ஒரு சில குள்ளமான பெண்களே இருப்பதும் அவர்கள் கஜேந்திராவை விட சிறிது உயரமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

பாய்மரப் படகில் உலகை வலம் வரும் ஆஸ்திரேலிய சிறுமி


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 16 வயது சிறுமியான ஜெஸிகா வாட்சன், 10 மீட்டர் நீளம் கொண்ட 'பிங்க் லேடி' என்ற பாய்மரப் படகில் உலகை வலம் வரும் சாதனைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

ஜெஸிகா சிட்னியிலிருந்து இந்தப் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். கடலில் கடும் காற்று வீசி வருவதால் மிக மிக மெதுவாக முன்னேறி வருகிறார் ஜெஸிகா. இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து படகைச் செலுத்தி வருகிறார்.

கிட்டத்தட்ட எட்டு மாதம் கடலில் பயணம் செய்யவிருக்கிறார் ஜெஸிகா. இது அங்கு சர்ச்சையையும் கிளப்பி விட்டுள்ளது. இவ்வளவு சின்ன வயதில் தனியாக பாய்மரப் படகில் பயணம் செய்வது ஆபத்தானது என்று பலரும் விமர்சித்துள்ளனர். ஜெஸிகாவின் தாயார் ஜூலி வாட்சன் இதை நிராகரித்துள்ளார்.

"இதில் பயப்படவோ, தயங்கவோ எதுவும் இல்லை. ஜெஸிகா மிகுந்த நம்பிக்கையுடனும், துணிவுடனும் இருக்கிறார்" என்றார் அவர்.

முதலில் வடக்கு நியூசிலாந்து செல்லும் ஜெஸிகா, பின்னர் பிஜி, சமோவா, தென் அமெரிக்கா, தென் ஆபிரிக்கா செல்கிறார். கடைசியில் அவர் ஆஸ்திரேலியா திரும்புகிறார். கிட்டத்தட்ட 7400 கிலோமீட்டர் தூரத்திற்கு அவர் பயணிக்கவுள்ளார்.

இந்தப் பயணம் வெற்றிகரமாக முடிந்தால், உலகைக் கடல் வழியாகச் சுற்றி வந்த முதல் சிறுமி என்ற பெருமை அவருக்குக் கிடைக்கும்

குழந்தையின் தோலில் புனித குர்ஆன் வசனங்கள்


தோலில் குர்ஆன் வசனத்துடன் அபூர்வ குழந்தையொன்று பிறந்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.

இக் குழந்தையின் உடலில் குர்ஆன் வசனங்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்பதை புரியாமல் மருத்துவ உலகே திகைப்படைந்துள்ளது.

தென் ரஷ்யாவில் செச்சினியாவிலுள்ள தகெஸ்டான் மாகாணத்தைச் சேர்ந்த அலி யகுபோவ் என்ற மேற்படி குழந்தை பிறந்த பின் அதன் நாடியில் "அல்லாஹ்" என்ற வார்த்தை தோன்றியதையடுத்து அவனது பெற்றோர் வியப்படைந்தனர்.

தொடர்ந்து அக் குழந்தையினது முதுகு, கரங்கள், கால்கள் மற்றும் வயிற்றில் அராபிய வசனங்கள் பல தோன்ற ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

தற்போது 9 மாத வயதாகும் அலி யகுபோவின் தோலில் வாரத்திற்கு இரு தடவைகள் புதிய குர்ஆன் வசனங்கள் தோன்றுவதாகவும் புதிய வசனங்கள் தோன்றும் போது பழைய வசனங்கள் மறைந்து விடுவதாகவும் அவனது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

திங்கட்கிழமையிலும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு இடைப்பட்ட இரவுகளிலும் சிறுவனது உடலில் குர்ஆன் வசனங்கள் தோன்றி வருவதாகக் கூறிய மதினா, இதன்போது குழந்தையின் உடல் வெப்பநிலை அதிகரித்து சிறுவன் மிகுந்த வேதனையுடன் அழுவதாகக் கூறினார்.

"இதன்போது எமது மகனை பற்றிப் பிடிக்க முடியாது. அவனது உடல் உதறிக் கொண்டிருப்பதால் அவனை தொட்டிலிலேயே படுக்க வைத்திருப்போம். அவன் வேதனைப்படுவதைப் பார்க்க கஷ்டமாக இருக்கும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

அலி யகுபோவின் உடலில் குர்ஆன் வசனங்கள் தோன்றும் வரை மத நம்பிக்கையற்றவராக இருந்த அவரது தந்தை, தற்போது தீவிர மதப் பற்றாளராக மாறியுள்ளதாக பாலகனின் தாயாரான மதினா தெரிவித்தார்.

இது தொடர்பில் உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் அஹமட்பாஷா அமிராலேவ் விபரிக்கையில், "இந்த சிறுவன் இறைவனின் தூய அடையாளமொன்றாக உள்ளான்.
எமது பிரதேசத்தில் நிலவும் பதற்ற சூழ்நிலையை நிறுத்தும் முகமாக அல்லாஹ்வே இப்பாலகனை எம்மிடம் அனுப்பி வைத்துள்ளான்'' என்று கூறினார்.

5 வயது ஆணழகன்


மிக இளம் வயதில் தசைகள் உருண்டு திரண்டு கட்டுக்கோப்பான உடல் அழகைப் பெற்றவர் என்ற உலக சாதனையை ரோமானியாவைச் சேர்ந்த 5 வயது சிறுவன் செய்துள்ளான்.

தற்போது தனது பெற்றோருடன் இத்தாலியில் வாழ்ந்து வரும் கிலியானோ ஸ்ரோ என்ற மேற்படி சிறுவன் தனது இரு வயது முதற்கொண்டே தசைகளை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் பயிற்சிகளைப் பெற்றுவந்தான்.

கிலியானோ தனது கால்களிடையே இரும்பு பந்தை வைத்தபடி 10 மீற்றர் தூரம் கைகளால் வேகமாக நடந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறான்.

இது தொடர்பில் கிலியானோவின் தந்தை கியுலியன் ஸ்ரோ விபரிக்கையில், "எனது மகன் பிறந்தது முதற்கொண்டே நான் உடற்பயிற்சி செய்வதை பார்த்து வருகிறான். மிக இள வயதில் கட்டுடல் பயிற்சி வழங்குவது ஆபத்தானது என்பதை நான் அறிவேன். நான் எனது மகனுக்கு தீங்கு விளைவிக்காத முறையில் மிகச் சிரமப்பட்டு பயிற்சிகளை வழங்கினேன். அவனை ஒரு போதும் தனியே பயிற்சி செய்ய நான் அனுமதித்ததில்லை'' என்று தெரிவித்தார்.

கியுலியனின் நான்கு பிள்ளைகளில் மூத்த பிள்ளையான கிலியானோ, ஏனைய சிறுவர்கள் போல் படங்கள் வரைவதிலும் விளையாடுவதிலும் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

8 அறுவைச் சிகிச்சைகள் மூலம் காதலியை பேரழகியாக மாற்றி திருமணம் செய்தவர்


இனிமையான நடவடிக்கைகளால் மனதைக் கொள்ளை கொண்ட காதலியை அழகியாக மாற்ற 8 பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைகளைச் செய்த பின் அவரை காதலரான பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் கரம் பிடித்த விசித்திர சம்பவம் ஜெர்மனியில் இடம்பெற்றுள்ளது.

ஹோட்டல் பணிப்பெண்ணான கேனியை (33 வயது) சந்தித்து காதல் கொண்ட மேற்படி பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணரான ரெசா வொஸாவ் (48 வயது), தனது காதலியை கனவுக் கன்னியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.

இதன் பிரகாரம் காதலியின் பருமனான இடுப்பு, தொடை மற்றும் வயிறு போன்ற பகுதிகளிலுள்ள தேவையற்ற கொழுப்பை நீக்க "போ டக்ஸ்' ஊசி மருந்தைச் செலுத்தினார். மார்பகத்தை பெரிதாக்க "சிலிக்கன்'' பஞ்சை சத்திரசிகிச்சை மூலம் அவர் பொருத்தினார். அது மட்டுமல்லாமல் உதடு, கன்னம், நெற்றிப் புருவங்கள் என்பனவற்றை அழகூட்ட அவர் சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டார்.

இதன்போது கொழுப்பைக் குறைக்க மட்டும் இரு முறை சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஐந்தரை ஆண்டுகளாக நடைபெற்ற இந்த அழகு சிகிச்சைகளையடுத்து கேனியை ரெசா வொஸாவ் மணந்து கொண்டார். இந்த சிகிச்சைகள் தொடர்பில் ரெசா வொ ஸாவ் விபரிக்கையில், "கேனியை நான் முதன்முதலாக ஹோட்டலில் சந்தித்தபோது அவள் மிகவும் குண்டாக இருந்தாள். எனினும் அவளிடம் ஏதோ கவர்ச்சி காணப்பட்டது. அவளது முக்கிய உடல் பகுதிகளில் அறுவைச் சிகிச்சைகள் மேற்கொண்டால் அவள் பேரழகியாக மாறி விடுவாள் என்று தோன்றியது. எனது எதிர்பார்ப்பு வீண் போகவில்லை'' என்று கூறினார்.

கல்லறையிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனைவியின் சடலத்துடன் 5 வருடமாக படுத்துறங்கும் நபர்


தனது அன்புக்குரிய மனைவி உயிரிழந்ததில் மனமுடைந்த கணவர் ஒருவர், கல்லறையிலிருந்து தனது மனைவியின் சடலத்தை தோண்டியெடுத்து அதனருகே 5 வருட காலம் படுத்து உறங்கி வரும் விசித்திர சம்பவம் வியட்நாமில் இடம்பெற்றுள்ளது.

மத்திய குவாங்நாம் மாகாணத்திலுள்ள சிறிய நகரொன்றைச் சேர்ந்த லீ வான் (55 வயது) என்ற மேற்படி நபர், மனைவியின் அழுகிய உருக்குலைந்திருந்த சடலத்தை கல்லறையிலிருந்து தோண்டியெடுத்து அச்சடலத்தை சுற்றி களிமண் பூசி பெண் உருக்கொடுத்துள்ளார்.

அதன்பின் அச்சடலத்துக்கு ஆடை அணிவித்து தனது படுக்கையில் வைத்துள்ளார்.

2003 ஆம் ஆண்டு தனது மனைவி இறந்த பின் லீ வான் 20 மாதங்களாக மனைவியின் கல்லறையில் படுத்துறங்கியுள்ளார்.

எனினும், மழை, குளிர் என்பவை காரணமாக சிரமத்தை எதிர்கொண்ட லீ, கல்லறையில் தனது மனைவியின் சடலம் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு சுரங்கப்பாதை ஏற்படுத்தி மனைவியின் சடலத்தின் அருகே உறங்கத் திட்டமிட்டுள்ளார்.

அவரது பிள்ளைகள் அவரது திட்டத்திற்கு தடை விதித்தனர்.

இந்நிலையில் 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு இரவில் மனைவியின் கல்லறைக்கு சென்ற லீ வான், எவருக்கும் தெயாமல் கல்லறையைத் தோண்டி சடலத்தை வெளியே எடுத்தார்.

ஏழு பிள்ளைகளின் தந்தையான அவர் சடலத்துடன் படுத்துறங்கும் செய்தி வெளியானதையடுத்து, அவரது வீட்டுப் பக்கம் வரவே அயலவர்கள் அஞ்சுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் லீ வான் விபக்கை யில், "நான் எனது மனைவியை கட்டியணைத்துக் கொண்டிருக்க விரும்பினேன். எனது விருப்பம் நிறைவேறியுள்ளது. நான் எதனையும் வித்தியாசமாகச் செய்யும் ஆள்.
நான் சாதாரண மனிதர்கள் போன்றவன் இல்லை'' என்று கூறினார்

உடல் மீது விளக்கேற்றி...


கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி காரைக்காலில் மாணவர்கள் உடல் மீது அகல் விளக்குகள் ஏற்றி யோகாசனம் செய்து காண்பித்துள்ளனர்.

காரைக்கால் கோவில் மண்டபத்தில் சண்முகா யோகாஸ்ரமம் உள்ளது. இங்கு கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு யோகாசன நிகழ்ச்சியில் மாணவர்கள் யோகாசனம் செய்து கொண்டே தங்கள் உடல் மீது அகல் விளக்குகள் ஏற்றி பார்வையாளர்களை அசத்தினர்.

சுமார் 35 மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் சமகோணாசனம், டேபிளாசனம், விபதசமகான கிரகசாசனம் உள்ளிட்ட ஆசனங்கள் செய்து காண்பித்தனர். இறுதியாக பிரமீடு முறையில் மூன்று மாணவர்கள் ஆசனத்தில் ஈடுபட்டு உடல்மீது அகல் விளக்குகளை ஏற்றி பார்வையாளர்களை அசத்தினர்

2009 - உலக நிகழ்வுகள் ஒரு பார்வை

விமான நிலையத்தில் உடல் ஊடுகாட்டும் கருவிகள்


நெதர்லாந்திலுள்ள அம்ஸ்டர்டாம் நகர சிபோல் விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் அனைத்துப் பயணிகளும் உடல் ஊடுகாட்டும் கருவி பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

நத்தார் தினத்தன்று அமெரிக்க விமானமொன்றில் நைஜீரிய இளைஞன் ஒருவன் வெடி பொருட்களுடன் பயணித்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையிலேயே இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

உமர் பாரூக் அதுல்தாலப் என்ற மேற்படி நைஜீரிய குண்டுதாரி, நைஜீரியாவின் லாகோஸ் நகலிருந்து அம்ஸ்டர்டாமை வந்தடைந்த பின்னரே அமெரிக்க டெட்ரோயிட் நகருக்கான விமானத்தில் பயணமானார்.

தனது உள்ளாடையில் வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்த உமர் பாரூக் அதுல் தாலப் பாதுகாப்பு பரிசோதனைகளைத் தாண்டி அமெரிக்க விமானத்தில் ஏறியதையடுத்து விமான நிலையங்களின் பாதுகாப்பு குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

உலோகங்களைக் கண்டுபிடிக்கப் பயன்படும் பரிசோதனைக் கருவிகள் உமர் பாரூக்கின் உடலில் வெடி பொருட்கள் எதுவும் இருப்பதாகக் காண்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விமானம் தரையிறங்குவதற்கு 20 நிமிடங்களின் முன் குண்டை உமர் பாரூக் வெடிக்க வைக்க முயற்சித்த போது குண்டு வெடிக்கத் தவறியதால் அவர் கடுமையான எரிகாயத்திற்கு ஆளானார்.

சிபோல் விமான நிலையத்தில் ஏற்கனவே 15 உடல் ஊடுகாட்டும் உபகரணங் கள் உள்ள போதும், அந்தரங்கத்தன்மையை பாதுகாப்பது தொடர்பான அக்கறைகளால் அவை கடும் கட்டுப்பாட்டின் கீழ் வரையறுக்கப்பட்ட அளவில் பயன்படுத்தப்பட்டன.

இந்த ஊடுகாட்டும் உபகரணம் ஆடைக்குள்ளும் சட்டைப் பைகளுக்குள்ளும் உள்ள பொருட்களை வெளிப்படுத்தக் கூடியதாகும்.

எனினும், உள்ளாடைக்குள் வெடி பொருட்களை மறைத்து வைத்திருக்கும் ஒருவர், இந்த உபகரணத்தில் சிக்கிக் கொள்ளாமல் செல்லக் கூடிய சாத்தியம் தொடர்ந்தும் உள்ளதாக கூறப்படுகிறது.

இறந்த பெண் பிரசவத்தின் பின் உயிருடன் மீண்ட அதிசயம்


ஆண் குழந்தையைப் பிரசவிக்கும் போது உயிரிழந்த தாயொருவர் மீண்டும் உயிர் பிழைத்து எழுந்த அதிசயம் அமெரிக்க கொலராடோ மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. திரேசி ஹொர்மன்ஸ்டோர்பர் என்ற மேற்படி பெண், கொலராடோ ஸ்பிறிங்ஸ் மெமோறியல் மருத்துவமனையில் ஆண் குழந்தையை பிரசவித்தபோது அவரது இருதய இயக்கம் ஸ்தம்பிதமடைந்தது. இதனையடுத்து அவர் இறந்துவிட்டதாக அறிவித்த மருத்துவர்கள் அவரது குழந்தையை உயிருடன் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

குழந்தை பிரசவமானதும் அதிசயிக்கத்தக்க வகையில் திரேசியின் இருதயம் மீள செயற்பட ஆரம்பித்தது.

தற்போது தாயும் சேயும் நல்லாரோக்கியத்துடன் இருப்பதாக மேற்படி பிரசவத்தில் பங்கேற்ற மருத்துவர் ஸ்டெபனி மார்ட்டின் தெவித்தார். திரேசிக்கு அவரது இருதய இயக்கம் நிற்பதற்கு ஒரு நிமிடத்திற்கு முன் அவரது சுவாசம் ஸ்தம்பிதமடைந்ததாகவும் இந்நிலையில் அவர் சுமார் 3 அல்லது 4 நிமிடங்கள் சடல நிலையில் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் திரேசி விபக்கையில், "குழந்தைப் பிரசவம் என்பது மறு பிறப்பு எடுப்பது போல் என்று கூறுவார்கள். ஆனால், எனக்கு இந்தப் பிரசவம் உண்மையிலேயே மறுபிறப்பு எடுத்தது போல் அமைந்து விட்டது" என்று கூறினார்.

பிறந்த குழந்தைக்கு கொல்டைன் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது

பெட்டியிலிருந்த 6 முட்டைகளிலும் ......


பெண்ணொருவர் கொள்வனவு செய்த 6 முட்டைகளைக் கொண்ட அட்டைப் பெட்டியில் அனைத்து முட்டைகளிலும் இரட்டை மஞ்சள் கரு காணப்பட்ட விசித்திர சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு ஒரு அட்டைப் பெட்டியிலுள்ள 6 முட்டைகளிலும் இரட்டை மஞ்சள் கரு காணப்படுவது தில்லியனில் ஒரு தடவையே நடைபெறும் அபூர்வ நிகழ்வாகக் கருதப்படுகிறது.

ஒரு தில்லியனானது ஒன்றின் பின் 18 பூச்சியங்களைக் கொண்ட எண்ணென்பது குறிப்பிடத்தக்கது.

6 முட்டைகளைக் கொண்ட ஒரு அட்டைப் பெட்டியில் ஒரேயொரு முட்டையில் இரட்டை மஞ்சள் கரு காணப்படுவது ஆயிரத்தில் ஒரு தடவை நிகழும் சம்பவம் என பிரித்தானிய முட்டை தகவல் சேவை அமைப்பு தெரிவிக்கிறது.

மேற்படி அதிசய அட்டைப் பெட்டியை கொள்வனவு செய்த கும்பியா எனும் இடத்தைச் சேர்ந்த பியோனா எக்ஸன் விபக்கையில், "நான் அடுத்தடுத்து 3 முட்டைகளில் இரட்டை மஞ்சள் கருக்களை கண்டதும் எனது கணவரை அழைத்து அவற்றைக் காட்டினேன். தொடர்ந்து ஏனைய முட்டைகளிலும் மஞ்சள் கருவை கண்ட போது என்னால் எனது கண்களையே நம்பமுடியவில்லை. உடனே அவற்றை புகைப்படமெடுத்தேன்'' என்று கூறினார்.

தோளில் 6 அங்குல ஆழத்திற்கு கத்தி பாய்ந்திருப்பதை அறியாத பெண்


தனது தோளின் மேல் பகுதியில் 6 அங்குல ஆழத்திற்கு கத்தி ஊடுருவியதை உணராமல் பெண்ணொருவர் இயல்பாக நடந்து சென்று பார்ப்பவர்களை அதிர வைத்த சம்பவம் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்றுள்ளது.

ஜூலியா பொபோவா (22 வயது) என்ற மேற்படி பெண், தனது வீட்டிலிருந்து வேலைக்கு புறப்பட்ட போது திருடன் ஒருவன் அவரை கத்தியால் குத்தி விட்டு அவரது கைப்பையை பறித்துச் சென்றுள்ளான். திருடனின் திடீர் தாக்குதலால் பெரும் அதிர்ச்சியடைந்த ஜூலியா, தனது கழுத்தில் கத்தி ஊடுருவியதால் ஏற்பட்ட வலியைக் கூட உணர முடியாதவராய் இரத்தம் வழிந்தோட நடந்து சென்றுள்ளார்.

இது தொடர்பில் மருத்துவர் ஒருவர் விபரிக்கையில், பேரதிர்ச்சியால் ஜுலியாவின் உடல் இயக்கங்கள் ஸ்தம்பிதமடைந்த நிலையில் அவரால் வலி உணர்வை உணர முடியாது போயுள்ளதாகக் கூறினார்

அறுவைச் சிகிச்சைக்காக காத்திருக்கும் "மர மனிதன்"


"ஹுயுமன் பபிலோமா' வைரஸால் (எச்.பி.வி. வைரஸ்) பாதிக்கப்பட்டு உடல் முழுவதும் மரக்கணுக்களையொத்த வளர்ச்சியைக் கொண்ட இந்தோனேசியாவைச் சேர்ந்த டெடி (37 வயது) என்ற நபர், மேற்கு ஜாவா மாகாணத்திலுள்ள ஹஸன் சாதிக்கின் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்காக காத்திருப்பதை படத்தில் காணலாம். இவர் "மர மனிதன்" என செல்லமாக அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அவரது மரக்கணு வளர்ச்சிகள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்படுவது இது இரண்டாவது தடவையாகும்.

இதற்கு முன் 2007 ஆம் ஆண்டு அவரது உடல் மரக்கணு வளர்ச்சிகளை அகற்ற முதல் தடவையாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது

உடல் முழுவதும் செதில்களை கொண்ட "மீன் சிறுவன்"


உடல் முழுவதும் மீன் செதில்கள் போன்ற வளர்ச்சியைக் கொண்டுள்ள 14 மாத ஆண் குழந்தையொன்று சீன மருத்துவர்களை திணற வைத்துள்ளது.
கிழக்கு சீனாவிலுள்ள ஜின்ஹு நகரைச் சேர்ந்த ஸோங் ஷெங் என்ற குழந்தை "மீன் சிறுவன்" என செல்லமாக அழைக்கப்படுகிறான்.

உடல் தானாக குளிர்மையடையாத நிலையை ஏற்படுத்தும் அரிய மரபணு பிரச்சினையொன்றுக்கு ஸோங் ஷெங் ஆளாகியுள்ளதாக நம்பப்படுகிறது.

தோலிலுள்ள துவாரங்களினூடாக வியர்வையையோ அன்றி வெப்பத்தையோ வெளியேற்ற முடியாத நிலையில், இந்தக் குழந்தை உள்ளமையால் உலர்வடையும் மேற்தோல் மீன் செதில்கள் போன்ற தோற்றத்தை அடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் சிறுவனின் உடல் வெப்பத்தைத் தணிவிக்க அச்சிறுவனை பனிக்கட்டித் தொட்டியில் அவனது பெற்றோர்கள் அடிக்கடி அமர வைக்கின்றனர்.

இது தொடர்பில் சிறுவனின் தந்தை சோங் டெஹுயி விபரிக்கையில், "எமது மகன் எப்போதும் வலியால் துடிக்கிறான். நாம் போதிய பனிக்கட்டியில் அவனை அமர வைக்காத சமயத்தில் அவனுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது" என்று கூறினார்.

"எனது மகனுக்கு ஏற்பட்ட நோயை குணப்படுத்த பல மருத்துவர்கள் முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. நாம் அவனைக் குணப்படுத்த கடவுளின் தயவையே நாடியுள்ளோம்" என அவர் மேலும் தெரிவித்தார்

7 மாத காலமாக இறந்த கணவனின் உடலை....

இறந்த தனது கணவர் மீளவும் உயிர் பெற்று எழுந்து வருவார் என்ற நம்பிக்கையில் மனைவி ஒருவர் தனது கணவனின் சடலத்தை கடந்த 7 மாதங்களாக தகனம் செய்யாது பாதுகாத்து வரும் விசித்திர சம்பவம் தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

தென்னாபிரிக்காவின் ஜொகனஸ்பேர்க் நகரில் வசிக்கும் நதியா செட்டி என்ற இந்தியப் பெண்ணே தனது கணவரான குணசீலனின் சடலத்தை இவ்வாறு பாதுகாத்து வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மாரடைப்பால் மரணமான தனது கணவனின் சடலத்தைக் கெடாது பாதுகாக்க நதியா இதுவரை இந்திய நாணயப்படி 2.08 இலட்சம் ரூபாவை செலவழித்துள்ளார்.

நடக்கமுடியாத ஒன்று தொடர்பில் நதியா தீவிர நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அன்புக்குரிய கணவர் திடீரென மரணமானதில் அவரது மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதுவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் விபரிக்கையில், "நதியாவின் நம்பிக்கையை ஒரேயடியாக மறுக்க எம்மால் முடியாதுள்ளது.
ஏனெனில் இறைவன் இறந்தவர்களை உயிர்ப்பிப்பார் என்ற நம்பிக்கை உலகின் பல்வேறு பகுதிகளிலுள்ள மதப் பிரிவினர் மத்தியிலும் உள்ளது" என்று கூறினார்.

ஒரேயொரு இருதயத்துடன் ஒட்டிப் பிறந்து...


பொதுவான ஒரேயொரு இருதயத்துடன் ஒட்டிப் பிறந்து உயிர் வாழும் அபூர்வ இரட்டை பெண் குழந்தைகளை படத்தில் காணலாம்.

அமெரிக்க அரிஸோனா மாநிலத்திலுள்ள குயீன் கிறீக் நகரைச் சேர்ந்த எம்மா மற்றும் டெய்லர் பெய்லி ஆகிய மேற்படி இரட்டைக் குழந்தைகள், தனியொரு இருதயம் மற்றும் ஈரலுடன் மார்பு எலும்பிலிருந்து தொப்புள் வரை இணைப்பைக் கொண்டுள்ளன.

இக் குழந்தைகள் வளர்ந்து வருகின்ற நிலையில் எதிர்வரும் இரு வருட காலப் பகுதியில் அவர்களை வேறு பிரிக்காவிட்டால், அவர்கள் உடல் நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறு குழந்தைகளை வேறு பிரிக்கும் போது ஒரு குழந்தைக்கு இருதய மாற்று சிகிச்சையும் மற்றைய குழந்தைக்கு ஈரல் மாற்று சிகிச்சையும் செய்ய நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மேற்படி குழந்தைகளின் பெற்றோரான டோர் (34 வயது) மற்றும் மான்டி (32 வயது) ஆகியோர் அக் குழந்தைகளை வேறு பிரிக்கும் முகமாக சியட்டில் சிறுவர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த இரட்டைக் குழந்தைகள் வெற்றிகரமாக வேறு பிரிக்கப்படும் பட்சத்தில், ஒரு இருதயத்துடன் ஒட்டிப் பிறந்து வேறு பிரிக்கப்பட்ட உலகின் முதலாவது இரட்டைக் குழந்தைகள் என்ற பெருமையை அவை பெறும்.
டோர், மான்டா தம்பதிக்கு ஏற்கனவே 4 பிள்ளைகள் உள்ளனர்

பெண்ணின் நெற்றியில் கொம்பு


சீனாவைச் சேர்ந்த வயோதிப மாது ஒருவரின் முகத்தில் அதிசயிக்கத்தக்க வகையில் கொம்பு ஒன்று வளர்ந்துள்ளது.

ஹெனான் மாகாணத்திலுள்ள லின் லோயு கிராமத்தைச் சேர்ந்த 101 வய தான ஸாங் றுயிபாங்கின் நெற்றியில் கடந்த வருடமே மேற்படி அச்சுறுத்தும் வகையிலான கொம்பு உருவாக ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அக்கொம்பு 2 அங்குல அளவிற்கு வளர்ந்துள்ளது. தனது முகத்தில் வளர்ந்துள்ள இந்த அவலட்சணமான கொம்பால் மேற்படி மூதாட்டி மிகவும் கவலையடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸாங் றுயிபாங்கின் 6 மகன்மாரில் கடைசி மகனான ஸாங் குயோஸெங் (60 வயது) விபரிக்கையில், தனது தாயாரின் நெற்றியிலுள்ள தோல்பகுதி கடினமடைந்தே கொம்பை ஒத்த இந்த தோற்றவமைப்பு உருவானதாகவும் தாம் அது தொடர்பில் பெரிதாக கவனமெடுக்கவில்லை எனவும் கூறினார்.
இந்த அதிசய கொம்பு குறித்து ஸாங் றுயி பாங்கின் மூத்த மகன் ஸங் (82 வயது) கூறுகையில், "எனது தாயாரின் நெற்றியின் வலது பக்கத்தில் புதிதாக ஒரு அடையாளம் தோன்ற ஆரம்பித்துள்ளது. அதுவும் ஒரு கொம்பு என்றே நான் நினைக்கிறேன்'' என்று தெரிவித்தார்.

மேற்படி பெண்ணிடம் வளர்ந்துள்ள கொம்புருவானது தோலினுள் சில அங்குல ஆழத்திற்கு வளர்ச்சியை கொண்டுள்ளது.