திங்கள், 31 மே, 2010

இப்படியும் ஒரு மரமா?

இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்திற்கு சென்றால் இந்த மரத்தை காணத்தவறாதீர்கள்.

ஹோலி கொண்டாடிய போது விபத்து இரும்பு கம்பியால் துளைக்கப்பட்ட 6 வயது சிறுவன் உயிர் தப்பிய அதிசயம்


ஹோலி பண்டிகை கொண்டாடிய 6 வயது சிறுவன் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த போது தரையில் நீட்டிக்கொண்டிருந்த இரும்பு கம்பி ஒன்று அவனுடைய வயிற்றை ஒரு புறம் துளைத்து மறுபுறம் வந்து விட்டது. இந்த விபத்தில் அவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.

மரணத்தின் விளிம்பை தொட்டு விட்டு திரும்பிய அந்த சிறுவனின் பெயர் மிகிர். ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தை சேர்ந்தவன்.

ஹோலி கொண்டாட்டம்

நேற்று முன்தினம் சிறுவன் மிகிரின் வீட்டில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. மிகிரும், அவனுடைய நண்பர்களும் வீட்டின் மொட்டை மாடியில் ஆடிப்பாடி விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது அவன் எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்து விட்டான்.

அவன் கீழே விழுந்த இடத்தில் நீண்ட இரும்பு கம்பி ஒன்று தரையில் இருந்து வெளியே நீட்டிக்கொண்டு இருந்தது. அந்த கம்பியின் மீது மிகிர் விழுந்தான். இதனால் இரும்பு கம்பி அவனுடைய விலா பகுதியில் நுழைந்து மறுபக்கம் வந்து விட்டது. கம்பியில் சொருகிய நிலையில் அவன் அலறி துடித்தான். அவனுடைய உடலில் இருந்து ரத்தம் குபு, குபு என்று கொட்டியது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

மிகிரின் நிலைமையை பார்த்து அவனுடைய பெற்றோர் கதறி அழுதனர். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சிறுவன் மிகிரை இரும்பு கம்பியோடு தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு டாக்டர்களின் யோசனைப்படி அவனை தலைநகர் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

இரவோடு இரவாக மிகிருக்கு ஆபரேஷன் நடத்தப்பட்டது. 4 டாக்டர்கள் அடங்கிய குழு 3 மணி நேரம் இந்த ஆபரேஷனை நடத்தினார்கள். அப்போது சிறுவனின் உடலில் புகுந்து இருந்த இரும்பு கம்பி அகற்றப்பட்டு ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது.

இரப்பையில் பாதிப்பு

ஆபரேஷனை நடத்திய டாக்டர் மேகராஜ் குன்டன் என்பவர் நிருபர்களிடம் கூறும்போது, “சிறுவன் மிகிர் நன்றாக இருக்கிறான், அவனுடைய இரப்பையில் இரும்பு கம்பி குத்தியதால் ஒரு அங்குல அகலத்துக்கு துவாரம் விழுந்துள்ளது, கல்லீரலும், கணையமும் லேசாக சேதம் அடைந்துள்ளன. அவன் தீவிர கண்காணிப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ளான். அடுத்த 72 மணி நேரம் அவனுக்கு மிகவும் முக்கியமான கட்டமாகும்” என்று தெரிவித்தார்.

வலை உலகில் பணம் சம்பாதிப்பது எப்படி

வலை உலகில் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். ஏனெனில் வலை உலகம் என்பது பல கோடிக்கணக்கான மக்கள் இணைந்திருக்கும் மிகப்பெரிய பிரம்மாண்டமான வலை உலகம். உங்களுக்கு தெரிந்த விபரங்களை, தகவல்களை, செய்திகளை இணைய தளம் கொண்டு உருவாக்கி, அவைகளை இணைய உலகில் தவள விட்டால் அவை எவ்வாறு அல்லது எத்தனை மக்களைச் சென்றடைகின்றன என்பதைப் பொறுத்து உங்களுக்கு இலாபம் கிடைக்கும்.உதாரணமாக விகடன்.காம் தளம் தனது இதழ் பிரதிகளை இணையத்தில் இட்டு ஆண்டுச் சந்தா மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்டுள்ளது. பாரத்மேட்ரிமோனி.காம் என்னும் திருமண தகவல் தளம் கோடிக்கணக்கான இலவச உறுப்பினர்களைக் கொண்டும் அதில் இலட்சங்களில் பணம் செலுத்தும் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. நவ்க்ரி, மான்ஸ்டர் போன்ற வேலை வாய்ப்பு தளங்களும் கோடிக்கணக்கான இலவச வேலை தேடுவோரின் தகவல்களைக் கொண்டு அவற்றை நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டாளர்களுக்கு ஆண்டுக்கு இவ்வளவு என பணம் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறது.ஆக, இணைய தளங்கள் மக்களுக்கு தேவையான சேவைகளை அளித்து அதற்கென கட்டணங்களை நிறுவி அல்லது இடப்படும் விளம்பரங்களை வைத்து பணம் சம்பாதித்துக் கொண்டு இருக்கின்றன. இவற்றில் நாம் பார்க்கப் போவது வலைப்பதிவில் அதாவது இலவசமாக நமக்குக் கிடைக்கும் இவைகளில் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதைப் பார்க்கப் போகிறோம்.முதலாவதாக பணம் சம்பாதிப்பது என முடிவெடுத்தவுடன் எந்தவித உழைப்புமில்லாமல் பணம் சம்பாதிக்க முடியாது என்பதை உணர வேண்டும். மேலும் வலைப்பதிவுகளில் பணம் சம்பாதிப்பது என்பது உங்களது தகவல்களை எவ்வாறு பயன்படப்போகின்றன, எத்தனை பேரின் கவனங்களை ஈர்க்கிறது, எத்தனை பேர் உங்களின் தளத்திற்கு வருகை தருகிறார்கள் எனபதைப் பொறுத்து உள்ளது. அவற்றிற்கு ஏற்ப உங்கள் தளங்களில் விளம்பரங்கள் இட்டு பணம் பார்க்கலாம். உங்களின் வலைத்தளத்தில் இடப்படும் தகவல்கல் பிற தளங்களில் இருந்து பிரதி எடுத்து இடப்படுபவையாக இருத்தல் கூடாது. ஏனெனில் இணையத்தில் தேடுபொறிகளில் தேடப்படும் பொழுது ஏற்கனவே இடப்பட்டுள்ள தளங்களுக்குச் சென்று விடுவதால் உங்கள் தளம் ஏற்கப்பட மாட்டாது. அடுத்து நீங்கள் எந்த வகையாக தகவல்களை, சேவைகளை அளிக்கப் போகிறீர்கள் என்பதை கவனத்தில் கொண்டு இருக்க வேண்டும்.வலைப்பதிவு உருவாக்கம் செய்தாகி விட்டது. வலைப்பதிவில் பதிவுகள் ஏற்றப்பட்டாகி விட்டது. தளத்திற்கு வருகையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. தற்போது எந்த எண்ணிக்கையை எவ்வாறு பணம் சம்பாதிப்பதில் திருப்பது என்று பார்க்க வேண்டும். இணைய தளங்களுக்கான விளம்பர வருமானங்களில் முதன்மையாக உள்ளது கூகிளின் ஆட்சென்ஸ் (AdSense) எனப்படுவது தான். அதனை எவ்வாறு எனபதனைக் காண்போம்.
விகடன்.காம் இணையதளத்தின் ஆட்சென்ஸ் இடப்பட்டுள்ள பகுதிகூகிள் ஆட்சென்ஸ் மூலம் உங்களின் தள விபரங்கள் போன்றவற்றைக் கொடுத்து உங்களுக்கென கணக்கு உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆட்சென்ஸ் கணக்கு என்பது ஜீமெயில் போன்ற சாதாரண கணக்கு அல்ல, இக்கணக்கு உருவாக்கும் செயல்முறைகள் முடிந்தவுடன், கூகிள் பணியாளர்கள் உங்களது விபரங்களை ஆய்வு செய்து, தளம் சரியானதாக உள்ளதா?, வருகையாளர்கள் கணிசமாக உள்ளனரா, உங்கள் தளத்தில் பயன்படுத்தப்படும் மொழி தாம் நிறுவிய விதிகளுக்குட்பட்டு உள்ளதா என்பன போன்ற விபரங்களை ஆய்வு செய்து அனுமதி கொடுப்பார்கள். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட பின் ஆட்சென்ஸ் கணக்கில் உட்புகுந்து விளம்பரங்களுக்கான உயர, அகல அளவுகளை நிறுவி கிடைக்கும் நிரலை உங்களின் வலைத்தில் இடது, வலது, கீழ், மேல் என எந்த இடங்களிலும் பொருத்திக் கொள்ளலாம்.
கூகிள் ஆட்சென்ஸ் முகப்புப் பக்கம் - http://www.google.com/adsenseவலைப்பதிவுக்கு வருகை புரிவோர்கள் கண்களில் படும் இவ்வகை விளம்ப்ரங்கள் அவர்கள் விளம்பரங்களைச் சொடுக்கும் பொழுது உங்களுக்கு பணம் உங்கள் கணக்கில் சேர்க்கப்படும். ஆக எத்தனை பேர் வருகிறார்கள் என்பதைப் பொறுத்தும், அவர்கள் விளம்பரங்களைச் சொடுக்குவதைப் பொறுத்தும் உங்கள் வருமானம் உள்ளது.விளம்பரங்கள் சொடுக்கப்படுவது பற்றிய அனைத்து விபரங்களையும் உங்களால கவனிக்கவும் முடியும். தினமும் சொடுக்கிய விபரங்கள், வார அறிக்கை, மாத அறிக்கை என அறிக்கைகளை ஆய்வு செய்ய முடியும். உங்களுக்கு கிடைக்கும் அறிக்கையைப் போல் கூகிளிக்கும் உங்களால் எத்தனை இடங்களிலிருந்து விளம்பரங்கள் கிடைக்கிறது, விளம்பரங்கள் தவறாக நிறுவிய நபர்களால் சொடுக்கப்படுக்கிறதா, திரும்ப திரும்ப ஒரு சில இடங்களிடமிருந்து சொடுக்க்பபடுகிறதா என தெளிவாக கண்காணிக்கப்படும். ஆகையினால் உங்கள் விளம்பரங்களை தவறாக பயன்படுத்துதல் கூடாது. அவற்றை கூகிள் கண்டுபிடித்தால் மொத்தமாக கணக்கை செயலிழக்கம் செய்து விடுவார்கள். ஆட்சென்ஸ் பற்றிய மேலதிக தகவல்களையும், இன்னபிறவற்றையும் அடுத்த பகுதியில் காண்போம். உங்களுக்கு ஏற்படும் ஐயங்களை பின்னூட்டமாகத் தெரிவிக்கவும். அடுத்த பகுதியில் பதில் தருகிறேன்.

என்றென்றும் அன்புடன்,
A.S.ராஜ்குமார்

பழைய சோற்றின் மகிமைகள்:விஞ்ஞான ஆதாரத்துடன்


சனி, 22 மே, 2010

பாகற்கொடியில் காய்த்த தக்காளி


பாகற்கொடியில் தக்காளி விளைந்த அதிசயம் நெல்லையில் நிகழ்ந்துள்ளது. தென்காசி கீழப்புலியூரைச் சேர்ந்தவர் சிங்கத்துரை. விவசாயி. வீட்டுத்தோட்டத்தில் பாகற்கொடி வளர்த்தார். பந்தலில் பாகற்கொடி படர்ந்துள்ளது. இதில் பாகற்காய்கள் காய்த்து தொங்குகின்றன.இந்நிலையில் பாகற்கொடியில் தக்காளிக்காய் காய்த்திருந்தது. இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பகுதி பொதுமக்கள் இந்த அதிசய தக்காளியைப் பார்த்தனர்.

அதிசயம் ஆனால் உண்மை


நாகபாம்பு அர்ச்சனை செய்த அதிசயம்:

இந்தியாவில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் என்னும் பகுதியில், திருநாகேஸ்வரம் என்னும் ஊரிற்கு அருகில் உள்ள தெப்பெருமநல்லூர் என்னும் ஊரில் வேதாந்தநாயகி சமேத விஸ்வநாதசுவாமி எழுந்தருளி இருக்கும் ஆலயம் இருக்கின்றது. இவ் ஆலயத்தில் நாகபாம்பு ஒன்று வில்வம் இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சனை செய்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 15.01.2010 ம் திகதி காலை 10:30 மணியளவில் கங்கண சூரிய கிரகணம் நிகழ்வதற்கு சிறிது நேரம் முன்பதாக; ஆலய சிவாச்சாரியார் அவர்கள் கருவறைக்கு சென்ற பொழுது, அங்கே மூலவிக்கிரகத்தின் உச்சியில் ஒர் நாகபாம்பு அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் அந்த நாகம் சிவலிங்கத்தில் இருந்து மெதுவாக இறங்கி நேராக அங்கிருந்த வில்வமரத்தின் மேல் ஏறி அந்த வில்வமரத்தில் இருந்து சில வில்வம் இலைகளைப் பறித்து எடுத்து; அவற்றை தனது வாயில் வைத்துக் கொண்டு திரும்பவும் கருவறைக்குள் நுளைந்து சென்று, சிவலிங்கத்தின் உச்சியில் மேல் அமர்ந்து அதனை சிவலிங்கதிற்கு அர்சனை செய்தது. வில்வமரம் இவ் ஆலயத்தின் தலவிருட்சமாகும்.

இவ்வாறு பலமுறை வில்வம் இலைகள் பறிக்கப்பெற்று சிவனுக்கு அர்ச்சனை செய்யப் பெற்றது என அறிய முடிகின்றது. இந்நிகழ்வை பல பக்தர்கள் அதிசமாகவும், பக்தியோடும் பார்த்து வணங்கியுள்ளனர். இந் நிகழ்வினைக் கேள்வியுற்ற ஊர் மக்கள் அதனைக் காண திரண்டு வந்துள்ளனர். இந்நிகழ்வின் போது பக்தர்கள் சிலர் நாகபாம்பை பிந்தொடர்ந்த போது நாகம் சீறி அவர்களை விரட்டியுள்ளது. இந் அதிசய நிகழ்வுபற்றிய செய்திகள் பல தமிழ்நாட்டுப் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் வெளியாகி உள்ளன

வியாழன், 20 மே, 2010

அதிசயமா, அலங்கோலமா?: குழந்தையின் முதுகில் கூடுதல் ஆண்குறி!


எழுதப் போகும் செய்தியை அதிசயம் என்பதா, இறைவன் போட்ட அலங்கோலம் என்பதா? ஒரு வயது சீனக் குழந்தைக்கு இரண்டு ஆண்குறிகள்! ஒன்று வழக்கமான இடத்தில். மற்றொன்று நடுமுதுகில். எங்கே தப்பாயிற்று… தலையைப் பிய்த்துக் கொண்டார்கள் மருத்துவர்கள்.

மத்திய சீனப் பகுதியில் உள்ள ஹெனான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 30 வயது லி ஜுன். விவசாயி. இவருடைய மனைவிக்கு கடந்த வருடம் மே மாதம் 27ஆம் தேதி டியான்ஜின் குழந்தைகள் மருத்துவமனையில் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தையை ஆசையுடன் கொஞ்சி தீர்த்தவர்கள், குழந்தையை திருப்பிப் பார்க்கையில் அரண்டு விட்டார்கள்.அதன் முதுகின் நடுவில், தண்டுவடத்தின் இடையில் ஏதோ ஒன்று நீட்டிக் கொண்டிருந்தது. அதுவும் ஒரு ஆண்குறிதான் என்று மருத்துவர்கள் சொன்னப்பிறகுதான் அவர்களுக்கே அது புரிந்தது.
பெற்ற மனங்கள் கவலைக் கொண்டன. சீன மருத்துவ உலகமே இந்தக் குழந்தையைக் கண்டு அதிசயித்தது.என்ன செய்வது?

இப்படி ஒரு குழந்தை இரண்டு ஆண்குறிகளுடன் (வெவ்வேறு இடங்களில்) பிறந்தது இவ்வுலகிற்கே புதிய செய்தி.இதை மருத்துவ ஆங்கிலத்தில் Fetus in Fetu (FIF) என்கிறார்கள்.

இது மாதிரியான கூடுதல் உறுப்புப் பற்றியச் செய்தி எந்த மருத்துவ புத்தகத்திலும் இல்லை.அது எப்படி அந்த இடத்தில் ஆண்குறி முளைத்தது என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் போனாலும், அது அந்த இடத்தில் இருப்பது அந்தக் குழந்தையின் வாழ்க்கையைப் பாதிக்கும் என்று உணர்ந்த மருத்துவர்கள், அந்த கூடுதல் ஆண்குறியை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிட முடிவு செய்தார்கள்.

சுமார் மூன்று மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் குழந்தையின் முதுகில் இருந்த கூடுதல் ஆண்குறி நீக்கப்பட்டது. குழந்தை இப்போது சுகம்.

இறைவனோ இயற்கையோ எப்போதாவது அதற்கும் தடுமாற்றம் ஏற்படும் போலிருக்கிறது.

-கிசே

மரத்தரையில் பதிந்த சாமியாரின் பாதச்சுவடுகள்: சீன அதிசயம்


நம்பினால் நம்புங்கள் கடவுளை வணங்கிய அடையாளத்தை யாராலாவது ஏற்படுத்த முடியும்? முடியும். நம்மூர் பெண்கள் அடிப்பிரதட்சணம் செய்வதால், சில கோயில்களில் அதன் அடையாளங்கள் இருக்கும். அவை பல பெண்கள் பல முறை நடந்ததால் ஏற்பட்டவை.

ஆனால் சீனா சாமியார் ஒருவர் தன்னுடைய இரு பாதச்சுவடுகள் மரப்பலகையில் அப்படியே பதியும் அளவுக்கு ஆண்டவனை வணங்கியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

சீனாவில் டோங்ரன் என்ற ஊரில் உள்ள புத்தர் ஆலயத்தில்தான் இந்த அதிசயம். அங்குள்ள மரத்தரையில் 70 வயது சாமியாரான ஹுவா சீயின் இரண்டு பாதங்களும் பதிந்து போயிருக்கின்றன. கடந்த 20 வருடங்களாக அவர் இங்குவந்து வணங்குவதால் இப்படி நேர்ந்துள்ளது.

அந்த மரத்தரையில் சுமார் ஒன்றரை இன்ச் ஆழத்திற்கு அவருடையப் பாதச்சுவடுகள் பதிந்துபோயிள்ளன.

தொடக்க காலத்தில் தினசரி 3 ஆயிரம் முறை விழுந்து விழுந்து தொழுவாராம். தற்போது, வயோதிகம் காரணமாக அது தினசரி 1000 முறை என்று குறைந்திருக்கிறதே தவிர அவருடைய ஆன்மிக ஈடுபாடு குறையவேயில்லை.

பெளத்த மதக்கோட்பாட்டின்படி நிர்வாண நிலையை அடைய தியானமும் தொழுதலும் தேவைதான் என்றாலும், தினசரி 3 ஆயிரம் முறை தொழல் என்பது மிகவும் அதிகபட்சம் என்றும் சமானியர்களால் செய்ய முடியாதது என்றும் சொல்கிறார்கள்.

ஆனால் ஹுவா சீ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து தொழுதலில் ஈடுபட்டு வருகிறார்.

இவருடைய இந்த சிறப்புத் தொழுகையால் அந்தக் கோயில் அனைவர் கவனத்தையும் கவர்ந்து இழுக்கிறது. தினசரி நூற்றுக் கணக்கான மாணவர்களும், பக்தர்களும் கோயிலுக்கு வந்து புத்தரை தரிசிப்பதுடன் ஹுவா சீ யின் பாதங்கள் பதிந்து காட்சியளிக்கும் மரத்தரையை ஆச்சரியமாக பார்த்துவிட்டுச் செல்கின்றனர்.

ஹுவா சீயின் அன்றாட செயல்களில் வேறுபாடு எதுவும் கிடையாது. காலையில் சூரியோதயத்திற்கு முன்பு எழுந்திருருப்பவர் குளித்துவி்ட்டு நேராக கோயிலை நோக்கி நடைபோடுகிறார். வழக்கமாக தான் விழுந்து வணங்கும் இடத்தில் தன் பாதங்களைப் பதித்து

வணங்கத் தொடங்குகிறார். வணங்கி முடித்தவுடன் கோயிலை ஒரு சுற்று சுற்றுகிறார். பிறகு தொழவேண்டும் என்னும்போது மீண்டும் சென்று அதே இடத்தில் வணங்குகிறார். இப்படியே அவர் வணங்கியபடியே இருக்கிறார்..

”2 ஆயிரம், 3 ஆயிரம்னு வணங்கிக்கொண்டு இருந்தேன். இப்பல்லாம் ஆயிரம் முறை தான் தொழ முடிகிறது” என்று வருத்தம் தொனிக்க கூறும் ஹுவா சீ, ”இந்தக் கோயிலை புனரமைத்துள்ளேன். கோயிலைச் சுற்றி சுற்றி வருகிறேன். அதனால் இறந்த பிறகு என் ஆன்மா சிரமப்படாது” என்கிறார் நம்பிக்கையுடன்.

ஹுவா சீ ஒரு பாரம்பரிய சீன வைத்தியரும்கூட. கடவுளை வணங்குவதையும், கடவுளின் பிள்ளைகளான மக்களின் நோய்களைத் தீர்ப்பதிலும் இவர் சுகம் காண்கிறார்.

இப்படியும் ஆட்கள் இருப்பதால்தான் பூமி இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறதோ!

குப்புறச் சாய்ந்த 13 அடுக்குக் கட்டடம்!சீன நகரமான ஷாங்காயில் புதிதாகக் கட்டப்பட்ட 13 அடுக்குக் கட்டடம் அப்படியே சரிந்தது. நல்லவேளை, இத்தனை பெரிய விபத்தில் ஒருவர் உயிர் மட்டுமே பறிக்கப்பட்டது.

சீனாவின் புகழ்பெற்ற நகரம் ஷாங்காய். இந்நகரின் உள்பகுதியில், டியான்பூ ஆற்றை ஒட்டி நவீன கட்டடங்கள் கட்டப்பட்டு வந்தன. மிகவேகமாக வளர்ந்து வரும் பகுதி இது. 13 அடுக்குகள் கொண்ட மூன்று கட்டடங்கள் இப்பகுதியில் கட்டப்பட்டு வந்தன. கிட்டத்தட்ட கட்டடப்பணிகள் அனைத்தும் முடிந்து திறப்பு விழாவிற்கு நாள் குறிக்கும் கட்டத்தில், இதில் ஒரு கட்டடம் திடீரென அப்படியே சாய்ந்து விட்டது.மாரடைப்பு வந்து ஒரு கீறல் கூட இல்லாமல் மனிதன் சாவது போல், மேலிருந்து கீழ்வரை ஒரு கீறல் கூட மண்ணில் சாய்ந்தது இந்தக் கட்டடம்.
இந்தக் கட்டடம் இப்படி குப்புறச் சாய்ந்ததற்கு அது கட்டப்பட்ட நெகிழ்ந்த பகுதிதான் காரணம் எனப்படுகிறது. சீன நகரங்கள் வேகமாக வளர்ந்து வருவதால் மட்டமான பொருட்களை கொண்டு வேகமாக கட்டப்படுவதும் இதுபோன்ற கட்டட சரிவுக்குக் காரணம் எனப்படுகிறது.
ஆனால், குறிப்பிட்ட கட்டடம் சரிந்து விழுந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

உலகின் பெரிய முட்டை இட்ட சூப்பர் கோழி!


அசாதாரண கோழி ஒன்று உலகில் மிகப்பெரிய முட்டையை இட்டிருக்கிறது. அதுவும் இது சீனக் கோழி.

வெகு விரைவில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவிருக்கும் இந்த முட்டை குறித்து கோழியின் முதலாளி ஷாங் இண்டே கூறுகையில், ”என் கோழி இட்ட முட்டை 201 கிராம் இருக்கிறது. சாதனை முட்டையை விட இது 25 கிராம் எடை அதிகமிருக்கிறது. 6.3 சென்டிமீட்டர் அகலத்தில், 9.2 சென்டிமீட்டர் நீளமுள்ள இம்முட்டைக்கு ஒப்பீடுகையில், சாதாரண முட்டை இதில் மூன்றில் ஒரு பங்கே இருக்கிறது” என்கிறார்.

முட்டையின் பெருமையைப் பற்றி குறிப்பிட்ட இவர், இப்போது முட்டையிட்ட கோழியின் பெருமைகளைச் சிலாகிக்கிறார்.

”இது ஒரு சூப்பர் கோழிங்க. இதுபோன்ற பெரிய முட்டை (மூன்று) களை இது ஏற்கனவே இட்டிருக்கிறது. ஒருமுறை ஒரே நாளில் நான்கு முட்டைகளை(!) இது தொடர்ந்து இட்டு ஆச்சரியப்படுத்தியது” என்றவர்,

”அவளுக்கு (கோழிக்குத்தான்) என்னுடைய நாய் வீட்டை சுற்றி வருவது என்றால் மிகவும் விருப்பமானது. ஒருவேளை நாய்க்கான உணவை தின்றிருப்பாள் எனச் சந்தேகப்படுகிறேன்” என்கிறார்.

கின்னஸ் சாதனை நிறுவனம் வந்து, சோதனையிட்டு, மிகப்பெரிய முட்டை என அறிவிக்கப்படும் வரை ஷாங் இண்டேவின் குளிர்பதன பெட்டிக்குள் சிலுசிலுவென அமர்ந்திருக்கப் போகிறது இம்மாம் பெரிய முட்டை.

உலகின் மிக வினோதமான 10 பாலங்கள் - அறிவியல் அதிசயம்...ஆயுளை‌க் குறை‌க்கு‌ம் உட‌ல் பரும‌ன்!


‌‌நீ‌ங்க‌ள் ‌தி‌ன்ப‌ண்ட‌ங்களு‌க்கு அடிமையானவரா? உ‌ங்க‌ளி‌ன் உட‌ல் எடை அ‌திக‌ரி‌த்தா‌ல் ஆயு‌ளு‌ம் 10 ஆ‌ண்டுகளு‌க்கு மே‌ல் குறையு‌ம் எ‌ன்று ஆ‌ய்வு ஒ‌ன்று தெ‌ரி‌வி‌க்‌கிறது.

‌பி‌ரி‌ட்டனை‌ச் சே‌ர்‌‌ந்த ஆ‌ய்வாள‌ர்க‌ள் அ‌திக உட‌ல் பருமனா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்புக‌ள் கு‌றி‌‌த்து ஆ‌ய்வு நட‌‌த்‌தின‌ர். அ‌தி‌ல் உட‌ல் பரும‌ன் எ‌ன்பது புகை‌பிடி‌த்தலை ‌விட அ‌திக பா‌தி‌ப்பை‌த் தரு‌கிறது. அதாவது ஆயு‌ளி‌‌ல் சுமா‌ர் 13 ஆ‌ண்டுகளை‌க் குறை‌த்து ‌விடு‌கிறது எ‌ன்று க‌ண்டு‌பிடி‌த்து‌ள்ளன‌ர்.

நமது சோ‌ம்பே‌‌‌றி‌த் தன‌த்‌தினாலு‌ம் அவசர‌த்‌தினாலு‌‌ம் து‌ரித உணவுகளை‌த் தேடு‌கிறோ‌ம். ப‌ற்றா‌க்குறை‌க்கு ‌தி‌‌ன்ப‌ண்ட‌ங்களை‌ச் சா‌‌ப்பிடு‌கிறா‌ம்.

ந‌ம்மை‌ச் சு‌ற்‌றியு‌ள்ள நுக‌ர்வோ‌ர் சமூக‌ம் ந‌ம்மை‌ச் சா‌ப்‌பிட‌த் தூ‌ண்டு‌கிறது. அதையே நமது வா‌ழ்‌க்கை முறையாக மா‌ற்‌றி‌க் கொ‌ள்‌கிறோ‌ம்” எ‌ன்று ஆ‌ய்வு‌க் குழு‌வி‌ன் தலைமை‌ப் பேரா‌சி‌ரிய‌ர் டே‌வி‌ட்‌ கி‌ங் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இவ‌ர் ‌பி‌ரி‌ட்டி‌ஷ் அர‌சி‌ன் முத‌ன்மை அ‌றி‌விய‌ல் ஆலோசக‌ர் ஆவா‌ர். இவ‌ரி‌ன் குழு‌வி‌‌ல் உ‌ள்ள 250 இள‌ம் அ‌றி‌வியலாள‌ர்க‌ள் இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல் ப‌ங்கே‌ற்றன‌ர்.

உட‌லி‌ன் உயர‌த்‌தி‌ற்கு‌த் தகு‌ந்த எடை உ‌ள்ளதா என அ‌றிய‌ப் பய‌ன்படு‌ம் டீஆஐ (டிழனல அயளள iனெநஒ) அ‌ட்டவணை‌ப்படி 30 ‌கிலோ அ‌திகமாக இரு‌ந்தா‌ல் ஆயு‌ளி‌ல் 10 ஆ‌ண்டு குறையு‌ம். 40 ‌கிலோ அ‌திகமாக இரு‌ந்தா‌ல் ஆயு‌ளி‌ல் 13 ஆ‌ண்டுகளு‌க்கு மே‌ல் குறையு‌ம்.

மேலு‌ம் இதய நோ‌ய்க‌ள் ‌நீ‌ரி‌ழிவு ம‌ட்டும‌ல்லாம‌ல் பு‌ற்றுநோ‌‌ய்‌க்கு‌கூட உட‌ல் பரும‌ன் காரண‌மாக இரு‌க்க‌லா‌ம் எ‌ன்று ஆ‌ய்வு முடிவு தெ‌ரி‌வி‌க்‌கிறது.

‌நிறைய நகர‌ங்க‌ளி‌ல் கா‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திக‌ரி‌த்து வரு‌கி‌ன்றன. அவ‌ற்றை‌ப் பய‌ன்படு‌த்துபவ‌ர்க‌ள் ‌சி‌றிது யோ‌சி‌க்க வே‌ண்டு‌ம். நட‌க்க முடி‌ந்த இட‌ங்களு‌‌க்கு நட‌ந்து செ‌ல்வதே ந‌ல்லது. ஏனெ‌னி‌ல் அது ஒரு ந‌ல்ல உட‌ல்ப‌யி‌ற்‌சியாகு‌ம் எ‌ன்று ஆ‌ய்வாள‌ர்க‌ள் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளன‌ர்.

இது ‌மிக‌ப்பெ‌ரிய கலா‌ச்சார மா‌ற்ற‌த் தேவை‌க்கு இ‌ட்டு‌ச் செ‌ன்று‌ள்ளது. உட‌ல் பரும‌ன் ‌சி‌க்க‌ல் ஆ‌ண்டி‌ற்கு ஆ‌ண்டு அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது. நா‌ம் உடனடியாக‌ச் செய‌ல்பட வே‌ண்டு‌ம்” எ‌ன்று பேரா‌சி‌ரிய‌ர் ‌கி‌ங் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்

ஞாயிறு, 16 மே, 2010

உலகின் இரண்டாவது உயரமான கட்டிடம் மக்காவில் கட்டப்படுகிறது

உலகின் இரண்டாவது உயரமான கட்டிடம் சவுதி அரேபியாவில் உள்ள முஸ்லிம்களின் புனித இடமான மக்கா நகரத்தில் கட்டப்படுகிறது. முஸ்லிம்களின் புனித இடமாக உள்ள மஸ்ஜித் ஹரம் சரீப் அருகில் 662 மீட்டர் (2717 அடி) உயரம் கொண்ட கட்டிடம் அந்நாட்டு அரசால் கட்டப்பட்டு வருகிறது.
உயர்ந்து வரும் உலகின் இரண்டாவது உயரமான கட்டடம்உலகின் மிக உயரமான கட்டடம் புர்ஜ் கலிஃபா துபாயில் கடந்த சனவரியில் திறக்கப்பட்டது. இதுவரை உலகின் இரண்டாவது மிக உயர்ந்த கட்டடமாக தைவானில் உள்ள தாய்பேயில் 101 மாடிகளைக் கொண்ட 508 மீட்டர்(1676 அடி) கொண்ட கட்டடமே கருதப்பட்டு வந்தது.

மக்கா அரசு கோபுரம் (Makkah Royal Tower) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கோபுரத்தின் உச்சியில் ஆறு கோபுர கடிகாரங்கள் பொறுத்தப்பட இருக்கிறது. செர்மனியில் தயாராகும் அந்த கடிகாரங்கள் உலகின் மிகப்பெரியதாக இருக்கும். 45 மீட்டர் அதாவது 147 அடி அகலமும், 43 மீட்டர் உயரமும் கொண்டதாக இருக்கும். இந்த கடிகாரங்களை இரவில் 17 கி.மீ தூரம் வரையிலும், பகலில் 12 முதல் 13 கி.மீ தூரம் வரையில் பார்க்க முடியும்.

சவுதி அரசால் கட்டப்பட்டுவரும் இந்தப் பிரமாண்டமான கட்டடத்திற்கான செலவு மூன்று பில்லியன் டாலர்களாகும். புனித பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரிக்கும் பொறுப்புகளை கொண்டிருக்கும் சவுதியின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான பின்லேடன் குழுமம் சவுதி அரசின் சார்பில் இக்கட்டடத்தையும் கட்டி வருகிறது.

இக்கட்டத்தில் ஏழு கோபுரங்களை கொண்ட விடுதிகளும் உண்டு. அதற்கு அப்ராஜ் அல் பேய்த் என்று பெயரிட்டப்பட்டுள்ளது. அந்த விடுதிகளில் 3000 அறைகள் உண்டு. முஸ்லிம்களின் தொழுகை திசையான ஹரம் சரீப் எனும் புனித பள்ளியை நோக்கிய வண்ணம் அதிகமான அறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வளாகத்தை பேர்மான்ட் விடுதி குழுமம் நிர்வகிக்கும். இஸ்லாமிய அறக்கட்டளை அல்லது வக்ஃப் இன் கீழ் இயங்கி இரண்டு புனித பள்ளிகளுக்கான பராமரிப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு இதன் வருமானம் சென்றடையும்.

கட்டடத்தின் ஒரு பகுதி சூனில் திறக்கப்படுகிறது. கோபுரக்கடிகாரம் புனித மாதமான ரமதான் மாதத்தில் திறக்கப்படும். மேற்கண்ட தகவலை துபாயில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதன் நிர்வாகி முகம்மது அல் அற்கூபி தெரிவித்தார்.

உலகின் அரிய சந்திப்பு!


இவ்வளவு பிரமாண்டமான கை குலுக்கலை சந்தித்திருக்கவே மாட்டார் ஹி பிங்பிங். இவ்வளவு கீழே குனிந்திருக்கவே மாட்டார் சுல்தான் கோஷன். வேறு ஒன்றுமில்லைங்க…உலகின் உயரமான மனிதரான, துருக்கி நாட்டைச் சேர்ந்த சுல்தான் கோஷனும் உலகின் குள்ளமான மனிதரான, சீனாவைச் சேர்ந்த ஹி பிங்பிங்கும் துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லில் சந்தித்துக் கொண்டனர்

மொபைல்போனில் பேசும் இந்திய யானைகள்


ஜப்பான் உயிரியியல் பூங்காவில் உள்ள, இரண்டு இந்திய யானைகள் மொபைல்போனில் பாகன்கள் கட்டளை படி நடந்துகொள்ளும் அதிசய சம்பவம் நடந்து வருகிறது.

மேற்குவங்க சரணாலயத்தில் பிறந்த தேவி,ராகுல் என்ற இரண்டு யானைகள் ஜப்பானில் உள்ள ஒகினவா உயிரியியல் பூங்காவிற்கு கடந்த 2007ம் ஆண்டு பரிசாக வழங்கப்பட்டன.

தேவி, ராகுல் யானைகள் மேற்கு வங்க மாநிலம் ஹலாங் அருகே உள்ள ஜல்தபாரா என்ற இடத்தில் பிறந்தன.தற்போது தேவிக்கு ஒன்பது வயதும்,ராகுலுக்கு ஏழு வயதும் ஆகிறது.

இந்தியாவில் இருந்தபோது தேவியை தீனபந்து பர்மன் என்ற பாகனும்,ராகுலை பகதூர் பிஸ்வகர்மா என்ற பாகனும் பராமரித்து வந்தனர்.

ஜப்பான் உயிரியியல் பூங்காவிற்கு, இரண்டு யானைகள் பரிசாக அனுப்பப்பட்டபோது, இரண்டு பாகன்களும் உடன் சென்று சிறிது நாட்கள் தங்கியிருந்து யானைகளை பழக்கிய பின் நாடு திரும்பினர்.

இதற்கு பின் ஒகினவா பூங்கா ஊழியர்களுக்கு பிரச்னை உருவானது. பூங்கா ஊழியர்களின் கட்டளைகளுக்கு தேவி,ராகுல் யானைகள் கட்டுப்படவில்லை. உணவு உண்ணவில்லை.சோகமே உருவாக மாறின.

பிரச்னை குறித்து ஆராய்ந்த பூங்கா ஊழியர்களுக்கு, ஜப்பான் மொழியில் அவர்கள் இடும் கட்டளைகள் யானைகளுக்கு புரியாமல் அவ்வாறு நடந்து கொள்வதை கண்டறிந்தனர்.

செய்வதறியாது தவித்த அவர்களுக்கு யோசனை ஒன்று தோன்றியது.மேற்கு வங்கத்தில் உள்ள பாகன்களிடம் நிலைமையை எடுத்து கூறினர். யானைகளுடன் மொபைல் போனில் பேசுமாறு பாகன்களிடம் கூறினர்.பாகன்கள் பேசுவதையும்,கட்டளைகளையும் மொபைல்போனில் ஒலிபெருக்கி மூலம் யானைகளுக்கு கேட்க செய்தனர்.

என்ன ஆச்சரியம். யானைகள் இரண்டும் குதூகலமாகின. கட்டளைகளுக்கு ஏற்ப நடந்து கொண்டன. இதையடுத்து பாகன்கள் தீனபந்து, பிஸ்வகர்மாவின் உரையாடல்களை டேப் மூலம் பதிவு செய்து,அதனை ஒலிபெருக்கி மூலம் போட்டு கேட்க செய்து யானைகளை பராமரித்து வருகின்றனர் ஒகினவா உயிரியியல் பூங்கா ஊழியர்கள்.

சிறு வயதிலிருந்து யானைகளை பராமரித்து வந்த தீனபந்து,பிஸ்வகர்மா இருவரும் வங்க மொழியில் பேசி,கட்டளைகளை இட்டு பழகி வந்ததால், ஜப்பானிய பாகன்களின் கட்டளைகளை அவை ஏற்கவில்லை என, பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.

2300-ம் ஆண்டில், பூமியில் மக்கள் வாழ முடியாது” விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

ஆஸ்திரேலியாவில் உள்ள நியூசவுத்வேல்ஸ், Berth பல்கலைக்கழகங்கள் மற்றும் அமெரிக்க பல்கலைக் கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர்.

பருவநிலை மாற்றம் காரணமாக தற்போது பூமி வெப்பமயமாகி வருகிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இன்னும் 300 ஆண்டு கழித்து அதாவது 2300-ம் ஆண்டில் பூமியில் மக்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும் என்ற தகவலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

விண்வெளிக்கு செல்லும் நியூட்டனின் அப்பிள் மரம்


புவிஈர்ப்பு விசை தத்துவத்தை கண்டுபிடித்தவர் விஞ்ஞானி ஐசக் நியூட்டன்.

நியூட்டன் ஒரு அப்பிள் மரத்தடியில் படுத்து இருந்தபோது, மரத்தில் இருந்து ஒரு அப்பிள் கீழே விழுந்ததை வைத்து இந்தத் தத்துவத்தை கண்டுபிடித்தார். "மேலே எறியப்படும் எல்லாப் பொருளும், புவிஈர்ப்பு விசை காரணமாக கீழே வந்தே தீரும்" என்றார், அவர்.

அவருக்கு இந்தத் தத்துவத்தை போதித்த அப்பிள் மரத்தை, லண்டனில் உள்ள ஆவணக் காப்பகத்தில் வைத்து பராமரித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த அப்பிள் மரத்தில் இருந்து 4 அங்குல நீளத்துக்கு ஒரு பகுதியை வெட்டி எடுத்து, விண்வெளிக்கு கொண்டு செல்கிறார்கள்.

வரும் 14-ந் தேதி நாசா நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பும் அட்லாண்டிஸ் விண்கலத்தில், இந்த மரத்துண்டையும், நியூட்டன் புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டு 6 விண்வெளி வீரர்கள் செல்கிறார்கள். விண்வெளியில் புவிஈர்ப்பு விசை கிடையாது என்பதால், அங்கு இந்த மரத்துண்டு கீழே விழாமல் அந்தரத்தில் மிதக்கும்.

இதனால் விண்வெளியில் நியூட்டனின் ஈர்ப்பு விசை விதி செல்லாது என்பதை அவருடைய அப்பிள் வைத்து நிரூபிக்கப்போகிறோம் என்கிறார், அதை எடுத்துச் செல்லும் விண்வெளி வீரர்.

விண்வெளி பயணத்தை முடித்த பிறகு, அந்த மரத்துண்டும், நியூட்டன் புகைப்படமும், லண்டன் ஆவணக்காப்பகத்தில் திரும்ப ஒப்படைக்கப்படும்

செவ்வாய், 11 மே, 2010

கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்!


பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ‘ பார்க்கும்’ வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர்.

இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி ‘ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ‘ ( BrainPort vision device ) என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன் முடிவில் அமைந்த ஒரு லொலிப்பொப் ( lollipop) இனிப்பு வடிவில் அமைந்த பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது.

சுமார் 2.5 cm விட்டமுள்ள மிகச் சிறிய கேமரா ( digital video camera) கறுப்புக் கண்ணாடியின் மத்தியில் பதிக்கப் பட்டுள்ளது. ஒருவர் இதனை அணியும் போது காட்சிகள் காமெராவினால் பதிவெடுக்கப் பட்டு கையினால் இயக்கப் படும் control கோலுக்கு அனுப்பப் படுகிறது. இது கிட்டத் தட்ட ஒரு கைத் தொலைபேசி யளவில் இருக்கிறது. இங்கே பதிவான காட்சிகள் மின்னதிர்வுகளாக மாற்றப் பட்டு, பிளாஸ்டிக் இணைப்பின் மூலமாகவும், இறுதியில் நாவின் மேல் வைக்கப் படும் லொலிப் பொப் உபகரணம் மூலமாக உணரப் படுகின்றன. இந்த மெல்லிய உணர்வுகள் நரம்பின் மூலம் மூளையைச் சென்றடையும் போது அவர்கள் காட்சிகளைக் காண முடிகிறது.

கிட்டத்தட்ட 20 மணி நேரப் பயிற்சியில் இந்தக் கருவியை ஒருவர் பாவிக்கும் முறையை முற்றாக அறிந்து கொள்ள முடியுமென்று அறிந்துள்ளனர். ஒரு பார்வை அற்றவர் மூலம் இந்தக் கருவியை முதலில் சோதனை செய்தபோது முதல் முதலாக எழுத்துக்களைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். அத்தோடு இந்த கொன்றோல் கோல் காட்சிகளை பெரிதாக்கவும் (zoom) வெளிச்சத்தைக் குறைக்கவும் அதிகரிக்கவும் வசதியளிக்கிறது.

இந்த மகத்தான கண்டு பிடிப்புக்குப் பொறுப்பான ஆய்வினர் , பார்வையற்றவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை அறிவதற்கும், மற்றவர் உதவியில்லாமல் நடமாடவும், போகும் திசைகளையும் ஊர்களின் பெயர்களையும் படிப்பதற்கும் உதவியாகயிருக்கும் என்றும் , இந்தக் கருவியை உபயோகித்து புத்தகம் படிப்பது அவசியமில்லை என்று சொல்கிறார்கள்.

அவர்கள் அறிக்கையின் படி இக்கருவி மிக விரைவில் விற்பனைக்கு வருமென்று தெரிகிறது. இக் கருவி கண் பார்வையற்றவர்களின் தன்னம்பிக்கையையும் , தற்பாதுகாப்பையும் அதிகரிக்கும் ஒரு மிகப் பெரிய வரப் பிரசாதம்.

செவ்வாய், 4 மே, 2010

இந்திய மாணவர்கள் தயாரித்த செயற்கை கோள்


இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான `இஸ்ரோ’ தனது விண் வெளி ஆய்வுப் பணிகளில் கல்லூரி மாணவர்களையும் இணைத்துள்ளது. இதன்படி பெங்களூர் மற்றம் ஐதராபாத் ஆகிய நகரங்களைச் சேர்ந்த 7 பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து `ஸ்டுட் சாட்’ என்ற பெயரில் ஒரு சிறிய செயற்கைகோளை உருவாக்கி உள்ளனர்.`ஸ்டுடன்ட் சாட்டிலைட்’ என்பதன் சுருக்கமே `ஸ்டுட் சாட்’ என்பதாகும். (Student Satel lite&STUD SAT)
சுமார் 55 லட்சம் ருபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோள் 10x10x13.5 சென்டி மீட்டர் அளவு கொண்டது. இதன் எடை சுமார் 850 கிராம். இந்த செயற்கைகோளில் தகவல் தொடர்பு கருவி, பேட்டரி, கண்ட்ரோல் கருவிகள் மற்றும் சக்திவாய்ந்த கேமிரா ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.
விரைவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மற்ற செயற்கை கோள்களுடன் மாணவர்கள் செயற்கைக் கோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் செயற்கை கோள் பூமியில் இருந்து சுமார் 680 கிலோ மீட்டர் உயரத்தில் விண்ணில் நிலைநிறுத்தப்படும். அங்கு சுற்றி வந்தபடியே இந்த செயற்கை கோள் பூமியை படம் பிடித்து தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். இந்தபடங்களை மாணவர்கள் தங்களது கல்வி மற்றும் ஆராய்ச்சிப்பணிகளுக்கு பயன்படுத்துவார்கள்.
செயற்கை கோளை தயாரித்த மாணவர்கள் குழு இதை சிலவாரங்களுக்கு முன்பு இஸ்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அதை ராக்கெட்டில் பொருத்தும் பணியை செய்து வருகிறார்கள்

மகிந்தவின் மனிதாபிமான தமிழின கருவழிப்பு

உலகில் எங்குமே நடைபெற்றிராத மிகக் கொடூரமான இனப்படுகொலையை சிறிலங்கா அரசு தமிழர்கள் மீது மேற்கொண்டு வருகின்றது. இந்த இனப்படுகொலையில் கர்ப்பிணிப் பெண்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். ஏராளமான கர்ப்பிணிப் பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்., பலர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன் கர்ப்பிணிப் பெண்கள் படுகாயமடைந்து அவர்களின் வயிற்றில்–படங்கள் கோரமானவை இருந்து சிசுக்கள் வெளியே வரும் பரிதாப நிலை உலகில் எங்குமே யாருமே கண்டிருக்க முடியாதவை.


உலகம் கண்களையும், காதுகளையும் மூடிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழர் தாயகத்தில் இது அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இது இன்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்காவின் இனப்படுகொலைத் தாக்குதலில் படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரின் சிசுவின் கை வெளியே வந்திருக்கும் காட்சி.

இதேவேளை, இன்றைய தாக்குதலில் 20 நாட்களேயான குழந்தையொன்றும் படுகாயமடைந்துள்ளது.


உலகத்தில் நடக்கும் சாதனை செய்திகளின் புகைப்படங்கள்..


பெய்ஜிங்கில் யாங்ஸி என்ற ஏரியின் மீது கட்டப்பட்ட 60 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பி மீது கார் ஓட்டி உலக சாதனை படைத்துள்ளார் யாங் ஸியாங்டாங். இவரது சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

சனி, 1 மே, 2010

நின்ற இதயம் மீண்டும் இயங்குமா?


பொதுவாக மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களின் உடல் குளிர்ந்து விடும். அதன்பிறகு அவர்களின் இதயத்துடிப்பு அடங்கி உயிர் இழந்து விடுவார்கள்.
தற்போது அப்படி நின்ற இதயத்தையும் மீண்டும் இயக்க வைக்க முடியும், அதனால் ஒருவரை உயிர் பிழைக்க வைக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர்.


மாரடைப்பு ஏற்பட்டவுடன், பாதிக்கப்பட்ட நபரின் மூக்கின் வழியாக `ரினோசில்’(இது பேட்டரியால் இயங்கக் கூடியது) என்ற புதிய கருவியின் மூலம் மூளையில் சிறிய அளவில் குளிர்ச்சியை ஏற்படுத்தி நின்ற இதயத்தை மீண்டும் இயக்க வைத்தனர்.


இந்த மருத்துவ ஆராய்ச்சியை ஸ்டாக்ஹோமை சேர்ந்த மருத்துவ பேராசிரியர் மாரட்கேஸ்டிரன் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்டனர்.
ஐரோப்பாவில் உள்ள 14 ஆஸ்பத்திரிகளில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு அனுமதிப்பட்டிருந்த 200 பேரிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இவர்களில் 182பேர் உயிர் பிழைத்தனர். அப்படி உயிர் பிழைத்தவர்களில் 83பேர் 66 வயது முதல் 71வயது உடையவர்கள்!

மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி


கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, நிலாவுக்கு சந்திரயான்-1 விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. அது, நிலாவில் தண்ணீர் இருப்பதை ஏற்கனவே கண்டுபிடித்தது.


இந்நிலையில், நிலவின் மேற்பரப்புக்கு அடியில் குழிவான சுரங்கப்பாதைகள் இருப்பதை சந்திரயானில் உள்ள இந்திய கேமரா படம் பிடித்துள்ளது. எரிமலை வெடித்ததால் `லாவா' எனப்படும் எரிமலைக்குழம்பு வெளியானதை தொடர்ந்து, இந்த சுரங்கப்பாதைகள் உருவானதாக தெரிய வந்துள்ளது.


இந்த சுரங்கப்பாதைகளில், எதிர்காலத்தில் மனிதர்கள் வசிக்கும் வாய்ப்பு இருப்பதாக, ஆமதாபாத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் ரங்கநாத் ஆர்.நவல்குண்ட் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, விஞ்ஞானிகள் மேலும் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்

கூகிள் எர்த் மூலம் ஆதிமனிதன் பற்றிய ஆராய்ச்சிகள்


கூகிள் அல்லது கூகிளிங்க் என்பதே தேடுதல் என்ற பொருள் படும்படியாக உருவாகி வருவது அறிந்ததே. தற்போது கூகிள் எர்த் மூலம் ஆதிமனிதனின் உடற் சுவட்டு ஆதாரங்கள் இருந்த இடத்தைக் கண்டுகொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.


இரண்டு மில்லியன் ஆண்டுகள் பின்னோக்கிய காலத்தில் ஆப்பிரிக்க நிலப்பகுதியில் தோன்றிய ஆதிமனிதனை ஒத்த உயிரினம் என அறியப்படுகிறது. படிப்படியான இன்றைய நாகரீக மனிதனின் வளர்ச்சியின் தொடர்பை இட்டு நிரப்பக்கூடிய கண்டுபிடிப்பாக இது இருக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.


1.9 மில்லியன் வருடத்துக்கு முற்பட்ட இரண்டு எலும்பு படிமங்கள் (ஆஸ்ட்ரோப்லிதெக்ஸ் செடிபா )ஒரே இடத்திலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன. அவை ஒரு தாய் (20 அல்லது 30 வயது) மற்றும் ஒரு மகனுடையதாக (8) இருக்கலாம் என அறிவியலார்கள் தெரிவிக்கிறார்கள்.


தெற்கு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிற இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்திச் சென்ற லீ பெர்கர் , 2008 லிருந்து கூகிள் எர்த்தை
பயன்படுத்தத்தொடங்கி இருக்கிறார். முன்பே அவரைப்போன்ற ஆராய்ச்சியாளர்களால் பலகாலமாக தேடப்பட்டு பின்பு கண்டுபிடிக்கப்பட்ட 130 குகைகளையும் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்ட 20 ப்ரதேசங்களையும் அடையாளப்படுத்திக் கொள்வதற்காகவே பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார். பின்பு புதிய குகைப் பிரதேசங்களையும் கூகிள் எர்த்தின் செயற்கைக்கோள் படங்கள் மூலம் கண்டுகொண்டார்.


மிக்கேல் ஜோன்ஸ் , கூகிள் எர்த்தின் தொழில்நுட்பத் தொடர்பாளர் , தங்கள் கூகிள் எர்த்தின் மிகச்சீரிய தேடுதல் முறையாலும் சிறந்த வழிகாட்டுதல் முறையாலும் பெர்க்கர் இதற்கு முன்பே அறியப்படாத கிட்டத்தட்ட 500 குகைப் பிரதேசங்களை கண்டுபிடித்ததாகக் கூறுகிறார்.

Laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு சில சிறந்த...


அலுவலக வேலைக்கோ தனிப்பட்ட வேலைக்கோ laptop ஐ பாவிப்பது பல வழிகளில் வசதியானது. ஆயினும் பலர் laptop முன்னரைவிட வேகம்குறைந்துவிட்டது என்று குறைபடுவதை கேட்டிருக்கிறோம்.


இப்பதிவில் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு உள்ள சில சிறந்த வழிகளை பார்ப்போம்.


குறிப்பிட்ட காலைடைவெளியில் ஒழுங்காக Defragment செய்தல். ஆகக்குறைந்தது வாரத்திற்கு ஒரு தடவையேனும். இதன்போது hard drive இல் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படும் fileகள் ஒழுங்காக அடுக்கப்படும். இது fileகளை இலகுவாக திறப்பதற்கு ஏதுவாகும் Registryஐ Clean செய்தல். வின்டோஸின் மிக முக்கியமான ஒரு அங்கம் Registry. laptop இல் ஏற்படும் சில பிழைகள் இப்பகுதியையும் பாதிக்கின்றது. Registryஐ Clean செய்யும் programகள் இணையத்தில் இலவசமாகவும் கிடைக்கின்றன.


hard drive இல் இருக்கும் தேவையற்ற games, music, pictures களை அளித்து விடுங்கள். இவை hard drive ஐ அடைத்துக்கொண்டு மெதுவாக இயங்கச்செய்கின்றன. உங்கள் hard drive, நிரம்ப்பிப்போய் இருந்தால் அது RAM ஐயும் processing ஐயும் பாதித்து அடிக்கடி பழுதுகள ஏற்பட வாய்ப்புக்களை ஏற்படுத்தும்.


சிறந்த anti-virus program ஐ பாவியுங்கள். வாரத்திற்கு ஒருமுறையேனும் உங்கள் laptop ஐ முழுமையாக் scan பண்ணுங்கள்.பெரும்பாலான anti-virus program களில் இதை தன்னிச்சையாக செய்வதற்கு வசதிகள் உண்டு.


recycle bin ஐயும் அடிக்கடி வெறுமையாக்குங்கள். தேவையற்றவறை bin இல் வைத்திருப்பதால் பலன் ஏதும் ஏற்படப்போவதில்லை.


temporary Internet Fileகளை அழியுங்கள். நீங்கள் ஒவ்வொருமுறையும் இணையப்பக்கத்திற்கு செல்லும்போதும் temporary Internet Fileகள் சேமிக்கப்படுகின்றன. நீங்கள் எந்ந்தவொரு browser ஐ பயன்படுத்தினாலும் அதன் cache ஐ clear செய்ய மறந்து விடாதீர்கள்.


laptop ஒவ்வொருமுறையும் on செய்யப்படும்போது தாமாகவே இயங்கும் startup programகளை குறையுங்கள். இவை எல்லாம் desktop தெரியாவிட்டாலும் பின்னணியில் இயங்கிக்கொண்டு இருப்பதால் RAM ஐ பயன்படுத்திக்கொண்டிருக்கும். எப்படி "msconfig" செய்வது என்று அறிந்து manualஆக தேவையற்றவற்றை தாமாக இயங்குவதை தடைசெய்யுங்கள்.


laptopஐ மென்மையான தளங்களில் வைப்பதை தவிருங்கள். மெத்தை சோபா போன்றவை உங்கள் laptop இனுள் காற்று உட்புகுவதையும் வெளிவருவதையும் தடைசெய்யும். இதன்போது processor சூடாகுவதால் crashe ஆகும் வாய்ப்புகளும் உதிரிப்பாகங்கள் பழுதாகும் வாய்ப்புகளும் அதிகம்.


தேவையற்ற programகளை Uninstall செய்யுங்கள். Uninstall செய்வதற்கு எப்போதும் Control Panel இல் உள்ள Uninstall வசதியை பாவியுங்கள். இல்லாவிட்டால் பிரச்சினை இன்னும் கூடும்.


அதிக programகளை உபயோகிப்பவரானால் RAM ஐ Upgrade செய்யுங்கள்.
இந்த ஆலோசனைகளை பின்பற்றினால் குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகள் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிக்க கூடியதாக இருக்கும்.


ஆயினும் இவை எதையும் செய்வதற்கு முன் உங்களது முக்கியமான Fileகளை backup செய்து வைத்துக்கொள்வது அவசியமாகும்

மடிகணினியை பாதுகாப்பது எப்படி


மடிகணினியை பயணம் செய்யும் போது அதிக நேரம் பயன்படுத்த கூடாது.
POWER DISCHARGE ஆனவுடன் கணினியில் இருந்து LOW BATTERY என்ற WARING செய்தி கிடைத்தவுடன் பின்புதான் நீங்கள் கணினிக்கு CHAGRE செய்ய வேண்டும்.


ORINIGAL CHARGER ரை பயன்படுத்துவது நல்லது.


சிறு பிரச்சனை ஏற்ப்பட்டால் நாமாகவே மடிகணினியை கலட்டி பார்ப்பது மிகவும் தவறு.


கணினியில் இருந்து வெப்பம் சரிவர வெளியேற வேண்டும் அல்லவா !அதனால் மடி கணினியை சமம்மான இடத்தில் பயன்படுத்த வேண்டும்.


அதிக நேரம் நம் மடியில் மடிகணினியை பயன்படுத்த கூடாது.(தோள் பாதிப்பு வரலாம்)மடிகணினிக்கு ஏற்ற SAFETY பேக் தேவை.
முன்று மாதத்துக்கு ஒரு முறை கணினியில் உள்ள இயங்குதளத்தை மாற்றுவது நல்லது.


அடிக்கடி ஒரு மடிகணினியில் இருந்து மற்றோர் மடிகணினிக்கு BATTERY யை மாற்றி கொள்ளாமல் இருந்தால் நல்லது.


மடி கணினி காணமல் போய்விடலாம் அதனால் மடி கணினியின் SEIRAL NUMBER ரை குறித்து கொள்ளவேண்டும்.


நீங்கள் மடிக்கணியை சில நாள்கள் பயன்படுத்த முடியாமல் சுழில்நிலை ஏற்ப்பட்டால் (அதாவது வெளியூர் சென்றால்) மடிகணினியில் இருந்து BATTERY யை தனியாக கலட்டிவைக்கவேண்டும்

இனையத்தில் வேகமாக உலவ டிப்ஸ்


நம்மிடம் குறைந்த திறன் கொண்ட கணினி இருக்கும் அதனால் நாம் வேகமாக இனையத்தில் உலவ முடியாது கணினியில் மெமரியின் அளவை அதிகரித்தால் கொஞ்சம் மாற்றம் கிடைக்கும் இருப்பினும் பணம் செலவில்லாமல் சில மாற்றங்கள் கணினியில் செய்வதன் மூலம் கொஞ்சம் வேகத்தை அதிகரிக்கலாம் இந்த தகவல் இனையத்தில் உலவும் திறனை மட்டுமே மேம்படுத்தும்.


இங்கு நான் இரண்டு வழிமுறைகள் வழியாக கொஞ்சம் வேகத்தை அதிகரிக்கலாம் டெஸ்க்டாப்பில் இருக்கும் மை கம்ப்யூட்டரின் Properties தேர்ந்தெடுக்கவும் இப்போது புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் Hardware என்பதை கிளிக்கி Device Manager என்பதை திறக்கவும்.


இனி Device Manager என்பதை கிளிக்கிய பிறகு மீண்டும் ஒரு விண்டோ திறக்கும் அதில் Communication Port என்பதை டபுள் கிளிக் செய்தால் இப்போது மீண்டும் ஒரு விண்டோ திறக்கும் அதில் Port Settings என்பதை தேர்ந்தெடுத்து அதில் Bit Per Second என்பதில் 128000 என மாற்றவும் அடுத்து கீழே இருக்கும் Flow Control என்பதில் Hardware என மாற்றவும்.


என்ன அப்படியே செய்து விட்டீர்கள்தானே இனி ஓக்கே கொடுத்து வெளிவரவும் இனி அடுத்து என்ன செய்வது என பார்க்கலாம், இனி Start -> Run -> என்பதில் gpedit.msc என டைப் செய்து ஒக்கே கொடுக்கவும் இப்போது ஒரு விண்டோ திறக்கும் அதில் Local Computer Policy என்பதன் கீழே இருக்கும் Computer Configuration பகுதியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுக்கவும் அதில் Network என்பதை கிளிக்கி அடுத்ததாக QOS Packet Scheduler கிளிக்கவும் இனி வலது பக்கம் பாருங்கள் Limit Reservable Bandwidth என்கிற பெயர் இருக்கிறதா அதை டபுள் கிளிக் செய்யுங்கள் திறக்கும் விண்டோவில் செட்டிங்ஸ் டேப் திறந்து அதில் இருக்கும் Bandwidth Limit என்பதில் 0 என மாற்றிவிடுங்கள் அப்ளை கொடுத்து ஓக்கே கொடுத்து வெளியேறுங்கள் அவ்வளவுதான்.


இனி என்ன முன்பு இருந்த வேகத்திற்கும் இப்போது இருக்கும் வேகத்திற்கும் ஏதாவது மாற்றம் தெரிகிறதா பெரிய அளவில் மாற்றம் இல்லையென்றாலும் நிச்சியம் நீங்கள் அந்த மாற்றத்தை உணர்வீர்கள்.