புதன், 30 ஜூன், 2010

ராமேஸ்வரம் ஆலய தரையில் மாதா உருவம் தோன்றி மறைவதாக பரபரப்பு

ராமேஸ்வரம் அருகே கிருத்துவ ஆலயத்தின் தரையில் இயேசு, மாதா உருவங்கள் தோன்றி மறைவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தில் அற்புத குழந்தை யேசு ஆலயம் கடந்த ஏப்.18ம் தேதி திறக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு, இப்பகுதியை சேர்ந்த மாணவர் ஜனார்த்தனன் வழிபாடு நடத்த சென்றார். பிரார்த்தனை முடித்து அவர் கண் விழித்து பார்த்த போது, சர்ச்சின் டைல்ஸ் பதித்த தரையில் ஒன்றரை அடி நீள அகலத்தில் இயேசு, மாதா உருவங்கள் மாறி, மாறி தெரிந்துள்ளது.

இதைப்பார்த்து அதிசயித்த ஜனார்த்தனன் ஓடிச்சென்று, அங்குள்ள பாதிரியார் ஜேம்ஸ் அந்துவான், உதவி பங்கு தந்தை பாக்யநாதன் ஆகியோரிடம் தெரிவித்தார். அவர்களும் விரைந்து வந்து அந்த இடத்தை பார்த்துள்ளனர். அவர்களுக்கும் இயேசு, மாதா உருவங்கள் தெரியவே, ஆச்சரியப்பட்டனர். இத்தகவல் ராமேஸ்வரம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.

இதையடுத்து, ராமேஸ்வரம் பகுதி மக்கள், சுற்றுலா பயணிகள் சர்ச்சை நோக்கி படையெடுத்தனர். அவர்கள் செல்போனிலும், கேமராவிலும் அந்த உருவங்களை படம் எடுத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்

தன்னை கேலி செய்ததாக சிலர் மீது போலீசில் ஒரு பெண் புகார் செய்தார். இதனால், ஆத்திரமடைந்த கும்பல், அந்த பெண்ணை கிராமத்தில் நிர்வாணமாக ஊர்வலம் நடத்தியது.

இந்த கொடுமையான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு: உ.பி. மாநிலம் அலிகார் நகரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது சந்துகா என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பிர்மா தேவி (45). கடந்த 2ம் தேதி இவர் கோயிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, சிலர் இவரை கேலி செய்துள்ளனர். இது பற்றி பிர்மா தேவி போலீசில் புகார் செய்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் அந்த கும்பல், பிர்மா தேவியை தேடி கண்டுபிடித்து அடித்து உதைத்தது. பின்னர் அவரை நிர்வாணமாக்கி கிராமத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்றது.

மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மூல்சந்த் பாகல் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெண்ணை அடித்து உதைத்தது உண்மை. ஆனால், அவரை நிர்வாணமாக்கி அழைத்துச் செல்லவில்லை என்று போலீஸ் அதிகாரி மான் சிங் சவுகான் தெரிவித்தார். அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக உண்மையை போலீசார் மறைப்பதாக பிர்மா தேவியின் கணவர் பிர் சிங் குற்றம்சாட்டினார்.

இத்தாலியில் பைசா கோபுரத்தில் குதித்து பெண் தற்கொலை

இத்தாலியில் உள்ள பைசா நகரத்தில் சாய்ந்த நிலையில் கோபுரம் உள்ளது. முன்பு இது உலக அதிசயங்களில் ஒன்றாக இருந்தது. இந்த கோபுரத் தின் உச்சியில் இருந்து குதித்து ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

அவருக்கு வயது 31 இருக்கும். அவர் யார் என்று தெரியவில்லை. கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த கோபுரம் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதற்கு முன்பு கடந்த 2002-ம் ஆண்டில் இதில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஒரு பெண் தற்கொலை செய்துள்ளார்.

உயிரைக் குடித்த பேஸ்புக்

இளைஞர்கள் மத்தியில் சமூக இணையதளமான பேஸ்புக் பிரபலமானது. இதனைப் பயன்படுத்தி பலர் மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் இந்த இணைய தளத்தின் காரணமாக ஒரு கொலை ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது அந்த அரசாங்கத்தை மட்டுமல்லாது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

ஆஸ்திரேலியாவைச் சார்ந்த 18 வயது இளைஞி நோனா பிளோமிசாப். இவர் பேஸ்புக்கில் தனது முழு விபரங்களையும் வெளியிட்டு தனது நண்பர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். இவரைத் தொடர்பு கொண்ட கிறிஸ்டோபர் ஜேம்ஸ் என்ற 20 வயது இளைஞர் தான் மிருக நலச் சங்கத்தில் வேலை செய்வதாக தெரிவித்தார். இவரது பேஸ்புக் இணையதளத்திலும் இவ்வாறே குறிப்பிட்டிருந்தார். நோனாவும் மிருக நலத்தில் ஆர்வம் கொண்டிருந்ததால் ஜேம்ஸூடன் நட்பு வைத்திருந்தார். நோனாவின் மதிப்பைப் பெற்ற ஜேம்ஸ் நோனாவுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி தன்னோடு சுற்றுலா வருமாறு அழைத்துச் சென்றிருக்கிறார்.

சுற்றுலா சென்று இரண்டு நாட்கள் கழித்து மே 14ம் திகதி சிட்னியின் கடற்கரையோரத்தில் நோனா பிணமாக கிடந்தார். சடலத்தை கைப்பற்றியுள்ள காவல்துறையினர் கிறிஸ்டோபர் ஜேம்ஸை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் பேஸ்புக்கில் தங்களைப் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம் என ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வந்தாலும் பேஸ்புக்கின் மீதான கவர்ச்சி குறைந்தபாடில்லை. இணையம் மூலம் ஏற்படுகின்ற நட்பை நம்பி நம்மைப் பற்றிய முழுமையான தகவல்களை வெளியிடாமல் வைத்திருப்பது பாதுகாப்பானது.

காட்டுக்குடிசையில் மகளை அடைத்துவைத்து 7 பிள்ளைகளுக்கு தாயாக்கிய பிரேசில் தந்தை


தனது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி 7 பிள்ளைகளுக்கு தாயாக்கிய தந்தையொருவருக்கு 12 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பிரேசிலில் புதன்கிழமை இடம் பெற்றுள்ளது.

ஜோஸ் அகொஸ்ரினோ பெரேய்ரா (Agostinho Pereira 54 வயது) என்ற மேற்படி நபர், தனது மகள் மூலம் தனக்கு பிறந்த பெண் பிள்ளைகளில் ஒருவரையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

தென் கிழக்கு பிரேசிலில் மாரன்ஹாவோ (Maranhao) மாநிலத்திலுள்ள எக்ஸ் பெமென்டோ கிராமத்திற்கு அருகேயுள்ள காடொன்றில் அமைக்கப்பட்டிருந்த இரு அறைகளைக் கொண்ட குடிசையொன்றில் தனது மகளையும் (28 வயது) அவர் மூலம் தனக்குப் பிறந்த பிள்ளைகளையும் ஜோஸ் அகொஸ்ரினோ அடைத்து வைத்திருந்துள்ளார்.

நிலப் பகுதியிலிருந்து ஆற்றால் துண்டிக்கப்பட்டிருந்த மேற்படி காட்டுப் பிரதேசத்தை படகின் மூலம் மட்டுமே சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 1998ஆம் ஆண்டு ஜோஸ் அகொஸ்ரினோவின் மனைவி அவ ரை விட்டுப் பிரிந்து சென்ற பின் அவர் தனது மகளை பாலியல் துஷ் பிரயோகம் செய்ய ஆரம்பித் துள்ளார்.

காட்டுக் குடிசையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படாமல் சிறை வைக்கப்பட்டிருந்ததால் ஜோஸ் அகொஸ்ரினோவின் மகளுக்கோ மகள் மூலம் பிறந்த பிள்ளைகளுக்கோ இயல்பாக உரையாட முடியாதிருந்ததுடன் எழுத்தறிவும் இல்லாதிருந்தது.

குடிசையிலிருந்து எவராவது தப்பிக்கவோ அன்றி தமக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து யாருக்காவது தெவிக்கவோ முயன்றால் கொன்று விடுவதாக அவர் அச்சுறுத்தியுள்ளார்.

இந் நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த அநாமதேய தொலை பேசித்தகவலையடுத்து ஜோஸ் அகொஸ்ரினோ கைது செய்யப் பட்டார்.

அநாமதேய தொலைபேசி தகவலையடுத்து 10 நாட்களுக்கு முன்பு ஜோஸ் அகொஸ்ரினோவின் குடிசையை கண்காணிக்க ஆரம்பித்த பொலிஸார், தமக்குக் கிடைத்த தகவல் உண்மையென்பதை உறுதிபடுத்திய பின்னர் திடீரென அந்த குடிசைக்குள் பிரவேசித்த பொலிஸார் அகொஸ்ரினொவை கைது செய்தனர்.

மனைவியர் சிலருக்கு மட்டும்...

இல்லத்தரசி என்பது
இவர்களுக்கு
இடப்பட்ட பட்டமெனினும்
வீற்றிருக்கிறார்கள்
வெறும் வேலைக்கார்களாய்

பிள்ளை எனும்
பெயரோடு
பிறந்த வீட்டில்
சிறை கிடந்தவர்கள்
மனைவி எனும்
மகுடம் மாட்டப்பட்டு
சிறை மாறுகிறார்கள்
புகுந்த வீட்டிற்கு

பேசி முடிக்கப்பட்ட
சீதனத்தொகை
செலுத்த முடியாமல்
மாமியார் வார்த்தை கேட்டு
மரண வேதனையை
நித்தமும் சுமக்கும்
நெருப்பு வாழ்வு

தந்தையாகும் தகுதி
கணவனுக்கு இல்லாவிடினும்
பரிசீலிக்காமலே
பலர் சொல்லிவிடுகிறார்
அவளை ‘மலடி’ என்று

வீட்டுவளாகம் தவிர
வெளியிடம் ஏதுமறியா
வேதனை நிலை
பேசாமல் அவளிருந்தால்
வாயில் பிட்டா என
வசைபாடும் புகுந்தவிட்டார்
வாய் திறந்து பேசிவிட்டால்
வாய்க்காரி என
வைக்கிறார் பட்டம்

குடும்பம் என்பது
கோயிலா...?
இல்லை... இல்லை
இவர்களுக்கு இது
சாத்தான் வீடு

சந்தியாவின் கதி


நவீன சூர்ப்பனகை ஆகிவிட்டார் சந்தியா. யாரோ ஒரு பெயிலாப்போன டாக்டரு இவரது மூக்கில் கத்தியை வைச்சு அவரது கலையுலக வாழ்க்கைக்கே வில்லனாகி விட்டார்.

மூக்கு ஆபரேஷனுக்கு முன்னாடி வரைக்கும் பந்தய குதிரையாக இருந்த சந்தியா அதுக்குப் பிறகு என்னவானார் என்பது நமக்கெல்லாம் தெரிந்த அழுகாச்சு கதை.

கிசியா இருந்த நடிகை சும்மாயிருந்தா என்னவாகும் என்பதற்கு இதைவிட பெரிய உதாரணத்தை சொல்ல முடியாது. வடபழனி விஜயசாந்தி டவர்சில இருக்கு சந்தியா விடு.

சில தினங்களுக்கு முன்னாடி ஏழாவது மாடிக்கு மேலே இருக்கும் வாட்டர் டேங்க் முனையில் ஆபத்தான இடத்தில உட்கார்ந்திருச்சு ஒரு உருவம் ஐயோ சாமின்னு அலறி அடிச்சுட்டே மேலே போன அபார்ட்மன்ட் வாசிகள் அது சந்தியான்னு தெரிஞ்சதும் ஸ்தம்பிச்சு போயிட்டாங்களாம்.

ஏதோ ஒரு மயக்க நிலையில் உட்கார்ந்திருந்த சந்தியா, மற்றவங்களோட அட்வைஸ் கேட்டு கீழே இறங்கி வந்தாராம். படம் ஷ¤ட்டிங்குனு பிஸியா இருந்த பொண்ணு இப்போ வீட்டில சும்மாயிருக்க அதான் இப்படின்னு அலுத்து சலித்துக் கொண்டே நடையைக் கட்டியது அபார்ட்மென்ட் ஜனம்.

சைக்கிளை மிதித்தால் செல்போன் சார்ஜ் ஆகும்


செல்போனை சார்ஜ் செய்யாமல் வெளியில் சென்றுவிட்டீர்களா? கவலை வேண்டாம். சைக்கிள் இருந்தாலே போதும் செல்போன் சார்ஜ் ஆகிவிடும். ஆம், செல்போன் சைக்கிள் சார்ஜரை நோக்கியா ஒய்ஜ் நிறுவனம் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நேற்று அறிமுகம் செய்தது.

விரைவில் இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மின்சார தட்டுப்பாடு உள்ள இந்த காலத்தில், மின்சார பயன்பாட்டைக் குறைப்பதற்காக இதை தயாரித்துள்ளதாக நோக்கியா தெரிவித்துள்ளது.

‘‘ஐரோப்பிய நாடுகளில் அலுவலகம், ஷாப்பிங் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் சைக்கிளில் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில்தான் சைக்கிள் வழி செல்போன் சார்ஜரை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

குறிப்பாக ஆம்ஸ்டர்டாமில் சைக்கிள் பயன்படுத்துபவர்கள் அதிகம்.எனவேதான் இதை இங்கு அறிமுகம் செய்துள்ளோம். பின்னர் உலகின் மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும்’’ என நோக்கியா நிறுவன செய்தித் தொடர்பாளர் லியோ மெக்கே தெரிவித்துள்ளார்.

இந்த சார்ஜர், சைக்கிள் சக்கரம் சுற்றும்போது அதிலிருந்து முகப்பு விளக்கு எரிவதைப் போலவே, செல்போனுக்கு தேவையான மின்சாரத்தை கிரகித்துக் கொள்ளும். இதனால் மின்சார பயன்பாடு குறையும், சுற்றுச்சூழலுக்கும் எவ்வித கேடும் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.

காய்கறிகள் தரும் அழகு


நீங்கள் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கிற காய்கள் தான் எல்லாம். விதம் விதமாய் அவற்றை சமைத்து சாப்பிடுகிற நீங்கள், அவற்றில் ஒளிந்திருக்கும் அழகுத் தன்மையையும் தெரிந்து கொள்ளுங்கள்.சமையலுக்குப் போக தினம் ஒரு பகுதியை அழகுக்கும் ஒதுக்குவீர்கள்.

கரட்: விட்டமின் ஏ அதிகமுள்ள காய் இது சருமத்தை மென்மையாக்கும் தன்மை கொண்டது. கரட்டை பால்விட்டு விழுதாக அரைத்து, முகத்துக்கு பேக் மாதிரிப் போட்டுக் கழுவினால், நிறம் கூடும். கரட் சாற்றுடன், தேன் கலந்து முகத்தில் போட்டாலும் நிறம் கூடும்.

உருளைக் கிழங்கு: இதன் சாறு எடுத்து கரும்புள்ளிகளின் மேல் தடவ. அவை மறையும். கண்களுக்கடியில் உள்ள கருவளையங்கள் மறையும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்து அத்துடன் இரண்டு ஸ்பூன் பால், நான்கு துளிகள் தேன் கலந்து முகத்தில் தடவினாலும் நிறம் கூடும்.

முட்டைக்கோஸ்: எக்கச்சக்க தாதுப் பொருட்கள் அடங்கியது இது. இதை நன்றாக வேகவிட்டு, அந்தத் தண்ணீரீல் முகம் கழுவினால், முகம் மாசு மறுவின்றி பளபளக்கும்.

புதினா: இதன் சாற்றுடன், சம அளவு தண்ணீர் கலந்து பருக்களின் மேல் போட, அவை விட்டால் போதும் என ஓடும்.
கரும்புள்ளிகளும் மறையும்.

கொத்தமல்லி: தினம் இரவில் இதைக் கொஞ்சம் கசக்கி, அந்தச் சாற்றை உதடுகளில் தடவி வர, லிப்ஸ்டிக் போடாமலேயே உங்கள் உதடுகள் சிவப்பாகும்.

அரைக்கீரை: அரைக்கீரையின் சாறெடுத்து அத்துடன் கொஞ்சம் மஞ்சள் தூள் கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவிப் பாருங்கள். பிளீச் செய்தது மாதிரி உங்கள் முகம் பளிச்சென்றாகும்.

பப்பாளி: நன்கு கலந்த பப்பாளிப் பழக்கூழ் சிறிதுடன். கொஞ்சம் தேன், கொஞ்சம் பால் பவுடர் கலந்து பேஸ்ட் போலச் செய்து, கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் தடவி, கால் மணி நேரம் கழித்துக் கழுவலாம். வாரம் இரண்டுமுறைகள் இப்படிச் செய்து வந்தால், உங்கள் முகம் ஃபேர்னஸ் கிரீம் இல்லாமலேயே நிறமாகும்.

தக்காளி: தக்காளிப் பழத்தை மசித்து, அதை அப்படியே முகம், கழுத்து, கை, கால்களில் தடவி சிறிது நேரம் ஊறிக் கழுவிட, சருமத்தில் தென்படும் கரும்புள்ளிகள், வடுக்கள் மறைந்து சருமம் சுத்தமாகும்

படுக்கப் போவதற்கு முன்பு கம்பியூட்டரை பயன்படுத்தினால் தூக்கம் வராதா?


கம்பியூட்டரை பயன்படுத்துபவர்கள் படுக்கப் போவதற்கு முன்பு அதை பயன்படுத்தினால் அவர்கள் தூக்கத்தை பறிகொடுத்து விடுவார்கள் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

தூங்கப் போவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு கம்பியூட்டரை அணைத்தால் தான் தூக்கம் வரும் என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். மனித மூளையும் அதில் உள்ள தூங்கும் விதமும் கம்பியூட்டரில் இருந்து வெளிவரும் பிரகாசமான ஒளியால் குழப்பம் அடைந்து இருப்பதை அவர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

எலக்ட்ரோனிக் பொருள்கள் இன்னும் பகல்நேரம் தான் நீடிக்கிறது என்ற தோற்றத்தை கொடுத்து நம் மூளையை ஏமாற்றி விடுகின்றன. இதனால் தூக்கம் வராமல் தடுமாற வைக்கின்றன.

நம் உடலில் உள்ள இயற்கையான உயிரியல் கடிகாரம் இரவு 9 மணி முதல் 10 மணிக்கு எல்லாம் தூங்குவதற்கு தயாராகி விடுகின்றது. ஆனால் கம்பியூட்டர் இதை குழப்புகிறது என்று அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். தூக்கம் வருவதற்கு சரியான வழி புத்தகம் படிப்பது தான் என்றும் அறிஞர்கள் சொல்கிறார்கள்.

தர்ப்பூசணியிலிருந்து வாகன எரிபொருள்


தர்ப்பூசணியிலிருந்து (வோட்டர் மெலோன்) எரிசக்தியா என்று ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆனால் உண்மையில் அப்படி ஒரு எரிசக்தி நமது வாகனங்களுக்கு விரைவில் கிடைக்கத்தான் போகிறது.

கோடைகாலம் வந்துவிட்டால் போதும், எங்கு பார்த்தாலும் தர்ப்பூசணிப் பழங்கள் விற்பனை செய்யப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். வெப்பத்தைத் தணிக்க, குளிர்ச்சியைப் பெற நாம் இந்த தர்ப்பூசணிப் பழங்கள் மற்றும் பானங்களை வாங்கி அருந்துவது வழக்கம்.

ஆனால் இந்த தர்ப்பூசணிப் பழத்திலிருந்து வாகனங்களை இயக்குவதற்குத் தேவையான எரிசக்தியை உருவாக்க முடியும் என்பதுதான் புதிய செய்தி.

உலகில் விளையும் தர்ப்பூசணிப் பழங்கள் அனைத்தையும் நாம் சாப்பிட்டுவிடுவதில்லை. விளைவிக்கப்படும் தர்ப்பூசணிப் பழங்களில் பெரும்பாலானவை வீணாகக் குப்பையில் எறியப்படுகின்றன.

இப்படியாக வீசப்படும் தர்ப்பூசணிப் பழங்களை ஏதேனும் தேவைக்குப் பிரயோசனப்படுத்த முடியாதா என்று சிந்தித்த அமெரிக்க விஞ்ஞானிகள்தான், பல்லாண்டு கால ஆராய்ச்சியின்பின் தர்ப்பூசணியின் இந்தப் புதிய மற்றும் அத்தியாவசியப் பயன்பாட்டைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் ஒரு ஏக்கரில் 60 முதல் 100 தொன் வரையிலான தர்ப்பூசணியை ஆண்டுதோறும் அறுவடை செய்கிறார்கள்.

ஒரு ஏக்கர் நிறைந்த தர்ப்பூசணியைக் கொண்டு சுமார் 87 லீற்றர் எதனோல் எரிபொருளைத் தயாரிக்க முடியும். இதனடிப் படையில் பார்த்தால், தர்ப்பூசணித் தோட்டத்துச் சொந்தக்காரர்கள், ஆண்டுதோறும் தாம் தேவைக்கதிகமாக விளைவிக்கும் பழங்களைப் பயன்படுத்தி, தமது சொந்த எரிபொருள் தேவையைப் பூர்த்திசெய்து கொள்ள முடியும்.

சற்றுப் பெரியளவில் இந்தத் தொழில் நுட்பத்தை விவுபடுத்தினால் பெரிய பெரிய ஆலைகளை நிறுவி, தர்ப்பூசணிப் பழங்கள் மூலமான எபொருளை உற்பத்தி செய்ய முடியும்.

அப்படியாக உற்பத்தி செய்ய ஆரம்பித்தால், எபொருள் தேவையை மிகையாகப் பூர்த்திசெய்வதுடன் நல்ல விற்பனைச் சந்தையையும் பெறலாம்.

புவி வெப்பமடைதல் தொடர்பான பிரச்சினைக்கும் இந்த மாற்று எரிபொருள் நல்லதொரு தீர்வைத் தரும் என்பதால், வறு வகைகளிலும் மனிதருக்குப் பயனுள்ளதாக அமையும்.

இந்த மாற்று எபொருள் சக்தியை, அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளின் வாகனப் போக்குவரத்துக்கு மட்டும் உபயோகப்படுத்தினாலே, இயற்கையின் சமநிலையைக் குழப்பும் காரணிகளின் உருவாக்கத்துக்குப் பெருமளவில் தடைபோடலாம்.

இப்படியும் நடக்கின்றது


கடந்த சில வாரங்களுக்கு முன் உடுப்பிட்டி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் இளைஞன் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது அப்பாதையின் குறுக்கே கால்நடை (மாடு) ஒன்று பாய்ந்தபோது இளைஞன் மோட்டார் சைக்கிளினால் கீழே விழநேரிட்டுள்ளது.

தனக்கு நேர்ந்த விடயத்தில் ஆத்திரமடைந்த இளைஞன் கால்நடையின் வீட்டிற்கு சென்று உரிமையாளரை தாக்கி காயப்படுத்தியுள்ளான். சுமார் 75 வயதுக்கும் மேலான வயோதிபர் இளைஞனின் தாக்குலினால் மிகவும் நோய்வாய்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறிப்பாக யாழ் குடாநாட்டிலிருந்து வெளிவரும் வன்செயல்கள் தொடர்பான செய்திகள் யாவற்றிக்கும் தனிப்பட்ட குரோதங்கள் மற்றும் இவ்வாறான பகுத்தறிவு கெட்ட செயல்களுமே காரணமாகும் என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருச்சிதைவு ஏற்படுவது ஏன்?சில பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட பின்வரும் பிரச்சினைகளில் ஏதாவது ஒன்று காரணமாக அமையலாம். 1. குரோமோசோம்கள் ஆரோக்கியமாக இல்லாமல் பிரச்சினையுள்ளதாக இருக்கலாம். குறையுள்ள குழந்தையை பிரசவிப்பதை விட குறையுள்ள கருவை சிதைத்து விடுவதே இயற்கையின் பாதுகாப்பு விதியாகும். குரோமோசோம்களில் உள்ள பிரச்சினையை கண்டுபிடிக்க காரியோடைப் பரிசோதனை முறை பலனளிக்கும். 2. ஹார்மோன்களின் சமநிலையில் பாதிப்பு இருக்கலாம். கருமுட்டை வெளிப்பட்ட பிறகு புரொஜஸ்டிரான் ஹார்மோனின் அளவு குறைந்து விடுவது ஒரு காரணம். கருவானது கருப்பையினுள் ஊன்றி வளர்வதற்கு போதுமான புரொஜஸ்டிரான் சுரப்பு அவசியமாகும். இதை கருப்பையின் உட்சுவரை திசுப்பரிசோதனை செய்வதன் மூலம் அறிந்துக் கொள்ளலாம். 3. சில பெண்களுக்கு கீழ் கண்ட நோயின் பாதிப்பினால் கருச்சிதைவு ஏற்படலாம். அவை *- சாக்லேட் இரத்தக்கட்டிகள் *-கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு குறைபாடு *-கட்டுப்படுத்த முடியாத தைராய்டு சுரப்பி நோய்கள் *-மோசமாக பாதிப்படைந்த இதயம், கல்லீரல் அல்லது சிறுநீரகங்கள் 4.சினைப்பையில் நீர்க்கட்டிகள் ஏற்படுவது ஒரு காரணமாகலாம். சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதால் எல் எச் ஹார்மோன் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதனால் கருமுட்டை யின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. 5.நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஏற்படுவதால் கருச்சிதைவு உண்டாகலாம். பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க்கிருமிகள் உடலைத் தாக்கும்போது தாயின் நோய் எதிர்ப்புச் சக்தி சரிவர வேலை செய்யாவிட்டால் கருச்சிதைவு ஏற்படலாம், கருத்தரிக்கும் போது, கருவிலுள்ள தந்தையின் ஜீன்கள், தாயின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு மாறாக இருந்தாலும் கருச்சிதைவு ஏற்படலாம். 6. தாயின் உடல் எதிர்மியங்கள் காரணமாகவும் கருச்சிதைவு ஏற்படலாம். சில பெண்களுக்கு இரத்தம் உறைவதற்குக் காரணமாக இருக்கும் அணுக்களுக்கு எதிராக, உடல் எதிர்மியங்கள் தோன்றக்கூடும், இதன் காரணமாக தாய்க்கும் கருவிலுள்ள சிசுவிற்கும் இடையே உள்ள இரத்த ஓட்டத்தில் இரத்த உறைவுக்கட்டிகள் உருவாகி, சிசுவிற்கு வேண்டிய இரத்த ஓட்டம் பாதிப்படைகிறது. இதை இரத்தப் பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலாம். 7.கருப்பையில் ஏற்படும் சில பிரச்சனைகள் காரணமாக கருச்சிதைவு ஏற்படும். * கருப்பையில் நார்த்திசுக் கட்டிகளின் காரணமாக கருச்சிதைவு ஏற்படும். * பிறவியிலேயே ஏற்படும் கருப்பை பிரச்சினைகள். கருப்பை பிறவியிலேயே இரண்டு பகுதிகளாக பிரிந்திருக்கலாம். *கருப்பை உட்சுவர் சதைகள் மற்றும் கருப்பையின் உட்பாகத்தில் ஏதேனும் புண் ஏற்பட்டு அதன் சதை கெட்டியாக வளர்ந்திருந்தால், கருப்பையில் கரு ஊன்றுவதில் சிக்கல் ஏற்படலாம். இதை உள்நோக்கிக் கருவி மூலமோ அல்லது கதிர் வீச்சுப் படம் மூலமோ கண்டுபிடுக்கலாம். * பலவீனமான கருப்பை வாய்; இப்பிரச்சினை உள்ள நோயாளர்களின் வாய் எப்போதும் தளர்ந்தே இருக்கும். கருப்பையில் சிசு வளர்ந்து கருப்பை வாயினை அழுத்தும் போது பலவீனமான கருப்பையின் வாய் திறந்து கருச்சிதைவு ஏற்படுகிறது. இதை உள் நோக்கிக் கருவி அல்லது கதிரவீச்சுப் படம் அல்லது கேளா ஒலி பரிசோதனை மூலமோ அறிந்துக் கொள்ளலாம். 8. சுற்றுப் புற சூழலில் உள்ள நச்சுக்களின் தாக்கம் காரணமாகவும் கருச்சிதைவு ஏற்படலாம். பெண்கள் தொடர்ந்து நச்சு வாய்ந்த இரசாயனங்கள் மற்றும் வாயுக்களுடன் வேலை செய்யும் பொழுது கருவுற்றால், இந்த நச்சுத் தாக்கம் சிசுவை பாதித்து கருச்சிதைவு ஏற்படுகிறது. ஆண்களும் இம் மாதிரி சூழலில் வேலை செய்யும் பொழுது, அவர்களுடைய விந்தணுக்கள் பாதிக்கப்படுகிறது. புகைபிடித்தல், மது அருந்துதல், போதை மருந்துக்கு அடிமை போன்றவைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. 9. உணர்ச்சிகளால் ஏற்படும் பாதிப்புகளின் காரணமாகவும் கருச்சிதைவு ஏற்படலாம். தாயானவள் துக்கம், வேதனை, தனிமை, மனச்சோர்வு போன்ற பல்வேறு உணர்ச்சிகளால் பாதிக்கப்படும்போது பாதிப்பின் தன்மைக்கேற்ப கருச்சிதைவு ஏற்படுகிறது. கருச்சிதைவை தடுக்கும் சில ஹோமியோ மருந்துகள். அகோனைட், அபிஸ் மெல், ஆரம் மெட்., பெல்லடோனா, போரக்ஸ், பிரையோனியா, கல்கேரியா கார்ப், காந்தாரிஸ், சைக்ள மென், டிஜிடாலிஸ், டல்கமரா, யுபடோரியம் பர்பலேட், பெர்ரம் மெட், ஜெலுசிமியம், காலோ பைலம், காஸ்டிகம், சிமிசிப்யுகா, சாமோமில்லா, கோனியம், ஹாமாமெலிஸ், இக்னேசியா, அயோடம், அயிரிஸ் வெர்சிகுலர், காலிகார்ப், லாச்சஸிஸ், மெர்க் சொல், நக்ஸமோ, ஒபியம், பிளாட்டினா, போடோபைலம், பல்சடில்லா, ரூட்டா, சபினா, சீகேல் கார்னோட்டம், செபியா, சைலீஷியா, ஸ்ட்ராமோனியம், சிபிலினம், தூஜா, உஸ்டிலாகோ மற்றும் ஜிங்கம் மெட்டாலிகம். (ஹோமியோமுரசு நவம்பர் 2009 இதழில் வெளியான கட்டுரை)

வியாழன், 24 ஜூன், 2010

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்?


குழந்தைகள் தாயிடம் அதிக பாசம் காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில குழந்தைகள் அழுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அம்மாவை பார்த்தாலே உடனே அழுகையை நிறுத்திவிடும். பிறந்து சில மாதங்களில் ஆட்களைப் பார்த்து இனம் காணத் தெரியாத பொழுதே தன் தாயினை குழந்தை நன்றாக அடையாளம் தெரிந்து வைத்திருக்கும்.

தாயின் அரவணைப் பிற்குப் பிறகே சமாதானம் அடையும். இல்லாவிட்டால் காரணமே இல்லாமல் அழுவதை நாம் பார்க்கலாம். ஆனால் இதுபோன்ற பாசத்தை தந்தையுடன் குழந்தை வெளிப்படுத்துவது கிடையாது. தாய்- குழந்தைக்கு மட்டும் அப்படி என்ன பிணைப்பிருக்கிறது? என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். அதற்கான விடை கிடைத்துவிட்டது. நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்த மவுன்ட் சினாய் மருத்துவ மைய ஆய்வாளர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர்.

`ஆக்சிடாக்சின்’ என்னும் ஒருவித ஹார்மோன்கள் பெண்களின் உடலில் காணப்படுகின்றன. இவைதான் தாய்- குழந்தையின் பிணைப்பை தூண்டுகிறது. அதுமட்டுமல்லாமல் வேறு சில பணிகளிலும் இந்த ஹார்மோன்கள் பணியாற்றுகிறது. தாய்க்கு, பாலூட்டும் உணர்ச்சியை அதிகமாக்குவது, உடல் உழைப்பை தூண்டுவது, குழந்தைகளை தாயின் அருகாமையை எதிர்பார்த்து காத்திருக்க வைப்பது போன்ற பணிகளில் ஆக்சிடாக்சின் பங்கேற்கிறது. பாச அரவணைப்பான `கட்டிப்புடி’ வைத்தியத்தில் தூண்டப்படுவது இந்த ஹார்மோன்கள்தான்!

மின்சாரம் தேவை இல்லை தானாகவே சார்ஜ் ஆகும் மொபைல்


மனிதர்களின் ஆறாவது விரலாகவே மாறிப்போய்விட்டது செல்போன்கள். ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்பது போல அலுவலகப் பணிக்கு ஒன்று, குடும்ப தொடர்புக்கு ஒன்று எனவும் இரண்டு சிம்கள் கொண்ட மொபைல் போன்கள் வந்துவிட்டன.

படம் பிடிக்க, வீடியோ எடுக்க, பாட்டு கேட்க, மின்னஞ்சல் பார்க்க…. என பல்வேறு உபயோகத்துக்காக செல்போன்கள் தேவைப்படுவதால், அவற்றுக்கு சக்தி அளிக்கும் பேட்டரி முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிட்டது. இதனால் செல்போன் வாங்கு பவர்கள் அதன் பேட்டரி எத்தனை மணி நேரத்துக்கு உழைக்கும் என்பதை கவனிக்க ஆரம்பித்துவிட்டனர்.

மேலும் எல்லா இடங்களிலும் பேட்டரியை சார்ஜ் செய்ய மின்சார வசதி இருப்பதில்லை. எனவே சூரிய ஒளியில் சார்ஜ் ஆகும் பேட்டரி கொண்ட செல்போன்கள் சந்தைக்கு வந்தன. இந்த வரிசையில் தேவைக்கு ஏற்ப தானாகவே சார்ஜ் ஆகும் செல்போன் ஒன்றை நோக்கியா நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இந்த வகை செல்போன்களை பயன்படுத்தும் போதும், அது அசையும் போதும் தானாகவே சார்ஜ் ஆகிவிடும். இதற்கு ஏற்ப நவீன தொழில்நுட்பம் இதில் பொருத்தப்பட்டுள்ளது. அசையும் தன்மையுள்ள `படிக தொழில் நுட்பத்தின்’ அடிப்படையில் இந்த செல்போன் இயங்குகிறது. தற்போது ஆய்வு நிலையில் உள்ள இந்த தொழில்நுட்பம் விரைவில் முழுமையடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நவீன வசதிகளுடன் செயற்கை 'கை'


அதிகரிக்கும் விபத்துகளால் ஏராளமானவர்கள் உடல் உறுப்புகளை இழக்கிறார்கள். வேறுசில பயங்கர வியாதிகளாலும் உடல் உறுப்புகள் செயலிழக்கலாம். இதுபோல திடீர் சம்பவங்களால் கை, கால்களை இழந்தவர்கள் வாழ்வே திசைமாறிவிடும். செயற்கை கை, கால்கள் பொருத்திக் கொள்ளும் வசதி இருக்கிறது. ஆனாலும் அவை இயற்கையான கை, கால்கள்போல செயல்படாது.

பெயரளவில் ஒரு அங்கமாகவே இருக்கும். இந்தக் குறையை களைந்து விபத்தில் கைகளை இழந்தவர்களுக்கு மீண்டும் மறுவாழ்வு அளிக்கும் விதத்தில் நவீன வசதிகள் நிறைந்த செயற்கை கை உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை உள்ள மற்ற செயற்கை கைகளைவிட இது கொஞ்சம் நவீனமானது. குறிப்பாக `புளூடூத்’ தொழில்நுட்பம் முலமாக செயல்படக்கூடியது. இதன் உதவியால் எந்த விதமான பொருட்களையும் இயற்கை கைகளைப் போலவே பற்றிப்பிடித்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். 5 விரல்களையும் தனித்தனியாக இயல்பான விரல்கள்போல இயக்க முடியும்.

இதன் உதவியுடன் 90 கிலோ எடையைக் கையாள முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டச் பயோனிக்ஸ் நிறுவனம் இந்த செயற்கை கையை வடிவமைத்துள்ளது. இதற்கு `ஐ லிம்ப் ஹேண்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டே வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக் கை தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. விபத்தில் கையை இழந்த தீயணைப்பு வீரர் ஐயன் ரெய்டு என்பவருக்கு இந்த செயற்கைக் கை முதல் முறையாக பொருத்தப்பட்டது.

`கை துண்டிக்கப்பட்டதால் இழந்த உணர்வுகளை மீண்டும் பெற்றிருப்பதாகவும், அனைத்து வேலைகளையும் தடையின்றி செய்ய முடிவதாகவும்’ அவர் தெரிவித்துள்ளார். அங்ககீனம் அடைந்தவர்களுக்கு அளவற்ற பயன்தரக் கூடியது இந்தக் கை!

தனிப்பட்ட விவரங்களை தராதீர்கள் கூகுள் நிறுவனம் எச்சரிக்கை


ஜி-மெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, ரகசிய எண் போன்ற விவரங்களை கேட்டு வரும் செய்திகளுக்கு பதில் அனுப்ப வேண்டாம் என, கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மோப்பம் பிடிக்கும் செல்போன்…


குண்டு வெடிப்பு சம்பவங்கள் மக்களை கதிகலங்கச் செய்யும். காலமாற்றம் மற்றும் தொழில்நுட்ப புரட்சியால் சில நச்சுத்தன்மைகள் காற்றில் அதிகரித்து வருவதும் சாதாரணமாகி வருகிறது. இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து உங்களை காப்பாற்ற வருகிறது மோப்பம் பிடிக்கும் செல்போன். `எலக்ட்ரானிக் மூக்கு’ எனப்படும் நவீன உணர்கருவி இதுபோன்ற ஆபத்துகளை கண்டுபிடித்து எச்சரிக் கும்.

இந்தக் கருவியை தற்போது செல்போனுடன் இணைத்து வழங்குகிறது அமெரிக்க நிறுவனமான `ஹோம்லேண்ட் செக்யூரிட்டி சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி’. இந்த அமைப்பு `செல்-ஆல்’ என்ற நவீன சென்சார் கருவியை தயாரித்துள்ளது. இதனை செல்போன் களில் பொருத்திக் கொண்டால் காற்றில் நச்சு ஆபத்துகள் இருந்தால் எச்சரிக்கும். நமக்கு தீமை விளைவிக்கும் குளோரின், சாரின் போன்ற விஷ வாயுக்கள் இருந்தால் ஒலி எழுப்பும். ஒரு வேளை நீங்கள் செல் போனை வைப்ரேசனில் வைத்திருந் தால் எஸ்.எம்.எஸ். அனுப்பும்.

அதேபோல் அதிக நச்சுத்தன்மையை உணர்ந்தால் பலமாக ஓசை எழுப்பி உங்களை மட்டுமல்லாது சுற்றி இருப்பவர்களையும் உஷார்படுத்தும். அத்துடன் எந்த இடத்தில் இந்த நச்சுவாயு பரவி இருக்கிறது என்ற தகவலை அவசர உதவி மையத்துக்கும் அனுப்பி வைக்கும். பயனுள்ள இந்தக்கருவி மிகச்சிறியதாக இருக்க வேண்டும், மிகக்குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்று இதை தயாரித்த நிறுவனம் கூறுகிறது. அதற்கேற்ப இதன் விலையும் ஒரு அமெரிக்க டாலருக்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

மாங்காய் எண்ணெய்


மாவடு ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், ஜெல்லி, பதப்படுத்தப்பட்ட மாம்பழ பழச்சாறு ஆகியன மாங்காய் தொடர்பான மதிப்பூட்டப்பட்ட பொருட்களாகும். மாங்காயில் உள்ள வீணாகும் மாங்கொட்டையில் உள்ள பருப்பில் இருந்து, 'மாங்காய் எண்ணெய்' எனப்படும் மதிப்பூட்டப் பட்ட பொருள் பிரித்து எடுக்கப்படுகிறது.

மாங்காய் வெண்ணெய் தயாரிக்கும் போது, மாங்காய் எண்ணெய் கிடைக்கிறது. இதன் உருகு நிலை 23 டிகிரி சென்டிகிரேடாகும். அறை வெப்ப நிலையில், அரை திடநிலையில் உள்ள இந்த மாங்காய் எண்ணெய், தோலில் வைத்து தேய்க்கப்படும் போது, உடம்பின் வெப்ப நிலையில் திரவமாக மாறுகிறது.

இந்த மாங்காய் எண்ணெய் அழகு சாதனப் பொருட்கள், சன்கேர் கிரீம், பேபி கிரீம்கள், முடி அழகு சாதனங்கள் போன்றவற்றில் 3 முதல் 10 சதவீதம் வரை சேர்க்கப்படுகிறது. இது கிளிசரினை போன்று பொருட்களை உலராமல் பாதுகாக்கிறது. வீணாகும் மாங்கொட்டைகளில் இருந்தும் இனி விலை மதிப்புள்ள மாங்காய் எண்ணெய்யை தயாரிக்கலாம்.

புத்திசாலி டால்பின்கள்


மீனினங்களில் டால்பின்கள் மிகவும் புத்திசாலியானவை. இவை மனிதர் களின் உயிர்களைக் கூட காப்பாற்றி யுள்ளன. டால்பின்கள் தூங்கும் போது ஒரு கண்ணை திறந்து வைத்துத்தான் தூங்கும். அப்பொழுது வலது கண் திறந்து இருந்தால் இடதுபக்க மூளை வேலை செய்யும்.

பறக்கும் கார் 2011 இல் அறிமுகம்


வீதியில் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகின்றது.

ஒரு கோடி ரூபா விலை கொண்ட இந்த கார், 2011 ஆம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டெராப்யூஜி யாஸ் என்னும் நிறுவனம்,பறக்கும் காரைத் தயாரிக்கவுள்ளது.

இறக்கைகளுடன் தயாரிக்கப்படும் இந்தக் கார், வீதியில் செல்லும் போது சக்கரங்களையும், பறக்கும் போது மடிக்கப்பட்ட இறக்கைகளை விரித்துக் கொண்டும் செல்லும். அதிக கனமில்லாமல், எளிதில் இயங்கக் கூடிய விளையாட்டு விமானம் போன்று காணப்படும் இந்த விமானக் காரை, பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஓட்டலாம். இரண்டு பேர் பயணம் செய்யலாம். புறப்படும் இடத்தில் இருந்து வீதி வழியாக விமான நிலையம் வரை காராகச் செல்லும் இந்த வாகனம், விமான நிலையத்தில் இருந்து விமானம் போன்று விண்ணில் பறந்து செல்லும். விமான நிலைய கட்டுப்பாட்டில் மற்ற விமானங்கள் இயங்குவது போலவே, இந்த கார் விமானமும் இயங்கும். இந்த காரில் பலவித நன்மைகள் உள்ளன.

வீட்டில் இருந்து விமான நிலையத்திற்குச் சென்ற பின், அங்கு இந்த வாகனத்தை, "பார்க்கிங்'' ஏரியாவில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. பறந்துசெல்லும் போது மோசமான வானிலை, புயல்க் காற்று போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டால், குறைந்த கால இடைவெளியில் வீதியில் இறங்கி விட லாம் வீதியில் கார் சென்று கொண்டிருக்கும் போது, தேவைப்பட்டால் 30 வினாடிக்குள் பறக்கும் தன்மைக்கு மாறும். அரசிடம் முறையாக அனுமதி பெற்று விற்பனை செய்ய, கார் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. பறக்கும் காரின் மாதிரி, தற்போது அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்படும் இந்த நவீன கார்,மிக விரைவில் சர்வதேச அளவில் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. இந்த காரின் விலை, 95 லட்சம் ரூபா. வரும் 2011 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?


படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை ஆங்கிலத்தில் என்யூரிசிஸ் (enuresis) என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். குழந்தைகள் படுக்கை, உடைகள் அல்லது பொருத்தமற்ற இடங்களில் தன்னிச்சையாகவோ அல்லது அனிச்சையாகவோ சிறுநீர் கழித்துவிடுவதே இந்நோயாகும்.

அல்சீமர் என்னும் நோயோ அல்லது பிற வகையான மறதி நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களும் படுக்கை அல்லது உடைகளில் சிறுநீர் கழிக்கும் நோய் கொண்டுள்ளனர். பகலிலும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளும் இருந்தாலும். பெரும்பாலும் இறவிலேயே படுக்கையில் சிறுநீர் கழிக்கும் இந்நோய் கிருஸ்து பிறப்பதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காணப்படுகிறது. குழந்தை வளர வளர இந்நோய் தானாகவே சரியாகிவிடும். அல்லது சிகிச்சையின் மூலம் சரியாக்கி விடலாம். ஒரு சில குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை ஐந்தாறு மாதங்கள் நிறுத்தி பின் மீண்டும் தொடரும் வாய்ப்புகளும் உண்டு. பொதுவாக ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தால் தான் அது பிரச்சனை. ஐந்து வயதுக்குற்பட்ட குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தால் அது நோயல்ல. அது பற்றி கவலைப்பட தேவையில்லை.

படுக்கையில் சிறுநீர் கழிக்க குறிப்பிட்ட உடலியல் அல்லது உளவியல் காரணத்தை தனித்து கூற இயலாது. பல காரணிகள் கூட்டாக இந்நோயை தோற்றுவிக்கின்றன. இந்நோய் உள்ள ஒரு சில குழந்தைகளினால் சிறுநீரகமும், சிறுநீர் பையும் சற்றே பிறழ்வான செயல்பாடுகளை கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதைப் போன்றே சிறுநீர்பை நிறைந்து விட்டதை சற்றே தாமதமாக உணர்ந்து கொள்ளும் நரம்பு மண்டலமும் இந்நோய்க்கு காரணமாக அமைகிறது. மேலும் பெற்றோர் சிறுவயதில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை கொண்டிருந்ததும் குடும்பத்தில் யாரேனும் பிற உறுப்பினர்கள் இந்நோய் கொண்டிருந்ததும் தற்போது குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்க காரணமாக இருக்கலாம். குழந்தையின் மனதில் ஏதேனும் ஒரு மன அழுத்தத்தை உண்டாக்கக்கூடிய நிகழ்வு பதிந்திருப்பது படுக்கையில் சிறுநீர் கழிக்க காரணமாக அமைக்கிறது. பொதுவாக படுக்கையில் சிறுநீர் கழிப்பது வேறு ஏதோ ஒரு மனப்பிரச்சனையின் அறிகுறியாகும்.

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகள் அவமானமும், பிறர் முன் தலைகுனிவும் கொள்வர், ஏணிப்படுக்கையில் படுப்பதையும் தவிர்ப்பர். தனித்திருத்தல், பிறருடனான பொருத்தப்பாட்டு பிரச்சனைகள், குறைவான தன்-மதிப்பு ஆகியவை படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளின் பிற உளவியல் பிரச்சனைகளாகும். எனவே இந்நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது அவசியமாகும்.

வெளிநாட்டில் இந்நோயை குணப்படுத்த அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நவீன சிகிச்சைகள் அளிக்கின்றனர். குழந்தையின் உள்ளாடையில் ஓர் அல்ட்ரா சவுண்ட் கருவியை பொருத்திவிடுவர். இக்கருவி குழந்தையின் சிறுநீர்ப்பையின் அளவை கண்காணிக்கும். சிறுநீர்ப்பை முழு அளவை எட்டியவுடன் எச்சரிக்கை மணியை இக்கருவி எழுப்பும் உடனடியாக மணி சத்தம் கேட்ட குழந்தை எழுந்து சென்று சிறுநீர் கழித்து விட்டு வரலாம்.

இன்னொரு முறையில் குழந்தையின் உள்ளாடையில் எச்சரிக்கை மணியுடன் கூடிய பஞ்சடை (pad) வைக்கப்படும். எப்போதெல்லாம் இப்பஞ்சடை ஈரமாகிறதோ அப்போதெல்லாம் எச்சரிக்கை மணி ஒலிக்கும். உடனே குழந்தை எழுந்து சென்று சிறுநீர் கழித்து விட்டு வரும். நாளடைவில் மணி அடிக்காமலேயே எழுந்து சென்று சிறுநீர் கழிக்க குழந்தை கற்றுக் கொள்ளும்.

படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த பின்வரும் சில எளிமையான முறைகளை நாம் கையாளலாம்.

இரவில் கடிகாரத்தில் குறிப்பிட்ட நேர இடைவெளிக்கு எச்சரிக்கை மணி ஓசை எழுப்பச் செய்து, குழந்தையை விழிக்க வைத்து, கழிவறைக்குச் சென்று சிறுநீர் கழிக்க வைத்து விட்டு வரலாம். சில நாட்கள் இவ்வாறு செய்தால் விரைவில் குழந்தை தானாக எழுந்து சென்று சிறுநீர் கழிக்க பழகிக்கொள்ளும்.

குழந்தைகள் தூங்கப் போக சில மணி நேரம் இருக்கும்போது நீரோ அல்லது பிற திரவ உணவுகளையோ கொடுப்பதை தவிர்க்கவும்.

பெற்றோர் குறிப்பிட்ட இடைவெளியில் சில மணி நேரத்திற்கு ஒருமுறை குழந்தையை எழுப்பி “சிறுநீர் கழிக்க வேண்டுமா” என வினவலாம். ஆம் எனில் கழிவறைக்குச் சென்று சிறுநீர் கழித்துவிட்டு வர உதவலாம்.

சிறுநீர் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்ற முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை பெற்றோர் குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தலாம்.

குழந்தைகள் இரவில் படுக்கையிலும் உடைகளிலும் சிறுநீர் கழிக்காத சமயங்களில் அந்நடத்தையை பாராட்டுவதும், சாக்லேட் போன்றவைகளை பரிசளிப்பதும் இந்நோயை விரைவில் குணமாக்கும்.

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை குணமாக்க மேற்சொன்ன எல்லா முறைகளை விட சிறந்த முறை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அன்பையும் மனரீதியான அரவனைப்பையும் அளிப்பதுதான்

நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன?


நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, தோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன.
ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளது. அதனையே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்கிறோம்.

எதிர்ப்பு சக்தி வகைகள்:நமது உடலில், இயற்கையான எதிர்ப்பு சக்தி (Innate Immunity), தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி (Adaptive Immunity),

உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity)

என மூன்று வகை எதிர்ப்பு சக்திகள் உள்ளன. இந்த மூன்று எதிர்ப்பு சக்திகள் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்.

இயற்கையான எதிர்ப்பு சக்தி (Innate Immunity)

இந்த எதிர்ப்பு சக்தி, பிறக்கும்போதே ஒருவரது உடலில் அமைவது. மனித உடலுக்கு தோல், (Skin) எப்படி ஒரு மிகப்பெரிய தடுப்பு சுவர் போல் உள்ளதோ, அதைப் போலவே மூக்கு, தொண்டை மற்றும் உணவு செல்லும் பாதை போன்ற பகுதிகளில் உள்ளே உள்ள சவ்வுகளும் தடுப்புக் கவசம் போல் செயல் படுகின்றன. இந்த கவசங்கள் நம்மை நோய் கிருமிகளிடம் இருந்து காப்பாற்றக்கூடியவை.

அடுத்தபடியாக உடலுக்குள் நுழையும் நோய்த் தொற்றுக் கிருமிகளை தாக்கி அழிக்கக் கூடியவைகளான வெள்ளை அணுக்கள் (Neutrophils, Bosophils, Eosinophils) தூங்காத படை வீரனைப் போல் நம் உடலுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திகளாகும்.

தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்த (Adaptive Immunity)இரண்டாவது வகையான தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி, நம்முடைய உடல் தன்னை நோய்க் கிருமிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, தாக்கும் நோய்களுக்குக் காரணமான ஒவ்வொரு பாக்டீரியாக்களுக்குத் தகுந்தவாறு வேறுபட்ட நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கு வகிப்பது Lymphocytes என்ற ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்.

உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity)மூன்றாவது வகையான உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி என்பது தேவைப்படும்போது, இன்னொரு இடத்திலிருந்து எதிர்ப்பு சக்தியை தற்காலிகமாக பெறுதல். உதாரணமாக, தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு தாய்ப்பாலில் இத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி தற்காலிகமாக கிடைக்கிறது. மஞ்சள் காமாலை நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் டெட்டானஸ் நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்த நோய்கள் வராமல் தடுக்க வைக்கும்.

எதிர்ப்பு சக்தி எவ்வாறு செயல்படுகிறது?நோய்க் கிருமிகள் நுழையும்போது, அதனை எதிர்த்து போரிடுவதற்கான நுட்பமான கட்டமைப்பு நமது உடலில் செயல்படுகிறது. இந்த செயல்பாட்டின்போது உயிரணுக்கள், திசுக்கள், நுண்ணுயிரிகள் அனைத்தும் பரஸ்பர ஒத்துழைப்போடு விரைந்து செயல்படுகின்றன. நாளமில்லா சுரப்பிகள், மண்ணீரல், எலும்புகளின் அடியில் உள்ள மஜ்ஜை ஆகிய உறுப்புகள் இந்த செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், பாதுகாப்பு அரணாக செயல்படுகின்றன. வெவ்வேறு வகையான வேதிப் பொருள்களும், சுரப்பிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் உறுதுணையாக இருக்கின்றன. இவை ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக பயணித்து, நோய்க்குக் காரணமான கிருமிகளை அழிக்கின்றன.

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி 24 மணி நேரமும் செயல்படுகிறது. அதன் பெரும்பாலான செயல்பாடுகள் நம்மை அறியாமலே நிகழ்கின்றன. சில நேரங்களில் நோய்க்கிருமிகளை எதிர்க்க முடியாமல், எதிர்ப்பு சக்தி தோல்வியடையும் போதுதான் அதன் அறிகுறிகள் நமக்குத் தெரியத் தொடங்குகின்றன. காய்ச்சல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல் இவையெல்லாம் நோயை எதிர்த்து நம் உடல் போராடுகிறது என்பதற்கான அடையாளங்களே ஆகும். அப்போது ஏற்படும் அதிகபட்ச வெப்பநிலைதான் காய்ச்சலாக உணரப்படுகிறது. சளியின் வழியாக கிருமிகள் அப்போது வெளியேற்றப் படுகின்றன.

புண், கட்டி, ரணம் போன்றவை ஏற்படும்போது அந்தப் பகுதியில் நோயை எதிர்ப்பதற்கான செல்கள் அதிக அளவில் வந்து குவிகின்றன. இவை, அந்த புண்ணின் வழியாக கிருமிகள் தொற்றுவதைத் தடுக்கின்றன.

வெள்ளை அணுக்களில் (Neutrophils, Bosophils, Eosinophils ), ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடுகின்றன.

நோய் எப்போது ஏற்படுகிறது?உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது நோய்க் கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்கின்றன. ஊட்டச்சத்துக் குறைவினாலும் நோய் ஏற்படுகின்றன.

நம் உடலில் நோய் எதிர்க்கும் திறன் குறைவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவற்றில் சில:

1. பலகீனமான உடலமைப்பு

2. மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள்

3. அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய சூழலில் வாழ்வது

4. மது, போதைப்பொருள் பழக்கம்

5. புகைப்பழக்கம்

6. தூக்கமின்மை

7. சர்க்கரை நோய் , இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி நோய் எதிர்ப்பாற்றலை இல்லாமல் செய்கிறது.

நோய் தொற்றைத் தவிர்க்கசாக்கடை, கழிவு நீர் தேங்குதல், சாலையோரத்தில் கொட்டப்படும் காய்கறி மற்றும் வீட்டு உபயோகக் கழிவுகள் ஆகியவற்றின் மூலம் எளிதாக நோய்க் கிருமிகள் உருவாகி நம்மைத் தாக்குகின்றன. அதனால் நாம் தங்குமிடத்தை சுகாதாரமாக வைத்திருந்து நோய்த் தொற்றைத் தவிர்க்க வேண்டும்.

கை குலுக்குதல், தொலைபேசி உபயோகித்தல், கதவின் கைப்பிடியை தொடுதல், வாய், மூக்கை கையால் தொடுதல் இவற்றின் மூலம் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது. இந்த ஒவ்வொரு செயல்பாட்டிற்குப் பின்னரும் கைகளை சோப்பு அல்லது வெந்நீர் கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும்.
கையுறைகள் போன்றவற்றை அணியும்முன் அவை முறையாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

புகை பிடிக்கும் பழக்ம் உள்ளவர்கள் அதனை தவிர்க்க வேண்டும். அது உங்களை மட்டுமின்றி உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும்.
மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். நெகிழ்வாகவும் மகிழ்ச்சியுடனும் இருக்க பழக வேண்டும். தவறாமல் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேற்றப்பட்டுஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

நோயற்ற வாழ்வுக்கு ஆழ்ந்த உறக்கம் அவசியமான ஒன்று. ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் போது நம் உடலில் உள்ள இறுக்கங்கள் மாறி நோய் எதிர்ப்புத் திறன் செயல்பட ஏதுவாகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பால், தயிர், நெய், சோயா பீன்ஸ் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முட்டையின் வெள்ளைக்கரு, மீன் இவற்றை வாரத்தில் மூன்று முறையாவது கட்டாயம் சாப்பிட வேண்டும்.

அனைத்து பழங்களும், காய்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. இவற்றில் Anti oxidants அதிகமாக உள்ளது. கடலை, சூரியகாந்தி விதைகள் போன்றவை துத்தநாகம் கால்சியம் போன்ற எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான சத்துக்களை அதிகரிக்க உதவும்.

வேதிப்பொருள்கள் (Chemicals), பூச்சி மருந்துகள் (Pesticidies) போன்றவை படிந்த பொருட்கள், மற்றும் வண்ணம் பூசப்பட்ட பொருட்கள், பதப்படுத்தப்பட்ட டின் பொருட்கள் போன்றவற்றை உண்பதை தவிர்க்க வேண்டும்.எண்ணெயில் வறுத்த உணவுப்பண்டங்களை உண்ணக் கூடாது. அவை உடலில் நச்சுத் தன்மையை (Free radicals) உண்டாக்குகிறது. சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். சர்க்கரையின் அளவு அதிகமானால் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை 15 மணி நேரத்திற்கு குறைத்துவிடுகிறது.

காபி, டீ இவற்றை அளவுக்கு மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அடிக்கடி காய்ச்சல், சளி போன்ற உபாதைகள் ஏற்படத் தொடங்கினால் மருத்துவரை அணுகி உடலை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். மருத்துவ பரிசோதனை மூலம் உடலுக்கு என்ன தேவை என்பதை மருத்துவர் மூலமாக அறிந்துகொள்ள முடியும்.

நோயில்லா பெருவாழ்வு வாழ நாம் செய்ய வேண்டியது, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டும். அதற்கு சரியான நேரத்தில் சமச்சீர் உணவு (Balance diet) உண்டு நல்ல வாழ்வியல் பழக்கங்களோடு (Healthy life style) வாழ்வதே.

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்


பொதுவாக பிறந்த புதிதில் குழந்தை கள் அதிக நேரம் தூங்கும். பசி எடுக்கும் போது கண் விழித்து பால் அல்லது திரவ உணவு வகைகளை சாப்பிட்ட பின் மீண்டும் தூங்கும் இயல்பு கொண்டவை.

அதுவே ஒரு வயதானால், குழந்தைகளின் தூக்கம் குறையும்.

ஒரு வயது முதல் 3 வயது வரை அன்றாடம் பகல் நேரங்களில் சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை குழந்தைகள் தூங்க நேரிடும்.

பாடசாலைக்குச் செல்லும் குழந் தைகளானால் மாலையில் பாடசாலை இல்லாத நேரங்களில் தூங்கும் பழக்கம் கொண்டிருப்பர். அவர்கள் 12 முதல் 13 மணி நேரம் வரை தூங்கக்கூடும். 5 வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு குறைந்தது 9 மணி நேரமாவது தூங்க வேண்டியது அவசியமாகிறது.

வளர்ந்து பெரியவர்களாகி விட் டாலோ, 7 முதல் 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாகத் தேவைப் படுகிறது.

35 வயதைக் கடந்த வர்கள் 6 மணி நேரமாவது ஆழ்ந்த நித்திரை கொள்ள வேண்டும். அப்போது தான் உடல் நலமும், மன நிலையும் சரிவர செயல்பட்டு உரிய பணிகளை செவ்வனே செய்ய முடியும்.

மன நலத்துடன் தொடர்புடையது தூக்கம் என்றால் அது மிகவும் சரி.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் மருந்து தூக்கம் தான்.

போதிய அளவு தூக்கம் இல்லா ததே பல நேரங்களில் மனோரீதியா கப் பாதிப்புக்குள்ளாக காரணமாகி விடும். மனோநிலை பாதிக்கப்பட் டவர்கள் சில நேரங்களில் புலம்ப நேரிடும். அப்படிப் புலம்புபவர்களு க்கு தூக்கமே மிகச் சிறந்த மாற்று மருந்தாகும்.

எனவே 2, 3 மணி நேர தூக்கம் போதுமானதல்ல. சிலருக்கு இரவு வெகுநேரம் டி.வி. பார்க்கும் வழக்கம் இருக்கும் அதுபோன்ற வர்கள் காலையில் அதிக நேரம் தூக்குவார்கள். பின்னர் அவசரமாக எழுந்து, அலுவ லகத்திற்குத் தாமத மாகச் செல்வர். முதலில் இரவில் வெகு நேரம் கண் விழிப்பதால், அவர்களின் உடல் சூடு அதிகரித்து பல்வேறு தொந்தரவுகள் ஏற்படக்கூடும்.

எனவே தூக்கமின்மையானது பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத் தும் என்பதோடு மனோநிலை பாதிப்படைய முக்கியக் காரண மாகிறது.

தினமும் பத்து மணி நேரம் நன்றாக தூங்கினால், நூற்றாண்டு காலம் வாழ முடியும் என ஆய்வு கள் தெரிவிக்கின்றன. சீனாவில் கடந்த 2005ம் ஆண்டு முதல் 15 ஆயிரத்து 638 முதியவர்களிடம், ஒரு ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மட் டுமே இந்த ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர். 90 முதல் 99 வயது உடைய 3927 பேரும், நூறு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 2,794 பேரிடமும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நூறு வயதில் வாழ்ந்து வரும் முதியவர்களிடம் கேட்டதில் அவர்கள் தூக்கத்துக்கு குறையே வைப்பதில்லை என, தெரிந்தது. தினமும் 10 மணி நேரம் நன்றாக தூங்குவதாக இவர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக ஆண்கள் தான், கவலையில்லாமல் தூங்கி அதிக அளவில் சதம் அடித்துள்ளதும், இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. நன்றாக தூங்குவதால் உடல் செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

விரலுக்கு ஏற்ற வீக்கம்?


சீனாவின் ஜியாங்ஸூ (Jiangsu) நகரில் 24 வயதான லியு ஹுவா (Liu Hua) தான் உலகிலே பெரிய கையை உடையவர் என சாதனை படைத்துள்ளார்.

பிறக்கும் போதே இவரது இடது கையின் பெருவிரல் ஆட்காட்டி விரல் மற்றும் நடுவிரல் சாதாரண அளவைவிட சற்று பெரிதாகத்தான் இருந்தன.

அவர் வளர வளர கூடவே விரல்களும் வேகமாக வளர்ந்தன. இதனால் இவருக்கு வேலை மற்றும் அன்றாட அலுவல்களை செய்வதற்கு சிரமமாக உள்ளது.

இப்போது அவரது இடதுகை பெருவிரலின் நீளம் 26 சென்டி மீட்டர், ஆட்காட்டி விரல் 30 சென்டி மீட்டர் மற்றும் நடுவிரல் 15 சென்டி மீட்டர் அளவுக்கு வளர்ந்துள்ளன. இதனால் இவரது இடதுகையின் எடை 10 கிலோவாக உள்ளது.

இதுதான் உலகிலேயே பெரிய கை, ஆனால் அதை வைத்திருப்பதற்கு சிரமப்படும் ஹுவாவுவின் சிரமத்தை குறைக்க சத்திர சிகிச்சை மூலம் கையை சிறிதாக்க டாக்டர்கள் முன்வந்தனர்.

7 மணி நேர சத்திர சிகிச்சையின் பின் 10 கிலோ கை இப்போது 5 கிலோவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் சத்திர சிகிச்சை இன்னும் முழுதாக முடியவில்லை 6 மாதங்களில் ஹுவா மீண்டும் ஆஸ்பத்திரி செல்ல வேண்டும். அது வரை வீட்டில் பயிற்சி செய்ய வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.

கையின் பாரம் குறைந்ததில் இவர் மன பாரம் சற்று குறைந்துள்ளது. இதற்குத் தான் பெரியவர்கள் விரலுக்கு ஏற்ற வீக்கம் என்று அப்பொழுது கூறிவிட்டுச் சென்றார்கள் போலும்.

(படத்தைப் பார்த்தால் இது கிரபிக் மூலம் உருவாக்கியது போல சிலருக்கு தோன்றலாம். ஆனால் இது நிஜமான உண்மை.)

நீர் மூழ்கிக் கப்பல்கள் எதற்காக உருவாக்கப்பட்டன?


நீர் மூழ்கிக் கப்பல்கள் கடலின் வெகு ஆழமான பகுதி வரை சென்று திரும்பும் ஆற்றல் வாய்ந்த ஒரு சாதனமாகும். மனிதனின் சாதாரண நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டு ஆக்கப்பட்ட சப்மெரீன் எனப்படும் நீர் மூழ்கிக் கப்பல் மூலம் இன்று மனிதன் அடையும் பயன்கள் ஏராளம். நீர் மூழ்கிக் கப்பலை மனிதன் ஏன் எவ்வாறு உருவாக்கினான் என்பது பலருக்குத் தெரியாது.

மனிதன், முத்து, வைரம் உட்பட கடலுக்கு அடியில் உள்ள பெறுமதியான படைப்புகளைத் தேடி காலா காலமாகவே கடலின் அடிப்பரப்பு வரை செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளான். இதற்காக நீரினுள் இயங்கும் சாதனமொன்றை உருவாக்கும் எண்ணத்தையும் அவன் வளர்த்து வந்துள்ளான்.

ஹாலந்து நாட்டைச் சேர்ந்த கார்னேலியஸ் வால்டிரப் என்பவர் 1620ம் ஆண்டிலே நீரில் மூழ்கும் படகொன்றினை அமைப்பதில் ஈடுபட்டு வெற்றி கண்டார்.

மரத்தால் செய்யப்பட்டு தோலால் நீர் புகாது போர்த்தப்பட்ட இந்த படகைத் தொடர்ந்து பல்வேறு மூலப் பொருட்களின் உதவி கொண்டு பல்வேறு முறைகளில் நீர் மூழ்கிக் கப்பல் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1727ம் ஆண்டு ஆகும் போது இங்கிலாந்தில் மாத்திரம் 14 வகையான நீர் மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கப்பட்டன.

18ம் நூற்றாண்டின் இறுதிக்குள் உலகில் விதவிதமான பல தரப்பட்ட நீர் மூழ்கிக் கப்பல்கள் ஏட்டிக்குப் போட்டியாக உருவாக்கப்பட்டன.

1880ம் ஆண்டிலே நீராவி இயந்திரத்தால் இயங்கக் கூடிய நீர் மூழ்கி கப்பல் உருவானது. அதைத் தொடர்ந்து பெற்றோல், மின்சக்தி என்பவற்றின் மூலம் இயங்கும் கப்பல்கள் உருவாகின.

மனிதனின் பொருளாதார விருத்தியை குறிக்கோளாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள், யுத்தங்களுக்கு உதவியாக பிற்காலத்தில் பயன்படலாகின. முதலாம் இரண்டாம் உலக யுத்தங்களின் போது அவை வெற்றிகரமாக இயக்கப்பட்டன. எதிரிகளின் படையெடுப்பைக் கண்காணிப்பதிலும் எதிரிகளின் யுத்தக் கப்பல்களை நிர்மூலமாக்குவதிலும் அவை சிறந்த சேவையை ஆற்றின.

உருக்கு, இரும்புத் தகடு, கடினமான உலோகங்கள் பலவற்றாலும் ஆக்கப்பட்ட நீர்மூழ்கிகள் பல்வேறு நவீன தற்காப்புக் கருவிகள் பொருத்தப்பட்டவைகளாகவும் திகழ்ந்தன.

நீரின் அடியில் இருந்த வண்ணமே நீரின் மேற்புறத்தில் நிலவும் நிலைமைகளை ஆராயும் பெரிஸ் கோப் எனும் கருவிகளும் எதிரிகளின் நீர் மூழ்கிக் கப்பல்கள் மற்றும் தாக்குதல்களுக்குப் பயன்படும் கருவிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும், சோனார் கருவிகள் என்பனவும் நீர் மூழ்கிக் கப்பல்களில் பொருத்தப்படுகின்றன.

அணு சக்தியால் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்களுக்கு எரிபொருள் புகை என்பவற்றால், வாயுக்களால் எதுவித சிக்கலும் இன்றி இயங்க முடியும். நீர் மூழ்கிக் கப்பல்கள் பல வகைகளாக உருவாக்கப்பட்டு பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கடல் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் அதனுள் அமிழ்ந்துள்ள அற்புதமான விளைச்சல் பொருட்கள் என்பன பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இவை மிகவும் பயன்படுகின்றன.

கடலின் அடியில் இடம்பெறும் புவியியல் மாற்றங்கள் தொடர்பிலான ஆராய்ச்சிகளுக்கும் இவை உறுதுணை ஆகின்றன.

நாடுகளின் பாதுகாப்புக்கும் நீர் மூழ்கிக் கப்பல்கள் இன்று பயன்படுத்தப்படுகின்றன.

மருதாணியில் வரைந்து கொள்வது வழிவகுக்கும்


இளம் பெண்கள் தங்கள் அழகை மேலும் மெருகூட்டிக் கொள்ள மருதாணி, பச்சைகுத்துதல் போன்றவற்றை நவீன நாகரிகமாக கொண்டிருக்கிறார்கள். இப்படி மருதாணி வரைந்து கொள்வது லுக்கேமியா என்னும் ஒருவித புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பக்காலத்தில் ஏற்படும் 'காலை நேர நோய்'


கர்ப்பக் காலங்களில் சில பெண்களுக்கு 'காலை நேர நோய்' எனப்படுவது வழமையான ஒன்று. இது நோய் என்று சொல்லப்பட்டாலும் கூட தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.


காலை நேர நோய் (morning sickness )என்றால் என்ன?

இது கர்ப்பமான பெண்களில் ஏற்படுகின்ற வாந்தி மற்றும் வாந்தி ஏற்படுத்தும் ஓர் உணர்வு(nausea) தான் 'காலை நேர நோய்' எனப்படுகின்றது. இந்தக் காலை நேர நோயானது கர்ப்பமாகி முதல் மூன்று தொடக்கம் நான்கு மாதங்களுக்கு மட்டுமே ஏற்படும்..

கர்ப்பமடையும் ஒரு பெண் வாந்தியினால் அவதிப்படுவது முதல் மூன்று மாதங்களுக்கே. இந்த நோயினால் குழந்தைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.

காலை நேர நோயின் ஆதிக்கத்தைக் குறைக்க சில வழிகள்:

1. இரவில் எண்ணெய், மற்றும் கொழுப்புத் தன்மையான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். (பொரித்த காரம் கூடிய உணவுகள்)

2. ஒரேயடியாக நிறையச் சாப்பிடுவதைத் தவிர்த்து கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட வேண்டும்.

3.காபோகைட்றேட் (carbohydrate) நிறையக் கொண்ட உணவு வகைகளை உண்ண வேண்டும் (வெள்ளை அரிசி, அவித்த உருளைக் கிழங்கு, இனிப்புக் குறைவான மாவினால் செய்த பிஸ்கெட் போன்றவை)

4.காலை எழுந்தவுடன் படுக்கையில் சற்று நேரம் அமர்ந்திருந்து ,ஆறுதலாக சுவாசிக்க வேண்டும்.

5.பழங்கள் மரக்கறி வகைகளை அதிகம் உட்கொள்வது நல்லது.

6.வயிறு முற்றாக வெறுமையாவதைத் தவிர்க்க வேண்டும்.

7.படுக்கையிலிருந்து எழுந்தவுடனேயே உங்கள் அன்றாட செய்கைகளில் ஈடுபடும் முன் சீனித்தன்மை குறைந்த பிஸ்கட் வகைகளில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடுவது நலம்.

மேற்கண்ட வழிவகைகள் கால நேர நோயை ஓரளவு கட்டுப்படுத்துமே அல்லாது ஒரேயடியாக நிவாரணத்தைத் தந்து விடாது. காரணம் இந்நோய்க்கான சிகிச்சையும் குறைந்தளவிலே தான் உள்ளது. இதனை நோய் என்று நினைத்து மலைத்துவிடாமல், மூன்றே மூன்று மாத காலம் பொறுமையாகக் காத்திருப்பது நல்லதல்லவா?

You might also like:
பாலியல் துளிகள் தாய்ப்பாலில் தாய்ப்பாசம்? கர்ப்ப கால உறவு நல்லதா? LinkWithin

பொய் பேசும் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த புத்திசாலிகளாக மாற்றமடைவார்கள்


குழந்தைப் பிராயத்தில் பொய் பேசும் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த புத்திசாலிகளாக மாற்றமடைவார்கள் என கனேடிய மருத்துவ ஆய்வாளர்கள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

மிகவும் சிறிய பொய் பேசுதல் குழந்தையின் புத்தி சாதூரியத்தை வெளிப்படுத்தி நிற்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இரண்டு வயது முதல் பதினேழு வயது வரையிலான ஆயிரத்து இருநூறு சிறுவர் சிறுமியரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டு வயதுடைய சிறுவர் சிறுமியரில் இருபது வீதமானவர்கள் மட்டுமே பொய் பேசும் ஆற்றலைக் கொண்டிருந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது அதிகரிக்க அதிகரிக்க பொய் பேசுவோரின் எண்ணிக்கையும் உயர்வடைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

டொரொன்டோ சிறுவர் மருத்துவ பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பிள்கைள் சிறு பொய்களைப் பேசினால் அது குறித்து பெற்றோர் பீதியடையத் தேவையில்லை என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொய் பேசும் சகல குழந்தைகளும் எதிர்காலத்தில் மோசமானவர்களாக உருவாக மாட்டார்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விளையாட்டுப் பொருட்களை வழங்குவதன் மூலம் இந்த மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?


உலகின் பல ஆய்வாளர்களும் கூட கண்டுகொள்ளாத அல்லது ஒருவேளை கண்டு சொல்லாத மிகப்பெரிய செயல் ஒன்று தொடர்ந்து நடந்தபடி பூமியை வாட்டிவதைத்து உருக்கிக்கொண்டே இருக்கிறது.

இமயமலை, ஆர்டிக், அண்டார்டிக் உருக மிக முக்கிய காரணம் நம் பூமியின் அடிப்பகுதியிலிருந்து மேல் எழும்பி வரும், வந்து கொண்டிருக்கும் லாவா மற்றும் மேக்மாவின் அளவு கடந்த, தடுக்கப்படாத வெப்பமே. இதைத்தடுக்க பெரும் உதவிபுரியும் மாபெரும் நீரோட்டங்களிலிருந்தும், கச்சா எண்ணெய்க் கிடங்குகளிலிருந்தும், வாயுக் கிடங்குகளிலிருந்தும் இவற்றை லட்சக்கணக்கான கன சதுர மீட்டர் அளவு வெளியே எடுத்துப்பயன்படுத்தி வரும் தொடர் அக்கிரமத்தால் உள் வெப்பத்தைத் தடுக்கும் நடவடிக்கையும் நில அதிர்வின்போது எண்ணெய் மற்றும் காற்று ஷாக் அப்சர்பரைப்போல் பயன்படும் இவற்றின் உதவியும் இழக்கப்பட்டுவிட்டது.

எனவே, பூமியின் சகல மேல்பகுதிகளும் வெப்பத்தால் தகிக்கிறது. போதாததற்கு மேல்புறம் தாக்கும் வெப்பமும் கூட. எந்தப் பகுதியில் உருகும் ஐஸ் மலைகளும், கீழ்புறமாகவே நகர்கின்றன. எனவே முதலில் பூமியின் உட்புற அடிப்புறப் பகுதியே வெப்பத்தை அதிகம் சந்திக்கிறது என்பது தெளிவு. இன்றிலிருந்து நாம் பூமியின் உட்புற அனைத்து ஆதாரங்களையும் பயன்படுத்துவதை 100 சதம் நிறுத்திவிட்டாலும் கூட பூமியைக் காக்கவே முடியாது. மேலும் அவற்றின் பயன்பாட்டை 10 சதம் கூட நம்மால் குறைத்துக்கொள்ளவும் முடியாது. அப்படி அவற்றிற்கு அடிமையாகிவிட்டோம். ஏற்கனவே வெளியே எடுக்கப்பட்டுவிட்ட மேற்படி பொருட்களின் காரணமாக பூமியின் உட்புறத்தில் கணக்கற்ற அளவற்ற பெரிய பெரிய வெற்றிடங்கள் உருவாகிவிட்டன். எதிர்வரும் நிலநடுக்கங்களால் நாம் வாழும் பகுதி நடுங்கினால் அப்படியே சில பல கிலோ மீட்டர் ஆழத்தில் நாம் புதைந்துவிடுவது உறுதி. மாறாக கடலுக்குள் பூமி புதையாது.

காரணம் கடல் என்பதன் ஆழம் நம் பூமியின் மையம் வரையான உயரத்தில் (6400 கி.மீ) சுமார் 30 முதல் 25,000 அடிகள் வரைதான். ஒவ்வொரு முறையும் நிலநடுக்கம் என்பது பூமியின் மையத்திலிருந்து 400, 150, 15 கி.மீ. ஆழங்களிலிருந்து தாக்குவதாக அறிகிறோம். அப்படி மேல் நோக்கி வரும்போதெல்லாம் மேக்மா, லாவாவைத் தள்ளிக்கொண்டே வருகிறது. இவ்வாறு மத்திய வெப்பக்குழம்பு கட்டாய இடப்பெயர்ச்சி செய்வதால்தான் நிலநடுக்கங்கள் வருகின்றன. உதாரணமாக சுனாமியின் போதான நிலநடுக்கத்தின்போது சுமத்ராவின் அருகே அதன் 13,000 அடி ஆழப்பகுதியில் பூமியின் உட்புறமிருந்து வெடித்து வந்து நிரம்பிய லாவா மேக்மாவின் அளவோ 1400 கி.மீ. நீள, 200 கி.மீ. அகல 5000 அடி உயரத்திற்கான புது தீவாகும். இதன் தள்ளுதலாலேயே கரைப்பகுதிகளைக் கடல் நீர் தாக்கியது. இந்நிகழ்வு கடலின் அடிப்புறத்திலேயே நடந்தது.

இந்தப் புதிய தீவின் அளவோ இந்தியாவில் முக்கால் பகுதி. இவற்றாலும் கடல் மட்டம் பெரும் அளவு உயர்ந்து வருகிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. பாறைகளின் மீது கட்டடங்களின் மீது படும் வெப்பமே பூமியை பாதிக்கும் எனும்போது கோடான கோடி வாகனங்கள் மீது பட்டு வரும் வெப்ப அளவு எப்படி இருக்கும்? உலகம் பொதுக்குடும்பம் என்றாகிவிட்ட நிலையில் ஒரு வீட்டுக்காரன் குடும்பத்தை நாசப்படுத்திப் பிழைப்பதும் மற்ற வீட்டார்கள் அவனால் பாதிப்படைவதும் என்பது என்ன நியாயம்? கார்பன் அளவு, வளர்ந்த நாடுகளால் ராட்சச அளவில் வெளியாக்கப்படுவதும் மிக மிக கண்டிக்கப்படவேண்டியது. மக்கள் தொகையைவிட மற்ற பல செயல்களும் நாசத்திற்கு தூபம் போடுகின்றன.

கொட்டாவி விடாதே, குண்டு பல்பு போடாதே என்று கூறும் உலக நாடுகளும் நம் அரசுகளும் அவற்றைவிட பல லட்சம் மடங்கு நாசம் செய்யும் ஓட்டை வாகனங்களின் கார்பன் வெளியீட்டிற்கு என்ன செய்கின்றன? சமீபத்திய சுனாமியில் வெளித்தள்ளப்பட்ட ராட்சத அளவிளான உள் வெப்பம் உலகையே மிக மிக மோசமாக பாதித்துக்கொண்டே வருவது மட்டுமின்றி உலகின் சுற்றுச்சூழலை அழிவின் அடுத்த கட்டத்திற்கும் கொண்டு சென்று விட்டது என்பதே நிஜம். இந்நிலையில் பொதுமக்களாகிய நாமும் சர்வதேச நாடுகளும் எந்த அளவிற்கு நம் சந்ததியினருக்கு இந்த பூமியை நலமுடன் விட்டுவைக்கப்போகிறோம் என்பதே ஆயிரம் டாலர் கேள்வி. சமீபத்திய திரைப்படமான 2012ன் உலக அழிவு என்பது இன்னும் சில வருடங்களில் உண்மையிலேயே நடப்பதற்கான சாத்தியங்கள் மிக மிக அதிகமாக உள்ளன என்பது கசப்பான உண்மைதான்.

பாலிதீன் கழிவு, சாயக்கழிவு, தோல் கழிவு, பூச்சி மருந்துகள், உரங்கள், சுத்தப்படுத்தப்படாத ஏரிகள், கால்வாய்கள், கோடிக்கணக்கான வாகனங்கள், ஆடம்பரமான மின்சார நுகர்வுகள், மீண்டும் மீண்டும் போடப்படும் சாலைகள், உருக்கப்படும் தார், இடிக்கப்படும் கட்டடங்கள், எக்கப்படும் வாகனங்கள், தீப்பிடிக்கும் எண்ணெய் கிணறுகள், கடலைத் தூர்த்துக் கட்டப்படும் மாபெரும் நகரங்கள், ராக்கெட், செயற்கைகோள்கள் ஆதிக்கம், விண் குப்பைகள், காட்டுத்தீ, கடலில் கொட்டப்படும் அதீத கழிவுகள், அணு சோதனைகள் என்று அளவிடமுடியாத அழிவின் கோரக்கரங்கள் நம் பூமியை அரவணைத்து நெருக்குகின்றன என்பதே உண்மை. இவற்றிலிருந்து மீளுமா பூமி? நம் சந்ததிகள் உயிர் வாழக்கொஞ்சம் மூச்சுக்காற்றும், குடிநீரும் அவசியம் என்பதை காலங்கடந்தே நாம் உணரப்போகிறோம் என்பது மட்டும் மெய்.

புதன், 23 ஜூன், 2010

ஜெயலலிதாவுக்கு எதிராக களமிறங்கும் குஷ்பு


தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் எதிர்க் கட்சித் தலைவியுமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் அடிக்கடி சென்று ஓய்வு எடுக்கும் சிறுதாவூர் பங்களாவை தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதியரசர் கே. பி. சிவசுப்பிரமணியம் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. சிறுதாவூர் சம்பந்தமான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதனால் இந்த உத்தரவை உடனடியாக அமுல்படுத்த முடியவில்லை.

தமிழக அரசியலைப் பற்றி அறிந்தவர்களுக்கு பரிச்சயமான பெயர் சிறுதாவூர். ஜெயலலிதா சென்னையில் இருப்பதை விட சிறுதாவூரில் ஓய்வு எடுப்பது அதிக நாட்கள். தமிழக அரசியலின் பல முக்கிய முடிவுகளை சிறுதாவூரில் இருந்து கொண்டே ஜெயலலிதா எடுத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் சிறுதாவூர் என்ற கிராமம் உள்ளது. சிறுதாவூரில் உள்ள பிரமாண்ட பங்களாவில் ஜெயலலிதாவும், அவரது உடன் பிறவா சகோதரி சசிகலாவும் அடிக்கடி சென்று ஓய்வு எடுப்பார்கள்.
இந்த பங்களா அமைந்துள்ள இடம் அங்குள்ள ஆதி திராவிடர்களுக்கு அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்டது. அரசாங்கத்தால் ஆதி திராவிடருக்கு வழங்கப்பட்ட நிலம் திட்ட மிடப்பட்டு அபகரிக்கப்பட்டதாக மார்க்ஸிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது.

ஜெயலலிதாவுக்கு எதிராக மார்க்ஸிஸ்ட் கட்சி மிக மும்ரமாக இருந்த காலகட்டம்.
சிறுதாவூர் நிலம் அபகரிக்கப்பட்டதா என்ற உண்மையை அறிவதற்காக ஓய்வு பெற்ற நீதி பதி சிவசுப்பிரமணியம் தலைமையில் 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதி விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது.
இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என கமிஷனுக்கு உத்தரவிடப்பட்டது. சிறுதாவூர் நிலம் சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும் வேறு பல காரணங்களினாலும் நீதிபதி கே. பி. சிவசுப்பிரமணியம் தலைமையிலான அறிக்கை வெளிவருவது காலதாமதமானது.

சிறுதாவூர் கிராமத்தில் உள்ள நிலமற்ற 20 ஏழைக் குடும்பங்களுக்கு தலா 2.50 ஏக்கர் வீதம் 1967 ஆம் ஆண்டு வருவாய்துறை வழங்கியது.

“இந்த நிலத்தை 25 வருடங்களுக்கு விற்பனை செய்ய முடியாது. ஆனால் 1983 ஆம் ஆண்டு இந்த நிலங்கள் விற்பனை செய்யப்பட்டது. நிலத்தை விற்பனை செய்ததும் வாங்கியதும் சட்டப்படி விரோதமானது, எனவே அந்த நிலத்தை சட்டப்படி அரசு கையகப்படுத்த வேண்டும். அதனை ஏழை ஆதிதிரா விடர் அல்லது பழங்குடியினருக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும். பணத்துக்காக சட்டத்தை மீறியவர்கள் மீது எதுவித கருணையும் காட்டக் கூடாது' என்றும் கே.பி. சிவசுப்பிரமணி யம் தலைமையிலான கமிசன் பரிந்துரை செய்துள்ளது.

ஏழைகளுக்கு வழங்கப்பட்ட சிறுதாவூரில் பிரமாண்டமான பங்களா கட்டியதற்காக ஜெயலலிதா மீதும், சசிகலா மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. சிறுதாவூரிலும் சட்ட விரோதமாக வாங்கப்பட்ட நிலம் ஜெயலலிதா சசிகலா பெயரில் இல்லை. பரணி சோர்ட்ஸ் என்ற நிறுவனத்தின் பெயலேயே சிறுதாவூர் பங்களா கட்டப்பட்ட நிலம் உள்ளது. பரணி சேர்ட்ஸ் நிறுவனத்தில் சசிகலாவின் உறவினர்கள் பங்குதாரர்களாக உள்ளனர்.

சிறுதாவூர் நிலம் சட்ட விரோதமாக வாங்கப்பட்டது பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் குற்றச்சாட்டு உண்மை என்பது கே. பி. சிவசுப்பிரமணியம் கமிஷன் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. தமது குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்ட சந்தோஷத்தைக் கொண்டாடும் நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி இல்லை. காங்கிரஸ் கட்சி, திராவிட முன் னேற்றக் கழகம் ஆகியவற்றை முழு மூச்சாக எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கட்சி, இப்போது ஜெயலலிதாவின் பக்கம் சாய்ந்துள்ளது. தமிழகத்தில் எந்தக் கூட்டணியிலும் இல்லாத மார்க்சிஸ்ட் கட்சி அடுத்து வரும் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்கும் மனநிலை யில் உள்ளது. ஆகையினால் இதனைப் பெரிதுபடுத்துவதற்கு மார்க்சிஸ்ட் கட்சி விரும்பவில்லை.

நீதிபதி கே. பி. சிவசுப்பிரமணியம் தலைமையிலான கமிசன் வெளியிட்ட அறிக்கை பற்றி ஜெயலலிதா எதுவும் தெரிவிக்க வில்லை. இதேவேளை, சிறுதாவூர் பங்களாவை அரசாங்கம் கையகப்படுத்துவதைத் தடுப்பதற்கு சகல முயற்சிகளையும் ஜெய லிதா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பிரபல நடிகையான குஷ்பு காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறார் என்ற செய்தி கடந்த இரண்டு வாரங்களாக பரபரப்பாகப் பேசப்பட்டது. அண்ணா திராவிட முன் னேற்றக் கழகத்தின் பிரசார தொலைக்காட்சியான ஜெயா, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசார தொலைக்காட்சியான கலைஞர் ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் என்ற செய்தி அரசியலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரிடம் மதிப்பைப் பெற்ற குஷ்புவின் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் இருப்பவர் யார் என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் திடுதிப்பென திராவிட முன்னேற் றக் கழகத்தில் சேர்ந்தார் குஷ்பு. குஷ்புவின் அரசியல் பிரவேசம் அண்ணா திராவிட முன் னேற்றக் கழகத்தினுள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

குஷ்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருந்தால் ஜெயலலிதா அமைதியாக இருந்திருப்பார். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் குஷ்பு சேர்ந்தது ஜெயலலிதாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜாக்பாட் நிகழ்ச்சி உடனடியாக நிறுத்தப்பட் டது. தொலைக்காட்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ஜாக்பாட் நிகழ்ச்சி உடனடியாக நிறுத்தப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

குஷ்பு நடிகையே தவிர, அரசியல்வாதி அல்ல. சினிமாவில் இருந்து அரசியலுக்குச் சென்ற அனைவரும் வெற்றி பெறவில்லை.
தமிழகத்தில் சினிமாவில் இருந்து அரசியலுக்குச் சென்ற பெண்களில் ஜெயலலிதா மட்டும் தான் செல்வாக்காக உள்ளார். ஏனையோர் இருந்த இடம் தெயாமல் மறைந்து விட்டனர்.
இன்னும் சிலர் கட்சியின் பிரசாரக் கூட்டங்களில் மட்டும் கலந்து கொள்கின்றனர்.

அரசியல் பின்னணி எதுவும் இல்லாத குஷ்புவினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு அபரிமிதமாக உயரப்போவதில்லை. நடிகையாக உள்ள குஷ்புவின் பின்னால் ஏராளமான ரசிகர் பட்டாளம் இல்லை.
நடிகை குஷ்புவுக்கான ரசிகர் மன்றம் எதுவும் கிடையாது. ஆனால், தொலைக்காட்சி முலம் ரசிகர்களிடம் செல்வாக்குள்ளவராகத் திகழ்கிறார் குஷ்பு.

தமிழகத்தின் பெண் வாக்காளர்களில் ஜெயலலிதாவுக்கென்று தனி இடம் உள்ளது. ஜெயலலிதாவின் பின்னால் உள்ள பெண் வாக்காளர்களைக் கவர்வதற்காக குஷ்பு அரசியலில் இறக்கப்பட்டுள்ளார். அரசியலில் இணைந்த கையுடன் அதிரடியாக ஜெயலலிதாவை எதிர்த்து போர்க் கொடி தூக்கியுள்ளார் குஷ்பு.

ஜெயலலிதாவை எதிர்த்து தேர்தலில் போட்டியிடப் போவதாக குஷ்பு அறிவித்துள்ளார்.
ஜெயலலிதாவை எதிர்க்கக் கூடிய துணிச்சலுள்ள பெண் ஒருவரைத் தேடிக் கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகம் குஷ்புவை தன் பக்கம் ஈர்த்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் செல்வாக்கும் ஜெயலலிதாவைத் தோற்கடிக்கலாம் என்று குஷ்பு கருதுகிறார்.

குஷ்புவின் அரசியல் பிரவேசம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள சிலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கற்பு, திருமணத்துக்கு முன்னைய உறவு போன்றவற்றினால் ஏற்பட்ட சர்ச்சை நீதிமன்றம் வரை குஷ்புவைக் கொண்டு போய் நிறுத்தியது. சமுதாயம் ஏற்றுக் கொள்ளாத சில விடயங்களை குஷ்பு பேசும் போது அது கட்சியைப் பாதிக்கும் என்று ஒரு சிலர் கருதுகிறார்கள்.

ஜெயலலிதாவை எதிர்க்கத் துணிவுள்ள ஒரு பெண்ணை திராவிட முன்னேற்றக் கழகம் அரசியலில் இறக்கியுள்ளது. தமிழக சட்ட சபையில் ஏற்படுத்தப்பட இருக்கும் மேல் சபையில் குஷ்புவுக்கு இடம் கிடைக்கும் என்ற தகவல் பரவலாக உலாவியது. அப்போது அதுபற்றி குஷ்பு எதுவும் தெரிவிக்கவில்லை. குஷ்பு அதற்கு மறுப்புத் தெவிக்காமையினால் குஷ்புவின் அரசியல் பிரவேசம் உண்மை என்பது உறுதியாகியது.

குஷ்புவின் அரசியல் பிரவேசம் துரித கதியில் அவசர அவசரமாக எடுத்து முடிக்கப்பட் டுள்ளது. சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் தனக்கென்று ஒரு முத்திரையைப் பதித்து ரசிகர்களிடம் அபிமானத்தைப் பெற்ற குஷ்பு அரசியலிலிலும் அபிமானத்தைப் பெறும் எண்ணத்தில் களமிறங்கி உள்ளார்.

சோர்வை விரட்டுவோம்


மனச்சோர்வு என்பது மன அழுத்தம் என்றும் வழங்கப்படுகின்றது. உறக்கம் அசதியும் சோர்வும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. மனச்சோர்வு பல வகைப்படும்.
இது ஏன் ஏற்படுகின்றது? அறிவியலாளர்க்கே விடைதெரியாத கேள்வி இது!

எதற்கெடுத்தாலும் சோர்வுதான்! அடிப்படையாக, உள்ளே இருக்கும் உயிர்சக்தியை கெடுத்தால் நேரடியாக சோர்வுதான். அப்படி இல்லாவிட்டாலும், உற்சாகத்தை கெடுத்தாலும் சோர்வுதான்.

கேட்க சாதரணமாகத் தோன்றினாலும், இது வாழ்க்கை அடிப்படையையே மாற்றும் ஒரு விஷயம். கோர்வையாக ஒரு கணம் தாண்டி இன்னொரு கணம் வருவது தானே வாழ்க்கை. உற்சாகம் இல்லாவிட்டால் எப்படி?

ஒரு துறையில் வேகமாய் முன்னேறிக் கொண்டே செல்கிறபோது தெரியாமல் ஏற்படும் பின்னடைவுகள் ஒரு மனிதனை சோர்வடையச் செய்கிறது. ஏன்? எதனால்?
ஒரேயொரு காரணம்தான் உண்டு. மற்றவர்கள் பார்க்கும் அதிர்ச்சிமிக்க பார்வை, ஒரு சிலரின் ஏளனப் பார்வை.

அந்தத் துறையில் இயங்கிக் கொண்டு இருப்பவர்களுக்குத் தெரியும், அந்தப் பின்னடைவை எளிதில் சமாளிக்க முடியும் என்று.
ஆனால், அடுத்தவர்களின் அனுதாபப் பார்வையாலும் சந்தேகப் பார்வையாலும் அவர்களுக்கே சில சமயம் சோர்வு வந்துவிடும்.
அக்கறையாலோ, பதட்டத்திலோ ஆளுக்கொரு அறிவுரையும் உபதேசம் சொல்லி, சேற்றில் சிக்கிய வண்டியை இழுப்பதாய் நினைத்து இன்னும் ஆழமாய் புதைப்பதும் சில நேரங்களில் நடக்கும்.

உண்மையில் மனிதர்கள் தங்களுக்கு வருகிற பின்னடைவின்போது என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அதிலிருந்து மீள்வது நிகழும்.

உதாரணமாக, ஒருவர் உடல்நலக் குறைவுக்கு ஆளாகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்படி நேர்ந்து விட்டதே என்று சோர்வாக அமர்வதைவிடவும் சரியானவழி, தீர்வை நோக்கி நகர்வதுதான். அதாவது ஒரு மருத்துவரிடம் போவது. மருத்துவரிடம் போவது என்று முடிவெடுத்த விநாடியிலிருந்தே அவர் அந்தப் பின்னடைவிலிருந்து மீள்வதற்கான முதலடியை எடுத்துவைக்கிறார்.

உடலுக்குப் பின்னடைவு வருகையில் உடனே செயல்படும் மனிதர்கள், மனதுக்குப் பின்னடைவு வரும்போது சோர்வாய் அமர்வதும், தீர்வு நோக்கிய பயணத்தைத் தள்ளிப் போடுவதுமே அவர்களின் நிலை மோசமாகக் காரணம்.

பொதுவாகவே பின்னடைவுகள், நம்முடைய பயணத்தின் வேகத்தை தீவிரப் படுத்தவோ, அல்லது சரியான திசையில் செல்லவோ நினைவூட்டுவதற்காகவே நேர்கின்றன.

பின்னடைவுகளைக் கையாள்வதில் இருக்கும் வெற்றிதான் இலக்கு எட்டுவதில் நம்மை துரிதப்படுத்துகிறது. இன்னும் தெளிவான பயணத்தை நமக்குத் தருகிறது.

உலகின் பல சாதனையாளர்கள், பின்னடைவிலிருந்து மீள்வது பற்றி ஒரு வரியில் சொல்லியுள்ள உயிர்ப்பு மிக்க அனுபவப் பதிவுகள் சோர்விலிருக்கும் யாரையுமே தீர்வு நோக்கி நகர்த்தும் தனித்தன்மை வாய்ந்தவை.

* எதிர்பாராமல் ஏற்படுகிற பின்னடைவை சரியாக ஆராய்ந்தால், அது எதிர்கால வெற்றியை வரையறை செய்யும் வாய்ப்பாக அமைகிறது.

* சவாலான நிமிஷங்களை சாதாரணமான மனிதர்கள் எதிர்கொள்ள மட்டுமே செய்கிறார்கள். சாதனையாளர்களோ, சவாலை எதிர்கொண்டு, இன்னும் பலமாய் வெளிப்படுகிறார்கள்.

* பதட்டம் தருகிற சூழ்நிலை என்பது, முடிந்து போகிற முட்டுச்சந்து என்று நினைப்பவர்கள் பதறுவார்கள். அது திருப்பங்கள் ஏற்படுத்தும் திருப்புமுனை என்று நினைப்பவர்கள் வளருவார்கள்.

* எதிர்மறையான மனிதர்களை எதிர் கொண்டும் நேர்மறையாய் செயல்படுவது தான் உண்மையான முன்னேற்றம். எல்லாவற்றையும் நல்லதாகவே பார்க்கும் நம்பிக்கை மனிதர்களை மட்டுமே கொண்டதல்ல வாழ்க்கை.

* ஒரு செயலைச் செய்ய உங்களால் முடியாதென்று நினைப்பவர்களை சந்திக்க நேர்கிறதா? உங்கள் மேல் நம்பிக்கை வைத்துள்ள மனிதர்களின் நினைவு அங்கே தோன்றட்டும்.

* ஒரு செயலை நீங்கள் செய்தது பற்றிய விமர்சனங்கள் உங்கள் காதுகளில் விழுகின்றனவா? அதில் இருக்கும் நடுநிலையான கருத்துக்கள் மட்டுமே நெஞ்சில் தங்கட்டும்.

* உங்கள்மேல் உங்களுக்கே சந்தேகம் தோன்றுகிறதா? உங்களுடன் நீங்கள் உட்கார்ந்து பேச, இதுதான் சரியான நேரம். உங்கள் பலங்கள் பலவீனங்களை அலசுங்கள். சந்தேகம் என்கிற கறை காணாமலே போகும்.

* உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மீது சந்தேகம் வருகிறதா? அது எல்லோரையும் சந்தேகிக்கும் நோயாக வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கொரு வழி இருக்கிறது. உங்களை உயர்த்துவதற்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்களை நினைவில் கொண்டு நிறுத்துங்கள்.

* அதிகாலை நேர நடைப்பயிற்சியின் போது, உங்கள் திறன்களுக்காகவும், உங்கள் வாழ்க்கைக்காகவும், கடவுளுக்கு நன்றி சொல்லும் விதமாய், நன்றியுணர்வை உங்களுக்குள் நிரப்பிக்கொள்ளுங்கள்.

* அச்சம் வரும்போதெல்லாம் நம்பிக்கை கொள்ளுங்கள். நம்பிக்கையின் உயரம், அச்சத்தின் உயரத்தைவிட அதிகமாய் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

* உள்ளுக்குள்ளே அயர்வு தலைகாட்டும் போது கடவுளை நோக்கி உங்களை முழுவதும் ஒப்படையுங்கள். அந்தப் பெரும்சக்தி தரும் சக்தியை மீண்டும் பெற்றுக்கொண்டு மீண்டு வாருங்கள்.

* நீங்களே உங்களை அறிந்திருக்கும் அறிவுகூட மேலோட்டமான அறிவுதான். அப்படியிருக்க, மற்றவர்கள் உங்களைக் குறைவாக எடைபோட்டால் அதற்காக வருந்தாதீர்கள். உரிய நேரத்தில் உங்கள் செயல்திறன் வெளிப்படும்போதுதான். உலகுக்கும் உங் களுக்கும், உங்களைப்பற்றித் தெரிகிறது.

* சில விஷயங்களைத் தக்கவைக்க முயல்வதால் வாழ்வின் மற்ற விஷயங்கள் பாதிக்கிறதா? சிறிதும் தயங்காமல் அவற்றை வெளியேற விடுங்கள்.

* ஒரு சூழலை நீங்கள் கடப்பீர்களா மாட்டீர்களா என்ற கேள்வியுடன் எல்லோரும் உங்களை எதிர் நோக்குகிறபோது, அந்தச் சூழலை ஒரு விளையாட்டு மைதானமாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். சிரித்த முகத்துடன் அந்த விளையாட்டில் பங்கெடுங்கள்.

உறக்கம் அசதியும் சோர்வும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது.

நீண்ட நேரம் தூங்கவேண்டாம், நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைத்தால் போதும் என்று சொல்பவர்கள், தொடர்ந்து அசதியையும் சோர்வையும் சேமிக்கிறார்கள். இன்னொரு பக்கம், பலருக்கு ஆழ்ந்த தூக்கமே கிடைப்பதில்லை. எப்போதும் கண்களில் தூக்கம் மிச்சமிருக்கும். ஒரு மாதிரி போதை மனநிலையிலேயே இருப்பார்கள்.

பலர் பேசிக்கொண்டே இருக்கும்போது, எதிரே இருப்பவர் கண் அயர்வதைப் பார்க்க முடியும். இசைக்கச்சேரிகள், ஆன்மிகச் சொற்பொழிவுகளில் இதுபோல் தம்மை மறந்து உறங்குபவர்கள் அதிகம். மீண்டும் எழுந்தவுடன் ஒருவித கூச்சம் தலைகாட்டும்.

நிறைய பேருக்கு தூங்குவதில் பிரச்சினை இருக்கிறது. விடிகாலை என்பது இவர்களுக்கு பாதிராத்தி ஒன்று அல்லது இரண்டு மணி.
எழுந்து உட்கார்ந்துகொண்டு, வீட்டில் உள்ளதையெல்லாம் குடைந்துகொண்டு இருப்பார்கள்.

கவலை நிறைய பேரைத் தூங்கவிடாமல் செய்கிறது. இரவின் தனிமை மிகவும் அகோரமாக இருக்கிறது. உள்ளே பீறிடும் துக்கம் கவலையும் சோகம் ஆதங்கங்களும் இவர்களைத் தூங்கவிடாமல் செய்கிறது. ஒவ்வொரு இரவையும் இவர்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவது போல், வலியுடன் தள்ளிக்கொண்டு இருக்கிறார்கள். இதில் பலியாவது, தூக்கம். தூக்கமின்மை, எரிச்சலை மேன்மேலும் அதிகப்படுத்துகிறது.

பல்வேறு காரணங்களால் சிலர் இரவில் தூக்கமில்லாமல் தவிப்பார்கள். இதனால் கண்களில் சோர்வு ஏற்பட்டு சுறுசுறுப்பின்றி காணப்படுவர். இதுபோன்ற பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பவர்களின் சோர்வை நீக்கி, அவர்களை சுறுசுறுப்பாக மாற்ற ஓரன்ஞ்சை பழத்திலிருந்து ஜூஸ் பிழிந்து அதை /பிரீசரில் வையுங்கள். பிரீசரை அதிக குளிரூட்டி, ஜூஸை ஐஸ் கட்டிகளாக உறைய வையுங்கள். இவற்றை சுத்தமான வெள்ளைத்துணியில் கட்டி கண்களில் ஒத்தடம் கொடுங்கள். தினந்தோறும் இரவில் இப்படி செய்து வந்தால் ஒரே வாரத்தில் கண் சோர்வு நீங்கி உற்சாகம் பொங்கும்.

மனச் சோர்வு என்பது மன அழுத்தம் என்றும் வழங்கப்படுகின்றது. வேதனை இல்லாத மனிதரே இல்லை. ஆனால் சிலரை இது நோய் வடிவத்தில் பீடிக்கின்றது.

சரி இந்த நோய்க்கு என்ன அறிகுறி?

பசி எடுக்காமல் போவது!

உறக்கத்தில் மாறுபாடு!

உற்சாக மின்மை!

நம்பிக்கையின்மை!

குற்ற உணர்வு!

சிந்திக்க முடியாமை!

மரணம் பற்றிய எண்ணம்

தலைவலி வயிற்று வலி மனச்சோர்வு வருவதற்கு வயது தடையில்லை.
விடலைப் பருவத்தினடேயே இது அதிக மாகத் தென்படுகின்றதாம்! காதல் தோல்வி, மணமுறிவு இந்த இரண்டினாலும் மனச் சோர்வு ஏற்படலாம்.

பொருளாதார நெருக்கடி, குடும்பத் தலைவிக்குத் தலைவலியாகி மனச்சோர்வை உண்டாக்கக் கூடும். மனச் சோர்வு பல வகைப்படும். இது ஏன் ஏற்படுகின்றது? அறிவியலா ளர்க்கே விடை தெயாத கேள்வி இது! குடும்பத்தில் ஏற்கனவே எவரேனும் இந்த நோய்க்கு ஆளாகியிருந்தால், மற்றவருக்கு இது ஏற்பட 70 வீத வாய்ப்புண்டு. இது குணப் படுத்தப்படக்கூடிய ஒரு நோய்தான்? பல வகை சிகிச்சை முறையை மருத்துவர் கையாள்கின்றனர். உலகில் 5 வீதத்தினர் வரை இந்நோய்க்கு ஆளாகியிருக்கின்றனர். நல்ல உணவு, உடற்பயிற்சி நல்ல நண்பர்கள் சீரான குடும்ப உறவு இவை இருந்தால் மனச் சோர்வு நம்மை அண்டாது.

இருதய நோயாளிக்கு தக்காளி


இருதய நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி. நாம் அன்றாடம் நமது உணவில் பயன்படுத்தும் தக்காளி விதைகளில் இருதய நோய் பாதிப்பை தடுக்கும் திறன் கொண்டவை என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெவிக்கின்றன.

தக்காளி விதைகளை ஒட்டி இருக்கும் ஜெலட்டினிலிருந்து பித்து எடுக்கப்பட்ட ஃப்ரூட்ஃப்ளோ என்ற பொருள் இரத்தம் கட்டியாவதைத் தடுத்து மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இரத்தம் கட்டியாவதைத் தடுக்க தற்போது பயன்படுத்தப்படும் ஆஸ்பிரின் மாத்திரைகளுக்கு இந்த /ப்ரூட்/ப்ளோ சிறந்த மாற்று என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அபர்தீன் ரோவெட் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள் வெற்றிகரமாக அமைந்துள்ளன என்றும், 43 பேரிடம் கடந்த 7 மாதங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்பிரின் மாத்திரை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் இதில் இல்லை என்று தெரியவந்திருப்பதாக இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானி ஸ்டீபன் மூன் தெவித்துள்ளார்.

ஆஸ்பிரின் உட்கொள்வதால் அல்சர் மற்றும் வயிற்றில் ரத்தப் போக்கு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. ஃப்ரூட்ஃப் ளோவில் இந்தப் பிரச்சினை எதுவுமே கிடையாது

படம் வரையும் திமிங்கலம்
சீனாவில் அருங்காட்சியகம் ஒன்றில் வளர்க்கப்பட்டு வரும் திமிங்கலத்தின் ஓவியத் திறன் பார்வையாளர்களையெல்லாம் வியப்பில் ஆழ்த்தி வருகிறதாம். அந்த திமிங்கலம் தனது வாயால் தூரிகையை கவ்வி பிடித்துக்கொண்டு வண்ண மயமான ஓவியங்களை தீட்டி வருகிறதாம்.
காட்சியை பார்ப்பதற்காகவே என்று பார்வையாளர்கள் அந்த அருங்காட்சியகத்துக்கு வருகை தருகின்றனராம். டால்பின் போன்ற மீன்கள் இத்தகைய திறமையை பெற்றிருந்தாலும் ஒரு திமிங்கலம் ஓவியம் வரைவது மிகுந்த வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த திமிங்கலத்துக்கு அதன் வசிப்பிடமான கடலைப் போன்ற நீல நிறம் மிகவும் பிடித்தமானதாக இருக்கிறதாம்.

சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று


ந‌ம்‌மி‌ல் பல‌ர், ‌சிறு‌நீ‌ர்‌ப் பாதை நோ‌ய்‌த் தொ‌ற்றை‌ப் ப‌ற்‌றி கே‌ள்‌வி‌ப் ப‌ட்டிரு‌ப்போ‌ம் அ‌ல்லது அ‌ந்த நோ‌யி‌ன் பா‌தி‌ப்பை உண‌ர்‌ந்‌திரு‌ப்போ‌ம். அதனா‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைக‌ள் எ‌ன்னெ‌ன்ன, பா‌தி‌ப்பு எ‌ப்படி ஏ‌ற்படு‌கிறது எ‌‌ன்பது ப‌ற்‌றி இ‌ங்கு‌ ‌வி‌ரிவாக கா‌ண்போ‌ம்.

நம் உடலிலிருந்து ‌தேவைய‌ற்ற தாது உ‌ப்பு‌க்களை சிறு‌நீரக‌ம் ‌சிறு‌நீ‌ர் மூலமாக வெ‌ளியே‌ற்று‌கிறது. நா‌ம் உ‌ண்ணு‌ம் உண‌வி‌ன் மூலமாக நமது உட‌லி‌ல் சேரு‌ம் அ‌திக‌ப்படியான உப்புகள் மற்றும் கழிவுகள் மட்டுமே ‌சிறு‌நீ‌ரி‌ல் கல‌ந்து இருக்கும். எனவே, ‌‌சிறு‌நீ‌ர்‌ப் பை‌யி‌ல் அ‌ல்லது ‌சிறு‌நீரக‌ப் பாதை‌யி‌ல் தொ‌ற்று ஏ‌ற்படு‌‌கிறது எ‌ன்றா‌ல், அது வெ‌ளி‌யி‌ல் இரு‌ந்து செ‌ல்லு‌ம் ‌கிரு‌மிகளா‌ல்தா‌ன் ஏ‌ற்படு‌ம்.

ஜீரணப் பாதையில் உள்ள சில பாக்டீரியாக்களாலும் சிறுநீர் வெளியேறும் குழாயில் தொற்று ஏற்படுவதாலும் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று ஏற்படுகிறது. இதற்கு ஆங்கிலத்தில் சுருக்கமாக யூடிஐ - யூரினரி டிராக்ட் இன்ஃபக்ஷன் என்று பெயர்.

‌பிற‌ப்புறு‌ப்பை சு‌த்தமாக வை‌த்து‌க் கொ‌ள்ளாம‌ல் இரு‌‌ப்பவ‌ர்களு‌க்கு, பு‌திதாக ‌திருமணமான பெ‌ண்க‌‌ளி‌ல் ‌சிலரு‌க்கு, வேறு ‌சில நோ‌ய்‌க் கார‌ணிகளா‌ல் ‌சிறு‌நீ‌ர்‌ப் பாதை தொ‌ற்று ஏ‌ற்படு‌கிறது.

மலக் குடலில் உள்ள ஒரு வகை பாக்டீரியாவால்தான் ("ஈகோலி') பெரும்பாலும் நோய்த் தொற்று ஏற்படுகிறது. சிறுநீர்ப் பாதையிலும் சரி, சிறுநீர்ப் பையிலும் சரி பாக்டீரியாக்களால் நோய்த்தொற்று ஏற்படும் வா‌ய்‌ப்பு பெ‌ண்களு‌க்கு அ‌திகமாக உ‌ள்ளது.

பெரும்பாலானவர்களுக்கு மலக்குடலில் இருந்து பாக்டீரியா முதலில் சிறுநீர் வெளியேறும் குழாய்க்குச் செல்லும். பாக்டீரியா பெருகும்போது நோய்த்தொற்‌றி‌ன் அ‌றிகு‌றி தெ‌ரிய வரு‌ம்.

சிறுநீரகத்தில் கல் இருப்பவர்களுக்கு, புராஸ்டேட் சுரப்பி விரிவடைந்தவர்களுக்கு சிறுநீர் முறையாக வெளியாகாது. அதனால் நோய்த்தொற்று தீவிரமடைய வாய்ப்பு அதிகம்.

இத்தகைய நோய்த்தொற்று காரணமாக பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியை உணர்தல், எரிச்சல், பெண்களுக்கு இடுப்பு எலும்புகளில் வ‌லி போ‌ன்றவை ஏ‌ற்படு‌ம். இவை ‌சிறு‌நீ‌ர்‌ப்பாதை நோ‌ய்‌த் தொ‌ற்‌றி‌ன் அ‌றிகு‌றிகளாகு‌ம். இ‌தி‌ல் ஒரு அ‌றிகு‌றி ம‌ட்டுமே ‌சிலரு‌க்கு இரு‌க்கலா‌ம். ‌சிலரு‌க்கு இ‌தி‌ல் எ‌ல்லா அ‌றிகு‌றிகளு‌ம் இரு‌க்கலா‌ம்.

ஆ‌ண்களு‌க்கு குறை‌ந்தப‌ட்சமாகவே ‌சிறு‌நீ‌ர்‌ப் பாதை தொ‌ற்று ஏ‌ற்படு‌கிறது. மலக்குடல் நிறைந்திருப்பது போன்ற உணர்வு போன்றவற்றை ஆ‌ண்க‌ள் இ‌ந்நோ‌ய்‌க்கான அறிகுறியாக உணரலாம்.
இ‌ந்நோ‌யை ஆர‌ம்ப‌த்‌தி‌ல் க‌ண்ட‌றி‌ந்து உடனடியாக ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌ப்பத‌ன் மூல‌ம், நோ‌ய்‌த் தொ‌ற்றை குண‌ப்படு‌த்துவது எ‌ளிது. ஆனா‌ல் இதனை‌க் கவ‌னி‌க்காம‌ல் ‌வி‌ட்டா‌ல், ‌சிறு‌நீ‌ரி‌ல் ர‌த்த‌ம் வெ‌ளியேறுவது‌ம், கடுமையான கு‌ளி‌ர்‌க் கா‌ய்‌ச்சலு‌ம் ஏ‌ற்பட‌க் கூடு‌ம்.

இ‌ந்நோ‌ய் பா‌தி‌த்தவ‌ர்க‌ளி‌ன் சிறுநீரைப் பரிசோதித்தால் அதில் வெள்ளை, சிவப்பு அணுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் இருக்கும். பாக்டீரியாவை அழிக்க மருந்து கொடுக்க‌ப்படு‌ம். தொற்றின் தீவிரத்தைப் பொருத்து, மருந்து வகை, அளவு, காலம் நிர்ணயிக்க‌ப்படு‌கிறது. சாதாரண தொற்றுக்கு இரண்டு நா‌ட்களுக்கு மருந்துகள் சாப்பிட்டாலே போதும். அ‌திக‌‌ப்படியான த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்துவது நோ‌ய்‌த் தொ‌ற்றை ‌விரை‌வி‌ல் குண‌ப்படு‌த்த உதவு‌ம். காரமான உணவை‌த் த‌வி‌ர்‌ப்பது, சூடான‌ப் பொரு‌ட்களை த‌வி‌ர்‌ப்பது ந‌ல்லது.

இள‌நீ‌ர், மோ‌ர் போ‌ன்றவ‌ற்றை அரு‌ந்‌தி வருவது‌ம் ‌விரை‌வி‌ல் ந‌ல‌ம்பெற வ‌ழி வகு‌க்கு‌ம். எ‌ளிதான உணவுக‌ள், பழ‌ங்க‌ள் போ‌ன்றவ‌ற்றை நோ‌ய்‌த் தொ‌ற்று ஏ‌ற்ப‌ட்ட சமய‌த்‌தி‌ல் உ‌‌ட்கொ‌ள்வது உட‌ல் நல‌த்தை கூ‌ட்டு‌ம்.
‌சிக்கலான நோய்த்தொற்றாக இருந்தால் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை சுமார் இரண்டு வாரம் சாப்பிட வேண்டியிருக்கும்.

‌சில கருவு‌ற்ற தா‌ய்மா‌ர்களு‌க்கு‌ம் ‌சிறு‌நீ‌ர்‌ப் பாதை தொ‌ற்று நோ‌ய் ஏ‌ற்படு‌கிறது. இ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு மரு‌ந்து கொடு‌க்காம‌ல், உட‌லி‌ல் நர‌ம்புக‌ள் வ‌ழியாக குளு‌க்கோ‌ஸ் ‌நீரை ஏ‌ற்‌றி, அ‌வ்வ‌ப்போது ‌சிறு‌நீ‌ர் க‌ழி‌க்கு‌ம் வகை‌யி‌ல் ‌சிறு‌நீ‌ர்‌ப் பாதையை சு‌த்த‌ம் செ‌ய்யு‌ம் முறை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது.

பொதுவாக ‌சிறு‌நீ‌‌ர்‌ப் பாதை ‌கிரு‌மி‌த் தொ‌ற்று ஏ‌ற்ப‌ட்டவ‌ர்களு‌க்கு க‌ல்‌ச்சுர‌ல் டெ‌ஸ்‌ட் எ‌ன்ற ப‌ரிசோதனையு‌ம் செ‌ய்ய‌ப்படு‌கிறது. அதாவது, ‌கிரு‌மி‌த் தொ‌ற்று வெ‌ளி‌யி‌ல் இரு‌ந்து ஏ‌ற்ப‌ட்டதா? அ‌ல்லது ‌சிறு‌நீ‌ர்‌ப் பை‌யி‌ல் ‌கிரு‌மி‌த் தொ‌ற்றை ஏ‌ற்படு‌த்த‌க் கூடிய அ‌ல்லது ‌கிரு‌மி‌த் தொ‌ற்றா‌ல் பா‌தி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா எ‌ன்பதை அ‌றிவத‌ற்காக இ‌ந்த ப‌ரிசோதனை செ‌ய்ய‌ப்படு‌ம். அ‌தி‌ல் ‌சிறு‌நீ‌ர்‌ப் பை‌யி‌ல் ஏதேனு‌ம் பா‌தி‌ப்பு எ‌ன்றா‌ல் கூடுத‌ல் ‌சி‌கி‌ச்சை‌த் தேவை‌ப்படு‌ம்.

ஒரு முறை ‌சிறு‌நீ‌ர் தொ‌ற்று ஏ‌ற்ப‌ட்டா‌ல், அடு‌த்த முறை லேசாக வ‌லி இரு‌க்கு‌ம் போதே மரு‌த்துவரை அணுகுவது ந‌ல்லது. உடலு‌க்கு‌த் தேவையான அளவு த‌ண்‌ணீ‌ர் குடி‌த்து வருவது இ‌ந்நோ‌யி‌ல் இரு‌ந்து ந‌ம்மை‌க் கா‌த்து‌க் கொ‌ள்ள உதவு‌ம்.

ஏடிஎம் (ATM) இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மரணம்


உலகின் முதல் தானியங்கி முறையில் பணம் வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்த ஷெப்பர்ட் பேரோன் (John Shepherd-Barron) மரணமடைந்தார்.

ஸ்காட்லாந்தை சேர்ந்த ஷெப்பர்ட் பேரோன் (84) உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணம் அடைந்தார்.

அவருக்கு மனைவியும், 3 மகன்களும், 6 பேரன் பேத்திகளும் உள்ளனர்.

வங்கியில் இருக்கும் நமது சொந்த பணத்தை, வங்கி அலுவலக நேரத்திற்காக காத்திராமல் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எடுத்துக்கொள்ளும் வசதியை கொண்டுள்ள ஏடிஎம் இயந்திரத்தை ஷெப்பர்ட் பேரோன் கண்டுபிடித்ததே சுவராஸ்யமானது.

ஒருமுறை வங்கியின் வேலை நேரம் முடிந்து விட்டதால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. தன்னுடைய சொந்த பணத்தை தேவையான நேரத்தில் எடுக்க முடியாமல் போய்விட்டதே என அவர் மிகவும் மனவேதனை அடைந்தார்.

தன்னுடைய வங்கி கணக்கில் உள்ள பணத்தை தான் விரும்பிய நேரத்தில் எடுப்பதற்கு ஒரு வழி இருந்தால் என்ன என்று அவர் அப்போது யோசித்தார்.

அவர் அவ்வாறு யோசித்துக் கொண்டிருக்கும்போது, தானியங்கி எந்திரம் மூலமாக சாக்லேட்டுகளை வழங்கும் இயந்திரத்தை பார்த்தார். இதேபோன்று பணத்தை வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தின் மாதிரியை வெற்றிகரமாக உருவாக்கினார்.

இவர் உருவாக்கிய ஏடிஎம் மாதிரி இயந்திரம், கடந்த 1967 ஆம் ஆண்டில் வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது.
வாடிக்கையாளர்களிடையே இந்த ஏடிஎம் இயந்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது உள்ளதுபோல ஏடிஎம் கார்டுகள் உருவாக்கப்படவில்லை. அதற்கு பதிலாக சிறப்பு காசோலைகள் பயன்படுத்தப்பட்டன.

காசோலைகளை இயந்திரத்தில் வைப்பதற்கு முன்பாக அடையாள எண்ணை தெரிவிக்க வேண்டும். முதலில் ஷெப்பர்டு 10 இலக்கம் கொண்ட அடையாள எண்ணை( PIN number) உருவாக்கினார்.

ஆனால் அவற்றை நினைவில் கொள்வதில் தனக்கு சிரமம் ஏற்பட்டதே போன்றே, தமது மனைவியும் புகார் கூறியதையடுத்து அதனை 4 இலக்கம் கொண்டதாக மாற்றினார்.

அவர் அன்ற் உருவாக்கிய அதே நடைமுறைதான் இன்றுவரை தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது