சனி, 24 ஜூலை, 2010

பெண்ணின் வயிற்றில் 2 கர்ப்ப பைகள் இரட்டை குழந்தைகள


அமெரிக்காவில் உள்ள சால்ட் லேக் சிட்டியை சேர்ந்தவர் ஜோயல், இவரது மனைவி ஏஞ்சல் குரோமர் (Angie Cromar வயது 34).


இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஏஞ்சல் குரோமர் மீண்டும் கர்ப்பமானார்.

இதையடுத்து ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவர் வயிற்றில் 2 குழந்தைகள் இருப்பது தெரிந்தது. ஆனால் 2 குழந்தைகளும் தனித்தனி கர்ப்பபையில் இருந்தன. அதாவது ஏஞ்சலுக்கு 2 கர்ப்பபை இருந்துள்ளது. இரண்டிலும் கர்ப்பமாகி உள்ளார்.

இந்த கர்ப்பம் ஒரே நேரத்தில் ஏற்படவில்லை. வெவ்வேறு நேரத்தில் அவர் கர்ப்பமாகி உள்ளார்.

பெண்களுக்கு 50 லட்சம் பேரில் ஒருவருக்கு இதே போல கர்ப்பபை இருக்க வாய்ப்பு உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உலகில் இதுவரை 100 பெண்களுக்கு இதேபோல இரட்டை கர்ப்பங்கள் ஏற்பட்டு உள்ளன.


2 குழந்தைகளும் தனித்தனி கர்ப்பபையில் வளர்வதாலும், வெவ்வேறு நேரத்தில் கர்ப்பமாகி இருப்பதாலும் குழந்தை வளரும்போது இதில் ஏதேனும் ஒரு குழந்தைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே என்ன செய்யலாம் என்று டாக்டர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்

புதன், 21 ஜூலை, 2010

கணினி வைரஸ்


கணினி வைரஸ் என்று சொல்லப்படுபவை கணினி யின் செயற்பாட்டை மோச மான வகையில் பாதிக்கக் கூடிய சிறிய புரோகிராம்கள் ஆகும்.

கணினியின் செயற்பாடுகளுக்கு ஆதாரமானவை புரோகிராம்கள் தானே? சரி, புரோகிராம்கள் என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட வகையில் செயல்பட வேண்டு மென்று நாம் கணினிக்குக் கொடுக்கின்ற கட்டளைகளின் தொகுப்புதான் புரோகிராம் எனப்படுகிறது. இந்தக் கட்டளை க்கு ஏற்றபடிதான் கணினி செயற்பட்டு நமக்குத் தேவையான பயன்களைத் தருகிறது.

ஒரு புரோகிராம் கிடைத்தால் அதற்கேற்ற வகையில் செயல்படு வதுதான் கணினியின் நியதி. அந்தப் புரோகிராம் எப்படிக் கிடைக்கிறது. அது என்ன செய்யச் சொல்கிறது போன்ற விஷயங்க ளைக் கணினி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தன்னையே அழிப்பதற்கான ஒரு புரோகிராம் கிடைத்தாலும் கணினி அதை நடைமுறைப் படுத்தும்.

கம்ப்யூட்டரின் இந்த பலவீனத் தைப் பயன்படுத்திக் கொண்டு தொல்லை தரும் புரோகிராம் களைத் திணித்தால் அவற்றைத் தான் நாம் கணினி வைரஸ் என்கிறோம். மனித உடலின் எதிர்ப்புச் சக்தியின் பலவீனத்தை நோய் வைரஸ்கள் பயன்படுத்திக் கொள்வதும் இப்படித்தான். கணினியைப் பயன்படுத்துபவரின் நோக்கத்திற்கு விரோதமாக கம்ப்யூட்டரைச் செயற்பட வைக்கின்றன அந்த வைரஸ்கள்.

இவை கணினியின் உள்ளே பாது காக்கப்பட்டிருக்கின்ற விபரங்களை அழித்துவிடும். அல்லது கணினி யின் செயல்பாட்டையே தாறுமா றாக்கி விடும். இப்படிப்பட்ட பெரிய தீமைகளைச் செய்யாமல், சிறிய தீமைகளைச் செய்கின்ற வைரஸ்களும் உண்டு. இவ்வகை யான வைரஸ்கள், கணினியைப் பயன்படுத்துபவர்களைக் கேலி கிண்டல் செய்வது, அவர்களின் நேரத்தை விரயமாக்குவது போன்ற சாதாரண தொந்தரவுகளைக் கொடுக்கின்றன.

ஒரு மனித உடலிலிருந்து மற்றொரு உடலுக்கு சாதாரண வைரஸ்கள் பரவுவது போல கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு இந்த வைரஸ்களும் பரவுகின்றன. இன்றைய கணினி கள் எல்லாம் தொலைபேசி கேபிள்கள் மூலமாகவோ, செயற் கைக் கோள்கள் மூலமாகவோ ஒன்றோடொன்று தொடர்புடைய வையாக இருக்கின்றன.

இந்த வலைப்பின்னல் அமைப்பில் ஏதேனும் ஒன்றைப் பாதிக்கிற வைரஸ், தொடரந்து சம்பந்தப் பட்ட மற்ற கம்ப்யூட்டர்களுக்கும் பரவும். அப்படி ஒரு வலைப் பின்னல் அமைப்பையே முற்றாக அழிக்கக்கூடிய வலிமைகொண்டவை இந்த வைரஸ்கள். எனவேதான் இத்தகைய வைரஸ்களை ஏவுவது என்பது சட்ட விரோதமான குற்றச் செயலாக, ‘சைபர் கிரைம்’ எனும் பெயரில் குறிக்கப்படுகிறது.

முழுவதுமாக கம்ப்யூட்டரைச் சார்ந்து வாழ்கிற ஒரு சமூகத்தையே இந்த வைரஸ்கள் ஸ்தம்பிக்கச் செய்துவிடும். வைரஸ்கள் மூலமா கக் கம்ப்யூட்டர்களை ஏமாற்றி கோடிக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்யவும் முடியும். வைரஸ்களைத் தடுப்பதற்கு பலவிதமான பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன.

அவற்றில் முக்கியமானது, வைரஸ்களைக் கண்டுபிடிக்கவும் அழிக்கவும் திறனுடைய புரோகிராம்களை கம்ப்யூட்டரில் பாதுகாப்பது என்பதுதான். இத்தகைய புரோ கிராம்களால் சில வகைப்பட்ட வைரஸ்களைக் கண்டுபிடித்து அழிக்க முடியும். ஆனால் தினந்தோறும் வெளிவருகின்ற புதுப்புது வைரஸ்களை இந்தப் பழைய புரோகிராம்களால் ஏதும் செய்ய இயலாது.

பழைய புரோகிராம்களை புதுப்பித்துக் கொண்டிருக்கும் போதே மீண்டும் புதிய வைரஸ்கள் தோன்றியிருக் கும். மற்றொரு பாதுகாப்பு முறையும் கையாளப்படுகிறது. உண்மையான பயன்படுத்துபவ ரைத் தவிர மற்ற யாரும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முடியாதபடி இருக்கும் இந்த முறை. ஆனால் இது கம்ப்யூட்டர் பயன்படும் எல்லாத் துறைகளுக் கும் ஏற்ற முறையாக இல்லை.

மனிதர் உருவாக்கிய முதல் சாய்ந்த கோபுரம்

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள கபிடல் கேட் என்ற 160 மீட்டர் உயரமுடைய கட்டடம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் முதன்மையான சாய்ந்த நிலைக் கோபுரம் என்ற சாதனைக்காக, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் தான் உலகிலேயே மிகவும் சாய்வாக உள்ள கோபுரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அபுதாபியில், அபுதாபி நஷனல் எக்ஸிபிஷன் நிறுவனம் சார்பில் சாய்ந்த நிலையிலான கட்டத்தைக் கட்டும் பணி தொடங்கப் பட்டது. இதற்கு கபிடல் கேட் என பெயரிடப்பட்டது.

160 மீட்டர் உயரமுடைய இந்தக் கட்டடம், 35 மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டடம் 18 பாகை அளவுக்கு சாய்ந்த நிலையில் கட்டப்பட்டுள்ளது.

இது பைசா கோபுரத்தின் சாய்வை விட நான்கு மடங்கு அதிகம் (பைசா கோபுரத்தின் சாய்வு 3.99 பாகை) இந்தக் கட்டடத்தின் 12 மாடிகள், செங்குததாக உள்ளன. அதற்கு அடுத்த நிலையில் உள்ள மாடிகள் படிப்படியாக சிறிய அளவில், சாய்ந்த வகையில் கட்டப்பட்டுள்ளன. கடந்த ஜனவரியில் இந்தக் கட்டடத்தின் வெளிப்புறத் தோற்றம் கட்டி முடிக்கப்பட்ட போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

இதை கட்டுவதற்கு 10 ஆயிரம் தொன் இரும்புப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஐந்து நட்சத்திர ஓட்டல் மற்றும் அலுவலகங்கள் இதில் இயங்கவுள்ளன.

நீரினால் இயங்கும் பற்றரி

ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த ஹிஷிவி TSC (Total System Condector) என்ற நிறுவனத்தின் தலைவர் Susumu Suzuki என்பவர் நீரினால் இயங்கக் கூடிய பற்றரியைக் கண்டுபிடித்துள்ளார். இக்கண்டுபிடிப்பினை அடுத்த தலைமுறைக்கு பொருந்தக்கூடிய இயற்கைத் தோழமையுள்ள புதிய பற்றரி என்று குறிப்பிடுகின்றார்.

இந்த பற்றரியானது நீரினால் இயங்கினாலும் இதன் பின் மின்னுற்பத்தித் திறன் சாதாரண மங்கனீசீரொட்சைட்டு எனப்படும் மூலகத்தைக் கொண்ட பற்றரிகளை மிகவும் ஒத்ததாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த பற்றரியை உருவாக்குவதற்கு குறைவான செலவே ஆவதோடு, இதனைப் பல தடவைகள் மீள் சுழற்சி செய்தும் பயன்படுத்த முடியுமென இக்கண்டுபிடிப்பாளர் குறிப்பிடுகின்றார். நீரினால் கார்கள் ஓடினால் எப்படியிருக்கும்? சில வேளைகளில் சாத்தியமாகுமோ? எண்ணவே முடியவில்லை...

கறுப்பு இன தம்பதியருக்கு பிறந்த வெள்ளைக்குழந்தை

வெண்ணிற மேனி , பொன்னிற தலைமுடி மற்றும் நீல நிறக் கண்களுடன் பிரித்தானியாவில் உள்ள Ben and Angela Ihegboro நைஜீரியா தம்பதியினருக்கு பிறந்துள்ள பெண் குழந்தை மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வெள்ளி, 16 ஜூலை, 2010

கடற்கன்னியின் உண்மை நிழற்படம்!

உலகில் கடற்கன்னி தொடர்பாக பல கற்பனைக் கதைகளைக் கேள்வியூற்ற போதிலும் அவ்வாறான ஒரு உருவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதற்தடவையாகும்.முத்துத் தீவிற்கு சென்றிருந்த உல்லாசப் பயணிகள் எதிர்பாராதவிதமாக இந்த உருவத்தைக் கண்டதும் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறியூள்ளனர்.
விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வூகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதன், 14 ஜூலை, 2010

இரண்டு தலைகளுடன் கூடிய கன்றுக் குட்டி!


எகிப்தில் இரண்டு தலைகளுடன் கூடிய கன்றுக்குட்டி ஒன்று கடந்த வாரம் பிறந்துள்ளது. இக்கன்றுக் குட்டிக்கு ஒவ்வொரு தலையிலும் இரண்டு கண்கள், வாய் போன்ற உறுப்புகள் முழுமையாகவே உண்டு. தலைகளின் பாரம் காரணமாக கன்றுக்குட்டி இன்னும் எழுந்து நடமாட முடியவில்லை.

ஆயினும் இது ஆரோக்கியமாகவே உள்ளது. இதற்கு புட்டியில் பால் பருக்கப்படுகின்றது. கன்றுக் குட்டியின் உரிமையாளரான விவசாயி இது ஒரு தெய்வ அதிசயம் என்று வர்ணிக்கின்றார்.

பெண்கள் பூப்படையும் வயது குறைந்து கொண்டே செல்கிறதாம்

பெண்கள் பூப்படையும் வயது குறைந்து கொண்டே செல்கிறதாம்! ஆய்வில் தகவல், ஆபத்து நேரும் என்று எச்சரிக்கை

பெண்கள் பூப்படையும் வயது உலகளாவிய ரீதியில் குறைந்து கொண்டே செல்கின்றது என்றும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் பொதுவாக 10 வயதுக்குள் பூப்படைந்து விடுவார்கள் என்று டென்மார்க்கில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞான ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வருகிறது. இந்தக் கணிப்பீட்டு முடிவு பிரித்தானியாவுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20 ஆண்டு காலபகுதிக்குள் இந்நிலை நிச்சயம் ஏற்பட்டு விடும் அந்த ஆய்வு அடித்துக் கூறுகின்றது. சிறுமிகளின் மார்பக வளர்ச்சி 9 வயது 10மாதங்களில் தற்போது ஆரம்பமாகி விடுகிறது என்றும் 1991 களில் சிறுமிகளின் மார்பக வளர்ச்சி 10 வயது 10 மாதங்களில் இடம்பெற்றிருக்கின்றது என்றும் அந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.

இந்நிலையில் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் 10 வயதுக்குள்ளாகவே பாலியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கக் கூடிய அபாயம் காணப்படுகிறது என்று ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள். சின்ன வயதில் பூப்படைகின்றமை புற்று நோய் ஏற்படக் காரணம் ஆகி விடும் என்றும் அவர்கள் கூறி உள்ளார்கள்.

அத்துடன் இதயம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் காரணமாகக் கூடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். சின்ன வயதில் அவர்கள் பருவம் அடைகின்றமை கட்டிளம் பருவக் காலப் பிரச்சினைகளை முன்கூட்டியே அவர்கள் எதிர்கொள்கின்ற நிலையை ஏற்படுத்தி விடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

உணவில் கலந்திருக்கும் இரசாயனப் பொருட்களின் தாக்கத்தாலேயே பெண்கள் பூப்படையும் வயது உலகளாவிய ரீதியில் குறைந்து கொண்டு செல்கின்றது என்று ஆய்வில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அத்துடன் பெண்கள் அதிக அளவில் சாப்பிடுகின்றமையும் இதற்கு இன்னொரு காரணம் ஆக இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது

களைகட்டிய நித்யானந்தா ஆசிரமம் - நடிகை உட்பட பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்புசாமியார் நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சி வெளியானதை தொடர்ந்து அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதில் கைதான நித்யானந்தாவுக்கு கோர்ட்டு வழங்கிய நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன. பிடதி ஆச்சிரமத்தில் தங்கலாம், மத பிரசங்கம் செய்யலாம், நகரை விட்டு வெளியே பிரசங்கம் செய்ய சென்றால் போலீசில் தகவல் தெரிவித்துவிட்டு செல்லலாம் என்று கோர்ட்டு அறிவித்தது.

இதனால் நித்யானந்தாவும் அவரது பக்தர்களும் உற்சாகம் அடைந்தனர். உடனடியாக அவரது பிரசங்கத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

பிடதி ஆச்சிரமத்தின் அரங்கில் சொற்பொழிவு நடந்தது. மாலை 6 மணிக்கு நித்யானந்தா தனது உரையை தொடங்கினார். “சுதந்திரம்” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் பேசினார்.

அவரது பேச்சை கேட்க ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்தனர். அவர் உணர்ச்சி பூர்வமாக பேசியதும் பக்தர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

அவர் தனது சொற்பொழிவில் கூறியதாவது:-

எனது பக்தர்கள் அகிம்சை வழியில் செயற்பட்டதால் தான் என்னால் வெற்றி பெற முடிந்தது. அகிம்சை வழியை பின்பற்றினால் உங்களை எதுவும் செய்ய முடியாது.

ஒருவருக்கு நீதி சொல்லும் அதிகாரம் இருந்தாலும் கடவுளின் தீர்ப்பே இறுதியானது. கடவுளின் முடிவுக்கு யாரும் தீர்ப்பு சொல்ல முடியாது.

நீதிபதிகள் கடவுளாக முடியாது. நீ துன்பப்படும் போது உடனே மற்றவர்கனை எதிரியாக பார்க்க கூடாது. பகைமையில் இருந்து சுதந்திரம் பெறுவதே உயர்ந்த சுதந்திரம், கண்ணுக்கு கண்ணை எடுக்க வேண்டும் என்று விரும்பினால் ஒட்டு மொத்த உலகமே குருடாகி விடும் துன்பம் வாழ்க்கையில் வரும் போது அதை வெற்றிகரமாக எதிர் கொள்ள வேண்டும்.

நான் சிறையில் இருந்த போதும் என் ஆன்மா வெளியேதான் சுற்றியது. மக்களின் அழைப்புகளுக்கு பதில் கூறினேன். சிறையில் இருந்ததாகவே நினைக்க வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நித்யானந்தா 1 1/2மணி நேரம் பேசினார். 80 நாட்களுக்கு பிறகு நித்யானந்தா முதன் முதலில் பக்தர்கள் முன் பிரசங்கம் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஆசிரமத்துக்கு ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் ஆசிரமம் களை கட்டியது. பிரசங்கம் முடிந்ததும் நடிகை மாளவிகா உள்பட ஏராளமான பக்தர்கள் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

சாமியார் நித்யானந்தா எந்தவிதமான சலனமும் இல்லாமல் வழக்கமான புன்னகையுடன் சொற்பொழிவை நிகழ்த்தினார். தொடர்ந்து முன்பு போல் வெளியூர்களிலும் பிரசங்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை அவரது சீடர்கள் செய்து வருகிறார்கள்.

'கூகுள் மீ' : கூகுள் இணையத்தளத்தின் இரகசிய உருவாக்கம்உலகில் பிரபல்யமான தேடு இணையத்தளமான கூகுள் இணையத்தளம், 'கூகுள் மீ' (Google Me) என்ற சமூக இணையத்தளம் ஒன்றை இரகசியமாக உருவாக்கி வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

சமூக இணையத்தள கண்டுபிடிப்புக்களில் பிரபலம்பெற்ற எடம் டி ஏஞ்சலோ (Adam D'Angelo) கருத்து தெரிவிக்கையில், நம்ப தகுந்த வட்டாரங்களில் கிடைக்கப் பெற்ற உண்மையான தகவல் இது எனத் தெரிவித்துள்ளார்..

டுவீட்டர் இணையத்தளத்தைப் போன்று 'கூகுள் பஸ்' (Google Buzz) என்ற இணையத்தளம் முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த கூகுள் பஸ் (Google Buzz) ஊடாக ஜீமெயில் மின்னஞ்சலை பாவிக்கும் ஒருவர், தனக்கு தேவையான புகைப்படங்கள், ஒளிப்பதிவுகள் போன்றவற்றை இதன் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும்..

கூகுள் நிறுவனமானது ஏற்கனவே ஒர்கியூட் ( Orkut) என்ற சமூக இணையத்தளத்தையும் உருவாக்கி இருந்தது. இது 2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த ஒர்கியூட் ( Orkut) இணையத்தளம் இந்தியா, பிரேஸில் ஆகிய நாடுகளில் பிரபல்யம் பெற்றது. ஆனால் இது ஒரு சாதாரண காரியமல்ல எனவும் இது ஒரு சவால்மிக்க பீடம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

செவ்வாய், 6 ஜூலை, 2010

தன்னை விட அதிக எடையை சுமக்கும் எறும்புதன் எடையை விட அதிக எடையுள்ள பொருட்களை, அசையாமல் எறும்புகள் சுமந்து செல்வது எப்படி என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.

உழைப்புக்கும், சேமிப்புக்கும் உதாரணமாக கூறப்படும் உயினம் எறும்பு. இது தன் உடல் எடையைவிட பல மடங்கு அதிக எடையை சுமந்து செல்லும் தனிச்சிறப்பு கொண்டது. இதுகுறித்து, பிரிட்டன் கேம் பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
அதாவது, ஒரு புல் துண்டையும், பேப்பரில் இலைபோன்று செய்து அதை தோடம்பழச்சாறில் ஊறவைத்து எறும்பை எடுத்துச் செல்ல செய்தனர். பின், அது செல்லும் தூரத்தையும், விதத்தையும் ஆய்வு செய்தனர்.

முதலில், மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் செங்குத்தான மற்றும் சரிவான பொருட்களின் மீது ஏறி, இறங்கச் செய்தனர்.

பின், பக்கவாட்டில் ஊர்ந்து போகச்செய்து ஆய்வு செய்தனர். அதில், எறும்புகள் தன்னைவிட அதிக எடையுள்ள பொருட்களை அசையாமல் கொண்டு செல்வதற்கு, அதன் கழுத்தும், தலையும் உதவுகின்றன என்பது தெரியவந்தது.

எறும்பின் கழுத்தும் தலையும் இணையும் இடத்தில், “ஸ்பிரிங்' போன்ற அமைப்பு உள்ளது. இதன் மூலம், தன்னை விட நீண்ட, அதிக எடைகொண்ட பொருட்களை எறும்புகள் சுமக்கும் போது, எந்த கோணத்தில் அவை சென்றாலும், அதற்கேற்ற வகையில், தனது தலையின் நிலையை மாற்றி அமைத்துக் கொள்கிறது. இதனால், அது வைத்திருக்கும் பொருட்களில் நிலைமாறாமலும், கீழே விழாமலும் இருக்கிறது.

இரையை சுமக்கும் போதும் இதே முறையைத்தான் எறும்புகள் கையாளுகின்றன.

இதுதொடர்பாக, ஆய்வாளர்கள் கூறுகையில், எறும்பு களின் கழுத்து இணைப்பின் மூலம் மிக எளிதாக தனது சுமைகளை கோணம் மாற்றி வைத்துக் கொண்டு எளிதாக பயணம் செய்கின்றன என்று தெவித்துள்ளனர்.

பால் பற்றிய உண்மை...கலப்படமற்ற பாலை பற்றி மக்கள் மத்தியில் சில கட்டுக் கதைகளும் உலவுகின்றன.

அவை பற்றி சில உண்மைகள் இங்கே:

கட்டுக்கதை: காய்ச்சிய பாலை விட, காய்ச்சாத பாலில் அதிகச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

உண்மை: பாலை காய்ச்சும் போது, அதிலுள்ள ஊட்டச் சத்துக்கள் எதுவும் குறைவதில்லை. பாலில் காணப்படும் சில நுண்ணுயிர்களை கொல்வதற்காக, 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சூடாக்கப்படுகிறது.

எனவே, காய்ச்சிய பாலை குடிப்பதால், தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்பதால், அவை மிகவும் பாதுகாப்பானது.

கட்டுக்கதை: பாலில் தண்ணீர் சேர்ப்பதால், அதில் காணப்படும் கொழுப்புத் தன்மை குறைக்கப்படுகிறது.

உண்மை: பாலில் தண்ணீர் சேர்ப்பதால் அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் நீர்க்கின்றன.
இதனால், ஊட்டச்சத்து அடர்த்தியும் குறைகிறது.

கட்டுக்கதை: கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் ஊட்டச்சத்து இல்லை.

உண்மை: கொழுப்பு நீக்கப்பட்ட பால் குறைந்த கலோரிகளுடன், சிறப்பு ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக உள்ளது.

கட்டுக்கதை: பால் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு பால் பொருள்கள் தீங்கு விளைவிக்கும்.

உண்மை: பால் ஒவ்வாமை இருப்பவர்கள், பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஆனால் வெண்ணெய், தயிர், மோர் ஆகியவற்றை சாப்பிடலாம்.

கட்டுக்கதை: பிற பொருள்களிலும் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால், பால் பொருள்களை கைவிடலாமா?

உண்மை: பாலில் அதிகளவு கால்சியம் சத்து நிறைந்துள்ளது.
இதைத் தவிர புரதச்சத்து, மாக்னீசியம், பாஸ்பரஸ், சிங்க் மற்றும் வைட்டமின் “ஏ' ஆகிய க்கிய சத்துக்களும் காணப்படுகின்றன. தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் கீரைகளில் காணப்படும் கால்சியம் சத்தைவிட பாலில் இருக்கும் கால்சியம் சத்து சிறப்பாக கிரகிக்கப்படுகிறது.

கட்டுக்கதை: பால் ஒரு முழுமையான உணவு.

உண்மை: பாலில் இரும்புச்சத்து, வைட்டமின் சி.டி.இ. மற்றும் கே.ஆகிய சத்துக்கள் பற்றாக்குறையாக இருப்பதால், பாலை ழுமையான உணவாக கூற முடியாது.

கட்டுக்கதை: குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் பாலை விட, பசும்பால் சிறந்தது.

உண்மை: ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களுக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பாலே சிறந்தது. ஏனென்றால், பசும்பாலில் காணப்படும் கொழுப்புச் சத்து, சரியாகச் செரிமானம் ஆகாது. மேலும், பசும்பாலில், இரும்புச்சத்து, வைட்டமின் “சி' மற்றும் சில முக்கிய கொழுப்புச் சத்துக்கள் பற்றாக்குறை உள்ளது.

கட்டுக்கதை: பால் குழந்தை பருவத்தில் மட்டுமே தேவை.
பெயவர்களானதும் தேவையில்லை.

உண்மை: வாழ்நாள் ழுவதும், கால்சியம் சத்தை பூர்த்தி செய்ய பால் உதவுகிறது.
எனவே, குழந்தைகள் மட்டுமல்லாது, அனைத்து பருவத்தினரும் பால் குடிப்பது நல்லது. பால், குடிப்பதால், வயது காரணமாக ஏற்படும் பிரச்னைகளான எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு முறிவு போன்றவை தவிர்க்கப்படுகிறது.

கட்டுக்கதை: பால் சாப்பிடுவதால் உடல் எடை அதிகக்கும்.

உண்மை: பாலில் காணப்படும் சில புரதச் சத்துக்கள், அமினோ அமிலங்கள் ஆகியவற்றுக்கு, உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும் தன்மை உண்டு.

கட்டுக்கதை: பால் ரத்த அழுத்தத்தை அதிகக்கும்.

உண்மை: பாலில் அதிகளவு கால்சியம் சத்து காணப்படுகிறது.
இது குறைந்த ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, உயர் ரத்த அழுத்தம் உடையவர்களுக்கு முக்கிய உணவாக பால் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆண்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் புதுமைப் பெண்


தர்மபுரி அருகே ஆண்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார் இளம் பெண். வறுமையால் தந்தை செய்த தொழிலை ஆர்வத்துடன் கற்று முன்னேற துடிக்கும் இப்பெண்ணை, பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறி, பாரதி கண்ட புதுமைப் பெண் சமுதாயத்தை உருவாக்கி வருகின்றனர். பெண்கள் நினைத்தால், எந்த துறையிலும் முன்னேற முடியும் என்பதை நவீன கால நகர பெண்கள் நிரூபித்து வரும் இந்த காலத்தில், மூட நம்பிக்கை, பெண் அடிமைத்தனம், ஆண் ஆதிக்கம் நிறைந்த கிராமப் பகுதிகள் நிறைய உள்ளன. பெண்களை வெறுத்து ஒதுக்கும் தர்மபுரி மாவட்டத்தில், பெண் கல்வி 49.28 சதவீதமே உள்ளது. குறிப்பாக, பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் இடை நிற்கும் எண்ணிக்கையும் அதிகம் உள்ளது. பெண் சமுதாயத்தை புறக்கணிக்கும் தர்மபுரி மாவட்டத்தில் இளம் பெண், வறுமை காரணமாக தனது தந்தை செய்த முகச் சவரம் செய்யும் தொழிலை சவாலாக எடுத்துக் கொண்டு, தன் தாயை காப்பாற்ற லட்சியப் பணியாக முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா அமனிமல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி கமலா. இவர்களுக்கு நான்கு குழந்தைகள். மூன்று மகன்கள், கடைசி பெண் தேவிபாலா(20). கிருஷ்ணன் அமனிமல்லாபுரத்தில் சவரத் தொழில் செய்யும் சலூன் கடை நடத்தி வந்தார். தந்தைக்கு உதவியாக தேவிபாலா அடிக்கடி கடைக்கு சென்று, தன் தந்தை செய்யும் தொழிலை கூர்ந்து கவனித்து வந்தார். அவரது ஆர்வத்தைப் பார்த்த கிருஷ்ணன், முடி திருத்தம் செய்ய வரும் சிறுவர்களுக்கு, தேவிபாலாவை அவரது எட்டாவது வயதில் முடி திருத்தம் செய்ய பழக வைத்தார். கிருஷ்ணனின் மூன்று மகன்களுக்கும் திருமணமாகி தனித்குடித்தனம் சென்று விட்டனர். எட்டு ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணன் இறந்துவிட்டார். மகள் தேவிபாலாவுடன், கமலா தனியாக குடும்பத்தை நடத்த முடியாமல் தத்தளித்தார்.

தாய்க்கு ஆறுதல் கூறிய தேவிபாலா, தன் தந்தை நடத்திய சலூன் கடையை தொடர்ந்து நடத்த முடிவு செய்தார். கிருஷ்ணனின் வாடிக்கையாளர்கள் தேவிபாலாவுக்கு ஊக்கம் கொடுக்க, எட்டு ஆண்டாக தேவிபாலா ஆண்களுக்கு முடித் திருத்தம், சவரம் செய்து, அதில் கிடைக்கும் வருவாயில் தாயை காப்பாற்றி வருகிறார். அமனிமல்லாபுரத்தில் 200 குடும்பத்தினர் உள்ளனர். தேவிபாலாவை போல் அங்கு நான்கு ஆண்கள் சலூன் கடை வைத்துள்ளனர். தேவிபாலாவுக்கு தினம் 50 முதல் 100 வரையில் வருவாய் கிடைத்த போதும், வறுமையைப் போக்க தான் கற்ற கைத்தொழில் தனக்கு உதவுவதை நினைத்து அவர் பெருமைப்பட்டு வருகிறார்.

இது குறித்து தேவிபாலா கூறியதாவது: என் தந்தை இறந்த பின், குடும்பத்தை காக்கும் பொறுப்பு ஏற்பட்டதால், என் தந்தையிடம் கற்ற சவரத் தொழிலைச் செய்ய முடிவு செய்தேன். எங்கள் வறுமையை இத்தொழில் போக்கியதால், தொடர்ந்து எனக்கு திருமணம் முடியும் வரையில் இத்தொழிலைச் செய்வேன். என் வாடிக்கையாளர்கள் பலரும் பியூட்டி பார்லர் நடத்த வற்புறுத்தி வருகின்றனர். புதிதாக ஒரு தொழிலை கற்க விரும்பவில்லை. என் குடும்பத்துக்கு ஏற்ற வருமானம் கிடைக்கிறது. எனவே, இத்தொழிலை தொடர்ந்து செய்வேன். வேறு தொழில் எதுவும் கற்க ஆசையில்லை.

சிறு வயதில் இருந்து இத்தொழில் செய்வதால், ஆண்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் என்னால் தொழில் செய்ய முடிகிறது. கிராமப் பகுதி என்பதால் வருவாய் குறைவாகத்தான் கிடைக்கிறது. முகச் சவரனுக்கு 8 முதல் 10 ரூபாயும், முடி வெட்ட 10 முதல் 12 ரூபாய் வரை கூலி கிடைக்கும். என் அப்பாவின் மூலம் கற்ற கைத்தொழில் மூலம் என்னால் முன்னேற முடியும் என்பதால், வேறு தொழில் நினைப்பு எனக்கு துளியும் இல்லை. இவ்வாறு தேவிபாலா தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 2 ஜூலை, 2010

இமையால் சாதனை

சீனாவைச் சேர்ந்த தற்காப்பு கலைஞர் ஒருவர் தனது கண் இமைகளால் விமானத்தை இழுத்து வியக்க வைத்திருக்கிறாராம்.

பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டு!!!!

பெண்களின் கூந்தலின் மணம் இயற்கையா? செயற்கையா? இயற்கையானதே... அதாவது அந்த மணம் எந்த வகையைச் சாரும் என்பது அவரவரின் மனத்தைப் பொறுத்தது...

கூந்தலில் பீரோமோன்ஸ் என்கின்ற வேதிப்பொருள் உள்ளது. இவை ஆண் பெண் அடையாளம் காட்டவும், பாலின மற்றும் நடத்தைகளைக் கட்டமைப்பு செய்யவும் உதவுகின்றன.

இந்த சுரப்பிகளே கூந்தலில் மணம் தோன்றக் காரணமாகின்றன. இயற்கையில் ஒவ்வொரு உயிர்களும் ஒரு கட்டமைப்பைப் பெற்றிருக்கின்றன. பெண் மீது ஆணுக்கும், ஆண் மீது பெண்ணுக்கும் கவர்சசி ஏற்பட இந்த வேதியியல் கூறுகள் பின்னின்று பணியாற்றுகின்றன.

மேற்கூறிய அறிவியல் கருத்துக்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு... ஆனாலும் அவை எந்த வகையைச் சாரும் என்பது உங்கள் மனதைப் பொறுத்தது.

‘டி.விக்கு பின்னர்தான் நீங்கள்’

இன்று இல்லத்தரசிகள் டி.வி. நிகழ்ச்சி களில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அது எந்த அளவுக்கு என்றால் ‘டி.விக்கு அப்புறந்தான் நீங்க’ என்று சொல்லும் நிலைக்கு வளர்ந்துவிட்டது என்கிறது ஒரு ஆய்வு.

இங்கிலாந்தில் இது தொடர்பான ஆய்வு நடந்தது. அப்போது பத்தில் ஒருவர் டி.விக்கு அப்புறந்தான் மற்றவர்கள் என்ற நிலையில் இருக்கிறார்கள் என்று தெரியவந்தது. அவர்களுக்கு கணவன், மனைவி, குழந்தைகள், உறவுகள் இவர்களெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

ஆய்வில் 11 சதவீதம் பேர், டி. வி. நிகழ்ச்சிகள் நம்பிக்கையைச் சிதைப்பதாகவும், நேரத்தை வீணாக்குவதாகவும் கருத்து தெரிவித்தனர். மற்றொரு பத்து சதவீதம் பேர் டி.வி.தான் எங்களுக்கு உயிர், மற்றதெல்லாம் அப்புறம்தான் என்கின்றனர். டி.வியை கொஞ்ச நேரம் பொழுதுபோக்குக்காக மட்டுமே பார்ப்போம் என்றும் மூன்றாம் தரப்பினர் கூறினர்.

10ல் நான்கு பேர் வேலைப்பளுவில் இருந்து டி.வி ‘ரிலாக்ஸ்’ தருவதாகவும், பயனுள்ள விஷயங்களை தெரிந்து கொள்ள உதவுவதாகவும் கூறினார்கள்.

டி.வி. நிகழ்ச்சியை சந்தைப்படுத்தும் இயக்குனர் ஒருவர் கூறும் போது தொலைக்காட்சியானது பொழுதுபோக்கு பயனுள்ள விஷயங்கள், சந்தைப்பொருட்கள் விவரம் என பலவற்றையும் தருவதால் வீட்டின் ஒரு அங்கமாக மாறி உள்ளது’ என்றார்.

ஆனால் விஞ்ஞானிகளோ ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கு அதிகமாக டி. வி. பார்ப்பவர்கள் பல்வேறு வியாதிகளுக்கு ஆளாகிறார் கள்’ என்கிறார்கள். ‘இவர்கள் பெரும் பாலும் புற்றுநோய் மற்றும் இதய வியாதிகளால் பாதிக்கப்படுகிறார்கள்’ என்று எச்சரித்தனர்.

முந்தைய ஆய்வு ஒன்றில் ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு மேல் டி. வி. பார்த்தவர்கள் வெகு விரைவில் இறந்துவிடுகிறார்கள் என்று எச்சரித்திருந்தனர்.

இரட்டை முக பூனைக்குட்டி

இரட்டை முகத்தைக் கொண்ட பூனைக்குட்டியொன்று அமெரிக்க மேற்கு வேர்ஜினியா நகரிலுள்ள சார்ள்ஸ்டன் நகரில் கடந்த 09.06.2010 புதன்கிழமை பிறந்தது. மேற்படி விசித்திர பூனைக்குட்டியை தாய்ப் பூனை பராமரிக்க மறுத்ததையடுத்து, அது அங்குள்ள மிருக பராமப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இரு முகங்கள், 4 கண்கள், இரு மூக்குகள், இரண்டு கண்கள் சகிதம் காணப்படும் இந்தப் பூனைக்குட்டி உயிர் பிழைப்பதற்கு 50 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளதாக மிருக வைத்தியரான எறிக்கா தரேக் தெரிவித்தார். அதன்படி அந்தப்பூனை நேற்று முன்தினம் அப்பூனை இறந்துள்ளது

மைக்ரோசொஃப்ட் நிறுவனம் எச்சரிக்கை

மைக்ரோசொஃப்ட் நிறுவனம் அண்மையில் ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. மைக்ரோசொஃப்ட் விண்டோஸ் 2000, எக்ஸ்பி சிஸ்டங்களில் ஒன்றை இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பதிப்பு 7 அல்லது 8 சேர்த்துப் பயன்படுத்துபவர்கள் எஃப்1 கீ எனப்படும் ஹெல்ப் கீயை அழுத்தினால், ஹேக்கர்கள் எளிதாக கொம் ப்யூட்டர்களில் புகும் வாய்ப்பு உண்டு என அறிவித்துள்ளது.