செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

மது விருந்து நடத்திய மாணவ-மாணவிகள் 300 பேர் கைது


புனே அருகில் கத்கி என்ற இடத்தில் புகழ் பெற்ற சிம்பயோசிஸ் நிர்வாக பயிற்சி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியை சேர்ந்த எம்.பி.ஏ. மாணவ, மாணவிகள் நண்பர்கள் தினத்தை கொண்டாட ஒரு பண்ணை வீட்டுக்கு சென்றனர். அங்கு இரவு விடிய, விடிய நண்பர்கள் தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.

மது பானங்களை பருகி, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக அமர்க்களப்படுத்தினர். இவர்கள் போட்ட சத்தம் காரணமாக அந்த பகுதியினர் இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து உள்ளூர் மக்கள் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் அந்த பண்ணை வீட்டை சுற்றிவளைத்து குடிபோதையில் ஆடிப் பாடிக்கொண்டிருந்த 300 மாணவ-மாணவிகளை கைது செய்தனர். பின்னர் 100 மாணவிகளை மட்டும் எச்சரித்து விட்டு விட்டனர்.

இது குறித்து மேலும் விசாரணை நடக்கிறது

பிஞ்சில் பழுக்கும் இங்கிலாந்து சிறுமிகள்


இங்கிலாந்தில் 12 வயது சிறுமிகள் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவது கணிசமாக அதிகரித்துள்ளது.

இங்கிலாந்தில் கருத்தடை சாதனங்கள் விற்பனை, பயன்பாடு குறித்து சமீபத்தில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் தெரியவந்த பரபரப்பு தகவல்கள்:

இங்கிலாந்தில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள்கூட கருத்தடை மாத்திரை பயன்படுத்துகின்றனர். இது புதிது இல்லை என்றாலும், கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் 1000 பேர் கருத்தடை மாத்திரை பயன்படுத்துகின்றனர். 13 வயது சிறுமிகள் சுமார் 200 பேர் ஊசி மூலமோ, வேறு விதங்களிலோ நீண்டகால கருத்தடை முறைகளை பயன்படுத்துகின்றனர். அதாவது, இவர்கள் பாய் பிரெண்ட்களுடன் தொடர்ந்து செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர்.


நாட்டில் 4 கோடிக்கும் அதிகமானோர் பல்வேறு வகையான கருத்தடை சாதனங்களை உபயோகிக்கின்றனர். சிறுமிகள் கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவது பெற்றோருக்கு தெரிவதில்லை. கருத்தடை சாதனங்கள் பயன்படுத்த குறைந்தபட்ச வயது 16 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி 15 வயதுக்கும் குறைவான சுமார் 58 ஆயிரம் சிறுவர், சிறுமிகள் கருத்தடை மாத்திரை பயன்படுத்தியது தெரியவந்தது. இது 1999ல்
23 ஆயிரமாக இருந்தது.

சுமார் 500 டாக்டர்களிடம் கேட்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் இத்தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.

கற்பை ஏலம் விடும் டீன்ஏஜ் பெண்


மருத்துவக் கல்லூரியில் படிக்க வசதி இல்லாததால், ஹங்கேரியை சேர்ந்த டீன் ஏஜ் பெண் ஒருவர் தனது கன்னித்தன்மையை ஆன்லைன் ஏலத்தில் ரூ.1 கோடியே 46 லட்சத்துக்கு விற்கிறார்.

ஹங்கேரியை சேர்ந்த 18 வயது மாணவிக்கு மருத்துவ கல்லூரியில் சேர இடம் கிடைத்துவிட்டது. ஆனால், பீஸ் கட்டும் அளவுக்கு வசதி இல்லை. அந்தப் பெண்ணின் பெற்றோர் ஏற்கனவே கடன் சுமையில் மூழ்கியுள்ளனர். இதனால் குடியிருக்கும் வீட்டையே இழக்கும் நிலைக்கு உள்ளனர். இந்த சூழ்நிலையில், அந்தப் பெண்ணுக்கு மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பெற்றோரின் கடனையும் அடைத்து, தனது டாக்டர் கனவையும் நிறைவேற்ற விரும்பும் அந்த மாணவி, தனது கன்னித்தன்மையை விற்க முடிவு செய்தார்.

இதற்காக ‘eBay’ ஆன்லைன் ஏல வெப்சைட்டில் தனது கன்னித்தன்மையை விற்கும் அறிவிப்பை ‘மிஸ் ஸ்பிரிங்’ என்ற பெயரில் வெளியிட்டார். பலர் போட்டியிட்டதால், ஏலத் தொகை உயர்ந்துகொண்டே சென்றது. இறுதியாக இந்த பெண்ணுக்கு 2 லட்சம் பவுண்ட் (ரூ.1 கோடியே 46 லட்சம்) அளிக்க இங்கிலாந்தை சேர்ந்த ஒருவரும், அயர்லாந்தை சேர்ந்த ஒருவரும் போட்டி போடுகின்றனர். இருவருமே அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொண்டு, அவளது குடும்பத்தை காப்பாற்றவும் முன்வந்துள்ளனர்.

ஆனால், ‘‘திருமணம் செய்து கொண்டு ஒருவருடன் வாழ்வது சவாலான வேலை என்பதால், அதற்கு இப்போது தயாராக இல்லை’’ என்கிறார் மிஸ் ஸ்பிரிங். எனவே இவர்களில் யாராவது ஒருவரிடம், தனது கன்னித்தன்மையை இழந்து ரூ.1 கோடியே 46 லட்சத்தை பெறவுள்ளார். இதில் பாதி பணம் வரியாக சென்றுவிடுமாம். மீதியில் பெற்றோரின் கடனை அடைத்து, டாக்டர் படிப்பை தொடரவுள்ளார் ‘மிஸ் ஸ்பிரிங்’.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த பிப்ரவரியில் கன்னித்தன்மையை ரூ.14 லட்சத்துக்கு ஏலம் விட்டது குறிப்பிடத்தக்கது.

இளம்பெண்ணை நிர்வாணமாக்கி ஓட ஓட விரட்டி மானபங்கம்


வேறு சாதி வாலிபரை காதலித்ததால், ஆதிவாசி இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி, 8 கிலோ மீட்டர் தூரம் ஓட ஓட விரட்டி தாக்கி மானபங்கப்படுத்திய அதிர்ச்சிïட்டும் கொடூர சம்பவம், மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்துள்ளது.

மேற்கு வங்காள மாநிலம் சூரி பகுதியில் உள்ள செல்போன்களில், `ஆதிவாசி பெண்' என்ற தலைப்பில் பரவிய நிர்வாண மானபங்க காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 17 வயதுள்ள அந்த ஆதிவாசி பெண், வேறு சாதி வாலிபரை காதலித்ததால், கிராம மக்கள் ஒன்றுகூடி இந்த கொடூர காட்சியை அரங்கேற்றி உள்ளனர்.

ஏறத்தாழ 100 ஆதிவாசிகள் டிரம்ஸ் போன்ற வாத்தியங்களை முழங்கியபடி பின்னால் ஆர்ப்பரித்து வர, ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கப்பட்ட அந்த அபலைப் பெண் தன் இரு கைகளால் தனது அங்கங்களை மறைத்தபடி தட்டுத்தடுமாறி ஓடிக்கொண்டு இருந்தாள். பின்னால் கூச்சலிட்டபடி வந்த ஆண்கள் சிலர், கைகளால் மானத்தை மறைக்கவிடாதபடி, கைகளில் தடியால் தாக்கியபடி வந்தனர். பின்னால் வந்தவர்கள் அதைப் பார்த்து சிரித்தபடி அந்த பெண்ணை விரட்டி வந்தனர்.

சில சிறுவர்கள் அந்த பெண்ணை கற்களால் தாக்கினார்கள். அருகில் உள்ள 3 கிராமங்கள் வழியாக ஏறத்தாழ 8 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த அராஜகம் நடைபெற்றது. ஓடிக்களைத்த அந்த பெண், நடக்க முடியாமல் நின்றபோதெல்லாம் தாக்கி மானபங்கம் செய்தபடி விரட்டினார்கள். 11 நிமிடங்கள் ஓடும் வகையில் இந்த கோரக்காட்சி செல்போனில் படம்பிடிக்கப்பட்டு வெளியாகி இருந்தது.

4 மாதங்களுக்கு முன்பு, கடந்த ஏப்ரல் மாத சுட்டெரிக்கும் வெயிலில் கொடூரமான முறையில் கிராமத்தினர் சார்பில் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டு இருந்தாலும், தற்போது செல்போனில் பரவியபின்னர்தான் அதுபற்றி வெளியே தகவல் தெரிய வந்துள்ளது. உடனடியாக சூரி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு இந்த காட்சி பற்றி நிருபர்கள் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் தாங்களே முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கினார்கள். அந்த இளம்பெண் எந்த ஊரைச் சேர்ந்தவள் என்ற விவரம் கூட உடனடியாக தெரியவில்லை. செல்போன் படத்தில் தெரியும் கிராமங்களின் அடையாளத்தை வைத்து போலீசார் ஓரளவுக்கு துப்பு துலக்கி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார்


நிர்வாணமாக ஒரு பெண் கடற்கரையில் சூரிய குளியல் போட்டார். இதை பார்த்த 2 மகன்களின் தாயார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். உடலை மறைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். இதற்கு அந்த இளம் பெண் சம்மதிக்க வில்லை. இதை தொடர்ந்து அந்த தாய் போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவம் நடந்தது இத்தாலி நாட்டில் தான். அந்த நாட்டில் ரோம் நகருக்கு அருகில் உள்ள அன்சியோ சவுத் என்ற இடத்தில் உள்ள பொது கடற்கரையில் லூயிசா என்ற 26 வயது பெண் ஒருத்தி நிர்வாணமாக சூரியக் குளியல் போட்டார்.

அப்போது அவர் ஒரு லோஷனை தன் உடலில் தேய்த்து கொண்டிருந்தார். இதை ஒரு பெண் பார்த்தார். அவருடன் அவரது இரு இளம் மகன்களும் இதை பார்த்தனர். அவரது மகன்களுக்கு 14 மற்றும் 12 வயது ஆகிறது. நிர்வாணமாக ஒரு பெண் உடலில் லோஷன் தேய்த்துக் கொண்டிருப்பது தன் மகன்களை தொந்தரவு செய்ததாக அந்த தாயார் கருதினார். அதனால் அவர் அந்த பெண்ணிடம் சென்று உடலை மூடி கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். இதற்கு அந்த இளம் பெண் மறுத்து விட்டார். இதனால் கோபம் அடைந்த தாயார் போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்தரங்கத்தை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது அந்த நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து லூயிசாவின் வக்கீல் கூறுகையில், 2010-ம் ஆண்டு இது போல நடப்பது முட்டாள் தனமாக இருக்கிறது என்றும், என் வாடிக்கையாளரின் செயல்பாடு அந்த இளம் வாலிபர்களை கவர்ந்து இருக்குமானால் அதற்கு அவர் என்ன செய்ய முடியும். அவர் நிர்வாணமாக சூரிய குளியல் செய்தது குற்றமா? என்று கேட்டு இருக்கிறார். இந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது.

பின்ன‌ழகை இன்சூர் செய்யும் பாலிவுட் நடிகை


ஹாலிவுட் பிரபலங்கள் தங்களது அழகான உடல் உறுப்புகளைக் காப்பீடு (இன்சூர்) செய்வது வழக்கம். அந்த வகையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபெஸ் தன்னுடைய பின்னழகைக் காப்பீடு செய்தது உலகம் அறிந்த செய்தி. அந்த வரிசையில் பாலிவுட் நடிகர்கள் பலரும் இணையவிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் நடிகர் ஜான் ஆபிரகாம் தனது பின்னழகை ரூ.10 கோடிக்கு காப்பீடு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

தொடையழகி என வர்ணிக்கப்பட்ட நடிகை ரம்பா முன்பு, தனது தொடைரை காப்பீடு செய்திருப்பதாக வந்த செய்தி கோலிவுட்டையே பரபரப்பாக்கிறது.

இந்நிலையில் பாலிவுட் நடிகை மினிஷா லம்பா தனது பின்னழகை காப்பீடு செய்திருக்கிறார். காஷ்மீரில் பிறந்த அழகு ரோஜாவான இந்த லம்பா, பாலிவுட் ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் கனவுக் கன்னி. தனது பின்புறம் மிக அழகாக, எடுப்பாக, செக்ஸியாக இருப்பதாக பெருமையுடன் கூறும் மினிஷா, தனது பின்னழகை பலரும் வர்ணிக்கிறார்கள். அதன் அழகில் பல பேர் மயங்கிக் கிடக்கிறார்கள். அந்த பொக்கிஷத்தை நாக்க காக்க விரும்புகிறேன். எனவே இப்போது அதை காப்பீடு செய்ய முடிவு செய்துள்ளேன், என்கிறார். ஆனால் எவ்வளவு தொகை என்பதை சொல்ல மறுத்து விட்டார் அம்மணி.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு-3 அ.தி.மு.க.வினருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்


தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 அதிமுகவினரும், தண்டனையை குறைக்க்கோரி தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டணை உறுதி செய்யப்பட்டது.

கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் தொடர்பான வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து அதிமுகவினர் மாநிலம் முழுவதும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகளின் பஸ் அதிமுகவினரால் தடுத்து நிறுத்தப்பட்டு எரிக்கப்பட்டது. இதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து பலியாயினர்.

இது தொடர்பாக அ.இ.அ.தி.மு.க.வினர் 31 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சேலம் முதலாவது கூடுதல் அம‌ர்வு ‌நீ‌திம‌ன்ற‌ நீதிபதி கிருஷ்ணராஜா விசாரித்தார். வழக்கு விசாரணையின் போது தர்மபுரி மாவட்ட ஆ‌ட்‌‌சிய‌ர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் உள்பட 123 பேர் சாட்சியம் அளித்தனர்.

இந்த வழக்கில், தர்மபுரி நகர அ.தி.மு.க. செயலர் நெடு என்ற நெடுஞ்செழியன், முன்னாள் எம்.ஜி.ஆர். மன்ற செயலர் மாது என்ற ரவீந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முனியப்பன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும் தலா ரூ.59 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

மேலும் 25 பேருக்கு பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் தனித்தனியாக ‌சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் 25 பேரும் தலா 7 ஆண்டு 3 மாதம் ‌சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 2 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போதே ஒருவர் விபத்தில் மரணம் அடைந்தார்.

தண்டனையை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். அதில் 25 பேரின் 7 ஆண்டு தண்டனை 2 ஆண்டாக குறைக்கப்பட்டது. ஆனால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து 28 பேரும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோர் தங்களது மனுவில், தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை குறைக்கக் கோரியிருந்தனர்.

மற்ற 25 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த மனுவை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் பி.எஸ்.செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது. விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள தங்களது தீ்ர்ப்பில், பஸ்ஸை எரித்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தனர். இவர்கள் தங்களது தண்டனையைக் குறைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.

அதே போல தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரிய மற்ற 25 அதிமுகவினரின் மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் உறுதி செய்து தீ்ர்ப்பளித்தனர்.

அரை நிர்வாண கோலத்தில் பெண் கைதி தகராறு


சேலம் பெண்கள் கிளை சிறை அதிகாரிகள் நிர்வாணப்படுத்தி "ப்ளு பிலிம்" எடுப்பதாகக் கூறி, அரை நிர்வாணமாக ரோட்டில் நின்று தகராறில் ஈடுபட்ட பெண் கைதியால், பரபரப்பு ஏற்பட்டது.

சேலம், பெரியகொல்லப்பட்டியை சேர்ந்தவர் சாந்தி. இவரது மகள் மைதிலி(25). இவரது கணவர் சரவணன். மைதிலி மீது, அரூர், ராசிபுரம், சேலம் உள்ளிட்ட இடங்களில், திருட்டு வழக்கு உள்ளது. ஆறுக்கும் மேற்பட்ட திருட்டு வழக்கில் சிக்கிய மைதிலியை, போலீசார் கைது செய்து, அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர்.


வழக்கு சம்பந்தமாக மைதிலியை ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, நாமக்கல் போலீஸார் சேலம் பெண்கள் சிறைக்கு வந்தனர். சிறையில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்ட மைதிலி, வேனில் ஏறாமல், சேலையை அவிழ்த்து வீசினார். அரை குறை உடையுடன், கூச்சலிடத் துவங்கினார். போலீசார், மைதிலியின் அரை நிர்வாண கோலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சிறை காவலர்கள் மைதிலியை உள்ளே அழைத்து செல்ல அனுமதி மறுத்தனர். "சிறையில் இருந்து கைதியை வெளியே அழைத்து சென்றால், நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு அழைத்து வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும்" என, தெரிவித்து விட்டு சிறை கதவை மூடி விட்டனர். இதனால், அரை நிர்வாண கோலத்துடன் மைதிலி ரோட்டில் நின்று, கிளை சிறை அதிகாரிகள் மீது சரமாரியாக புகார் தெரிவித்தார்.

"சிறைக்குள் பெண் கைதிகளை சித்ரவதை செய்கின்றனர். பார்வையாளர்களிடம் லஞ்சமாக பணம் வாங்குகின்றனர். கேள்வி கேட்கும் கைதிகள் மீது பொய் வழக்கு போடுகின்றனர். ஆடையை களைந்து, போட்டோ, வீடியோ எடுத்து சிறை அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். ஏன் என்று கேட்டால், "ப்ளூ பிலிம்" எடுத்து வெளியிடுவதாக மிரட்டுகின்றனர். கைதிகளை பார்க்க வருபவர்களிடம் 300, 400 ரூபாய் லஞ்சமாக பணம் கேட்கின்றனர். நாங்களே சிறைக்குள் அடைபட்டு கிடக்கிறோம். எப்படி, சிறை அதிகாரிகளுக்கு லஞ்சமாக பணம் கொடுக்க முடியும்? பொய் வழக்கு போட்டு சித்ரவதை செய்யும் சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, மைதிலி சிறை முன்பு நின்று கூச்சலிட்டபடி இருந்தார்.

பெண் கைதி மேலாடை இல்லாமல், ரோட்டில் நின்று பேராட்டத்தில் ஈடுபட்டதை கண்டு பொதுமக்கள் கூட்டம் கூடியது.

அஸ்தம்பட்டி போலீசார் சிறை அதிகாரிகளிடம் பேசி, அரை நிர்வாண கோலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதி மைதிலியை சிறைக்குள் அழைத்து சென்றனர்.

108 வயது பாட்டியின் 38 வயது கணவர்


மலேசியாவை சேர்ந்தவர் வூக் குன்டோர். இவருக்கு வயது 108. இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவரது கணவர் இவரை விட 70 வயது இளையவர். அவருக்கு வயது 38 தான். அவர் பெயர் முகமது நூர் சே முசா. இவர்கள் திருமணம் 2006-ம் ஆண்டு நடந்த போது, அது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முகமது கடந்த ஆண்டு தன் மனைவியை விட்டு பிரிந்து விட்டார். அவர் போதை பொருள் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக கோலாலம்பூருக்கு சென்று இருந்தார். சிகிச்சை முடிந்ததும், அவர் மீண்டும் தன் மனைவியுடன் சேர்ந்து விட்டார். கடந்த வியாழக்கிழமை அவர் தன் மனைவியுடன் சேர்ந்து விட்டார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த வூக், என் கணவர் திரும்பி வந்து சேர்ந்ததற்காக அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் மீண்டும் சேர்ந்து வாழப் போகிறோம் என்பதே எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் அவரை பெரிதும் காதலிக்கிறேன் என்று 108 வயது வூக் தெரிவித்தார்.

சம்பள பாக்கிக்காக நிர்வாண போராட்டம் நடத்திய விமான பணிப்பெண்கள்!

ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டில் சம்பள பாக்கியை கண்டித்து விமானப் பணிப்பெண்கள் நிர்வாண போஸ் கொடுத்து போராட்டம் நடத்தினர்.


ஸ்பெயினில் பிரபல ஏர்காமெட் விமான போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றும் பணிப் பெண்களுக்கு எட்டு முதல் ஒன்பது மாத சம்பளம் வரை பாக்கியுள்ளது.

இதை பல்வேறு வழிமுறைகளில் கேட்டும் நிர்வாகம் அசைந்துகொடுக்கவில்லை. எனவே நிர்வாண போராட்டம் நடத்துவது என பணிப்பெண்கள் முடிவெடுத்தனர்.

இதன்படி, விமான கேபின் மற்றும் விமானத்தின் பல்வேறு பகுதிகளின் பின்னணியுடன் நிர்வாணமாக காலண்டருக்கு போஸ் கொடுத்து பணிப்பெண்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

நடுரோட்டில் போதையில் மயங்கி விழுந்த சோனா?


`பத்து பத்து', `குசேலன்' உள்பட பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர், சோனா. இவர் சமீபத்தில் சொந்தமாக பட நிறுவனம் தொடங்கினார். அந்த பட நிறுவனம் சார்பில் `2010 பாக்யராஜ்' என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்வதற்காக சோனா, தனது உதவியாளர்களுடன் பெங்களூர் சென்றார். அங்கிருந்து ஒரு காரில் மைசூர் போய் கொண்டிருந்தபோது, ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அப்போது, அவர் நிலைதடுமாறி நடுரோட்டில் விழுந்தார். சோனாவுடன் சென்றவர்கள் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

நடுரோட்டில் மயங்கி விழுந்த சோனாவின் தலையிலும், கால்களிலும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

நடிகை சோனா குடிபோதையில் காரை நிறுத்தச் சொன்னதாகவும், போதை அதிகமானதால் மயங்கி விழுந்து விட்டதாகவும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனாலும் அவர் ஏன் காரை நிறுத்தச் சொன்னார், எதற்காக மயங்கி விழுந்தார் என்ற விவரம் தெரியவில்லை.

நிர்வாணமாக அணிவகுத்து 5 ஆயிரம் பேர் போட்டோ


ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் 5,000 பேர் நிர்வாணமாக கட்டிப்பிடித்த படி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

அமெரிக்காவை சேர்ந்த புகழ் பெற்ற போட்டோகிராபர் ஸ்பென்சர் டூனிக். பலரை நிர்வாணமாக ஒரே இடத்தில் நிற்க வைத்து கலை நயத்தோடு படம் பிடிப்பதில் வல்லவர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் புகழ் பெற்ற நகரில், புகழ் பெற்ற நினைவு சின்னத்தின் அருகே ஆயிரக்கணக்கானவர்களை ஒரே இடத்தில் நிற்க வைத்து விதவிதமாக போட்டோ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ் பெற்ற ஓபேரா ஹவுசில் 5 ,000 பேரை நிர்வாணமாக நிற்க வைத்து படம் எடுத்தார். நேற்று நடந்த இந்த நிகழ்ச்சி சற்று வித்தியாசமாக இருந்தது. நிர்வாணமாக போஸ் கொடுத்தவர்களில், ஆண் ஓரினசேர்க்கையாளர், பெண் ஓரின சேர்க்கையாளர்கள், என ரகவாரியாக பிரிக்கப்பட்டு அதற்கேற்ப கட்டியணைத்து போஸ் கொடுத்தனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த டாக்டர்கள், கால்பந்தாட்ட வீரர்கள், ஆசிரியர்கள், கர்ப்பிணிப் பெண்கள் என பலரும் நிர்வாணமாக போஸ் கொடுப்பதில் ஆர்வம் காட்டினர்.

9 வயதில் திருமணம், 10ல் விவாகரத்து

ஒன்பதே வயதில் கட்டாய திருமணத்தில் சிக்கி, வல்லுறவில் வலியை அனுபவித்து 10 வயதில் விவாகரத்து பெற்ற ஏமன் நாட்டுச் சிறுமி பற்றிய புத்தகம் இப்போது அமெரிக்காவில் பரபரப்பாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது.


ஏமன் நாட்டைச் சேர்ந்த சிறுமி நுஜாத் அலி. இப்போது வயது 12. இவரது தந்தைக்கு 12 குழந்தைகள். எனவே, குடும்ப வறுமை கருதி நுஜாத் 9 வயதில் இருந்தபோதே திருமணம் செய்ய முடிவு செய்தார்.அதுவும் நுஜாத்தைவிட 3 மடங்கு அதிக வயதுள்ள ஏமன் நாட்டுக்காரருக்கு..........

சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமி


சீனாவில் 9 வயது சிறுமி குழந்தை பெற்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. சீனாவில் இவ்வளவு சிறிய வயதில் குழந்தை பெற்ற சிறுமி இவர்தான் என்று கூறப்படுகிறது.

இது பற்றி டாக்டர்கள் கூறுகையில்,பிரசவம் அறுவைச் சிகிச்சை மூலம் நடந்தது, குழந்தையின் எடை 2.75 கிலோ உள்ளத, தாயும், சேயும் நலம் என கூறியுள்ளனர்.

சீனாவின் சங்சுன் என்ற நகரில் உள்ள மருத்துவமனையில் இந்த பிரசவம் நடந்துள்ளது. சீனச் சட்டப்படி 14 வயதுக்குட்பட்ட பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டால் அது கற்பழிப்புக் குற்றமாகும். எனவே இந்த சிறுமியின் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து சட்ட உதவியை நாடியுள்ளனராம்.

உலகில் 9 வயது சிறுமி குழந்தையைப் பிரசவித்த சம்பவங்கள் இதற்கு முன்பு ஐந்து முறை மட்டுமே நடந்துள்ளது. 9 வயதுக்கும் உட்பட்ட சிறுமிகள் பிரசவித்த சம்பவங்கள் இரண்டு முறை நடந்துள்ளன. கடந்த 1939ம் ஆண்டு ஐந்து வயது பெரு நாட்டு சிறுமி ஒருவர் குழந்தை பெற்ற சம்பவம் நடந்தது. அடுத்து 2006ம் ஆண்டு பெரு நாட்டில் 8 வயது சிறுமி குழந்தை பெற்றாள் என்பது குறிப்பிடத்தக்கது

கணவரை உத‌றி‌வி‌ட்டு குழந்தையுடன் காதலனுடன் சேர்‌ந்த பெ‌ண்


கணவ‌ன் வே‌ண்டா‌ம் எ‌ன்று கூ‌றி வெ‌ளியே‌றிய பெ‌ண்ணை குழ‌ந்தையுட‌ன் காதலனுட‌ன் காவ‌ல்துறை‌யின‌ர் சே‌ர்‌த்து வை‌த்து‌ள்ள சம்பவம் விழுப்புரம் மாவட்டம் கச்சிராப்பாளைய‌த்‌தி‌ல் நட‌ந்து‌ள்ளது.

க‌ச்‌சிரா‌ப்பாளைய‌‌த்தை சே‌‌ர்ந்தவர் அய்யாவு எ‌ன்பவ‌ரி‌ன் மனைவி மாலதி (22). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. திருக்கோவிலூர் பாண்டலம் கிராமத்தை சேர்ந்த மாலதி திருமணத்துக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பரை காதலி‌த்து‌ள்ளா‌ர். இந்த தகவல் அய்யாவு‌க்கு தெ‌ரியவ‌ந்ததா‌ல் மனைவியை சந்தேகப்பட தொடங்கியு‌ள்ளா‌ர்.

என் கணவரின் நண்பர் என்னை உறவுக்கு அழைத்தார்'நடிகை கனகா பரபரப்பு பேட்டி


கரகாட்டக்காரன்” படத்தில் அறிமுகமானவர் நடிகை கனகா. “அதிசய பிறவி” படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேரும் அளவுக்கு அவர் கொடி கட்டி பறந்தார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாகவும் திகழ்ந்தார். சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். கடைசியாக அவர் நடித்த படம் “சிம்மராசி”. இதன் பிறகு அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று முன் தினம் கனகா தனது திருமண வாழ்க்கை பற்றி பரபரப்பான தகவலை வெளியிட்டார். எனக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற என்ஜினீயருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு ரகசிய திருமணம் நடந்தது. 15 நாட்கள் மட்டும் அவர் என்னுடன் இருந்தார். அதன் பிறகு அவர் திடீரென மாயமாகி விட்டார். அவரை நான் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார்

சீன இளம்பெண்களிடம் அதிகரிக்கும் கருக்கலைப்பு

உலகில் அதிக ஜனத்தொகை கொண்ட சீனாவில் இளம்பெண்கள் மத்தியில் பாலியல் நோய்கள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை.இதனால்
அந்நாட்டில் கருக்கலைப்பு செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.இதுகுறித்து சீன பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

சீன நாட்டு சட்டப்படி திருமணமாகாத பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைக்கு குடும்பபதிவு அட்டை பெற முடியாது. எனவே திருமணமாகாத பெண்கள் கருக்கலைப்பு செய்கின்றனர்

சென்னையில் ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் மசாஜ் செய்யும் கிளப்புகள்


சென்னையில் ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் மசாஜ் செய்யும் கிளப்புகள் நடத்துவதை போலீஸ் தடுக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

இன்புளுவன்ஸ் லைப் ஸ்டைல் ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நரேஷ்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாசப்பிரகாஷ் ஓட்டலுக்கு அருகே `இன்புளுவன்ஸ் ஸ்பா' என்ற பெயரில் நாங்கள் மசாஜ் கிளப் நடத்தி வருகிறோம்.

சென்னையில் சாலையில் சிதறிக் கிடந்த தங்க துகள்கள்


சென்னை மதுரவாயலை அடுத்த வேலப்பன்சாவடியில் இருந்து பூந்தமல்லி பைபாஸ் ரோடு சென்னீர்குப்பம் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு தங்க துகள்கள் ரோட்டில் சிதறி கிடப்பதாக நேற்று காலை 11 மணி அளவில் தகவல் பரவியது. தங்க தகடுகளும், தங்க துண்டுகளும் ஆங்காங்கே ரோட்டின் இருபுறமும் கிடப்பதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டனர். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டு தீ போல் பரவியது. வருமானவரி சோதனைக்கு பயந்து தங்கத்தை லாரியில் கொண்டுவந்து நடு ரோட்டில் போட்டுவிட்டு போய்விட்டதாகவும் சிலர் பேசிக்கொண்டார்கள்.

இந்த தகவல் பரவிய சிறிது நேரத்தில் மதுரவாயல், வேலப்பன்சாவடி, கரையான்சாவடி, பூந்தமல்லி, போரூர், திருவேற்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆண்களும், பெண்களும் தங்கத்தை சேகரித்து அள்ளிச் செல்வதற்காக மூச்சு இரைக்க ரோட்டுக்கு ஓடி வந்தனர்.

இதனால், வேலப்பன்சாவடியில் இருந்து பூந்தமல்லி பைபாஸ் ரோடு சென்னீர்குப்பம் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோட்டில் கூட்டம் அலை மோதியது. பொதுமக்கள் ரோட்டின் ஓரத்தில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த தங்க நிற துகள்களை உண்மையான தங்கம் என்று கருதி எடுத்து மடியிலும், பைகளிலும் போட்டு நிரப்பினார்கள். சிலர் ரோட்டில் கிடந்த மணலை சல்லடை போட்டு அரித்து அதில் கிடைத்த தங்கநிற துகள்களை சேகரித்தனர். ஆரம்பத்தில் காலை 11 மணி அளவில் தங்க வேட்டைக்கு வந்தவர்களுக்கு 20 கிராம் அளவில் தங்க கட்டி போன்ற துகள்கள் கிடைத்தன.

11 பேரை ஏமாற்றி மணந்த பெங்களூர் அழகி


பணத்துக்கு ஆசைப்பட்டு அடுத்தடுத்து 11 பேரை மணந்து கோடிக்கணக்கில் நகை, பணத்தை சுருட்டிய பெங்களூர் அழகியை போலீசார் கைது செய்தனர்.

இந்த நூதன மோசடி பற்றிய விவரம் வருமாறு-

பெயர் கவுசர் பேகம். வயது 26. பார்ப்பதற்கு சினிமா நட்சத்திரம் போல அழகாக இருப்பார். இவருக்கு உம்மே கவுசர், கவுசர் சல்மா என்ற புனை பெயர்களும் உண்டு. பெங்களூர் எச்.பி.ஆர். லே அவுட் 2-வது பிளாக்கில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் தனது 16 வயதிலேயே கல்யாண மோசடியை ஆரம்பித்து விட்டார். இதற்கு அவருடைய பெற்றோரும் உடந்தையாக இருந்தனர்.

கவுசர் பேகத்துக்கு மும்பை ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். அவர்களிடம் கவுசரின் போட்டோக்கள் அடங்கிய ஆல்பம் இருக்கும். அந்த படங்களில் பெற்றோருடன் சேர்ந்து கவுசர் அடக்க ஒடுக்கமாக கல்லூரி மாணவி போல போஸ் கொடுத்து இருப்பார். திருமணத்துக்கு பெண் பார்த்துக்கொண்டு இருக்கும் தொழில் அதிபர்களை கவுசரின் ஏஜெண்டுகள் சந்தித்து, ``இந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்''. வசதி குறைவுதான் என்றாலும் உங்களுக்கு பிடித்து இருந்தால் பேசி முடிக்கலாம் என்று சொல்வார்கள்.

கவுசரின் போட்டோவை பார்த்தவுடனேயே மயங்கி போய்விடும் தொழில் அதிபர்கள் கவுசரின் ஏஜெண்டுகள் விரிக்கும் வலையில் எளிதில் விழுந்து விடுவார்கள். ``பணம் என்னய்யா பணம் இப்படிப்பட்ட அழகியைத்தான் தேடிக்கொண்டிருந்தேன் உடனே பேசி முடி'' என்று உடனே பச்சைக்கொடி காட்டுவார்கள். அடுத்த சில நாட்களில் திருமண விழா அமர்க்களமாக நடந்து முடியும்.

புதிய கணவருடன் கவுசர் தேனிலவுக்கு செல்வார். நாட்கள் இன்பமாக கழியும். கவுசரின் அன்பில் உருகிப்போகும் கணவர், பணத்தை தண்ணீராக செலவழித்து நகைகள், விலை உயர்ந்த துணிகள் என்று கேட்டதையெல்லாம் வாங்கிக்குவிப்பார். மனைவியை நடமாடும் நகைக்கடையாக மாற்றுவார்.

ஒரு நாள் காட்சி மாறும். கணவர் ஆபீசுக்கு சென்று இருக்கும் நேரத்தில் நகைகள் மற்றும் வீட்டில் இருக்கும் ரொக்கப்பணத்தை ஒட்டுமொத்தமாக சுருட்டிக்கொண்டு கவுசர் அம்மா வீட்டுக்கு ஓடி விடுவார். அதோடு இந்த நாடகம் முடிந்து விடாது.

நிர்வாணமாக இருப்பவர்களுக்கான முதல் ஓட்டல்

நிர்வாணமாக இருப்பவர்களுக்கான முதல் ஓட்டல் ஜெர்மனியில் திறக்கப்பட இருக்கிறது. இந்த ஓட்டலில் தங்கவேண்டுமானால் உடை உடுத்தி இருப்பவர்கள் அனைவரும் வரவேற்பு அறையிலேயே தங்கள் உடைகளை களைந்து விடவேண்டும். எப்போதும் நிர்வாணமாக தான் இருக்கவேண்டும். ஓட்டலில் தங்கி இருக்கும் போது எப்போதாவது உடை உடுத்தி இருந்ததை ஓட்டல் பணியாளர்கள் பார்த்துவிட்டால் உடனே அவர்களை ஓட்டலை காலி செய்து கொண்டு செல்லும்படி அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

அமெரிக்க பள்ளியில் மாணவியை கற்பழித்து படம் பிடித்த மாணவர்கள்

அமெரிக்காவில் கலி போர்னியா அருகே உள்ளது ரிச்மாண்ட் நகரம். இங்குள்ள உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்த 16 வயது மாணவி பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது பள்ளி அருகே நின்ற 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அவளை மடக்கி மறைவான இடத்துக்கு இழுத்து சென்றனர்.

அங்கு அவர்கள் வலுக்கட்டாயமாக மாணவியை மாறி மாறி கற்பழித்தனர். கற்பழிப்பு நடந்தபோது மற்ற மாணவர்கள் அதை சுற்றி நின்று வேடிக்கை பார்த்ததுடன் கேலிச்சிரிப்புடன் நடனமாடினார்கள். கற்பழிப்பை வீடியோ படமும் எடுத்தனர்.

இத்தனைக்கும் அந்த வழியாக பலர் நடந்து சென்றனர். ஆனால் அவர்கள் யாரும் அதை தடுக்கவில்லை. 2 1/2 மணி நேரம் கற்பழிப்பு நீடித்தது.

அப்போது அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் பங்கேற்ற பெண் இந்த சம்பவத்தை பார்த்து உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் அந்த இடத்துக்கு வந்தபோது எல்லாம் முடிந்து இருந்தது. மாணவி அரை குறை மயக்கத்தில் மேஜையில் விழுந்து கிடந்தாள். மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து ஓடி விட்டனர். மாணவியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சந்தேகத்தின் பேரில் 5 மாணவர்களை கைது செய்தனர்.

இந்த சம்பவம் நடந்த ரிச் மாண்ட் நகரில் 1 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். குற்றங்கள் அதிகம் நடக்கும் நகரமாக இது உள்ளது.

கற்பழிப்பு நடந்தது பற்றி இந்த பள்ளி முன்னாள் மாணவி ஜென்னி ஸ்டின் பெர்க் கூறும்போது, அந்த பள்ளியில் எங்களுக்கு பாதுகாப்பு கிடையாது. எனவே நான் முன்கூட்டியே மாற்றலாகி வேறு பள்ளிக்கு வந்து விட்டேன் என்றார்.

செக்ஸ் சுகம் தரும் பெண் ரோபோட்


மனித குலத்துக்கு உதவியாக இருப்பதற்காக ரோபோட் என்ற இயந்திர மனிதனை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். இந்த ரோபோட்டுகள் கார் கழுவுவது, வீடுகளை பெருக்குவது, தொழிற்சாலைகளில் கடின வேலைகளை செய்வது போன்ற வேலைகளை செய்து வருகிறது. இப்போது அமெரிக்காவில் பெண் சுகம் தரும் ரோபோட்டை உருவாக்கி உள்ளனர். லாஸ்வேகாஸ் நகரில் நடந்த அறிவியல் கண்காட்சியில் இந்த ரோபோட் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

5 அடி 7 அங்குலம் உயரத்தில் 60 கிலோ எடையில் இந்த ரோபோட் பெண்களை போலவே மிருதுவான சதைகளை கொண்டு உள்ளது. உடல் உஷ்ணமும் சீராக உள்ளது. செயற்கையாக உருவாக்கப்பட்ட புத்திசாலித்தனத்துடன் இது செயல்படுகிறது. இதற்கு மெக்கானிக்கல் இதயம் உண்டு. அதனிடம் பேசலாம், சிரிக்கலாம், நீங்கள் தொட்டால் அதை உணர்ந்து கொள்ளும். தனிமையான நேரங்களில் ஆண்களுக்கு தேவைப்பட்ட சுகத்தை தரும் வகையில் இந்த ரோபோட் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு ராக்சி என்று பெயர் சூட்டி உள்ளனர். இந்த ரோபோட் உடன் அதை உருவாக்கிய விஞ்ஞானி டக்ளஸ் ஹன்ஸ் வாழ்க்கை நடத்தி வருகிறார்.

இந்த ரோபோட்டுகளில் 5 வகைகள் உள்ளன. ஒன்று துணிச்சலானது. சாகசங்கள் செய்யக்கூடியது. இரண்டாவது ரகம் அதிகம் கூச்சப்படக்கூடியது. உங்களுக்கு விருப்பமான மார்பளவில் இனத்தில், நிறத்தில், ரோபோட்டை வாங்கலாம். இந்த ரோபோட்டை இணையதளம் மூலம் தான் வாங்கமுடியும். ட்ரூ கம்பானியன்.காம் என்ற இணையதளத்தில் ஆர்டர் கொடுக்கலாம்.

சந்திரன் சுருங்குகிறது - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


அமெரிக்க வானியல் மண்டல ஆய்வு விஞ்ஞானிகள் சந்திரன் சுருங்கி வருவதாகக் கண்டுபிடித்துள்ளனர். நாசாவிலிருந்து எடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான துணைக்கோள் படங்களை ஆராய்ந்து இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.

சந்திரனின் மேற்புறத்தில் சுருக்கங்கள் இருப்பது தெரியவந்ததையடுத்து அவர்கள் சந்திரன் சுருங்கிக் கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

சந்திரனின் மேற்புரத்தில் காணப்படும் இந்த சுருக்கங்கள் பல மைல்கள் நீளம் ஊடையதாக இருப்பது தெரிய வந்துள்ளது.

சந்திரன் அதன் சுற்றளவில் 200மீ சுருங்கியுள்ளது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஆனால் கோள்கள் ஆய்வு விஞ்ஞானிகளுக்கு இந்த 'சுருங்கல்' விவகாரம் ஒன்றும் புதிதல்ல. சந்திரன் உருவான போது பூமி போலவே அதன் மையத்தில் உஷ்ண மையம் இருந்தது. அதனால் அது துவக்கத்தில் விரிவடைந்தது. தற்போது குளிரடைதல் செயல் காரணமாக சந்திரன் சுருங்குகிறது என்று கூறுகின்றனர் இந்த நிபுண‌ர்கள்.

இதனால் சந்திரன் இன்னும் குளிரடைகிறது என்று தெரியவந்துள்ளது. இதனால் அதன் மேற்புறம் அழுத்தம் பெற்று சுருங்குகிறது. இதனால்தான் இந்த சுருக்கங்கள் தோன்றுகின்றன.

வாஷிங்டனின் உள்ள ஸ்மித்சோனியன் இன்ஸ்டிட்யூட்டின் தாமஸ் வாட்டர்ஸ் என்ற விஞ்ஞானியின் தலைமையில் ஒரு குழு சாட்டிலைட் புகைப்படங்களை ஆய்வு செய்தது.

சந்திரனில் எந்தவிதமான புவி நடவடிக்கைகளும் நடைபெறுவதில்லை அது நிலவியல் அடிப்படையில் இறந்த ஒன்று (Geologically Dead) என்றும், அப்படி ஏதாவது நிலவியல் நடவடிக்கைகள் இருந்திருந்தால் அது பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததே என்றும் கருதப்பட்டு வந்த கருத்துக்களை தற்போதைய கண்டுபிடிப்புகள் முறியடித்துள்ளது.

ஆனால் சந்திரன் சுருங்கி அது வேறு எங்கும் சென்று விடவோ அல்லது காணாமல் போகவோ வாய்ப்பில்லை என்று கூறும் இந்த விஞ்ஞானிகள் இந்த சுருக்க விவகாரம் பற்றி கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று கூறியுள்ளனர்.

4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் மீது செவ்வாய் கிரகம் அளவிலான பொருள் ஒன்று மோதியதால் பயங்கரமான இடிபாட்டுத் துகள்கள் உருவாயின, பிறகு இந்தத் துகள்கள் ஒன்றோடொன்று மோதி நசுங்கி சந்திரனாக உருவாகியது. இந்தத் துகள்களில் சில கதிரியக்கத்தை வெளியிடத் துவங்கின. சந்திரன் உருவான கதை இதுதான் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

2012 உலகை உலுக்க வரும் மிகப்பெரிய சூரியச் சூறாவளி


100மில்லியன் ஹைட்ரஜன் குண்டுகளின் சக்தி கொண்ட மிகப்பெரிய சூரியப்புயல் ஒன்று 2012ஆம் ஆண்டு ஏற்படும் என்றும் இதனால் பூமியில் பலத்த சேதங்கள் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நாடுகளின் மின்சார வினியோக அமைப்புகளும் தகவல் தொடர்பு அமைப்புகளும் பலத்த சேதமடையும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

விமானப் போக்குவரத்து, மின்னணுச் சாதன அமைப்புகள், கப்பல் போக்குவரத்திற்கு உதவும் உபகரணங்கள் முக்கியமாக செயற்கைக் கோள்கள் வேலை செய்யாது.

நாசாவின் சூரியப்பௌதீகப் பிரிவு விஞ்ஞானி டாக்டர் ஃபிஷர் இது பற்றிக் கூறுகையில் 100 ஆண்டுகளில் அசாதாரண சக்தி கொண்ட இந்த சூரியப்புயல் முதன் முதலாகத் தாக்கவுள்ளது. இதனால் பெரிய அளவுக்கு மின்வினியோகத் தடைகளும், தகவல்தொடர்பு சிக்னல்கள் இழக்கப்படும். என்று எச்சரித்துள்ளார்.

சூரியப்புயல் தாக்குகையில் சூரியனின் வெப்ப அளவு 10,000 டிகிரி பாரன்ஹீட்டையும் கடந்து விடும்.

இந்த சூப்பர் சூரிய சூறாவளி இடி இடிப்பது போன்று நிகழும். பூமியின் காந்தப்புலங்களை நம்பி இயங்கும் நமது தகவல்தொழில் நுட்ப உலகம் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இந்த வகை அதிசக்தி சூரியப்புயல் 2012 ஆம் ஆண்டிலோ அல்லது நிச்சயமாக 2013ஆம் ஆண்டிலோ ஏற்படும் என்பது உறுதி ஆனால் விளைவுகள் பற்றி இன்னமும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சூரியப்புயலால் ஏற்படும் சூரிய எரிதழல்கள் பூமியின் காந்தப் புலத்தை பாதிக்கும். ஆனால் இது மிகமிகவேகமாக நடக்கும், ஒரு இடி இடிப்பது போன்ற நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்து விடும் என்கிறார் நாசா விஞ்ஞானி பிஷர்.

இதனால் ஏற்படும் மின்வினியோக அமைப்புகள் சேத உள்ளிட்ட பிற சேதங்களை சீர் செய்ய மிகப்பெரிய அளவில் பணம் செலவழியும் என்பதோடு நீண்ட காலம் பிடிக்கும் என்பதும் உண்மை.

சூரியசுழற்சியில் 24ஆம் கட்டத்தை அது எட்டுவதால் இந்த நிகழ்வு தவிர்க்க முடியாதது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்தக் கண்டுபிடிப்புகள் ஆஸ்ட்ரேலியன் சயன்ஸ் என்ற பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.

பூமியின் மேற்புற வளிமண்டலம் சுருங்குகிறது.


சூரியனிலிருந்து கசியும் புற ஊதாக்கதிர்களின் வீச்சு குறைந்து போயுள்ளதால் பூமியின் மேற்புற வளிமண்டலம் எதிர்பாராவிதமாக சுருங்கியுள்ளதாகவும், குளிரடைந்துள்ளதாகவும் அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2007 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் சூரியனின் ஆற்றல் வெளிப்பாடு வழக்கத்துக்கு மாறான அளவில் குறைந்துள்ளதாக இந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு ஆண்டு காலக்கட்டத்தில் 90 முதல் 500 கி.மீ வரை உயரமாக பரவியிருக்கும் வான்வெளி வெப்பப்பரப்பு (Thermosphere) புற ஊதாக்கதிர்வீச்சு குறைவு காரணமாக குளிர்ச்சி அடைந்துள்ளது அல்லது சுருங்கியுள்ளது என்று கொலராடோவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

1996ஆம் ஆண்டை ஒப்பு நோக்குகையில் 2008அம் ஆண்டு இந்த வான்வெளி வெப்பப் பரப்பு 74 டிகிரி பாரன்ஹீட் அல்லது 41 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் குறைந்து குளிர்ச்சியடைந்துள்ளது என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆனால் பூமியில் இதனால் என்ன மாற்றங்கள் அல்லது நிகழ்வுகள் ஏற்படும் என்பது பற்றி இந்த விஞ்ஞானிகள் எதுவும் தெரிவிக்கவில்லை

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

வன்னியில் 40 ஆயிரம் இளம் விதவைகள்!


ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குப் போவதென்பது தினமும் போருக்குச் செல்வது போலத்தான்.

இலங்கை ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூடு ஒரு பக்கமென்றால், அங்குள்ள மீன வர்களின் தாக்குதல் என்பது மறுபக்கம். கச்சத்தீவு ஒப்பந்தப் படி எங்களுக்கு எல்லை தாண்டிச் சென்று மீன்பிடிக்க உரிமையுண்டு என்று தமிழக மீனவர்கள் ஒருபக்கம் சட்டம் பேச, எங்கள் எல்லைக்குள் வந்தால் அடிப்போம், உதைப்போம் நிர்வாணப் படுத்துவோம், ஏன் சிறை கூட பிடிப்போமென்று சமீபகாலமாக நடைமுறைப்படுத்தி வரும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இலங்கை மீனவர்களெனும்போது அதில் சிங்கள மீனவர்களோடு, ஈழ மீனவர்களும் அடக்கம் என்பது தான் வருத்தமான செய்தி.

இதற்கு முடிவு கட்டும் விதத்தில், இருநாட்டுப் பிரதிநிதிகளின் பங்களிப்போடு செயல்படும் "நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பு' யோசித்ததன் விளைவு, ஈழ கடற்பரப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் மீனவர் சங்கப் பிரதிநிதிகளை, தமிழக மீனவர்களோடு மனம் விட்டு கலந்துரையாட ஏற்பாடு செய்தனர். இதற்கான அனுமதியை பெரும்பாடுபட்டு இலங்கை அரசிடம் பெற்றனர். மூன்று சிங்களவர் உட்பட மொத்தம் 22 மீனவ சங்கப் பிரதிநிதிகள் கடந்த 16-ந்தேதி விமானம் மூலம் திருச்சி வந்து சேர்ந்தனர்.

இவர்களுக்கெல்லாம் தலைமையேற்று வந்திருக்க வேண்டிய யாழ்குடா நாட்டு மீனவ சம்மேளனத் தலை வர் தவரத்தினத்தை, அவர் ஈழ ஆதரவாளர் என்பதால் கொழும்பு விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி விட்டது இலங்கை அரசு.

திருச்சியிலிருந்து இரவு 10 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர் ஈழ மீனவப் பிரதிநிதிகள். முழுக்க முழுக்க தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் எல்லாம் நடப்பதால், எந்த உதவியையும் தமிழக அரசு செய்யவில்லை.

17-ந்தேதி காலை ராமேஸ்வரத்திலுள்ள பல்வேறு மீனவர் சங்கப் பிரதிநிதிகளும், இலங்கைப் பிரதிநிதிகளும் சந்தித்து அறிமுகப் படுத்திக் கொண்டனர்.

அவர்கள் கலந்துரையாடுவதற்கு முன்பு கிடைத்த நேரத்தில், நாம் அவர்களுடன் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினோம்.

மீன்வள ஆய்வாளரும், யாழ் பல்கலைக் கழகப் பேராசிரியருமான சிலுவைதான், ""மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம், பேசாளை, வடமராச்சி பகுதி வரைக்குமுள்ள பகுதிக்குள் தான் தமிழக மீனவர்கள் எல்லை கடந்து வருகிறார்கள். இதுக்குக் காரணம் அங்குதான் "பிரான்பேங்க்' என்றழைக்கப்படும் இறால் உற்பத்தி அதிகமுள்ளது. தமிழக மீனவர்கள் எங்களைப் போல் பாரம்பரிய முறையில் மீன்பிடிப்பதில்லை. உலக அளவில் தடைசெய்யப்பட்ட கொடிய வலைகளைப் பயன் படுத்துகிறார்கள். "ட்ராலர் நெட்' என்று அழைக்கப்படும் இரட்டை மடிகளைப் பயன்படுத்துகிறார்கள். அது மட்டுமில்லாது நாங்கள் விரித்து வைத்திருக்கும் சிறிய வலைகளை, தங்களது நவீன விசைப்படகுகள் மூலம் அறுத்து விடுகிறார்கள். பெரும்பாலும் நாங்கள் தமிழக மீனவர்களை தாக்குவ தில்லை. சிங்கள மீனவர்கள் சிலர் தாக்குகிறார்கள். தமிழக மீனவர்களும் எங்களைப் போல் பாரம்பரிய முறையில் மீன்பிடிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட வலைகளை தமிழக அதிகாரிகள் எப்படி அனுமதிக் கிறார்கள்?'' என்றார் நம்மிடம்.

""தற்போது இலங்கை நிலவரம் எப்படியுள்ளது'' என்றோம். ஈழ மீனவர் குழுவின் தலைவராக வந்தி ருக்கும் யாழ்ப்பாணம் வடமராச்சியைச் சேர்ந்த சூர்யகுமாரன் நம்மிடம், ""இந்தியாவும் எங்களை கைவிட்ட பிறகு, உயிர் வாழ்வதற்காக இலங்கை அரசுக்கு கட்டுப்பட்டு வாழுகிறோம். சுருக்கமாக சொன்னால் நாங்கள் சிங்களர்களாக மாறி வருகிறோம். நான் இந்த வயதில் தாடி வைத்திருப்பதற்கு என்ன காரணமென்று நினைக்கிறீர்கள். வன்னி முகாமிலிருந்து என் மகனைக் காணோம். அதுபோல என் மகளையும் காணோம். அவர்கள் உயிரோடு இருப்பார்களென்று இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறேன். என்னைப் போல பல பெற்றோர்களின் நிலை இதுதான்!'' என்றார் கண்கள் கலங்க.

நம்மிடம் பேசிய ஈழப்பிரதிநிதிகள் சிலர், ""தயவு செய்து எங்களது போட்டோவையோ, பேச்சையோ புக்ல போட்றாதீர்கள். நாங்கள் திரும்ப கட்டு நாயகாவில் இறங்கி வீட்டுக்கு செல்லோணும். எங்க கூடவே மூன்று சிங்களவர்களும் வந்திருக்காகள். எல்லாம் ஒரு கண்காணிப்புதான். எங்களுக்கு இன்றுவரை இருக்கும் ஒரே கேள்வி இதுதான். யுத்தத்தின் கடைசி நாட்களில் குழந்தைகள், பெண்கள் என்று பார்க்காமல் கொத்துக் குண்டுகளையும், நெருப்புக் குண்டுகளையும் போட்டு கொன்றார்களே. அதை ஏன் உங்களால் தடுக்க முடியவில்லை? திருமா வளவன், கனிமொழி எல்லாம் ஆறுதல் சொல்ல வந்தார்கள். உடன் வந்த சிங்கள அதிகாரிகள் முன் அவர்களால் ஏதாவது பேச முடிந்ததா, கனிமொழியால் அழத்தான் முடிந்தது. இப்போது நாங்கள் இரவு 7.30-க்கு மேல் வெளியே செல்லக்கூடாது. வீட்டிற்கு வந்துவிட வேண்டும்'' என்றவர்களிடம், ""இலங்கை ராணுவத்தில் சீனக்காரர்கள் அதிகம் இருக்கிறார்களாமே?'' என்றோம்.

""எங்கட நாட்டில் 17 நாட்டுக்காரர்கள் -அதுவும் இந்தியா உட்பட அங்கு இருக்கிறார் கள். 2 லட்சம் தமிழர்களை இந்த 17 நாடுகளும் சேர்ந்துதான் கொன்றன'' என்றனர்.

""தமிழ்ப் பெண்களை சிங்களர்கள் கட்டாயத் திருமணம் செய்து கொள்கிறார் களாமே'' என்றதற்கு,
""இது முழுக்க வதந்திதான். கலப்புத் திருமணம் என்பது யுத்த காலத்திலும் நடந்தது. இப்போதும் நடக்கிறது. கட்டாயத் திருமணமெல் லாம் இல்லை. இப்போது வன்னி பகுதியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் விதவைகள் இருக்கிறார்கள். பெற்றோரை இழந்த குழந்தை கள், பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யும் உதவியால் தான் இன்று எங்கள் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் இன்று தங்கச்சிமடம் பகுதியில் மீனவ மக்களை சந்திக்க சென்றோம். அங்கு பள் ளிப்பிள்ளைகள் எங்களை கைதட்டி வரவேற்றார் கள். நீண்ட காலத்திற்கு பிறகு சந்தோஷமாக இருந்தது. இலங்கை சென்றதும், மீண்டும் துக்கம்தான் எங்களை துரத்தும்'' என்றனர் விரக்தியாக.

கசக்கும் இல்லறம்! இனிக்கும் கள்ள உறவு! -தலைகீழாகும் கலாச்சாரம்!


பார்த்தவுடன் பற்றிக்கொள்வது... பழக ஆரம்பித்ததும் பற்றிக்கொள்வது... செல் ஃபோனில் குரலைக்கேட்ட மாத்திரமே பற்றிக்கொள்வது... மிஸ்டுகால் மூலம் பற்றிக்கொள்வது... சாட்டிங் மூலம் பற்றிக்கொள்வது... என பலரையும் பலவகை களிலும் காதல் தீ பற்றிக்கொண்டு... பாடாய் படுத்திக்கொண்டிருக்கிறது.

இத்தகைய காதல் இன்றைய வாழ்க்கையில் சகஜம்தான் என்றபோதும்... இதுபோன்ற காதல் அரங்கேற்றங்களைப் பார்க்கும் பெருசுகள்... "காமம் கண்ணை மறைக்கும்' ’என பெருமூச்சோடு சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் வகைதொகை இல்லாமல்.... வயது வித்தியாசம் இல்லாமல்... குடும்ப உறவுகள் பற்றியெல்லாம் யோசிக்காமல்... கல்யாணமான நிலையிலும் லவ் மாரத்தானில் ஓட ஆரம்பித்திருக்கும் சிலரைப் பார்க்கும் போது... காமம் கண்ணை மட்டுமல்ல; அது அன்பையும் அறிவையும் கௌரவத்தையும் மறைக்கும் என்றபடி... வெட்டவெளி நோக்கி வெறிக்கத்தோன்றுகிறது.

தமிழகம் முழுக்க பரவிவரும் இத்தகைய லஜ்ஜையற்ற காதல் கலாச்சாரத்துக்கு... சில சம்பவ சாட்சிகள்.

சம்பவம்-1 :

தேவராஜ்-கலைச்செல்வி தம்பதிகளுக்கு ஆணும் பெண்ணுமாய் இரண்டு அழகிய பிள்ளைகள். வடமாவட்ட தலைநகரம் ஒன்றில் சந்தோசமாக வாழ ஆரம்பித்தார்கள். பிள் ளைகளை நல்லமுறை யில் படிக்க வைக்க ஆசைப்பட்ட தேவராஜ்... ஃபாரினுக்குப் போனார். கடுமையாக உழைத்தார். வியர்வைத் துளிகளைத் தங்கக்காசு களாக மாற்ற ஆரம்பித் தார். இப்படி திரைகட லோடிச் சம்பாதித்த செல்வத்தை எல்லாம்... தன் மனைவி பெயரில்... வீடு நிலபுலன்கள் என வாங்கிப் போட்டு தமிழகத்தில் முத லீடாக்கினார். பிளாட் வாங்கி மாடிவீடும் கட்டினார்.

மகள் கல்லூரிக்குப் போக... மகன் பள்ளிப் படிப்பைப் படித்துவந்தான். இந்த நிலையில்.... இரண்டு வாரங்களுக்கு முன் மகளின் கல்லூரிக் கட்டணத்துக்காக நகைகளை அடமானம் வைத்து வருவதாகச் சொல்லி... இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு வெளியே சென்ற கலைச்செல்வி.. வீடு திரும்பவில்லை. பரிதவித்துப்போன தேவராஜும் அவரது பிள்ளைகளும் கலைச்செல்வியை பதட்டத் தோடு தேடினர். எந்தத் தகவலும் இல்லாததால்.. பயந்துபோன அந்தக் குடும்பம்... காவல் நிலையத்துக்குப் போனது.

"என் மனைவி ரொம்ப வெளி உலகம் தெரி யாதவ. அவ அடமானம் வைக்கப்போன நகை களைக் காணாப்போட்டுட்டாளோ என்னவோ. பயந்துபோய் வீடு திரும்பலை போலிருக்கு. நகை போனாப்போகுது. எங்களுக்கு என் மனைவி கலைச்செல்வி பத்திரமா வந்தாலே போதும்ங்க'’என்று தேவராஜ் கண்கலங்க ..... அவரது பிள்ளைகளோ ‘"சார்... சார் எப்படியாவது எங்க அம்மாவைக் கண்டு பிடிச்சிக் கொடுத்துடுங்க. அம்மா இல்லாம எங்களால இருக்கமுடியாது'’என்று காக்கிகளிடம் கெஞ்சினர்.

அப்போது ஸ்டேஷன் வாசலுக்கு வந்து நின்றது அந்தக் கார். அதிலிருந்து கலைச்செல்வியும்... அரசு சித்த மருத்துவர் பாஸ்கரனும் இறங்க.... தேவராஜ் குடும்பத்தினரின் முகத்தில் குபீரென நிம்மதி வெளிச்சம். காரணம்... பாஸ்கரன் தேவராஜ் வீட்டின் மாடிப் போர்ஷனில்தான் குடியிருக்கிறார். அவரைப் பார்த்ததும்.. தேவராஜ்...

""வாங்க டாக்டர். என் மனைவியைக் கண்டு பிடிச்சிக் கொண்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி''’ என்று நெகிழ்ந்தார். பாஸ்கரோ பதில் ஏதும் சொல்லாமல் இறுக்கமான முகத்தோடு இருக்க....

கலைச்செல்வியோ ""என்னை நீங்க தேடிக்கிட்டு இருக்கீங்கன்னு கேள்விப்பட்டுதான் வந்தேன். இனி தேடாதீங்க. நானும் பாஸ்கரும் சேர்ந்து வாழப் போறோம். எங்க வாழ்க்கைல குறுக்கிடாதீங்க'' என்றாள் தெனாவெட்டாக.

இதைக்கேட்டு தேவராஜ் தலையில் இடிவிழுந்த மாதிரி நிற்க... அவரது மகள் கோபமாகி ""அம்மா உன் வயசென்ன? கல்யாண வயசில் உன் மகள் நான் இருக்கேன். அப்படியிருக்க... எங்களையெல்லாம் விட்டுட்டு... உன்னைவிட சின்ன வயசுக்காரனோட போறேன்னு சொல்றியே உனக்கு வெட்கமா இல்லையா''’என்றாள் காட்டமாக.

பள்ளியில் படிக்கும் மகனோ, ""அம்மா தயவுசெஞ்சு நீ வீட்டுக்கு வந்துடும்மா. இல்லைன்னா எல்லாரும் கேள்வி கேட்பாங்க. அவமானமா ஆய்டும்மா. நான் ஸ்கூலுக்குக் கூடப் போகமுடியாதும்மா. ப்ளீஸ் வந்துடும்மா''’என்று கண்ணீருடன் கெஞ்ச ஆரம்பித்தான்.

கலைச்செல்வியோ, போலீஸார் பக்கம் திரும்பி ""என்னை யாரும் கடத்தலை, என் விருப்பப்படிதான் போறேன். வழக்கெல்லாம் பதிவு பண்ணாதீங்க''’என்றபடி.. பாஸ்கரின் கையைப்பிடித்துக் கொண்டு, .பிள்ளைகளைக்கூட திரும்பிப் பார்க்காமல்... காரில் போய் ஏறி னாள். தேவராஜ் குடும் பம் தலைகவிழ்ந்து கண்ணீர் வடிக்க... காக்கிகள் அவர்களை ஆறுதல் படுத்த படாதபாடு பட்டனர்.

சம்பவம்-2 :

பெரம்பலூர் ஆயுதப்படையில் போ லீஸாக இருக்கிறார் கல்பனா. அவருக்கும் அவரது அத்தை மகன் சங்கருக்கும் திருமணம் ஆனது. ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்த நிலையில் கல்பனா கர்ப்பமானார். இதைக்கண்டு மகிழ்ச்சியான கணவர் சங்கர்... ""இந்தத் தடவை நமக்கு ஆம்ப ளைப் பிள்ளைதான் பிறக்கப்போவுது.. வாயும் வயிறுமா இருக்கும் உன்னை கொஞ்சநாள் எங்க அம்மா வீட்டில் விடுறேன்'' என்று அழைக்க... ""நான் எங்கும் வரமுடியாது '' என்று அடம் பிடித்தார் கல்பனா. ஏன் என்று சங்கர் கேட்க... கல்பனாவோ... ""என் வயித்தில் வளரும் குழந்தைக்கு நீ அப்பா இல்லை. பக்கத்து வீட்டில் இருக்கும் டிராஃபிக் போலீஸ்காரர் காளிதாஸ் தான் அப்பா. அவரை விட்டுட்டு நான் எங்கும் வரமாட்டேன்''’ என்று கணவர் சங்கரின் தலையில் குண்டைப்போட்டார்.

இதைக்கண்டு கொதித்துபோன சங்கர்... என் மனைவியின் மனதைக் கெடுத்துவிட்டார் என டிராஃபிக் காளிதாஸ் மீது புகார் கொடுக்க... காக்கிகள் கண்டித்தனர். கல்பனா தன் முடிவில் உறுதியாக இருக்க.. காளிதாஸின் மனைவியையும் கூப்பிட்டு விசயத்தைச் சொன் னார்கள். காளிதாஸின் மனைவி யோ... ""எனக்கும் என் வீட்டுக் காரருக்கும் இத்தனை வருசம் ஆகியும் குழந்தை இல்லை. அதனால் கல்பனாவை அவ ருக்கு நானே ரெண்டாம் தாரமா கட்டிவச்சிடுறேன். கல்பனாவும் எங்க வீட்டிலேயே இருக்கட் டும்''’என்று வீடு ’டிராபிக்’ ஆவதைப்பற்றிக் கவலைப்படாமல் சொன்னார். இதைக்கேட்டு காக்கிகள் திகைத்துப்போக... கல்பனாவின் உறவினர்களும் சங்கரின் உறவினர்களும் "குடும்ப கௌரவத்தைக் கெடுக்காதே. உன் கணவரோடு வாழு'’என கல்பனாவை சமாதானப்படுத்த முயன்றனர். இந்தக் களேபரங்களைக் கண்டு கல்பனாவின் பெண்குழந்தை அழுதது. கல்பனாவோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் காளிதாஸுடன் புறப்பட... போலீ ஸோ, கணவர் சங்கர் கொடுத்த புகாரைப் பதிவு செய்துவிட்டு... "அடச்சே'’என்று தலையில் அடித்துக்கொண்டது.

சம்பவம்-3 :

வெளிநாட்டில் வேலைபார்க்கும் ஜாபர் அலிக்கு... அழகிய குடும்பம். ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாய் ரோஜா மலர்கள் போல் இரண்டு குழந்தைகள். மனைவியையும் குழந்தைகளையும் தனியாக விட்டுவிட்டு... கடல்கடந்து வந்துவிட்டோமே என கவலைப்பட்ட ஜாபர்... தன் சித்திப் பையனை செல்போனில் கூப்பிட்டு "டேய் தம்பீ... அங்க அண்ணியும் குழந்தைகளும் துணையில்லாம தனியா இருக்காங்க. அடிக்கடி போய்ப் பார்த்துக்க. கடை கண்ணிக்குப் போக ஆள் இல்லை. அடிக்கடிபோய்... வீட்டுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுத்துடு'’என்று கேட்டுக்கொண்டார். தன் மனைவியையும் அடிக்கடி தொடர்பு கொண்டு... "கவலைப்படாதே கண்ணு. 6 மாசத்தில் வந்துடறேன். என் சித்திப் பையனை உனக்கு ஹெல்புக்கு வரச்சொல்லி யிருக்கேன் புள்ள. பயப்படாம இரு. நேரா நேரத்துக்கு சாப்புடு. பிள்ளைகளையும் பத்திரமா பார்த்துக்க'’என விசாரித்தபடியே இருந்தார்.

கொஞ்சநாள் ஆனது. ஜாபர் வியர்வை சிந்தி அனுப்பி வைத்த 2 லட்சம் பணம், 100 பவுன் நகைகளோடும்... தன் அண்ணி யான ஜாபரின் மனைவியோடும் எஸ்கேப் ஆகிவிட்டான் சித்திப்பையன். உறவினர்கள் மூலம் தகவல் கேட்டு... பகீராகி... பாதி உயிராய்... பிளைட் பிடித்து தன் வீட்டுக்கு ஓடிவந்தார் ஜாபர். அவரது இரண்டு குழந்தைகளும் வீட்டில் தனியாய்த் தவித்துக்கொண்டிருந்தன. அவர்களுடன் போய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு... பிள்ளை களை எப்படி வளர்ப்பது? பிள்ளைகளை விட்டுவிட்டு மறுபடியும் எப்படி வெளிநாட்டுக்குப் போவது? என கலக்கத்தோடு கை பிசைந்துகொண்டிருக்கிறார் ஜாபர். திருச்சி மண்டலத்தில் நடந்த கதை இது.

காவல்துறை அதிகாரியான சிவசுப்பிரமணியன் சொல்கிறார். ""இப்படிக் கள்ளத்தொடர்பு வைத்து... குடும்பத்தை விட்டுப் பிரிந்து ஓடும் பெண்களைப் பிடித்து நாம் விசாரித்தால்... "எனக்கு கணவரோடு வாழப் பிடிக்க வில்லை. அதனால் எங்காவது லேடீஸ் ஹாஸ்டலில் தங்கிக் கொண்டு என் மிச்ச காலத்தைக் கழிக்கப்போகி றேன்'’என்று பதில் விளக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு.... கள்ளக் காதலனோடு குடும்பம் நடத்தப் போய்விடு கிறார்கள். இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்று புரியவில்லை. இவர்களால் இவர்களது பிள்ளைகள் படுகிறபாடுதான் சகிக்கமுடியாததாக இருக்கிறது'' என்கிறார் வருத்த வருத்தமாய்.

நெய்வேலியைச் சேர்ந்த சமூக சேவகர் மதியோ ‘""இப்போது கலாச்சாரச் சீர்கேடு ஏகத்துக்கும் பெருகிவிட்டது.. டி.வி.க்களிலும் திரைப்படங்களிலும் ஆபாசக் காட்சிகளுக்கு அளவே இல்லை. இது தவிர செல்போன்களில் காஞ்சி தேவநாத குருக்கள் தொடங்கி... நித்யானந்தா வரையிலான செக்ஸ் காட்சிகள் தாராளமாகப் புழங்குகின்றன. கணவன் அருகில் இல்லாத நிலையில் இதுபோன்ற படங்களைப் பார்க்கும் பெண்கள்.. புத்தி பேதலிப்புக்கு ஆளா கிறார்கள். அவர்கள் பார்க்கும் ஆபாசக்காட்சி கள் அவர்களைச் சறுக்கவைக்கிறது. பெண் களை வளைக்கவிரும்பும் வில்லன்களும்... இதுபோன்ற ஆபாசக் காட்சிகளை பெண் களின் பார்வைக்குக் கொண்டுபோய்... எதுவும் தப்பில்லை என்று மூளைச்சலவை செய்து... அவர்களை வீழ்த்துகிறார்கள். எனவே சமூகமே ஆபாசக் கலாச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். ஒவ்வொருவரும் நமக்கென்ன என்று போய்க்கொண்டிருந்தால்... நாளை நம்மைச் சார்ந்தவர்களே கூட தடம்மாறலாம். அவமானத்தைத் தேடித்தரலாம். முன்பெல் லாம் அதோ போறாரே அவருக்கு இரண்டு தாரம், மூணு தாரம் என்பார்கள். இப்போது அதோ போறாளே... என்று சொல்லுமள வுக்கு நிலைமை மாறியுள்ளது. இப்படி தடம்மாறிப் போகிறவர்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மோக வேகம் குறைந்ததும் புதிதாகத் தேடிக்கொண்ட திடீர் உறவுகள் புளிக்கத் தான் செய்யும்''’என்று எச்சரிக்கை மணியடிக்கிறார்.

குடும்பம் என்னும் அன்புக் கோட்டைக்குள் இருந்தபடியே... மன்மத வேதத்தை ஓதுவது போற்றுதலுக்குரியது. மன்மதத்துக்காக குடும்பக் கோட்டையை உடைத்தெறிவது தூற்றுதலுக்குரியது.

சட்டக்கல்லூரி ஏள போலீஸ்! மீண்டும் டென்ஷன்!


சென்னை சட்டக் கல்லூரி மாணவர் அசோக்குமாரை போலீஸ் அடித்தே கொன்று விட்டது’என்ற ரீதியில் 18-ம் தேதி பரபரப்புத் தகவல் ஒன்று பரவ... பாரிமுனைப் பகுதி பதட் டத்தில் மூழ்கியது. கொந் தளித்துப்போன சட்டக்கல்லூரி மாணவ- மாணவிகள்.... திபு திபுவென பாரிமுனையின் நான்கு புறத்தையும் முற்றுகையிட்டு சாலைமறியலில் குதித்தனர். சாலைகளின் குறுக்கே நைலான் கயிறுகளைக் கட்டி... யாரையும் அந்த வழியாய் செல்ல விடாது தடுத்தனர். இதனால் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் அப்படி அப்படியே நிற்க... டிராஃபிக் ஜாமில் மூச்சுத்திணற ஆரம் பித்தது வடசென்னை. தகவல் காக்கிகளுக்குப் போக... போலீஸ் டீம் ஏரியா முழுக்க ரவுண்ட் கட்டியது. காக்கிகளின் தலையைப் பார்த்ததும் மேலும் ஆவேசமான மாணவ- மாணவிகள்..

""போலீஸ் அராஜகம் ஒழிக.’ ‘காக்கிச் சட்டையே எங்கள் கருப்புக்கோட்டுடன் மோதாதே'' என்றெல்லாம் குபீர்க் கோஷங்களை எழுப்பினர். பந் தோபஸ்துக்கு நின்ற காக்கிகளுக்கு... ‘எது நடந்தாலும் அமைதியாகவே இருங்கள்’’ என உத்தரவு வந்தபடியே இருக்க... அவர்கள் இறுகிப்போய் நின்றனர்.

டூவீலர் வாசிகளும் ஃபோர்வீலர் வாசிகளும் காக்கிகளிடம் நெருங்கி "என்ன சார் வேடிக்கைப் பார்த்துகிட்டு இருக்கீங்க. "எங்களுக்கு பாதை ஏற்படுத்திக்கொடுங்க'’ என்று கேட்க.. காக்கிகளோ ‘"எங்களுக்கு எதுக்குங்க வம்பு. முடிஞ்சா நீங்களே அவங்கக்கிட்ட கேட்டுக்கிட்டு போங்க' என்று முகத்தைத் திருப்பிக்கொண்டனர்..


போராட்டக் களத்தில் இருந்த சட்டக்கல்லூரி மாணவர்களிடம் என்ன நடந்தது என்றோம். கொதிப்பில் இருந்த அவர்கள்...‘""எங்க சட்டக் கல்லூரியில் ஃபைனல் இயர் படிக்கும் அசோக்குமாருக்கு சொந்த ஊர் திருக்கழுக்குன்றம் பரமசிவன் நகர். நேத்து நைட் செங்கல்பட்டில் இருந்து சொந்த ஊருக்குப்போக கே.சி.கே. என்ற தனியார் பஸ்ஸில் ஏறி இருக்கார். அப்ப பக்கத்து சீட்டில் இருந்த வடநாட்டுக்காரர் ஒருத்தருக்கும் இவருக்கும் வாக்குவாதம் நடந்திருக்கு.. உடனே கண்டக்டர் பஸ்ஸை திருக்கழுக்குன்றம் போலீஸ் ஸ்டேஷன்ல கொண்டுபோய் நிறுத்தி யிருக்கார். அப்ப அங்க இருந்த போலீஸ் வெறிபிடிச்ச மாதிரி அடிச்சி நொறுக்கியிருக்காங்க. நினைவிழந்து விழுந்த அசோக்கை அவங்களே செங்கல் பட்டு மருத்துவமனையில் அட்மிட் பண் ணிட்டுப் போய்ட்டாங்க'' என்றார்கள் ஆவேசமாய்.

நாம் அந்த கே.சி.கே. பஸ்ஸின் நடத்துநரான வாசுதேவனைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது...
“""அந்தப் பையன் பஸ்ல ஏறும்போதே சரி மப்பில் இருந்தார். "டேய் பஸ்ஸைப் பார்த்து ஒழுங்கா ஓட்டுங்கடா... ஏற்கனவே ரெண்டு ஆக்ஸிடண்ட்ல... மூணு மூணுபேரா ஆறுபேரைக் கொன்ன மாதிரி... இப்பவும் பண்ணாதீங்கடா'ன்னு சொன்னவர் எங்க ளைப் பச்சைப் பச்சையாத் திட்ட ஆரம்பிச்சார். லேடீஸ் பாசஞ்சருக்கு எதிரில் இப்படி அவர் அசிங்கமா பேசியதால்.... மத்த பயணிகள் அவரோட சண்டைக்குப் போனாங்க. தள்ளுமுள்ளு ஆகவும்தான் நாங்க போலீஸ் ஸ்டேஷன்ல அவரை ஒப்படைச் சோம்.

என்கிட்ட புகாரை எழுதி வாங்கிக்கிட்டு அனுப்பிட்டாங்க. அதுக்குப்பிறகு என்ன ஆச்சுன்னு எங்களுக்குத் தெரியாது'' என்றார் சங்கடக் குரலில்.

நாம் காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம் ஆனந்த் சின்ஹாவைத் தொடர்புகொண்டு... ""போலீஸ் தான் மாணவர் அசோக்குமாரை குற்றுயிரும் குலைஉயிருமாக அடித்துப்போட்டதாக குற்றம் சாட்டப்படுகிறதே?''’ என்றோம். எஸ்.பி.யோ ""அந்த மாணவரை பயணிகள் தாக்கியிருக்காங்க. இதை விசாரிச்ச திருக்கழுக்குன்றம் போலீஸ்.. அவரை சொந்த ஜாமீனில் அவரது உறவினரான கமலக் கண்ணனோடு அனுப்பி வைத்தது. ஆனால் அவர் வீட்டுக்குப் போகாமல் நேராக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் போய் அட்மிட் ஆகியிருக்கார். தகவல் தெரிஞ்சி இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட் போனபோது.. உங்ககிட்ட எதுவும் சொல்லமுடியாது. மேலதிகாரிகளிடம்தான் பேசுவேன்னு சொல்லியிருக்கார்.. அப்புறம் என்ன நினைச்சாரோ மிட்நைட் 1 மணியளவில் தன் கைலியால் பாத்ரூமில் தூக்குப்போட்டுக்க முயற்சி பண்ணியிருக்கார். அவரை காப்பாத்தி சிகிச்சைக் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. தற்கொலை முயற்சியில் அவர் கழுத்தெலும்பு முறிஞ்சிருக்கு. இதுதான் நடந்தது''’ என்றார்.

மாணவர் போராட்டத்தை தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருக்கும் செந்தில்குமாரோ ""தற்கொலை முயற்சி என்பதெல்லாம் போலீஸ் இட்டுக்கட்டும் கதைகள். மாணவர் அசோக்குமார் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தில் இருப்பவர். ஏற்கனவே இதே இன்ஸ்பெக்டர் இலங்கை அகதிகள் முகாமுக்குள் போய் தாக்குதல் நடத்தியபோது... அவரை எதிர்த்து முன்வரிசையில் இருந்து போராடியவர்தான் அசோக்குமார். அந்தக் கோபத்தில்தான் இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட் டீம் அவரை கொடூரமாகத் தாக்கியிருக்கிறது. தாக்கிய இந்த காக்கிகள் மீது சாதாரண வழக்கைப் போட்டிருக்கிறார்கள்.

அவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் வன்கொடுமை வழக்கைப் பதிவுசெய்யவேண்டும். போலீஸ் விசாரணைக்கு பதிலாக நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை ஓயமாட்டோம். தமிழகம் தழுவிய போராட்டம் வெடிக்கும் என்ற பயத்தில் போலீஸ் பல ஊர்களிலும் சட்டக்கல்லூரி மாணவர்களை கைது செய்தபடி இருக்கிறது. இந்த அடக்குமுறைகளை கடைசிவரை எதிர்ப்போம்'' என்றார் ஆவேசமாக.

மாணவர் அசோக்குமார்.. நீதிமன்றத் தலையீட்டிற்குப் பிறகு அப்பல்லோ மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

""ஜெயலலிதாவின் பூச்சாண்டிக்கு பயந்தவள் நானல்ல'' -சீறும் கனிமொழி எம்.பி!


இலக்கிய மேடை, பொது மேடை, அரசியல் மேடை என்கிற வித்தியாசம் இல்லாமல் எல்லா மேடைகளிலும் கனிவான பேச்சையே வெளிப்படுத்தி வருபவர் கவிஞர் கனிமொழி. அப்படிப்பட்டவரே தூத்துக்குடியில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஜெ.வுக்கு எதிராக சீறியிருக்கிறார். கோவை, திருச்சி என்று பொதுக்கூட்டங்களை கூட்டி தி.மு.க.வுக்கு எதிராகவும், கலைஞர் குடும்பத்துக்கு எதிராகவும் அதிரடி அட்டாக் பேச்சினை ஜெ. வெளிப்படுத்தி வரும் நிலையில் கனிமொழி எம்.பி.யுடன் பேசினோம். அவருடைய பேட்டியிலிருந்து...

தேர்தல் வருடம் தொடங்கிவிட்டது. பொதுத்தேர்தலுக்கு தயாராகி விட்டதா தி.மு.க.?

கனிமொழி எம்.பி. : சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்திக்க தி.மு.க. எப்போதும் தயாராகவே உள்ளது. 5-வது முறையாக முதல்வர் பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்களே எங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். தலைவரின் ஆட்சிக்கு தங்கள் ஆதரவு என்ன என்பதை கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போதே வெளிப்படுத்தி விட்டார்கள் தமிழக மக்கள். அந்த தேர்தலுக்கு பிறகும் நிறைய திட்டங்கள் முழுமை பெற்றிருக் கின்றன. எனவே வரும் சட்டமன்றத் தேர்தலிலும் முழுமையான வெற்றியை தி.மு.க. கூட்டணி பெறும்.

நலத்திட்டங்களால் மட்டுமே வெற்றி பெற்று விட முடியும் என்று நினைக்கிறீர்களா? கடந்த 1996-2001 ஆட்சி காலத்திலும் நிறைய திட்டங்களை செயல்படுத்தியது தி.மு.க. ஆனால் அதன் பிறகு வந்த தேர்தலில் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாமல் போனதே?

கனிமொழி எம்.பி. : 2001-ம் ஆண்டு தேர்தலின் போது ஜெயலலிதாவின் வாய்ச்சவடால்களையும், பொய்ப்பிரச்சாரத்தையும் நம்பி மக்கள் வாக் களித்துவிட்டார்கள். ஆனால் தங்களின் நம் பிக்கை எவ்வளவு பொய்யானது என் பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டார்கள் அந்த அம்மையா ரின் 5 ஆண்டு கால ஆட்சி காலத்தில். அரசு ஊழியர் கள், ஆசிரியர் கள், விவசாயி கள், சாலைப் பணியாளர்கள், காவல்துறை யினர் என்று எத்தனை லட் சம் பேர் பாதிக்கப்பட்டார்கள் என் பதை எல்லோருமே நினைவில் வைத் திருக்கிறார்கள். அதனால் மீண்டும் ஒரு முறை ஜெயலலிதாவால் மக்களை ஏமாற்ற முடியாது.

கோவை, திருச்சி என்று ஜெயலலிதா பேச்சை கேட்க கூட்டம் கூடிவருகிறதே?

கனிமொழி எம்.பி. : என்றைக்காவது ஒரு நாள் அத்திப்பூத்தார் போல கூட்டங்களுக்கு வருபவரை பார்க்க கூட்டம் வரும்தானே? 4 வருஷம் காணாமல் போன ஒருத்தர் வருகிறாரே... அவர் எப்படி இருக்கிறார் என்று பார்க்க வருகிறார்கள். வந்த கூட்டத்தில் பொதுமக்கள் எத்தனை பேர் இருந்தார்கள்? பெரும்பாலும் அ.தி. மு.க.வினர்தான் வந்திருப்பார்கள். தங்கள் கட்சித்தலைவியை சந்திக்கவே முடியாத நிலையில் இருக்கும் கட்சிக்காரர்கள் இப்படிப்பட்ட கூட்டங்களிலாவது தலைவியை பார்க்க முடியுமா என்ற நினைப்பில் வந்திருப்பார்கள்.

இந்த கூட்டமும் தானாக வந்த கூட்டமா? திரட்டப்பட்ட கூட்டம்தானே? அதுவும் தமிழகம் முழுவதிலும் இருந்து வண்டி வாகனம் வைத்து, தலைக்கு நூறு, இருநூறு என்று கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டம்தானே?

அபூர்வமாக கூட்டம் போடு பவர்களுக்கு வருகிற கூட்டத்தை விட தினம் ஒரு நிகழ்ச்சி என்று கலந்துகொள்ளும் தலைவர் கலைஞர் பொதுக்கூட்டத்துக்கு வரும் கூட்டம் அதிகமாகத்தானே இருக்கிறது.

ஒரு பெண் அரசியல்வாதியாக ஜெயலலிதாவின் பொதுக்கூட்ட பேச்சினை எப்படி பார்க்கிறீர்கள்? உங்களையும் அடிக்கடி விமர்சிக்கிறாரே?

கனிமொழி எம்.பி. : அரசியல்வாதியில் ஆண், பெண் என்கிற வித்தியாசம் எல்லாம் எனக்கு இல்லை. ஒரு அரசியல் கட்சியின் தலைவராக ஜெயலலிதாவின் பேச்சு யாருக் கும் முன் மாதிரி யாக அமைய வில்லை. ஜெய லலிதாவின் பொதுக்கூட்ட பேச்சினை எந்த அரசியல் கட்சி யின் அடிமட்ட பேச்சாளரும் கூட முன்மாதிரியாக எடுத் துக்கொள்ள கூடாது.

ஜெயலலிதாவின் பூச்சாண்டிக்கெல்லாம் பயந்தவள் நானல்ல. எதிர்ப்புகள்தான் ரத்தினக்கம்பளங்கள் என்று பழகியவர்கள் தி.மு.க.வினர். ஒரு அரசியல் கட்சியின் தலைமையே அநாகரிகமாக பேசும்போது அந்த தலைமையின் கீழ் செயல்படும் பேச்சாளர்கள் எப்படி பேசுவார்கள் என்று எண்ணிப்பாருங்கள். நாகரிக அரசியலுக்கு ஏற்ற வகையில் ஜெயலலிதா பேசவில்லை.

தன்னுடைய பேச்சில் பிரதானமாக கலைஞர் குடும்ப அட்டாக்கைத்தான் வெளிப்படுத்துகிறார் ஜெ. தேர்தல் பிரச்சாரத்திலும் இதுவே எதிரொலிக்கும் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

கனிமொழி எம்.பி. : குடும்பமாக ஜெ.வை எதிர்கொள்வோம். தி.மு.க.வே ஒரு குடும்பம் என்ற உணர்வில்தான் எங்களை வளர்த்திருக்கிறார் தலைவர். ஒரு அரசியல் கட்சித் தலைவரின் மகள் என்பதற்காகவே எனக்கான அரசியல் வாய்ப்புகள் மறுக்கப்பட முடியாது. குடும்ப அரசியல் என்று பேசுகிற ஜெயலலிதாவின் யோக்கியதை என்ன? ஒரு குடும்பத்தையே தத்தெடுத்து அரசியலில் புகுத்தவில்லையா அவர்? ஆடம்பரமாக ஒரு திருமணம் செய்து வைப்பதற்காகவே ஒரு பிள்ளையை தத்தெடுக்கவில்லையா?

காங்கிரஸ்-தி.மு.க. உறவு சரியில்லை என்றும் விரைவில் தங்களுடைய கூட்டணிக்கு காங்கிரஸ் வந்துவிடும் என்றும் காத்திருக்கிறதே அ.தி.மு.க.?

கனிமொழி எம்.பி. : கனவு காண்பதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. தூங்கி எழுந்ததும்தான் உண்மை எது என்பது புரியும். இப்போது கனவு கண்டு கொண்டி ருக்கிறார் ஜெயலலிதா. 4 ஆண்டுகால தூக்கத்திற்கு பிறகு இப்போதுதான் கண் விழித்திருக்கிறார். இன்னும் தூக்கம் முழுமையாக கலையவில்லை. உதயசூரியன் உண்மை நிலவரத்தை புரிய வைக்கும்.

இந்த கட்சி வருகிறது... அந்த கட்சி வருகிறது என்று சொல்லிக்கொண்டிருப்பதற்கு இன்னொரு காரணம்... சொந்தக் கட்சிக்காரர்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமே என்கிற கவலைதான். அ.தி.மு.க.வின் முன்னணி தலைவர்கள் எல்லோரும் தி.மு.க.விற்கு வந்துகொண்டிருப்ப தால் எங்கே தன் கூடாரம் காலியாகிவிடுமோ என்கிற கவலையில் இருக் கிறார் ஜெயலலிதா. கலைந்து கொண்டி ருக்கும் கூட்டத்தை தடுத்து நிறுத்து வதற்காகத்தான் இப்படிப்பட்ட பிரச்சாரங்களை செய்து வருகிறார்.

தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகள் இடையிலான கூட்டணி உறுதியாக இருக்கிறது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களை சந்தித்து கொண்டுதான் இருக்கிறேன். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை. வரும் சட்டமன்றத் தேர்த லிலும் எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும்.

புதிய தமிழகம், ம.ம.க. என்று புதிய கட்சிகளை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வருகிறது அ.தி.மு.க. உங்கள் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருமா?

கனிமொழி எம்.பி. : எங்களின் தற்போதைய கூட்டணியே மிக வலுவான கூட்டணியாகத்தான் இருக் கிறது. வலுவில்லாதவர்கள்தான் அவசரப்படவேண்டும். தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக் கின்றன. புதிய கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரலாம். வெற்றிக் கூட்டணி அமைப்பது எப்படி என்பது தலைவருக்கு நன்றாகவே தெரியும். உரிய காலத்தில் உறுதியான கூட்டணியை அமைப்பார் தலைவர் கலைஞர்.

கலைஞர் மீதும் அவருடைய ஆட்சி மீதும் அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகளை வைக்கிறாரே ஜெயலலிதா?

கனிமொழி எம்.பி. : ஜனநாயக நாட்டில் விமர்சிப்பதற்கு எல்லோ ருக்கும் உரிமை இருக்கிறது. அந்த வகையில் ஜெயலலிதாவும் குற்றச் சாட்டுகளை வைக்கட்டும். ஆனால் அவர் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு ஏதாவது ஆதாரங்கள் உண்டா? தான் சொன்ன குற்றச்சாட்டை இது வரை அவர் நிரூபித்தது உண்டா? ஜெய லலிதாவின் குற்றச்சாட்டுகளுக்கு உடனுக்குடன் ஆதாரப்பூர்வமாக பதிலடி கொடுத்து வரு கிறார் தலைவர் கலைஞர். ஆனால் அவரின் அறிக்கை களை படிக்காமலேயே மீண்டும் மீண்டும் பாடிய பழைய பல்லவியையே பாடி வருகிறார் ஜெயலலிதா.

கலைஞர் தன்னுடைய கோபாலபுரம் வீட்டில் 780 சதுர அடி மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்திருப்பதாக கூட குற்றம் சாட்டியிருக்கிறாரே ஜெ.?

கனிமொழி எம்.பி. : இதற்கு தெளிவான பதிலை சென்னை மேயர் மா.சுப்ரமணியன் விளக்கமாகவே கொடுத்திருக்கிறார். தன்னுடைய கோபாலபுரம் வீட்டையே தானமாக தருகிறார் தலைவர் கலைஞர். அப்படிப்பட்ட தலைவரை பற்றி பேச ஜெயலலிதாவுக்கு தகுதி இருக்கிறதா? ஓய்வெடுப்பதற்காக அவர் கட்டியிருக்கும் சிறுதாவூர் பங்களா தலித் மக்களுக்காக கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டிருக்கிறது என்று அவருடன் கூட்டணியில் இருக்கும் தோழர்களே குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இன்னொரு ஓய்வுத்தலமான கொடநாடு எஸ்டேட் பகுதியில், பாதையை மறைத்து தன் எஸ்டேட் வழியாகச் செல்ல அந்தப் பகுதி மக்களுக்கு தகுதி இல்லை என்று சொல்பவர்தானே அம்மையார் ஜெயலலிதா!

தஞ்சை அல்லது திருவாரூரில் கலைஞர் போட்டியிடலாம் என்றும் கூட பேசப்படுகிறதே?

கனிமொழி எம்.பி. : தமிழகத்தின் எந்த தொகுதியில் நின்றாலும் பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் தலைவர்.

தஞ்சை பெரிய கோயில் விழா குறித்த செண்டிமெண்ட் பயம் ஒரு சில தி.மு.க.வினர் மத்தியிலேயே நிலவுகிறது. கலைஞரின் முடிவை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

கனிமொழி எம்.பி.: பகுத்தறிவு பாசறையில் வளர்ந்த பெரியாரின் வழித் தோன்றலுக்கு எந்த செண்டிமெண் டும் கிடையாது என்று நிரூபித்திருக்கிறார் தலைவர்.

போதை மருந்து கும்பலுடன் தொடர்பா? - த்ரிஷா மறுப்பு


ஹைதராபாத்: போதை மருந்து கடத்தல் மற்றும் விற்பனையில் தொடர்புடைய நடிகர் நடிகர்கள் யார் யார் என்று ஆந்திர போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கும்பலுடன் தொடர்பில்லை என்று நடிகை த்ரிஷா மறுத்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் தம்பிகளும், நடிகர்களுமான ரகுபாபு, பரத்ராஜ், இவர்களின் நண்பர் நரேஷ் ஆகியோரை கடந்த 19ம் தேதி 'கோகைன்' என்ற போதை பொருள் கடத்தல் வழக்கில் ஆந்திரா போலீசார் கைது செய்தனர்.

அவர்களுக்கு அந்த போதை பொருளை சப்ளை செய்ததாக நைஜீரியா நாட்டைச் சேர்ந்த விக்டர் என்கிற பிரட்லர் சிமா கிளமெண்ட் என்பவர் பிடிபட்டார்.

நைஜீரியா வாலிபரிடம் இருந்து ஒரு 'லேப் டாப்' கம்ப்ïட்டர், செல்போன், 50 ஆயிரம் ரூபாய், பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள், நடிகர் ரவி தேஜாவின் தம்பிகள் வந்த சொகுசு கார் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர் ரவி தேஜாவின் தம்பிகள் போதை பொருளுக்கு அடிமையாகி விட்டதாகவும், நைஜீரியா வாலிபரிடம் போதைப் பொருளை வாங்கி நடிகர், நடிகைகளுக்கும், அரசியல் பிரமுகர்கள் உள்பட பல முக்கிய புள்ளிகளுக்கும் சப்ளை செய்ததாக ஒத்துக்கொண்டு வாக்கு மூலம் அளித்ததாக ஆந்திர போலீசார் தெரிவித்தனர்.

மேலும் நைஜீரியா வாலிபர் அளித்துள்ள வாக்கு மூலத்தில் தனக்கு 800 வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதில் 60 பேர் நடிகர் நடிகைகளாம்.

தனது வாக்குமூலத்தில், 2008ம் ஆண்டு உயர் கல்வி படிப்பதற்காக ஹைதராபாத் நகரத்துக்கு வந்தேன். ஆனால், எனக்கு படிக்க எங்கும் இடம் கிடைக்கவில்லை.

நான் 'விசிட் விசா'வில் நைஜிரீயாவில் இருந்து வந்திருந்தேன். எனக்கு உயர் படிப்பு படிக்க இடம் கிடைக்காத நிலையில் நான் கொண்டு வந்திருந்த பணம் முழுவதும் செலவாகி விட்டது. விசா காலமும் முடிந்து விட்டது. அதை நீட்டிப்பதற்கும் எனக்கு பணம் இல்லை.

அப்போது இங்கிருந்த எங்கள் நாட்டைச் சேர்ந்த எதில் என்ற வாலிபருடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. அவர் போதை பொருளை கொடுத்து சப்ளை செய்யச் சொன்னார். அதில் எனக்கு நல்ல வருமானம் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து பின்னர் நானே போதை பொருளை சப்ளை செய்யத் தொடங்கினேன். ஆனால் போலீசாரிடம் பிடிபட்டு விட்டேன் என்று கூறியுள்ளார்.

நடிகர்-நடிகைகள் தொடர்பு:

நைஜீரியா வாலிபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்-டாப்பை போலீசார் சோதனை செய்தபோது அதில் 800 வாடிக்கையாளர்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்தது தொடர்பான பெயர், விலாசம், தொலைபேசி எண்கள் சிக்கின.

இந்த 800 பேரில் 60 பேர் பிரபல நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், மந்திரிகளின் மகன்கள், எம்.பிக்களின் மகன்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மகன்கள், பிரபலங்களின் மகள்கள் என்பகிறார்கள்.

ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கை யும் எடுக்க முடியாது என்றும், அவர்கள் நேரடியாக போதை பொருள் வாங்கினாலோ, போதைப் பொருளை பயன்படுத்தினாலோதான் அவர்களை கைது செய்யவோ, நடவடிக்கை எடுக்கவோ முடியும் என்றும் ஹைதராபாத் நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.கான் தெரிவித்தார்.

ஹைதராபாத் நகரத்துக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் செயல்படும் 9 மதுபான கேளிக்கை விடுதிகளில் இந்த போதைப் பொருளை அவர்கள் விற்பனை செய்துள்ளதாகவும், பல இளம் பெண்கள் குறிப்பாக நடிகைகள் இதை பயன்படுத்தினால் தங்களது முகம் அதிக பொலிவு பெறுவதாக நம்பி ஏமாந்து இதை பயன்படுத்துவதாகவும், மது மற்றும் குளிர் பானங்களில் கலந்தோ அல்லது சிகரெட்டில் அடைத்து புகைத்தோ இதை பயன்படுத்துவதாகவும் கான் தெரிவித்தார்.

போதைப் பொருள் பயன்படுத்தியதாக பிடிபட்ட இளம் பெண்களுக்கு கவுன்சிலிங் நடத்தி, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தோம் என்றார்.

கடந்த 40 நாட்களாக இந்த கேளிக்கை விடுதிகளை கண்காணித்தோம். அப்போது போதை பொருள் சப்ளை செய்ததாக 4 குழுக்களை பிடித்தோம். ஆனால், முதன் முறையாக நடிகர் ரவி தேஜாவின் தம்பிகள் சில நாட்களுக்கு முன்னர் பிடிபட்டனர். தனிப்படை அமைத்து கேளிக்கை விடுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் கான் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்துள்ள ரவி தேஜாவின் தம்பிகளிடமும், நைஜீரியா வாலிபரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், அதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

த்ரிஷா மறுப்பு:

இதற்கிடையே பிரபல தமிழ்-தெலுங்கு நடிகை த்ரிஷா, கொடைக்கானலில் நடைபெறும் படப்பிடிப்பில் இருந்து தெலுங்கு பத்திரிகைகள், மற்றும் தொலைக்காட்சிகளுக்கு கண்டனமும், மறுப்பும் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார்.

அதில், "என்னுடைய தொலைபேசி எண் நைஜீரியா வாலிபருக்கு எப்படி கிடைத்தது என்று எனக்குத் தெரியாது. போதைப் பொருள் விவகாரத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போதை பொருளை பயன்படுத்தும் பழக்கமும் எனக்கு இல்லை. என் வளர்ச்சியை பொறுக்காத சிலர் என் மீது புரளியை கிளப்பி விட்டுள்ளனர். என் மேலாளர் இதுதொடர்பாக அதிகாரிகளுடன் பேசி வருகிறார்.

இதற்கு முன்பும் இதுபோல என்மீது பல குற்றச்சாட்டுகளை வெளியிட்டனர். ஆனால் அதில் உண்மை இல்லை என்று பின்னர் வெளியானது. இந்த விஷயத்திலும் உண்மை வெளிவரும். என் பெயரை யாராவது தொடர்புபடுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என்று எச்சரிக்க விரும்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவை தோற்கடித்த இலங்கை, பாக். நடுவர்-கேவலமாக விமர்சித்த இலங்கை ரசிகர்கள்


கொழும்பு: இலங்கையில் இந்திய அணி தொடர்ந்து சரிவுகளையும், சர்ச்சைகளையும், அவமானங்களையும் சந்தித்து வருகிறது. நேற்று தம்புல்லாவில் நடந்த முக்கியப் போட்டியில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் நடுவர்களின் தவறான முடிவுகளால் இந்தியா தோல்வியுற்றது. அதேபோல சிங்கள ரசிகர்களும் இந்திய வீரர்களே கேவலமாக கேலி செய்து அவமானப்படுத்தினர்.

மோசமான ஆட்டம்:

இலங்கைக்குப் போயுள்ள இந்திய கிரிக்கெட் அணி முத்தரப்பு தொடரில் விளையாடி வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் நுழையும் அணி எது என்பதை நேற்றைய போட்டி முடிவு செய்தது.

இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்குள் முதல் ஆளாய் நுழையும் என்பதால் இந்தியா வெற்றி முனைப்புடன் இறங்கியது. ஆனால் தவறான நடுவர்களின் தீர்ப்பும், இந்திய அணியினரின் மோசமான ஆட்டமும் இந்தியாவை தோல்வியில் தள்ளி விட்டு விட்டது.

முதலில் பேட் செய்த இந்தியா 33.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 103 ரன்களை மட்டுமே எடுத்தது.

முன்னணி வீரர்களான ஷேவாக் 12, ரோஹித் சர்மா 11, திணேஷ் கார்த்திக் 9, ரெய்னா 8 ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். யுவராஜ் சிங் மட்டும் சற்று போராடி 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் டோணியின் பங்கு 10. ஜடேஜாவின் பங்கு முட்டை. இதனால் இந்தியா மோசமான ரன்களுடன் இன்னிங்ஸை முடித்தது.

இலங்கைத் தரப்பில் திஷரா பெரைரா 5 விக்கெட்களை வீழ்த்தினார். மலிங்கா, குலசேகராவுக்கு தலா 2 விக்கெட்கள் கிடைத்தன. மாத்யூஸ் ஒரு விக்கெட் எடுத்தார்.

பின்னர் ஆடிய இலங்கை அணி 15.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இந்தத் தோல்வி காரணமாக, அடுத்து நடைபெறவுள்ள நியூசிலாந்துடனான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்துடன் நடந்த முதல் போட்டியில் இந்தியா 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது நினைவிருக்கலாம்.

நடுவர்களின் தவறான தீர்ப்புகள்:

நேற்றைய போட்டியில் நடுவர்கள் வழங்கிய நான்கு தீர்ப்புகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. இதில் மூன்று தீர்ப்புகளை உள்ளூர் நடுவரான குமார தர்மசேனா அளித்தார். இன்னொரு தீர்ப்பை பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ராஃப் வழங்கினார்.

யுவராஜ் சிங் பெரிய ஸ்கோரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோது அவருக்கு எல்பிடபிள்யூ கொடுத்து விட்டார் ஆசாத். ஆனால் அது எல்பிடபிள்யூ இல்லை என்பது வீடியோ பதிவில் தெளிவாகத் தெரிந்தது.

ஷேவாக் 12 ரன்களில் இருந்தபோது குலசேகரா பந்தை சந்தித்தபோது அதையும் எல்பிடபிள்யூ என்று கூறி அவுட் ஆக்கினார் தர்மசேனா.

இதேபோல திணேஷ் கார்த்திக், குலசேகரா பந்தை அடிக்க முயன்றார். பந்து பேட்டில் படவே இல்லை. ஆனால் அதை சங்கக்காரா கேட்ச் செய்தார். உடனே அவுட் என்று கையைத் தூக்கி விட்டார் நடுவர் தர்மசேனா.

இதே முறையில்தான் ரெய்னாவையும் அவுட் ஆக்கினார் தர்மசேனா. இந்த நான்கு அவுட்கள்தான் இந்தியாவின் பேட்டிங் வரிசையை தடுமாற்றத்தில் ஆழ்த்தி விட்டது.

இரண்டு நடுவர்களுமே தேவையில்லாமல் இந்தியாவுக்கு தோல்வியைக் கொடுத்து விட்டதாக இந்திய ரசிகர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

தொடரும் இலங்கையின் முரட்டுத்தனம்:

நேற்றைய போட்டியில் இலங்கை வீரர்கள், இந்திய வீரர்களுடன் மோதுவது போலவே முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். இவர்கள் இப்படி நடப்பது இது முதல் முறையல்ல.

முதல் போட்டியில் ஷேவாக் சதம் அடித்து விடக் கூடாது என்ற சின்னப்புத்தி காரணமாக, பந்து வீச்சாளர் சூரஜ் ரந்தீவ் வேண்டும் என்றே நோபால் போட்டார். நேற்றைய போட்டியில் இந்திய வீரர்களுடன் மோதல் போக்கில் ஈடுபட்டனர் இலங்கை வீரர்கள். நியூசிலாந்து போட்டியிலும் கூட அவர்கள் அதுபோலவே நடந்து கொண்டது நினைவிருக்கலாம்.

அநாகரீகமான சிங்கள ரசிகர்கள்:

வீரர்கள் தான் இப்படி என்றால் ரசிகர்களும் மகா கேவலமாக நடந்து கொண்டனர். இந்திய வீரர்களை கேவலமாகவும், அநாகரீகமாகவும் விமர்சிக்கும் வகையிலான அட்டைகளை தூக்கிக் காண்பித்தபடி இருந்தனர்.

இதற்கு முன்பு டெஸ்ட் போட்டியின்போது யுவராஜ் சிங்கை கேலி செய்து 3 சிங்கள ரசிகர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

மொத்தத்தில் இலங்கை வீரர்களும் சரி, ரசிகர்களும் சரி, இந்திய வீரர்களை திட்டமிட்டு அவமானப்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக ரசிகர்கள் குமுறுகின்றனர்.

பேச வராத டோணி-புறக்கணித்த மீடியா:

இதற்கிடையே போட்டி முடிவடைந்ததும் டோணியின் கருத்தை அறிவதற்காக இந்தியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் காத்திருந்தனர். ஆனால் டோணி வரவில்லை. என்ன செய்கிறார் என்று பார்த்தபோது சக வீரர்களுடன் கால்பந்து விளையாடப் போய் விட்டார் டோணி.

இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் காத்திருப்பதாக அவருக்கு தகவல் அனுப்பப்பட்டது. அப்படியும் அவர் வரவில்லை. மேலும் சில முறை தகவல் அனுப்பியும் டோணி வரவில்லை. இதனால் கடுப்பான பிரிண்ட் மீடியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் அனைவரும் டோணி பிரஸ்மீட்டைப் புறக்கணித்து விட்டு வெளியேறினர்

அடுத்த மாதம் இன்னொரு 'அடி' விழும்! - அமெரிக்க மார்...


டெல்லி: அடுத்த மாதம் நிச்சயம் அமெரிக்கப் பொருளாதாரம் பலத்த அடியைச் சந்திக்கும் என்கிறார் அமெரிக்க பொருளாத நிபுணர் ஜின் மெய்க்கா.

இந்த வீழ்ச்சிக்கு 'ஹிண்டன்பர்க் பயங்கரம்' எனப் பெயரிட்டிருக்கிறார் ஜின் மெய்க்கா. அமெரிக்க மார்க்கெட் வீழ்ச்சி எப்படி சாத்தியம் என்று தெரிந்து கொள்ளுமுன் ஹிண்டன்பர்க் பயங்கரம் பற்றி...

ஹிண்டன்பர்க் என்பது ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியில் தயாரான விமானம். 1936-ம் ஆண்டு முதல் அமெரிக்கா வுக்கும் ஜெர்மனிக்கும் பயணிகள் சேவையைத் துவங்கியது. முதல் ஆண்டு வெற்றிகரமாக சேவையைப் பூர்த்தி செய்த இந்த விமானம், 1937-ம் ஆண்டு நியூஜெர்ஸியின் லேக்கர்ஸ்ட் கடற்படை விமான தளத்தில் தரையிறங்கும்போது வெடித்துச் சிதறியது.

இதில் 36 பேர் உயிரிழந்தனர். அந்த சமயத்தில் பெரும் அதிர்ச்சியைத் ஏற்படுத்திய விமான விபத்து இது. தரையிறங்குவதற்கு மிக சமீபத்தில் விமானம் வந்தபோது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் வெடித்தது ஹிண்டன்பர்க். இதற்கான சரியான காரணத்தை யாரும் இதுவரை கூறவில்லை.

இப்போது சாதாரணமாகத் தெரியும் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கும் இதுபோன்ற பெரும் விபத்து நேரும் வாய்ப்பு அதிகம் என்கிறார் ஜிம் மெய்க்கா.

அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் பொருளியல் நிலவரங்களை, பல்வேறு கணக்கீடுகளின் அடிப்படையில் ஆய்வு செய்ததில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெரும் வீழ்ச்சியை அமெரிக்க பங்குச் சந்தையும், பொருளாதாரமும் சந்திக்கும் என்பதை உறுதி செய்துள்ளார் ஜிம்.

கடந்த சில மாதங்களாகவே அமெரிக்க பங்குச் சந்தை பெரும் ஊசலாட்டத்தைச் சந்தித்து வருகிறது. கடந்த வாரம் அமெரிக்காவின் 92 நிறுவனங்களின் பங்குகள் 52 வார உச்ச கட்ட விலைக்குக் கைமாறின. அதேபோல 81 நிறுவனங்கள் இதுவரை காணாத பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

மெக்லீன் ஆஸிலேட்டர் (பங்குச் சந்தைப்போக்கைக் கணிக்கும் முறை) முறையில் பங்குச் சந்தை போக்குகள் அடுத்த சில மாதங்களுக்கு மிக மோசமாகவே இருப்பதாகவும், இந்த மோசமான போக்கின் துவக்கம் செப்டம்பர் மாதம் என்றும் ஜிம் தெரிவித்துள்ளார்.

பொருளியல் வீழ்ச்சியோ வளர்ச்சியோ, இதுவரை ஜிம் கணித்துச் சொன்ன எதுவும் பொய்யானதில்லை என்பதால், இந்த முறை அவர் கூறியிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள அமெரிக்கர்கள் விரும்பவில்லை.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தப் பாதிப்பு எதுவும் இருக்காதாம். பங்குச் சந்தையில் அடுத்த சில மாதங்களில் 10 சதவிகித வீழ்ச்சி சாத்தியம் என்றாலும் அதனால் பாதிப்பு பெரிதாக இருக்காதாம்.

அதேநேரம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தை இப்போதைக்கு மிகவும் செலவுமிக்கது என்றே கருதுவதாக ஜிம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.

"இந்திய சந்தையில் பெரிய அளவு கரெக்ஷன் இருந்தாலும், அது வீழ்ச்சிக்குக் காரணமாக அமையாது. வரும் டிசம்பர் 2014 வரை, எந்த அளவு பங்குச் சந்தை வீழ்ந்தாலும் அதை முதலீட்டுக்கான வாய்ப்பாகவே கருதுவார்கள். ஆனால் அமெரிக்காவில் நிலைமை தலைகீழ்" என்கிறார் ஜிம்.

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

நித்தியானந்தாவை வீட்டுக்கு அழைத்த எஸ்.வி. சேகர்!


சென்னை: நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டு, போலீஸில் சிக்கி, 50 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வந்துள்ள நித்யானந்தாவை பெங்களூரில் உள்ள பிடுதி ஆசிரமத்தில் நடிகரும் எம்எல்ஏவுமான எஸ்.வி. சேகர் சந்தித்துப் பேசினார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா செக்ஸ் உறவு கொள்ளும் காட்சி வெளியானது. அந்தக் காட்சிகள் உண்மை என்றும் நிரூபணமாகின.

இதைத் தொடர்ந்து போலீஸுக்குப் பயந்து ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நித்யானந்தாவை இமாசல பிரதேசத்தில் போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நித்யானந்தா ஜாமீனில் வெளிவந்தார். பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் வழக்கம் போல தனது உபதேசத்தையும் ஆரம்பித்துவிட்டார். அவரை நடிகை மாளவிகா உள்பட ஏராளமான பெண்கள் இப்போது பார்த்து வருகின்றனர்.

இதனால் ஆசிரமம் மீண்டும் களை கட்ட தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நடிகர் எஸ்.வி. சேகர் எம்.எல்.ஏ. பெங்களூர் பிடதி ஆசிரமத்துக்கு சென்று நித்யானந்தாவைச் சந்தித்துப் பேசினார். அப்போது தனது ஆதரவை அவருக்கு தெரிவித்தார். மேலும் தொண்டை வலியால் அவதிப்பட்ட எஸ்.வி. சேகருக்கு நித்தியானந்தா ஹீலிங் தெரபி சிகிச்சை அளித்தாராம். இதில் அவர் குணமடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகரிடம் கூறியதாவது:

நித்யானந்தா சாமிகளை கடந்த 12 ஆண்டுகளாக எனக்கு தெரியும். எனது நண்பர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நேரங்களை விட அவர்கள் மனவருத்தத்தில் இருக்கும் சமயங்களில் சென்று பார்த்து ஆறுதல் கூறுவது எனது வழக்கம். அந்த அடிப்படையில் நித்யானந்தாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.

தற்போதுள்ள பிரச்சினைகளில் இருந்து நீங்கள் மீண்டு வருவீர்கள் என்று அவரிடம் கூறினேன். லெனின் போன்றவர்களை உங்கள் சீடர்களாக எற்றுக்கொண்டதுதான் நீங்கள் செய்த தவறு என்ற அவரிடம் கூறினேன்.

எல்லாவற்றையும், சிரித்த முகத்துடன் பொறுமையாக கேட்டுக் கொண்ட நித்யானந்தா, 'சுமார் 200 நாடுகளில் ஆசிரமம் கிளைகள் உள்ளன. எந்தவொரு சீடரும் என்னை விட்டு விலகிச் செல்லவில்லை. கடந்த வாரம் நான் நடத்திய பூஜையில் 1 1/2 லட்சம் பேர் பங்கேற்றனர். வழக்கமாக வரும் கூட்டத்தைவிட இது 2 மடங்கு அதிகமாகும்'என்றார்.

நித்யானந்தாவால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. எனவே வழக்கில் இருந்து நித்யானந்தா மீண்டும் வருவார்..." என்றார்.

'ரஞ்சிதாவுடன் உள்ள தொடர்பு குறித்து நித்யானந்தாவுடன் பேசினீர்களா?', என்று கேட்டதற்கு, "கேட்டேன். அதற்கு அவர், 'அந்த பெண்ணே மீது புகார் கொடுக்கவில்லை. இதற்கு மேல் அதில் சொல்ல என்ன இருக்கிறது' என்று கூறிவிட்டார்" என்றார் எஸ்வி சேகர்.

'சரி... ஆன்மீகவாதியான நித்யானந்தா ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்தது சரியா? இதை ஆதரிக்கிறீர்களா?" என்றதற்கு, "இது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை. முன்பு ரிஷிகளாக இருந்த பலரும் இல்லறத்தில் ஈடுபட்டுக் கொண்டேதான் ஆன் மீக பணிகளையும் செய்து வந்துள்ளனர். இதற்கு மேல் இந்த விஷயத்தில் நான் ஆழமாக சென்று கருத்து கூற விரும்பவில்லை.

அதே நேரத்தில் தனி அறையில் நடந்த ஒரு சம்பவத்தை ஆபாசமாக படம் பிடித்து வெளியிட்ட லெனின் செய்தது குற்றமில்லையா? சாதாரணமாக சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண்ணை செல்போனில் படம் பிடித்தாலே ஜெயிலில் தள்ளுகிறார்கள். ஆனால் லெனின் செய்தது மிகப்பெரிய தவறு. அவரை போலீசார் கைது செய்யாதது ஏன்?" என்றார்.

நித்தியானந்தா சென்னைக்கு வராமல் தவிர்ப்பது ஏன்? இங்கு வருவதற்கு பயப்படுகிறாரா?, என்று கேட்டபோது, "தமிழ்நாட்டுக்கு அவர் வரவில்லை என்று கூற முடியாது.

சென்னையில் உள்ள பக்தர்கள் வீடுகளுக்கு வந்து தற்போது ஆசி வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார். வெளிப்படையாக விழாக்களில் பங்கேற்பதை மட்டும் தவிர்த்து வருகிறார். விரைவில் அதுவும் நடக்கும். எனது வீட்டுக்கு வருமாறு அவரை அழைத்துள்ளேன். நித்யானந்தாவும் வருவதாக உறுதி அளித்துள்ளார்.

பொதுவாக தமிழ்நாட்டில் கடவுள் எதிர்ப்பு என்பது ஆன்மீகவாதிகளின் மீதான தாக்குதலாக உள்ளது. நித்யானந்தா மீதான கோபத்தில் அவர் நடத்தி வந்த ஆசிரமம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கு தங்கி இருந்து படித்து வந்த 50 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது..." என்ரார் எஸ்வி சேகர்

""ஜெ.'' சொத்து குவிப்பு வழக்கில் நடப்பது என்ன? -"ஜவ்' ரிப்போர்ட்!


தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை 14 வருடங்களாக ஜெயலலிதா, இழு... இழு... என இழுத்தடிப்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க. இளைஞரணியினருக்கு உத்திரவிட்டிருந்தார் மு.க.ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து 4-ந்தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க. இளைஞரணியினர், ஜெ.வை கண்டித்து ஆக்ரோஷமாக கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட் டத்திற்கு காரணமான, ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 14 வருடங்களாக என்னதான் நடக்கிறது என்பதை விசாரித்தோம்.

18-09-1996

முதல் தகவல் அறிக்கை வழக்கு. குற்ற எண்: 13 ஏ.சி./96/ஹெட்குவார்ட்டர்ஸ் Charge u/s.13(1) (e) r/w 13(2) of the P.C.Act and u/s.120-B r/w 109 IPC (கணக்கில் காட்டப்படாத வருமானத்துக்கு அதிகமான கணக்கு காட்ட முடியாத அளவில் சேர்த்த சொத்துக்கள் இந்தியாவிற்குள் உள்ளவை.)

04-06-1997

சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

05-06-1997

நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை விசா ரணைக்கு ஏற்றுக் கொண்டு குற்றவாளிகளுக்கு சம்மன் அனுப்பியது.

21-10-1997

2, 3 மற்றும் 4-ம் குற்றவாளி களான சசிகலா, சுதாகரன், இளவரசி தாக்கல் செய்த விடுவிப்பு மனுவை தள்ளுபடி செய்து 4 குற்றவாளிகள் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

02-09-2000

இரண்டாவது வழக்கு. குற்ற எண்: 2 ஏ.சி./2000/ஹெட் குவார்ட்டர்ஸ் Charge u/s.13(1) (e) r/w 13(2) of the P.C.Act and u/s.120-B r/w 109 IPC (கணக்கில் காட்டப்படாத வருமானத்துக்கு அதிகமான கணக்கு காட்ட முடியாத அளவில் சேர்த்த சொத்துக்கள் லண்டனில் உள்ளவை.)

23-03-2001

2-வது வழக் கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது.

17-04-2001

குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்டது. (முதல் குற்றவாளி ஜெயலலிதாவை தலைமையாகக் கொண்ட அ.தி.மு.க. தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றது. முதல் குற்றவாளி ஜெயலலிதா மே 2001-ல் முதலமைச்ச ரானார். இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் கண்டனத் தால் முதல் குற்றவாளியான ஜெயலலிதா 21-09-2001-ல் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். அதே சமயம், முதல் குற்றவாளி ஜெயலலிதா 02-03-2002-ல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.)

நவ 2002-பிப் 2003

76 சாட்சிகள் திரும்ப அழைக்கப்பட்டு விசாரிக்கப் பட்டனர். அவர்கள் ஏற்கனவே கொடுத்த வாக்குமூலத்திலிருந்து பல்டி அடித்தனர்.

21-02-2003

அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவுற்றது.

24-02-2003

குற்றவாளிகளிடம் 313 சி.ஆர்.பி.சி. படி கேள்விகள் கேட்கப்பட்டது.

27-02-2003

குற்றவாளிகள் தரப்பில் சாட்சிகள் 1 மற்றும் 2 விசாரிக்கப்பட்டு விவாதம் நடைபெற்றது.

28-02-2003

கடந்த தேதியில் நடைபெற்ற விவாதம் தொடர்ந்தது. உச்சநீதிமன்றம் டிரான்ஸ்பர் பெட்டிஷன் 77-78/2003-ல் இந்த வழக்கிற்கு தடைவிதித்தது. 18-11-2003 இரண்டு வழக்குகளும் சென்னை சிறப்பு நீதிமன்றத்திலிருந்து பெங்களூர் நீதிமன்றத்திற்கு சிறப்பு வழக்கு எண்.208/2004 மற்றும் 209/2004 ஆக உச்சநீதிமன்றத்தால் மாற்றம் செய்யப்பட்டது.

28-03-2005

சாட்சிகளின் வாக்குமூலங்களும் வழக்கு ஆவணங்களும் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அனைத்து குற்றவாளிகளுக்கும் மற்றும் தமிழக அரசிற்கும் வழங்கப்பட்டது.

27-06-2005

முதல் குற்றவாளி ஜெயலலிதா 11-02-2002-ல் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிலுவையில் இருந்த மனுவை பெங்களூர் நீதிமன்றம் விசாரித்து 2 வழக்கையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிட்டது.

ஜூலை 2005

2 வழக்குகளையும் சேர்த்ததை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் எஸ்.எல்.பி. 3828/2005 என்ற மனு பேராசிரியரால் தாக்கல் செய்யப்பட்டது.

05-08-2005

உச்சநீதிமன்றம் 3828/2005 வழக்கில் பெங்களூர் நீதிமன்ற வழக்கின் விசாரணைக்குத் தடை விதித்தது.

07-12-2009

உயர்நீதிமன்றம் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு எண்:938/2009-ஐ ஏற்றுக் கொண்டு 2-வது வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்தது.

30-01-2010

சிறப்பு அரசு வழக்கறிஞர் 45 சாட்சிகளை திரும்ப அழைப்பதற்கு அனுமதி கேட்டு மனு எண்.: 321/2010 தாக்கல் செய்தார். அதே நாளில், குற்றவாளிகள் தரப்பில் வழக்கு விசாரணைக்கு அனுமதித்த உத்தரவில் காட்டப்பட்டிருந்த 2 அறிக்கைகள் வழக்கில் தாக்கல் செய்வதற்காக அனுமதி கேட்டு மனு எண்: 322/2010 தாக்கல் செய்தது.

25-02-2010

சிறப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு எண்:321/2010 நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்த மனு எண்: 322/2010 நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

03-03-2010

அரசு தரப்பு சாட்சிகள் 42 பேரும் நேரில் ஆஜராகுமாறு விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. சாட்சிகள் விசாரணை 18-03-2010 முதல் 26-03-2010 வரை நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்தது. அதே நாளில் குற்றவாளிகள் தரப்பில் மனு எண்: 340 மற்றும் 341 தாக்கல் செய்யப்பட்டது. இதன்மூலம் சம்மன்களை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் வழியாக அனுப்பப்பட வேண்டும் என்று குற்றவாளிகள் கோரினர்.

04-03-2010

03-03-2010-ல் 42 அரசு சாட்சிகளுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டதை மாற்றம் செய்யக் கோரி (மனு எண்: 346) குற்றவாளிகள் மனு தாக்கல் செய்தனர். அதே நாளில் 340, 341 மற்றும் 346 அனைத்திலும் விவாதம் நடைபெற்றது.

05-03-2010

மனு எண்: 340, 341, 346-ஐ தள்ளுபடி செய்தது விசாரணை நீதிமன்றம்

மார்ச் 2003

05-06-1997-ல் சென்னை சிறப்பு நீதிமன்றத்தால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து மனு எண்: 79/2010 கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் குற்றவாளிகள்.

10-03-2010

79/2010 கர்நாடக உயர்நீதிமன்றத்தால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

19-03-2010

மனு எண்: 79/2010 தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.எல்.பி. 2248/2010 குற்ற வாளிகள் தாக்கல் செய்தனர். அப்போது இந்த வழக்கு பற்றி சில கருத்துக்களை தெரிவித்தது உச்சநீதிமன்றம்.

22-03-2010

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி தேதிகள் மற்றும் விசாரணையை மறு பட்டியலிட்டு 03-05-2010-க்கு வழக்கை மீண்டும் துவக்க நாள் குறித்தது விசாரணை நீதிமன்றம்.

18-04-2010

இந்த வழக்கின், விசாரணை அதிகாரிக்கு அனு மதி வழங்கப்படவில்லை. அதனால் இதன் விசாரணை முழுவதும் சட்டவிரோதமானது என்றும் வழக்கு விசாரணை முழுவதையும் இத்துடன் நிறுத்த வேண்டும் என்றும் குற்றவாளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு மனு எண்: 359-ஐ தாக்கல் செய்தனர்.

27-04-2010

ஆனால் இந்த மனுவை (மனு எண்: 359) விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

07-05-2010

11-05-2010-ல் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை வருகிறது அதனால் இந்த வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றத்தில் முதல் குற்றவாளி ஜெயலலிதா கோரிக்கை வைத்தார். அதனால் வழக்கு 11-05-2010-க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

11-05-2010

விசாரணை நீதிமன்றத்தில் மனு எண்: 359 தள்ளுபடி செய்யப்பட்டதால் அதனை எதிர்த்து குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் எஸ்.எல்.பி.3836/2010 மனுவை தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் குற்ற நடைமுறை சட்டம் 482-ன் படி தாக்கல் செய்யலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததையடுத்து இந்த மனு வாபஸ் பெறப்பட்டது.

மே 2010

70,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் கண்ட ஆவணங்களில் 3 நகல்கள் தேவையென முதல் குற்றவாளி ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.

21-07-2010

3-ம் குற்றவாளி சுதாகரன் சார்பிலும் அதே மனு தாக்கல் செய்யப்பட்டது.

22-07-2010

மனு எண்: 396, விசாரணை நீதிமன்றத்தால் சில வழிகாட்டுதல்களுடன் நிராகரிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் சாட்சிகள் ஆஜராகியிருந்தபோதிலும் குற்றவாளிகள் வழக்கை ஒத்திவைக்க கேட்டுக் கொண்டதால் வழக்கு விசாரணை 6-8-2010, 9-8-2010, 11-08-2010 மற்றும் 13-08-2010 ஆகிய தேதிகளில் சாட்சிகளை விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

29-07-2010

மனு எண்: 396 நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து முதல் குற்றவாளி ஜெயலலிதா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ( வழக்கு எண்: 3748/2010 ).

30-07-2010

மனு எண்: 396-ல் வழங்கப்பட்ட உத்தரவில் நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் ஒரு பகுதிக்கு அரசு சார்பில் அரசின் சிறப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தார் (வழக்கு எண்: 3766/2010). கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 16-08-2010-ல் மேற்படி இரண்டு மனுக்களும் விசாரணைக்கு வருகின்றன.

இப்படி கடந்த பதினான்கு வருடங்களாக பல்வேறு காரணங்கள் கூறி விசாரணையை ஜெயலலிதா இழுத் தடித்துக் கொண்டேயிருந்தாலும் இறுதியில் இவ்வழக்கில் தனக்கு எதிராகவே தீர்ப்பு வரும் என்றும் இந்த வழக்கிலிருந்து நாம் தப்பிக்க முடியாது என்பதை ஜெயலலிதா உணர்ந்தே இருப்பதாலும்தான் மனு மேல் மனு போட்டு வழக்கை இழுத்தடித்துக் கொண் டிருக்கிறார் என்று வழக்கறிஞர்கள் வட்டாரம் கூறுகின்றது.

தமிழகத்தில் பாகிஸ்தான் கைவரிசை!


கம்பளி, பெட்ஷீட்களை தோளில் சுமந்தபடி, கன்னியா குமரியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்தான் அந்த வட நாட்டு வாலிபன். ""பீ.பீ. ரெண்டு குவார்ட்டர் தே தோ'' என்ற படி புத்தம் புதிய ஆயிரம் ரூபாய் நோட்டை நீட்டினான்.

நோட்டை வாங்கிப் பார்த்த டாஸ்மாக் ஊழியர் பத்மகுமாருக்கு சந்தேகம் பிறந்தது. நோட்டை எந்திரத்தில் வைத்து சோதித்தார். சந்தேகம் தீர்ந்தது. அந்த நோட்டு கள்ளநோட்டு. சக ஊழியர் மூலம் போலீசுக்குத் தகவல் கொடுத்தார் பத்மகுமார். தாமதிக்கவில்லை போலீஸ்.

டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் வந்த போலீஸ், அந்த வடநாட்டு வாலிபனை, அவன் தங்கியிருந்த லாட்ஜுக்கு தள்ளிக்கொண்டு போனது. அந்த அறையில் இருந்த அவனது கூட்டாளிகளான முகம்மது முஸ்தபா ஷேக், முகம்மது சலிக் ஷேக், முகமது அஷ்ரா ஜல்ஷேக், மஜிபுர் ஷேக், நாஜிக் ஷேக், அன்பது ஷேக், முகம்மது மத்யூர் இஸ்லாம் ஆகியவர்களையும் கைது செய்தது. அவர்களிடம் இருந்த 6 லட்சத்து 21 ஆயிரத் திற்கான கள்ள நோட்டுகளையும் நல்ல நோட்டுகளாக அவர்கள் மாற்றிய 8 ஆயிரத்து 600 ரூபாயையும் கைப்பற்றினார்கள்.

இந்தக் கும்பல் ஜார்கண்ட் மாநிலம் பியாக் பூரைச் சேர்ந்தது. இவர்களுக்கு கள்ள நோட்டுகளை சப்ளை செய்து, கமிஷன் அடிப்படையில் தமிழகத் திற்கு அனுப்பியவன் கொல்கத்தாவைச் சேர்ந்த ஷேக். ""இந்த ஷேக்தான் கள்ளநோட்டை அச்சடிக்கிறானா? ""இல்லை சார்... பாகிஸ்தானில் இருந்து வருகிறதாம்'' -இது போலீசாரிடம் அந்தக் கும்பல் சொன்ன தகவல்.

""இவர்கள் ஜார்கண் டில் இருந்து சென்னைக் கும், சென்னையில் இருந்து குமரிக்கும் வருவதற்கு ரயில் டிக்கெட்டைக்கூட கள்ள நோட்டைக் கொடுத்துதான் எடுத்திருக் கிறார்கள். வந்த முதல்நாளே 11 நோட்டுகளை மாற்றியிருக்கிறார்கள்'' என்கிறார் எஸ்.பி.ராஜேந்திரன்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம், திருவாடானை, ராமேஸ்வரம், கீழக்கரை, பரமக்குடி பகுதிகளில் இரண்டு மூன்று மாதங்க ளாகவே 1000 ரூபாய், 500 ரூபாய் கள்ள நோட்டுகளின் நடமாட்டம் அதி கரித்துக்கொண்டிருக்கிறது.

ஏ.டி.எம். சென்டர்களில் எடுக்கும் நோட்டுக்களில்கூட கள்ள நோட்டுகள் கலந்திருக்கின்றன.

""ஏ.டி.எம்.மில் மட்டுமில்லை... வங்கியில் பணம் போட்டுவிட்டு வந்த அரைமணி நேரத்தில் வங்கியிலிந்து போன்வரும். "நீங்க டெபாசிட் செய்த தில் 5 ஐநூறு ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகள். நீங்கள் எங்கள் ரெகுலர் கஸ்டமர் என்பதால் போலீசில் புகார் செய்யவில்லை. உடனே நல்ல நோட்டு களை கொடுத்துவிட்டு, இதை வாங்கிச் செல்லுங்கள்' என்பார்கள். பதட்டத் தோடு போய் மாற்றிக் கொடுப்போம். இல்லையென்றால் போலீஸ் நம்மை அல்லவா கைது செய்வார்கள்'' என்கிறார்கள் இராமநாதபுரம் வியாபாரிகள்.

கள்ளநோட்டுப் பிரச்சினை பெரிதானதால் 27.7.10-லிருந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது க்யூ பிராஞ்ச் போலீஸ். கீழக்கரை, ஏர்வாடி பகுதியில் கள்ளநோட்டுப் பேர்வழி என்று அடையாளம் காணப்பட்ட பாலகிருஷ்ணனுக்கு போன் போட்ட க்யூ பிராஞ்ச் அதிகாரி ""என்னையும் உங்கள் குழுவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு லட்சத்திற்கு நான் எவ்வளவு நல்ல நோட்டுத் தரணும்? எங்கே வரணும்?'' என்றார்.

""அறுபதாயிரத்தோடு ராம்நாடு சின்னக்கடை தெருவுக்கு வாங்க'' என்றார் பாலகிருஷ்ணன்.

சின்னக்கடை தெருவில் வசமாக மாட்டிக்கொண்ட பால கிருஷ்ணனை, தூக்கி வந்து முறைப்படி விசாரித்தார்கள் இன்ஸ்பெக் டர் ரவியும், எஸ்.ஐ. பரக்கத்துல்லாவும். அவர் கொடுத்த தகவலால் ஏர்வாடி ஹோட்டல் அதிபர் மகன் செய்யது முகம்மது அல்தாப்பும், ராமநாதபுரம் சிவக்குமாரும், கீழக்கரை அபுதாகீரும் சிக்கினார்கள்.

இவர்களிடம் இருந்து 1 லட்சத்து 63 ஆயிரத்துக்கான கள்ள நோட்டுகளை மட்டும் கைப்பற்ற முடிந்தது.

""எங்கே பிரிண்ட் பண்றாங்களோ தெரியாது சார்... பாகிஸ்தான்ல இருந்தும், பங்களாதேஷ்ல இருந்தும், மேற்கு வங்களாம், உத்தர்பிரதேஷ், ஜார்கண்ட் வழியா சென்னை, கேரளா வந்து கன்னியாகுமரிக்கு வருது. எங்களுக்கு கன்னியாகுமரியில இருந்துதான் வருது. ராமநாதபுரம், கீழக்கரை, சித்தார்கோட்டை, தொண்டி ஏரியாவுக்கு நிறைய ஹவாலா பணம் வரும். அந்த சப்ளையர்களிடம் உடனுக்குடன் நாங்க கை மாற்றிவிடுவோம். இந்த மூணு, நாலு மாசத்துல 10 கோடி ரூபாய் அளவுக்கு புழக்கத்தில் விட்டிருக்கிறோம்'' என்றார்களாம் பிடிபட்டவர்கள்.

இவர்கள் பிடிபட்ட இரண்டாம்நாளே, செய்தித்தாள்களில் விஷயம் வெளியானதால், இவர்களுடைய கஸ்டமர்கள் எச்சரிக்கையாக தலைமறைவாகிவிட்டார்கள்.

இவர்களுக்குப் பிறகு, சென்னை தாம்பரத்தில் ஜமீல் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

""சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் ஊர்களைக் குறிவைத்தே கள்ளநோட்டுக் கும்பல் செயல்படுது. ரியல் எஸ்டேட்காரர்கள், நகைக் கடை, கல்விக்கடை முதலாளிகள் இந்த நெட் வொர்க்கில் தொ டர்பில் இருப்ப தாகத் தெரிகிறது. தகுந்த ஆதாரம் தேடிக்கொண்டிருக்கிறோம். நிச்சயம் முக்கியப் புள்ளிகள் மாட்டுவார்கள்'' என்கிறார்கள் க்யூ பிராஞ்ச் அதிகாரிகள். இராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை பார்த்தாலே, சராசரி மக்கள் மிரள்கிறார்கள்அந்த அளவுக்கு கள்ள நோட்டுப் புழக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு பிரபலத்தை துரத்தும் சி.டி.! பர... பர... சேஸிங்!


""யோவ் டாக்டர் நாங்க சொல்றதை பதட்டப்படாம கேளு. உன் சம்பந்தப் பட்ட சி.டி.யும், ஃபோட்டோக்களும் எங்ககிட்ட சிக்கியிருக்கு. பத்திரிகை, டி.வி.காரங்ககிட்ட கொடுத்தோம்... அவ்ளோதான் உன் கதி... என்ன சொல்ற?''

மிரண்டு போன அந்த பிரபல இதயநல மருத்துவர் ""அய்யோ... ப்ளீஸ் சார்... தயவு செஞ்சு அப்படி பண்ணிடாதீங்க. எவ்ளோ... எவ்ளோ பணம் வேணாலும் தர்றேன். ப்ளீஸ் அந்த சி.டி.யை கொடுத்துடுங்க'' -வியர்த்து விறுவிறுக்க கெஞ்சுகிறார்.

""போலீசுக்குப் போன... அவ்வளவுதான். சரி... சரி... தெப்பக்குளம் ஏரியாவுல மருது பாண்டி சிலை பக்கத்துல வா'' -கெத்தாக சொல்லிவிட்டு கட் ஆனது ஃபோன்.

ஜூலை 2. ""சார்... நீங்க சொன்ன இடத் துக்கு வந்துட் டேன். ஆனா நீங்க எங்கே இருக்கீங்க?'' -பவ்யமாகக் கேட்டார் டாக்டர்.

""டேய்... டேய்... நடிகர் திலகம் ரேஞ்ச்சுக்கு நடிக்காதடா. நீ ஹார்ட் ஸ்பெ ஷலிஸ்ட்டுன்னா... நாங்க மைண்ட் ஸ்பெஷலிஸ்ட். பொட்டியோட வாடான்னா... போலீ ஸோடவா வர்ற?ம்... உன்னை?'' -எஸ்கேப் ஆன மிரட்டல் கும்ப லின் தலைவன் உறும...

""அய்யோ.... தெரி யாம பண்ணிட்டேன் சார்... இனிமே போலீஸ்கிட்ட போகமாட்டேன் சார்... ப்ளீஸ் சார்.... நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக் கிறேன். அந்த சி.டி.யை கொடுத்து டுங்க'' கதறினார் டாக்டர்.

""ம்... அப்படி வா வழிக்கு. நாம எங்க மீட் பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்ணிட்டுச் சொல்றேன்'' -கட்டானது ஃபோன்.

""என்ன தைரியம் இருந்தா எனக்கே அல்வா கொடுத்துட்டு எஸ்கேப் ஆகியிருப்பானுங்க. அவனுங் களை...'' -பற்களை நரநரவென்று கடித்துக்கொண்ட எஸ்.ஐ., மிரட்டல் கும்பலைப் பிடிக்க இன்ஸ்பெக்டரிடம் டிஸ்கஸ் பண்ணினார்.

மறுநாளே... செல்ஃபோன் நம்பரின் மூலம் மிரட்டல் கும்பலின் முகவரியை ட்ரேஸ் செய்து அந்தக் கும்பலை அலேக்காக ஸ்டேஷ னுக்கு தூக்கி வந்தது மதுரை அண்ணாநகர் காக்கி டீம்.

""சார்... சார்... எங்களை விட்டுடுங்க. இந்த டாக்டரோட ஹாஸ் பிட்டலில் வேலை பார்க்கிற நர்ஸ் தான் செல்ஃபோன் மூலமா கொடுத்தது'' என்று பிளாக்மெயில் கும்பல் உண்மையைக் கக்க... அடுத்த நிமிடமே அந்த இளம் நர்ஸும் ஸ்டேஷனுக்கு கொண்டுவரப்பட்டார். எல்லோரையும் அடித்து மிரட்டிய காக்கி டீம்... அவர்களிடமிருந்து டாக்டர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அடங்கிய செல்ஃபோன், மெமரிகார்டு, சில ஃபோட்டோக்களையும் அடித்துப் பிடுங்கிக்கொண்டது.

எஸ்.ஐ.யும், இன்ஸ்பெக்ட ரும் அந்தக் காட்சியைப் பார்க்க... இன்ப அதிர்ச்சி யானார்கள். அடுத்த நிமிட மே... ""டோண்ட் ஒர்ரி டாக்டர்... உங்க சம்பந்தப் பட்ட சி.டி. காட்சிகள், ஃபோட்டோக்கள் எல்லாத்தையும் கைப்பற்றிவிட்டோம். மிரட்டல் கும்பலோட தலைவன் அரசு வக்கீலோட டிரைவர். அதனால அவனையும் அந்தக் கும்பலையும் மறைமுகமாகத்தான் "கவனி'க்கணும்.

அந்த நர்ஸ் பொண்ணு "சீனியர் நர்ஸ் சர்ட்டிஃபிகேட் வேணும்'னு கேட்டு கூலிப்படையை வெச்சு உங்களை மிரட்டினதா அவகிட்ட எழுதி வாங்கிடுறோம். நீங்களும் அந்த மிரட்டல் கும்பலை மன்னிச்சு சமரசமா போயிடுறதா எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுங்க. மத்ததை நாங்க பார்த்துக்கு றோம்.... ஆனா'' என்று இழுத்தனர்.

""தயங்காமச் சொல்லுங்க சார்''.

""அதில்ல டாக்டர். உங்க மேட்டர் சிட்டியில பெரிய அதிகாரி வரை போயிடுச்சு. அதையெல்லாம் சரிபண்ணணும்னா...'' என அசடு வழிந்தனர்.

""என்ன சார் இதெல்லாம்? எவ்வளவு பெரிய பிரச்சினையிலிருந்து என்னைக் காப்பாத்தியிருக்கீங்க? வாங்க சார் என்னோட பங்களாவுக்கு'' -பிரச்சினையிலிருந்து மீண்ட மகிழ்ச்சியில் வரவேற்றார் டாக்டர்.

""அடேங்கப்பா வீடா இது? எவ்வளவு பெரிய சொகுசு பங்களா? தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் அதிகமாவே கேட்டிருக்கலாமே ப்ச் சே...'' -என்று திருப்தியடையாத காக்கிகள் அரை மனதோடு வாங்கிக்கொண்டு கிளம்பினர்.

"ஹப்பாடா...' என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு ரிலாக்ஸ் ஆனார் டாக்டர். அந்த நிம்மதி பெருமூச்சு நிலைக்கவில்லை. அடுத்த ஒரு வாரத்திற் குள்ளேயே... ""யோவ் டாக்டர்... நாங்க என்ன இளிச்சவாயன்களா? ஆங்... அந்த சி.டி.யும், ஃபோட் டோ ஒரிஜினலும் எங்ககிட்டதான் இருக்கு. இந்தத் தடவையாவது போலீஸ்காரனுங்கள்கிட்ட போகாம... நாங்க சொல்ற பணத்தை எடுத்துக்கிட்டு வா... ஹா...ஹ்ஹா... ஹா...ஹ்ஹா...'' -சினிமா வில்லனைப்போல இளித்தான் அதே பிளாக்மெயில் கும்பலின் தலைவன்.

அதே அண்ணாநகர் இன்ஸ் பெக்டரும், எஸ்.ஐ.யும் அந்த அரசு வழக்கறிஞரிடம் முறையிட... தனது டிரைவரான பிளாக் மெயில் கும்பலின் தலைவனை அழைத்து அந்த சி.டி. காட்சி களையும், ஃபோட்டோக்களை யும் வாங்கிக் கொடுத்தார் அரசு வக்கீல்.

ஆனால் இப்போதும் ஒப்படைக்கப்பட்டது பிரதி என்பதும், அந்தக் காட்சிகள் வேறு சி.டி.க்களில் பதிவு செய்து வைத்திருப்பதும் தெரிய வர அதிர்ச்சியில் உறைந்து போனது டாக்டர் அண்ட் காக்கி டீம்.

""இவனுங்களை விட்டா பிரச்சினை பெரிசாயிடும். எப்பாடுபட்டாவது... இவனுங்களை புடிச்சிடணும்'' -டென்ஷனான இன்ஸ்பெக்டரும், எஸ்.ஐ.யும் தனிப்படை அமைத்துத் தேட... பிளாக்மெயில் கும்பல் குற்றாலத் துக்கு எஸ்கேப்.

""அவனுங்களை புடிக்க ணும்னா மேலும் கொடுங்க டாக்டர்.'' -போலீசுக்கு பெட்டி கை மாறியது.

""யோவ் டாக்டர்... நாங்க என்னய்யா கேட்டோம்? எவ்வளவு பெரிய விஷயத்துல சிக்கியிருக்க. எங்க ஊரு கோயி லுக்கு(!) எதாவது நிதி குடுய்யா, சி.டி.யை கொடுத்திடுறோம்னு தானே கேட்டோம். இப்போ லட்சம் லட்சமா போலீசுக்கு கொட்டிக் கொடுத்துக்கிட்டி ருக்க. இப்போ இல்ல எப்பவு மே... அந்த சி.டி. காட்சிகளோட ஒரிஜினல் உனக்குக் கிடைக் காது'' -கொக்கரித்தது பிளாக் மெயில் கும்பல்.

அப்படி என்னதான் இருக் கிறது அந்த சி.டி.காட்சியில். தோண்டித் துருவியபோதுதான் அந்த சி.டி. காட்சி நமக்கும் கிடைத்தது.

காலையில் அரசு மருத்துவமனையில் இருக்கும் அந்த பிரபல டாக்டர், மாலையில் தனது சொந்த மருத்துவமனைக்கு வருவார். அப்படித்தான் கடந்த ஜூன் 25-ந் தேதி மாலை... நோயாளிக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுவதாக தனது அறையின் கதவை சாத்திக்கொண்டார். உள்ளே... மதுரை வண்டியூரைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க குடும்பப்பெண்(?). ஆனால்... அந்தப் பெண்ணுக்கு ட்ரீட்மெண்ட் அளிக்க வில்லை டாக்டர். பதிலாக இருவரும் கொஞ்சிக் கொள்வதும், பிறகு சல்லாபத்திலும் மிதக்கிறார்கள். இதைத்தான் "ச்சே... ட்ரீட்மெண்ட்டுக்கு வந்த பேஷன்ட்டு கிட்ட இப்படியா நடந்துப்பாரு' என்று முகம் சுளித்த இளம் நர்ஸ் அதை செல்ஃபோனில் பாத்ரூம் ஜன்னல் வழியாக படம் பிடித்துவிட்டார். இதை வைத்துத்தான் சி.டி.க்களாக தயாரித்து பிளாக்மெயில் கும்பல் ஒருபக்கம் மிரட்ட... இதை சாதகமாக்கிக்கொண்டு காக்கிகளும் லட்சம் லட்சமாக டாக்டரிடம் பேரம் பேசி கறந்து கொண்டிருக்கிறார்கள்.

மதுரையில் இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு பிரபல இதய நல மருத்துவர் என்று பெயரெடுத்த டாக்டரோ ""54 வயசாகுது எனக்கு. அழகான மனைவி இருந்தும் ட்ரீட்மெண்டுக்கு வந்த பேஷன்ட்டுகிட்ட சபலப்பட்டு நடந்துக்கிட்ட தால இப்படி இதய வலியை உண்டாக்குற பிரச்சினையில மாட்டிக்கிட் டேன்'' என்று புலம்பிக்கொண் டிருக்கிறார்.

தற்போது... இவரின் சபல சி.டி.யால் பேரம் பேசி பணம் அள் ளிக் கொண்டி ருப்பது ஸ்டேஷன் காக்கிகளே. ஆனால்... சி.டி. காட்சி நித்யா னந்தாவின் சி.டி. போல் பரவிக் கொண்டிருக் கிறது மதுரை முழுக்க!