ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

த்‌ரிஷாவை லிப் டு லிப் முத்தமிட மறுத்த பவன் கல்யாண்.

கூலி கொடுத்தும் கரும்பு தின்ன மறுத்தவரைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? த்‌ரிஷா சம்மதம் தெ‌ரிவித்தும் அவரை முத்தமிட மறுத்த நடிகரைப் பற்றி வேறெப்படி சொல்வது?

இந்தியில் வெளியான லவ் ஆ‌ஜ் கல் படத்தை தெலுங்கில் ‌ரீமேக் செய்கிறார்கள். சைஃப் அலிகான் நடித்த வேடத்தில் பவன் கல்யாண், தீபிகா படுகோன் வேடத்தில் த்‌ரிஷா.

லவ் ஆ‌ஜ் கல்லில் வருவதைப் போன்ற லிப் டு லிப் முத்தக் காட்சியை தெலுங்கிலும் வைக்க ஆசைப்பட்டிருக்கிறார் இயக்குனர். பவன் கல்யாணுக்கு முத்தம் தர த்‌ரிஷா தயார். ஆனால் பவன் கல்யாண் தனது வயசுக்கும், கௌரவத்துக்கும் ச‌ரிவராது என்று த்‌ரிஷாவை முத்தமிட மறுத்திருக்கிறார்.

பவன் கல்யாணை என்ன சொல்வது. ஜென்டில்மேன் என்பதா? இல்லை பிழைக்க‌த் தெ‌ரியாதவர் என்பதா?

இரு சிறுவர்களுடன் பாலியல் வல்லுறவு : ஆசிரியை கைது

சண்டிலண்ட்ஸ் க்ரோவ், ஹைடவுன் பகுதியை சேர்ந்தவர் ஹினா படேல். 37 வயதாகும் இவர் மேரிசைடு ஆண்கள் பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அந்த பாடசாலையில் பயிலும் மாணவர்கள் இருவரை பாலியல் ரீதியில் தவறாக பயன்படுத்தியதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பல மாதங்களாக நடந்து வந்த சில இந்த செயல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் பாடசாலை நிர்வாகம் ஹினா படேலை உடனடியாக பணி இடைநீக்கம் செய்துள்ளது. 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களுடன் பாலியல் வல்லுறவில் ஆசிரியரே ஈடுபட்டுள்ளதால் இது மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது.

விசாரணைகளுக்கு பாடசாலை நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக அந்த பாடசாலையின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் நன்மை கருதி பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெயர் எதுவும் வெளியிடப்படவில்லை என காவல்துறை அறிவித்துள்ளது

பெண் பயிற்சியாளரை கொன்ற திமிங்கலம் ! (படங்கள் இணைப்பு)

 பார்வையாளர்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க, பெண் பயிற்சியாளர் ஒருவரை திமிங்கிலம் ஒன்று தண்ணீருக்குள் இழுத்து சென்று, கடித்து, குதறி கொன்ற கொடூர சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
 புளோரிடா நகரில் பிரபலமான கடல் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. இங்கு வரும் பார்வையாளர்களை குஷிப் படுத்த, பெரிய திமிங்கில மீனை வைத்து விளையாட்டு காட்டும் காட்சி தினமும் நடக்கும். கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி இதே போன்ற காட்சி ஒன்று இந்த காட்சியகத்தில் நடந்தது. நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் அரங்கில் குழுமியிருந்தனர். டான் பிரான்செயூ என்ற 40 வயது பெண் ஒருவர் தான், இந்த காட்சியகத்தில் திமிங்கில பயிற்சியாளராக உள்ளார்
"திலிகும்' என பெயரிடப்பட்டுள்ள திமிங்கிலம் ஒன்றை வைத்து, இவர் தினமும் பார்வையாளர்களுக்கு விளையாட்டு காட்டுவது வழக்கம். கிட்டத்தட்ட 8,000 கிலோ எடை கொண்ட அந்த திமிங்கிலம், இந்த பெண் பயிற்சியாளரின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு விளையாடும். வழக்கம் போல் அன்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் முடிந்ததும், திமிங்கிலத்தை பயிற்சியாளர் டான் தண்ணீருக்குள் போக உத்தரவிட்டார். ஆனால், திடீரென அந்த திமிங்கிலம், டானை தண்ணீருக்குள் இழுத்தது. அந்த பெண்ணை கடித்து குதறி, தண்ணீருக்குள் அமுக்கியது. பார்வையாளர்கள் செய்வதறியாது திகைத்தனர். ஒரு சில வினாடிகளில் அந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

இதே போன்று பயிற்சியாளரை இந்த திமிங்கிலம் கொல்வது இது மூன்றாவது முறை. இந்த சம்பவத்திற்குப் பின், இந்த கண்காட்சி கூடம் மூடப்பட்டு விட்டது.

தீர்ப்பென்றால் தீர்ப்பு இதுதான் தீர்ப்பு

தனது மகளை ஒரு வருட காலப் பகுதியில் தினசரி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்த தந்தையொருவருக்கு பிலிப்பைன்ஸ் நீதிமன்றமொன்று வெள்ளிக்கிழமை 14,400 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தென் மணிலா நகருக்கு அண்மையிலுள்ள லொஸ் பனோஸ் எனும் இடத்தைச் சேர்ந்த மேற்படி நபரின் மனைவி ஹொங்கொங்கிற்கு வீட்டுப் பணியாளராக வேலை பெற்றுச் சென்ற பின், அவர்களது மூன்று பிள்ளைகளும் தந்தையின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் 13 வயதான மகளை தந்தை தினசரி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்துள்ளதுடன் வாய்மூலமான பாலியலில் ஈடுபடவும் நிர்ப்பந்தித்துள்ளார்.

மேற்படி சிறுமியும் அவரது சகோதரர்களும் தமது தாயின் உறவினர் வீடொன்றுக்கு செல்ல நேர்ந்த சமயம், சிறுமி தனக்கு நேர்ந்த துஷ்பிரயோகம் குறித்து தெரிவித்துள்ளார்.

தகவலறிந்த தாயார் நாடு திரும்பி முச்சக்கர வண்டி சாரதியான தனது கணவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

ஆரம்பகட்ட வழக்கு விசாரணைகளின் போது மேற்படி தந்தைக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில் அத்தீர்ப்புக்கு எதிராக செய்யப்பட்ட மேன்றையீட்டை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிமன்றம், 14,400 வருட சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அறுபது அடி உயரத்தில் அழிச்சாட்டியம் பண்ணிய அந்த இளைஞர்...

கோட்டை புகையிரத நிலையத்திற்குப் பயணிகள் வருகிறார் களோ இல்லையோ. ஆனால் ஆர்ப் பாட்டக்காரர்கள் வருவது வழக்கம். ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளும் ஆர்ப்பாட்டத்தைப் பார்த்துக்கொண்டி ருப்பார்கள்.

அப்போது அவர்களும் ஆர்ப்பாட்டக்காரர்கள்தான் என்று பார்ப்பவர்கள் கருதிக்கொள்வார்கள் என்று அந்த இடத்தைத் தேர்ந்து எடுக்கிறார்களோ என்னவோ! அதேபோன்று ஆர்ப்பாட்டத்திற்குப் பெயர் போனதுதான் லிப்ரன் சுற்று வட்டம். நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஊர்வது மட்டுமன்றி கொழும்பு பெரியாஸ்பத்திரிக்குச் செல்வோரையும் அங்கு ஆர்ப்பாட்டம் ஈர்த்துவிடும்.

ஆனால் கடந்த பதினான்காம் திகதியிலிருந்து கொழும்பு ஹோட்டன் சுற்று வட்டம் விகாரமகாதேவி பூங்கா வுக்கு அண்மித்த பகுதியும் மக்கள் மனதில் நீங்காத நினைவுகளைப் பதித்துவிட்டுள்ளது.

‘யாரோ தெரியவில்லை, ஓர் இளைஞர் ஜனாதிபதியைப் பார்க்க வேண்டும் என்று அறுபதடி உயரத்தில் ஏறியிருக் கிறானாம்.’

“என்ன பிரச்சினையாம்?”

“அதுதான் தெரியவில்லை! ஒன்றும் சொல்கிறான் இல்லை. ஜனாதிபதியிடம் கூட்டிப்போக வேண்டும் என்கிறானாம். எந்த ஊராம்? எதுவும் தெரியவில்லை.”

அன்றைய தினம் காலை அலுவலகத் திற்குப் போகும் சகலரும் தமது வாகன த்தை நிறுத்திவிட்டு அண்ணார்ந்து வாய் பிளந்தபடி நிற்கிறார்கள்.

சந்தியில் வாகன நெரிசல், போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது, கடமையில் இருக்கும் போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் திணறிக் கொண்டிருக்கிறார். சந்தியில் வாகனத்தை நிறுத்தி இளைஞரை வேடிக்கை பார்க் கிறது ஸ்ரீமான் பொதுசனம். அவர்கள் எல்லோரையும் உயரத்தில் இருந்து வேடிக்கை பார்க்கிறார் இனந்தெரியாத அந்த இளைஞர்.

அதிகாலை மூன்று மணிக்கு அந்த இடத்திற்கு வந்தானாம். ஜனாதிபதியின் பதாகை கட்டுவதற்காகக் கட்டப்பட்டிருந்த அந்த அறுபதடி விளம்பரக் கம்பம் இவனுக்காகவே வெறுமையாய் இருந்திருக்கிறது. ஜனாதிபதியின் படம், டிஜிட்டல் அச்சு செய்திருந்த பெரிய பதாகைகள் மூன்று, கையால் எழுதிய ஒரு வெள்ளைப் பதாகை இவற்றையெல்லாம் லாவகமாகக் கட்டித் தொங்கவிடுகிறார். உடன் கொண்டு வந்த பயணப் பையையும் விளம்பரக் கம்பத்தில் வைத்துக் கட்டுகிறார் விழாதபடி. பிறகு தலையில் கவசத்தையும் அணிந்துகொண்டு முகத்தை எவரும் பார்த்துவிடாதபடி வெள்ளைத் துணியால் கட்டிக்கொண்டு சிலந்தி மனிதரைப் போல் தாவுகிறார் அறுபதாம் அடிக்கு.

என்னவோ காலை ஆறு மணிக்குப் பின்னர்தான் பொதுமக்களின் பார்வை இந்த விநோத இளைஞர் மீது படுகிறது. ஊடகவியலாளர்கள் வந்து குவிகிறார்கள். வீதியில் செல்பவர்களுக்கு படு குஷியாக இருக்க வேண்டும். கையடக்கத் தொலைபேசியில் நளினமாக நின்று கிளிக் செய்கிறார்கள். அதனைக் கண்ணுற்ற ஊடக படப்பிடிப்பாளர்கள் அவர்களைப் படம் எடுக்கிறார்கள்.
காலை ஒன்பது முப்பது.

தீயணைக்கும் படைப்பிரிவின் மின்தூக்கியுடன் அங்கு வந்த ஓர் ஆஜானுபாகு மேலே உட் கார்ந்தும் அமர்ந்தும் நெளிந்து கொண்டிருக்கும் இளைஞரி டம் சென்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். சற்று நேரத்தில் மின்தூக்கி கீழே வருகிறது.

“ஊர் காலி பக்கமாம். பெயர் ரோகித்தவாம். கீழே இறங்கமாட்டானாம். கையில் விஷக் குப்பியும் வைத்தி ருக்கிறான். பலவந்தமாகக் கீழிறக்க முயற்சித்தால், கீழே குதிப்பானாம். இல்லாவிட்டால் விஷம் குடிப்பானாம். நான் போய் வருகிறேன்” என்று கிளம்பிவிட்டார் அவர். நீங் கள் யார் என்றால், விசேட பிரதிநிதி என்று போட்டுக் கொள்ளுங்கள் என்கிறார் செய்தியாளர்களிடம்.

அவர் சென்றதும் அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகளும் சிறிது நேரத்திற்குக் காணாமற் போகிறார்கள். வானொலி செய்தியாளர்களுக்கு இருப் புக்கொள்ளவில்லை. நேரம் கிடுகிடுவென பறக்கிறது. ஊடகவியலாளர்களும் உண்ணாவிரதம்தான். அவன் மேலே. நாங்கள் கீழே. மச்சான் போய் ஏதாவது கடித்துவிட்டு வருவோம் என்கிறார் ஓர் ஊடகவியலாளர். எங்கே போவது? அந்த நேரத்தில் ஏதும் அதிசயம் நடந்துவிட்டாள்....

நினைத்தமாதிரியே பொலிஸார் சில மெத்தைகளைக் கொண்டு வந்தார்கள். உறங்குவதற்கு அல்ல. இளைஞர் விழு வதற்கு. தப்பித் தவறி வீழ்ந்துவிட்டால் கை, கால் முறிந்தாலும் இதயம் நிற்கா மல் இருப்பதற்கு இந்த முன்னேற்பாடு. ஊடகத்துறை கல்லூரியில் பயிலும் தம்பி தங்கைகளுக்கு சுவாரஸ்யமான செய்திதான். அவர்கள் விவகாரத்திற்காக வந்திருந்தார்கள். அங்கு வந்திருக்கும் சிலரிடமும் கருத்துகளைக் கேட்டுப் பதிவு செய்கிறார்கள்.

“அந்த இளைஞர் யார்? எந்த ஊர் என்றெல்லாம் எதுவும் தெரியாது. ஆனால் இந்தளவுக்குத் துணிந்து போராட முனைந்துள்ளார் என்றால், அவனது பிரச்சினை பாரதூரமானதாக இருக்க வேண்டும். எது எப்படியோ மனித உயிர் எந்தளவுக்குப் பெறுமதி வாய்ந்தது என்பது இதன் மூலம் புரிகி றது. பொலிஸாரின் பரபரப்பு இதனைத் தான் காட்டுகிறது. உயிர்காக்கும் உபகர ணங்கள், அம்பியூலன்ஸ் எல்லாவற்றை யும் தயாராக வைத்திருக்கிறார்கள். இத னைவிட வேறென்ன சான்று வேண்டும்?”

இவன் என்னடா இறங்குறானும் இல்லை. இறக்குறாங்களும் இல்லை. இவன் சிலவேளை பல்கலைக்கழகப் பெடியனா இருப்பானோ. இராணுவத் தில் இருந்திருப்பானோ. நிற்கிற நிலை யைப் பார்த்தால், அப்படித்தான் தெரிகி றது. இல்லாவிட்டால், இவ்வளவு நேரம் அந்தச் சின்னக் கம்பிக் கம்பத்தில் நிற்க முடியுமா? கூடியிருந்தவர்களின் மூளை எப்படியெப்படி எல்லாமோ வேலை செய்கிறது.

மாலை மூன்று நாற்பத்தைந்து....

அதிகாலையில் இருந்து எப்படித்தான் ஒரு பச்சைத் தண்ணியும் இல்லாமல் ஒன்றுக்கு இரண்டுக்குப் போகாமல் இருக்கிறானோ தெரியவில்லை. ஆனால் எமக்கு முடியுமா? அந்த விசேட பிரதிநிதி தந்துவிட்டுச் சென்ற தொலைபேசி இலக்கத்திற்கு மீண்டும் முயற்சித்தேன். காலையிலிருந்து ஒரு ஆயிரம் தடவை (எல்லோரும் சொல்வதைப்போல) சுழற்றியிருப்பேன். அவன் எந்த நேரமும் தொலைபேசியும் கையுமாக இருக்கிறான். தொடர்பு கிடைக்கவே இல்லை. இறுதி முயற்சி செய்துவிட்டு அலுவலகம் சென்றுவிட வேண்டியதுதான். மற்றவர்கள் அப்படித்தான் செய்கிறார்கள். “மச்சான் மொனவாஹரி உனத் மட்ட கோல் எக்காத் தீபான்” ஒவ்வொருவரும் கழன்று கொண்டிருக்கிறார்கள். அவன் அசையவே இல்லை.

உண்மையில் அவனது கோரிக்கை என்னவென்றாவது தெரியுமாக இருந்தால் அந்தச் சம்பவத்தை இப்படி எழுதவோ அல்லது கூடியிருந்தவர்கள் வேடிக்கை பார்க்கவோ வாய்ப்பு இருந்திருக்காது. மதியவேளைக்குப் பின்னர் வேடிக்கை பார்க்க வந்த ஒரு பெண் மட்டும் மகனே கீழே இறங்கி வாடா! உன் தங்கைகளையும் அம்மாவையும் யார் பார்ப்பார்கள்! என்று கண்ணீர் விடுகிறாள். அதனையெல்லாம் அவன் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. திரைப்படங்களில்தான் எவராவது இப்படித் தற்கொலைக்கு முயற்சித்தால் கீழே வா! குதித்துவிடாதே என்று கெஞ்சுவார்கள். இங்கு இந்த இளைஞனின் உறவுகள் கூட இல்லையே..

சிந்தித்துக்கொண்டே இருந்தால் ஆகப்போவது எதுவும் இல்லை. அவனது கைப்பேசிக்குக் கடைசி முயற்சி. ரோகித்தவின் தொடர்பு கிடைத்துவிட்டது.

“நான் கீழே இறங்க வேண்டுமானால், அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் வந்து எனக்கு வாக்குறுதி அளிக்க வேண்டும். எனது பிரச்சினைகளை ஜனாதிபதியிடமே சொல்வேன். என் பிரச்சினைகள் அவருக்குக் கொண்டு செல்லப்படவில்லை. தெரிந்திருந்தால் அவர் நடவடிக்கை எடுத்திருப்பார். என்னை அவரிடம் கூட்டிப்போவதாக முக்கியமானவர் வந்து உறுதியளித்தால் இறங்குவேன். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர் பெரும் அநீதி நடந்திருக்கிறது. எனக்கு ஏற்பட்டதைப்போல் யாருக்கும் நேராதிருக்க ஒரு குழுவை அமைத்தாவது நடவடிக்கை எடுக்குமாறு நான் இந்த நேரத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்”

தமக்கு நேர்ந்த அநீதியைப் பற்றிக் கூறினாலும் அவை யாதென்பதை அந்த இளைஞர் குறிப்பிடவில்லை. அவர் கூறியவற்றை உடனடியாகவே சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்குத் தெரியப்படுத்திவிட வேண்டும்.

“அவன் நான் காலையில் கதைத்தபோதும் இப்படித்தான் சொன்னான். ஆனால் அவன் பொய் சொல்லியிருக்கிறான். அவன் பெயர் ரோகித்த அல்ல. ஹோமாகமவைச் சேர்ந்த ககேஷ் சொய்சா. ஹோட்டலில் வேலை பார்த்திருக்கிறான். இன்னும் ஒரு மணித்தியாலத்தில் கீழே வந்துவிடுவான் பாருங்கள்”

அப்போதுதான் புரிந்தது காலையில் மேலே சென்றது இவர்தான் என்று அதற்கு மேலும் அங்கு இருக்க வேண்டுமா?

அன்றிரவு 9.30 அளவில் ஜனாதிபதியின் ஆலோசகர் பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் முயற்சியில் அந்த இளைஞர் கீழே இறக்கப்பட்டார். இப்போது 29 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். அவரது விநோதமான போராட்டம் அவரின் பிரச்சினையின் பாரதூரத்தையும் விநோதமாக்கியிருக்கிறது என்பதுதான் உண்மை.

அம்பலமாகும் பெட்ரூம் டாக்! -எச்சரிக்கை ரிப்போர்ட்!

எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம்தான் ஆகுது. கல்யாணமான நாலாவது மாசமே என் கணவர் குவைத் போயிட்டார். என் மேல் அளவுகடந்த காதல் அவருக்கு. அதனால் இரவு நேரங்கள்ல எங்கிட்டே ரொமாண்டிக்கா பேசுவார். என்னையும் அவர் அளவுக்கு பேசவைப் பார்..''’சொல்லும்போதே அவர் கண்கள் சங்கடம் கலந்த பயத்தில் தவித்தது. அவரைத்தேற்றும் விதமாக நாம்.. ‘

"சரி விடுங்க. இது பல இடங்கள்ல நடக்கு றதுதானே... இதில் என்ன பிரச்சினை?'’ என்றோம்..

அந்த குடும்பத் தலைவி, அடுத்து சொன்ன தகவல் நம்மை ஏகத்துக்கும் அதிரவைத்தது.

""அவரும் நானும் ரொமாண்டிக் மூடில் எல்லை மீறி பேசிய கிளுகிளு பேச்சுக்கள்... இப்ப இண்டர் நெட்டில் வருதாம். யாரோ ஒரு கிரிமினல் பேர்வழி... எங்களுக்கே தெரியாமல்... எங்க பேச்சை ரெக்கார்டு பண்ணி... இப்படிப் பண்ணியிருக் கான். இதை என் வீட்டுக்காரர்தான் பார்த்துட்டு... அதிர்ந்துபோய்... எனக்குத் தகவல் சொன்னார். கூடவே "நக்கீரன்ட்ட உதவி கேள்'னும் சொன்னார். அதான் வந்தேன்''’என்று நம்மை அதிரவைத்த வர்... அந்த இணையதள முகவரியையும் நம்மிடம் கொடுத்தார்.

அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்த நாம்... அவர் சொன்ன விவகாரமான இணையதளத் தை கவனித் தோம்.

கணவன்- மனைவிகள், காதல் ஜோடி கள், கள்ள உறவு ஜோடிகள் என பலதரப்பட்ட ஆண் -பெண்களின் லச்சையற்ற அப்பட்டமான உரையாடல்கள்... அங்கே பதியப்பட்டிருந்தன. காதுகள் கூசும் அளவிற்கு... பலரும் தங்களது அந்தரங்க உணர்வுகளை யார் கவனிக்கப்போகிறார்கள் என்ற தைரியத்தில்.. தங்கள் பார்ட்னர்களிடம் செல்லச் சீண்டல் சிணுங்கல் சகிதமாய்ப் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்... அங்கே தோரணம் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன.

உரையாடல்களிலேயே இப்படி ஒரு மன்மத உலகமா? என திகைத்துப்போன நாம்...

நமக்குத் தெரியாமல் நாம் செல்போனில் பேசுவதை தனி நபர் ஒருவரால் ரெக்கார்டு செய்யமுடியுமா? என விசாரிக்க ஆரம்பித்தோம்.

பிரபல மொபைல் கம்பெனியில் டெக்னிக்கல் பிரிவு உயர் அதிகாரியாகப் பணிபுரியும் அவரைத் தொடர்புகொண்டோம். அந்த அதிகாரியோ... ஒரு குபீர்ச் சிரிப்பை உதிர்த்துவிட்டு... ""இந்த மாதிரி யான பேச்சுக்கள் 3 விதமா பதிவாக வாய்ப்பிருக்கு. முதல் வகை... நீங்களோ, நானோ மொபைல்ல ரெக்கார்டிங் வாய்ஸ் சாஃப்ட்வேர்கள இன்ஸ்டால் பண்ணிக்கிட்டோம்ன்னா நமக்கு வர்ற இன்கம்மிங், அவுட்கோயிங் கால்கள் தானா துல்லியமா பதிவாயிடும். இதில் பெரிய பிரச்சினை இல்லை.

இரண்டாவது, எங்களை மாதிரியான செல்போன் நிறுவனங்கள் கஸ்டமர்களின் பிரச்சினைகள தீர்த்து வைக்க 24 மணி நேரமும் இயங்கும் கால்சென்டர்கள உருவாக்கி வச்சிருக்கு. இந்த கால்சென்டர்கள்ல பணிபுரியும் ஒருத்தர் நினைச்சா... யார் பேச்சை வேணும்னாலும் ரெக்கார்ட் பண்ணமுடியும். பொதுவா நைட் ஷிப்டில் அதிக வேலையிருக்காது. அப்ப டூட்டியில் இருக்கறவங்க... நீண்ட நேரமா ஒரு கால் பேசப்படுதுன்னா அவுங்க என்ன பேசறாங்கன்னு ஒட்டு கேட்க முடியும். நைட்ல கள்ளக்காதலர்கள், கணவன்-மனைவி, காதலர்கள் உணர்ச்சியோட கிளுகிளுப்பா பேசுவாங்கங்கற ரகசியம் எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே. இந்த மாதிரி பேச்சுக்களை கேட்டுக்கேட்டு கிக் ஆகற சிலர் இருக்கத்தான் செய்றாங்க. அப்படி ரெக்கார்ட் பண்ணியது அப்படியே பரவி நெட் வரைக்கும் வர வாய்ப்பிருக்கு.

மூணாவதா சில குறிப்பிட்ட இணையதளங்கள், "உங்களுக்காக எங்களது பெண்கள் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம், செக்ஸ் பற்றி மற்றவர்களிடம் பேச தயங்குவதை இவர்களிடம் பேசலாம்'னு குறிப்பிட்டு 12 இலக்க எண் தந்திருப்பாங்க. அதுல ஏதாவது ஒரு நம்பர காண்டக்ட் பண்ணி பேசனிங்கன்னா நீங்க பேசற கிளுகிளு பேச்சை நமக்கே தெரியாம ரெக்கார்ட் பண்ணி நெட்ல போட்டுடுவாங்க. இது காசு கொடுத்து நமக்கு நாமே சூன்யம் வச்சிக்கறதுக்கு சமம்''’என்றார் விரிவாக.

பெண்களுடன் செக்ஸ் உரையாடல்களுக்கு அழைப்பு விடுக்கும் அந்த கிளுகிளு இணையதளங் கள் குறித்தும் விசாரித்தோம். அதில் கையைச் சுட்டுக்கொண்ட ஒரு நண்பர் தன் அனுபவங்களை சங்கோஜத்துடனே சொல்ல ஆரம்பித்தார். ""பொதுவா செக்ஸ் வெப்ஸைட்டுகள்ல நான் உலவிக்கிட்டு இருந்தப்ப... "எந்த நேரத்திலும் மனதில் இருக்கும் ஆசைகளை உரையாடல் மூலம் இந்தப் பெண்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்'னு ஒரு வெப்ஸைட் கூவியழைத்தது. அதில் உடம்பைத் திறந்து போட்டி ருந்த ஒருத்தியைப்... படத்தைப் பார்த்தே... கிளுகிளு உரையாடலுக்கு செலக்ட் பண்ணி அவங்க கொடுத் திருந்த ஐ.எஸ்.ஐ. எண்ணில் தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலே "என் பேரு நந்தினி. மும்பையில காலேஜ் படிக்கறேன். என் சொந்தவூர் சென்னைதான். உங்களோட செக்ஸா பேசணும்னு ஆசையா இருக்கு' என்றவள்.... தன் உடல் பாகங்களை வர்ணித்து... அதில் உள்ள மச்சங்களை யும் சொல்லி கண்டபடி கிக் ஏத்தினாள். இப்படி அவளோடு 22 நிமிடம் உரையாடல் நீண்டது. அந்த மாத பில் வந்தபோது மயக்கம் வந்துவிட்டது. காரணம் அந்த 22 நிமிட பேச்சுக்கு 3,050 ரூபாய் சார்ஜ் ஆகியிருந்தது. நொந்துபோய் இதுபற்றி விசாரித்த போது இணையதளத் தரப்பும் தொலை பேசித் தரப்பும் கூட்டு சேர்ந்து என்னை மாதிரியான சபல பார்ட்டிகள்கிட்ட பணம் புடுங்க இந்த மாதிரி பண்ணிக் கிட்டிருக்காங்கன்னு தெரிஞ்சிது. லோக்கல் கால்களை ஐ.எஸ்.டி கால்களா மாத்தித்தான் பணம் புடுங்குறாங்க. என்னை மாதிரி தினம் தினம் எத்தனைபேர் இப்படி... பணத்தை அந்த ஆபாசக் கும்ப லிடம் பறிகொடுத்துக் கிட்டு இருக்காங் களோ''’ என்றார் எரிச்சலாக.

வழக்கறிஞரான ரமேஷ்கிருஸ்ட்டி நம்மிடம் ""சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் குளோனிங் செல்லை உருவாக்கித் தர்றாங்க. இது எதுக்குன்னா கணவன் மீது மனைவிக்கோ... அல்லது மனைவி மீது கணவனுக்கோ சந்தேகம் இருந்தா... அவங்க சிம் கார்டைக் கொடுத்து அதே நம்பருக்கான குளோனிங் சிம்கார்டை வாங்கிக்கலாம். சம்பந்தப்பட்டவங்க யார்ட்ட பேசினாலும் இந்த குளோனிங் சிம் போட்ட செல்போனிலும் கேட்கும். இப்படி ஒரு வியாபாரம் அங்க நடக்குது. அதேபோல்... இன்னொரு விஷேச ஆண்ட னாவையும் அங்க விக்கிறாங்க. அந்த மினி சைஸ் ஆண்டனாவை வீட்டு மொட்டை மாடியில பொருத்திட்டா போதும்... அக்கம் பக்கத்தலயிருக்கற செல்போன் லைன்களுக்கு வர்ற அத்தனை கால்களையும் ஒட்டுக்கேட்டு.. ரெக்கார்டும் பண்ணமுடியும். இதன் மூலம் சின்னஞ்சிறிய ஜோடிகள், தம்பதிகள், லவ்வர்கள் இவங்க அந்தரங்க உரையாடல்கள் கொள்ளையடிக்கப்படுது. இந்த குளோனிங் செல்போனை அவங்க 20 நிமிசத்தில் ரெடிபண்ணிக் கொடுக்குறாங்க. இதுக்கு சார்ஜ் 3,500 ரூபாயாம். நாடு எங்கேயோ போய்க்கிட்டு இருக்கு. இந்த மாதிரியான டேஞ்சரஸ் விவகாரங்களை உடனே அரசாங்கம் தடுக்கணும்'' என்றார் கவலையாக.

சென்னையில் உள்ள சைபர் க்ரைம் பிரிவு ஏ.சி. சுதாகரிடம் இதுபற்றி நாம் கேட்டபோது...’""மொபைல்ல சாஃப்ட்வேர்ஸ் இன்ஸ்டால் பண்ணி ரெக்கார்ட் பண்ணிக்கறது அவுங்களோட தனிப்பட்ட விருப்பம். ஆனா அத வச்சி மிரட்டறது, வெளியிட றது குற்றம். இதுக்கு கடுமையான தண்டனையுண்டு. நம் பேச்ச மொபைல் கம்பெனிங்க ரெக்கார்ட் பண்ண வாய்ப்பு குறைவு. குளோனிங் சிம், மினி ஆண்டனாவெல்லாம் புது விவகாரமா யிருக்கு. இதனால பெரிய பிரச்சினைகள் வர்றதுக்கு வாய்ப் பிருக்கு. நாங்க இத தீவிரமா கண்காணிக் கிறோம்''’ என்றார் உறுதியான குரலில்.

மொபைல் போனில் பேசும் முன் யோசித்து பேசுங்கள். இல்லையேல்.... உங்கள் அந்தரங்கமும் நாளை உலகமெங்கும் உலா வரலாம்

சனி, 25 செப்டம்பர், 2010

பாடகி சொர்ணலதா மரணத்தில் மர்மம்!

"மாலையில் யாரோ மனதோடு பேச...' என்று ஒலித்த அந்தக் குரல் இனி நேரில் பேசவோ பாடவோ போவதில்லை. நுரையீரல் பாதிப்பினால் 37 வயது பின்னணிப் பாடகி சொர்ணலதா மரணமடைந்ததால் திரையுலகத்திலும் ரசிகர்களிடமும் ஏற்பட்ட அதிர்ச்சி இன் னும் முழுமையாக விலகவில்லை. அவ ருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் படத்திறப்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடாகி வருகிறது.

தேசிய விருது பெற்ற சொர்ணலதாவின் பெருமைகள் பற்றி சொல்லும் "படத்தொகுப்பாளரும் கதாசிரியருமான சுபாஷ்' ""புகழ்பெற்ற இந்திப்படமான "மொகலே ஆசம்' படத்தை தமிழில் டப் செய்து "அனார்கலி' என்ற பெயரில் தயாரானது. செங்கம் ஜபார்தான் இதற்கானப் பணிகளை செய்தார். இந்திப்படத்தில் நவ்ஷாத் அலியின் இசையில் புகழ்பெற்றிருந்த கவாலி என்ற போட்டிப் பாடலை ஷம்ஷாத் பேகமும் லதாமங்கேஷ்கரும் பாடியிருந்தார்கள். லதாமங்கேஷ்கர் பாடிய பகுதியை தமிழில் பாடுவதற்கு சொர்ணலதாவை தேர்வு செய்தார் இசைச் சேர்ப்பு பணி மேற்கொண்ட சங்கர்கணேஷ். ஷம்ஷாத்பேகம் குரலில் யாரை பாடவைப்பது என்று ஆலோசித்தபோது, அந்தப் பாடலைக் கேட்ட சொர்ணலதா, அந்தக் குரலிலும் தானே பாடுவதாகச் சொன்னார். போட்டிப்பாடலில் இரண்டு வெவ்வேறு குரல்களில் இரு பெரும் பாடகிகள் இந்தியில் பாடியிருந்ததை, தமிழில் சொர்ணலதா மட்டுமே பாடி அசத்தியிருந்தார். இதை அப்போது நவ்ஷாத்திடம் போட்டுக் காட்டினோம். சொர்ணலதாவின் அபார திறமை கண்டு பாராட்டினார் அந்த இசை மேதை. அத்துடன், நாங்கள் வாங்கிச் சென்ற மோதிரத்தையும் சொர்ண லதாவுக்கு விருதுபோல வழங்கினார். "தன் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் இது' என்று எப்போதும் சொல்வார் சொர்ணலதா'' என்றார்.

அவரால் மறக்க முடியாத சம்பவங்கள் நிறையவே இருக்கின்றன என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். கேரள மாநிலம் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட சொர்ண லதாவின் பெற்றோருக்கு 10 பிள்ளை கள். 4 பெண்கள், 6 ஆண்கள். ஒன்பதாவது குழந்தைதான் சொர்ண லதா. அவருக்கு இரண்டு அக்கா, 6 அண்ணன், 1 தங்கை. இத்தனை பேர் இருந்தாலும், குடும்பத்தில் வரு மானம் ஈட்டக்கூடிய நபர் சொர்ண லதாதான். அக்காக்களுக்கு திரு மணமாகி அவரவர் கணவருடன் தனியாகச் சென்றுவிட்டார்கள். அண்ணன்களுக்கோ தங்கை சொர்ணலதாவின் வருமானத்தில் தான் வாழ்க்கை.

ரெகார்டிங் என்றால் இரண்டு அண்ணன்கள் எஸ்கார்டு போல கூடவே வருவார்கள். பாட்டு சீன் என்ன என்று மியூசிக் டைரக்டர் விளக்கிச் சொல்வதற்குக்கூட சங்கடமாக இருக்கும். அந்தளவுக்கு பின்தொடர்ந்து கொண்டிருப்பார்கள். யாருடனும் சொர்ணலதா பழகிவிடக் கூடாது. அவருக்கு கல்யாண எண்ணம் வந்துவிடக்கூடாது என்ப தற்காகத்தான் இந்தளவுக்கு கண் காணிப்பு. சில மியூசிக் டைரக்டர்கள் கோபப்பட்டு, அண்ணன்களை விரட் டிய சம்பவமும் உண்டு. சொர்ணலதா அதிகளவில் பாட முடியாமல் போன தற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். அண்மைக்காலமாக சொர்ணலதாவை மேடைகளில் கூட பாடவிடவில்லை. அடிக்கடி சொந்த மாநிலமான கேரளாவுக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். அங்கு டி.வி. நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக உட்கார வைத்து இவர்கள் செட்டுக்கு வெளியே நின்று கண்காணித்து வந்தார்கள். இந்த நிகழ்ச்சிகளில் நல்ல வருமானம் என்கிற அவரது நெருங்கிய வட்டாரத்தினர் மேலும் சில தகவல்களையும் சொல்கிறார்கள்.

குடும்பச் சுமை முழுவதையும் சுமந்து கொண்டு, தனது விருப் பங்களை வெளிப்படுத் தக்கூட முடியாமல் நெருக்கடியில் இருந்த சொர்ணலதா பயங்கர மனஅழுத்தத்தில்தான் இருந்தார். அவருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டி ருந்ததாக இப்போது சொல்கிறார்கள். சைனஸ், ஆஸ்துமா, ஈஸ்னோபீலியா போன்ற நுரையீரல் சம் பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் இத்தனை சிறப்பான பின்னணி பாடகியாக அவர் வந்தி ருக்க முடியாது. அவர் இறப்பதற்கு இரண்டு நாள் முன்னாடிகூட, ஒரு திரைப்பட விழா தொடர்பான அழைப்பிதழை நேரில் கொடுக்க அவர் வீட்டுக்குச் சென்றவர்களிடம், சொர்ணலதா ஊரில் இல்லையென்றும் வருவதற்கு ஒரு மாதமாகும் என்றும் அண்ணன்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இரண்டு நாள்கழித்து நுரையீரல் பாதிப்பால் சென்னை மலர் மருத்துவமனையில் அவர் மரணமடைந்துவிட்டதாக செய்தி வருகிறது.

""சொர்ணலதாவின் வீடு இருப்பது சாலிகிராமத்தில். விஜயா, சூர்யா போன்ற ஆஸ்பிட்டல்கள் பக்கத்திலேயே இருக்கின்றன. ஆனால், எதற்காக அடையாறில் உள்ள மலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும்? அந்த மருத்துவமனை ஒன்றும் நுரையீரல் நோய்க்கு ஸ்பெஷாலிட்டி இல்லையே! பாடிப் பறந்த அந்தக் குயிலின் இதய கீதம் ரொம்பவும் சோகமானது. மன அழுத்தமே இதயத்தை நொறுக்கியதா, தற்கொலைக்குத் தூண்டியதா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. அவரது குரலைப் போலவே உண்மைகளும் ஒரு நாள் உரக்க வெளிப்படும் என்று நினைக்கிறோம்'' என்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

ரகசிய போலீஸில் பெண் பகிரங்க வாக்குமூலம்! மீண்டும் நித்யா கைது?

""ஹலோ தலைவரே... ... தப்பு செஞ்சு அம்பலப்பட்ட பிறகும், புகார் கொடுக்க ஆளில்லைங்கிறதால தண்டனையிலிருந்து தப்பிச்சிடலாம்னு நினைக்கிறவங்க பற்றி என்ன நினைக்கிறவங்க பற்றி என்ன நினைக்கிறீங்க?''

""தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்ங்கிற வாசகத்தைத்தான் நினைக்கத் தோணுதுப்பா.''

""நித்யானந்தா சாமியாரின் சரச வீடியோ வெளியான பிறகும், அவர் மேலே லெனின்தர்மானந்தா மட்டும்தானே புகார் கொடுத்திருக்காருன்னும், பாதிக்கப்பட்ட பெண்கள் யாராவது புகார் கொடுத் திருக்காங்களான்னுதான் நித்தி தரப்பு இதுவரை கொஞ்சம் தெனா வெட்டாகவே கேட்டுக்கிட்டிருந்தது. லெனின்தர்மானந்தாவின் புகாரின் பேரில் நித்தி மீதான வழக்கை சீரியஸா விசாரிச்சிக்கிட்டிருக்கும் கர்நாடக சி.ஐ.டி போலீசாருக்கு அந்த மாநில ஆளுந்தரப்பிலிருந்து ஏகப்பட்ட நெருக்கடி. வேகத்தைக் கட்டுப்படுத்தும்படி மாநில உள்துறை அமைச்சரே சொன்னாலும், சி.ஐ.டி.யின் வேகம் குறையலை. இந்த நிலைமையில்தான், நித்யானந்தாவால் பாலியல் பாதிப்புக்குள்ளான ஒரு பெண், சி.ஐ.டி போலீசாரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.''

""யார் அந்தப் பெண்?''

""புகார் கொடுப்பவர்களுக்கெல்லாம் நித்தி தரப்பால் கொலை மிரட்டல் வந்துக்கிட்டிருக்கிற நிலைமையில், அந்தப் பெண்ணின் பெயரையும் முகத்தையும் நாம ஏன் அடையாளம் காட்டணும். விசாரணை தீவிரமாகும்போது எல்லா விஷயங்களும் வெளியே வந்திடப்போகுது. ஆன்மீகங்கிற பேரில் நித்யானந்தா என்னவெல்லாம் பேசி, தன்னை எப்படியெல்லாம் ஏமாற்றினார், எத்தனை முறை சீரழிச்சாருங்கிற விவரத்தை அந்தப் பெண் சொல்லியிருப்பதால், இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டிருக்குது. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்திருக்கிற புகாரின் அடிப்படையில் நித்யானந்தா மீண்டும் கைதாவாராங்கிறதுதான் பரபரப்பான எதிர்பார்ப்பா இருக்கு.''

""இங்கே தமிழ்நாட்டிலும் விஜிலென்ஸ் துறை தீவிரமா செயல்பட்டு, லஞ்ச அதிகாரிகளை கையும் களவுமா பிடிக்குது. ஆனா, அவங்க மேலேயே நடவடிக்கை எடுக்க முடியாம அதிகார வர்க்கத்திலிருந்து நெருக்கடிகள் வருதாமே?''

""ஆமாங்க தலைவரே.. ...மின்சார வாரியத்தில் அசிஸ்டெண்ட் இன்ஜினியரான செல்வம்ங்கிறவரை வாரியத்தின் உள்ளடி வேலையில் ஈடுபடுபவர்களின் தூண்டுதலால் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. அந்த சஸ்பென்ஷனை ரிவோக் செய்வதற்காக அவர் சீஃப் இன்ஜினியர் சீனி வாசனை நாடினார். சீஃப் அதற்கு லஞ்சம் கேட்க, இது பற்றி விஜிலென்ஸிடம் புகார் கொடுத்தார் செல்வம். விஜிலென்ஸ் அறிவுரைப்படி செயல்பட்ட செல்வம், சீஃப் கேட்ட பணத்தோடு நேரில் போய் அவரை சந்தித்து கொடுத்தப்ப ரெடியா இருந்த விஜிலென்ஸ் அதிகாரிகள் மடக்கிட்டாங்க.''

""கையும் களவுமா சீஃப் இன்ஜினியர் சீனிவாசன் கைதானது பெரியளவில் பேசப்பட்டது.''

""தொடர்ந்து நடந்த விசா ரணையில் சீனிவாசனுக்கு பல பேங்க் அக்கவுண்ட் இருப்பதும், கோடிக் கணக்கில் பணம் பல இடங்களில் இருப்பதும் தெரிய வந்தது. அத னால் அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டார். நிர்வாகத்தின் தவறான நடவடிக்கைகளால் சஸ்பெண்ட்டான ஏ.இ.செல்வத்தின் சஸ்பெண்ட்டை உடனே ரிவோக் செய்திருக்கணும். அதுதான் நடைமுறை. ஆனா, மின்வாரியமோ இதுநாள்வரை செல்வத்தின் சஸ்பெண்ட்டை ரத்து செய்யலை. அதே நேரத்தில், சீஃப் இன்ஜினியரின் சஸ்பென்ஷனை ரிவோக் செய்யும் வேலைகள் நடந்துக்கிட்டிருக்குது. சஸ்பெண்ட் டான நிலையிலும் சீனிவாசனை மின்துறை அமைச்சரின் வீட்டிலும், வாரிய சேர்மன் சி.பி.சிங்குடனும் அடிக்கடி பார்க்க முடியுதுன்னு டிபார்ட்மென்ட்டில் உள்ளவங்களே சொல்றாங்க.''

""கோலிவுட் வட்டாரம் சொல்ற ஒரு தகவலைச் சொல்றேன்.. வரும் 30-ந் தேதியன்னைக்கு தன்னோட ஆதரவாளர்கள் 1000 பேரோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யில் சேரப்போறாரு சினிமா தயாரிப்பாளரான ரோஜா கம்பைன்ஸ் காஜா மொய் தீன். சினிமா துறையில் பல நெருக்கடிகளைத் தாண்டி வந்த காஜாமொய்தீன் இப்ப அரசியலில் காலடி எடுத்து வைக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் சிறுத்தைகள் கட்சி வேட் பாளரா இவர் களமிறங்கு வார்னு எதிர்பார்க்கப்படுது.''

""தேர்தல் நெருங்குதே... இனி கோலிவுட் ஆட்கள் அரசியலுக்குள் என்ட்ரியாகும் தகவல்களை நிறைய எதிர்பார்க்கலாம்.''

""சென்னையில் நடந்த டேவிஸ்கோப்பை டென்னிஸ் போட்டியில் பிரேசில் அணியை இந்திய அணி அபாரமா ஜெயித்திருக்குது. 5 ஆட்டங்கள் கொண்ட போட்டியில் முதல் இரண்டு ஆட்டத்தில் சீனியர்களான பயஸும் பூபதியும் ஜெயிக்க முடியாமல் போனாலும், அவர்கள் இருவரும் சேர்ந்து ஆடிய இரட்டையர் ஆட்டம், இளம் வீரர்களான சோம்தேவும், போபண்ணாவும் ஆடிய சிங்கிள் ஆட்டங்களில் ஜெயித்து 3-2 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்று, உலக சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்குதே..''

""பெருமையான விஷயம்தாங்க தலைவரே.. முதல்வர் கலைஞர் குலுக்கல் முறையில் ஆட்டங்களை நிர்ணயித்தார். இந்த விளையாட்டுப் போட்டியை அனைத்து இந்திய டென்னிஸ் சங்கத்தின் துணைத் தலைவரும் உள்துறை அமைச்சர் ப.சியின் மகனுமான கார்த்தி சிதம்பரம்தான் சென்னையில் நடத்துவதில் முன்னின்றார்.''

""ஆனால், இந்திய டென்னிஸை உலக அரங்கில் உயர்த்தி யவர்களான தமிழகத்தைச் சேர்ந்த விஜய்அமிர்தராஜையோ, ரமேஷ் கிருஷ்ணனையோ இந்த போட்டிக்கு விருந்தினராகக் கூட அவர் அழைக்கலைங்கிற வருத்தம் டென்னிஸ் ஆர்வலர்களிடம் இருக்குது. இத்தனைக்கும், டென்னிஸ் வீரர்களை உருவாக்குவதற்காக விஜய் அமிர்தராஜ் ஒரு அகாடமியே நடத்தி வருகிறார். பயஸ், பூபதி இருவர் உள்பட இன்றைய பிரபல டென்னிஸ் வீரர்கள் பலரும் இந்த அகாடமியில் பயிற்சி எடுத்தவங்கதான். அப்படிப்பட்ட அமிர்தராஜை அழைக்காத கார்த்தியின் செயல் விமர்சனத்திற்குள்ளாகியிருக்குது.

அமெரிக்க அமைச்சக நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட ஆசியாவின் முதல் திருநங்கை ஆர்வலர் கல்கி!

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் அடுத்த மாதம் நடத்தப்படவுள்ள சர்வதேச நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்கிறார், திருநங்கை சமூகத்தில் இருந்து மாற்றத்தை நோக்கிச் செயல்பட்டு வரும் சென்னையைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் கல்கி!

சர்வதேச பார்வையாளர்கள் தலைமைத் திட்டம் (International Visitors Leadership Programme - ஐ.வி.எல்.பி.) என்ற இரு வார நிகழ்வை, அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் கல்வி மற்றும் கலாசார விவகாரங்களுக்கான துறை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், அறிஞர்கள், நிபுணர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர்.

இதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு, சென்னையைச் சேர்ந்த திருநங்கை சமூக ஆர்வலர் கல்கிக்கு கிடைத்துள்ளது.

இந்தியாவில் உள்ள சமூக ஆர்வலர்களில் ஏறத்தாழ 200 பேரில், 30 பேர் தெரிவு செய்யப்பட்டு, அவர்களில் இருந்து இறுதியாக கல்கி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது கவனத்துக்குரியது.

அத்துடன், ஐ.வி.எல்.பி. நிகழ்வில் கலந்துகொள்ளும் ஆசியாவைச் சேர்ந்த முதல் திருநங்கை என்ற பெருமையையும் கல்கி பெற்றுள்ளதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள கல்கி, இந்தியாவில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் வாஜ்யாப், மறைந்த பிரதமர் இந்திரா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்ட வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் தானும் பங்கேற்கவிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

அமெரிக்காவில் திருநங்கைகள் சட்ட முறைப்படி எவ்வகையில் பாதுகாப்பினை பெறுகிறார்கள் என்பன உள்ளிட்ட விவரங்களை நேரில் கண்டறியும் வாய்ப்பாக இதை கருதுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவில் திருநங்கைகளில் நிலை.. அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து அந்த நிகழ்ச்சியில் விரிவாக பேசுவதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்கி கூறினார்.

கல்கி பற்றி...

திசை வென்ற திருநங்கைகளில் ஒருவர். திருநங்கைச் சமூகத்தின் குரலாக, 'சகோதரி' என்னும் இதழைத் தொடங்கியதுதான் கல்கியின் முதல் முகவரி. 'இப்படிக்கு ரோஸூ'டன் இணைந்து 'சகோதரி ஃபவுண்டேஷன்' அமைப்பைத் தொடங்கினார். தொடர்ந்து, கல்கியின் ஒவ்வொரு செயல்பாடும் திருநங்கைகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்கே அர்ப்பணிப்பானது. கடலூர் குடிகாரத் தம்பதிகள் 500 ரூபாய்க்குத் தங்கள் குழந்தையை விற்க, அதைத் தத்தெடுத்து வளர்க்கிற கல்கி, இப்போது தாயுமானவர். திருநங்கைகளுக்கான ஊடகங்களை உருவாக்குவது இவரின் பெருங் கனவு!

காமன்வெல்த் போட்டி நடத்த 72 நாடுகளுக்கு லஞ்சம் கொடுத்ததா இந்தியா?

டெல்லி காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகளில் உள்ள குளறுபடிகள் தொடர்பான சர்ச்சைகள் சற்றே குறையத் தொடங்கியுள்ள சூழலில், இந்தப் போட்டியை நடத்தும் உரிமைக்காக, 72 நாடுகளுக்கு தலா 1 லட்சம் அமெரிக்க டாலர்களை இந்தியா லஞ்சமாக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

19-வது காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் உரிமையைப் பெறும் நாட்டைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஜமைக்காவில் நடைபெற்ற இறுதிக் கூட்டத்தில், ஹேமில்டனை முந்துவதற்காக 72 காமன்வெல்த் நாடுகளுக்கு பெரிய தொகையைக் கொடுக்க, இந்திய முன்வந்தது என ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் 'டெய்லி டெலகிராப்' என்ற பத்திரிகை பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் படி, '72 காமன்வெல்த் நாடுகளுக்கு தலா $1,00,000 (சில நாடுகளுக்கு $1,40,000) தொகையை, அந்நாடுகளின் விளையாட்டு வீரர்களுக்கான திட்டங்களுக்காக இந்தியாவால் கொடுக்கப்பட்டுள்ளது,' என அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

இதில், ஆஸ்திரேலியா நாட்டுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அளிக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கே வாக்களிப்பது என்று ஆஸ்திரேலியா ஏற்கெனவே முடிவு செய்திருந்தது என்றும், இந்தத் தொகை எதிர்பார்த்த அளவுக்கு அதிகமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் உரிமையைப் பெறுவதற்கு, கனடாவின் ஹேமில்டன் நகரம் திட்டமிட்டிருந்தது.

எனினும், இறுதியில் ஹேமில்டனை 46-22 என்ற ஓட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

போட்டி நடத்தும் உரிமையைப் பெற்றால், 72 காமன்வெல்த் நாடுகளுக்கும் தலா 70 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அளிப்பதாக ஹேமில்டன் வாக்குறுதி அளித்திருந்தது.

ஆனால், இந்தியா அதிக தொகை தருவதாக வாக்குறுதி அளித்ததால், வாக்கெடுப்பில் அமோக வெற்றி பெற்றது என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாய்னா 25

சாய்னா நெஹ்வால்... உலகப் பெண்கள் பேட்மிட்டன் தர வரிசையில், எந்த நேரமும்


முதல் இடத்தை முத்தமிடும் பக்கத்தில் இருப்பவர். சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியக் கொடிக்குக் கௌரவம் தேடித் தரும் மிகச் சிலரில் ஒருவர். 25 வயதைக்கூட எட்டாத சாதனைப் பெண்ணைப்பற்றிய 25 குறிப்புகள் இங்கே...

சாய்னா, 1990 மார்ச் 17-ல் ஹரியானாவில் பிறந்தவர். ஆனாலும், விளையாடி வளர்ந்தது எல்லாமே ஹைதராபாத்தில். சாய்னாவின் இன்ஸ்பிரேஷன், அவரின் அப்பா டாக்டர் ஹர்விர் சிங். சாய்னாவின் அப்பா - அம்மா இருவருமே பேட்மிட்டன் சாம்பியன்கள்!

சாய்னாவின் அக்கா, சந்திரான்சு. ஃபார்மசி பட்டதாரியான சந்திரான்சு, வாலிபால் பிளேயர். ஆனால், தங்கை அளவுக்கு விளையாட்டில் ஆர்வம் இல்லை!

ஐந்து மாத சிசுவாக இருந்தபோது சாய்னாவை ஒரு பேட்மிட்டன் போட்டியைப் பார்க்கத் தூக்கிச் சென்று இருக்கிறார்கள். உள்ளே நுழைந்ததும்... சாய்னா பாப்பா முதன்முறையாக வாய்விட்டுச் சிரித்ததாம். அடக்க முடியாத ஆனந்தச் சிரிப்பாம். பின்னாட்களில் விளையாட்டில் சாதனைகள் படைத்த பிறகு, சாய்னாவின் அப்பா இந்த சம்பவத்தை அடிக்கடி நினைவுகூர்வார்!

சாய்னாவுக்கு எட்டு வயது இருக்கும். அதிகாலை 4 மணிக்கே எழுப்பி, 25 கி.மீ. தொலைவில் இருக்கும் மைதானத்துக்கு ஸ்கூட்டரில் பயிற்சிக்கு அழைத்துச் செல்வார் அவரது தந்தை. பயிற்சி முடிந்து பள்ளிக்குக் கொண்டுவிடும்போது, ஸ்கூட்டரில் அமர்ந்தபடியே சாய்னா தூங்கிவிடுவாராம். அதனால், சாய்னாவை அணைத்துப் பிடித்துக்கொள்ள, அவருடைய அம்மாவும் பில்லியனில் உடன் வரத் தொடங்கினார்!

பயிற்சிக்கெனத் தினமும் 50 கி.மீ. பயணம் செய்வது சிரமமாக இருந்ததால், மைதானத்துக்கு அருகிலேயே ஒரு வீடு பார்த்து மாறிக்கொண்டார்கள் சாய்னா குடும்பத்தினர்!

சாய்னாவின் பயிற்சிக்கென, அப்போதே மாதம் 12 ஆயிரம் ருபாய் ஒதுக்கிச் செலவழித்தார் அவரது தந்தை. சாய்னாவின் தொடர் வெற்றிகளுக்குப் பிறகு, யோனெக்ஸ் நிறுவனம்தான் முதன்முறையாக சாய்னாவுக்கு ஸ்போர்ட்ஸ் கிட் ஸ்பான்சர் செய்தது!

சாய்னா... வீட்டின் பிரியமான இளவரசி. செல்லமாக 'ஸ்டெஃபி' என்றுதான் அழைப்பார்கள்!

இருட்டு என்றால் இப்போதும் பொண்ணுக்கு ரொம்பப் பயம். அம்மா அல்லது அக்கா என யாராவது உடன் இருந்தால்தான், தூங்கவே செல்வார். 'இதுவரை ஓர் இரவுகூட இவள் தனியாகத் தூங்கியது இல்லை!' என்கிறார் சாய்னாவின் அம்மா சிரித்துக்கொண்டே!

'ராஜீவ் காந்தி கேல் ரத்னா' விருது வென்ற முதல் பெண் பேட்மிட்டன் பிளேயர், ஒலிம்பிக்கில் கால் இறுதி வரை முன்னேறிய முதல் இந்தியப் பெண், உலக ஜூனியர் பேட்மிட்டன் பிரிவில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்று பல 'முதல்' சாதனைகளுக்குச் சொந்தக்காரர்!

சிறு வயதில் இருந்தே சினிமாவுக்குச் சென்றது இல்லை. ஓய்வு நேரங்களில்கூட விளையாட்டு, செய்தி சேனல்களில் மட்டுமே சாய்னாவின் கவனம் இருக்கும். பிடித்த நடிகர் என்றால், ஷாரூக்!

பெரும்பாலும் சாதாரண ஆடைகளிலேயே இருப்பார். இதுவரை டிசைனர் சுடிதார், பகட்டான புடவைகள் என எதுவும் வாங்கியது இல்லை.சாய்னாவின் அம்மாவும் இதுவரை புடவை உடுத் தியது இல்லை. புடவையே இல்லாத வீடு என்ற 'பெருமை' இவர்கள் வீட்டுக்கு உண்டு!

சி.பி.எஸ்.இ. சிலபஸில் பள்ளி இறுதி மட்டுமே தொட்டவர் சாய்னா. இவரது விளையாட்டுத் துறை சாதனைகளை ஊக்குவிக்கும் பொருட்டு, கௌரவ எஸ்.பி. அந்தஸ்து அளித்தார்கள். ஆனால், அது பேட்மிட்டன் பயிற்சியைப் பாதிக்குமோ என்ற தயக்கத்தில், அந்த வாய்ப்பை சாய்னா ஏற்கவில்லை!

லேட்டஸ்ட் மாடல் லேப்-டாப் மற்றும் செல் போன்களைத் தனது கலெக்ஷனில் அப்டேட் செய்து கொண்டே இருப்பார். அடிக்கடி தன் நம்பரை மாற்று வதும் சாய்னாவின் பழக்கம்!

காமன் வெல்த் போட்டிகளில் 2004-ல் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள், 2006-ல் மூன்று வெண்கலப் பதக்கங்கள், 2007 தேசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கப் பதக்கம், 2008 இளைஞர்களுக்கான காமன்வெல்த் போட்டியில் ஒரு தங்கப் பதக்கம், 2010 ஆசிய பேட்மிட்டன் சாம்பியன்ஷிப்பில் மூன்று வெண்கலப் பதக்கங்கள், ஆகியவை தன் மனதுக்கு நெருக்கமான வெற்றிகளாக சாய்னா உணர்பவை!

வெளிநாடுகளுக்கு விளையாடச் செல்லும்போது, 'சைட் சீயிங்' மேற்கொள்ளும் பழக்கம் சாய்னாவிடம் கிடையாது. பயிற்சி, போட்டி, போட்டி முடிவுகள் குறித்த தனது ப்ளஸ், மைனஸ் பாயின்ட்டுகளின் அலசல்களில் மட்டுமே முழுக் கவனமும் இருக்கும். சமீபத்தில் பாரீஸுக்கு விளையாடச் சென்று, ஈஃபில் டவரைக்கூடப் பார்க்காமல் திரும்பியவர் சாய்னா!

கம்மல் மற்றும் ஹேர் க்ளிப் பிரியை. விதவிதமாக வாங்கிக் குவித்துவிடுவார். மற்றபடி, நகைகள் மீது விருப் பம் இல்லை. வாட்ச் அணியும் பழக்கமும் இல்லை!

சாய்னா எதற்காகவும் அடம்பிடிக்கவோ, கோபப்படவோ மாட்டார் என்கிறார் அவரது தந்தை. ஆனால், பேட்மிட்டன் பயிற்சியின்போது யாரேனும் குறுக்கிட்டால், சாய்னாவுக்குக் கெட்ட கோபம் வரும் என்று எச்சரிக்கிறார்!

கடவுள் நம்பிக்கை அதிகம். எப்போதும் விநாயகர் சிலை வைத்திருப்பார். ஆனால், கோயிலுக்குச் சென்று வழிபடும் பழக்கம் இல்லை!

டென்னிஸ் பிளேயர் ரோஜர் ஃபெடரர்... சாய்னாவுக்குப் பிடித்த பிளேயர். ரோல் மாடலும் அவரே!

பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தபோது, உறுதியாக மறுத்துவிட்டார். 25 வயதில் திருமணம் செய்துகொள்ளலாம் என்று ஐடியாவாம். எதிர்காலக் கணவரும் விளையாட்டுத் துறை பிரபலமாக இருந்தால் 'டபுள் ஓ.கே'!

போட்டி என்று மைதானத்தில் இறங்கிவிட்டால், 'நம்பர் ஒன் பிளேயருக்கு எதிராக விளையாடுகிறோம்', 'மூன்றாவது ரேங்கில் இருக்கும் நாம் 22-வது இடத்தில் இருக்கும் எதிராளியைச் சுலபமாக வீழ்த்திவிடலாம்' என்ற நினைப்புகளுக்கு இடம் அளிக்கவே மாட்டார். 'எதிராளி யாராக இருந்தாலும், கொஞ்சம் அசந்தாலும் நம்மை ஜெயித்துவிடுவார்!' என்று மட்டுமே நினைப்பாராம். அது தான் தன் சக்சஸ் சீக்ரெட் என்கிறார்!

'மிக நெருங்கிய நண்பர்கள் யார்?' என்ற கேள்விக்கு சாய்னாவிடம் பதிலே இருக்காது. பளிச்சென்று சொல்லும் அளவுக்கு சாய்னாவுக்கு யாரும் நெருக்கமான நண்பர்கள் இல்லை என்பதே காரணம். 'பேட்மிட்டன் மட்டுமே தனது ஒரே நெருங்கிய நண்பன்' என்பார்!

டென்னிஸ் மீதும் ஒரு கண் இருந்தது. ஆனால், பேட்மிட்டனைவிட, டென்னிஸ் பயிற்சிகள் அதிக செலவு பிடிக்கும் என்பதால், அந்த ஆசையை ஆரம்பத்திலேயே தனக்குள் புதைத்துக்கொண்டார்!

கடந்த ஜூன் மாதத்தின் மூன்று வாரங்களில் இந்தியன் ஓப்பன், சிங்கப்பூர் ஓப்பன், இந்தோனே ஷியன் ஓப்பன் என்று அடுத்தடுத்து சாய்னா குவித்த வெற்றிகள், அவரை உலக ரேங்கிங்கில் அலேக்காக இரண்டா வது இடத்துக்கு உயர்த்தியது. இந்தியர் எவரும் எட்டியிராத உயரம் அது!

மாநில அளவில் 10 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் வென்று, முதன்முதலில் சாய்னா கொண்டுவந்த பரிசுத் தொகை, 300 ரூபாய். கடந்த வருடம் உலக பேட்மிட்டன் ஃபெடரேஷன் அமைப்பு நடத்திய ஒரே போட்டித் தொடரில் வென்றதன் மூலம் அவருக்குக் கிடைத்த பரிசுத் தொகை, 18,750 அமெரிக்க டாலர்கள்!

வியாழன், 23 செப்டம்பர், 2010

> Facebookகில் மூழ்கினால் தொலைந்தது ??

நொடியில் தகவல்களை கணினியில் கொட்டுவது, கொண்டு சேர்ப்பது என இன்றைய இணைய தள உலகத்தினால் எவ்வளவுக்கு எவ்வளவு நன்மைகள் உள்ளதோ அதே அளவுக்கு, அவற்றை வரையறையில்லாமல் பயன்படுத்தும்போது தீமைகளும் வந்து சேருகிறது என்பதை தினம் ஒரு தினுசில் வெளிப்படும் சைஃபர் கிரைம் எனப்படும் இணைய தளக் குற்றங்கள் உணர்த்துகிறது.

இத்தகைய சைஃபர் கிரைம் குற்றங்கள் ஒருபுறம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சமுதாயத்தை பாதிக்கச் செய்கிறது என்றால், மறுபுறம் வலை தளங்களிலேயே மூழ்கி, குறிப்பாக சாட்டிங் போன்றவற்றுக்கு அடிமையாகி உடல் நலம், மன நலம் பாதிகப்பட்டு, வேறு பல பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
இது குறித்த ஆய்வில், பாதிக்கப்படுபவர்களில் மாணவர்களும் இருப்பதாக கூறி திடுக்கிட வைக்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.

இணைய தளங்களுக்கு அடிமையானவர்களிடம் முதலிடத்தில் இருப்பது சாட்டிங் என்றால், மாணவர்கள் ஏகத்திற்கு மோகம் கொண்டு மூழ்கி கிடப்பது "ஃபேஸ்புக்" எனப்படும் சமூக வலைத் தளங்கள்தான் என்கின்றனர் அந்த ஆய்வாளர்கள்!

மாணவர்களின் இந்த ஃபேஸ்புக் மோகத்தால், அவர்களது படிப்பு பாதிக்கப்படுவதாகவும், ஃபேஸ்புக் பயன்படுத்தாத மாணவர்களை காட்டிலும், அதில் மூழ்கி கிடக்கும் மாணவர்களின் படிப்பு திறன் சுமார் 20 விழுக்காடு அளவுக்கு குறைந்து காணப்படுவதாகவும் கூறுகின்றனர் இந்த ஆய்வை மேற்கொண்ட மனோதத்துவ நிபுணர்கள்.

பொதுவாகவே இளவயதுக்காரர்களுக்கு கணினியிலும், இணைய தளங்களிலும் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யக்கூடிய திறன் மூளையில் அதிகமாக இருக்குமாம்.

இத்தகைய நிலையில், கணினியிலோ அல்லது இணைய தளத்திலோ ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்துகொண்டே மறுபுறம் தனது நண்பர்கள் அல்லது தோழிகளுடன் சாட்டிங் செய்வது, மின்னஞ்சல் அனுப்புவது, இன்பாக்ஸை திறந்து, மெயில் வந்துள்ளதா என்று 'செக்' பண்ணுவது, அப்படியே ஃபேஸ்புக் அல்லது இதர சமூக வலைத்தளங்களில் மேய்வது என்று அங்குமிங்குமாக வளைய வந்துகொண்டிருக்கும் போக்கு இன்றைய தலைமுறையினரிடையே சர்வ சாதாரணமாக காணப்படுகிறது.

அப்படி இருக்கையில் இள ரத்தம் கொப்பளிக்கும் மாணவர்களிடம் கேட்கவா வேண்டும்?

மடிக்கணினியை திறந்து ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் மேய ஆரம்பித்தபடியே படிப்பையும் கவனிக்கும்போது, தானாகவே நேர பற்றாக்குறை ஏற்படுகிறது.

இதனால் பிரதான வேலையான படிப்பை முடிப்பதில் தாமதம் மற்றும் தவறுகள் நிகழ்வது என பிரச்சனைகளை வரிசை கட்டி வர ஆரம்பித்து விடுகின்றனவாம்!

இது தொடர்பாக அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று 19 முதல் 24 வயதுடைய 219 மாணவர்களிடம் நடத்திய ஆய்வில், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் சராசரி கல்வி திறன் 3.06 ஜிபிஏ - GPA - ஆக இருந்த நிலையில், அவற்றை பயன்படுத்தாத மாணவர்களின் கல்வி திறன் 3.82 என்ற அளவிற்கு கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் தங்களால் அதிக நேரம் படிப்புக்காக செலவிட முடிவதாகவும் கூறியுள்ளனர் சமூக வலைத் தளங்களை பயன்படுத்தாத மாணவர்கள்!

அதே சமயம் ஃபேஸ்புக் போன்வற்றில் மேயும் மாணவர்களில் நான்கில் மூன்று பேர், சமூக வலைத்தளங்களில் மேய்வதால் படிப்புத் திறன் பாதிக்கப்படுவதாக கூறுவதை தங்களால் ஏற்க முடியவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஆய்வு என்னவோ, பாதிப்பு ஏற்படுவது உண்மைதான் என அடித்துக் கூறுகிறது.

உண்மையை ஏற்றுக்கொள்வதுதானே உச்சத்திற்கு செல்லும் வழி?

திங்கள், 20 செப்டம்பர், 2010

Microsoft Office 2007 ஐ தமிழில் மாற்றிக்கொள்ள

Microsoft Office 2007 ஐ தமிழில் மாற்றிக்கொள்ள

பயன்படுத்துவதற்கான நெறிமுறைகள்:

Microsoft Office Language Interface Pack 2007 – தமிழ் மொழிக்கு உங்கள் பயனர் இடைமுகத்தை மாற்றுவதற்கு, இந்த வழிமுறைகளை பின்பற்றவும்:

1. Microsoft Office 2007 Language Settings -ஐ Start\All Programs\Microsoft Office\Microsoft Office Tools என்ற மெனுவிலிருந்து தொடங்கவும்.

2. Display Language என்ற தாவலிலிருந்து Display Microsoft Office menus and dialog boxes in: என்பதை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் காணவிரும்பும் மொழியை கீழ் தோன்றும் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியே இப்போது இயல்புநிலை மொழியாக காட்சியளிக்கும்.

3. Display Language என்ற தாவலில் உங்கள் Office காட்சியை Windows காட்சியுடன் பொருத்துவதற்கான விருப்பம் இருக்கிறது. தற்போதுள்ள Windows -இன் மொழி உங்களுக்காக பட்டியலிடப்படும். உங்கள் Windows காட்சியுடன் பொருந்தும் Office காட்சியை அமைத்துக்கொள்ள Set the Microsoft Office display language to match the Windows display language என்ற தேர்வுப் பெட்டியை தேர்ந்தெடுக்கவும். Display Microsoft Office menus and dialog boxes என்ற பட்டியலில் நீங்கள் தேர்வு செய்ததை இந்த அமைப்பு மேலெழுதிவிடும்.

4. Editing Languages தாவலில் நீங்கள் இயக்க விரும்பும் மொழியை Available Editing Languages என்ற பட்டியலில் தேர்வு செய்து அதன்பிறகு AddEnabled Editing Languages பட்டியலில் பட்டியலிடப்படும். என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியானது

5. Editing Languages தாவலில், உங்கள் முதன்மை திருத்தல் மொழியாக இருக்கவேண்டிய மொழியை Primary Editing Language பட்டியலில் தேர்ந்தெடுக்கவும்.

6. பின்னர் OK பொத்தானை கிளிக் செய்யவும்.

Office பயன்பாடுகளை அடுத்த முறை தொடங்கும்போது நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள மொழி அமைப்பு மாற்றங்கள் செயல்படும்.

குறிப்பு: உதவியை Microsoft Office Language Interface Pack 2007 – தமிழ் மொழிக்கு மாற்ற முடியாது. உதவியானது அசல் நிறுவலில் உள்ள மொழியிலேயே தொடர்ந்து இருக்கும்.

கீழ்தோன்றும் பட்டியலிலுள்ள உதவியைக் காண்பி என்பதை அடிப்படை மொழியிலேயே எப்போதும் இருக்கும்படி அமைக்கவும்

ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கரின் வாழும் கலை

வருடம் 2004...

இடம் நாகபட்டினம்..

அந்த பயங்கரமான சுனாமி கூட்டு மரணங்களையும் பசியையும் நோயையும் தன்னோடு கொண்டுவந்து சேர்த்துவிட்டுச் சென்ற பிறகு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அங்கே வருகை புரிந்தார். அவருடைய பக்தர்கள் நாகப்பட்டினத்திற்கருகேயுள்ள அக்கரைப்பேட்டை என்ற சிற்றூரில் ஒரு கோயிலுக்கெதிரே மிகப்பெரிய நீல வெல்வெட் சோஃபா ஒன்றை அமைத்திருந்தனர். சுனாமியால் வீடுகள் அழிக்கப்பட்டு, உற்றார் உறவினர்களை இழந்து, உதவிக்கு யாருமின்றி, சோர்வும் சோகமுமாக ஸ்தம்பித்திருந்த அந்த மக்களுக்கு வாழும்கலை பற்றி போதிப்பதற்காக ரவிசங்கர் அங்கு வந்து சேர்ந்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட அவரது சொகுசுக்காரிலிருந்து ரவிசங்கர் இறங்கப்போகும் இடத்திலிருந்து சிவப்புக்கம்பளம் விரிக்கப்பட்டு ரோஜா இதழ்கள் தூவப்பட்டிருந்தன. பல சொகுசுக்கார்கள் பின்தொடர அவர் அறிவு விளக்கமளிக்கப்போகும் அந்த வெல்வட் சோபா வரை, ரவிசங்கரின் காரைக் கொண்டுவந்து நிறுத்தப்போவதாக ஏற்பாடு. ஆனால் அவர் அந்த ஊருக்குள் நுழைவதற்கு சற்றுமுன்பாக கடலில் ஒரு சிறிய கொந்தளிப்பு ஏற்பட்டது. ஏற்கனவே சுனாமியால் சீரழிக்கப்பட்டிருந்த அம்மக்கள் சுனாமி மீண்டும் வருவதாக கத்திக்கொண்டே கடற்கரையிலிருந்து ஓடத்தொடங்கினார்.

கட்டிட இடிபாடுகளை மும்மரமாக அகற்றிக்கொண்டிருந்த ராணுவவீரர்களும் ரவிசங்கரை வரவேற்பதற்காக காத்திருந்த நிகழ்ச்சி அமைப்பபாளர்களும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடத் துவங்க, அங்கே ரவிசங்கர் வந்து சேர்ந்தார். தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தவர்களை நிறுத்தி என்ன விஷயமென்று விசாரித்த ரவிசங்கர் ஒருகணம் திகைத்துப்போய் நின்றார். பின் சுயபாதுகாப்புணர்வு தாக்க, காருக்குள் பாய்ந்து அந்த இடத்திலிருந்து மற்றெல்லாரையும் விட வேகமாகத் தப்பியோடினார்.

சுனாமி மீண்டும் உருவெடுக்காவிட்டாலும் அக்கரைப்பேட்டையின் மக்களுக்கு ஞானஒளி வழங்கத் திரும்பி வருவதற்கு ரவிசங்கர் 'ரிஸ்க்' எடுக்கவில்லை. சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவமக்களுக்கு வாழும் கலையின் நுட்பங்களைப்பற்றி அறிவுவிளக்கமளிக்க குருஜி எப்போது வருவார் என்று சிஷ்யர்களைக் கேட்டபோது, அடுத்தநாள் குருஜி அமெரிக்காவிற்கு செல்வதாகவும், கடல் கொந்தளிப்பு அபாயம் பூரணமாக அடங்கிய பின்பு திரும்ப வருவார் என்றும் கூறினர்.

இந்திய மதுபானத்தொழிலின் பிரதான நட்சத்திரமான விஜய் மல்லய்யா தான் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் சீடர்களில் ஒருவர் என்று பிரகடனப்படுத்திக்கொள்கிறார். "நான் எப்போதுமே பக்தி மிக்கவன்தான். ஆனால் ஸ்ரீ ஸ்ரீ என் பக்தியை நானே ரசிப்பதற்கு உதவியிருக்கிறார். பக்தியிலும் வியாபாரத்திலும் நான் 'நுரைபொங்க' வைப்பதற்கு அவர் உதவியிருக்கிறார்" என்கிறார் மல்லய்யா.

'நுரை பொங்குதல்' என்பது ஷாம்பெய்ன், பீர், சோடா இவற்றோடு சம்மந்தப்படுத்தி நம் மனதில் வரும் வார்த்தை. மல்லய்யாவைப் போன்ற மதுபானச்சக்கரவர்த்திக்கு அது ஒரு தினசரி வார்த்தை. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும்கலைக்குள் ஆழமாகச்சென்று பார்த்தால் திரு மல்லய்யா 'நுரைபொங்க வைப்பது' என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியதன் ஆழத்தை அளவிடுவது சாத்தியப்படும். மது அருந்தாமலேயே போதையை உண்டாக்க முடியுமென்று மனோதத்துவ நிபுணர்கள் நிரூபித்திருக்கின்றனர். துடிப்பான தாளமும் இசையும் 'செக்ஸி' பேச்சுகளும் நம் உணர்வைத் தூண்டியெழுப்பும். உத்வேகமிக்க கோஷங்களால் மனித மனத்தை வெறிகொள்ள வைக்க முடியும். இத்தகைய கோஷ்டி மனக்கிளர்ச்சிக்கு உதாரணங்களாக கவர்ச்சிகரமான கோஷ்டி பிரார்த்தனைகளையும், பஜனைகளையும், உணர்ச்சியூட்டும் அரசியல் பிரச்சாரங்களையும் கூறலாம்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை இவற்றிலிருந்து பெரிதாக வேறுபட்டதல்ல. வித்தியாசம் என்று பார்த்தால் ஒன்றே ஒன்று இருக்கிறது. பிரார்த்தனைக் கூட்டங்களும், கோஷ்டி வழிபாடுகளும் சமுதாயத்தின் கடைநிலையிலிருக்கும் கண்மூடித்தனமான பக்தர்களை ஈர்க்கின்றன. ரவிசங்கர் சமுதாயத்தின் படித்த, செல்வந்த ஏமாளிகளுக்குத்தான் தன் வலையை வீசுகிறார்.

நவீனயுகத்தின் 'தீர்க்கதரிசி'யாக தன்னைத் தானே அறிவித்துக் கொண்டுள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மதத்தையும் போலித்தத்துவத்ததையும் எப்படி விற்பனை செய்வது என்பதை நன்கு அறிந்திருக்கிறார். பேரின்ப நிலைதான் வாழ்க்கையின் லட்சியம் என்கிறார். 'மகிழ்ச்சியை அனுபவிப்பது எப்படி' என்று சாதிமத பேதமின்றி அனைவருக்கும் போதித்துக்கொண்டிருக்கிறார். 'வாழும் கலை' விளம்பரம் ஒன்றில் "ஸ்ரீ ஸ்ரீ விளையாட்டையும், சிரிப்பையும், ஞானத்தையும், தியானத்தையும், பாடலையும், நாட்டியத்தையும் பக்திக்குள் புகுத்தியிருப்பதாக" பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து "வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோஷமாக அனுபவிக்கவும் வாழ்க்கையை ஒரு கொண்டாட்டமாக்கவும், ஒவ்வொரு மனிதனுக்கும் நிரந்தரமாகப் புன்னகையொன்றை அளிக்கவும் ஸ்ரீ ஸ்ரீ அவரது வாழும் கலையை மனிதகுலத்திற்கு அர்ப்பணித்திருக்கிறார்" என்கிறது.

இன்பநிலையை அடைய எல்லோருக்குமே இச்சை இருக்கிறது. ஆனால் அதை அடைவதெப்படி? ரவிசங்கர் தனது விளம்பரங்களில் அறிவித்திருக்கும் வழிகளைப்பபார்க்கலாம். "நடைமுறை அற்புதமான 'வாழும் கலை' ஆறுநாட்களுக்கு அளிக்கும் 20-22 மணிநேரப்பயிற்சி. இது தினசரி பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு ஒரு கட்டடாயத் தேவை. சிறப்பு மூச்சுப்பயிற்சிகள், எளிதான யோகாசனம், தியானம், அறியாமையை அகற்றும் 'பிரக்ஞையின் நட்சத்திரக்கதிர்கள்' (என்னது இது?) மற்றும் அதிமுக்கியமான 'சுதர்ஸனக்கிரியா' - இவையனைத்தும் பயிற்சித்திட்டத்தில் உண்டு. தூய்மையான மனச்சான்றிற்கு செவிசாய்க்கக் கற்றுக்கொண்டால் நோய்கள் விலகி ஆரோக்கியத்தை முழுமையாக அனுபவிக்கமுடியும்!". ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் 'வாழும் கலை' சமுதாயத்தின் 'rich and beautiful' மேட்டுக்குடிகளைத்ததான் இலக்காகக் கொண்டிருக்கிறது என்பதை இவ்விளம்பரம் தெளிவாக உணர்த்துகிறது.

உடற்பயிற்சி என்ற அளவைத்தாண்டி யோகாசனத்தில் ஆன்மீகக்ககூறு ஏதும் கிடையாது. தியானம், ரவிசங்கரின் இன்னொரு மருந்துச்சீட்டு. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் தியானம் என்பது கற்பனை தெய்வங்களை "ஜெய் ஜெய் பவானிமா, அம்பே பவானிமா" என்றும் "ஹரே சிவசிவ, ஹரே சுந்தரனானா" என்றும் பஜனை செய்வது தான். சிரச்சேதம் செய்யப்பட்ட தலையிலிருந்து ரத்தம் சொட்டச்சொட்ட ஒரு தெய்வம் அதைத் தூக்கிப்பிடித்துக் கொண்டிருப்பதைப் நினைத்து தியானம் செய்தால் மனதில் பயங்கரமான நினைப்புகள் தானே வரும்? கழுத்தில் பாம்பு சுற்றிக்கொண்டு கையில் சூலாயுதத்தை வைத்துக்கொண்டிருக்கும் தெய்வமும் எவ்விதமான பேரின்பநிலைய¨யும் தூண்டப்போவதில்லலை. சிலுவையில் அறயைப்பட்டு ரத்தம் சிந்திக் கொண்டிருக்கும் தெய்வத்திற்கு முன்னால் தியானம் செய்ய உட்கார்நதால் எவன் ஒருவனுக்கும் தன்னம்பிக்கை தான் குலைந்துவிடும்.

ஸ்ரீ ஸ்ரீ யின் விளம்பரத்தில் கூறப்படும் இன்னொரு வாசகம், ரவிசங்கரின் முயற்சிகள் அறியாமையை அகற்றுவதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன என்பது! ஆனால் மூடநம்பிக்கைகளை பரப்பி மனிதர்களின் பலவீனத்தை தனக்கு ஆதாயமாக்கிக் கொள்பவர்களில் முதலிடத்தில் இவர் இருப்பதாகத்தான் பல பத்திரிகை செய்திகளிலிருந்து தெரியவருகிறது. குருட்டு நம்பிக்கையை இந்த 'சிரிப்பு குழு' எப்படி பரப்புகிறார் என்பதற்கு அந்த ஆசிரமத்தைப் பற்றி Asian Age பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரை, மாதிரிக்கு கீழே:

'ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பெங்களூர் நகரில், 30 ஏக்கர் பரப்பில் தனது ஆசிரமத்தை வைத்திருக்கிறார். குரு தனது 'சத்சங்கங்களை' இங்கே நிலாராத்திரிகளில் நடத்துகிறார். இந்த ஆசிரமத்திற்க்கு அடியிலிருக்கும் கண்ணுக்குத்தெரியாத ஒரு ஏரியின் கரையில் ஒரு பழங்கால சிவன் கோயில் இருக்கிறதாம். வேதகால ரிஷியான வசிஷ்டர் இங்கே வசித்திருந்ததாக ஆசிரமக் குறிப்புகள் கூறுகின்றன'.

வேதகால ரிஷிகள் எவரும் விந்திய மலைக்குத் தெற்கே வாழ்ந்ததாகத் தெரியவில்லை. வேதநூல்கள் தெளிவாகக் குறிப்பிடுவது, விந்தியத்திற்கு வடக்கிலும் யமுனைக்கு மேற்கிலும் உள்ள பிரதேசத்தில்தான் வேதங்கள் உருவாகின என்பது. இருந்தும் ரவிசங்கர் தனது ஆசிரமத்தின் தெய்வீக தன்மையை நிலைநாட்டுவதற்காக வசிஷ்டரை ஒரு பெங்களூர்காரராக மாற்றிவிட்டிருக்கிறார்.

ஐம்பது வயதிற்கு மேலாகும் ரவிசங்கர் தனது தெய்வீகத் தன்மையை பறைசாற்றுவதற்கு பலவிதமான தொன்மங்களைப் பரப்பி வருகிறார். ரவிசங்கர் பாபநாசத்தில் உள்ள ஒரு பிராமணக் குடும்பத்தில் வெங்கிடரத்தினம், விசாலாட்சி ஆகியோருக்குப் பிறந்தவர். அவர் 1956ம் வருடம் மே 13ம் தேதி பிறந்ததாகக் குறிப்பிடப்படுவது உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்தத் தேதியையொட்டி பின்னப் பட்டிருக்கும் ஒரு பழங்கதைதான் நகைப்பிற்குரியது. ஆதிசங்கரர் கூட மே மாதம் 13ம் தேதிதான் பிறந்ததாக ஆசிரம விளம்பரங்கள் அறிவிக்கின்றன. இந்தத் தகவலை ரவிசங்கர் எந்த ஆதாரத்திலிருந்து பெற்றார் என்பதை யாருக்கும் தெளிவுபடுத்த அவர் அக்கறை கொண்டிருக்கவில்லை. ஆதிசங்கரர் 8ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 9ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிறந்திருக்கக் கூடுமென்று அனுமானிக்கப்பட்டுள்ளது. ஆதிசங்கரர் பிறந்த அதே மாதத்தில் அதே தேதியில் ரவிசங்கரும் பிறந்தார் என்று கூறுவது சுத்தமான பித்தலாட்டம். ஆதிசங்கரருக்கு பிறந்தநாள் எதுவென்பது இதுவரை நிரூபணமாகவில்லை.

ஆனால் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அதோடு நிறுத்தவில்லை. இவரது அடுத்த பிரதாபம், ராமானுஜ ஜெயந்தியன்று இவருக்கு நாமகரணம் சூட்டப்பட்டது என்பது. ஆதிசங்கர் காலத்திற்கு 300 வருடங்கள் கழித்து வந்தவர் ராமானுஜர். வைணவ அறிஞரான இவர் விசிஷ்டாத்வைத தத்துவத்தை உண்டாக்கியவர். 'மாயவாதத்'தை உள்ளடக்கிய அத்வைத தத்துவத்தைப் பரப்பியவர் ஆதிசங்கரர். சங்கரரின் மாயாவாதத்திற்கு மறுப்பாக பக்தி மார்க்கத்தை பரப்பியவர் ராமானுஜர். ஆதிசங்கரர் முன்வைத்த கடவுளின் 'நிர்குண' குணாம்சத்திற்கு எதிராக கடவுளின் 'ச-குண' குணாம்சத்தை நிறுவியவர் ராமானுஜர். ஆனால் இருவேறு முரண்பட்ட தத்ததுவங்களை முன்வைத்த இரண்டு ஆச்சாரியர்களோடு தன் பெயரை இணைத்துக்கொள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் முனைகிறார்.

இந்த இரண்டு ஆச்சாரியர்களின் பெயரையும் வலிந்து இணைத்திருப்பது சைவ வைணவ பாகுபாடின்றி அனைவரையும் தன் customers ஆக்குவதர்க்குத் தான் என்பதில் சந்தேகமேயில்லை! ரவிசங்கர நாராயணன் என்பது அவரது பூர்வாசிரமப் பெயர்! அவருடைய சொந்தகிராமத்தில் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் கோயில் இருந்ததால் அவருக்கு அப்பெயரை வைத்ததாகவும் கூறிக்கொள்கிறார்! அவர் பெயருக்கு முன்னால் இந்த இரண்டு ஸ்ரீ ஸ்ரீ க்கள் எங்கிருந்து வந்தன? ஒரு பத்திரிகையாளர் இந்தக் கேள்வியைக்கேட்ட போது ரவிசங்கர் இவ்வாறு பதிலளித்தார்:

"108 அல்லது 1008 ஸ்ரீக்களை சேர்த்துக்கொண்டால் பெயர் நீளமாகி விடுகிறதே!" இரண்டோடு நிறுத்திக்கொண்டதற்காக நம்மை சந்தோஷப்படச் சொல்கிறார்! நமக்கு ஸ்ரீ சங்கராச்சாரியார் ஸ்ரீ ராமானுஜாச்சாரியார், ஸ்ரீ மாதவாச்சாரியார், ஸ்ரீ நாராயணகுரு போன்றோரைத்தெரியும். இவர்களெல்லலாம் ஏராளமானவர்களால் வணங்கப்பட்டாலும் இவர்களின் பெயர்களுக்கு முன் 'ஸ்ரீ ஸ்ரீ' என்றோ அல்லது '1008 ஸ்ரீ' என்றோ சேர்த்து அழைப்பதில்லலை. இந்துக் கடவுளர்கள் ஸ்ரீ ராமனும் ஸ்ரீ கிருஷ்ணனும் கூட ஒரே ஒரு ஸ்ரீயோடு திருப்தியடைய வேண்டியிருக்கிறது. ஆனால் '108 ஸ்ரீக்கள் வட இந்தியாவின் போலித் துறவிகளிடையே ஒரு வித கெளரவப் பட்டடமாக ஆகியிருக்கிறது. அந்தப் பொல்லாங்குக் கூட்டத்தின் ரோடுதான் ரவிசங்கரும் சேர விரும்புகிறார். இதை யாரும் அவருக்கு சூட்டவில்லலை, அவராகவே தனது புனித சுயத்திற்கு சேர்த்துக் கொண்ட பட்டம் இது. 'அவருக்கு நான்கு வயதாக இருக்கும்போதே பகவத்கீதையின் எல்லா சுலோகங்களையும் மனப்பபாடமாக ஒப்பிப்பார்' என்பது போன்ற மாயைகள் அவரைப்பற்றி பரப்பப்படுகின்றன. இதுபோன்ற கதைகள் எண்ணிக்கையிலும் அளவிலும் வளர்ந்துகொண்டேதான் இருக்கப்போகின்றன.

செயின்ட் ஜோசப் கல்லூரி, பெங்களூரில் பட்டப்படிப்பு முடித்த பிறகு ரவிசங்கர் ரிஷிகேசத்திற்குச் சென்று மகரிஷி மகேஷ்யோகியின் சீடராக ஆனார். Transcendant Meditation எனப்படும் தியானத்தின் குருவான மகேஷ்யோகி உலகின் பல பகுதிகளிலும் ஆசிரமங்கள் அமைத்திருந்தவர்.

சந்தேகத்திற்கிடமாக பல காரியங்களைச் செய்து அளவற்ற பணத்தையும் அதிகாரத்தையும் இந்த ஆசிரமங்கள் சேர்த்துவைத்துள்ளன. மகேஷ்யோகியின் இந்த தியானம் அதன் நிழலான விவகாரங்களுக்காக நம்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏராளமான விமரிசனங்களைச் சம்பாதித்தித்தது. அவரது சீடரும் பிரதினிதியுமாக ரவிசங்கர் தென் ஆப்பிரிக்காவிற்கும், பிற இடங்களுக்கும் சென்று Transcendant Meditation னின் வியாபார ரகசியங்களை கற்றுக்கொண்டார். சுதந்திரமாக கிளைவிடுவதற்கான சமயம் 1982ல் வந்தது, வேறொரு பெயரோடும், பாணியோடும்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் உபதேசங்கள், பல யோகாச்சாரியார்களும் ஆயுர்வேத வல்லுனர்களும் ஏற்கனவே வளர்த்து வந்திருந்த குருட்டு நம்பிக்கைகள் பலவற்றை உள்ளிணைத்துக் கொண்டிருப்பவை. யோகாச்சாரியர்கள் பிராணாயாமம் என்று கற்றுத் தந்து கொண்டிருந்ததற்கு வேறுசட்டை மாட்டி 'சுவாசப்பயிற்சி' என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரால் விற்பனை செய்யப்படுகிறது. பிராணாயாமத்தினால் எந்த வியாதியை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று கூறுகிறவர்கள் இருக்கின்றனர். ரவிசங்கர் அதே மரபில் தொடர்கிறார். நம் உடல்களில் 'உயிருள்ள விஷம்' இருப்பதாகவும் அதுதான் நோய்களை உண்டாக்குகிறத என்றும் சாதிக்கிறார். ரவிசங்கரின் கீழ் நீங்கள் பிராணாயாமத்தைக் கற்றுக் கொண்டால் இந்த விஷம் முறிந்து வியாதிகளிலிருந்து நீங்கள் விடுபட்டிவிடுவீர்கள்!

பிராணாயாமம், யோகா மற்றும் புராதன தாந்தரீக மதங்களின் கண்மூடி வழக்கங்களின் கலவை ஒன்றிற்கு 'வாழும் கலை' என்று நேர்த்தியாக பெயரிட்டுள்ளார். இந்த வாழும் கலையை பின்பற்றுபவர்கள் பெரும்பாலும் பணக்காரர்களான நடுத்தரவயது ஆண்களும் பெண்களும்தான். இதுவொன்றும் இலவசமல்ல. நன்றாகப்பருத்த விலை அட்டையோடு வருவதுதான் இதன் சிறப்பு.

இந்த பணக்காரர்களின் 'குரு' இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவராக காட்டிக்கொள்வதில்லை. எந்த மதத்தைச் சேர்ந்த செல்வந்தர்களாக இருந்தாலும், செலவழிக்க தயாராக இருக்கும் யாரும் அவரிடம் வந்து ஏமாந்துவிட்டுச்செல்லலாம். அவரும், பொருத்தமாக உருவப்படங்களில் காணப்படும் ஏசு கிருஸ்துவைப் போலவே ஒப்பனை செய்து கொண்டு பிரசன்னமாகிறார். பல்வேறுபட்ட இனங்களுக்கும் மதங்களுக்கும் உரிய வழமைகளுக்கும் பழக்கங்களுக்கும் ரவிசங்கர் தகுந்த மரியாதை கொடுக்கிறார். இது உலகமக்களில் எல்லா பணக்காரர்களையும் அவரது வரவேற்பறைக்குள் இலகுவாக நுழையவைக்கிறதுக்குத்தான்!. இருண்ணனை அல்லது கிருஸ்துவை அல்லது சிவனை அல்லது நிறைபேரறிவினை தெய்வமாகப்பார்க்கும் பல்வேறுபட்ட மனிதர்களும் தனது 'வாழும் கலை'யை இணக்கமானவொன்றாக உணரவைப்பதற்ககு ரவிசங்கர் எடுத்துக்கொள்ளும் சிரத்தை அலாதி!

எல்லாவிதமான நம்பிக்கைகளுக்கும் தனது வழிபாடுகளை செலுத்தி, தனது அதிகபட்ச ஆதாயத்திற்கு அவற்றை பயன்படுத்திக்கொண்டு வேதங்களையும் உபநிடதங்களையும் வேதாந்தத்தையுதம் அவற்றின் மகத்துவத்தையும் பற்றி மேலோட்டமாக உபன்யாசம் செய்கிறார். ஆனால் அவரது ஆர்வம், மறைநூல்களில் காணப்படாத கிருஷ்ணனின் 'ராஸலீலா' வில்தான்.
-----------------------------------
கிருஸ்துவர்களின் 'கடவுள் மீதமான பயத்தை அவர் ஏற்றுக் கொள்வதில்லலை. கடவுளை நேசிப்பதன் மூலம் பக்தியை செலுத்த போதிக்கிறார். முரண்பாடானவற்றைக்கூட இணக்கம் செய்யவைக்கிற அவரது திறமையைக்கண்டு நாம் ஆச்சிரயப்படலாம். அவர் கூறுகிறார்: "இந்திய தத்துவத்தில் தெய்வ நிந்தனை என்று ஒரு விஷயமே கிடையாது. ஒரு நாத்திகவாதி கூட ஒரு யோகியாக இருக்கலாம். எதையாவது நீங்கள் விமரிசிக்க வேண்டுமென்றால் அதனை முழுமையாக நீங்கள் அறிந்திருக்க வேண்டும். தீவிரவாதம் சரியல்ல. ஒஸாமா குர்ரானை மட்டுமே படித்திருக்கிறார். குர்ரான் இயற்றப்படுவதற்கு முன்பிருந்தே கடவுள் இருந்திருக்கிறார். ஒஸாமா வேதங்கள், உபநிடதங்கள், மற்ற மதங்களின் மறைநூல்கள் போன்றவற்றை படித்திருந்தால் இன்று அவர் இருப்பதைப்போல அவர் ஆகியிருக்கமாட்டார்."


தொன்மரபுகளையும் சடங்குகளையும் சார்ந்திருந்த பாரம்பரிய இந்துவிஸத்தின் சிதைவு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் தத்துவ வியாபாரத்திற்கு அறுவடை நிலமாகிவிட்டது. உயர் மத்திய வர்க்கத்தினருக்கும் செல்வந்தர்களுக்கும் அவர்கள் வாழ்வின் ஏமாற்றங்களுக்கு நிவாரணக்களிம்பு ரவிசங்கர் வழங்குகிறார். ஆனால் அவர்களுக்கு கிடைப்பதென்னவோ சுவாசப்பயிற்சி முறை ஒன்றும், போலி தத்துவப் பொட்டலத்தில் மடித்துத்தரப்படும் சிரிக்கும் விதத்திற்கான அறிவுரையும்! இவை உக்கிரமாக மார்க்கெட் செய்யப்படுகின்றன. சுதர்ஸனக்கிரியாவும் வாழும்கலையும் காப்புரிமை (patent) பெற்றிருக்கின்றன. ரவிசங்கர் நிரூபித்திருப்பதைப்போல இதுதான் 'பணம் அள்ளி வாழும் கலை'!


2006ல் எழுதியது

நீண்ட மூக்குடைய புதிய பிராணி

யானையின் தும்பிக்கையையொத்த நீண்ட மூக்கைக் கொண்ட புதிய வகை மிரு கமொன்று ஆபிரிக்காவில் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.

வட கிழக்கு கென்ய கடற்கரைப் பிராந்தியத்தில் பிராணிகளைக் கண்காணிக்கும் முகமாக பொருத்தப்பட்டிருந்த புகைப்படக் கருவியொன்று இந்த அரிய விலங்கை புகைப்படமெடுத்துள்ளது.

இந்த புதிய விலங்கினம் தொடர்பான ஆய்வில் பங்கேற்ற உயிரியலாளரான ரஜன் அமீன் விபரிக்கையில், இந்த விலங்கினத்தின் கண்டுபிடிப்பானது தனிமைப்படுத்தப்பட்ட வனப்பிராந்தியங்களை அண்டியுள்ள கடற்கரைப் பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதனால் அரிய விலங்கினங்கள் பல அழியும் அபாய நிலையை எதிர்நோக்கியுள்ளன என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்று கூறி னார்.

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

விநோதமான பிரச்சாரம்

மாமிசத்தை தவிர்த்து மரக்கறி உணவை உண்பதற்கு வலியுறுத்தி வரும் “பெடா' அமைப்பைச் சேர்ந்த செயற்பாட்டாளரான அஷ்லி புருனோ, சிங்கப்பூரிலுள்ள ரபிள்ஸ் பிளேஸ் எனும் இடத்தில் பச்சடி செய்வதற்கு பயன்படும் இலைகளால் ஆடை அணிந்தவாறு பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை படத்தில் காணலாம்.

'போய்பிரண்ட் பெஷன்´

பெண்களின் ஆடையுலகில் 'போய்பிரென்ட் பெஷன்' என்பது பிரபலமாகி வருகிறது. ஆண் நண்பர்கள், கணவர்கள்,சகோதரர்கள், அல்லது தந்தைமார்களது ஷேர்ட், ஜீன்ஸ் போன்ற மேலாடைகளை பெண்கள் அணிவதுதான் ''போய்பிரண்ட் பெஷன்'' எனப்படுகிறது.

2006 ஆம் ஆண்டில் அமெரிக்க நடிகை கெத்தி ஹோம்ஸ், தனது கணவர் டொம் குரூஸின் ஆடைகளை பகிரங்கமாக அணிந்து வந்தன் மூலம் "போய்பிரண்ட் பெஷன்" அதிக பிரபல்யமாகியது.

இந்த உடைகள் தமக்கு தளர்ச்சி யாகவும், நீளமாக வும் மிகவும் சௌகரிய மாகவும் இருப்பதாக அவற்றை அணிபவர்கள் கூறுகின்றனர்.

சியன்னா மில்லர் கேட் மோஸ், போன்ற நடிகைகள், மொடல்கள் மூலம் இந்த "போய்பிரண்ட் பெஷன்" சர்வதேச ரீதியிலும் பிரபலமாகியுள்ளது.

இப்போது முன்னிலை ஆடை வடிவமைப்பு நிறுவனங்களும் பெண்களுக்காக  பிரத்தியேகமாகவே 'போய்பிரண்ட் பெஷன் வரிசை' தயாரிப்புகளை சந்தைக்கு விட்டுள்ளன.

இந்தியாவைச் சேர்ந்த மொடலான சுருதி அகர்வால் கருத்துத் தெரிவிக்கையில், இந்தப் போக்கானது மிகவும் அழகாகவும் வேடிக்கையானதாகவும் உள்ளதெனக் கூறுகிறார்.

பொலிவூட் நடிகை சோபி சௌத்தி, தான் போய் பிரெண்ட் ஜக்கட்டின் அபிமானி என்கிறார். அவற்றை உடலோடு ஒட்டிய ஸ்கினி ஜீன்ஸூடன் இணைந்து அணிந்தால் பார்ப்பதற்கு மிக அழகாக்க இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆடை வடிவமைப்பாளரான மாஸாபா, 'அவை எல்லாமே 'பவர் ட்ரஸிங்' மற்றும் பொருத்தமான இணைப்பு ஆடைகள் தொடர்பானது. எப்படியிருந்தாலும் இவ்வாறான ஆடைகள் எல்லோரின் உடல் அளவிற்கும் பொருத்தமானதாக அமையாது என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்' என்கிறார் அவர்.

கடத்தல் கும்பலுக்கு துணை போன கிளி கைது

கொலம்பியாவில் போதை மருந்து கடத்தல் அதிக அளவில் பெருகி வருவதால், அந்த கும்பலை ஒடுக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு தீவிரமாக உள்ளது. பாரன்குயில்லா நகரில் ஒரு பங்களாவில் போதை மருந்து கடத்தல் கும்பல் பதுங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்து அங்கு விரைந்தனர்

சுமார் 300 போலீசார் அந்த பங்களாவை சுற்றி வளைத்தனர். அப்போது, அங்கு திடீரென பறந்து வந்த கிளி வந்த வேகத்தில் "ஓடு... ஓடு.... உன்னை பிடிக்க பூனை வருகிறது" என கொஞ்சி கொஞ்சி பேசியதாம். இதை கேட்ட போதை மருந்து கடத்தல் கும்பல் அங்கிருந்து தலை தெறிக்க தப்பி ஓடத்தொடங்கி விட்டார்கள்.

இருந்தும் அவர்களில் சிலரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலீசார் வருவதை கண்காணிப்பதற்காகவே அந்த கிளியை வளர்த்து வருவதாகவும் அதற்கு “லொரன்ஸ்ஷோ” (Lorenzo) என பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

எனவே, அந்த கிளியையும் போலீசார் பிடித்தனர். அந்த கிளி விலங்குகள் நல மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இச் சம்பவம் கொலம்பிய நாட்டில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஓபாமாவின் ஓட்டம்

ஒபாமா நல்லவரா கெட்டவரா? இன்னும் இரண்டு மாதத்தில் இந்தியா வரப்போகும் அமெரிக்க அதிபரை பற்றி இன்டர்நெட்டில் புது சர்ச்சை ஓடுகிறது. அமெரிக்க அதிபர்களில் இந்தியா என்ற பெயரை மிக அதிக தடவை உச்சரித்தவர் ஒபாமா. அதிபர் தேர்தல் பிரசாரத்தில் இந்தியாவின் முன்னேற்றம், அமெரிக்க கம்பெனிகளால் இந்தியர்களுக்கு கிடைக்கும் வேலை வாய்ப்பு பற்றி விரிவாக பேசினார்.

அதிபரான இரண்டு ஆண்டு களில் இந்திய குழந்தைகள் படிப்பில் சுட்டி, அமெரிக்க குழந்தைகளையும் அப்படி வளர்க்க வேண்டும் என்று பெற்றோருக்கு புத்திமதி சொன் னார். இந்தியர்களுக்கு வேலை கொடுக்கும் அமெரிக்க கம்பெனிகளுக்கு சலுகைகளை ரத்து செய்தார். வேலைக்காக செல்லும் இந்தியர்களுக்கு விசா வழங்குவதை சிரமமாக்கினார். விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், பேங்கர்கள், கல்வியாளர்களை சந்திக்கும்போது இந்தியாவை சுட்டிக்காட்ட தவறுவதில்லை.

இந்தியர்களுக்கு பொறுப்பான பதவிகளை கொடுத்து அவர்களின் திறமையை பயன்படுத்திக் கொள்கிறார். அதே நேரத்தில், இந்தி யாவால் அமெரிக்காவின் செல்வாக்குக்கு ஆபத்து வரப்போவதாக ஒரு தோற்றத்தை சராசரி அமெரிக்கர்கள் மனதில் ஏற்படுத்த என்ன அவசியம் என்று புரியவில்லை. இண்டியன் மிடில்கிளாஸ் நிறைய்ய சாப்பிடுவதால் உலகில் உணவு தானிய விலை எகிறிவிட்டது என்று ஜார்ஜ் புஷ் கண்டு பிடித்தபோது இந்தியர்கள் கோபப்படவில்லை. வழக்கம்போல் ரசித்து சிரித்தனர்.

ஒபாமா விஷயத்தில் அப்படி இல்லை. மன்மோகன் சிங்கை, நமது ஜனநாயகத்தை அவர் என்னதான் பாராட்டினாலும் நம்மவர்கள் மகிழவில்லை.

எல்லாவகையிலும் உலகின் நம்பர் ஒன் நாடு அமெரிக்கா என்ற கவுரவத்தை காலப்போக்கில் இந்தியா தகர்த்துவிடும் என்ற கவலை ஒபாமாவை பீடித்திருக்கலாம்.

அப்படி இருந்தால் அது அனாவசியம். வளர்ச்சி வரைபடம் கவர்ச்சியாக இருந்தாலும், இந்தியாவில் ஏழ்மை ஒழிப்பு திட்டங்கள் இந்த நூற்றாண்டில் வெற்றி காண்பதற்கான அறிகுறிகள் இல்லை.

பந்தயத்தில் முதலாவதாக ஓடிக் கொண்டிருப்பவன், தனக்கு முன்னால் ஒருவன் ஓடுவதாக கருதி அவனை முந்த முயல வேண்டுமே தவிர, பின்னால் வருபவனை பற்றியே சிந்தித்தால் மனம் தளர்ந்து கால்கள் சோர்ந்துவிடும். முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள அது சரியான வழியல்ல.

இன்னுமொரு பின்லாடனா?

சர்வதேச தீவிரவாதி பின்லாடனுக்கே இன்னமும் லாடன் கட்ட முடியாமல் உலகம் திணறிக்கொண்டிருக்கையில் அடுத்து தற்போது புதிதாக இந்த பட்டியலில் இன்னுமொரு பின்லாடனாக அன்வர் அல் அவ்லாகி என்பவர் உருவெடுத்துள்ளதாக. அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. கூறுகிறது.

சி.ஐ.ஏ இவரைப்பற்றி மேலும் கூறுகையில்,லண்டன் மற்றும் மேற்கத்திய நாடுகளில் எங்கேனும் தாக்குதல் நடைபெறுமாயின் அதன் பின்புலமாக இந்த அவ்லாகி தான் இருப்பார். இவருடைய தந்தை ஏமன் நாட்டை சேர்ந்தவர்.

அன்வர் அல் அவ்லாகி அமெரிக்காவில் கொலொரேடோ பல்கலைகழகத்தில் சிவில் எஞ்சினியரிங் படிப்பினை முடித்தார். சான் டீகோவில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் டாக்டர் பட்டம் பெறுவதற்காக வாஷிங்டன் சென்றார். ஆப்கானிஸ்தானுக்கு ஒரு முறை சுற்றுப் பயணம் செல்ல நேர்ந்தது. பின்னர் சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடன் கூட்டாளிகளுடன் தொடர்பு ஏற்பட்டது.

இவர் ஆங்கிலத்தை சரளமாக பேசும் திறன் பெற்றுள்ளார். இவர் தன்னுடைய போதனைகளில், பென்டகன் தாக்குதல் போல் அல்லாமல் சிறு சிறு தாக்குதல்களை அவ்வப்போது நடத்துங்கள். அப்போது தான் அதை பற்றிய பயம் மக்களிடையே நீடித்து இருக்கும் என்று கூறி வருகிறார். தன்னுடைய நடவடிக்கைகளை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மட்டுமல்லாமல் ஏமன் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் பரப்பி வருகிறார்.

பின்லேடனை போல் அல்லாமல் ஆனால் மெல்ல தன் கொள்கைகளை இணையதளம் வழியாக பரவ செய்து தீவிரவாத போக்கினை வலுப்படுத்தி வருவதால் இவரை உலகளாவிய பயங்கரவாதிகளில் ஒருவராக கடந்த ஏப்ரல் மாதம் சி.ஐ.ஏ. அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 16 செப்டம்பர், 2010

காவல்நிலைய வாயிலில் மனைவியை கொன்ற கணவன்

கோவை காந்திபுர மகளிர் காவல்நிலைய வாசலில் மனைவியை கணவன் கத்தியால் அறுத்துக்கொன்ற சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் புளியமரத்தூரை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி தனலட்சுமி. சாருலட்சுமி (5), சுஜான் (3) என குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்துக்கு பின்பு திருப்பூரில் வசித்தனர். தம்பதிக்கிடையே ஏற்பட்ட தகராறில் தனலட்சுமி கோவையில் வசிக்கும் தாய் வீட்டுக்கு வந்து விட்டார். மனைவியை சமாதானப்படுத்தி, திருப்பூருக்கு நேற்று காலை முத்து அழைத்துச்சென்றார்.

சுண்டப்பாளையத்தில் இருந்து காந்திபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு பஸ்சில் இருவரும் வந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் தனலட்சுமி, எதிரில் உள்ள மகளிர் காவல் நிலைய வாசலில் சென்று அமர்ந்தார். அங்கு சென்ற முத்து கத்தியால் மனைவியின் குரல்வளையை அறுத்தார். அலறலுடன் தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் இறந்தார். அருகில் இருந்தவர்கள் முத்துவை போலீசிடம் ஒப்படைத்தனர்.

முத்து போலீசில் அளித்த வாக்குமூலம்: தனலட்சுமிக்கு வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு இருப்பத்தை கண்டித்தேன். பஸ் ஸ்டாண்ட் வரை வந்தவள், திடீரென உன்னுடன் குடும்பம் நடத்த விருப்பமில்லை என்று கூறி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றாள். ஆத்திரம் தாங்காமல் கழுத்தை அறுத்து கொன்றேன் என்றார்.

மனைவிக்காக உடன்கட்டை ஏறிய கணவன்!

வேலூர் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து 8-ந் தேதி அதிகாலை 3.50-க்கு 45 பயணிகளுடன் திரு வண்ணாமலைக்குப் புறப்பட்டது அரசுப் பேருந்து.

திருவண்ணாமலைக்கு 15 கி.மீ.க்கு முன்னால், மல்லவாடி கிராமத்தை ஒட்டி பேருந்து சென்று கொண்டிருந்தபோது எதிரில், ஜெட் வேகத்தில் ஒரு லாரி வருவதைப் பார்த்த ஓட்டுநர் ரவிக்குமார், நடத்துநர் மகாதேவனிடம் ""ஏன் இப்படி பேய் மாதிரி வர்றான்?'' -சொல்லி முடிக்கு முன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது லாரி.

பயணிகளின் உயிர்போகும் அலறல் மல்லவாடி கிராமத்தையே ஓடி வரவைத்துவிட்டது. லாரியின் முன்பகுதி பஸ்சுக்குள் போய்விட்டது. பஸ் முழுதும் கரும்புகை பரவிவிட்டது. எங்கே பயணிகள் இருக்கிறார் கள்... துடிக்கிறார்கள் என்பதை பார்க்க முடியாத அளவுக்கு கரும்புகை. பஸ் சீட்டுகளுக்குள் சிக்கி, அலறியபடி கிடந்த பயணிகளை ஒவ்வொருவராக வெளியே கொண்டு வந்துகொண்டிருந்தார்கள் மக்கள்.

நடத்துனரைப் போலவே இன் னொரு பெண்மணியின் கால்களும் சீட்டுக்கடியில் மாட்டிக்கொண்டு விட்டது. அந்தப் பெண்மணியை அவரது கணவர் இழுத்துக்கொண்டி ருந்தார். முடியவில்லை. ""நீங்க முதல்ல வெளிய வாங்க சார்... உங்க ஒய்ஃப்பை நாங்க எப்படியாவது காப்பாற்றித் தருகிறோம்'' ரத்தம் வடிந்த கணவரை வலுக்கட்டாயமாக சாலையில் கொண்டு வந்து உட்கார வைத்து விட்டு, அந்த அம்மாவைக் காப் பாற்றுவதற்காக இரண்டு இளை ஞர்கள், மீண்டும் பஸ்சுக்குள் நுழைய முயன்றபோதுதான்... டமார் என பஸ்சின் டீசல் டேங்க் வெடித்து, அந்த நொடியே... பஸ்சுக்குள் நெருப்பு பற்றியெரியத் தொடங்கியது.

பஸ்சுக்குள் சிக்கிக்கொண்ட 8 பயணிகளையும் தீ தின்னத் தொடங் கியது. ""அய்யோ என் மனைவி எரியுறாளே... என் மனைவியை சாகக்கொடுத்துவிட்டு நான் மட்டும் பிழைச்சு என்ன பண்ணப்போறேன்?'' அலறிய படியே எரியும் பஸ்சுக்குள் பாய்ந்தார் அந்தக் கண வர். யாராலும் அவரைத் தடுக்க முடியவில்லை.

ஓட்டுநர், நடத்துநர், மரணத்திலும் பிரியாது மனைவிக்காக தீக்குள் பாய்ந்து உடன்கட்டை ஏறிய அந்த கணவர் உட்பட 9 பேரும் எரிந்து கரிக்கட்டையாகிப் போயினர். விபத்து நடந்த இடத்தைப் பார்க்க வந்த கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. அ.தி.மு.க. அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ""ரேஷன் அரிசி கடத்திக்கொண்டு போன லாரி இது. போலீசுக்குப் பயந்து வேகமாக ஓட்டி தானும் செத்து, அப்பாவிப் பொதுமக்களையும் சாகடித்துவிட்டான் லாரி டிரைவர். ரேஷன் அரிசி கடத்தியவர்களை, உடந்தை யாக இருந்த அதிகாரிகளை கண்டுபிடித்து கடு மையாகத் தண்டிக்கணும்'' என்றார்.

எம்.எல்.ஏ.வின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த உணவு அமைச்சர் எ.வ.வேலு, ""அந்த லாரியில் இருந்தது ரேஷன் அரிசி இல்லையென்று மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் சொல்லியிருக்கிறார். அது ரேஷன் அரிசி இல்லை என்றே எனக்கும் தகவல் வந்திருக்கிறது. விபத்தில் இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சமும், காயம் அடைந்தோருக்கு 50 ஆயிரமும், முதல்வர் நிதியிலிருந்து வழங்கப்படும்'' என்றார்.

காவல்துறையினரிடம் கேட் டோம். ""ஆத்தூர் லாரி இது. ஓட்டு நர் இறந்துவிட்டதால் எங்கிருந்து எங்கே போய்க்கொண்டிருந்தது என்பதைக் கண்டறிய முடியவில்லை. பச்சரிசி, புழுங்கலரிசி மூட்டைகளுக்கு மேல் நெல் மூட்டைகளை அடுக்கி யிருந்தார்கள்'' என்கிறார்கள் காவல் துறையினர்.

அங்கவை சங்கவை! -ராகிங் கொடுமைக்கு மாணவி...

"தாயி நம்ம சாதி சனத்திலேயே நீதான் பட்டணத்துக்குப் படிக்கப் போற. நல்லா படிச்சு பெரிய இஞ்சினீயரா வாம்மா. அதுக்கு எம்புட்டுச் செலவா னாலும் நம்ம ஊரு சனமே பார்த்துக்கும். எதுனாலும் கடிதாசி போடு' -பெற் றோர்களின் கனவுகளோடு கடந்த மாதம் சென்னைக்கு அனுப்பி வைத்த ஜோதி இன்று பிணமாக... காரணம் ராகிங்?

தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்த ஜோதியை வீட்டுத் திண்ணையில் கிடத்த... ராசிபுரம் முள்ளுக் குறிச்சி அருந்ததி தெருவே திரண்டு வந்து ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தது. அவர்களிடம் பேசினோம். ""அவங்கப்பா ரோடு போடும் ரோலர் டிரைவரா இருக்காரு. அம்மா பத்து வருஷம் முன்னாடியே இவங்களை விட்டுட்டு டெல்லி போயிடுச்சு. தாத்தாதான் இவளையும் இவங்க அண்ணனையும் வளர்த்தாரு. அண்ணனுக்கு படிப்பு ஏறாம பொக்லைன் வண்டி டிரைவரா போறான். ஆனா ஜோதி குடும்ப கஷ்டத்தை புரிஞ்சு படிப்புல கண்ணும் கருத்துமா இருந்தா. 10-வதுல 475 மார்க் வாங்கி மாவட்டத்துலயே ரெண்டாவதா வந்தா. 12-வதுல 1105 மார்க் வாங்கினா. மேற்படிப்புக்கு பண வசதி இல்லை. இருந்தாலும் எங்க அருந்ததி சமூகத்துல கிராமத்துல இருந்து போயி படிச்சவங்களே இல்லைன்னுதான் நாங்க ஊரே சேர்ந்து பணம் திரட்டி சென்னைக்கு அனுப்பி வச்சோம். இப்படி தூக்குல தொங்கிட்டாளே...'' -மேற்கொண்டு பேச முடியாமல் அனைவரும் கதறி அழ...
ஜோதியின் அண்ணன் தீபக்கிடம் தற்கொலைக்கான காரணம் என்ன என்றோம். ""ராக்கிங்தான்.'' கோபமாக பேசியவர், தொடர்ந்து ""சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துல கவுன்சிலிங்குல பி.இ. இ.சி.ல சீட்டு கிடைச்சது. போன மாசம்தான் சேர்த்துட்டு வந்தோம். ஆனா சில நாட்கள்லயே "இங்க என் சீட்டு முன்னாடியும் பின்னாடியும் இங்கிலீஷ் மீடியத்துல படிச்சிட்டு வந்த பசங்க உக்கார்ந்திருக்காங்க. தமிழ்ல படிச்சிட்டு வந்த பொண்ணுக்கு சென்னையில இஞ்சினீரு படிப்பு கேக்குதா'ன்னு கிண்டல் பண்றாங்கண்ணா. "அங்கவை சங்கவை'ன்னும் போறப்ப வர்றப் பல்லாம் கேலி பேசுறாங்கண்ணா. கண்ட கண்ட எஸ்.எம்.எஸ். அனுப்புறாங்க. பயமா இருக்கு. எனக்குப் படிக்கவே பிடிக் கலை. ஊருக்கே திரும்பி வந்திடு றேண்ணா'ன்னு அடிக்கடி அழுவா. இப்போ வந்தப்போ, "இனி நான் காலேஜுக்கே போகல. "16 வய தினிலே' மயில் மாதிரி ஆடு பாடுன்னு கிண்டல் பண்றாங்கண் ணா'னு புலம்பிக்கிட்டே இருந்தாள்.

"கவலைப்படாம இருடா தங்கம், போகப்போக எல்லாம் சரி யாயிடும்'னு சொன்னேன். சரிண் ணான்னு சொல்லிட்டு படுத்தவ, விடிஞ்சா தூக்குல தொங்கிட்டு இருக்காளே'' மேற்கொண்டு பேச முடியாமல் தேம்ப... "ராகிங் கொடுமை செஞ்சவங்க மேல கடும் நடவடிக்கை எடுக்கணும்' என டி.எஸ்.பி. தமிழ்ச்செல்வனிடம் முறையிட்டனர் ஊர் மக்கள்.

போலீஸ் தரப்பில் விசாரித்த போது, ""ஜோதியின் வகுப்பில் படிக்கும் தீபக் என்கிற மாணவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ். போயிருக்கிறது. அதில் "உன்னோட பேச்சு, கேரக்டர் எல்லாம் எனக்குப் பிடிச்சிருக்கு. உன்னோட ஃபிரண்டாகணும்னு விரும்பறேன். என்னை யார்னு கேட் காதே. நான் உன்னோட பேட்சில் தான் படிக்கிறேன்' என்றிருந்தது. அடுத்தநாள் அது ஜோதி அனுப்பியது என்று தெரிந்த தீபக், "ஏன் இப்படி எஸ்.எம்.எஸ். அனுப்பியிருக்கு இந்தப் பொண்ணு' என வேறு சில மாணவிகளிடம் கேட்டிருக் கிறார். இதுபற்றி மாணவிகள் மாறி, மாறி கேட்டதால் அவமானப்பட்டு தற்கொலை செய்திருக்கலாம்'' என்கிறது போலீஸ்.

கற்புதான் குருதட்சணையா? கொந்தளிக்கும் மாணவிகள்!

’’""நர்ஸிங் கல்லூரி மாணவி சாய்னாதனக்கு நேர்ந்த சங்கட அனுபவங்கள் குறித்து விவரிக்க ஆரம்பித்தார் சாய்னா. ""எனக்கு சொந்த ஊர் குடியாத்தம். வாப்பா.. எங்கவூர் மசூதியில் வேலை பாக்கறார். நர்ஸிங் படிச்சி... அன்னை தெரசா மாதிரி... நோயாளிகளுக்கு சேவை பண்ணணும் என்பதுதான் என் லட்சியம். எங்க வாப்பாவும் இதுக்கு ஓ.கே. சொல்லிட்டார். இங்க தமிழ்நாட்டில் இருக்கும் நர்ஸிங் கல்லூரிகள் நன்கொடைகளை அதிகமா கேட்டுச்சி. அப்ப என் தோழிகள்... ஆந்திர மாநில கல்லூரிகள்ல நன்கொடை குறைவு. அதேபோல்.. கட்டணத்தை வசதிக்குத் தகுந்த மாதிரி... கொஞ்ச கொஞ்சமா கட்டலாம்னு சொன்னாங்க. அதைக்கேட்டு சந்தோசமான நான்... திருப்பதியில் இருக்கும் வேதா நர்ஸிங் கல்லூரிக்கு அப்ளிகேஷன் போட்டேன். எனக்கும் சீட் கிடைச்சிது. ரொம்ப சந்தோசமா... அந்தக் கல்லூரியில் போய்ச் சேர்ந்தேன். அங்க என் சந்தோசம் ஒருவாரம் கூட நீடிக்கலை. காரணம், அங்க சேர்ந்தப்பவே என் சீனியர் மாணவிகள் என்னைத் தனியாக் கூப்பிட்டு... "இங்க இருக்கும் கரஸ்பாண்டண்ட் வேதநாயகம் மோசமான ஜொள் பார்ட்டி. அவர்ட்ட ரொம்ப... ஜாக்கிரதையா இருக்கணும்'னு எச்சரிக்கை கொடுத்தாங்க.


அவங்க சொன்னமாதிரியே... கரஸ்பாண்டண்ட் வகுப்பில் டபிள் மீனிங்கில் பேசினார். சிலநேரம் வல்கராவும் கமெண்ட் அடிப்பார். ஹாஸ்டல தங்கி இருக்கும் மாணவிகளை அடிக்கடி வீட்டுக்குக் கூப்பிட்டு.. வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்வார். அப்ப அவர் நிறைய சில்மிஷங்களும் பண்ணுவாராம். பல மாணவிகள் இதைச் சொல்லி அழுதிருக்காங்க. அவர் பலவிதமா எனக்குத் தூண்டில் போட்ட போதும் ரெண்டு வருசம் எப்படியோ சமாளிச்சிட் டேன். இப்ப ஃபைனல் இயர். இதற்கிடையில் இதே கல்லூரியில் படிக்கும் எங்க மாமா பையனை எங்க வீட்டில் எனக்கு நிக்காஹ் பண்ணிவச்சிட்டாங்க. எக்ஸாம் நெருங்கிய நேரத்தில் பலருக்கும் ஹால் டிக்கட் கொடுத்த கரஸ்பாண்டண்ட் எனக்கு மட்டும் கொடுக்காம இழுத்தடிச்சார்.. அதைக் கேட்டு நான் அவர் அறைக்குப் போனேன். எடுத்த எடுப்பிலேயே "நீயும் உன் ஹஸ்பண்டும் ஒழுங்கா எக்ஸாமை எழுதி நல்லபடியா ஊர்ப்போய்ச் சேரணும்னா... நான் சொல்றதைக் கேட்கணும். உன்னை நினைச்சி நான் பலநாள் தூங்கலை. உன் அழகு என்னை பைத்தியமா ஆக்கிடிச்சி. ஒருநாள்.. ஒரே ஒருநாள் என் ஆசையை நீ தீர்த்துவச்சா... அடுத்த நிமிஷமே ஹால் டிக்கட் தருவேன். இல்லைன்னா... உன்னைப்பத்தி தப்புத் தப்பா வதந்தி பரப்பி... உன்னை வாழவிடாமப் பண்ணிடு வேன்'னு வில்லன் கணக்கா.. வெட்கமில்லாமப் பேசினார். எனக்கு அழுகை வந்துடுச்சி. அப்படியே வெளில ஓடிவந்துட்டேன்...''’என்று வழிந்த கண்ணீரைத் துடைத்துகொண்டவர்..

""மேதாவி வேசத்திலிருக்கும் அந்த அயோக்கியனின் முகமூடியைக் கிழிக்கணும். என்னோட எக்ஸாமை நான் நல்லபடியா முடிச்சி.. நர்ஸ் சேவையை வாழ்நாள் முழுக்கத் தொடரணும். இதுதான் என் விருப்பம். நம்ம வேலூர் கலெக்டர்ட்ட கூட... அந்த கேடுகெட்ட கரஸ்பாண்டண்ட் பத்தி புகார் கொடுத்திருக்கேன். எனக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டேன்''’’ என்றார் அழுத்தமாக.
அந்தக் கல்லூரி கரஸ்பாண்டண்ட் வேதநாயகத்தைப் பலமுறை தொடர்புகொள்ள முயன்றும்.. ’அவர் பிஸி. வெளியே போயி ருக்கிறார்’ என்ற பதிலையே காலர் ஐ.டி.போல சொல்லிக் கொண்டிருந்தது அந்தக் கல்லூரி நிர்வாகம்.

இது குறித்து வேலூர் ஆட்சியர் ராஜேந்திரனிடன் நாம் கேட்டபோது ‘""சாய்னாவின் புகார் திடுக்கிடவைத்தது. இது குறித்து சித்தூர் கலெக்டருக்கு இவரது புகார் மனுவை அனுப்பி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டிருக்கிறேன். கல்லூரிக்குள்ளேயே இப்படி காமப் பிசாசுகள் என்றால்... சங்கடமாகத்தான் இருக்கிறது''’என்றார் வருத்தம் இழையோட.

இந்த நிலையில்.... நமது நண்பர் ஒருவர் மூலம் கடலூர் பகுதியைச் சேர்ந்த அந்த இரண்டு கல்லூரி மாணவிகளும் நம்மைச் சந்தித்தனர். அவர்கள் முகத்தில் கவலையான கவலை. அவர்களின் புகாரும் இதே ரகம்.

அவர்களை விசாரித்தபோது... ""கடலூரில் இருக்கும் ஒரு கிறிஸ்த்தவக் கல்லூரியில் படிக்கிறோம். எங்க கல்லூரியில்.. தனது பெயரில் அருமையை வைத்திருக்கும் வசதிப் பேராசிரியர்... துறைத் தலைவரா இருக்கார். அவரிடமும் ஜானின் மகன் என்ற பொருள் வரக்கூடிய பெயரையுடைய பேராசிரியரிடமும் நாங்க படாதபாடு படறோம். புராஜக்ட் ஒர்க்குக்கு கையெழுத்து வாங்கப்போனா.... அனுசரிச்சிப்போனாதான் கையெ ழுத்துன்னு கட்டிப்பிடிக்கறாங்க. மிரட்டி மிரட்டியே தப்புத்தப்பா நடந்துக்கறாங்க. குறிப்பா துறைத் தலைவர் வீட்டில் பெரும்பாலும் அவர் மனைவி இருக்கமாட்டாங்க. அதனால் மகள் வயசு உள்ள மாணவிகளை எல்லாம் பலவந்தமா வீட்டுக்கு கூட்டிட்டுப்போய்.... விதவிதமா தன் ஆசையைத் தீர்த்துக்குவார்.

அழகான மாணவிகளைப் பார்த்தா எதையாவது சொல்லி... தங்கள் சபலத்தை தீர்த்துக்கறதில் இவங்க ரெண்டுபேருமே கில்லாடிங்க. போன வருசம் டூர் போனப்ப... இந்த மன்மதப் பேராசிரியர்கள் பல மாணவிகளைத் தனித்தனியா கூட்டிட்டுப்போய் அங்க இங்க தொட்டுத் தடவி... எல்லா அசிங்கமும் பண்ணி... செல்போன்லயும் படம்பிடிச்சாங்க. அதே போல் இப்ப வந்திருக்கும் பாதரும்.. அந்த விஷயத்தில் பிளேபாயா இருக்கார். படிக்கவரும் மாணவிகள் வாழ்க்கையில் இவர்கள் விளையாடுவது எந்த வகையில் நியாயம்? இவங்க அட்டூழி யம் நாளுக்கு நாள் அதி கரிச்சிக் கிட்டே இருக்கு. இவங்களை யாரு தட்டிக்கேட்கறது.?''’’ என குமுறி யவர்கள்....

""எங்களுக்கு மட்டும் இல்லை. திருவண்ணாமலை கடவுள் பெயரில் இருக்கும் அந்த கல்வி உலகத்தில் படிக்கும் மாணவிகளையும்... சில பேராசிரிய மிருகங்கள் வேட் டையாடிக்கிட்டு இருக்கு. என் தோழி ஒருத்தியை போனில் பேசச் சொல்றேன் அவ கிட்டயும் விசாரிங்க''’ என்றபடி அந்த மாணவியை செல்போன் லைனில் பிடித்துக்கொடுத்தனர்.

லைனில் வந்த அந்த மாணவி...

""எங்க கல்லூரியில் மகிழ்ச்சியானவரும்... அரச மோகனமானவரும் பேராசிரியரா இருக்காங்க. இவங்க மாணவிகளை பாலியல் ரீதியாய்ப் பாடாய்ப் படுத்திக்கிட்டு இருக்காங்க. அவங்க எந்த மாணவியைக் குறிவைக்கிறாங்களோ அவங்க.. இவங்க கூப்பிடற இடத்துக்கு வந்தாகணும். இல்லைன்னா... எல்லா வகையிலும் பழிவாங்கிடுவாங்க. சமீபத்தில்... நாங்க நெட்டை குட்டைன்னு பட்டப்பெயர் வச்சிக்கூப்பிடும் ரெண்டு மாணவிகளை அவங்க வற்புறுத்தி... பிச்சாவரத்துக்குக் கூட்டிட்டுப்போனாங்க. குட்டையான மாணவிக்கு தங்கமான பெயர். ஆள் சிவப்பா, கொஞ்சம் புஷ்டியா இருப்பா. அந்த நெட்டை மாணவிக்கோ ஒரு மிடுக்கான கவிஞரின் பெயர். ஆள் கருப்பா இருந்தாலும் வளர்ந்து வாட்டசாட்டமா இருப்பா. இவங்களை அங்க இருக்கும் விருந்தினர் மாளிகைக்கு கூட்டிட்டுப் போயிருக்காங்க. அப்ப ஒரு பேராசிரியர் தன் செல்போன்ல... ஒரு மாணவியை அங்க அங்கமா... படம் எடுக்க... அந்த மாணவி... என் வாழ்க்கையை ஏன் சார் வீணாக்கறீங்கன்னு அழுதிருக்கா. அவ அழுகையைப் பார்த்து பயந்துபோன அந்த பேராசிரியர்... சரி இதோ டெலிட் பண்ணிடறேன்னு அவ எதிர்லயே அழிச்சிருக்கார். அப்பவும் அந்தப் பொண்ணு... அழிச்சாலும் படத்தை ரெகவரி பண்ணமுடியும். எனக்கு எதிர்காலத்தில் பிரச்சினை வந்தா என்ன பண்றதுன்னு... கதற... "உனக்கு நிறைய மார்க் போடறேன். ஏன் கவலைப்படறே. இதை நானும் மறந்துடறேன், நீயும் மறந்துடு'ன்னு சொல்லியிருக்கார். பாடம் போதிக்கக்கூடிய புனிதமான தொழிலில் இருப்பவர்கள் செய்யக்கூடிய செய்கையா இது?''’என்றார் கொதிப்பாய்.

இவர்கள் சொன்ன தகவல்களைக் கேட்டு கலவரமான நாம்.. சிதம்பரத்தில் இருக்கும் அந்த எஸ்.ஐ.யைத் தொடர்பு கொண்டு... இது குறித்தெல்லாம் கேட்க...

""கல்விக்கூடங்கள் சமீபகாலமா காமக்கூடங்களா மாறிக்கிட்டு வருது. பிச்சாவரத்துக்கு போறதோட இதே சிதம்பரத்தில் இருக்கும் லாட்ஜ்களில் ரூம்போட்டும் மாணவிகளை இப்படிப் பட்ட பேராசிரியர்கள் வேட்டை யாடறாங்க. ஒரு தடவை நாங்க ரெய்டுக்குப் போனப்ப.... ஒரு லாட்ஜில் மாணவிகளோட தங்கியிருந்த பேராசிரி யரைக் கையும் களவுமா பிடிச்சோம். அந்த மாணவிகள்... வீட்டுக்குத் தெரிஞ்சா தற்கொலை பண்ணிக்குவோம்னு கதற அவங்களுக்கு புத்தி சொல்லி அனுப்பி வச்சோம். அந்தப் பேராசிரியருக்கு மட்டும் நாலு அறைகொடுத்து எச்சரிச்சோம். இதேபோல்.... இன்னொரு ரெய்டில் டி.டி.யில் ஒர்க் பண்ணும் 35 வயசு பேராசிரியை ஒருத்தர்... 19 வயசு மாணவ னோட மாட்டினாங்க. அந்தப் பேராசிரி யை இனி இப்படி செய்யமாட்டேன். என்னை விட்டுடுங்கன்னு காலில் விழுந்து கதறினாங்க.

பையனோ மேடம்தான் வற்புறுத்தி அழைச்சிக்கிட்டு வந்தாங்கன்னு கண்ணைக் கசக்கினான்.... அடக் கருமமேன்னு ரெண்டுபேரையும் துரத்திவிட்டோம். காலம் எப்படியெல்லாம் மாறிப்போச்சு பாருங்க'' என்று அதிரவைத்தார்.

இத்தகைய கொடு மைகளுக்கு யார் முற் றுப்புள்ளி வைப்பது?

எமன் உருவில் ஸ்கூல் பஸ்!

+1 மாணவன் சுரேஷ். தனது சொந்த ஊரான சின்னக்கரடியூரில் இருந்து... 3 கி.மீ. தொலைவில் உள்ள போச்சம்பள்ளியிலுள்ள, அரசு உதவிபெறும் அண்ணா அறிவகம் தனியார் பள்ளிக்கு தினமும் சைக்கிளில்தான் வருவான்.

13.9.10 காலை 8.40 மணி.

பள்ளி காம்பவுண்ட் கேட்டருகே வந்து விட்டான் சுரேஷ். உள்ளே இருந்து சீறியபடி வந்த பஸ்ஸின் வேகத்தை கண்டு நிலைகுலைந்து சைக்கிளை நிறுத்திய அதே நேரம்... பஸ்ஸின் பாடி சுரேஷ் மீது மோதியது. பஸ்ஸின் பின் சக்கரம் சுரேஷின் தலையில் ஏறியிறங்கி விட்டது. ஸ்கூலுக்கு வந்து கொண்டிருந்த அத்தனை மாணவ மாணவிகளும் ""அய்யய்யோ... நம்ம சுரேஷை கொன்னுட்டானே படுபாவி...!'' அலறினார்கள்.

மாணவ- மாணவிகளின் அலறல் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியையே திகைப்பூட்டி அதிர வைத்தது.

""எவ்வளவு சட்டம் போட்டாலும் இந்த ஸ்கூல் பஸ்காரனுங்க திருந்தவே மாட்டானுங்க. இதே பஸ்... இதே இடத்தில 6 மாதம் முன்னால ரெண்டாம் கிளாஸ் புள்ளையோட கையை பறிச்சது... இப்ப... எங்க சுரேஷை அடையாளம் தெரியாம பண்ணிட்டானே...!'' சுரேஷின் உடலைச் சுற்றி நின்று நூற்றுக்கணக்கான மாணவர்கள் கதறினார்கள். அக்கம் பக்க ஜனங்களும் ஆவேசத்தோடு திரண்டார்கள், அந்தப் பள்ளிக்குள் நுழைந்தார்கள்.

அடுத்த பத்தாவது நிமிடம் அந்த தனியார் பள்ளியின் மூன்றடுக்கு கட்டடம் கரும்புகையோடு எரியத் தொடங்கியது. பள்ளியின் அலு வலக அறை, லேப் அறைகள் கொழுந்துவிட்டு எரிந்தன. ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் சான்றிதழ்களும் கோப்பு களும் சாம்பலானது. ஆத்திரம் குறையாத மக்கள் பள்ளி வளாகத்தில் நின்ற பஸ்கள், கார்கள், டூவீலர்களையும் அடித்து நொறுக்கி தீவைத்தனர்.

""டிரைவர்கள் கண்ணுமண்ணு தெரியாம ஓட்டுறாங்கனு எத்தனையோ முறை சொல்லியும் கொஞ்சமாச்சும் கவலைப்பட்டாரா அந்த கரஸ்பான்டண்ட்... வாங்க அவருக்கு புத்தி புகட்டுவோம்!'' -ஒரு கூட்டம் ஸ்கூல் கரஸ்பான்டண்ட் வீட்டை நோக்கிப் புறப்பட்டது.

போச்சம்பள்ளி போலீசாரால் ஆவேசமாக திரண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

""விபத்தில் இறந்த சுரேஷ் நல்ல மாணவன் என்று பெயரெடுத்திருக்கிறான். அவனுக்கு ஏற்பட்ட இந்தக் கொடூர விபத்தை சக மாணவ- மாணவிகளால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் ஸ்கூலை கொளுத்தியது மாணவ- மாணவிகள் இல்லை. இந்த பள்ளி நிர்வாகத்திற்கும், உள்ளூரில் சிலருக்கும் ஏற்கனவே பகை இருப்பதாக தெரிகிறது. சுரேஷின் விபத்தை பயன்படுத்திக் கொண்டு ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டதாக தெரிகிறது. சரியான விசாரணைக்கு பிறகுதான் உண்மை தெரியும்!'' என்கிறது காவல்துறை வட்டாரம்.

பெண்களுடன் கும்மாளம் நித்யானந்தா நண்பர் ஆத்மானந்தா ஆசிரம அந்தரங்கம்! அம்பலப்படுத்தும் சிவசொரூபானந்தா

நம்மை நமது நண்பர்கள் மூலம் தொடர்புகொண்ட சந்நியாசி சிவசொரூ பானந்தா... ஒரு ஆன்மீக வி.ஐ.பி. மீது ஏகத்துக்கும் பகீர் மற்றும் சீச்சீ குற்றச் சாட்டுகளை அடுக்கி... நம்மைத் திகைக்க வைத்தார். அவரால் புகார் கூறப் படுபவர் வேறு யாருமல்ல; கல்வி மற் றும் ஆன்மீகத்தொண்டு புரிந்துவரும் சுவாமி ஆத்மானந்த மகராஜ்தான்.

ஸ்ரீ சாரதா நிகேதன் என்ற ஆசிரமத்தை அமைத்து காரைக்குடியில் மகளிர் கல்லூரி நடத்திவரும் ஆத்மா னந்தா.. தற்போது தனது கல்வி அறக் கட்டளை மூலம் சேலம் கணவாய் புதூரிலும் 100 ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரமாண்டமான... கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியை அமைத்து வருகிறார். சென்னையில் அனாதை ஆசிரமத்தையும் நடத்தி வருகிறார். சிறந்த ஆன்மீக சொற் பொழிவாளராகவும் திகழும்... 70 வயதைக் கடந்த இந்த ஆத்மானந் தாதான் தற்போது குற்றச்சாட்டுச் சூறாவளியில் சிக்கியிருக்கிறார். இவர் இலங்கை அக திப் பெண்பிள்ளைகளை படிக்க வைத்தது குறித்த கட்டுரை யை 2009-ஜூலை 29 தேதியிட்ட நக்கீரன் இதழிலேயே நாம் எழுதியிருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட ஆத்மானந்தா மீதுதான் பகீரூட்டும் புகார்களை அடுக்குகிறார் சிவசொரூபானந்தா.

இனி சிவசொரூபானந்தா வைக்கும் புகார்களை அவரது வாயாலேயே கேட்போம்...

""எனக்கு வாழ்க்கையில் நிறைய சிக்கல்கள் தொடர்ந்து வர ஆரம்பித்ததால்... நிம்மதிக்காக ஆன்மீகத்தில் ஐக்கியமாக நினைச்சேன். அப்ப குற்றாலத்தில் இருந்த பெருமாள் சாமியார் என்ற மகானிடம் சீடனாக சேர்ந்து அவரிடம் தீட்சை பெற்றேன். இதன்பிறகுதான் மன நிம்மதி எனக்குத் திரும்பக்கிடைத்தது. இந்த நிலையில் எனது ஆன்மீக நண்பர்கள் மூலம் ஆத்மானந்தா பற்றி கேள்விப்பட்டு அவரிடம் நட்பை வளர்த்துக்கொண்டேன். பத்துப் பதினைந்து வருடங்களுக்கு மேல் அவரோடு பழகினாலும் ஆன்மீக ரீதியாக அவரோடு ஐக்கியமாக முடியாமல் என்னை ஏதோ தடுத்தது.

இந்த நிலையில்... அவரது ஆசிரமத்தில் அவரோடு பலகாலம் இருந்த சிவப்பிரியானந்தா என்ற சந்நியாசி.... ஆத்மானந்தாவின் மறுபக்கம் குறித்து என்னிடம் விவரித்தார். முதலில் நான் நம்பவில்லை. ஆனால் அவர் காட்டிய சில ஆதா ரங்களைப் பார்த்த பிறகு... அவரைக் கூர்மையாகக் கண்காணித்த போது... சிவப்பிரியானந்தா சொன்னது அத்தனையும் உண்மைதான் என்பதைப் புரிந்துகொண்டேன். மோசடி சாமியா ரான ஆத்மானந்தாவை திருத்த முயன்று தோற்றுப்போன சிவப்பிரியானந்தா... என்னிடம் அம்பலப்படுத்தியது போல்... தமிழகத்தில் இருக்கும் அத்தனை ராமகிருஷ்ணா மடங்களிட மும்.. இந்து அமைப்புகளிடமும் ஆத்மானந்தாவின் அத்தனை ஏடாகூடங்களையும் பகிரங்கப்படுத்தி... என்னை ஆத்மானந்தா கொலை பண்ணிவிடுவதாக மிரட்டுகிறார். ஏற்கனவே அவர் கொலைகளை தைரியமாகச் செய்தவர் என்ற முறையில் என்னையும் அவர் கொல்ல லாம். அப்படி என்னைக் கொன்றால்... என் சாவுக்கு அவர்தான் காரணம் என்று அவரை உள்ளே தள்ள முயற்சி பண்ணுங்கள்' என்று கேட்டுக்கொண்டார்.

அப்படி கேட்டுக்கொண்ட சிவப்பிரியானந்தாவை கடந்த 15 நாட்களாகத் தொடர்புகொள்ள முடியவில்லை. அடிக்கடி லைனில் வந்துபேசும் அவரும் என்னைத் தொடர்புகொள்ளவில்லை. எனவே... ஆத்மானந்தா அவரை ஏதாவது செய்திருக்கலாமோ என்று அஞ்சுகிறேன். ஆத்மா னந்தாவால் சிவப்பிரியானந்தாவுக்கு ஏதாவது விபரீதம் உண்டாகியிருக்கலாம்''‘ என்றார் பதட்டமும் கவலையுமாக.

"அவசரப்பட்டு கற்பனை பண்ணாதீர்கள். அந்த சிவப்பிரியானந்தா... அப்படி என்னென்ன ஆத்மானந்தா வின் ஏடாகூடங்களை உங்களிடம் அம்பலப்படுத்தினார்?' என்றோம் அவரை நிதானப்படுத்தி.

""ஆத்மானந்தாவின் ஜாதகத்தையே உங்கக்கிட்ட சொல்றேன். கவனமா கேளுங்க''’என்ற சிவசொரூபானந்தா....

""ஆத்மானந்தாவின் சொந்த ஊர் கோவை பள்ளிப்பாளையம். வேலை வெட்டியில்லாம ஊர் சுத்திக்கிட்டு இருந்த ஆத்மானந்தா... திடீர்னு ஆன்மீகமே என்வழின்னு சொல்லிக்கிட்டு 65 வாக்கில் திருச்சி திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தில் தன்னை சந்நியாசியாய் இணைத்துக்கொண்டார். இவருக்கு அப்போதிருந்த தபோவனத் தலைவர் சித்பவானந்தர் தீட்சை கொடுக்க... தன் ஆன்மீக வாழ்வை பிள்ளையார்சுழி போட்டுத் தொடங்கினார் ஆத்மானந்தா. இந்த நிலையில் மடத்தில் இருந்த ஒரு இளம்வயசுச் சந்நியாசி... ஆத்மானந்தா தன்னிடம் ஆபாசமாக நடந்துகொண்டதாக ஓரினச்சேர்க்கைப் புகார் வாசித்துக் கண்ணைக் கசக்க... கோபமான சுவாமி சித்பவானந்தர்... ஆத் மானந்தாவைக் கரூர் கிளைக்கு மாற்றினார். அங்க இருந்த ஆட்களைக் கொஞ்ச கொஞ்ச மா வசப்படுத்த முயன்ற ஆத்மானந்தா... சித்பவானந்தர் இறந்ததும்.... ஆசிரமத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துட்டார். அதோட ராமகிருஷ்ண மட விதிகளுக்குப் புறம்பா... பெண் சந்நியாசிகளையும் மடத்தில் சேர்த்துக்கிட்டார்.

ஆத்மானந்தாவின் இதுபோன்ற நடத்தைகளைப் பார்த்த சீனியர் சாமியாரான நித்யானந்தா என்ற பெரியவர் ஆத்மானந்தாவைக் கண்டிச்சிக்கிட்டே இருந்தார். இந்த நிலையில்தான் எனக்கு ஆத்மானந்தாவோடு நட்பு ஏற்பட்டது. அப்ப என்னை லட்சத்தீவுக் கூட்டத்தில் ஒன்றான அன்ரோத் தீவுக்குப் போய்... நான் எழுதிக்கொடுக்குற மருந்துகளை வாங்கிட்டு வான்னு என்னை அனுப்பினார். அந்த மருந்துகளில் ஒண்ணு கரும் பச்சையாகவும் இன்னொன்னு கருப்பாகவும் இருந்தது. அதைக்கொடுத்த ஆதிவாசிகள்.. இது ஆளை மெல்ல மெல்லக் கொல்லும் விஷமாச்சே... இதை எதுக்கு வாங்கறீங்கன்னு கேட்டாங்க. சாமியார் எதற்காகவோ வாங்கச்சொன் னார்னு சொல்லிட்டு வந்தேன். அது அந்த சீனியர் நித்யானந்தாவுக் காகன்னு அப்ப எனக்குத் தெரியாது. இந்த மருந்தைக்கொடுத்துக் கொன்னா... உடம்பில் விஷத்துக்கான எவிடன்ஸ்கூட இருக்காதாம்.
அந்த மருந்தை அவர் நித்யானந்தாவுக்கு சாப்பாட்டில் கலந்து கொடுத்ததையும் அதில் அந்த நித்யானந்தா... மனநிலைகெட்டு முடங்கிப் போனதாவும் பின்னால் தெரிஞ்சிக்கிட்டேன். இதேபோல் ஆத்மானந்தாவின் விசுவாச பக்தரான வேதாரண்யம் சுப்பிரமணியம் என்ற சீடர்... ஒரு இல்லீகல் பிரச்சினையில் மாட்டி ஆறுதல் தேடி இவர்கிட்ட வந்தார். ஆத்மானந்தாவோ... அபயம் தேடிவந்த சுப்பிரமணியை தன் உறவினரான தங்கவேல் என்கிற ஜனேஸ்வரானந்தாவைக் கொண்டு மிரட்டி... சொத்துக்களை எழுதி வாங்கிக்கிட்டு கொலை பண்ணிட்டார்'' என்றார் அழுத்தமாய்.

"இந்த சுப்பிரமணி எப்படி கொல்லப் பட்டார்? அதைப் பார்த்தது யார்?' ’என்றோம் சிவசொரூபானந்தாவிடமே.

இதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தவர் ""அவர் எப்படி கொல்லப்பட்டார்ங்கிற விஷயம்... சிவப்பிரியானந்தாவுக்குத்தான் தெரியும். அதை நான் டீட்டெய்லா கேட்கலை. இதற்கிடையே... கரூர் தபோவனத்தில் இருந்த பெண் சாமியாரிணிகள் சிலர்.. ஆத்மானந்தா தங்களிடம் அசிங்கமாக நடந்துகொண்ட தாக போலீஸிலேயே புகார் கொடுக்க... காசை வாரி இறைச்சி... அதைப் பெரும்பாடுபட்டு சமாளிச்சார் ஆத்மா னந்தா. இந்த நிலையில் ராமகிருஷ்ண மடம் இவரை வெளியேறும்படி சொல்ல... கரூர் மடமும் அதன் சொத்துக்களும் தனக்கு சொந்தம்னு அறிவிச்சார் ஆத்மானந்தா. தபோவனத் தரப்பு சொத்துக்களை மீட்கப் போனப்ப.. துப்பாக்கியைக் காட்டி அவங்களை மிரட்டினார். அப்ப போலீஸ் அவரை தன் கஸ்டடிக்குக் கொண்டுபோச்சு. இந்து அமைப்புகளும்... மறைந்த தி.மு.க.பிரமுகர் வாசுகி முருகேசனும் தலையிட்டதன் பேரில் வெளியே வந்த ஆத்மானந்தா 2 வருசம் தலைமறைவா இருந்தார். தபோவனத்தரப்பு கோர்ட்டுக்குப் போய்... சொத்தையும் மடத்தையும் மீட்டது.

இந்த நிலையில்தான்.. பிரச்சினை இல்லாம மடத்தில் பெண்களை தங்க வச்சிக்கலாம்னு... காரைக்குடியில் சாரதா நிகேதன் சமிதி என்ற ஆசிரமத்தை ஆரம் பிச்சி இளம்பெண்களை அதில் சேர்க்க ஆரம்பிச்சார்.. அங்க ஒரு செட்டியாரை ஏமாற்றி நிலத்தை மோசடியா ஆக்கிரமிச்சி... அங்க மகளிர் கல்லூரியைக் கட்டியவர்... அடுத்து சேலத்திலும் டேரா போட்டு... அங்கும் கல்லூரி கட்ட ஆரம்பிச்சிருக்கார். இப்படி தில்லு முல்லுகளை செய்துவந்த ஆத்மானந்தா கடைசியா சிவப்பிரியா னந்தாக் கிட்ட எப்படி மாட்டினார் தெரியுமா?. தன் நண்பர் பிடதி ஆசிரம ரஞ்சிதா புகழ் நித்யானந்தா பாணியில்தான்''’என்று சஸ்பென்ஸ் வைத்து கொஞ்சம் மினரல் வாட்டரை வாயில் சரித்துக் கொண்டார்.

நாம் ஆர்வம் தாங்காமல் ’எப்படி?’ என்றோம்.

""பிடதியில் ஆசிரமத்தை ஆரம்பிக்கும் முன் சென்னை ராமகிருஷ்ணா மடத்தில் ரெண்டு வருசம் நித்யானந்தா இருந்ததும்... அப்ப புகாரின் பேரில் நீக்கப்பட்டதும் ஏற்கனவே உலகம் அறிஞ்சதுதான். அந்த நித்யானந்தா.. தனியா ஆசிரமம் அமைக்க முயற்சி செஞ்சப்ப... தபோவனத் தரப்பில் யாரும் ஆதரவு காட்டலை. அப்ப.. இந்த ஆத்மானந்தாவைத் தேடிவந்து ஆதரவு கேட்டார் நித்யானந்தா. அவருக்கு 5 ஆயிரம் ரூபாயும் கொடுத்து ஆசிர்வாதமும் பண்ணினார் ஆத்மானந்தா. இந்த நட்பில் போன டிசம்பரில் பிடதியில் நடந்த துறவிகள் மாநாட்டுக்குக் கூட ஆத்மானந்தாவை அழைச்சிருந்தார் நித்தி. முதல் ரெண்டு நாள்... வடநாட்டு துறவிகளும்.... அடுத்து ரெண்டுநாள் கர்நாடகத் துறவிகளும் அடுத்ததா தமிழகத் துறவிகளும் கலந்துக்கிட்டாங்க. அதில் இந்த ஆத்மானந்தாவும் கலந்துக்கிட்டு பேசினார். இந்த நிலையில்.... ரஞ்சிதா சி.டி.வெளியாகி.. நித்தியின் இமேஜ் முழுக்க ஸ்பாயில் ஆனது.

அப்ப... நித்தி ஆத்மானந் தாவைத் தொடர்புகொண்டு... "என்னை ஆதரிச்சி பேசுங்க. என்னைத் தூக்கிப்பிடிங்க. உங்க ளுக்கு என்ன உதவிகள் வேணும்னாலும் செய்யறேன்'னு சொல்லிய தோடு.. ஆத்மானந்தாவுக்கு 3 கோடி கொடுப்பதாச் சொல்லி 30 லட்சம் அட்வான்ஸும் கொடுத் தார். பணத்தை வாங்கியபோதும்... நித்தியை ஆதரிச்சிப் பேசினா... தன் கல்லூரியில் படிக்கும் பெண்கள் மத்தியில் அதிருப்தி உருவாகும்னு நினைச்ச ஆத்மானந்தா என்னைக் கூப்பிட்டு ஆதரிச்சி பேசச்சொன்னார். நான் மறுத்துவிட்டேன். ஆனா என் படத்தைப் போட்டு நான் ஆதரிப்பதுபோல ஒரு செய்தியையும் வரவழைச்சார் ஆத்மானந்தா. இதற்கிடையில் இந்த ஆத்மானந்தாவின் ஆபாச அட்டகாசம் அதிகமானது.

எப்படின்னா? காவி கட்டிக்கிட்டு இருக்கும் எனக்கு சொல்லவே சங்கடமாத்தான் இருக்கு. இந்த ஆத்மானந்தா.. தினமும் இரவு 6-ல் இருந்து 8 மணிவரை தன் கல்லூரி மாணவிகளுக்கு டி.வி., டெக்கில் மகாபாரதம் போட்டுக்காட்டுவார். அது முடிஞ்சதும்.. தனியா இளம் சாமியாரிணிகள் புடைசூழ உட்கார்ந்துக்கிட்டு... ஆபாசப் படத்தைப் போட்டுப்பார்ப்பார்.

சாமியாரிணிகள் வெட்கத்தோடு தவிக்கத் தவிக்க... அவங்களிடம் சில்மிஷம் பண்ணுவார், அப்புறம்.. தன் உறவினரான ஜனேஸ்வரானந்தாவை அந்தப் பெண் சாமியாரிணிகளுடன் இருக்க வைத்து பக்கத்தில் இருந்து ரசிப்பார். இந்த அசிங்கத்துக்கெல்லாம் சரியான ஆதாரம் இருக்கவேண்டிய இடத்தில் ரகசியமா இருக்கு. இப்படி கொலைகள்.. நிலமோசடிகள்... பாலியல் ஆபாசக் கூத்துக்கள்னு திரைமறைவில் ஆட்டம்போடும் ஆத்மானந்தா... வெளி உலகில் ஞானிபோலவும் துறவிபோலும் நாடகம் ஆடறார். அதுக்கு தன் வயது திரையா இருக்கும்னு நம்பறார். இப்ப இந்த உண்மைகளை வெளிப்படுத்த ஆரம்பித்த தன் சீடரான சிவப்பிரியானந்தா வையும் ஏதோ பண்ணியிருக்கார். இவரைப் பத்திய அத்தனை முகத்திரைகளும் விரைவில் ஆதாரப்பூர்வமாகக் கிழியத்தான் போகிறது'' என்றார் பலமான நம்பிக்கை யோடு சிவசொரூபானந்தா.

நித்யானந்தா நண்பர்களிடம் வேறு எதை எதிர் பார்க்க முடியும்?""நம்பாதீங்க''அதிரடிப் புகார்கள் குறித்து " சாரதா நிகேதன்' நிறுவனத் தலைவரான ஆத்மானந்தாவிடமே விளக்கம் கேட்டோம்.

""அவன் அயோக்கியன். மோசமான திருட்டுப்பயல். அவன் சொல்றதையெல்லாம் நம்பாதீங்க'' என எடுத்த எடுப்பிலேயே காரமான ஆத்மானந்தா...

""அந்த சிவசொரூபானந்தாவும் சிவப்பிரியானந்தாவும் ஒரே ஆள்தாங்க. அவனை நான் கொன்னதா அவனே கதை பரப்புறான். என் பணம் 2 லட்ச ரூபாயைத் தூக்கிட்டு ஓடின அந்தப் படுபாவி... மேலும் ஒரு லட்சம் கேட்டு எஸ்.எம்.எஸ்.ஸில் என்னை மிரட்டினான். எனக்கு செல்போனை மட்டும்தான் ஆபரேட் பண் ணத் தெரியும். அப்படியிருக்க நான் எப்படி டெக்கில் ஆபாசப்படம் போட்டுப் பார்ப்பேன். அதை எப்படிப் போட்டுப் பார்க்கிறதுன்னு கூட எனக்குத் தெரியாது. நான் அந்த மாதிரி ஆள் இல்லை. யார்ட்டயும் தப்பா நடந்துக்கிட்டது இல்லை. அவன் ஆபாசப் புகாரை, இங்க வந்து சொன்னா... சம்பந்தப்பட்ட பெண்களே அவனை செருப்பால் அடிப்பாங்க.

உடம்பு சரியில்லாம செத்தவங்களையெல்லாம் நான் மர்டர் பண்ணினதாச் சொல்றான். அந்த வேதாரண்யம் சுப்பிரமணிக்கு சமாதியே நான் கட்டி வச்சிருக்கேன். அவன் பொய்யன். அவன் பேச்சைக் கேக்காதீங்க'' என பொறிந்து தள்ளிவிட்டார், ஒருவித பதட்டத்தோடு.