புதன், 27 அக்டோபர், 2010

நமீதாவை முத்தமிட்டவர்.

கனவுக் கன்னியாகத் திகழும் நடிகைகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பது உலகறிந்த விஷயம். நமீதாவுக்கும் அவர் ரசிகர்களை மச்சான்ஸ் எனக் கூப்பிடும் அழகுக்கும் தனி ரசிகர் வட்டம் உண்டு.

ஏன் நமது முதல்வர் கூட, அவர் கதை வசனமெழுதும் இளைஞன் படத்துக்கு நமீதாவை சிபாரிசு செய்யுமளவுக்கு இருக்கிறார் என்றால் அவரது பெருமையை வேறெப்படியும் சொல்ல வேண்டியதில்லை.

ஆனால் திருவாளர் கொசு என்றொரு ரசிகர் நமீதா மீது ஆசைப்பட்டு அவரை முத்தமிட்டுச் சென்றிருக்கிறார். விளைவு நமீதா மலேரியா காய்ச்சல் வந்து பெட் ரெஸ்ட்டில் இருக்கிறார்.

சனி, 23 அக்டோபர், 2010

250 கிராம் எடை கொண்ட ரோபோ நிலவுக்கு

ஸ்பெயின் நாட்டு மாணவர்கள் குழு நிலவுக்கு ரோபோவை அனுப்ப திட்ட மிட்டுள்ளது. பிக்கோ ரோவர் என்ற பெயருடைய இந்த ரோபோ 250 கிராம் எடை கொண்டது. பந்து போன்ற வடிவம் உடையது. நவீன கேமரா, கம்ப்யூட்டர், சிறிய மோட்டார், பேட்டரி ஆகியவை இவற்றில் இருக்கும். நிலவில் உள்ள பாறைகள், மணல் ஆகியவற்றை இந்த ரோபோ ஆய்வு செய்து படங்களை அனுப்பிவைக்கும்.

சனி, 16 அக்டோபர், 2010

அசினின் - 7வது அறிவு

இது நம்ம முருகதாஸ் படம் பத்தின மேட்டர் இல்லைங்க. அசின் பத்தின மேட்டர். யாரோ சில பேர் அசின் பெயரில் வலைத்தளம் உருவாக்கி, அதில் அசினின் கவர்ச்சிப் படங்களைப் போட்டு, லைவ் சாட் வசதியெல்லாம் செய்து அசினைப் போலவே பேசி செம கலாட்டா செய்திருக்கிறார்கள்.

போதாதென்று, அசின் பெயரில் டி‌விட்டரும் வேறு தொடங்கியிருக்கிறார்கள். விஷயம் அம்மணிக்குத் தெரிஞ்சு, அது என் வலைத்தளம் இல்லை, அதுல சாட் பண்றதும் நான் இல்லைனு மறுப்புக்கு மேல மறுப்பு தெரிவிச்சிருக்காங்க.

இந்த மாதிரி குசும்பு வேலை பண்றதுக்கு மட்டும் நம்ம ஆளுங்க 7வது அறிவு வரைக்கும் யூஸ் பண்ணுவாங்க.

வெள்ளி, 15 அக்டோபர், 2010

BLUETOOTH பயன்பாடும் பாதுகாப்பும்.

வயர்கள் எதுவுமில்லாமலும், தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன.

நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது. குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாகவம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.

புளுடூத் இயக்கப்பட்ட சாதனங்கள் அவற்றின் எல்லைகளுக்குள் இருக்கையில் யாரும் இயக்காமலேயே ஒன்றையொன்று புரிந்து கொள்கின்றன. முகத்தை மூடிய நிலையிலும் கண்களை மட்டுமே கண்டு ரோமியோவை ஜூலியட் அடையாளம் கண்டது போல புளுடூத் உள்ள சாதனங்கள் ஒன்றையொன்று கண்டு கொள்கின்றன.
ஒரு எலக்ட்ரானிக் உரையாடல் அவற்றுக்குள் ஏற்படுகிறது. இந்த சாதனங்களைப் பயன்படுத்துபவர் எந்த பட்டனையும் இதற்கென அழுத்த வேண்டியதில்லை. இந்த எலக்ட்ரானிக் உரையாடல் இரண்டு அல்லது மூன்று சாதனங்களுக்கிடையே ஏற்பட்டவுடன் (அவை கம்ப்யூட்டர் சிஸ்டமாகவோ, மொபைல் போனாகவோ, ஹெட்செட் ஆகவோ, பிரிண்டராகவோ இருக்கலாம்) அந்த சாதனங்கள் தங்களுக்குள் ஒரு நெட்வொர்க்கினை ஏற்படுத்திக் கொள்கின்றன. இதை பெர்சனல் ஏரியா நெட்வொர்க் எனக் கூறலாம். ஆங்கிலத்தில் இந்த நெட்வொர்க்கை PAN 0r piconet என அழைக்கின்றனர். இரண்டிற்கு இடையே ஏற்படும் இந்த நெட்வொர்க் அதே அறையில் மற்ற இரண்டிற்கு இடையே ஏற்படும் நெட்வொர்க்கால் பாதிக்கப்படுவதில்லை. இணைப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. இது ஒலி, போட்டோ, வீடியோ, பைல் என எதுவாகவும் இருக்கலாம்.

புளுடூத் பயன்படுத்தப்படும் சாதனங்கள்:

அன்றாட வாழ்வின் நடைமுறையை இந்த புளுடூத் இணைப்பு சந்தோஷப்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக புளுடூத் ஹெட்செட்கள் உங்களுடைய மொபைல் போன், ரேடியோ ஆகியவற்றுடன் வயர் எதுவுமின்றி இணைப்பு கொடுத்து செயல்பட வைக்கின்றன. மொபைல் போனில் இந்த வசதியைப் பெற A2DP (Advanced Audio Distribution Profile) என்ற தொழில் நுட்பம் இருக்க வேண்டும். ஹெட்செட்டும் அதே தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். பாடல்களை மட்டுமல்ல போனுக்கு வரும் அழைப்புகளையும் இதில் மேற்கொள்ளலாம்.

பிரிண்டர்களும் புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் இப்போது வடிவமைக்கப்படுகின்றன. உங்கள் மொபைல் போனில் போட்டோ ஒன்று எடுத்த பின்னர் அதனை அச்செடுக்க பிரிண்டருடன் இணைக்க வேண்டியதில்லை. பிரிண்டரையும் மொபைல் போனையும் புளுடூத் மூலம் இணைப்பை ஏற்படுத்தினால் போதும். கார்களை ஓட்டிச் செல்கையில் நம் மொபைல் போனுக்கு அழைப்பு வந்தால் யாரிடமிருந்து அழைப்பு வருகிறது என்பதனை எடுத்துக் காட்டி போனை எடுக்காமலேயே பேசச் செய்திடும் தொழில் நுட்பம் கொண்ட சாதனங்கள் வந்துள்ளன.

உள்ளே பயணம் செய்திடும் ஐந்து நபர்களின் போன்களை இவ்வாறு இணைத்து இயக்கலாம். அதே போல மொபைல் போனில் ஜி.பி.எஸ். ரிசீவர் இருந்தால் எக்ஸ்டெர்னல் ஜி.பி.எஸ். சாதனம் ஒன்றை புளுடூத் மூலம் இணைத்து தகவல்களைப் பெறலாம். இறுதியாக கம்ப்யூட்டர் இணைப்பைக் கூறலாம். உங்களுடைய மொபைல் போனை புளுடூத் மூலம் கம்ப்யூட்டருடன் இணைத்து பைல்களை அப்டேட் செய்திடலாம். புளுடூத் வசதி கொண்ட கீ போர்டுகளும் இப்போது வந்துவிட்டன. இவற்றையும் கம்ப்யூட்டர் மற்றும் செயல்பாட்டிற்கு ஏற்ப மொபைல் போனுடனும் இணைக்கலாம்.

புளுடூத் செக்யூரிட்டி:

எந்த நெட்வொர்க் இணைப்பு ஏற்படுத்தினாலும் அங்கே பாதுகாப்பு பிரச்னை ஏற்படுகிறது. இங்கும் அதே கதை தான். உங்கள் மொபைல் போனில் புளுடூத்தை இயக்கிவிட்டு சிறிது தூரம் காரிலோ ஸ்கூட்டரிலோ செல்லுங்கள். ஏதாவது இன்னொரு புளுடூத் சாதனம் குறுக்கிட்டு இணைப்பை ஏற்படுத்தும்.
உங்கள் போன் திரையில் இது போல ஒரு சாதனம் இந்த பைலை அனுப்பவா என்று கேட்கிறது? ஏற்றுக் கொள்கிறாயா? என்ற கேள்வி இருக்கும். உடனே இணைப்பைக் கட் செய்வதே நல்லது. ஏனென்றால் இது போல வரும் பைல்களில் வைரஸ் இருக்கும். எனவே தான் இணைப்பு இருந்தாலும் பைலை ஏற்றுக் கொள்ளும் அனுமதியை நாம் தரும்படி மொபைல் போனின் புளுடூத் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புளுடூத் மூலம் அடுத்த சாதனங்களைக் கைப்பற்றி கெடுப்பதை “bluejacking,” “bluebugging” மற்றும் Car Whisperer” என அழைக்கின்றனர். எனவே நம்பிக்கையான நபர் அல்லது மொபைல் போன் அல்லது சாதனம் என்று உறுதியாகத் தெரிந்தாலொழிய இத்தகைய இணைப்பை அனுமதிக்கக் கூடாது.

திங்கள், 11 அக்டோபர், 2010

த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!

த்ரிஷாவுக்கு நடிகை ஸ்ரேயா அட்வைஸ் மழை பொழிந்துள்ளார். ஆமாங்க… யோகா, தியானம் கற்றுக் கொண்டு அதை கடைபிடிப்பதால் நான் முன்பை விட அழகாகி விட்டேன்.

என்னை மாதிரி த்ரிஷாவும் கோவையில் உள்ள பிரபல யோகா மையத்தில் சில நாட்கள் தங்கி யோகா, தியானம் ‌கற்றுக் கொண்டு தினமும் கடைபிடிக்க வேண்டும் என்று தனது டுவிட்டரில் நடிகை ஸ்ரேயா குறிப்பிட்டிருக்கிறார்.

யோகா மூலம் தான் பெற்ற பலன் சக நடிகைக்கும், குறிப்பாக தனக்கும் கிடைக்க வேண்டும் என்று ஸ்ரேயா விரும்புவது த்ரிஷாவிற்கு ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும், மற்றொரு பக்கம் தான் ஏதோ தற்போது அழகில்லாதது மாதிரி ஸ்ரேயா ஒரு ‌தோற்றத்தை கோலிவுட்டில் உருவாக்க முயற்சிக்கிறார் எனும் பயமும் த்ரிஷாவை தொற்றிக் கொண்டுள்ளதாம்.

டைரியில் எழுதிய காதல் கவிதை கல்லூரி மாணவர் உயிரை பறித்தது

காதலியைப் பற்றி கவிதை எழுதி வைத்திருந்த டைரியை காட்டி சக மாணவன் மிரட்டியதால் வேதனையடைந்த மாணவர் கல்லூரி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சித்தூர் அடுத்த பலமனேர் பிரசாந்த் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் சந்தோஷ்குமார் (18). சித்தூர் முருகானம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி இன்டர்மீடியட் 2ம் ஆண்டு படித்து வந்தார்.


நேற்று மாலை விடுதி அறையில் மின்விசிறியில் சந்தோஷ்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சித்தூர் 2வது காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். இறந்த சந்தோஷ்குமார் தன்னுடன் படிக்கும் ஒரு மாணவியை காதலித்துள்ளார். சந்தோஷ்குமார் தினமும் டைரி எழுதும் பழக்கம் உள்ளவர். டைரியில் தனது காதல் விவகாரம், காதலியை பற்றி கவிதைகளையும் எழுதி உள்ளார்.

இந்நிலையில் இந்த டைரி, அதே கல்லூரியில் படிக்கும் மற்றொரு மாணவர் கையில் சிக்கியது. அந்த மாணவர், காதல் விவகாரங்கள் குறித்து சக மாணவர்களிடம் சொல்லப்போவதாக சந்தோஷ்குமாரை மிரட்டியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே இரு தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து எங்கே தன்னுடைய காதல் விவகாரம் வெளியே தெரிந்து விடுமோ என அஞ்சிய சந்தோஷ்குமார் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பொன்னி அரிசி பெயரைப் பயன்படுத்த மலேசிய நிறுவனத்துக்கு தடை!

Rice

கோலாலம்பூர்: தமிழகத்தின் பொன்னி அரிசி பெயரைப் பயன்படுத்த மலேசிய நிறுவனத்துக்கு அந் நாட்டு உயர் நீதிமன்றம்  தடை விதித்துள்ளது.

ஸ்யாரிகட் ஃபெய்சா என்ற மலேசிய நிறுவனம் 'பொன்னி' என்ற பெயரை 2006ல் பதிவு செய்து அரிசி விற்பனையில் ஈடுபட்டது. பொன்னி என்ற பெயருக்கான ட்ரேட்மார்க் தங்களுக்கு உரியது என்றும் அந்த நிறுவனம் சொந்தம் கொண்டாடியது.

இதை எதிர்த்து இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், இந்திய விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் சிலர் கடந்த ஜனவரி 22-ல் மலேசிய உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக தனது தீர்ப்பில் நீதிபதி அஸார் முகமது தெரிவித்துள்ளதாவது:

"பொன்னி என்பது தமிழகத்தில் காவிரியின் மற்றொரு பெயர். அந்தப் பகுதியில் விளையும் அரிசிக்கு பெயர்தான் பொன்னி. இதற்கான காப்புரிமை மற்றும் விற்பனை உரிமை தமிழகத்துக்கே உரி.து. அந்த வார்த்தையை மலேசிய நிறுவனம் பயன்படுத்துவது குழப்பத்தை ஏற்படுத்தும்.

எனவே, மலேசிய வர்த்தக இலச்சினைகளுக்கான பதிவேட்டில் இருந்து பொன்னி என்பது நீக்கப்பட வேண்டும். நீக்கப்பட்ட செய்தி மலேசிய அரசிதழிலும் வெளியிடப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

மலேசியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்த சுமார் 40,000 இந்தியர்களைக் காணவில்லை!

மலேசியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்த சுமார் 40,000 இந்தியர்களைக் காணவில்லை என்று அந்நாட்டு பிரதமர் நஜிப் டன் ரஸாக் தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய 39,046 இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் மலேசியாவில் உள்ளவர்களுடனேயே தங்கியிருக்க வேண்டும் அல்லது இந்தியாவுக்கு திரும்பியிருக்க வேண்டும் என நம்பப்படுவதாகவும், அரசு ஆவணங்களின்படி அவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
“இப்பிரச்சினை தொடர்பில் இந்தியாவுக்கு ஒரு பயணத்தை மேற்கொண்டு இந்திய அரசிடம் இவ்விடயம் தொடர்டபாக கேள்வி எழுப்பேன்.
இந்தியர்கள் சுற்றுலாப் பயணிகளாக மலேசியாவுக்கு வருவதை நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் தாராளமாக நடந்துகொள்ள விரும்புகிறோம்” என மலேசியா வந்த இந்திய ஊடகவியலாளர்களிடையே உரையாற்றிய பிரதமர் நஜிப் மேலும் தெரிவித்தார்

தடம் புரண்டது நெல்லை எக்ஸ்பிரஸ் : " எமர்ஜென்சி' பிரேக் பிடித்ததால் 1,500 பேர் தப்பினர்


திருச்சி:திருச்சி அருகே நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசி பெட்டி நேற்று அதிகாலை தடம் புரண்டது. "கார்டு' சமயோசிதமாகச் செயல்பட்டு, "எமர்ஜென்சி' பிரேக்கை பிடித்ததால் 1,500 பயணிகள் உயிர் தப்பினர். சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வரை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. லால்குடி அடுத்த வாளாடி அருகே மாந்துறை என்ற இடத்தில், அதிகாலை 2.15 மணிக்கு ரயிலின் கடைசி பெட்டி தடம் புரண்டது. ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக கடைசியாக, "கார்டு' பெட்டியுடன் இணைக்கப்பட்ட பெண்கள் பெட்டி தடம் புரண்டதால், அதிலிருந்த 40 பெண்களும் திடுக்கிட்டு விழித்தெழுந்து, அலறினர். தண்டவாளத்திலிருந்து இறங்கிய கடைசி பெட்டி சிலீப்பர் கட்டைகளை உடைத்துக் கொண்டு 1.5 கிலோமீட்டர் தூரம் சென்றது. ரயில் தடம் புரண்டதை உணர்ந்த, "கார்டு' ராஜசேகரன், "எமர்ஜென்சி' பிரேக்கை அடித்துவிட்டு, "வாக்கி-டாக்கி' மூலம் ரயில் இன்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவித்தார். ரயில் திருமணமேடு ரயில்வே கேட்டில் நிறுத்தப்பட்டது. "கார்டு' ராஜசேகரன் சமயோசிதமாகச் செயல்பட்டு ரயிலை நிறுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 1,500 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பெண்கள் பெட்டியிலிருந்த 40 பெண்களும் பத்திரமாக இறக்கப்பட்டு வேறு பெட்டிகளில் ஏற்றப்பட்டனர். மற்ற பெட்டிகளில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் அதிர்ச்சியுடன் ஓடி வந்து பார்த்தனர். ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோட்ட மேலாளர் வைத்தியலிங்கம், முதுநிலை பாதுகாப்பு கோட்ட மேலாளர் சுப்பையா, ரயில்வே எஸ்.பி., மோகன், ஜீயபுரம் டி.எஸ்.பி., கண்ணன் மற்றும் ரயில்வே ஊழியர்கள், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சிறப்பு ரயில் மூலம் சம்பவ இடத்துக்குச் சென்றனர். ரயில் தண்டவாளத்தில் வெல்டிங் விட்டுப்போனதால் விரிசல் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. பின், தடம் புரண்ட ரயில் பெட்டி கழற்றப்பட்டு, கோளாறு சரி செய்யப்பட்டது. அதன்பின், 5.30 மணிக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் புறப்பட்டுச் சென்றது. இதனால், சென்னையிலிருந்து புறப்பட்ட மலைக்கோட்டை, பாண்டியன், மங்களூர் ஆகிய எக்ஸ்பிரஸ்கள் ஆங்காங்கே புள்ளம்பாடி, காட்டூர், லால்குடி ஸ்டேஷன்களில் நிறுத்தப்பட்டன. தண்டவாளம் விரிசல் சரி செய்யப்பட்ட பிறகு, 3.15 மணி நேரம் தாமதமாக அனைத்து ரயில்களும் புறப்பட்டுச் சென்றன. திருவனந்தபுரம் - சென்னை செல்லும் அனந்தபுரி, மதுரை - நிஜாமுதீன் புறப்பட்ட சம்பக் கிராந்தி ஆகிய இரண்டு ரயில்களும் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக சென்னைக்குச் சென்றன. அதிகாலையில் நடந்த இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சீதோஷ்ணமா? நாசவேலையா? திருச்சி லால்குடி அருகே மட்டும் சில மாதங்களில் மூன்று முறை தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு சீதோஷ்ணம் நிலை காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், வேறு எந்த பகுதியிலும் இதுபோல் அடிக்கடி தண்டவாளம் விரிசல் ஏற்பட்டதாக தெரியவில்லை. சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதா அல்லது நாசவேலை காரணமா என்பது குறித்து ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கோயில்களில் நடக்கும் போலி திருமணங்கள்!


"பெற்றோர் சம்மதத்துடன் அம்மி மிதித்து அருந் ததி பார்த்து நடக்கிற திரு மணங்களையும் பார்த்திருக் கிறோம். தெய்வத்தை சாட்சியாக வைத்து கோயில்களில் நடக்கிற திருமணங்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால் தெய்வத்தையே ஏமாற்றி நடக்கும் திருமணங்கள் இந்து கோயில்களில் தற்போது அதிகமாக நடக்கிறது' என்று பகீர் குற்றச்சாட்டுகளை எழுப்புகிறார்கள் பண் பாட்டின் மீது அக்கறை கொண்ட சிலர்.

குமரி மாவட்டத்தில் அறநிலையத்துறை யின் கீழ் உள்ள மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், நாகர்கோயில் நாகராஜா கோயில், குமாரகோயில் போன்றவற்றில்தான் இத்தகைய திருமணங்கள் அதிகமாக நடக்கிறதாம்.

""கோயில் முறைப்படி திருமணங்கள் நடத் துவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. மண மகனுக்கும் மணமகளுக்கும் இதுதான் முதல் திருமணம் என்றும், அவர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்தான் என்றும் சம்பந்தப்பட்ட கிராம அதிகாரியிடம் இருந்து சான்றிதழ் வாங்கி வந்தால் மட்டுமே கோயிலில் திரு மணத்தை நடத்திவைத்து அதற்கான பதிவுச் சான்றிதழைக் கொடுப்பார்கள்.

ஆனால் தற்போது கோயில்களில் நடக்கும் திருமணங்களில் பெரும்பாலும் போலிச் சான்றிதழை கொடுத்தும், கோயில் நிர்வாகிகளையும் தெய்வத் தையும் ஏமாற்றியும்தான் பல திருமணங்கள் நடக்கிறது'' என்கிறார் அறங்காவல்குழு முன்னாள் உறுப்பினர் கோபாலகிருஷ்ணன்.

""திருமண பந்தத்திற்குப் பிறகு கணவன்-மனைவிக் கிடையே எந்தவொரு மனஸ்தாப மும் ஏற்படாமல் இருக்கவும், எந்தத் துன்பங்கள் வந்தாலும் சாட்சி யாக வைத்து தாலிகட்டிய அந்த தெய்வம் காப்பாற்றும் என்ற நம் பிக்கையிலும்தான் கோயில்களில் வைத்துத் திருமணங்களை நடத்து கிறோம்.

ஆனால் இன்றைக்கு கோயில்களில் திருமணம் என்பது ஒரு மோசடி தொழிலாகவே உள்ளது. உதாரணமாக, துணிக்கடை ஒன்றில் வேலைபார்த்த கேரளாவைச் சேர்ந்த பையனுக்கும் குலசேகரத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க அந்த இந்து கோயிலில் ஏற் பாடுகள் நடந்தன. கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டதன்படி பையனும், பெண்ணும் இதுதான் முதல் திரு மணம் என்றும், தாங்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் என்றும் கிராம அதிகாரியின் சான்றிதழை அதிகாரியிடம் கொடுத்து திருமணப் பதிவுக்காக ரூ.300/-ஐயும் கட்டினார் கள். ஆனால் என்ன நடந்தது தெரியுமா? தாலி கட்டும் நேரத்தில் கேரளாவில் இருந்து பதட்டமாய் ஓடிவந்த பையனின் முதல் மனைவி, திருமணத்தை தடுத்து நிறுத்தினாள். அதன் பிறகுதான் அவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்பதும், அவன் கிறிஸ்தவ மதத் தைச் சார்ந்தவன் என் பதும், அவன் கொடுத்த சான்றிதழ் போலி என் பதும் தெரிய வந்தது.

முதல் மனைவி அல்லது முதல் கணவன் இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்துகொள்வது, இன்னொருத்தருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்வது என்பதெல்லாம் இப்போது கோயில்களில்தான் அதிகம் நடக்கிறது.

சான்றிதழ் உண்மையா என்று கோயில் நிர்வாகிகள் விசாரிக்காமல் அவசர கதியில் திருமணத்தை நடத்திவைத்து, கோயிலில் இருந்து திருமண பதிவுச் சான்றிதழையும் கொடுத்துவிடுகிறார்கள். இது தமிழ் தெய்வத்தையும் தமிழ்ப் பண்பாட்டையும் ஒருசேர ஏமாற்றும் மோசடி இல்லையா?

தமிழ்நாட்டில் உள்ளவர்களும் இப்படி கோயிலில் மோசடித் திருமணங்களை செய்து கொள்கிறார்கள். இனியாவது அறநிலையத் துறை அதிகாரிகள் திருமண விவகாரங்களில் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்'' என்றார் கவலையாக.

இந்து தேசிய காங்கிரஸின் மாநில தலைவர் மதுசூதன பெருமாளோ, ""கள்ளக்காதல் திருமணங்களும், முறையற்ற திரு மணங்களும் கேரளாவில் பாறசாலையில் உள்ள பதிவு அலு வலகத்தில்தான் நடத்தி வந்தனர். தற்போது அங்கு கெடுபிடி அதிகரித்ததால் தமிழகத்தில் உள்ள கோயில்களை நோக்கி போலி சான்றிதழ்களுடன் படையெடுக்கிறார்கள்.

பணத்தை வாங்கிக் கொண்டு இப்படிப்பட்டவர்களும், போலி சான்றிதழ் கொடுக்கிற கிராம அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். இது முதல் திருமணம்தானா? திருமணத்திற்கு எல்லா தகுதிகளும் இருக்கிறதா என்று விசாரித்துதான் அந்த அதிகாரி சான்றிதழ் கொடுக்க வேண்டும். அந்தச் சான்றிதழ் உண்மைதானா என கோயில் நிர்வாகிகளும் விசாரித்துதான் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும். போலி சான்றிதழ் கொடுத்து இப்படி தெய்வத்தை ஏமாற்றி திருமணம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார் காரமாக.

இதுபற்றி கோயில் அதிகாரிகளிடம் கேட்டபோது... ""திருமணத்திற்கு முந்தின நாள்தான் சான்றிதழை கொண்டு வந்து கொடுக்கிறார்கள். அதனால் அந்தச் சான்றிதழ் உண்மைதானா என்று விசாரிக்க முடியாமல் போகிறது. பொதுவாக கேரளாவில் இருந்து வாங்கி வரும் சான்றிதழை அங்கு போய் விசாரிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பலர் வாங்கி வரும் சான்றிதழ்கள் போலி என தெரிந்துகொண்டு சம்பந் தப்பட்ட கிராம அதிகாரியை தொடர்புகொண்டு கேட்டால் "அந்தச் சான்றிதழை விசாரித்துதான் கொடுத்திருக்கிறேன்' என்கிறார் கள். இதனால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. திருமணத் தை நடத்திதான் வைக்கிறோம். போலி சான்றிதழ் கொடுக்கும் கிராம அதிகாரிகள்தான் இதற்குப் பொறுப்பு'' என்றார்கள் கைபிசைந்தபடியே.

"முறையற்ற திருமணங்களை நடத்தி வைக்கும் கோயில் அதிகாரிகளுக்கு தண்டனை' என அரசு அறிவித்தால்... இதுபோன்ற குழறுபடி களுக்கு முற்றுப்புள்ளி விழும் என்பது பலரின் எதிர்பார்ப்பு.

லிபியாவில் விற்கப்பட்ட தமிழர்கள்!

பிறந்த நாட்டில் அழிக்கப்படுவதும், அயல் நாட்டில் அடிமைப்படுவதும் தமிழர்களுக்கு ஒன்றும் புதிதல்ல.

இதுநாள் வரை வயிற்றுப் பிழைப்புக்காக மலேசியா, சிங்கப்பூர், சவூதி, துபாய் நாடுகளுக்குப் பஞ்சம் பிழைக்கப் போய் தமிழர்கள் கஷ்டப்படுவது பற்றித்தான் செய்திகள் வந்து கொண்டிருந்தன.
தற்போது ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள அரபு நாடான லிபியாவில் 80 தமிழர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு, கொலை உயிரும் குற்றுயிருமாய் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டு தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களின் குடும்பத்தார்கள்.

மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, கடலூர் மாவட்டங் களைச் சேர்ந்தவர்கள்தான் இதில் அதிகம். வீட்டுச் சிறையிலிருந்து எப்படியோ தப்பி, ஊருக்கு வந்திருக்கும் ஒரே நபரான இளையாங்குடி அருகேயுள்ள ஆழிமதுரையைச் சேர்ந்த கோபி கண்ணன் நம்மிடம், ""மேலூர்ல வள்ளியம்ஸ் என்ற பெயரில் டிராவல்ஸ் நடத்தும் சக்திவேல் என்பவர், ஒவ்வொரு ஊரா வந்து, "லிபியா நாட்டுக்கு கட்டுமான வேலைக்கு லேபர் தேவைப்படுறாங்க. மூணுவேளை சாப்பாடு... தங்குமிடத் தோட மாசம் 20 ஆயிரம் ரூபா சம்பளம்'னு லோக்கல் ஏஜெண்டுகள் மூலமா நம்பிக்கையாச் சொன்னாரு. அதோடதான் அவரு கட்டச் சொன்ன ஒண்ணரை லட்ச ரூபாயை கடன் வாங்கிக் கட்டினோம்.

என்னைப் போலவே பல ஊர்லயிருந்தும் ஆட்களை செலக்ட் செஞ்சு, போன டிசம்பர் மாசம் மும்பைக்கு கூட்டிப் போய் லிபியாவுக்கு விமானம் ஏத்திவிட்டாங்க.

அங்கே அந்த நாட்டோட தலைநகரம் திருபோலிங் கிற நகரத்திலிருந்து 1500 கி.மீ. தூரத்துல உள்ள ஒரு ஊருக்கு அழைச்சுட்டு போனாங்க. அங்கு 4 பேர் மட்டும் தங்கக்கூடிய ரூம்ல பத்து, பத்துப் பேரா தங்க வச்சாங்க. போன ரெண்டு மூணு நாட்கள் மட்டும்தான் காலையில ரொட்டி, மதியம் சாதம் கொடுத்தாங்க. அப்புறம் ஒருவேளை சாப்பாடுதான். குடிக்கிற தண்ணி மஞ்சக் கலர்ல இருக்கும். அந்தப் பகுதியில் நிறைய கட்டிடங்கள் கட்டும் வேலைய எங்க கம்பெனி செய்தது. காலையிலேயே சைட்டுக்கு அழைச்சுட்டு போய் கடுமையா வேலை வாங்குவாங்க. சரியான சாப்பாடு இல்லாததால் மயங்கி மயங்கி தொப்புத் தொப்புனு நம்மாளுங்க கீழே விழுந்துடு வாங்க. உடனே மூஞ்சியில தண்ணிய தெளிச்சு மறுபடியும் வேலை செய்யச் சொல்வாங்க. நைட்டுக்குத்தான் ரூமுக்கு கொண்டு விடுவாங்க. சரி வந்தது வந்தாச்சு. பட்ட கடனை அடைக் கிறவரை வேலை பார்ப்போம்னு பல்லை கடிச்சுகிட்டு வேலை பார்த்தோம். மாசம் ஒண்ணாச்சு, ரெண் டாச்சு, சம்பளம்னு எதுவும் தர்ற மாதிரி தெரியலை. எங்களோட அரபியிடம் கேட்டோம்.

அதுக்கு அங்கிருந்த மேனேஜர்கள், "உங்களுக்கு சம்பளம்னு எதுவும் கெடை யாது. உங்க நாட்டு ஏஜெண்ட் உங்க ஒவ் வொருத்தரையும் ஒரு லட்ச ரூபாய்னு ரேட் போட்டு முன்னாடியே பணத்தை வாங் கிட்டார். நீங்க எல்லோரும் எங்களோட அடிமைகள் (அடிமை பழக்கம் இன்னும் ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கிறதாம்) 2 வருடம் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். நீங்கள் யாரிடமும் புகார் கூற முடியாது. எங்கேயும் போக முடியாது. நாங்கள் கொடுக்கிற சாப்பாட்டை சாப் பிட்டுக் கொண்டு ஒழுங்காக வேலையைப் பாருங்கள்' என்று எச்சரித்தார்கள். எங்களிடமும் பணம் வாங்கிக் கொண்டு, இங்குள்ள அரபியிடமும் பணம் வாங்கிக் கொண்டு மேலூர் ஏஜெண்ட் எங்களை கொத்தடிமையாக விற்ற விஷயம் அப்போதுதான் தெரிந்தது.

தொடர்ந்து கஷ்டமான வேலைகள் கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த உணவு ஒத்துக் கொள்ளாமல் எனக்கு கை கால்கள் செயலிழந்துவிட்டன. செத்து விடுவே னோ என்ற பயத்தில் என்னை அங்கிருந்த மருத்துவமனையில் சேர்ந்தார்கள்.

கம்பெனிக்காரர்களிடம், "என்னை ஊருக்கு அனுப்பி வையுங்கள்' என்று கெஞ்சி னேன். "உன்னை மட்டும் எப்படி அனுப்புவது? 2 வருட காண்ட்ராக்ட் முடியலையே' என்ற னர். பிறகு என் நிலையை பார்த்து, "சரி, உன்னை மட்டும் அனுப்புகிறோம். டிக்கெட் நீயே எடுத்துக் கொள்ள வேண்டும்' என்றனர். அதோடு ஊருக்கு போன் போட்டு டிக்கெட் எடுத்து அனுப்பச் சொன்னேன். அதில்தான் வந்து சேர்ந்தேன்'' என்றார் கோபிகண்ணன்.

அவருடைய உறவினர் சிலர் இன்னமும் அங்கு மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். சிக்கியிருந்த 80 பேரில் 20 பேர் அங்கிருந்து தப்பித்து லிபியா நாட்டுக்குள் எங்கோ ஒளிந்திருக்கிறார்களாம். ஆட்கள் தப்பிச் சென்றதால் மீதமுள்ளவர்களையும் கடுமையாக சித்ரவதை செய்து கொண்டிருக் கின்றானாம் அந்த அரபி.

முதுகுளத்தூர் அருகிலுள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்த சண்முகவள்ளி, ""ஊருல பொழப்பு தழப்பு இல்லேன்னுதான் வட்டிவாசிக்கு வாங்கி என் மகன் சந்திரசேகரை லிபியா நாட்டுக்கு அனுப்பி வச்சேன். கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கு. போய் கொஞ்ச நாள்தான் எங்ககிட்டே பேசினான். இப்ப ஒரு தொடர்பும் இல்லை. அரசாங்கம்தான் என் மகனை உசுரோட கொண்டு வந்து சேர்க்கணும்'' என்று அழுதார்.

அதே ஊரைச் சேர்ந்த ராக்கு என்ற பெண் மணி, ""என் மகனும் அங்க தான் கஷ்டப்படுறான். ஏற்கனவே வாங்குன கடனை அடைக்க முடியலை. இப்ப எம்மகன் என்ன செய்யுறானோ என்பதை நினைச்சு தூங்க முடியலைய்யா'' என்றார். லிபியாவில் சபா என்ற நகரத்தில்தான் "எலர்டு' என்ற இவர்கள் வேலை பார்க்கும் நிறுவனம் உள்ளதாம். அங்கு இவர்களிடம் வேலை வாங்கும் சூப்பர்வைசர்கள் எல்லோரும் துப்பாக்கியோடு அலைகிறார்களாம்.

லிபியா அதிபர் கடாபியின் அரசாங்கம்தான் தொழிலாளர் நலனிலோ வெளிநாட்டுக்காரர்கள் பற்றியோ துளிகூட கவலைப்படுவதில்லை. இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு தமிழர்கள் படும் வேதனை தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பத்தினர் சிலர் மொத்தமாக கிளம்பி வந்து இராமநாதபுரம் கலெக்டரிடம் மனு கொடுத்தார்கள். இதை மத்திய வெளியுறவுத்துறையின் கவனத்துக்கு கொண்டு சென்று வீட்டு சிறையிலிருக்கும் தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளார் கலெக்டர்.

அந்த 80 தமிழர்களும் பத்திரமாக தாயகம் திரும்பி வர வேண்டுமென்பதுதான் நம்முடைய கவலையும்.

இராணுவ ரகசியம்!

""இங்க பாரு... ஒழுங்கா ராணுவ ரகசியங்களை அப்பப்போ எங்களுக்கு இன்ஃபர்மேஷன் கொடுத்துடு... இல்லைன்னா...''

""இல்லைன்னா?''

""இல்லைன்னா உன் ரகசியத்தை ராணுவம் மட்டுமில்ல, இந்த நாடே தெரிஞ்சுக்கும் பரவாயில்லயா? ம்?''

""சார்... சார்... வேணாம் சார்... ப்ளீஸ் சார்... நீங்க சொல்றபடி நடந்துக்குறேன் சார்''.

-இப்படி நாட்டையே சீர்குலைக்கும் சட்டவிரோத கும்பல் களுக்கு துணை போகும் ராணுவ இளைஞர்கள் அதிகரித்துக் கொண்டே போவார்கள்... என்று அதிர்ச்சி குண்டை வீசுகிறார்கள் சி.பி.சி.ஐ.டி.யின் உயரதிகாரிகள்.

அப்படி எந்த சீக்ரெட் வெளிவந்து விடும் என்று நடுங்கு வார்கள் இந்த ராணுவ இளைஞர்கள்? ரகசியமாக விசாரித்தோம். ""அஞ்சாவது படிச்சவனுக்கு கூட 12-ஆம் வகுப்பு பாஸ் பண்ணின மாதிரி போலி சான்றிதழ் தயாரிச்சு விற்குற 55 வயது மணிங்கு றவனை புடிச்சோம். வேலூர் மாவட்டம் ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த இவன் 15 வருஷத்துக்கு மேல இந்த படுபாதக பிஸின ஸைதான் பண்ணிக்கிட்டிருந்துருக்கான்.

தீவிரமா விசாரிச்சப்போதான் அவன் சொன்ன தகவல்கள் பகீர்னு இருந்துச்சு. அதாவது யார் யாரெல்லாம் இவன்கிட்ட போலி சான்றிதழ் வாங்கிட்டு போனாங்களோ... அந்த இளைஞர்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் ராணுவத்துல வேலைக்கு சேர்ந்துருக்காங்க. சிலர் இப்போ ரிட்டையர்டே ஆகி பென்ஷன் வாங்கிக்கிட்டிருக்காங்க'' என்று சொல்ல நமக்கும் பகீரென் றிருந்தது.
""இந்த மோசடிகளை எப்படியோ தெரிஞ்சுக்கிட்ட சட்டவிரோத கும்பல்கள்... மோசடியாக சேர்ந்த ராணுவ இளைஞர்களை ப்ளாக்மெயில் பண்ணியே ராணுவத்திலும்... நம் நாட்டின் ரகசியங்களையும் மோப்பம் பிடித்திருக்க வாய்ப்பிருக்கு. அதனாலதான் இந்த கேஸை ரொம்ப சீரிய ஸாகவே விசாரிச்சிக்கிட்டிருக்கோம்'' என்று கண்கள் சிவக்கும் உயரதிகாரிகள், ""இந்த போலி சர்டிஃபிகேட் விவகாரம் சில ராணுவ உயரதிகாரிகளுக்கு தெரிஞ்சும் கண்டுக் கிறதில்லை. சமீபத்தில் வேலூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்ங்குற இளைஞன் ராணுவ வீரர் செலக்ஷனுக்கு போயிருக்கான்.

மூன்று தடவை போலி சான்றிதழ்னு கண்டுபிடிச்சி விரட்டியிருக்காங்க. ஆனா, அடுத்த செலக்ஷனுக்கு போகவும் ரெடியா இருக்கான். காரணம், முதல் தடவையிலேயே அவன் மேல எந்த நடவடிக்கையும் எடுக்காத தால்தான். 50 ஆயிரம் தந்தா ராணுவத்துல இருக்குற அதிகாரிகளே சிலர் ராணுவத்தில் வேலை வாங்கித் தர்றாங்களாம். இப்படி இருந்தா நாடு எப்படி உருப்படும்'' என்று தலை யில் அடித்துக்கொள்கிறார்கள்.

போலி சான்றிதழ் மணியை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் அண்ணா துரையோ ""விசாரணையில் ராணுவத்திலுள்ள பலர் சிக்குவார்கள் போலிருக்கிறது'' என் கிறார்.

உண்மைதான். ராணுவ அதிகாரிகளின் போலி சர்டிஃபிகேட் ரகசியத்தை அம்பலப் படுத்தவில்லை என்றால் நம் நாட்டின் ரகசியங்கள் ரகசியமாக அம்பலப்பட்டுக் கொண்டிருக்கும்.

8 மாத கர்ப்பவதியான திவ்யா.

தனக்கு தலைச்சனாக ஆண்குழந்தைதான் பிறக்கு மென்று திடமாக நம்பினார், 8 மாத கர்ப்பவதியான திவ்யா.

பிறக்கப் போகும் குழந் தைக்காக பொம்மைகளை வாங்கிக் குவித்தார். ""என் மகன் அழகாக இருப்பான், அறிவாக இருப்பான், திருப் பதி பெருமாள் துணை இருப் பார். சுகப்பிரசவமாகும்'' என்று தாய் தந்தையோடு திருப்பதி சென்று நிறைய பிரசாத லட்டுகளோடு வந்தார். வரும்போதே கடுமையான இருமல்.

கர்ப்பிணி மகள் திவ்யா வை, சேலம் அன்னதானப் பட்டியில் உள்ள பாரதி மருத் துவமனைக்கு அழைத்துச் சென்றார் இளம்பிள்ளை வளையசெட்டிபட்டியில் வசிக்கும் ராதாகிருஷ்ணன்.

""வறட்டு இருமல்... ஒரு வாரம் மாத்திரை சாப்பிட் டால் சரியாப் போய்விடும்!'' -சிகிச்சை அளித்தார் டாக்டர் பாரதி. சரியாகவில்லை. பிறகு?

""அப்புறம் அட்மிட் செய்தாங்க. ரெண்டாயிரம் ரூபாய்க்கு மருந்து மாத்திரை எழுதிக் கொடுத்தாங்க. மூணாம் நாள் வார்டுல இருந்து ஐ.சி. யூனிட்டுக்கு கூட்டிப் போனாங்க. இரும லுக்கே ஐ.சி. யூனிட்டானு கேட்டோம். "பிரசவ கேஸ் இல்லையா... ஓவர் டோஸ் கொடுக்கக் கூடாது. அதனாலதான் அங்கே கூட்டிப் போறோம்'னு சொன்னாங்க. கொஞ்ச நேரத்தில... பதட்டத்தோட ஓடிவந்த நர்ஸ் "உங்க பொண்ணுக்கு பன்றிக் காய்ச்சல்... ஆம்புலன்ஸ்ல கோவை கே.எம்.சி.க்கு கொண்டு போங்க'னு சொன்னுச்சு. கொண்டு போனோம். அங்கே சேத்துக்கலை. கே.ஜி.லதான் சேர்க்க முடிஞ்சது. அங்கே... 10 நிமிஷம்தான்... என் மகள் இறந்துவிட்டாள்!'' தேம்பினார் திவ்யாவின் தந்தை ராதாகிருஷ்ணன்.


""கோவை கே.ஜி. ஆஸ்பிடல்ல தந்த டெம்பரரி டெத் சர்டிஃபிகேட்ல "நுரையீரலில் தண்ணி தேங்கி நின்றது' என்று இருக்கிறது. இதுக்கு என்ன அர்த்தம்? பன்றிக் காய்ச்சல் இல்லைனு தானே அர்த்தம். ஏதோ தப்பா சிகிச்சை கொடுத்து என் அக்கா சாவுக்கு காரணமாக இருந்தது பாரதி ஹாஸ்பிடல்தான். என் அக்காவுக்கு ஏற்பட்ட நிலைமை வேற யாருக்கும் ஏற்படக்கூடாது. முதல்வர் தனிப் பிரிவுக்கும் சுகாதாரத்துறை அமைச்சருக்கும் புகார் கொடுத்திருக்கிறோம்!'' என்கிறார் திவ்யாவின் தம்பி.

பாரதி மருத்துவமனைக்குச் சென்றோம்.

டாக்டர் பாரதியின் கணவரும் அந்த மருத்துவமனையின் எம்.டி.யுமான சந்திரசேகரிடம் கேட்டோம்.

""சுகாதாரத்துறை ஜெ.டி. விசாரணை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நாங்கள் மீடியாவிடம் ஏதும் சொல்லக்கூடாது!'' என்றார் அவர். பாரதி மருத்துவமனை பற்றி அப்பகுதி மக்களிடம் விசாரித்தோம்.

""பிரசவத்துக்கு பேர் பெற்ற மருத்துவமனை. மற்றபடி பணம் பிடுங்கிற ஆஸ்பத்திரிதான். தானம் கொடுக்கும் ரத்தத்தைக் கூட அதிக விலைக்கு வியாபாரம் செய்றவங்கதான்...!'' என்கிறார்கள் மக்கள்.

பாதுகாப்பாக 'விளையாடினால்' எல்லோருக்கும் நல்லதுதானே...!

காமன்வெல்த் போட்டிக்கான கேம்ஸ் வில்லேஜில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் வில்லேஜ் அறைகளில் உள்ள டாய்லெட்டுகள் மூலமாக சாக்கடைகளில் வந்து சேர ஆரம்பித்துள்ளன. இதுகுறித்து காமன்வெல்த் போட்டி அமைப்பின் தலைவர் மைக்கேல் பென்னலிடம் கேட்டபோது நல்ல செய்தி தான் என்று கூறியுள்ளார்.

காமன்வெல்த் போட்டிக்காக காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த அணிகள் டெல்லி யில் குவிந்துள்ளன.அனைத்து வீரர்கள், வீராங்கனைகள், அதிகாரிகள் கேம்ஸ் வில்லேஜில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த அறைகளில் உள்ள டாய்லெட்டுகள் மூலம் ஏராளமான ஆணுறைகள் வந்து குவியத் தொடங்கியுள்ளனவாம். ஆணுறைகளைப் பயன்படுத்தி விட்டு அவற்றை பயன்படுத்தியோர், அதை டாய்லெட்டுகளில் போட்டு ஃபிளஸ் அவுட் செய்து விடுகின்றனர். இதனால் கழிப்பறைகளில் அடைப்பு ஏற்படுகிறது. அடைப்பை சரி செய்யப் போனபோதுதான் டாய்லெட்டுகளில் ஆணுறைகள் போடப்பட்டதே தெரிய வந்தது.

இது லேசான சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆனால் பென்னலோ இதை நல்ல செய்திதானே என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது வாய் விட்டுச் சிரித்த அவர், இதைப் போய் கவலையுடன் கேட்கிறீர்களே. உண்மையில் இது நல்ல செய்தி. பாதுகாப்பான செக்ஸ் உறவு மேற்கொள்ளப்படுகிறது என்பது நல்ல செய்திதானே.

பாதுகாப்பான முறையில் எல்லாம் இருந்தால்தான் வீரர்கள், வீராங்கனைகளால் போட்டியில் சிறப்பாக பங்கேற்க முடியும்.அந்த வகையில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் பென்னல்.

அத்தோடு நிற்காத பென்னல் மேலும் சிரித்தபடி, அதை விட முக்கியமாக அவர்கள் தாங்கள் பயன்படுத்தும் டாய்லெட்களை சுத்தப்படுத்துகிறார்கள் என்பதும் இதன் மூலம் தெரிகிறது. அதுவும் நல்லதுதான் என்றார்.

பின்னர் சற்று சீரியஸாக அவர் மாறி, பல ஆண்டுகளுக்கு முன்பு இது ஒரு சர்ச்சையான விஷயமாக இருந்தது. ஆனால் இப்போது பாதுகாப்பான உடலுறவு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இது ஆரோக்கியமான விஷயம்தான் என்றார்.

பாதுகாப்பாக 'விளையாடினால்' எல்லோருக்கும் நல்லதுதானே...!

மீன்பிடி படகில் 4000 கிலோ மீட்டர் பயணம்: இலங்கை அகதிகளை ரகசியமாக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து சென்றது எப்படி?

கைதான புதுச்சேரி தி.மு.க. கவுன்சிலரிடம் நடந்த விசாரணையில் தகவல்

புதுச்சேரியில் இருந்து 3829 கி.மீ. தூரத்தில் உள்ள ஆஸ்திரேலியா நாட்டிற்கு சொந்தமான கிறிஸ்துமஸ் தீவுக்கு இலங்கை அகதிகளை, தி.மு.க. கவுன்சிலர் சக்திவேல் எப்படி அழைத்து சென்றார் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு, இலங்கை அகதிகளை கள்ளதனமாக, விசைபடகு மூலம் புதுச்சேரி நபர்கள் அழைத்து செல்வதாக மத்திய நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக புதுச்சேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினத்தை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் சக்திவேலுக்கு சொந்தமான விசைபடகில் இலங்கை அகதிகளை, பலமுறை ஆஸ்திரேலியா நாட்டிற்கு அழைத்து சென்று இருப்பது தெரியவந்தது. மேலும் கவுன்சிலர் சக்திவேலுக்கு உடந்தையாக லோகு, அய்யப்பன், ஜீவா, சிலோன் கண்ணன் ஆகியோர் இருந்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த 4 பேரையும் சி.ஐ.டி. போலீசார் அதிரடியாக கைது செய்து காலாப்பட்டு மத்திய ஜெயிலில் அடைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களை சி.ஐ.டி. மற்றும் உளவுத்துறை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் விசாரணையில் வெளியான பரபரப்பான தகவல்கள் விவரம் வருமாறு:-கவுன்சிலர் சக்திவேலுக்கு, இலங்கையை சேர்ந்த சில இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது. இலங்கையை சேர்ந்த அகதிகளை ஆஸ்திரேலியா நாட்டிற்கு சொந்தமான கிறிஸ்துமஸ் தீவுகளுக்கு, ரகசியமாக அழைத்து சென்றால் அதிக பணம் தருவதாக அந்த இயக்கம் சக்திவேலிடம் கூறியது.

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சொந்தமாக சுமார் 2000 தீவுகள் உள்ளது. இந்த தீவுகள் அனைத்தும் ஆஸ்திரேலியா நாட்டிற்கு அருகே இல்லாமல் சுமார் 1000 கி.மீ.க்கு மேல் தொலைவில் அமைந்துள்ளது. கிறிஸ்துமஸ் தீவு, கிலிங் தீவு ஆகியவைதான் இந்தியாவில் அருகே உள்ளன. இதில் புதுச்சேரியில் இருந்து சுமார் 3829 கி.மீ. தூரத்தில் கிறிஸ்துமஸ் தீவு இருக்கிறது.

கிறிஸ்துமஸ் தீவில் இருந்து 750 கி.மீ. தூரத்தில் கிலிங் தீவு அமைந்து உள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் தீவு இந்தோனேசியா நாட்டிற்கு மிக அருகில் உள்ளது. எனவே இலங்கை அகதிகளை கிறிஸ்துமஸ் தீவில் இறக்கி விட முடிவு செய்யப்பட்டது. இதற்கு சக்திவேல் சம்மதம் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா நாட்டிற்கு அனுப்ப வேண்டிய நபர்களை, யாருக்கும் எந்த சந்தேகமும் வராத வகையில் தேங்காய் திட்டு துறைமுகத்திற்கு கவுன்சிலர் சக்திவேல் அழைத்து வந்து விடுவார். பின்பு அங்கு தயாராக இருக்கும் விசைபடகில் அவர்களை ஏற்றிவிடுவார். ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்கும் சக்திவாய்ந்த அந்த படகில் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுகள், டீசல், தண்ணீர் ஆகியவை இருக்கும்.

இந்த படகில் இலங்கை அகதிகளுடன் கவுன்சிலர் சக்திவேலின் ஆதரவாளர்கள் கண்ணன், ஜீவா செல்வார்கள். படகு கடலில் செல்லும் போது யாருக்கும் எந்த சந்தேகமும் வராத வகையில் இலங்கை அகதிகளை அவர்கள் அழைத்து செல்வார்கள். மேலும் ஏதாவது பிரச்சினை என்றால் செயற்கை கோள் போன் மூலம் புதுச்சேரியில் இருக்கும் தங்களது ஆட்களிடம் அவர்கள் தொடர்பு கொண்டு பேசுவார்கள்.

படகு கிறிஸ்துமஸ் தீவை அடைந்தவுடன் அங்கு தயாராக இருக்கும் மற்றொரு படகில் இலங்கை அகதிகளை இறக்கி விட்டு விட்டு புதுச்சேரிக்கு திரும்பி விடுவார்கள். ஒரு முறை இலங்கை அகதிகளை அழைத்து சென்று இறக்கி விட்டு வந்தால், சக்திவேல் கைக்கு லட்சக்கணக்கான பணம் வந்து சேரும்.

இதில் கிறிஸ்துமஸ் தீவுக்கு செல்லும் போது ஏதாவது பிரச்சினை வந்தால், அதன் அருகில் உள்ள கிலிங் தீவில் இலங்கை அகதிகளை இறக்கி விடுவார்கள். இங்கு இறக்கி விட்டால் இலங்கை அகதிகளுக்கு ராஜா வாழ்க்கை தான். அங்குள்ள மக்கள் எதையும் கேட்க மாட்டார்கள். பின்பு அவர்கள் அந்த நாட்டு குடியுரிமைக்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.

கிலிங் தீவு ஆஸ்திரேலியா நாட்டிற்கு செல்லபிள்ளையாக கருதப்படுகிறது. சுற்றுலா செல்வதற்கு உகந்த இடம். இங்கு 200 பேர் தான் வசித்து வருகிறார்கள். அங்கு 5 போலீசார் மட்டும் தான் உள்ளனர். 200 பேர் கொண்ட மக்கள் தொகைக்கு மொத்தம் 5 போலீசார் என்றால், அந்த தீவு எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கிறிஸ்துமஸ் தீவில் இறக்கி விடும் இலங்கை அகதிகளை, அந்த நாட்டு அரசு அவர்களை திருப்பி அனுப்பி வைக்காது. அங்குள்ள முகாமில் அவர்கள் அடைக்கப்படுவார்கள். அப்போது 90 நாட்களுக்குள் ஆஸ்திரேலியா நாட்டு குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

சிறிது நாட்கள் கழித்து அவர்களுக்கு குடியுரிமை கிடைத்தவுடன் அவர்கள் அங்கேயே தங்கி வேலை பார்க்கலாம். ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் போது அங்கு குடியுரிமை கிடைப்பது மிகவும் கடினம். ஆனால் கிறிஸ்துமஸ் தீவிற்கு சென்றால் எளிதில் குடியுரிமை கிடைப்பதால், இலங்கை அகதிகள் அதிகம் பேர் அங்கு சென்று உள்ளனர்.

மேலும் இலங்கை அகதிகளை யார் கண்ணிலும் சிக்க வைக்காமல், கிறிஸ்துமஸ் தீவிற்கு அனுப்பி வைப்பதால் அகதிகள் மத்தியில் சிறப்பு மிக்கவராக கவுன்சிலர் சக்திவேல் திகழ்ந்து வந்தார். இந்த நிலையில் 7-வது முறையாக இலங்கை அகதிகளை அனுப்பி வைக்கும் போது, போலீசாரிடம் சக்திவேல் தலைமையிலான கும்பல் சிக்கி கொண்டது.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

சச்சின் புதிய உலக சாதனை


பெங்களூரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் சச்சின் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் சச்சின் தெண்டுல்கர். டெஸ்டில் அதிக ரன், சதம், ஒரு நாள் போட்டியில் அதிக ரன், அதிக சதம் என்பது உள்பட பல்வேறு உலக சாதனைகளை புரிந்துள்ளார்.தெண்டுல்கர் தற்போது மேலும் ஒரு மைல்கல்லை தொட்டிருக்கிறார். டெஸ்ட் போட்டியில் அவர் 14 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.

உலக அளவில் 14 ஆயிரம் ரன்களை கடந்தவர் என்ற பெருமை சச்சின் அடைந்துள்ளார். 27 வது ஓவரில் பவுண்ட்டரி அடித்து மைல்கல்லை எட்டியுள்ளார்.

170-வது டெஸ்டில் விளையாடி தெண்டுல்கர் 13,973 ரன் எடுத்திருந்தார். அதிகபட்ச ரன் 248 ஆகும். 48 சதமும், 57 அரை சதமும் அடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் அவர் 14 ஆயிரம் ரன்னை தொட்டார்.

அவருக்கு அடுத்தப் படியாக ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) 147 டெஸ்டில் 12,101 ரன்னும், லாரா (வெஸ்ட் இண்டீஸ்) 131 டெஸ்டில் 11,953 ரன்னும், ராகுல் டிராவிட் (இந்தியா) 143 டெஸ்டில் 11,580 ரன்னும், ஆலன்பார்டர் (ஆஸ்திரேலியா) 156 டெஸ்டில் 11,174 ரன்னும் எடுத்துள்ளனர்.

உயிர் தப்பிய குழந்தைகள்!

அந்த விபத்தைக் கண்டு சீர்காழியைச் சுற்றியுள்ள மக்கள் பதறித்தான் போனார் கள். 84 குழந்தை களை ஏற்றிவந்த விவேகானந்தா பள்ளிப் பேருந்து தன் கட்டுப்பாட்டை இழந்து உப்பனாற்றில் தலைகுப்புற கவிழ வேண்டியது, யார் செய்த புண்ணி யமோ... எதிரே வந்த அரசுப் பேருந்து மோதி 18 குழந்தைகளுக்கு படுகாயத்தோடு முடிந்தது.

அதேநேரத்தில் அந்தப் பள்ளியின் மற்ற குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவை பின்னால் வந்த லாரி மோதி, கட்டுப்பாடு இழந்து புளியமரத்தில் மோதி 4 குழந்தைகளை படுகாயமடையச் செய்தது.

இச்சம்பவத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு சென்னை வடபழனியைச் சேர்ந்த ராஜசேகரன் குடும்பத்தினர் 8 பேர் தனது உறவினர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்தனர். எந்த சாலையில் போவது என புரியாமல், எதிரில் வந்த தனியார் பேருந்தில் மோதி ஐந்து பேர் உயிரிழந்தனர்.

இப்படி தினம்... தினம் விபத்துகள். இதற்கான காரணத்தை டிராஃபிக் இன்ஸ்பெக்டர் ஒருவர் நம்மிடம் கூறினார். ""சீர்காழியில ஏற்படும் நெரிசலை குறைக்கத்தான் வெளிவட்ட பை-பாஸ் சாலைகளைக் கொண்டுவந்தாங்க. நாலரை வருடமா போடுறாங்க. அவங்க போட்டு முடிக்கிறதுக்குள்ள, ஏற்கனவே போட்டிருக்கிற சாலைகளும் பழுதடைந்து விட்டன. ஐந்து இடங்களில் ரவுண்டானா அமைக்கணும். சிக்னல் வைக்கணும். எதுவுமே செய்யல. புதுசா வரவுங்க எங்க போறதுன்னு தெரியாம இப்படி ஆக்ஸிடெண்ட் பண்ணிடுறாங்க. சீர்காழியில ஒரு சாலையில் கூட சிக்னல் இல்லைங்க. விபத்து இல்லாத நாளே இல்லைங்க'' என்கிறார் கவலையாக.

சீர்காழி எம்.ஆர்.சுப்ரமணியன் கூறுகையில், ""பை-பாஸ் சாலைகள் மக்களுக்கு ரொம்ப பயனுள்ள திட்டம். ஆனா அதிகாரிங்க அதை சரியா செய்வதில்லை. இந்தச் சாலைகளை காலத்தோடு முடிக்காததால இப்படி தினசரி விபத்து நடக்குது'' என்கிறார் கோபமாக.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் விபத்து குறித்து கேட்டோம்... ""ஆமாங்க, எங்களுக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. பை-பாஸ் வேலையை முடிச்சிட்டாங்கன்னா ரவுண்டானா அமைச்சிடலாம். அதுவரை காவல் துறைதான் டிராஃபிக்ல நிற்கணும். அவங்க நிற்பதே இல்லை. தனியார் பள்ளிகளுக்கு வாட்ச்மேன் வேலை பார்க்கப் போயிடுறாங்க'' என்கின்றனர் கோபமாக.

ஆளாளுக்குப் போட்டி போட்டு குறை சொல்வதை விட்டுவிட்டு வேலைகளில் வேகத்தைக் காண்பித்தால் தொடர் விபத்துகளைத் தடுக்கலாம்.

சிக்கிய லாட்டரி வியாபாரிகள்!

""தம்பி... நூறு ரூபாய்க்கு லாட்டரி கொடுப்பா...''

""இந்தாங்கண்ணே'' என்று பல் இளித்தபடி லாட்டரி சீட்டை நீட்டிய அந்த இளைஞனை சுற்றி வளைத்து தூக்கி டெம்போவில் கடாசியது ஒரு அதிரடி கும்பல்.

மறுநாள்... மாலை 4.30 மணி இருக்கும். லாட்டரி சீட் மொத்த வியாபாரிகளான வ.உ.சி. நகர் சுரேஷின் கடை, மேல வீதி அமீன் பில்டிங்கிலுள்ள ரமேஷ்குமாரின் கடை, ஏ.என்.ஹெச். காம்ப்ளக்ஸ் என தீவிரமாக நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர் அதே கும்பலைச் சேர்ந்தவர் கள். இதில் ஏ.என்.ஹெச். காம்ப்ளக்ஸில்தான் அந்த கும்பலின் ஹெட் நிற்க... பட்டையும், கொட்டையுமாக பக்தி பரவசத்துடன் கதவை திறந்தார் அந்தக் கடையின் ஓனர். அடுத்த நிமிடமே ஓனரின் வாயில் பிளாஸ்திரியை போட்டு ஒட்டிய அந்த கும்பலின் ஹெட்... ஓனர் உட்காரும் சேரில் அமர்ந்தார்.

""என்ன தம்பி புதுசா இருக்கீங்க, முதலாளி இல்லையா?'' -வந்த சில்லறை வியாபாரிகள் சந்தேகத் துடன் கேட்க... ""அது... அண்ணன் வெளியில போயிருக்காரு. வர்ற வரைக்கும் என்னை பார்த் துக்க சொன்னாரு... உங்களுக்கு என்ன வேணும்?''.

""ஆங்... ஒரு கிலோ தங்கம் வேணும்... கொடுப்பியா? ஹேஹ்ஹே... இங்க வந்து லாட் டரி சீட்தானப்பா கேட்டோம் ஆங்'' என்று மொக்கையான ஜோக்கை அடித்ததுமில்லாமல் அவரே சிரித்து விட்டு... ""அந்த வண்டி கேட் கட்டு இருக்கும் அதை கொடுப்பா... இந்தா பணம்'' என்று எடுத்து வைத்தார் லாட்டரி சீட்டை வாங்கிச் சென்று விற்கும் அந்த சில்லறை வியா பாரி. இப்படி நிறைய பேர் சில்லறை விலைக்கு லாட்டரி சீட்டை வாங்கிக் கொண்டிருந்தவர்கள் அதே கும்பலால் சுற்றி வளைக்கப் பட்டு டெம் போவில் ஏற்றப்பட்டனர். டெம்போ ஃபார்ஸ்ட் டாக சென்று சிதம்பரம் டவுன் ஸ்டேஷனில் போய் நிற்க அனைவருக்கும் பேரதிர்ச்சி. அந்த கும்பல் வேறு யாருமல்ல, எஸ்.ஐ.சுந்தரராஜன் தலைமையிலான போலீஸ் டீம்தான்.

கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் 60 சதவீதம் ஒழிக்கப்பட் டுள்ளதால் காவல்துறை யினருக்கு வரு மானம் குறைந் துவிட்டது. இதனால் லாட் டரி சீட் பிஸின ஸை உற்சாகப் படுத்தி வரு மானம் பார்த்து வருகிறார்கள். ரவுடிகள் ஒடுக் கும் பிரிவில் இருந்த எஸ்.ஐ. அம்பேத் கர் புட் செல்லுக்கு மாறியுள்ளதால் அந்த இடத்துக்கு வந்த எஸ்.ஐ. சுந்தர ராஜனின் அதிரடி அசைன்மென்ட் இதுதான்.

ஆனால்... ""என்னய்யா இவ்வளவு பேரை கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்க? இவங்க லாட்டரி விற்றதுக்கு ஆதாரம் இருக்கா?'' அவர்கள் விற்றுக் கொண்டிருந்த லாட்டரி சீட்டுகளை கத்தை கத்தையாக இன்ஸ் முன் எஸ்.ஐ. கொட்ட... இன்ஸ் முகத்தில் ஈயாடவில்லை. முகம் வாடிப் போய்விட்டது. காரணம், இன்ஸுக்கு இந்த விவகாரம் நன்றாகத் தெரியுமாம். வியாபாரிகளும் இன்ஸிடம் மிக இயல்பாக குசலம் விசாரிக்க ஆரம்பிக்க... பிறகென்ன?

24 பேரில் அப்படி இப்படி என்று முக்கிய குற்றவாளிகளை குறைத்துவிட்டு மீதி கொஞ்சம் பேர் மீது எஃப்.ஐ.ஆர். போட்டிருக் கிறார் இன்ஸ்பெக்டர்.

""ஹூம்... நீண்டகாலமாக லாட்டரி சீட் விற்று அப்பாவி மக்களின் வயிற்றிலடித்து ஏமாற்றி வந்த குற்றவாளிகளை ஒருவாரமாக ஃபாலோ-அப் பண்ணி பிடித்த எஸ்.ஐ.க்கு பாராட்டு கிடைக்கவில்லை. இன்ஸ்பெக்டரின் டோஸ்தான் கிடைத்தது'' என்று புலம்புகிறார்கள் இளம் போலீஸார்.

''அம்மா... அப்பா எங்கம்மா?''

''அம்மா... அப்பா எங்கம்மா?''

''ஷூட்டிங் போயிருக்கார்... நாளைக்கு வந்துருவார்டா செல்லம்!'' - எத்தனை


நாளைக்குத் தான் ரமலத், இந்த பதிலையே தன் குழந்தைகளுக்கு சொல்லிக்கொண்டு இருக்க முடியும்? அதான், கோர்ட் படியேறிவிட்டார். பிரபுதேவாவும் நயன்தாராவும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!

அதன் முதல் கட்டமாக, ரமலத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் விறுவிறுவென இறங்கி உள்ளனர். இது குறித்து கோடம்பாக்கம் வட்டாரத்தில், ''ரமலத்தை சமாதானப்படுத்த பேச்சுவார்த்தைகள் நடக்குது. 'ஆர்.ஏ. புரம் ஏரியாவில் காளி யப்பா மருத்துவமனை அருகில் தன் பெயரில் இருக்கும் பிரமாண்ட வீடு, 3 கோடி பணம் எல்லாம் கொடுக்கிறேன். வீட்டுச் செலவுகளுக்கு மாசம் 3 லட்சம் கொடுக்கவும் தயார்' என்றும் சொன்னாராம். ஆனால், ரம்லத் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இப்போது இல்லை. இரண்டு தாலிகளுக்காக இந்த பேரம் நடக்கிறது'' என்றனர்.

தற்போது ரமலத்துக்கு சட்டரீதியான அனைத்து உதவிகளையும் செய்து ஆதரவாக இருப்பவர், பழம்பெரும் தயாரிப்பாளரான ஏ.எல்.சீனிவாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பன். அவரை சந்தித்தோம்

''பிரபுதேவா குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் நல்ல நட்பு உண்டு. ஆழ்வார்பேட்டையில் அவங்க வீடு இருந்தது. பிரபு தேவாவும் ரமலத்தும் காதலிக்கிற காலத்தில், எங்க வீட்டில்தான் அடிக்கடி சந்திப்பாங்க. அவங்க வெளிய போக, என்னோட கார் கொடுத்து அனுப்பி இருக்கேன். அதனால், ரெண்டு பேருக்குமே என் மேல் தனிப் பாசம். பிரபுதேவா - ரமலத் காதலுக்குப் பிரச்னை வந்தபோது... நான், கலைப்புலி தாணு, வாசு மூணு பேரும்தான் சப்போர்ட் பண்ணினோம். பெரிய போராட் டத்துக்குப் பிறகுதான் ரமலத்தைக் கைப்பிடிச்சார். அவர், இன்னிக்கு நயன்தாரா பின்னாடி போவார்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. தன்னை நம்பி வந்தவளுக்கு செய்யும் துரோகம் இல்லையா இது? 'நாடோடிகள்' படத்தில் நண்பர்கள் சேர்த்துவைத்த ஒரு காதல், கல்யாணத்துக்குப் பிறகு பிரியும்போது, கோபம்கொண்டு அதைத் தட்டிக்கேட்பார் சசிக்குமார். கிட்டத்தட்ட அதே உணர்வுதான் எனக்கும்!'' என்றவரிடம், பிரபுதேவா ஏதாவது சமாதானம் பேசுகிறாரா என்று கேட்டோம்.''அவர் எனக்கு போன் பண்ணலை. அவருக்கு ஆதரவா சிலர் என்கிட்ட பேசுறது உண்மைதான். ஆனா, எந்த சமரசத்துக்கும் நான் இடம் கொடுக்கலை. ஏன்னா, இது ஒரு பொண்ணோட வாழ்க்கை. ரமலத்துக்குக் கண்டிப்பா நீதி கிடைக்கும்னு நம்புறேன். பலருக்கு அது ஒரு பாடமாவும் இருக்கும்!'' என்றார் அக்கறையாக!

இது இப்படி இருக்க, நயன்தாரா மனநிலை குறித்தும் விசாரித் தோம். நயனுக்கு நெருக்கமான மலையாள சினிமா புள்ளிகள், ''கேரள சினிமாவில் தாராவை முதன்முதலாக அறிமுகப்படுத்தியது, இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான டைரக்டர் ஷாஜி கைலாஷ். இருவருக்கும் உண்டான நெருக்கம்பற்றி மலையாள மண்ணில் கதைக்காத டீக்கடைகளே இல்லை. ஷாஜிக்கு சொந்தமான ரிசார்ட்டில் இருவரும் அடிக்கடி நெருக்கம் காட்டினர். அப்படி இருந்த ஒரு சமயத்தில், படம் பிடித்து வீடியோ கிளிப்பிங் வெளியிட்டார்கள். அந்த வீடியோ காட்சி போலியானது என்றார்கள் முதலில். அப்புறமாக நயன்தாரா படத்துக்குப் பணியாற்றிய பிரபல கேமராமேன் ஒருவரே, 'இது நயன்தாராவேதான்...' என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்தார்.நயன், தமிழ் சினிமாவில், சரத்குமார் நடித்த 'ஐயா' படத்தில் அறிமுகமானார். அப்போதும் ஷாஜி அந்தப் படப்பிடிப்பு நடந்த திருநெல்வேலிக்கு அடிக்கடி சந்தோஷ விசிட் அடித்தார். தான் காதலிக்கும் மனிதருக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பார் நயன். ஷாஜி கைலாஷுக்கு இதுவரை 50 லட்சத்துக்கு மேல் அள்ளிக் கொடுத்தார். அடுத்து 'சந்திரமுகி' படத்தில் நடித்ததும் உச்சிக்குப் போனார். கோடம்பாக்கத்தில் பிஸியாக இருந்ததால், அடிக்கடி ஷாஜியை சந்திக்க முடியாமல் தவித்தார். அப்போதுதான் முன்னணி ஹீரோவின் மச்சான் தொடர்பு கிடைத்தது.

அந்த நேரத்தில்தான் விரல் நடிகரின் தொடர்பும் கிடைத்தது. உதடு கடித்த போஸ்டர் மூலம் உலகத் தமிழர்களுக்குத் தங்களின் காதலை பறைசாற்றினர். நயனின் கதை விவகாரங்களில் அத்து மீறி மூக்கை நுழைத்தார் நடிகர். ஒருகட்டத்தில், இருவருக்கும் முட்டிக்கொண்டது. விரல் நடிகரை வெறுப்பேற்றும் நோக்கத்தில், வேண்டுமென்றே அவரது போட்டியாளரான பெரிய இடத்து மாப்பிள்ளையுடன் ஜோடி சேர்ந்தார்.

காந்தமாக ஒட்டிக்கொண்டார் மாப்பு. வீட்டுக்கே செல்லாமல் நடிகை தங்கிய ஸ்டார் ஹோட்டல் அறையிலேயே சொக்கிக்கிடந்தார். நடிகரின் மனைவி கண் கலங்கினார். விஷயம் பெரிய ஸ்டார் வரை போக... நடிகையை அழைத்துக் கடுமையாக டோஸ்விட்டார். அப்படி செய்யாமல் இருந்தால், இப்போது ரமலத்துக்கு ஏற்பட்ட நிலைமை, பெரிய ஸ்டார் மகளுக்கு வந்திருக்கும்.

'வில்லு' படத்தில் ஒப்பந்தமானார். பொதுவாக ஹீரோயின்கள், ஹீரோவோடுதான் நெருக்கமாக இருப்பார்கள். விதிவிலக்காக, அந்தப் படத்தின் டைரக்டரான பிரபுதேவாவிடம் ஐக்கியமானார். நயனின் படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் அங்கே கரெக்டாக பிரபு ஆஜர். 'பாடிகார்ட்' படப்பிடிப்பு எர்ணாகுளத்தில் நடந்தபோது, அங்கேயே டேரா போட்டார். அடுத்து 'பாஸ் (எ) பாஸ்கரன்' ஷூட்டிங் கும்பகோணத்தில் நடந்தது. அங்கேயும் பிரபு விசிட் செய்தார். இப்போது பிரபுதேவா - நயன்தாரா விவகாரம் தீப்பற்றி எரிகிறது. இந்த சூழ்நிலையிலும், நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக நயன்தாரா சைலன்ட்டாக இன்னொரு காரியத்தையும் செய்து வருகிறாராம்.சென்னையில் ஒரு பிரபல வங்கியின் மேனேஜராக இருப்பவர், 'கன்னிப் பருவத்திலே' படத்து ஹீரோ பெயர்கொண்டவர். கேரளக்காரரான அவருக்கும் நயன்தாரவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதாம். சமீபத்தில், தாரா நடித்த விளம்பரத்தின் வரவு-செலவுகளை அருகில் இருந்து இவர்தான் கவனித்துக் கொண்டாராம். நயன்தாராவைச் சுற்றி உள்ள இந்தக் கூடா நட்பு பிரபுதேவாவுக்குத் தெரியவே தெரியாதாம்!

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

Aishwarya Rai Passportஇணைய தளங்ளில் ஏமாற்றப்படும் இந்தியகள்.

உலகம் முழுவதுமே இணைய தளக் குற்றங்கள் எனப்படும் சைபர் குற்றங்கள் சகஜமாக நடக்கின்றதென்றாலும், இத்தகைய சைபர் கிரைம் குற்றவாளிகள் அதிகம் குறிவைத்து மொட்டையடிப்பதென்னவோ இந்தியர்களைத்தான் என்கிறது ஆய்வறிக்கை ஒன்று!

இணைய தளங்களில் வலம் வரும் இந்தியர்களில் 76 விழுக்காட்டினர் கம்ப்யூட்டர் வைரஸ், ஆன் லைன் கிரெடிட் கார்டு மோசடி, வங்கி ரகசிய எண்ணை திருடி பணத்தை சுருட்டுதல் போன்ற சைபர் கிரைம் எனப்படும் இணைய தளக் குற்றங்களுக்கு ஆட்படுபவர்களாகவே உள்ளதாம்!

சர்வதேச அளவில் இணைய தளங்களை பயன்படுத்துவோர்களில் 65 விழுக்காட்டினர் மேற்கூறிய ஏதாவது ஒரு மோசடி அல்லது பாதிப்பை எதிர்கொண்டவர்களாகவே உள்ளதாகவும், ஆனால் இந்த மோசடி இந்தியர்களை இன்னும் அதிகமாக பாதிப்பதாகவும் கூறுகிறது "நார்ட்டான் சைபர் கிரைம் ரிப்போர்ட்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கை.

அதிலும் சமீப காலமாக இந்தியா முழுவதுமே பரவலாக இணைய தளங்களை பயன்படுத்துவோர்களது இமெயில் முகவரிக்கு, " உங்களுக்கு லண்டன் லாட்டரியில் இத்தனை கோடி பணம் விழுந்துள்ளது; மேற்கொண்டு விவரம் பெற இந்த முகவரியில் தொடர்புகொள்ளுங்கள்!" என்று கூறி ஒரு டுபாக்கூர் முகவரியை கொடுத்திருப்பார்கள் அந்த மெயிலை அனுப்பியவர்கள்!

"ஆஹா லட்சுமி தேவி கண்ண தொறந்துட்டாடா...!" என்று பதில் மெயில் அனுப்பினால், "சிக்கிட்டாண்டா ஏமாளி!" என்ற ரீதியில் வரும் பதிலில், உங்களுக்கான லாட்டரி பரிசை அனுப்பி வைப்பதற்கு சேவை கட்டணம் தேவைப்படுவதால், அதனை அனுப்பி வையுங்கள் என்று ஆளுக்கு தகுந்தபடி ஐந்து லட்சமோ அல்லது பத்து லட்சமோ குறிப்பிட்டு, ஒரு வங்கி கணக்கு எண்ணை அனுப்பி வைப்பார்கள்.சரி பரிசுதான் கோடிக்கணக்கில் வரப்போகிறதே... என்ற எண்ணத்தில் கையில் இருப்பது, வங்கியில் இருப்பது, போதாதற்கு கடன் என்று அடித்து பிடித்து அந்த தொகையை அனுப்பி வைப்பார்கள் சில அப்பாவி கோவிந்துகள்.

அததோடு சரி! பரிசு தொகை பட்டை நாமம்தான்; மேற்கொண்டு எந்த பதிலும் வராது! அதற்கு பிறகு பணத்தை அனுப்பியவர்கள் சுதாரித்து காவல்துறையில் புகார் அளித்து, பணம் போட்ட வங்கி கணக்கை ட்ரேஸ் செய்தால், அந்த பணம் வழித்து துடைக்கப்பட்டிருக்கும்;கூடவே அக்கவுண்டும் க்ளோஸ் ஆகி, வங்கியில் கொடுத்த முகவரியும் டுபாக்கூர் என்று தெரியும்.

அப்போதுதான் ஆஹா மோசம் போனமே என்று வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறுவார்கள்.

இது ஒரு உதாரணம்தான்! எங்கள் வங்கியில் கணக்கு வைத்திருந்தவர் மரணமடைந்துவிட்டார். அவருக்கு வாரிசு யாரும் இல்லை.உங்களது பெயரும் அவரது பெயரும் ஒரே மாதிரியாக இருப்பதால் அதை உங்களது பெயருக்கு அனுப்புகிறோம். இருவரும் பாதிப்பாதி பங்கு போட்டுக்கொள்ளலாம் என்று கதை விட்டு மேற்கூறிய மாதிரியே சுருட்டி விடுவார்கள்.

இதுபோன்ற மோசடிகள் இன்னும் வகை வகையாய் "ஒக்காந்து ரூம் போட்டு யோசிப்பாங்களோ?!" என்று சொல்லும் அளவுக்கு நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இதுதவிர எங்கிருந்தோ சுட்ட பெண்களின் படத்தை மார்ஃபிங் செய்து, அவர்களை ஆபாசமாக சித்தரித்து இணைய தளங்களில் உலாவ விடுவது, படு தீவிரமாக நாம் ஒரு தகவலை பெறுவதற்காக இணைய தளங்களில் மேய்ந்துகொண்டிருக்கும்போது, நாம் க்ளிக் செய்யாமலேயே, கணினி திரையின் ஓரம் வந்து அழைப்பு விடுக்கும் பெண்கள் படம், அதில் சபலப்பட்டு தொடர்புகொள்பவர்கள் பணம் உள்ளிடவற்றை இழந்து, வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு சமயங்களில் சக்கையாய் அடி உதைபட்டு திரும்புவதும் உண்டு.

இப்படி உலக அளவில் இணைய தளங்கள் மூலமாக அதிகம் மோசடிக்குள்ளாவது இந்தியர்கள்தான் என்று கூறும் இந்த ஆய்வை நடத்திய "செக்யூரிட்டி சொலியுசன்ஸ் புரவைடர் சிமேன்டெக்" என்ற நிறுவனத்தின் விற்பனை மேலாளர் கவுரவ் கன்வால், இணைய தளங்கள் மூலம் இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் 60 விழுக்காடு கம்ப்யூட்டர் வைரஸ் மற்றும் மால்வேர் (malware) - தீமையை ஏற்படுத்தும் மென்பொருள் - ஆகியவைதான் என்கிறார்!

" இன்றைய சைபர் கிரிமினல்கள் குறிவைப்பது ஆன் லைனில் புதிதாக வலம் வரும் மற்றும் அப்பாவி நபர்களைத்தான்.இப்படி சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்படுபவர்கள், யாரை சந்தித்து இது குறித்து முறையிடுவது என்பதை அறியாதவர்களாகவும், உதவ யாரும் இல்லை என்று நினைப்பவர்களாகவும் உள்ளனர் என்பதுதான் இதில் சோகமான விடயம்" என்று வருத்தம் தொனிக்க கூறுகிறார் கவுரவ்.

இப்படி யாரிடம் புகார் அளிப்பது என்று தெரியாமல் பாதிக்கப்பட்டவர்கள் விழிப்பது ஒருபுற இருந்தாலும், 58 விழுக்காட்டினர் அது குறித்து கோபமடைவதாகவும், 51 விழுக்காட்டினர் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்வதாகவும், 46 விழுக்காட்டினர் மனமுடைந்து அல்லது மன அங்கலாய்ப்புக்கு ஆளாகுவதாகவும் அந்த ஆய்வறிக்கை!

அதே சமயம் இதில் பெரும்பான்மையானவர்கள் - 88 விழுக்காட்டினர் - நடந்துபோன மோசடிக்கு தாங்கள்தான் காரணம் என்று தங்களைத் தாங்களே நொந்துக் கொள்கிறார்களாம்!

மேலும் இத்தகைய சைபர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை; அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்களில் ஏறக்குறைய 57 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்ற காரணங்களாலேயே இத்தகைய கிரிமினல் பேர் வழிகள் சட்டத்தின் பிடியில் சிக்காமல் தெனாவட்டாக வளைய வருகிறார்கள்.

"இது எதுமாதிரி இருக்கிறதென்றால் கார்களை பற்றி உங்களுக்கு ஏதும் அதிகம் தெரியாத நிலையில், மெக்கானிக் என்ன சொல்கிறாரோ அதனைக் கேட்டுக்கொண்டுதான் தீர வேண்டியதிருக்கிறது. அது குறித்து அவரிடம் அதிகமாக ஏதும் வாதம் செய்ய முடியாது. அத்தகையதொரு நிலையை நீங்கள் மோசமாக கருதினாலும்; அந்த சூழ்நிலையை ஏற்றுக்கொண்டுதான் தீருகிறீர்கள்.அதுபோன்ற நிலையில்தான் சைபர் குற்றங்களுக்கு ஆளானவர்களின் நிலையும்" என்கிறார் கவுரவ்.

மேலும் இதுபோன்ற சைபர் குற்றங்களை தீர்ப்பது இந்தியாவில் மிகக்கடினமான ஒன்றாக உள்ளது. இந்தியாவில் ஒரு சைபர் குற்றத்தை தீர்க்க சராசரியாக 44 நாட்கள் ஆகின்றன.அதற்கான செலவுத் தொலையும் சராசரியாக 5,262 ஆக உள்ளது.

அதே சமயம் சர்வதேச அளவில் இது முறையே 28 நாட்களாகவும், 15,000 ரூபாயாகவும் உள்ளதாக கூறுகிறது அந்த ஆய்வறிக்கை.

" இதுபோன்ற இணைய தள மோசடிக்கு ஆளாகுபவர்கள் அடுத்து என்ன செய்வது என்றே தெரியாமல் திகைத்துப்போய் நின்றுவிடுகின்றனர்.வங்கிகள் மற்றும் அரசாங்கமும் சைபர் குற்றங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ள போதிலும், இன்னும் அதிகமாக மேற்கொள்வது அவசியமாக உள்ளது.

" மிக லேட்டஸ்ட்டான பாதுகாப்பு மென்பொருள்களை நிறுவிக்கொள்வது, நிதி பரிமாற்றம் தொடர்பான விவரங்களையோ அல்லது தங்களைப்பற்றிய விவரங்களையோ ஆன் லைனில் யாருடனும் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது, சந்தேகத்திற்குரிய மெயில்கள் மற்றும் 'லிங்' - link - குகளை திறக்காமல் இருப்பது போன்ற ஒரு சில எளிதான வழிகளில் இணைய தளங்களில் உலா வருவோர் தங்களையும், தங்களது கணினிகளையும் பாதுகாத்துக்கொள்ளலாம்" என்று கூறுகிறார் கவுரவ்!

மொத்தத்தில் இணைய தளங்களில் உலா வருபவர்களுக்கு தேவை எச்சரிக்கை உணர்வும், சபலங்களுக்கு ஆட்படா மன உறுதியும்தான்!

இரத்த விருத்தியும் - பேரிச்சம் பழமும்.

பழங்களிலேயே தனிச்சுவை கொண்டது பேரிச்சம் பழம். தரமான, நல்ல சத்துள்ள பேரிச்சம் பழங்கள் ஆப்ரிக்க, அரேபிய நாடுகளிலேயே விளைகிறது.

பேரிச்சம் பழத்திற்கு இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றலும், இரத்தத்தை வளப்படுத்தும் இயல்பும் உண்டு.

தினமும் இரவில் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டுவிட்டு பின் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் போதும் இரத்தம் விருத்தி அடைவதோடு, உடலில் தெம்பும், வலிமையும் கூடும்.

உடலில் சர்க்கரைத் தன்மை குறைந்து சோர்வடையும் போது, சில பேரிச்சம் பழங்களைப் சாப்பிட்டாலே போதும் உடனே ரத்தத்தில் சர்க்கரைத் தன்மையை அதிகரித்து உடலை சமநிலைக்கு கொண்டுவரும்.

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. ஒரு அவுன்ஸ் பேரிச்சம் பழத்தில் 170 மில்லி கிராம் வைட்டமின் ஏ சத்து அடங்கியுள்ளது. மேலும் பி1 வைட்டமின் 26 மில்லி கிராமும், பி2 வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது.

இரும்புச் சத்து 30 மில்லி கிராமும், சுண்ணாம்புச் சத்து 20 மில்லி கிராமும் உள்ளது.

பெண்களுக்குப் பொதுவாக கால்சியம் குறைபாடு அதிகம் ஏற்படுகிறது. இவர்கள் பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால் கால்சியம் குறைபாட்டை தவிர்க்க முடியும்.

மேலும், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் சோர்வையும் பேரிச்சம் பழம் உட்கொள்வதால் போக்க முடியும்.

இள‌ம் பெ‌ண்க‌ள் பெரு‌ம்பாலானவ‌ர்களு‌க்கு இர‌த்த சோகை உ‌ள்ளது. இதனா‌ல் குழ‌ந்தை‌ப் பேறு காலக‌ட்ட‌த்‌தி‌ல் பா‌தி‌ப்பு ஏ‌ற்படு‌கிறது. இதனை‌த் த‌வி‌ர்‌க்க பே‌ரி‌ச்ச‌ம் பழ‌த்தை உ‌ட்கொ‌ள்ளு‌ங்க‌ள் இர‌த்த சோகையை‌ப் போ‌க்‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

வளரு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு பே‌ரி‌ச்ச‌ம் பழ‌ம் கொடு‌த்து வ‌ந்தா‌ல் அது அவ‌ர்க‌ளி‌ன் ஆரோ‌க்‌கியமான வள‌ர்‌ச்‌சியை உறு‌தி செ‌ய்யு‌ம் எ‌ன்ப‌தி‌ல் ஐய‌மி‌ல்லை.

காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற பேரிச்சம் பழம் அதிகம் துணை புரியும் என்பது குறிப்பிடத்தக்கது.