ஞாயிறு, 19 டிசம்பர், 2010

இணைய தளத்தின் விஸ்வரூபம்!

உலகின் ஒரே மிகப்பெரிய தகவல் தொடர்பு சாதனமாக ஆகிவிட்ட 'இண்டர்நெட்' டின் சக்தி என்ன என்பதையும், அதன் வீச்சு எந்த அளவுக்கு பிரமாண்டமானது என்பதையும் தெரிந்துகொள்வதற்கான சமீபத்திய மிகச்சிறந்த உதாரணம் "விக்கிலீக்ஸ்" !


உலக போலீஸாகவும், உளவு பார்ப்பதில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பது போலவும் ஏக திமிராக நடந்துகொண்ட அமெரிக்காவின் பிடறியை பிடித்து உலுக்குவது போல, அந்நாட்டின் தூதரக அதிகாரிகள் தங்கள் நாட்டு தலைமைக்கு அனுப்பிவைத்த ரகசிய ஆவணங்களை "விக்கிலீக்ஸ்" இணைய தளம் வெளியிட்டதை பார்த்தபோது, இணைய தளம் என ஒன்று இல்லாது போயிருந்தால் இந்த அளவுக்கு அந்த தகவல் உலகம் முழுவதும் முழு முற்றிலுமாக பரவியிருக்குமா என்பது சந்தேகத்திற்குரியதுதான்!

என்னதான் பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் இருந்தாலும், அந்தந்த ஊடக நிறுவனங்களின் விருப்பத்திற்கு ஏற்பத்தான் மேற்கூறிய தகவல்கள் வெளியாகி இருக்கும்.

கூடவே லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட இவற்றை அச்சில் ஏற்றியோ அல்லது தொலைக்காட்சியில் காட்டி வாசித்தோ மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பது என்பது நடைமுறையில் அத்தனை எளிதில் சாத்தியமான விடயம் அல்ல.

மாறாக இப்படி வேண்டியவர்கள், வேண்டியதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வது போன்று சர்வர்கள் இழுக்க இழுக்க, ஆவணங்களையும், ஆதாரங்களையும் கொட்டி வைத்து தகவல்களை அள்ளிக்கொள்ள வைத்துள்ளது "விக்கிலீக்ஸ்" !

இதன்மூலம் உலகையே புரட்டி போட வைத்துள்ள 'இண்டர்நெட்'டின் சக்தி நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற ரகசிய தகவல்களை அம்பலப்படுத்துவதற்கு மட்டுமல்லாது, தெரிந்த மற்றும் தெரியாத விடயங்கள் குறித்த தகவல்களை அறிவதற்கும் உலகின் ஒரே மிகப்பெரிய ஆதாரமாக 'இண்டர்நெட்' விளங்குகிறது.

2005 ஆம் ஆண்டு வாக்கில் உலகம் முழுவதும் ஒரு பில்லியன் மக்கள் இண்டர்நெட்டை பயன்படுத்திய நிலையில், தற்போது அது 40 பில்லியனாக விஸ்வரூபம் எடுத்துள்ளதாக தெரிவிக்கிறது ஒரு புள்ளிவிவரம்.

இதில் இந்தியர்கள், உலக அளவில் இண்டர்நெட்டை பயன்படுத்துவதில் மூன்றாவது இடத்தில் உள்ளதாக பிரபல இணைய தேடுதளமான கூகுள் தெரிவிக்கிறது.

அதே சமயம் கருத்து சுதந்திரத்திற்கு ஏக கெடுபிடி காட்டும் சீனாவில் 300 மில்லியன் மக்கள் இண்டெர் நெட்டை பார்ப்பதால் முதலிடத்தையும், அமெரிக்காவில் 207 மில்லியன் மக்கள் 'இண்டெர்நெட்' டை பார்ப்பதால் இரண்டாம் இடத்தையும், 100 மில்லியன் அளவை கொண்டு இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளதாக கூறுகிறார் கூகுள் இந்தியாவிற்கான தலைமை அதிகாரி வினய் கோயல்!

மேலும் இந்தியாவைப் பொறுத்தவரையில் 40 மில்லியன் மக்கள் மொபைல் போன் மூலம் இண்டெர்நெட்டை பார்ப்பதாகவும்,வரும் 2012 ஆம் ஆண்டிற்குள் மொபைல் 'இண்டெர்நெட்' டை பயன்படுத்துபவர்களை லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் பார்க்கவைக்க முயற்சித்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.

அதே சமயம் 'இண்டெர்நெட்' டை பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர், பாடல்களை தேர்ந்தெடுப்பதில்தான் அதிகம் கவனம் செலுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

எந்த அறிவியல் கண்டுபிடிப்புகளையும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் வரை பிரச்சனை இல்லை. வில்லங்கமாக்கினால் சிக்கல்தான்!

இளம் நடிகரை காதலிக்கிறேன் - பாவனா.

தன்னுடன் நடிக்கும் இளம் நடிகர் ஒருவரை காதலிப்பதாக பாவனா தெ‌ரிவித்துள்ளார்.


பாவனா பிருத்விராஜை காதலிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. மேலும் தெலு‌ங்கு நடிகர் ஒருவருடன் காதலில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.


இந்நிலையில் தனது மௌனத்தை கலைத்திருக்கிறார் பாவனா. தான் நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும்இது தொடருமா என்பது தெ‌ரியாது என்றும், இப்போதைக்கு நடிப்பில்தான் முழுக் கவனம் செலுத்துகிறேன் என்றும் பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார் பாவனா.


அத்துடன் தனது காதலர் மலையாளி அல்ல என்றும் அவர் தெ‌ரிவித்துள்ளார்.

திங்கள், 13 டிசம்பர், 2010

பொறையாறு அருகே தில்லையாடியில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

பொறையாறு அருகே தில்லையாடியில் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.


நாகை மாவட்டம், பொறையாறு அருகே தில்லையாடி சவுக்கடித் தெருவை சேர்ந்தவர் நளபூபதி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நிமா நேற்று தனது வீட்டின் பின்புறத்தில் கழிவறை கட்டுவதற்காக மண்ணை தோண்டினார். அப்போது பூமிக்கு அடியில் சுமார் 8 அடி ஆழத்தில் வித்தியாசமான சத்தம் கேட்டது. மேலும் தோண்டியபோது அங்கு ஒரு பெரிய மண் பானை இருந்தது.

இது குறித்து நாகை கலெக்டர் முனியநாதன் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு சென்று பார்த்த போது, அது 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி என்று தெரியவந்தது. இது குறித்து தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை காப்பாட்சியர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

பூமிக்கு அடியில் 8 அடி ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த மண்பானை முதுமக்கள் தாழியாகும். இது 5 அடி உயரம் உள்ளது. மேல்வாய் விட்டம் 2-1/2 அடி, சுற்றளவு 4 அடி பூமிக்கு அடியில் திறந்த நிலையில் உள்ளது. அதன் உள்ளே சிவப்பு நிறத்தில் 2 மண் கலயம், கருப்பு நிறத்தில் 2 மண் கலயம் உள்ளன. மேலும் மண் தட்டு இரண்டு, 4 கிண்ணங்கள், கெட்டியாகி கல்லாகி போன மனித பல் வரிசை ஒன்றும் இருந்தது.

முதுமக்கள் தாழி அருகில் வெளிபுறத்தில் 3 அடி நீளம் கொண்ட போர் வாள் ஒன்று கைப்பிடி உறையுடன் இரண்டாக உடைந்த நிலையில் இருந்தது. இது 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெரும் கற்காலத்தை சேர்ந்ததாகும். போர்படை தளபதி ஒருவரை இதில் வைத்து அடக்கம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. முதுமக்கள் தாழி மற்றும் பொருட்களை வேதியியல் முறைப்படி சுத்தம் செய்து தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருங்காட்சியகத்தில் வைக்க நாகை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளி, 10 டிசம்பர், 2010

ஆபத்து மன்மதனுக்கு ?

உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைவிடுத்து கோடம்பாக்கத்தில் என்ன நடக்கிறது என்று பைனாகுலர் வைத்துப் பார்க்கும் கட்சி ஒன்று தமிழகத்தில் உள்ளது. சொல்லாமலே பு‌ரிந்திருக்குமே, இந்து மக்கள் கட்சி.


பாப்புலரான நபர்கள், விஷயங்களில் மட்டும் போராட்டம் நடத்தி தனது பெயரை மெயி‌ண்டெய்ன் செய்யும் இந்தக் கட்சி கமல்ஹாசனுக்கும், த்‌ரிஷாவுக்கும் கண்டன கடிதம் அனுப்பியுள்ளது.

மன்மதன் அம்பு படத்தில் கமலும், த்‌ரிஷாவும் சேர்ந்து பாடும் பாடல் ஒன்று உள்ளது. இதில் வரும் சில வார்த்தைகள் இந்து தெய்வங்களான அரங்கநாதனையும், வரலட்சுமியையும் கொச்சைப்படுத்துவதாக உள்ளதாம். இந்த வார்த்தைகளை நீக்காவிட்டால்... அதற்குப் பிறகுதான் உங்களுக்கே தெ‌ரியுமே... போராட்டம் மறியல்...

அரங்கநாதா நீதான் காப்பாற்ற வேண்டும்.

புதன், 8 டிசம்பர், 2010

சீனாவில் கூகுள் தடைசெய்தமை ஏன்? விக்கிலீக்ஸ் விளக்கம்

பிரபல தேடுபொறி இணையதளமான கூகுள் சீனாவில் தடைசெய்யப்பட்டதற்கான காரணத்தை விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது.

சீனாவில் தனது இணையதளம் தொடர்ந்து சில விஷமிகளால் சிதைக்கப்பட்டதாலும், இணையதள தகவலுக்கு அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை விதித்ததாலும் சீனாவுக்கான தனது சேவையை கூகுள் மூடிவிட்டது.

ஆனால், இந்த நடவடிக்கைகளுக்கான பின்னணி காரணத்தை விக்கிலீக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.

சீன ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட நிர்வாக குழுவான பொலிட்பீரோவில் 5-வது முக்கியத் தலைவராக இருப்பவர் லீ சங்சன். கூகுள் இணையதளத்தில் அவர் தனது பெயரை டைப் செய்து தேடியபோது அவரைப் பற்றி கடுமையாக விமர்சித்து எழுதப்பட்ட ஏராளமான இணையதளப் பக்கங்களின் தொடர்புகள் வந்துள்ளன. இதனால், கோபமடைந்த அவர் கூகுள் இணையதளத்தை சட்டவிரோதமாக சிதைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இத்தகவலை விக்கிலீக்ஸ் இணையதளம் தற்போது அம்பலப்படுத்தியுள்ளது. மேலும், விக்கிலீக்ஸை மேற்கொள் காட்டி பிரிட்டனில் இருந்து வெளிவரும் "கார்டியன்" நாளிதழில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

தன்னுடைய அபாரமான வளர்ச்சியினால் கதாநாயக நடிகர்களையே கதிகலங்க வைத்த கவுண்டமணி...!

கண்களெல்லாம் சுருங்கிப் போய் கன்னத்து எலும்பெல்லாம் நீட்டிக் கொண்டு வறுமையில் அடிபட்டவரைப் போல “பதினாறு வயதினிலே' படத்தில் அறிகமான கவுண்டமணி குறுகிய காலத்துக்குள் எட்ட முடியாத உயரத்தை தொட்டமைக்குக் காரணம் அவரின் வித்தியாசமான குரல் சிரிப்பை வரவழைக்கும் நடையுடை பாவனை மற்றும் அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும்.

நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்த சந்திரபாபு, நாகேஷ் ஆகியோரையே மிஞ்சி ஊதியம் வாங்குவதிலும் சாதனை படைத்த கவுண்டமணியின் சொந்த ஊர் உடுமலைப் பேட்டை. விவசாய குடும்பத்தில் பிறந்த இவருக்கு சிறு வயதிலேயே நடிக்க வேண்டும் என்ற வெறியிருந்தது.

எனவே தனது 12 ஆவது வயதிலேயே நாடக கம்பனியில் சேர்ந்தார். “போய்ஸ்' கம்பெனி முதல் ஜோதி நாடக சபா வரை எல்லாவற்றிலும் நடித்த இவருக்கு கூச்சம், பயம், எல்லாம் போய் நம்மாலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது.

இதனால் பாரதிராஜா, “16 வயதினிலே' என்ற படத்தினை இயக்க தொடங்கிய போது ஏற்கனவே கவுண்டமணியை நாடகமொன்றில் பார்த்திருந்தமையினால் ரஜினியுடன் “ஆமாம்' போடும் சிறிய வேடத்திற்கு இவரை தெரிவு செய்தார். சிறிய வேடமாக இருந்தாலும் அதில் தன் முழுத் திறமையை காட்டி கை தட்டல் வாங்கினார்.

ஆரம்பத்தில் சிறிய வேடங்களே அதிகமாக கிடைத்தாலும் அவற்றிலும் தனக்குப் பிடித்ததை மட்டுமே எடுத்து நடித்தார்.

“மலையூர் மம்பட்டியான்' என்ற படத்தில் அறிகமான “செந்திலுடன்' இணைந்து நடிக்கக் கூடிய சந்தர்ப்பம் கவுண்டமணிக்கு கிடைத்த போது இருவரினதும் கூட்டு மற்ற நகைச்சுவை நடிகர்களின் வாய்ப்புகளுக் கெல்லாம் வேட்டு வைத்தது.

“நான் பாடும் பாடல்', “உதய கீதம்', “வைதேகி காத்திருந்தாள்' என்று தொடங்கிய கவுண்டமணியின் அதிரடி ஆட்டம், கரகாட்டக்காரனின் மெகா வெற்றியினால் உச்சத்துக்குப் போனது. ஒரு படத்துக்கு இவ்வளவு என்று சம்பள வாங்கியவர் ஒரு கால்ஷீட்டுக்கு இவ்வளவு என வாங்கினார்.

மிகப் பெரிய இயக்குனர்கள் மற்றும் நட்சத்திர நடிகர்கள் கூட இவரின் திகதிகளுக்காக காத்துக் கிடந்தனர். ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், ராமராஜன், கார்த்திக் என அன்றைய முன்னணி நடிகர்கள் அனைவருமே இவரின் திகதிக்காக காத்திருந்தனர்.

“என் ராசாவின் மனசிலே' படத்தின் மூலம் அறிகமான “வடிவேலு' இவருடன் சேர்ந்து கமலஹாசன் கதாநாயகனாக நடித்த ஆர். வி.
உதயகுமான் “சிங்கார வேலன்' படத்தில் நடித்த போதும் கவுண்டரின் அட்டகாசமான நடிப்பினால் வடிவேலுவால் கூட எடுபட முடியவில்லை.

இவர் அர்ஜுனுடன் இணைந்து நடித்த கர்ணா, ஜென்டில்மேன் உட்பட பல படங்கள் மிகப் பெய வெற்றிப் பெற கவுண்டமணியும் ஒரு காரணம் என்ற பரபரப்பான செய்தி அன்றே பரவியது.

அதை மெய்ப்பிக்கும் வண்ணம் சத்யராஜுடன் இணைந்து இவர் நடித்த மாமன் மகள், நடிகர் விஜயகாந்துடன் நடித்த சின்ன கவுண்டர், கார்த்திக்குடன் உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, மேட்டுக்குடி, பிரபுவுடன் நினைவுச் சின்னம், தேடினேன் வந்தது, மிஸ்டர் மெட்ராஸ், ராம ராஜனுடன் எங்க ஊர் பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் உட்பட பல படங்கள் மிகப் பெரிய வெற்றியை ஈட்டின. கவுண்டமணியுடன் செந்தில் இணைந்து நடித்தால் அந்தப் படத்தின் வெற்றி உறுதியென்ற நிலைமை உருவாகிய போது கவுண்ட மணியினால் செந்திலின் மார்க்கெட்டும் உயர்ந்தது.

அதிலும் கரகாட்டக்காரனில் இடம் பெற்ற வாழைப்பழ ஜோக் அந்தப் படத்தை மிகப் பெய வசூலுடன் ஒரு வருடம் ஓடச் செய்து ராமராஜனையும் உயரத் துக்கு கொண்டுபோனது.

செந்திலை பல பாஷைகளில் திட்டி அடித்து, உதைத்து கவுண்டமணி நடிப்பது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
செந்திலின் ப்ளஸ் பொயிண்ட் அவரின் உடல் அமைப்பாகும். எதை சொன்னாலும் புரியாததைப் போல அப்பாவியாக நிற்பதனால் ஒரு மாறுதலுக்காக அவரை இவர் கலர் கம்பித் தலையா, அடுப்புச் சட்டித் தலையா, அரிசி மூட்டைக்கு அண்டர்வெயார் போட்ட மாதிரி வாரான பாரு என்றெல்லாம் பேசும் போது ரசிகர்கள் அதை கைத்தட்டி ரசித்தார்கள்.

கே. எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் மெகா ஹிட்டான நாட்டாமையில் செந்திலின் மகனாக கவுண்டமணி வருவார். ஆனாலும் இங்கேயும் கவுண்டமணியின் லொள்ளுக்கு குறைவேயில்லை.

அதேபோல் ஒரு அரசியல் வாதியின் அட்டகாசங்களை மிக ஆளுமையாக நகைச்சுவையுடன் சூரியன் படத்தில் நடித்திருக்கிறார்.

இணைப்பேயில்லாத தொலைபேசியில் இறுமாப்பாக பேசி விட்டு விஷயம் வெளிப்பட்டதும் மிக சகஜமாக பதற்றப்படாமல் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என அதிரடியாக பேசுவது நிச்சயமாக கவுண்டரால் மட்டும்தான் டியும்.

சுந்தர் சிக்கு மிகப் பெரிய வெற்றியினை அளித்த “உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் கதாநாயகன் கார்த்திக்குக்கு இணையாக நகைச்சுவையில் பட்டையை கிளப்பிய கவுண்டமணிக்காக அந்தப் படத்தை எத்தனை றை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

நகைச்சுவை வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த கவுண்டமணி முதன் முறையாக பணம் பத்தும் செய்யும் படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

அந்தப் படத்தின் வெற்றி இவரை பிறந்தேன் வளர்ந்தேன் என இன்னும் சில படங்களில் கதாநாயகன் வேடமேற்று நடிக்க தூண்டினாலும் அவை வெற்றியளிக்கவில்லை.

கவுண்டமணி சினிமாவுக்கு அப்பால் அவரின் பிரத்தியேக வாழ்வில் வித்தியாசமானவர் இவரின் நிஜ வாழ்க்கையைப் பற்றி யாரிடமும் கூற மாட்டார். “கலை நிகழ்ச்சி' என்ற பெயரில் வெளிநாடுகளுக்குப் போகமாட் டார்.

ரசிகர் மன்றங்கள் இல்லை. தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்க மாட்டார். பிறந்த நாள் கூட கொண்டாட மாட்டார். அவரின் குடும்பத்தை யாரும் படமெடுக்க அனுமதிக்க மாட்டார். இவரின் திரைப்படங்கள் படப்பிடிப்பு நடக்கும் தளத்துக்குக் கூட இவருடைய குடும்பத்தினர் யாரும் வந்ததில்லை.
இரண்டு பெண்களும் மண முடித்து விட்டு தாத்தாவாகிவிட்ட நிலையிலும் இவர் மேக் அப் இல்லாமல் வெளியே வரமாட்டார்.

கவுண்டமணி நடித்த திரைப்படங்களை எடுத்து நோக்கும் போது ஒரு விடயத்தை தெரிந்து கொள்ளலாம். அவர் சமூகத்தின் உயர்வுக்காகவோ அல்லது அதன் எழுச்சிக்காகவோ எந்தக் கருத்தையும் தன் படங்களில் சொல்வதில்லை.

அவரின் ஒரே குறிக்கோள் தன்னுடைய படத்தை அல்லது தான் பங்குபற்றிய பங்களிப்பினை வழங்கிய படத்தை பார்க்க வருபவர்கள் கவலைகளை மறந்து வாய்விட்டு சிரிக்க வேண்டும்.

நல்லதோ கெட்டதோ கவுண்டரின் நகைச் சுவையினை மக்கள் ரசிக்க வேண்டும்.
சிரிக்க வேண்டுமென்பதே இவன் குறிக்கோளாக இருந்தது.

மேலும் இவரால் தயாப்பாளர்கள் இலாபம் சம்பாதிக்க வேண்டும். நஷ்டமடையக் கூடாது. இன்று பட வாய்ப்பின்றி வீட்டிலிருந்தாலும் மகிழ்ச்சியுடனேயே இருக்கிறார்.

கவுண்டமணியைப் போலவே வடிவேலு இன்று கொடிகட்டிப் பறக்கிறார்.

மணித்தியாலயத்துக்கு இவ்வளவு என பேரம் பேசி பிஸியாக நடித்து வரும் வடிவேலு கூட கவுண்டமணியின் பாணியைத் தான் பின்பற்றி வருகின்றார்.

கவுண்டர் செந்திலுடன் கூட்டாக சேர்ந்து சிரிக்க வைத்தார். வடிவேலு பல பேரை கூட்டணி சேர்த்து சிரிக்க வைக்கிறார். வழிகள் வேறாக இருந்தாலும் நடிப்புப் பாணி ஒன்றாகத்தானிருக்கிறது.

என்றாலும் “கவுண்டமணி'யின் நகைச்சுவைக்கு என்றுமே அழிவில்லையென்பது தான் உண்மை.

அன்றைய நட்சத்திர நடிகர்களையே கதிகலங்க வைத்த கவுண்டமணி உண்மையி லேயே ஒரு வித்தியாசமான நகைச்சுவை நடிகர்தான்.

தமிழ்நாடு, கேரளாவை தளமாக பயன்படுத்த `லஸ்கர்-இ-தொய்பா' முயற்சி

தென்இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபடுவதற்காக, லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் தமிழ்நாடு மற்றும் கேரளாவை தளமாக பயன்படுத்த முயன்ற தகவலை, விக்கி லீக் இணைய தளம் வெளியிட்டுள்ளது.

தமிழகம்-கேரளா

விக்கி லீக் என்ற இணைய தளம், அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள தூதரகங்கள் பரிமாறிக்கொண்ட ரகசிய தகவல்களை அம்பலப்படுத்தி உள்ளது. அதில் இந்தியா தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

கடந்த 2009-ம் ஆண்டு ஜுன் மாதம் 19-ந்தேதி அமெரிக்க வெளியுறவு துறை வெளியிட்ட ரகசிய தகவல் ஒன்றில் பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்பட்டுவரும் லஸ்கர்-இ-தொய்பா இயக்கம், தமிழகம் மற்றும் கேரளாவில் தளம் அமைக்க முயன்ற தகவலும் அதில் இடம் பெற்றுள்ளது.

இலங்கையில்

இலங்கையில் அந்த இயக்கத்தின் மையம் ஒன்று செயல்பட தொடங்கிவிட்டதாகவும், தென் இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக தமிழ்நாடு மற்றும் கேரளாவை தளமாக பயன்படுத்திக்கொள்ள அந்த இயக்கம் முயன்று வருவதாகவும் அந்த தகவலில் இடம் பெற்றுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலும் தனது பயங்கரவாத செயல்பாட்டை விரிவுபடுத்த முயன்ற தகவலையும் விக்கி லீக் அம்பலப்படுத்தி உள்ளது. விக்கி லீக்கின் இந்த தகவல்களை அமெரிக்க அரசு உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2 குழுக்கள்

விக்கி லீக்கின் அந்த தகவலில், மேலும் இடம் பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:-

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாள நாடுகளில் உள்ள இயக்க உறுப்பினர்களின் ஆதரவுடன் தென்இந்தியாவில் ஷாபிக் கபா ஜி என்ற தளபதி மூலம் 2 குழுக்களை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த தகவல்கள் உடனடியாக இந்தியாவுக்கு அதுபற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் தென் இந்தியாவில் தாக்குதலுக்காக அவர்கள் தேர்வு செய்த இடங்கள் பற்றிய விவரங்கள் அதில் இல்லை.

தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்துவதற்கான தகவல்களை திரட்டவும் தளபதி காபா முயற்சிகளை மேற்கொண்டார்.

நரேந்திரமோடியை கொல்ல சதி

குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடியை படுகொலை செய்யும் திட்டத்தை அரங்கேற்றவும் அவர் திட்டமிட்டு இருந்தார். லஸ்கர் இயக்கத்தின் இந்தியாவை சேர்ந்த உறுப்பினர் ஹுசேன், சமீர் என்ற கூட்டாளியுடன் இணைந்து இதுபோன்ற சதித்திட்டங்களை தீட்டி உள்ளனர்.

மேற்கண்ட விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

கற்பழித்து கொலை செய்த பெண்ணை காட்டிற்குள் வீச கொண்டுசெல்லும் காட்சி

இந்தியா அஸாம் பகுதியில் இந்திய ராணுவத்தினர் சிலர் கூட்டாகச்சேர்ந்து ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்துவிட்டு அப்பெண்ணின் உடலை காட்டிற்குள் வீசுவதற்காக கொண்டு செல்லப்படும்போது எடுக்கப்பட்ட படம்தான் இது என்று சொல்லப்படுகிறது. இப்படத்தினை ஒரு இந்திய ராணுவ வீரர் வெளி உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளார். தனது மனட்சாட்சி தன்னை உறுத்திக் கொண்டிருந்த்மையால்தான் தான் இதனை வெளியிட நேர்ந்தது என்று அவர் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

உள்ளாடை அணியாத நடிகைக்கு கோர்ட் சம்மன்! (படங்கள் இணைப்பு)

பொது நிகழ்ச்சி ஒன்றில் உள்ளாடை அணியாமல் கலந்துகொண்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை யானா குப்தாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

      

தமிழ் திரைப்படங்களான மன்மதன், அந்நியன் போன்ற படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியவர் இந்தி நடிகை யானா குப்தா. இவர் மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற குழந்தைகள் அறக்கட்டளை பொதுநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது உள்ளாடை அணியாமல் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்த நிலையில் அவரை புகைப்படக்காரர்கள் படம் எடுத்தனர்.அந்தப் படங்கள் செய்தித்தாள் மற்றும் இணைய தளங்களில் வெளியானது. இதுகுறித்து சோசியல் நெட் ஒர்க்கில் கருத்து தெரிவித்த யானா, ‘இதுவரை என்னை அயிட்டம் கேர்ள் (கவர்ச்சி நடனம் ஆடுபவர்) என்று கூறினார்கள். இனிமேல் நோ பேன்ட்டி கேர்ள் (உள்ளாடை அணியாத நடிகை) என்று அழைப்பார்கள்’ என குறிப்பிட்டிருந்தார். இதனால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் லக்னோவில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சமூக சேவகர் ரிஸ்வான் அஹமத் என்பவர் யானா குப்தா மீது வழக்கு தொடர்ந்தார். அதில், ‘குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் உள்ளாடை அணியாமல் யானா குப்தா பங்கேற்றது கீழ்த்தரமான செயல். விளம்பரத்துக்காக இப்படியொரு செயலில் ஈடுபட்டுள்ளார். யானா குப்தா, புகைப்படக்காரர் மற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சுசீலா நிராலி ஆகியோருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்’ என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்

இலங்கை அதிகளுக்கு பிறப்பு சான்றிதழ்கள்!

தமிழக அகதி முகாமகளில் உள்ள இலங்கை அகதிகளுக்கு பிறப்பு சான்றிதழ்கள் விநியோகிகப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவுக்கான பிரதி இலங்கை உயர்ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியினால் இவை விநியோகிகப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 16 வருடங்களின் பின்னர் அவர்களுக்கான பிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி தமிழகத்தின் விருதுநகரில் உள்ள வேம்புகோட்டை அகதி முகாதமின் அகதிகளுக்கு நேற்றைய தினம் பிற்ப்பு சான்றிதி;கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக அரசாங்கமும், இலங்கை உயர்ஸ்தானிகரகமும் இணைந்து ஈழ அதிகள் பேரவையின் ஏற்பாட்டில் நடத்திய நடமாடும் சேவை ஒன்றின் போது இந்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது சுமார் 238 சிறுவர்களுக்கான பிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை மதுரையில் இடம்பெற்ற இவ்வாறான நடமாடும் சேவை ஒன்றின் போது, 251 பிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை எஞ்சியுள்ள முகாம்களிலும் இவ்வாறான நடமாடும் சேவைகள் நடத்தி, எதிர்வரும் காலங்களில் பிறப்பு சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி உயர்ஸ்தானிகர் வடிவேலு கிருஷ்ணமூர்தி தெரிவித்துள்ளா.

சனி, 4 டிசம்பர், 2010

புறக்கணியுங்கள் அசின் படத்தை....

அசின் நடித்த காவலன் படத்தைப் புறக்கணியுங்கள் என்று தமிழீழ புரட்சிகர மாணவர்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோ‌ரிக்கை வைத்துள்ளன.

சிங்கள பே‌ரினவாத இன அழிப்பு‌ப் போருக்குப் பின் இலங்கை சென்ற அசின் அவ்வரசின் பிரச்சார ஊதுகுழலாகச் செயல்பட்டதும், திரைப்பட கூட்டமைப்பின் தடையை மீறி இலங்கைச் சென்றதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ‌திமிர்த்தனமாகப் பேசி வருவதும் அனைவரும் அறிந்ததே.

தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை காயப்படுத்திய மலபார் சீமாட்டியின் படமான காவலனை புறக்கணிக்கும்படி ஈழ அமைப்புகளும், மே 17 போன்ற அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.

தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழக இயக்குனர்களும், நடிகர்களும், தயா‌ரிப்பாளர்களும் அசினை புறக்கணிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் கோ‌ரிக்கை.

இதிலாவது நமது சொரணையை நாம் நிரூபித்துக் காட்டுவோம்.

அதிரடி நீக்கம் - தமன்னா.

தனது வேட்டை படத்திலிருந்து தமன்னாவை அதிரடியாக நீக்கியிருக்கிறார் லிங்குசாமி. இப்போது அவருக்குப் பதில் ஆர்யா ஜோடியாக அமலா பால் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

கார்த்தியின் சிறுத்தை, ஹ‌ரியின் வேங்கை என தமன்னா இப்போது பிஸி. அத்துடன் வேட்டை படத்திலும் நடித்து வந்தார். மற்றப் படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்கியதில் வேட்டையை வெறுமையாக விட்டுவிட்டாராம் தமன்னா. இதனால் கோபமான லிங்குசாமி தமன்னாவை மாற்றிவிட்டு அமலாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

இந்த அதிரடி நீக்கத்தைப் பற்றி அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை

9 நட்சத்திரங்கள் 1 பாடலில்.

வித்தியாசமாக ஏதாவது செய்தால் மட்டுமே படம் ஓடும் என்ற ‌நிலை. கே.வி.ஆனந்தின் கோ படத்தில் வித்தியாசமான ஒரு பாடல் காட்சியை முயன்றிருக்கிறார்கள்.

ஹாரிஸ் ஜெயரா‌ஜின் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலில் படத்தின் நாயகன் ‌‌ஜீவாவுடன் ஜெயம் ரவி, ஆர்யா, தமன்னா, சூர்யா, ஸ்ரேயா, பூனம் ப‌ஜ்வா, தனுஷ் ஆகியோர் இணைந்து ஆடுகிறார்கள். இந்த லிஸ்டில் விஜய்யின் பெயரை சேர்க்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது.

கோ-வில் முன்னாள் நடிகை ராதாவின் மகள் கார்த்திகா ஹீரோயினாக நடித்து வருகிறார்.