புதன், 26 ஜனவரி, 2011

62 வது குடியரசு தினம் : டில்லியில் அணிவகுப்புகள் துவங்கியது

புதுடில்லி : நாட்டின் 62வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டில்லியில் மட்டும் சுமார் 35 ஆயிரம் பாதுகாப்பு படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். காலை 9.55 மணிக்கு துவங்கிய குடியரசு தின விழா 11.30 வரை நடைபெறுகிறது. முன்னதாக காலை 9.30 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் தலைமையில் ராணுவ உயர் அதிகாரிகள் அமர்ஜவான் ஜோதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் பிரதமரும், பாதுகாப்பு துறை அமைச்சரும் விஜய் சவுக்கில் சிறப்பு விருந்தினரை வரவேற்றனர். இந்த ஆண்டு குடியரசு தின சிறப்பு விருந்தினராக இந்தோனேஷிய அதிபர் டாக்டர்.ஹஜ் யுதோயோனா கலந்து கொண்டுள்ளார். இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சிறப்பு விருந்தினரை பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.  


குடியரசு தின அணிவகுப்புக்கள் 9.55 மணிக்கு துவங்கி 11.30 வரை நடைபெறுகிறது. செங்கோட்டையில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் வீர தீர செயல்புரிந்த வீரர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். வண்ணமயமாக நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார். காபூலில் நடைபெற்ற பயங்கரவாதிகளுடனான தாக்குதலில் வீரதீர செயல்புரிந்த மேஜர் லைஸ்ராம் ஜோதின் சிங்கிற்கு அசோக சக்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் குடியரசு தினம் : சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதன் பிறகு நடைபெற்ற முப்படை அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார். காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு தமிழக அரசின் சார்பில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இவ்விருதுகளை தமிழக முதல்வர் கருணாநிதி வழங்கினார். அதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.

மீனவர் கொலையான சம்பவம் : 2ம் நாளாக மீனவர்கள் ஸ்டிரைக்

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த புஷ்பவனத்தைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமார், இரண்டு நாட்களுக்கு முன் சேதுசமுத்திரத்திட்டப்பணி அருகே மீன்பிடித்தபோது, இலங்கை ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அரசின் நிவாரண உதவியாக, நாகை டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் ஐந்து லட்சத்துக்கான காசோலையை இறந்த ஜெயக்குமார், மனைவி முருகேஸ்வரியிடம் வழங்கினார். அப்போது, நாகை எம்.பி., விஜயன், எம்.எல்.ஏ., வேதரெத்தினம், மயிலாடுதுறை முன்னாள் எம்.பி., ராஜேந்திரன், நகராட்சி தலைவர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர். ஜெயக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்குப்பின் மயிலாடுதுறை அ.தி.மு.க., எம்.பி., ஓ.எஸ்.மணியன் தலைமையில் மீனவர்களும், அ.தி.மு.க.,வினரும் ஊர்வலமாக எடுத்து வந்து, தாசில்தார் அலுவலகம் முன் சாலை மறியலில் இரண்டு மணி நேரம் ஈடுபட்டனர்.

அப்போது, மத்திய மாநில அரசுகள் இதுபோன்ற படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரியும், நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். அதன் பின், உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டு இறுதிச்சடங்கு செய்தனர். மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் இரண்டாவது நாளாக மீனவர்கள் நேற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம் தாலுகாவைச் சேர்ந்த கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, புஷ்பவனம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டம் தொடரும் என மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

மீனவர் குடும்பத்துக்கு ஆறுதல் கூற ஜெ., வருகை

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த புஷ்பவனத்தைச் சேர்ந்த மீனவர்கள், கடந்த 22ம் தேதி, கடலில் மீன்பிடித்தபோது, இலங்கைக் கடற்படையினர், ஜெயக்குமார் என்ற மீனவரை கழுத்தில்கயிறுகட்டி,சுருக்குமாட்டிகொலை செய்தனர். அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூற, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா இன்று காலை 9 மணிக்கு வேதாரண்யத்துக்கு ஹெலிகாப்டரில் வருகிறார். முன்னாள் ஆசிரியர் பயிற்சி மைய மைதான வளாகத்தில் இறங்குகிறார். அங்கிருந்து தோப்புத்துறை, பெரியகுத்தகை வழியாக, புஷ்பவனம் மீனவர் காலனிக்கு காரில் சென்று, இறந்த மீனவர் ஜெயக்குமார் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் வருகின்றனர். ஆறுதல் கூறிவிட்டு, காலை 11 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டரில் சென்னைக்கு செல்கிறார்


திங்கள், 24 ஜனவரி, 2011

ர‌ஜினி படப் பெயர் ராணா என்று மாற்றம்.


சுல்தான் தி வா‌ரியர் படத்தின் பெயரை மாற்றியிருக்கிறார் ர‌ஜினி.
அனிமேஷன் படமாகத் தொடங்கப்பட்ட சுல்தான் தி வா‌ரியர் இப்போது முழுக்க ர‌ஜினி படமாக மாறியிருக்கிறது. அனிமேஷன் ர‌ஜினி படத்தில் சிறிது நேரமே வருகிறார். மற்றபடி திரையை நிறைப்பவர் நிஜ ர‌ஜினி.சுல்தான் தி வா‌ரியர் என்ற பெயரை ஹரா என்று மாற்றினர். ஹரா சமஸ்கிருதப் பெயர் என்பதால் வ‌ரிவிலக்கு கிடைக்காது. இதன் காரணமாக படத்தின் பெயரை ராணா என்று மாற்றியுள்ளனர்.

முன்பு வதந்தியாக இருந்த இந்தச் செய்தி இப்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

விக்கிலீக்ஸ் ஆவணங்கள் பூமிக்கு அடியில் சுமார் 100 அடி ஆழத்தில் .

ஒட்டுமொத்த உலக நாடுகளையும் உலுக்கிய விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் ஆவணங்கள் ஜேம்ஸ்பாண்ட் பட பாணியில் அதி நவீன பாதாள அறை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் அருகே உள்ள மலைப்பகுதி ஒன்றிலுள்ள மகா பெரிய கிரானைட் பாறை ஒன்றை குடைந்து, பூமிக்கு அடியில் சுமார் 100 அடி ஆழத்தில் பையனென் என்ற தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வரும் பிரமாண்ட செட்டுகளை போன்று அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் தான் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக ஸ்வீடன் தொழில்நுட்ப ஆய்வு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தகவல் மையத்தில் உள்ள சூப்பர் செர்வர்கள் பல நிறுவனங்களுக்கு தங்கள் பணியினை வழங்கிவருகிறது. இங்கு மிதக்கும் கருத்தரங்கு அறை, கண்ணாடி கதவுகள், மரவேலைபாடுகளுடன் அமைந்த அறைகள் போன்றவை பார்ப்பதற்கு பிரமிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விக்கிலீக்ஸ் வைத்துள்ள தகவல்கள் அனைத்தும் அதிக கொள்ளளவு கொண்ட ஒரு மெமரி ஸ்டிக்கின் உதவியால் சேமித்து வைக்கப்பட்டுள்ளன என்றும் அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 14 ஜனவரி, 2011

பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

                                உங்க எல்லோருக்கும் என்னோட இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்      A.S.RAJKUMAR

த்‌ரிஷா - ர‌ஜினி ஜோடி?

ர‌ஜினியை மாடலாக வைத்து சௌந்தர்யா இயக்கி தயா‌ரித்த அனிமேஷன் படம், சுல்தான் தி வா‌ரியர். இதன் பெயரை ஹரா என்று மாற்றியுள்ளனர்.

அனிமேஷன் ர‌ஜினிக்கு ஜோடியாக விஜயலட்சுமி நடித்திருந்தார். அனிமேஷன் ர‌ஜினியை ஒருவேளை ரசிகர்கள் ரசிக்காமல் போனால் ஐம்பது கோடிக்கு மேல் நஷ்டம் என்பதை உணர்ந்து ர‌ஜினி நடிக்கும் சில காட்சிகளை படத்தில் சேர்க்கின்றனர். இந்தக் காட்சிகளை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.

நிஜ ர‌ஜினி பங்குபெறும் இந்தக் காட்சிகளில் அவருக்கு ஜோடியாக த்‌ரிஷா நடித்தால் நன்றாக இருக்கும் என ரவிக்குமார் கூறியதாக தெ‌ரிகிறது. ர‌ஜினியின் முடிவு என்ன என்பது தெ‌ரியாத நிலையில் அவரது பதிலுக்காக ஹரா யூனிட் காத்திருக்கிறது.

அதிக காட்சிகள் பொங்கலுக்கு.

பண்டிகை காலங்களில் திரையரங்குகள் அதிக காட்சிகள் நடத்த அனுமதிக்கப்படுவதுண்டு. வரும் பொங்கலுக்கும் தினம் ஒரு காட்சி அதிகமாக நடத்த தமிழக அரசு அனுமதித்துள்ளது.

இந்தப் பொங்கலுக்கு முக்கியமான நான்கு திரைப்படங்கள் வெளியாகின்றன. காவலன், ஆடுகளம், சிறுத்தை மற்றும் இளைஞன். இதில் மூன்று திரைப்படங்கள் 14ஆம் தேதியும், இளைஞன் 15ஆம் தேதியும் வெளியாகிறது.

பொங்கல் தினமான 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நான்கு காட்சிகளுக்குப் பதிலாக ஐந்து காட்சிகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதேபோல் டூ‌ரிங் டா‌க்கீஸ்கள் காலை காட்சி நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளன.