செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

LIVE STREAMING ICC CRICKET WORLD CUP MATCH WATCH ONLINE 2011


Your Browser Do not Support Iframe
STREAMING FROM : CINEHALL
LIVE STREAMING ICC CRICKET WORLD CUP MATCH WATCH ONLINE 2011
Pop UP விளம்பரங்களை தவிர்த்து பார்வையிட Stream Rajkumarnetworkபரிந்துரைக்கிறது.
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.

திங்கள், 14 பிப்ரவரி, 2011

வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது?

ஏன்? எதற்கு ? என்ற கேள்விகள் எழும் போது தான் மனித அறிவும் மூட நம்பிக்கைகள் பலவற்றிலிருந்தும் விடுபடும் .பல அடிப்படை கேள்விகள் மனித மனங்களுக்குள் இருந்து வருவதே இல்லை. அவற்றில் ஒன்று தான் இது. ஏன் வானம் நீலம்?

சூரியனில் இருந்தோ அல்லது மின்குமிழில் இருந்தோ வரும் ஒளி வெள்ளை நிறமாக இருக்கும் ஆனால் பல நிறங்களை உள்ளடக்கியது. இதனை வானவில்லில் அவதானிக்கலா வாயுமண்டலத்தில் ( ATMOSPHERE ) கூடுதலான சதவிகிதம் (78 % நைற்றஜென்,21 % ஒக்சிஜென்) வாயுக்களும் மிகுதி நீராவியும் மாசுத்துணிக்கைகளும் உண்டு . அவற்றினூடே ஒளி பூமியை வந்தடைகிறது.


ஒளி அலைகள் வேறுபட்ட அலைநீளத்தை உடையவை. சிவப்பு நிறம் கூடிய அலை நீளம் கொண்டது. நீல நிறம் குறைந்த அலைநீளம் உடையது.


கூடிய அலைநீளம் உடைய ஒளி அலைகள் வந்தடைகின்றன. குறுகிய அலைநீளம் உடைய நீல நிற ஒளி வாயுத்துணிக்கைகளால் உறிஞ்சப்படுகிறது. உறிஞ்சிய துணிக்கைகள் அதை கதிர்க்கின்றன. அவை தெறிப்பு அடைந்து நீல நிறமாக வானம் தோன்றுகிறது.

ஒளி காற்று மண்டலத்தில் இடையூறில்லாமல் பயணம் செய்தாலும் காற்றிலுள்ள அணு மூலக் கூறுகள் நீர்த்துளிகள் பனிமூட்டம் போன்றவை ஒளியைச் சிதறடிக்கின்றன. சிதறிய ஒளி மேலும் மேலும் சிதறடிக்கப்படுகிறது. இவ்வாறு நடைபெறும் போது மிக அதிகத்துடிப்புடைய நீல நிறம் மிக அதிகமாக சிதறடிக்கப்படுகிறது. (சிவப்பு மிகக்குறைவாக சிதறுகிறது.)


நாம் பார்க்கும் போது அவ் ஒளி அலைகள் கண்ணை வந்தடைகின்றன. அதனாலேயே பகலில் வானம் நீல நிறமாக இருப்பது போல தோன்றுகிறது. வானம் என்பது வெறுமனே வாயுத்துணிக்கைகள், மாசுக்களால், மேலே கூறப்பட்ட ஒளி ஆல் ஆனதே தவிர அப்படி ஒன்று இல்லை என்பதே உண்மை.


பௌதீக விதிப்படி ஒரு நிறத்தின் ஒளி அலைகளின் நீளம் அதிகமா இருந்தா அவை நம் பார்வைக்குக் கிடைக்காமலே போய்விடும்.

நீல நிறத்தின் ஒளி அலைகள் குறைவாக இருப்பதால் அது நம் கண்களுக்குள் மாட்டிக்கொள்கிறது.

வானம் நீல நிறமாக இருப்பதால் அதை பிரதிபலிக்கும் கடலும் நீல நிறமாகவே இருக்கிறது.


காலைமாலை சூரிய உதயம் அஸ்தமனம் போது மட்டும் அந்தப்பகுதி சிவப்பாக தெரியக்காரணம். சூரியக்கதிர்களில் உள்ள சிவப்பு நிறத்தின் ஒளியலைகளின் நீளம் அப்போ மட்டும் குறைவதுதானாம்!


பூமியின் மேலுள்ள காற்று மண்டலம் தான் காரணம்.சூரிய ஒளி அனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கியது.வானவில்லில் அது தன் தோகையை விரித்து ஏழு வர்ணங்களைக் காட்டுகிறதே அதனுள் மற்ற வர்ணங்களும் அடக்கம். அவை அனைத்தும் ஒளியே ஆயினும் வர்ண வேறுபாடுகளுக்கு காரணம் அந்த ஒளியின் அலைநீளம் மற்றும் துடிப்பு வானவில்லின் வண்ணங்களில் நீல நிறம் மிக அதிகத் துடிப்புடனும் சிவப்பு மிகக் குறைந்த துடிப்புடனும் இருப்பவை.நாம் 'பார்ப்பது' என்பது ஒளி நமது கண்ணில் வந்து படும்போது மட்டுமே. பார்க்கும் பொருட்கள் எல்லாமே அதில் பட்டு திரும்பும் ஒளி நமது கண்ணை வந்தடைவதால் தான் காற்று மண்டலத்தில் பலமாக சிதறடிக்கப்படும் நீல நிறமே மற்ற நிறங்களை விட பெருமளவில் நமது கண்ணில் வந்து விழுகிறது. ஆகவே தான் வானம் நீல நிறம்.


இரவில் நிலவின் ஒளி நட்சத்திரங்களின் ஒளி ஆகியவை பலம் குறைந்த ஒளியாக இருப்பதால் அந்த சிதறல்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. நேராக வரும் ஒளியை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது.

Google Earth 6.. துல்லியமான 3D வசதியுடன்

கூகிள் நிறுவனத்தின் அற்புதத்தில் ஒன்றான Google Earth ன் புதிய பதிப்பான Google Earth 6 இன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய பதிப்பின் மூலம் உலகத்தை இன்னும் உண்மையாக காணக்கூடியதாக உள்ளது.இந்த புதிய பதிப்பில் முப்பரிமாண மரங்கள், உடன் இணைக்கப்பட்ட ஸ்ட்ரீட் விவ் மற்றும் மெருகூட்டப்பட்ட வரலாற்றுரீதியனா படங்கள் என பல்வேறு வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளதாக கூகிள் கூறுகிறது.முப்பரிமாண மரங்கள்

இந்த புதிய கூகிள் ஏர்த் பதிப்பின் மூலம் மிகத்துல்லியமான முப்பரிமாண படங்களை காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக பூமியில் காணப்படும் மரங்கள் கூட மூன்று பரிமாணத்தில் காட்சியளிக்கிறது. இதன் மூலம் நிஜமான சுற்றுலா அனுபவத்தை கூகிள் ஏர்த் மூலம் பெறலாம் என கூகிள் உறுதியளிக்கிறது.

உடன் இணைக்கப்பட்ட Street view


கூகிள் வழங்கிக் கொண்டிருக்கும் Street view சேவையானது இப்போது கூகிள் ஏர்த்துடன் ஒன்றினைக்கப்பட்டு வெளி வந்துள்ளது. இனி கூகிள் ஏர்த்தில் இருந்தவாறே பிரபல நகரங்களின் தெருக்களுக்கு சென்றுவரலாம்.

வரலாற்று புகைப்படங்கள்

கூகிள் ஏர்த்தின் முன்னைய பதிப்பில் உள்ளடக்கப்பட்டிருந்த வரலாற்று ரீதியான படங்களின் தொகுப்பினை இன்னும் இலகுவாக இந்த புதிய பதிப்பில் காணக்கூடியதாக இருக்கும். நீங்கள் ஒரு வரலாற்று புகழ்மிக்க இடத்தினை அடையும் போது அந்த இடம் தொடர்பான வரலாற்று ரீதிய படங்களினை தோற்றுவிக்கும் வசதியே இது.

இவ்வாறு பல வசதிகளை கூகிள் ஏர்த் 6 கொண்டுவந்துள்ளது

வானத்தில் புதிய சூரியன் தோன்றும்:

தற்போதைய உலகில் விண்ணில் பல அதிசயங்கள் நிகழ்ந்து வருகின்றது.இந்நிலையில் வானில் மிகவும் சக்தி வாய்ந்த வெளிச்சம் ஒன்று ஏற்பட உள்ளது.பூமி தோன்றிய நாள் முதல் இது மாதிரியான நிகழ்வு ஏற்பட்டதில்லை.
இந்த வெளிச்சமானது இரவை பகல் போன்று மாற்றும். இந்த நிகழ்வானது ஒரு வாரம் முதல் 2 வாரங்கள் வரை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

அதிசக்தி வாய்ந்த விண் மீன் கூட்டமானது பூமியில் இருந்து 640 வெளிச்சம் ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இந்த விண் மீன் கூட்டங்கள் சிவப்பு நிறத்தில் ராட்சத வடிவிலானவை.

இவற்றின் ஆயுட்காலம் முடியும்போது அவை கூட்டம் கூட்டமாக வெடித்து சிதறும். இவ்வாறு வெடித்து சிதறும்போது வானில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அதிசக்தி வாய்ந்த வெளிச்சம் தோன்றும்.


இது மற்றொரு சூரியன் புதிதாக தோன்றியதை போன்ற தோற்றத்தை உருவாக்கும். இச்சம்பவம் இந்த ஆண்டு இறுதியில் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அப்படி இல்லாவிட்டால் அடுத்த 10 லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு தான் உண்டாகும். இந்த தகவலை ஆஸ்திரேலியாவின் தெற்கு குவின்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் "பிராட்கார்டர்" தெரிவித்துள்ளார்.

பாலியல் கல்வி தேவை தானா?

பாலியல் கல்வி தேவை தானா? இப்போதும் பாலியல் என்பது ரகசியமாகவே உள்ளது.பாலியல் என்பது விவாதிக்கப்படவே கூடாத விஷயம் என்று நினைத்துப் பலர் ஒதுக்குகின்றனர். வெளிப்படையாகப் பேசவும் தயங்குகின்றனர்.
ஏனெனில் இது தேவையில்லாத ஒன்று என்ற மனோபாவத்தை நமது சமூகக் கலாசார அமைப்பு மக்களின் மனங்களில் ஏற்படுத்தி விட்டது.பாலியல் இயல்பான ஒன்று தான். பாலியல் தேவை மனித வாழ்விற்கு முக்கியத் தேவைகளில் ஒன்றாக இருப்பதுடன் இன்றியமையாததாகவும் உள்ளது.

பாலியல் சம்பந்தப்பட்ட உண்மைகளை மறைத்து வைப்பதால் அதன் மீது நாட்டம் உண்டாகி, அது என்னவென்று அறிந்து கொள்ள மேலும் ஆர்வம் ஏற்படுகிறது. இயற்கையாகவே, மறைத்து வைக்கப்பட்ட எந்தவொரு ரகசியத்திற்கும் கவர்ச்சி இருக்கும் என்பதும் அனைவரும் அறிந்ததே.

எனவே, பாலியல் பற்றி அறிய, படங்களும், ஒரு தவறான வழிகாட்டுதலை தருகின்றன. இது ஆண், பெண் இருபாலாரையும் மோசமான பாதைக்கு இழுத்துச் சென்று வேதனை தரும் பின் விளைவுகளுக்கு காரணமாகவும் அமைகிறது.

பாலியல் அறிவை ஊட்டுவதில் குழந்தைப் பருவத்தில் பெற்றோர்க்கும்,இளம் வயதில் ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. மூன்றாவது மனிதர் மூலமாகவோ, மஞ்சள் பத்திரிக்கைகள் வழியாகவோ, மோசமான கதைகள் திரைப்படங்களின் மூலமாகவோ தவறான பாலியல் அறிவு பெறுவதை விட பெற்றோரும் ஆசிரியர்களும் பாலியல் உண்மைகளை அந்தந்த வயதிலேயே அறிவுறுத்துவது நன்மை பயக்கும்.

மேலும் பாலியல் அறிவைச் சிறு வயதிலேயே கற்றுக் கொடுத்தால்தான் அவர்கள் பருவம் அடையும்போது, பொறுப்புள்ளவராகவும் நல்ல சமூகத்தின் உறுப்பினர்களாகவும் விளங்க முடியும், பாலியல் தொடர்பான குற்றங்களும் குறையும்.பாலியல் பிரச்சனைகளால் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், சண்டைகள், தற்கொலைகள் குறையும்.