வியாழன், 24 மார்ச், 2011

கிழக்கு மாகாணத்தில் மூவாயிரத்து ஐநூறு குழந்தைத் தொழிலாளிகள்நாட்டின் பொருளாதார நிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் மட்டும் சுமார் மூவாயிரத்து ஐநூறு குழந்தைத் தொழிலாளிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் போதே கிழக்கு மாகாணத்தில் பொருளாதாரக் கஷ்டம் காரணமாக சுமார் மூவாயிரத்து ஐநூறு குழந்தைத் தொழிலாளர்கள் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிட்டு தொழில்களில் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
கடும் பொருளாதார கஷ்டங்கள் மட்டுமன்றி போதுமான பாடசாலை வசதிகள் இன்மையும் அதற்கு காரணமாக அமைந்துள்ளதாக பிரஸ்தாப ஆய்வின் போது மேலும் தெரிய வந்துள்ளன.அதிலும் குறிப்பாக மட்டக்களப்பின் வாகரைப் பிரதேசத்திலேயே அவ்வாறான குழந்தைத் தொழிலாளர்கள் அதிகமாக இருப்பதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அங்குள்ள குடும்பங்கள் கடும் பொருளாதார சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில், தங்கள் குழந்தைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதற்கான பொருளாதார பலம் அவர்களிடம் இல்லை என்றும் ஊடகங்களின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

செவ்வாய், 8 மார்ச், 2011

இலங்கையர்களை அவுஸ்திரேலியாவுக்குக் கடல் மார்க்கமாக கடத்திய முக்கிய புள்ளி கைது


இலங்கைத் தமிழ் அகதிகளை கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்குக் கடத்துவதில் ஈடுபட்டுவந்த முக்கிய புள்ளி ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தோனேசியாவில் வைத்து இன்னும் பல அகதிகளை கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போதே அவர் இந்தோனேசியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரஸ்தாப நபர் இலங்கை, இந்தியா, மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் கடத்தல் நடவடிக்கைகளுக்கான வலையமைப்பொன்றைக் கொண்டிருந்ததுடன், மேற்குறித்த நாடுகளில் இருந்து தமிழ் மக்களை அவுஸ்திரேலியாவுக்குக் கடத்தும் செயற்பாட்டில்  நீண்ட நாட்களாக ஈடுபட்டு வந்துள்ளார் என்று பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் நோக்கில் அவரிடம் பணத்தைக் கொடுத்து விட்டு காத்து நின்ற நாற்பது பேரளவிலான தமிழர்கள் மட்டுமன்றி வேறு பல நாடுகளைச் சோ்ந்த நபர்களும் அவருடன் சோ்த்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கெதிரான விசாரணைகள் தற்போது சர்வதேச மட்டத்தில் பல நாடுகளின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திங்கள், 7 மார்ச், 2011

அண்டார்டிகாவில் பாரிய பனிக்கட்டி படலம் கண்டுபிடிப்பு

அண்டார்டிகாவின் அடிப்பகுதியில் அமைந்து உள்ள பனிக்கட்டி படலம் மிகப் பெரிதாக 4.2 கி.மீ உயரமுடையதை கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.


இந்த வெள்ளைக் கண்டத்தின் நடுப்பகுதியை ஆய்வு செய்த போது திரவ நிலைத் தண்ணீர் உறைந்து பனிப்படலம் மீது ஏராளமாக குவிந்திருப்பதை கண்டறிந்தனர். சில இடங்களில் இந்தப் பனிப்படலம் நூற்றுக்கணக்கான மீற்றர் அடர்த்தி உடையதாகவும், மொத்தமுள்ள பனிக்கட்டில் பரப்பில் பாதி அளவுக்கு இருக்கிறது என ஆய்வு புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
வியக்க வைக்கும் பல உண்மைகளை தாங்கிய ஆய்வு முடிவுகள் தி ஜர்னல் சயின்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பனிப்படலங்கள் எவ்வாறு விரிவடைகின்றன மற்றும் நகருகின்றன என்பது ஆய்வின் மூலம் தெரிய வரும். மேலும் உலகம் வெப்பமயமாதலின் அண்டார்டிகா எவ்விதம் மாறும் என்ற உண்மையும் வெளிக் கொண்டு வரும்.
இந்த ஆராய்ச்சியின் போது கேம்பர்ட்சேவ் மலைகள் அண்டார்டிகாவின் அடி ஆழத்தில் புதைந்துள்ளன என தெரிய வந்துள்ளது. மேலும் தண்ணீர் எவ்வாறு மலைகளின் பள்ளத் தாக்குதல்களில் பாயும் என்பதை பற்றியும் இந்த ஆய்வு அறிக்கை புள்ளி விவரங்களை கூறுகின்றது.
பனிப் படலங்கள் எப்போதும் மேலிருந்து கீழாக தான் வளரும். ஆனால் இது கீழிருந்து மேலாக எவ்விதம் வளரும் என்பது மிகவும் ஆச்சரியம் தருவதாக உள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
விமான ராடார்கள் மூலம் பனியின் அடர்த்தி, அடுக்குகளாய் மாறும் நிலை மற்றும் பாறைப் படுக்குகளில் பனி படர்தல் கண்டறியப்பட்டது. இதன் மூலம் கடலின் கனிம வளம் பற்றியும் ஆய்வு செய்ய முடிந்தது.
இவ்வாறு கண்டறியப்பட்ட பனிப்படலங்களில் டோம்சிக் பகுதியில் உள்ளவைகள் 800000 பழமையானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

வேற்றுகிரகவாசிகளின் உயிரின படிவங்கள் கண்டுபிடிப்புவேற்றுகிரகவாசிகளின் உயிரின படிவங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இதற்கான ஆய்வை 100 நிபுணர்கள் மேற்கொண்டனர்.
பிரபஞ்சவியல் குறித்த இதழில் விஞ்ஞானி ரிச்சர்டு ஹீவரின் ஆய்வு அறிக்கை பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு அறிக்கை மண்புழு போன்ற உயிரின படங்களுடன் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
பூமிக்கு அப்பால் உருவான இந்த உயிரினம் பாக்டீரியா போன்ற உயிரினத்தை ஒத்ததாக உள்ளது. இந்த பாக்டீரியா படிமம் பூமியைச் சார்ந்தது அல்ல. வேற்று கிரகங்கள் நிலவும் பகுதியை சார்ந்ததாக இருக்கலாம் என அந்த நிபுணரின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியை தவிர இதர கிரகங்களிலும் உயிரினங்கள் வாழலாம் என்பதை எடுத்துக்காட்டுவதாக இது உள்ளது. வேற்று கிரக உயிரின கண்டுபிடிப்பு குறித்து வான் இயற்பியலுக்கான ரூடி ஷீல்ட் மையப் பத்திரிக்கை ஆசிரியர் ஹார்வர்டு ஸ்மித் சோனியன் வெகுவாக புகழ்ந்துரைத்தார்.

துணிந்து இறங்கி கவர்ச்சி காட்டும் நடிகை.

கவர்ச்சி காட்டணுமா? கட்டில் சீனா? எதற்கும் தயார் என பாலிவுட்டையே வியர்க்க வைக்கிறார் பிசின் நடிகை.

தமிழிலும், மலையாளத்திலும் இழுத்துப் போர்த்தி நடித்த பிசின் தெலுங்கில் மட்டும் ஒரேயொரு படத்தில் கவர்ச்சியின் எல்லை தாண்டினார். பாலிவுட்டுக்கு சென்ற பின் விண்ணையே தாண்டுவதாக செய்திகள் வருகின்றன.

பாலிவுட் பேட் பாயுடன் தயார் படத்தில் நடிக்கும் இவர் படுக்கையறை காட்சியில் கண்டபடி உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். அதேபோல் பெ‌ரிய பட வா‌ய்‌ப்பு என்பதற்காக? பீஸில் நடிக்கவும் சம்மதம் தெ‌ரிவித்திருக்கிறார்.

பாம்பு சாப்பிடுற ஊருக்குப் போனால் நடுக்கண்டம் கேட்டு வாங்கணும் என்பது பிசினுக்கு தெ‌ரிந்திருக்கிறது.

வியாழன், 3 மார்ச், 2011

போலிக்கடவுச்சீட்டில் பிரான்ஸ் செல்ல முயன்ற பாகிஸ்தானியர் இலங்கை விமான நிலையத்தில் கைது


போலிக் கடவுச்சீட்டின் மூலம் இலங்கையிலிருந்து பிரான்சுக்குச் செல்ல முயன்ற பாகிஸ்தானியர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை இலங்கையிலி்ருந்து பிரான்சுக்குப் புறப்படுவதற்காக வந்திருந்த ஒரு பயணி சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதைத் தொடர்ந்து கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கின்றார்.
அதன் போது அவர் வைத்திருந்த கடவுச்சீட்டு போலியானது என்று தெரிய வந்துள்ளது. அதனையடுத்து அவர் சந்தேகத்தின் பேரில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவர் ஒரு பாகிஸ்தானியர் என்பது தெரிய வந்துள்ளது. மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன

வைரஸிடம் இருந்து கணினியை காப்பாற்ற 10 வழிகள்


அனைவரின் கணினியிலும் எழும் பொதுவான மிக ஆபத்தான பிரச்சனை வைரஸின் தாக்கமே!...ஒரு சில நிமிடங்களில் நமது கணினியையே காலி செய்துவிடும்.

பாடுபட்டு உழைத்த தகவல்கள், முக்கிய ஆவணங்கள், ஆப்ரேட்டிங் சிஸ்டம் என அனைத்தும் பாதிபடைந்து தங்கள் கணினி முழுவதும் முடக்கப்படும். இதற்க்கு தீர்வுதான் என்ன பொதுவாக வைரஸையை தங்கள் கணினியில் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் ஏனெனில் அது வந்து பின்பு அதை கட்டுப்படுத்துவதும், நீக்குவதும் மிக மிக கடினம். இவற்றை தீர்ப்பதற்கான இலகுவான பத்து வழிகள்.
01. தங்கள் கணினியில் தாங்கள் செய்ய வேண்டிய மிக முக்கிய ஒன்று ஓர் சிறந்த வைரஸ் தொகுப்பு மென்பொருளை நிறுவ வேண்டும். ஆன்டிவைரஸை நிறுவிட்டால் போதுமா! கணினியை வாரத்திற்கு ஒரு முறையாவது முழு வைரஸ் ஸ்கேன் செய்திட வேண்டும்.
02. தங்களுக்கு வரும் இ-மெயில் ஒவ்வொன்றையும் ஸ்கேன் செய்ய மறந்து விடதிர்கள். தாங்கள் கணினிலியே இ-மெயில் மென்பொருள்களை பயன்படுத்தினால் கண்டிபாக ஸ்கேன் செய்ய வேண்டும். அதே மாறி தங்களுக்கு வரும் மெயில்களின் இணைந்து வரும் பைல்களை(ATTACHMENT FILES) கையாளுவதில் அதிக கவனம் தேவை.
03. தங்கள் கணினியில் விண்டோஸ் தரும் FIREWALL யை தவிர்த்து வேறு சில சிறந்த FIREWALL பயன்படுத்துங்கள். ஏனெனில் விண்டோஸ் சிஸ்டம் தரும் FIREWALL அவ்வளவாக பாதுகாப்பு தருவதில்லை. உதரணமாக COMODO, ZONEALARAM போன்றவை.
04. தங்கள் ஆன்டிவைரஸ் தொகுப்பை அதாவது மென்பொருளை கணினி இயங்கும் (START UP) போதே தானாக இயங்க்கும் படி அமைத்திடவும். மேலும் பூட் ஸ்கேன் செயல்படும் படி அமைத்து விடவும்.
05. தங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் தொகுப்பை அடிக்கடி அடிக்கடி அப்டேட் (UPDATE) செய்யவும். தங்கள் நிறுவிய மென்பொருள் நிறுவிய தேதியின் நிலைமையும் பாதுகாப்பை மற்றும் பெற்றுயிருக்கும். அதன் பின்னர் பல சிறப்பு வசதிகளும், புதிய வைரஸ் தடுக்கும் திறனும் வெளியிடப்பட்டிருக்கும். தாங்கள் அப்கேர்ட் செய்வதில் புதிய திறனுடன் தங்கள் ஆண்டிவைரஸ் தொகுப்பு இயங்கும். இதனால் வைரஸ் பாதுகாப்பு இன்னும் அதிகரிக்கும். ஆண்டி வைரஸ் தொகுப்பை அடிக்கடி அடிக்கடி அப்டேட் (UPDATE) செய்யவும்.
06. இணையத் தளங்களில் பார்வையிடும் போது தோன்றும் பாப் அப் விண்டோக்களை கிளிக் செய்வதில் கவனம் கொள்ளுங்கள். மேலும் ஆன்லைன்யில் தங்கள் கணினியை ஸ்கேன் செய்யவா என சில அறிவிப்புகளை தாங்கள் கண்டுயிருக்கலாம், இதில் தாங்கள் கிளிக் செய்தால் போதும் தங்கள் கணினி ஸ்கேன் செய்வதும் போன்றும் வைரஸ்யிருப்பதும் போன்றும் தோன்றும். ஆனால் இங்கு தான் சில விசமிகளின் செயல் உள்ளது. இவ்வாறு தாங்கள் ஆன்லைன்யில் தங்கள் கணினியை ஸ்கேன் செய்யும் போது தங்கள் கணினிக்கு அவர்கள் வைரஸ், மால்வேர், டிரோஜன் போன்றவற்றை அனுப்பிவிடுகின்றன. இவ்வாறனவற்றை பெரும்பாலும் தவிர்க்க பாருங்கள்.
07. இணையம் மூலம் பைல்களை பதிவிறக்கும் போது நம்பிக்கை வாய்ந்த தளங்களில் இருந்து மட்டும் பைல்களை பதிவிறக்கவும். அந்த தளமானது தங்கள் தளத்தில் வைரஸ் எதுவும் இல்லை என உறுதியளிப்பு தரப்பட்டுள்ளதா என அறியவும். மேலும் .EXE OR .COM போன்ற பைல்களை பதிவிறக்குவதில் அதிக கவனம் தேவை.
08. அதே மாறி இலவசமாக கிடைக்கிறது என சந்தையில் கிடைக்கும் தகவல்களை பறிமாறிக் கொள்ளும் சாதனங்களை பயன்படுத்துவதில் கவனம் அதிகம் தேவை...இலவசமாக சிடிகளில் பதிந்து தரப்படும் மென்பொருட்கள், தகவல்களில் தான் அதிக வைரஸ்கள் இடம் பெறுகின்றன.
09. தங்கள் நண்பர்கள் முலம் சிடிகளை பகிர்ந்துக் கொள்வதில் கவனம் தேவை. சிடிகளின் இருக்கும் வைரஸ்கள் அவ்வளவாக தங்களை அடையாளம் காட்டிவதில்லை..தங்கள் கணினியை ஒவ்வொரு முறையும் அணைக்கும் SHUTDOWN செய்யும் போதும்..சிடி டிரைகளில் இருந்து சிடிகளை நிக்கிவிடுங்கள். எனெனில் தாங்கள் கணினியை பூட் செய்யும் போது சிடிகளில் இருக்கும் வைரஸ் தங்கள் கணினியில் பாதிப்பை ஏற்ப்படுத்தகூடும்.
10. REMOVEBLE DRIVEகளான பென்டிரைவ், மெமரிகார்டை போன்றவற்றை பயன்படுத்தும் முன்பு கவனம் தேவை..ஏனெனில் அதிகமாக வைரஸ்கள் REMOVEBLE DRIVEகள் போன்றவற்றால் தான் பரவுகின்றன. ஒவ்வொரு முறை தாங்கள் இந்த REMOVEBLE DRIVE பயன்படுத்தும் போதும் அதை ஸ்கேன் செய்யவும். REMOVEBLE DRIVE என தனி ஆண்டிவைரஸ் மென்பொருட்களை பயன்படுத்துங்கள்.

இலங்கைக்கு வேற்றுக்கிரகவாசிகள் வந்து செல்வதாக இங்கிலாந்து விமானப்படை அதிகாரியொருவர் உறுதிப்படுத்துகின்றார்

இலங்கைக்கு வேற்றுக்கிரக வாசிகள் வந்து செல்வதற்கான ஆதாரங்கள் பல வருடங்களுக்கு முன்பே கிடைத்திருப்பதாக இங்கிலாந்து விமானப்படை அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கையில் கடமையாற்றிய ஓய்வுபெற்ற இங்கிலாந்து விமானப்படை அதிகாரியொருவரே அவ்வாறு தெரிவித்துள்ளார். அதற்கு ஆதாரமாக 2004ம் ஆண்டில் அவர் இலங்கையில் எடுத்த புகைப்படமொன்றை சமர்ப்பித்துள்ளார்.
 பிரஸ்தாப புகைப்படத்தில் வட்டவடிவிலான பறக்கும் தட்டொன்று தென்படுவதுடன், இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் கிறீம் வர்ணங்களைக் கொண்டதாக அது தென்படுகின்றது. அதன் மேற்புறப்பரப்பு இளஞ்சிவப்பு வர்ணத்தில் பளபளத்ததாக பிரஸ்தாப அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
தனது சேவை முடிந்து இங்கிலாந்து திரும்பிய பின் தான் எடுத்திருந்த பறக்கும் தட்டின் புகைப்படத்தை தனது முன்னைய விமானப்படை அதிகாரிகளுக்கு அனுப்பியிருப்பதாக இங்கிலாந்தின் டெயிலி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பின்னால் வந்த விமானமே என் விமானத்தில் மோதியது! கிபீர் விமான விபத்தில் உயிர்தப்பிய விமானி சாட்சியம்

தனது விமானத்தின் பின்னால் வந்த விமானம் தான் ஓட்டிய விமானத்தின் பின்புறமாக மோதியதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக உயிர் தப்பிய கிபீர் விமானி சாட்சியமளித்துள்ளார்.
எதிர்பாராத விதமான மொனாத் பெரேரா ஓட்டிவந்த விமானம் என் விமானத்தின் மீது பின்புறமாக வந்து மோதியதன் காரணமாக என்னால் விமானத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின் தானியங்கி பரசூட் உதவியுடன் விமானத்தை விட்டுக் குதித்தேன் என்று உயிர்தப்பிய விமானி வஜிர ஜயகொடி சாட்சியமளித்துள்ளார்.
கிபீர் விமான விபத்து குறித்து விசாரிக்கவென விமானப்படைத் தளபதியால் நியமிக்கப்பட்டிருக்கும் ஐவர் அடங்கிய விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக விசாரணைக்குழுவினர் விபத்து இடம் பெற்ற பிரதேசத்தை நேரில் ஆய்வு செய்திருந்தனர்.அதன் போது அவர்களுக்கு விபத்து தொடர்பான பல முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகின்றது.
அத்துடன் விபத்துக்குள்ளான விமானங்களின் தானியங்கி ஒளிப்பதிவுக் கருவிகளைப் பரீட்சிப்பதன் மூலமும் மற்றும் விபத்துக்குள்ளான விமானங்களின் பின்னால் பறப்பில் ஈடுபட்ட மிக் மற்றும் எப்16 ரக விமானங்களின் விமானகளின் சாட்சியம் என்பவற்றைக் கொண்டு   மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் விமான விபத்துக்கு இயந்திரக் கோளாறு காரணம் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.