சனி, 30 ஏப்ரல், 2011

இன்னொரு பூமி இருக்குமா?


ன்றுவரை 230 அயல் கோள்கள் கண்டு பிடிக்கப்பட்டு உறுதி செய்யப் பட்டிருக்கின்றன. இதில் ஜெப்ரி மார்சி என்பவர் தலைமையிலான அமெரிக்க ஆராய்ச்சிக் குழு மட்டும் 150 கோள்களைக் கண்டுபிடித்திருக் கிறது. நமது பால்வீதியில் மட்டும் 10 ஆயிரம் கோடி கோள்கள் இருக்கலாம் என்று ஜெப்ரி மார்சி தெரிவித்திருக் கிறார். இதில் வியாழன் போன்ற வாயுக்கோளங்கள் 600 கோடி இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பூமியைப் போன்று 10 லட்சம் கோள்கள் இருக்கலாம் என்று டெப்ராபிசர் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.

தற்போது 5 கோள்களில் பூமியைப் போன்று தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 கோள்களில் உயிரினம் இருக்க வாய்ப்பிருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மெக்சிகோ அருகே விழுந்த ஒரு விண்கல்லில் சர்க்கரைப் படிவு காணப்பட்டிருப்பதால், உயிரினம் உள்ள அயல்கோள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அயல்கோள்களில் மனிதர்களைப் போன்ற அறிவுமிக்க உயிரினங்கள் இருக்கின்றனவா? என்று கண்டுபிடிப்பதற்கான திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தி வருகிறது. நமது பூமியின் கடலின் அடியில் உள்ள எரிமலை களிலும், வடதுருவப் பனிப் பிரதேசத்திலும், வறண்ட பாலைவனங் களிலும் நுண்ணுயிரிகள் இருப்பதைப் போல, விண்வெளியில் உள்ள அயல்கோள்களிலும் உயிரினங்கள் ஏற்கெனவே தோன்றி வாழ்ந்து கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக டெப்ராபிசர் தெரிவித்துள்ளார். பூமிக்கு அருகில் உள்ள அயல்கோள்களில் உயிரினங்கள் இருந்தால், அதை 10 ஆண்டு களுக்குள் கண்டுபிடித்துவிடலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

பூமியில் இருந்து 44 ஒளிஆண்டு தூரத்தில் உள்ள `உர்சா மேஜர் என்ற நட்சத்திரத்தை ஒரு கோ ளானது, சூரியனை பூமி சுற்றிவரும் தூரத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அக்கோளில் தண்ணீரும், உயிரினங்களும் காணப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

`இரவில் நான் கோடிக்கணக்கான நட்சத் திரங்களைப் பார்க்கும்போது அவற்றில் உயிரினங்கள் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது என்கிறார், டெப்ரா பிசர்.

பிரமாண்டமாக இடம்பெற்று முடிந்த இளவரசர் வில்லியம் திருமணம்!

இளவரசர் வில்லியம் கேட் மிடில்டன் ஆகியோரின் திருமண அதிகாரபூர்வமாக, வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் இனிதே நிறைவேறியது.

இந்தத் திருமண வைபவம் மற்றும் அதனோடு இணைந்த மணமகன் மணமகள் ஆகியோரின் ஊர்வலம் என்பனவற்றைக் காண்பதற்காக லண்டன் நகர வீதிகளில் இன்று காலை முதலே பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூடியிருந்தனர்.

உள்ளுர் நேரப்படி காலை 8.30முதல் வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்திற்கு  வருகை தர ஆரம்பித்தனர்.உலக நாடுகள் பலவற்றின் ஊடகவியலாளர்கள் ஏற்கனவே லண்டன நகரில் குவிந்திருந்தனர்.பல ஊடக நிறுவனங்கள் காலை முதலே விவரணங்களுடன் கூடிய நேரடி ஒலி, ஒளிபரப்புக்களை வழங்க ஆரம்பித்துவிட்டன.பிரிட்டனின் பிரபல பாடகர் சேர் எல்டன் ஜோன், அரச குடும்ப உறுப்பினர்கள், பல வெளிநாட்டுப் பிரமுகர்கள், மன்னர்கள், உட்பட அழைக்கப்பட்ட பிரமுகர்கள் தேவாலயத்துக்கு வருகை தந்திருந்தனர்.இங்கிலாந்து அரசகுடும்ப  முறையில் அதிகார பூர்வமாக  திருமணச் சடங்கு இடம்பெற்றது.


வியப்பில் ஆழ்த்தும் சிறுமியின் நடனம்!


வியப்பில் ஆழ்த்தும் சிறுமியின் நடனம்! அடங்கப்பா.......

கண்களால் பால் சொட்டும் வியத்தகு மனிதன்!


சாதனைகள் என்பது பலரகம் ஒவ்வொன்றும் ஒருரகம்.  இதுவும் ஒரு வேறுபாடான  சாதனைதான். துருக்கியைச் சேர்ந்த Mohamed Yilmaz என்ற இளைஞர் ஒரு கோப்பை பாலினை மூக்கின் மூலம்   உறிஞ்சி. உறிஞ்சப்பட்ட பாலினை கண்வழியே  2 மீட்டர்  70 செண்டி மீட்டர்   தொலைவிற்கு  பீறிட்டுப்பாய்ச்சி உலக சாதனை புரிந்துள்ளார்.


துடிக்கும் பாம்புகளை கடித்து உண்ணும் வியத்தகு மனிதன்! காணொளி இணைப்பு


இந்தியாவை சேர்ந்த இந்த இளைஞன் பாம்புகளுடன் மிக சாதரணமாக பழகிறான். இந்த இளைஞனின்  உடல்களில் அங்கங்கே பாம்பு தீண்டுகின்றது ஆனால் ஒரு மாற்றம் இல்லை அவனில்… பாம்பு வளைந்து நெளிந்து துடிக்கிறது அவனோ மிக இயல்பாக  பாம்பின் வால் பகுதியில் இருந்து கடித்து ருசித்து ரசித்து  உண்கிறான் அந்த காட்சியை நீங்களும்தான் பாருங்களேன்.

“ராணா” படப்பிடிப்பு தொடக்கம்; சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்


நடிகர் கார்த்தி&ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம்மொடக்குறிச்சி : நடிகர் கார்த்தி & ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் கொடுமுடி அருகே கிராமத்தில் உள்ள மணப்பெண் வீட்டில் நேற்று நடந்தது. நடிகர் சிவகுமார் & லட்சுமி தம்பதியின் இளைய மகன் கார்த்தி. பருத்தி வீரன் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை ஆகிய படங்களில் நடித்துள்ளார். சென்னையில் பிஇ படித்த அவர், அமெரிக்காவில் உள்ள பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். பட்டம் பெற்றுள்ளார்.

கார்த்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர், ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள குமாரசாமி கவுண்டம்பாளையம் விவசாய குடும்பத்தை சேர்ந்த சின்னசாமி & ஜோதி மீனாட்சி தம்பதியின் மகள் ரஞ்சனியை மணக்கிறார். ரஞ்சனி எம்ஏ ஆங்கில இலக்கியம் படித்து முடித்துள்ளார். இவரது தம்பி ராம்குமார், சென்னை லயோலா கல்லூரியில் எம்பில் படித்து வருகிறார்.

கார்த்தி & ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் நேற்று மதியம் மணமகள் இல்லத்தில் நடந்தது. நடிகர் சிவகுமார், அவரது மனைவி லட்சுமி, மூத்த மகன் நடிகர் சூர்யா, தங்கை பிருந்தா, அவரது கணவர் சிவகுமார், சூர்யாவின் மகள் தியா கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் குமாரசாமி கவுண்டம்பாளையம் விநாயகர் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு மணப்பெண் வீட்டுக்கு வந்தனர். நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு இரு தரப்பிலும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

கார்த்தி, சூர்யா வருவதை அறிந்த கிராம மக்களும் ரசிகர்களும் ஏராளமானோர் குமாரசாமி கவுண்டம்பாளையத்தில் நேற்று குவிந்திருந்தனர். கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. நடிகர் கார்த்தி மணக்கப்போகும் பெண், தங்கள் கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் கிராமமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கார்த்தி & ரஞ்சனி திருமணம் கோவை கொடீசியா வளாகத்தில் ஜூலை மாதம் 3ம் தேதி நடக்க உள்ளது.

அடிப்படை வசதிகள் இல்லாத 2500 பள்ளிகளுக்கு நோட்டீஸ்

Schoolசென்னை : அடிப்படை வசதிகள் இல்லாத 2500 பள்ளிகளுக்கு அரசு திடீர் நோட்டீஸ் விடுத்துள்ளது. மே 31 ம் தேதிக்குள் பள்ளிக்கு சொந்தமாக நிலம், கட்டிடம், நூலகம், ஆய்வுக்கூடம் போன்ற வசதிகளை ஏற்படுத்தாவிட்டால் மூடப்படும் என்றும் கெடு விதித்துள்ளது. கடந்த 2003 ஆண்டு கும்பகோணத்தில் ஒரு தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் இயங்கும் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் கட்டுப்பாடுகளை அரசு கொண்டு வந்தது.

அதன்படி அனைத்து பள்ளிகளிலும் தீத்தடுப்பு சாதனங்கள் பொருத்த வேண்டும். எந்தப் பள்ளியும் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய கூரைக் கொட்டகையில் இயங்க கூடாது. தனியார் பள்ளிகள் அனைத்தும் கான்கிரீட் கட்டிடத்தில்தான் இயங்க வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அத்துடன் மாநகராட்சி பகுதி பள்ளிகளாக இருந்தால் 6 கிரவுண்ட், நகராட்சி பகுதிக்கு 8 கிரவுண்ட், மாவட்ட தலைநகரில் 10 கிரவுண்ட், பேரூராட்சியில் 1 ஏக்கர் நிலம், கிராம ஊராட்சியில் 3 ஏக்கர் நிலம் உள்ள இடத்தில்தான் பள்ளிகள் இயங்க வேண்டும். 400 சதுர அடியில் வகுப்பறைகள் இருக்க வேண்டும், ஆய்வுக் கூடம், நூலகம், விளையாட்டு திடல் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த 2005ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் கல்வி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இறுதியாக 1500 பள்ளிகள் விதிமுறைகளுக்கு உட்படவில்லை என்று கருதி ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையே நிலம் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையே 2009ம் ஆண்டு மத்திய அரசு கட்டாய கல்வி உரிமை சட்டம் கொண்டு வந்தது. தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டம் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டம் செயல்படுத்த வேண்டும் என்றால், அரசு ஏற்கெனவே அறிவித்த விதிமுறைளை தனியார் பள்ளிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதனால் 31.5.2011 வரை காலக்கெடு விதிக்கப்பட்டது. இது அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது.

இதையடுத்து அனைத்து நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு மெட்ரிக் இயக்குனர் நோட்டீஸ் அனுப்பி வருகிறார். அந்த நோட்டீசில், நிலம் குறைவாக உள்ள பள்ளிகள் எக்காரணம் கொண்டும் மாணவர்களை அந்த பள்ளியில் சேர்க்க கூடாது.

தொடர்ந்து பள்ளியை நடத்தக் கூடாது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள அங்கீகாரம் பெற்ற விதிமுறைக்குட்பட்ட பள்ளிகளில் சேர்க்க வேண்டும். முறையாக அரசு அனுமதி பெற்ற பிறகே பள்ளியை நடத்த வேண்டும். மீறி நடத்தினால் அந்த பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அரசு விதிமுறைகள்படி செயல்படாத 300 நர்சரி, பிரைமரி பள்ளிகள், குறைவாக நிலம் உள்ள 2000 மெட்ரிக் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மீறி செயல்படும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும், மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி நாள் ஒன்றுக்கு ஸி10000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரிக்குலேஷன் இயக்குனர் அந்தந்த மாவட்டங்களில் கூட்டம் போட்டு விளக்கம் அளித்தும் வருகிறார். இதனால் இந்த ஆண்டு 2500 பள்ளிகள் இயங்குமா எந்த சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

அவகாசம் கேட்கின்றன தனியார் பள்ளிகள்

பள்ளிகளுக்கு வந்துள்ள நோட்டீஸ் குறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சங்கத்தின் செயலாளர் நந்தகுமார் கூறியதாவது: அரசு உத்தரவு எண் 48ன்படி ஒரே இடத்தில் நிலம் வாங்குவது என்பது இயலாத காரியம். இந்த அரசு உத்தரவு அரசுப் பள்ளிகளுக்கும் பொருந்தும். ஆனால் தனியார் பள்ளிகளை மட்டுமே குறிவைத்து அரசு நோட்டீஸ் அனுப்பி வருகிறது.

ஆகவே இந்த உத்தரவை அரசு ரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் மேலும் கால அவகாசம் கொடுக்க வேண்டும். இரண்டும் இல்லை என்றால் அரசு உத்தரவை திருத்த வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு கால அவகாசம் கொடுக்கவில்லை என்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்.
இவ்வாறு நந்தகுமார் தெரிவித்தார்.

வியாழன், 28 ஏப்ரல், 2011

என்ன கொடுமை சார்

[stalin-murugan.jpg]

இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி

தா.பாண்டியன் என்னவோ… தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பங்கை வாங்கி சொத்து குவித்ததாக மீடியாவில் காட்டி என்னவோ பெரிதாக சாதித்து விட்டதாக ….காட்டும் ஐயா கலைஞர் அவர்களே…
இதோ உங்கள் சொத்து..பட்டியல்..எங்களுக்கு தெரிந்த வரை
தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம்.
*1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை. இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன்.
இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.

ருணாநிதியின்
பக்கம் 81,82 ல்…………..
*விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.
இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்…………….
* பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன்.
பக்கம் 92,93 ல்…………………………
* பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்.
இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.
இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.
திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்.

விண்டோஸ் இயங்கு தளம் வரலாறு

உலகின் 90சதவிகித கணினிகளில் பயன்படுத்தப்படும் விண்டோஸ் இயங்குதளம்(Operating System)முதல் பதிப்பிலிருந்து,வரப்போகும் விண்டோஸ் 7 வரை அடைந்துள்ள மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்களை படங்கள் மூலம் சுவாரஸ்யமாக அலசலாம்.

1) விண்டோஸ் 1.0

விண்டோஸ் இயங்கு தளத்தின் முதல் 7 பதிப்பை 1983 ஆம் ஆண்டிலேயே பில் கேட்ஸ் அறிவித்திருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்துடனான சட்ட சிக்கலில் மாட்டிகொண்டதால் 1985 ஆம் ஆண்டு தான் அறிமுகமானது. MS-DOS இயங்கு தளத்தின் நீட்டிப்பு போன்றே காணப்பட்ட இந்த இயங்கு தளம் தோல்வியடைந்தாலும் மல்டி டாஸ்கிங் மற்றும் சுட்டிக்கு(Mouse) ஆதரவு தந்தது.


2) விண்டோஸ் 2.0

ஆப்பிள் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆப்பிளின் மேக் இயங்குதளத்தின் சில வசதிகளை விண்டோஸ் 2.0 இல் அறிமுகம் செய்தது. இருந்தும் ஒப்பந்தத்தை மீறி 170 காப்புரிமை பெறாத வசதிகளை பயன்படுத்தியதாக மைக்ரோசாப்ட்டை, ஆப்பிள் நீதிமன்றத்திற்கு இழுத்தது தனிக்கதை.


3) விண்டோஸ் 3.0

1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நினைவகத்தை சிறப்பாக கையாண்ட, புதிய வடிவில் வெளிவந்த இந்த பதிப்பே விண்டோசின் முதல் வெற்றிகரமான பதிப்பு. இரண்டு வருடங்களில் ஒரு கோடி வட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. இதன் பிறகே மைக்ரோசாப்ட் தன் முழு கவனத்தையும் இயங்கு தள சந்தையில் செலுத்தியது.


4) விண்டோஸ் 3.11

விண்டோஸ் 3.0 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பே இது. பல் ஊடக(Multimedia)வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வெளியானது.


5) விண்டோஸ் 3.11 NT

32 பிட் ப்ராசசர்களுக்காக உருவாக்கப்பட இந்த பதிப்பு,பொறியாளர்களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே பயன்பட்டதால் அவ்வளவாக வரவேற்பில்லாமல் போனது.

6)விண்டோஸ் 95

1995 ஆம் ஆண்டு வெளியான இந்த பதிப்பு பெரும் வெற்றி பெற்று உலகெங்கிலும் உள்ள மக்களை ஈர்த்தது. இந்த பதிப்பில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இணைய உலாவியும் சேர்ந்தே வந்தது.ஸ்டார்ட் பொத்தான்,டாஸ்க் பார் போன்ற வசதிகள் இந்த பதிப்பிலிருந்தே ஆரம்பித்தது.


7) விண்டோஸ் 98

விண்டோஸ் 95 ஐ ஒப்பு நோக்கும்போது சற்று மேம்படுத்தப்பட்டு, FAT 32 கோப்பு வசதியுடன்,எக்ஸ்ப்ளோரர் உலாவி உள்ளீடு செய்யப்பட்டு வெளிவந்தது.


8) விண்டோஸ் 2000

2000 ஆம் ஆண்டு வெளியான NT வரிசை பதிப்புகளில் மேம்படுத்தப்பட்ட பதிப்பு.

9) விண்டோஸ் ME

இந்த வரிசையில் ஒரு தவறுதலான பதிப்பாக கருதப்படும் ME 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. பாதுகாப்பு குறைபாடுகள், உறுதியற்ற தன்மையுடன் இருந்த இந்த பதிப்பு படு தோல்வியடைந்தது.


10) விண்டோஸ் XP

கோப்புகள் மேலாண்மை(File Management),பாதுகாப்பு,உறுதி,வேகம் என அனைத்து பிரிவுகளிலும் மேம்படுத்தப்பட்டு 2001 ஆம் ஆண்டு வெளியானது. இன்று வரை அலுவலகங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது.


12)விண்டோஸ் விஸ்டா 

பார்வைக்கு புதிய மெருகோடு 2007 ஜனவரி மாதம் வெளியானது. பல மென்பொருட்கள் இந்த பதிப்போடு சரிவர இயங்காததால், மிக அதிக நினைவகத்தை எடுத்து கொள்வதால் பலர் விண்டோஸ் xp பதிப்பையே வைத்து கொண்டுள்ளனர்.


13) விண்டோஸ் 7 

வெளியாகும் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும், சென்ற வாரம் சில டோரன்ட்(Torrent) தளங்களில் முறையற்ற பதிப்பு வெளியாகிவிட்டது. மற்றெந்த பதிப்புகளையும் விட வேகமானதாகவும் இருப்பதாக நம்பப்படுகிறது.செவ்வாய், 26 ஏப்ரல், 2011

சாய்பாபாவின் உடல் அருகே அமர்ந்து சச்சின் டெண்டுல்கர் கண்ணீர் மல்க அஞ்சலி
சாய்பாபாவின் உடல் அருகே அமர்ந்து சச்சின் டெண்டுல்கர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.


டெக்கான் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் விளையாடுவதற்காக ஹைதராபாதில் தங்கியிருந்த சச்சின், பாபாவின் மறைவு செய்தி கேட்டதும் பிறந்தநாளைக் கொண்டாடவில்லை என அவர் தங்கியிருந்த ஹோட்டல் வட்டாரம் தெரிவித்தது.

மிகுந்த சோகமடைந்த சச்சின் காலை உணவு கூட சாப்பிடவில்லை. அவரின் அறைக்குள் யாரையும் நுழைய அனுமதிக்கவில்லை என ஹோட்டலின் மேலாளர் தெரிவித்தார்.

சாய் பாபாவின் மறைவைத் தொடர்ந்து உடனடியாக அவரது அறைக்கதவில் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. அப்போதிலிருந்தே அவர் தனது அணி வீரர்களைக் கூட சந்திக்கவில்லை என்றும் அவர் கூறினார். மும்பை அணியின் உரிமையாளர் டினா அம்பானி மட்டுமே சச்சினை சந்தித்து ஆறுதல் கூறினார்.

சாய்பாபாவின் உடலை தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் பிரசாந்தி நிலையத்தில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் அவரது தீவிர பக்தரான சச்சின் டெண்டுல்கர், மனைவியுடன் புட்டபர்த்தி வந்ததார். சாய்பாபாவின் உடல் அருகே அமர்ந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

கனிமொழியை கைது செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தல்

kanimozhi.jpgஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா  வெளியிட்டுள்ள அறிக்கையில்,’’இன்று மத்திய புலனாய்வுத் துறையால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இருப்பதில் எவ்வித வியப்பும் இல்லை.  இருப்பினும், 20 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி மற்றும் சரத் குமார் ஆகியோரின் பெயர்கள் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றிருக்கும் சூழ்நிலையில், 60 விழுக்காடு பங்குகளை வைத்துள்ள தயாளு அம்மாளின் பெயர் விடுபட்டிருப்பது தான் இதில் உள்ள வியப்புக்குரிய அம்சம். 

214 கோடி ரூபாய் ஷாகித் பால்வாவால் கருணாநிதிக்கு கொடுக்கப்பட்ட லஞ்சப் பணம். மத்திய புலனாய்வுத் துறை வழக்கு பதிவு செய்யவில்லை என்றால், இந்த 214 கோடி ரூபாய் லஞ்சப் பணம் கருணாநிதி குடும்ப உறுப்பினர்களை சென்றடைந்து இருக்கும்.

எனவே, நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால், கருணாநிதி உட்பட, கருணாநிதி குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம்பெற வேண்டும்.  

வெறும் ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டு நான்கு மாதங்கள் ஆகியிருந்த ஜெனிக்ஸ் எக்சிம் வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு ஷாகித் பால்வாவினுடைய ஸ்வான் டெலிகாம் நிறுவனம் 380 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை 17.12.2008 அன்று ஒதுக்கியது.
துபாய் நாட்டைச் சேர்ந்த ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குரூப் என்ற நிறுவனத்தின் தலைவரும், இந்திய நாட்டில் வசிக்காத இந்திய வியாபாரியுமான சையத் முகம்மது சலாவுதீனின் இளைய மகன் அஹமத் சையத் சலாவுதீன் என்பவர் தான் ஜெனிக்ஸ் எக்சிம் சார்பில் ஸ்வான் டெலிகாம் குழுவில் அங்கம் வகிக்கிறார். 

இந்தக் குழுமம் தான், 1970-களில் கட்டப்பட்ட அண்ணா மேம்பாலம் முதல் தற்போது கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற 1,200 கோடி ரூபாய் மதிப்புடைய புதிய தலைமைச் செயலக கட்டிடம் வரை, தி.மு.க. அதிகாரத்தில் இருக்கும் போது கட்டப்படும் அனைத்து கட்டுமானப் பணிகளிலும் தொடர்பு கொண்டிருக்கிறது. தமிழக அரசின் 2,000 கோடி ரூபாய் உயிர் காக்கும் காப்பீட்டுத் திட்டத்தை இந்தக் குழுமம் தான் நடைமுறைப்படுத்திக் கொண்டு இருக்கிறது. 

கருணாநிதியுடன் நீண்ட காலமாக, நெருங்கிய தொடர்புடைய இந்த நிறுவனம் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதை தற்செயலாக ஏற்பட்டிருக்கும் நிகழ்வாக கருத முடியாது. கலைஞர் டி.வி.க்கு சென்ற 214 கோடி ரூபாய்க்கும் மேல், பல கோடி ரூபாய் பணம் கருணாநிதி குடும்பத்திற்காக, ஹவாலா பணப் பரிமாற்றம் மூலம் வெளிநாடுகளில் பாதுகாப்பாக பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்ற கூற்றினை, வாதத்தினை இந்தத் தொடர்பு மேலும் வலுப்படுத்துகிறது.  

கனிமொழி உட்பட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இந்த இமாலய ஊழலில் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் பயனடைந்த கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம்பெற வேண்டும். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்த லஞ்சப் பணம் சென்றடைந்த இடம் முழுமையாக கண்டறியப்பட வேண்டும். 

இந்தியாவிற்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்ட பணம் அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும்.  அப்பொழுது தான் அனைத்து ஊழல்களின் தாயாக விளங்கும் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலின் விசாரணை நியாயமான முடிவினை சென்றடையும்’’ என்று  தெரிவித்துள்ளார்.

சனி, 23 ஏப்ரல், 2011

நீச்சல் உடைக்கு நான் ரெடி ; பார்க்க நீங்க ரெடியா? – சினேகா


ரசிகர்கள் பார்க்க தயாராக இருந்தால் நான் நீச்சல் உடையணிந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என்று நடிகை சினேகா கூறியுள்ளார். புன்னகை மற்றும் ஹோம்லியால் புகழ்பெற்றவர் நடிகை சினேகா. அம்மணியின் சிரித்த முகத்தை பிடிக்கா‌தவர்களே இருக்க முடியாது.
தன்னைத் தேடி வந்த கவர்ச்சி வாய்ப்புகள் பலவற்றை மறுத்து, பல லட்சங்களை இழந்த சினேகா, சமீப காலமாக தனது கிளாமர் லட்சியத்தில் இருந்து இறங்கி வர ஆரம்பித்திருக்கிறார். இதுவரை நீச்சல் உடை, முத்தக்காட்சி, நெருக்கமான டூயட் பாடல்களில் நடிக்காத சினேகாவின் மனதில் இப்போது மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டியில், நான் பத்து வருடங்களாக சினிமாவில் நடிக்கிறேன். எனக்கென்று ஒரு இமேஜையும் உருவாக்கி வைத்துள்ளேன். இதுவரை கவர்ச்சி வேடங்களில் நடித்தது இல்லை. குடும்ப பாங்கான வேடங்களிலேயே நடித்துள்ளேன். குடும்ப கதைகளா சினேகாவை கூப்பிடுங்கள் என்கிற அளவுக்கு எனது கேரக்டர் மக்கள் மனங்களில் பதிந்து உள்ளது.
நீச்சல் உடையில் அறவே நடிப்பது இல்லை என்ற முடிவில் நான் இல்லை. கதைதான் முக்கியம் கதைக்கு நீச்சல் உடை கட்டாயம் தேவை என்ற நிலை ஏற்பட்டால் நீச்சல் உடையில் நடிக்க நான் தயார். என் ரசிகர்கள் எனது கவர்ச்சியை விரும்ப மாட்டார்கள். அவர்கள் விரும்பினால் நடிக்கத் தயார். சமீபத்திய படங்கள் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தன.
மேலும் படங்கள் கைவசம் உள்ளன. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன், என்று கூறியுள்ளார்.

வடிவேலு ஒரு சாக்கடை! டைரக்டர் அமீர் கடும் தாக்கு!!

தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் பற்றி பேசிய நடிகர் வடிவேலு ஒரு சாக்கடை என்று டைரக்டர் அமீர் கூறியுள்ளார். வடிவேலு பிரசாரம் குறித்தும், விஜயகாந்த் குறித்த அவரது விளாசல் பற்றியும் டைரக்டர் அமீர் அளித்துள்ள பேட்டியில், சாமி ஊர்வலத்துக்கும் கூட்டம் வரும்.

சாவு வீட்டுக்கும் கூட்டம் வரும். வேடிக்கை பார்ப்பது தமிழ் மக்களோட தவிர்க்க முடியாத கலாச்சாரம். யாரையும் திட்டிப் பேசினா நாலு பேர் கேட்கத்தானே செய்வாங்க. அந்த மாதிரிதான் வடிவேலுவுக்கும் சிங்க முத்துக்கும் செந்திலுக்கும் கூட்டம் வந்தது, என்று கூறியுள்ளார்.
விஜயகாந்துக்கு கேப்டன்ங்கிற பட்டம் ஏன்னு கேட்கிற வடிவேலுவுக்கு வைகைப் புயல் என்கிற பட்டம் மட்டும் பொருத்தமா? இந்த புயல் எந்த மரத்தை பேத்துச்சு. எந்த வீட்டை இடிச்சுச்சு? வட்ட செயலாளர் தொடங்கி ரவுடிங்க வரைக்கும் அத்தனை பேருக்கும் பட்டம் கொடுத்தே இந்த ஊரு பழகிடுச்சு. விஜயகாந்த்தை பற்றி இவ்வளவு பேசுற வடிவேலு அந்த அம்மையார் விஷயத்தில் மட்டும் ஏன் அடக்கி வாசிக்கணும். ஆட்சி மாறினால் அதோகதி ஆகிடும்கிற பயம்தானே? எப்போதுமே அம்மையார் என்றுதான் அழைப்பேன் என 87 வயசிலும் நாகரிகத்தோடு பேசுகிறார் முதல்வர் கலைஞர். அந்த அசாத்திய நாகரிகத்துக்குப் பக்கத்தில் ஒரு சாக்கடையோட சப்போர்ட் எதுக்கு?, என்றும் கூறியிருக்கிறார் டைரக்டர் அமீர்.

புதன், 20 ஏப்ரல், 2011

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டு இளைஞரொருவர் தீக்குளித்து தற்கொலை

இலங்கைத் தமிழர்களுக்கு நடக்கும் அநீதிகளைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் தமிழ்நாட்டு வாலிபரொருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


ஈழத் தமிழர் படுகொலைகள் குறித்த ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நெஞ்சை உலுக்கும் கொடூரங்கள் மற்றும் ஈழத்தில் இன்னும் தமிழர்களுக்கு எதிராகத் தொடரும் கொடுமைகளால் மனம் வெதும்பி இளம் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி (25) தீக்குளித்து மரணமடைந்தார்.

நெஞ்சைப் பதற வைக்கும் இந்த கொடிய சோகம் நேற்று இரவு நடந்துள்ளது.

நெல்லை மாவட்டம் சங்கரன் கோயில் அருகே உள்ளது சீகம்பட்டி கிராமம். இங்குள்ள ராமசுப்பு என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (25). பிஇ பட்டப்படிப்பு முடித்து ராஜஸ்தானில் எஞ்ஜினீயராகப் பணியாற்றி வந்தார்.

விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார் இந்த இளைஞர். சிறு வயதிலிருந்தே, ஈழத் தமிழர் விவகாரங்களில் பெரும் அக்கறை காட்டி வந்தாராம். இந்த நிலையில் ராஜஸ்தானில் இவருக்கு எஞ்ஜினீயர் பணி கிடைத்ததும் அங்கு போய்விட்டார்.

விடுமுறையில் ஊருக்குத் திரும்பிய கிருஷ்ணமூர்த்தி, தொடர்ந்து ஈழப் பிரச்சினை குறித்தும், அங்கு இப்போது தொடரும் கொடுமைகள் குறித்தும் நண்பர்களுடன் பேசி வந்துள்ளார். ஆனால் பெற்றோரிடம் எதுவும் சொல்வில்லையாம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம், இலங்கையில் நடந்த தமிழர் படுகொலைகள் குறித்த ஐநா அறிக்கை வெளியானது. அதில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், ராஜபக்சே அரசு நடத்திய கொலைவெறி தாக்குதல்களைப் படித்து கலங்கிப்போய்விட்டாராம்.

தீக்குளிப்பு
நேற்று அதிகாலை 5 மணி அளவில், தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ஒவ்வொரு லிட்டராக 3 லிட்டர் பெட்ரோலை, தன் மீது ஊற்றி கொளுத்திக் கொண்டு ஓடினார். அப்போது அவரது தாய், தந்தை மற்றும் சிலர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

ஆனாலும் தன்னுடைய வேதனையை வெளிக்காட்டிக் கொள்ளாத கிருஷ்ணமூர்த்தி, இலங்கையில் தமிழர்களை கொலை செய்துவிட்டார்கள். பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் ராஜபக்சே அரசு கொன்றுவிட்டான். இனி நான் இருந்து என்ன பயன். அதனால் நான் தீக்குளிக்கிறேன். அந்த ராஜபக்சேவை தூக்கில் போடுங்கள்... என்று கதறியபடி கிருஷ்ணமூர்த்தி மயங்கி விழுந்தார்.

உடனே கிருஷ்ணமூர்த்தியை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணமூர்த்தி தான் கைப்பட எழுதிய கடிதம், அவரது குடும்பத்தாரிடம் கிடைத்தது.

அந்தக் கடிதம்: 
அன்று ராவணன் செய்த கொடுமையான செயல்களை இன்று சிங்களவர்கள் செய்து விட்டார்கள். அவர்களுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். இலங்கையில் சிங்களவர்களின் இனவெறி தாக்குதலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அதற்குரிய பலனை பெற்றுத் தர வேண்டும். இலங்கை தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு தனி நாடு என்ற சிறப்பை பெற்றுத் தர வேண்டும்.

அதுவரை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்கக் கூடாது. அப்படி பொறுப்பேற்றால், தயவு செய்து விஷ்ணுவின் பிறப்பு என்று சொல்லிக்கொள்ளும் கோயில்கள் அனைத்தையும் மூடிவிடுங்கள். இந்திய ஆட்சியாளர்கள்தான் இன்றைய சூர்ப்பனகை.

இலங்கை தமிழர்களுக்காக போராடிய போராட்டத்தில் முத்துக்குமாரே சிறந்தவர். இலங்கை தமிழர்களுக்காக போராட மீண்டும் என் ஆஞ்சநேயரை அழைக்கிறேன்.

அப்பா, அம்மா, சீனி, தினகரன் என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கு பிறவியில் கொடுக்கப்பட்ட தொழில் இதுதான். இதை நான் செய்யாவிட்டாலும், மிகப்பெரிய குற்றவாளி நான்தான்," இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

வைகோ நேரில் அஞ்சலி
இந்த தகவல் சென்னையில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தெரிவிக்கப்படவே, பத்திரிக்கையாளர்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக கலிங்கப்பட்டி கிராமத்துக்கு வந்த அவர், சீகம்பட்டி கிராமத்துக்கு 19.04.2011 அன்று காலை 9 மணிக்கு வந்தார்.

கிருஷ்ணமூர்த்தியின் உருவப்படத்தை பார்த்தத வைகோ கண்கலங்கினார். உருவப்படத்துக்கு மாலை அணிவித்துவிட்டு, மவுன அஞ்சலி செலுத்தினார்.

அப்போது பேசிய வைகோ, "தென்மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள இந்த கிருஷ்ணமூர்த்தியின் தியாகம் வெளியே தெரியாமல் இருந்துவிடக் கூடாது. தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்கிற கிருஷ்ணமூர்த்தியின் உயிர் தியாகத்தின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும்.

ஐநா சபையால் போர்க் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும். அதற்காவது இந்தியா உதவ வேண்டும். இல்லையென்றால் இந்தியாவும் குற்றவாளிதான் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுவேன்," என்றார்.

மேலும் பேசிய வைகோ, "இளைஞர்களே போராடுங்கள், ஆனால் தயவுசெய்து உங்களின் உயிர்களை தியாகம் செய்ய வேண்டாம். கிருஷ்ணமுர்த்தியின் குடும்பத்திற்கு அண்ணன் பழ.நெடுமாறன் மற்றும் அமைப்புகளோடு கலந்து ஆலோசித்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பேன்," என்றார்.

தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்திலுள்ள சீகம்பட்டி பிரதேசத்தைச் சோ்ந்த 25 வயது வாலிபரான கிருஷ்ணமூர்த்தி எனும் பொறியியலாளர் ஒருவரே அவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில் ஈழத் தமிழ் மக்களுக்குத்  தொடர்ச்சியாக நடக்கும் அநீதிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின் அவர் தன் உடம்பில் பெற்றோலை ஊற்றி தீமூட்டிக் கொண்டு வீதி வழியாக ஓடிச்  சென்ற போது அவரது பெற்றோர் பின்னாலேயே ஒடிச் சென்று தீயை அணைக்க முயன்றுள்ளனர். முடியாமற் போன பின்பு தீக்காயங்களுடன் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆயினும் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபகரமாக மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளார்.

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

2 நாள் டாஸ்மாக் விற்பனை 141 கோடி ரூபாய்

நேற்று முன்தினம் மாலை, 5 மணியில் இருந்து, நாளை காலை, 10 மணி வரை டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை கிடையாது என்பதால், இரண்டு நாட்களில் மட்டும், 141 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.


தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள், காலை, 10 மணி முதல், இரவு, 10 மணி வரை செயல்படுகின்றன. சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பிரசாரம் முடிவுக்கு வந்த நாளான, 11ம் தேதி, மாலை 5 மணி முதல், "டாஸ்மாக்' கடைகளையும் மூட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. நாளை காலை, 10 மணி வரை கடைகள் மூடித்தான் இருக்கும்.

இரவில் குடிப்பதை, தமது அன்றாட கடமைகளின் ஒன்றாக கொண்டுள்ள "குடிமகன்'கள் தவித்துப் போய்விடுவர் என்பதால், ஆங்காங்கே கள்ளச்சந்தையில் சரக்கு விற்பனை நடந்துகொண்டு தான் இருக்கிறது. இருப்பினும், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தம் தொண்டர்களுக்கு, தாகத்தால் தொண்டை வறண்டுவிடக் கூடாது என்பதற்காக, அரசியல் கட்சி பிரமுகர்களும் முந்தைய நாட்களிலேயே சரக்குகளை வாங்கி இருப்பு வைத்துள்ளனர். அந்த வகையில், 11ம் தேதி காலை, 10 மணி முதல், மாலை, 5 மணி வரை (ஏழு மணி நேரத்தில்) மட்டும், 64 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை நடந்துள்ளது. அதற்கு முந்தைய நாளான 10ம் தேதி காலை முதல், இரவு வரை, 12 மணி நேரத்தில் 77 கோடி ரூபாய்க்கு விற்றுத் தீர்ந்துள்ளது.

பொதுவாக, வார நாட்களில், 40 முதல், 45 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை இருக்கும். வாராந்திர நாட்களான சனி, ஞாயிறுகளில், 60 கோடி ரூபாய் இருக்கும். தேர்தல் ஸ்பெஷலாக, திங்கள்கிழமை, 77 கோடி ரூபாயும், செவ்வாய்கிழமை, 64 கோடி ரூபாயும் விற்றுள்ளது. "டாஸ்மாக்'கின் மாதாந்திர சராசரி விற்பனை 1,800 கோடி ரூபாய். அதையும் இந்த மாத விற்பனை முறியடித்து விடும். ஏனெனில், ஏப்ரல் முதல் தேதியிலிருந்து, 11ம் தேதி வரை மட்டும், 800 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது. "குடிமக்கள் இப்படி கெட்டுவிட்டனரே' என வருத்தப்படுவதற்கு எதுவும் இல்லை. இந்த பணம் தான், நமக்கு கிரைண்டராகவும், மிக்சியாகவும் திரும்ப கிடைக்க போகிறது!

பிரபல பின்னணி பாடகி சித்ராவின் 8வயது மகள் பலி

singer chitras 8years old daughter died  பிரபல பின்னணி பாடகி சித்ராவின் 8வயது மகள் நந்தனா, நீச்சல் குளத்தில் விழுந்து பலியானார்.

பிரபல பின்னணி பாடகி சின்னகுயில் சித்ரா. மலையாளத்தை சேர்ந்தவரான இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஒரியா, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருக்கும் ‌விஜயசங்கர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு 8வயதாகிறது.

இந்நிலையில் துபாயில் இசைநிகழ்ச்சி ஒன்று இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது குழந்தையுடன் துபாய் சென்றார் சித்ரா. சித்ராவுடன் பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், சாதனா சர்க்கம், நரேஷ் ஐயர், பென்னி தயால், விஜய் பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரஹினா உள்ளிட்ட பலர் சென்றனர். இவர்கள் அனைவரும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை பாட இருக்கின்றனர். துபாயின் எமிரேட்ஸ் ஹில்ஸில் உள்ள பிரபல இந்திய தொழிலதிபர் திலீப் ரவுலான் என்பவர் வீட்டில் சித்ரா தனது குழந்தையுடன் தங்கியிருந்தார்.

சித்ராவின் மகள் நந்தனா வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாக அங்கிருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுந்தார். இதனையடுத்து உடனடியாக குழந்தை நந்தனாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் நந்தனா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 15வருடமாக தவமிருந்து பெற்ற மகள் இப்போது கண்முன் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார் சித்ரா.

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

15 சிக்சர் விளாசினார் வாட்சன்

மிர்பூர் : வங்கதேச அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 2&0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. ஆஸி. தொடக்க வீரர் ஷேன் வாட்சன் ஆட்டமிழக்காமல் 96 பந்தில் 185 ரன் விளாசி ஆட்டநாயகன் விருது பெற்றார். ஆஸ்திரேலியா & வங்கதேச அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. முதல் போட்டியில் ஆஸி. அணி வென்று முன்னிலை வகிக்க, 2வது போட்டி மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.

டாசில் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்தது. அந்த அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன் எடுத்தது. ஷாரியர் நபீஸ் 56, மகமதுல்லா 38, ஷுவோ 16 ரன் எடுத்தனர். சிறப்பாக விளையாடிய முஷ்பிகுர் ரகிம் 81 ரன் (80 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்), ஷபியுல் இஸ்லாம் 9 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் ஜான்சன் 3, ஸ்மித் 2, ஹேஸ்டிங்ஸ், வாட்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 50 ஓவரில் 230 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா துரத்தலை தொடங்கியது. ஹாடின் 8 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பான்டிங் ஒரு முனையில் கம்பெனி கொடுக்க வங்கதேச பந்துவீச்சை சிதறடித்த வாட்சன் 69 பந்தில் சதம் அடித்தார். அதன் பிறகு ருத்ரதாண்டவம் ஆடிய வாட்சனை கட்டுப்படுத்த முடியாமல் வங்கதேச பந்துவீச்சாளர்கள் திணறினர்.

ஆஸ்திரேலியா 26 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 232 ரன் எடுத்து அபாரமாக வென்றது. வாட்சன்  185 ரன் (96 பந்து, 15 பவுண்டரி, 15 சிக்சர்), பான்டிங் 37 ரன் (42 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியா 2&0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில், 3வது போட்டி தாக்காவில் நாளை நடக்கிறது.

= ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் சேவியர் மார்ஷல் 12 சிக்சர்களுடன் முதலிடத்தில் இருந்து வந்தார். அவர் 2008ல் கனடாவுடன் நடந்த போட்டியில் இந்த சாதனையை படைத்திருந்தார். வங்கதேசத்துடன் நேற்று நடந்த போட்டியில் 15 சிக்சர் விளாசிய வாட்சன் புதிய உலக சாதனை படைத்து மார்ஷலை பின்னுக்குத் தள்ளினார்.

= ஒரு போட்டியில் பவுண்டரி, சிக்சரில் அதிக ரன் விளாசிய வகையிலும் வாட்சன் (150 ரன்) புதிய சாதனை படைத்தார். முன்னதாக, தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ் 175 ரன் விளாசியதில் (ஜோகன்னஸ்பர்க், 2006) 126 ரன்னை பவுண்டரி, சிக்சரில் அடித்திருந்த சாதனையை வாட்சன் முறியடித்தார்.

= ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன் அடித்த ஆஸி. வீரர் என்ற சாதனையையும் வாட்சன் நேற்று படைத்தார். நியூசிலாந்துக்கு எதிராக ஹேடன் 181 ரன் அடித்ததே முந்தைய சாதனை.

ஒருநாள் போட்டியில்

அதிக சிக்சர் டாப் 10 வீரர்கள்

    வீரர்         ரன்    பந்து      4    6    எதிரணி
1. வாட்சன் (ஆஸி.)    185*    96    15    15    வங்கதேசம்
2. மார்ஷல் (வெ.இ.)    157*    118    11    12    கனடா
3. ஜெயசூரியா (இலங்.)    134    65    11    11     பாகிஸ்தான்
4. அப்ரிடி (பாக்.)    102    40    6    11    இலங்கை
5. டோனி (இந்தியா)    183*    145    15    10    இலங்கை
6. பவுச்சர் (தெ.ஆ.)    147*    68    8    10    ஜிம்பாப்வே
7. ஹேடன் (ஆஸி.)    181*    166    11    10    நியூசிலாந்து
8. பி.மெக்கல்லம் (நியூசி.)    166    135    12    10    அயர்லாந்து
9. ரசாக் (பாக்.)    109*    72    7    10    தெ.ஆப்ரிக்கா
10. இஜாஸ் (பாக்.)    139*    84    10    9    இந்தியா

ஆட்சி மாறினால் நல திட்டங்கள் போய்விடும் : கண்ணீர் விட்டார் வடிவேலு

விழுப்புரம் : நான் சினிமாவில் காமெடி செய்தேன், விஜயகாந்த் அரசியலில் காமெடி செய்கிறார் என நடிகர் வடிவேலு பேசினார். விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜை ஆதரித்து , நடிகர் வடிவேலு நேற்று பிரசாரம் செய்தார். மணலூர்பேட்டை, கொரசப்பட்டு, மூங்கில்துறைப்பட்டு, சவேரியர்பாளையம், மேல்சிறுவலூர் கூட்டுரோடு, வடபொன்பரப்பி, பிரம்மகுண்டம், ராவுத்தநல்லூர், புதுப்பட்டு, கடுவனூர், பகண்டை கூட்டுரோடு, திருப்பாலபந்தல், ஜி.அரியூர் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார்.

அப்போது, நடிகர் வடிவேலு பேசியதாவது: என்னால் திரைப்படங்கள் மூலமாகத்தான் உங்களையும், குழந்தைகளையும் சிரிக்க வைக்க முடியும். ஆனால், உங்களுக்கு அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க முடியாது. அவற்றை செய்து கொடுக்கக்கூடியவர் முதல்வர் கருணாநிதிதான். ஐந்தாண்டுகளில் முதல்வர் கருணாநிதி பல நல்ல திட்டங்களை செய்துள்ளார். கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின் ஆகியோரது ஆசியோடு மதுரையில் பிரசாரத்தை தொடங்கி, ரிஷிவந்தியம் தொகுதியில் முடிக்கிறேன்.

கருணாநிதி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தருகிறார். அந்த அரிசியை உலை வைப்பதற்காக கேஸ் அடுப்பும் கொடுக்கிறார். அது கொதிக்கின்ற நேரம் வரை உலகத்தை பார்க்க டிவியையும் கொடுத்துள்ளார். ஏழை மாணவர்கள் படிப்பதற்காக சமச்சீர் கல்வி கொண்டு வந்துள்ளார். வாரம் 5 முட்டை வழங்குகிறார். மாணவர்களுக்கு 3 சீருடைகளையும் வழங்குகிறார். 

பெண்களுக்கு திருமணம் உதவி தொகையாக ரூ.25,000 கொடுத்தார். இப்போது ரூ.30,000 கொடுக்கப்போகிறார். கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6,000 கொடுத்து வருகிறார். இப்போது ரூ.10 ஆயிரமாக கொடுக்க போகிறார். முதியோருக்கு ரூ.500 கொடுத்து, இப்போது ரூ.750 கொடுக்க போகிறார். 58 வயது கடந்த முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க உள்ளார். மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குகிறார். வேறு ஆட்சி மாறினால். இந்த திட்டங்கள் எல்லாம் போய்விடும்.

விஜயகாந்த் விருத்தாசலத்தில் மக்களிடத்தில் பொய் சொல்லி, அவர்களை ஏமாற்றிவிட்டு ரிஷிவந்தியம் வந்துள்ளார். இங்கு யாரையும் ஏமாற்ற முடியாது. விருத்தாசலத்தை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று சொன்னவர் அவ்வாறு செய்யவில்லை. சினிமாவில் அவர் தர்மம் செய்வது போன்ற காட்சியை பார்த்து மக்கள் ஏமாந்துவிட்டனர்.

அதிமுக கூட்டணி எண்ணையும், தண்ணியும் கலந்தது போல உள்ளது. இரண்டும் ஒன்று சேரவே சேராது. அதை செய்வேன், இதை செய்வேன் என்று கூறும் விஜயகாந்த வெற்றிபெற்றாலும் அந்த அம்மாவிடம் ஒன்றும் கேட்க முடியாது. ஏனென்றால் அந்த அம்மாவின் உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்தியும், செருப்பால் அடித்தும் விஜயகாந்த அவமானப்படுத்தியுள்ளார். 

இதை அந்த அம்மா மறக்கமாட்டார். விஜயகாந்தால் அதிமுக கூட்டணி கெட்டுப்போச்சு. அவருக்கு ஒரு ஓட்டுகூட போடாதீங்க. உடல்நிலையை காரணம் காட்டி மருத்துவமனையில் படுத்துக்கொண்டு அனுதாபம் மூலம் ஓட்டுக்களை பெற விஜயகாந்த் முயற்சிக்கிறார். அவருடைய டெபாசிட்டை காலி செய்யுங்கள். என்னை பயமுறுத்த பார்க்கிறார்கள். என் மக்களை ஏமாற விடமாட்டேன். எம்ஜிஆர் பெயரை பயன்படுத்துவது மிகப்பெரிய தப்பு. விஜயகாந்தை பார்த்தாலே குழந்தைகள்கூட அழுகிறது. நான் சினிமாவில் காமெடி செய்தேன். விஜயகாந்த் அரசியலில் காமெடி செய்கிறார். யாரும் ஏமாந்து விடாதீர்கள்.
இவ்வாறு வடிவேலு பேசினார்.

கண்ணீர் விட்டார் வடிவேலு

நடிகர் வடிவேலு பேசுகையில், ‘‘எங்கள் வீட்டில் 7 பிள்ளைகள். குடும்ப கஷ்டம் காரணமாக 4 தம்பிகளுடன் கண்ணாடி கடையில் வேலை செய்தேன். ^60 சம்பளத்தில் 15 பேரை காப்பாற்ற வேண்டும். ஏழையின் கஷ்டம், அவர்களது வலி எனக்கு நன்றாக தெரியும் என்று சொல்லும்போது வடிவேலு  அழுதார். மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த தன் தந்தையை வறுமையின் காரணமாக காப்பாற்ற முடியாமல் போனதால், அவர் இறந்துவிட்டதாக கூறி வடிவேலு அழுதார். 
இப்போது உள்ளது போல் கலைஞர் காப்பீட்டு திட்டம் அப்போது இருந்திருந்தால் என் தந்தையை காப்பாற்றியிருக்கலாம், என நா தழுதழுக்க கூறினார்.