ஞாயிறு, 22 மே, 2011

வேலைவாய்ப்புகளை தீர்மானிக்கும் - Facebook


பேஸ்புக் எனப்படும் சமூக வலை தளம் ஒருபக்கம் எகிப்து போன்ற நாடுகளில் புரட்சிக்கு வித்திட்டபடியே, மறுபக்கம் விவாகரத்து போன்றவை அதிகம் நிகழ காரணமாக திகழ்வதாகவும் வசை பாடப்படும் நிலையில், தற்போது நிறுவனங்கள் தாங்கள் வேலைக்கு எடுக்கும் ஊழியர்களைப் பற்றிய விவரங்கள் மற்றும் அவர்களது திறமையை பற்றி அவர்களது பேஸ்புக் தளத்திலிருந்து அறிந்து வேலைக்கு தேர்வு செய்வதை தீர்மானிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் இது தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தினர். சுமார் 300 பேஸ்புக் பயனாளிகளின் சுய விவரங்கள், அவர்களது விருப்பு,வெறுப்பு, தொலைக்காட்சிகளில் அவர்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகள், விருப்பமான திரைப்படங்கள், இசை, புத்தகம்,பொன்மொழிகள் மற்றும் எந்த அரசியல் கட்சி அல்லது அமைப்பில் உறுப்பினர் போன்ற விவரங்களை திரட்டி, ஆய்வு ஒன்றை அவர்கள் மேற்கொண்டனர்.

இதில் சுமார் 10 விழுக்காட்டினரது குணநலன்கள் மற்றும் இதர தகுதிகள் அவர்கள் தங்களை பற்றி ஃபேஸ்புக் தளத்தி குறிப்பிட்டுள்ளதோடு ஒத்துபோனது தெரியவந்ததாக அந்த ஆய்வில் ஈடுபட்ட குழுவில் அங்கம் வகித்த கோல்பெக் என்ற கணினி அறிவியல் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏராளமான நிறுவனங்கள், வேலைக்கு தேர்ந்தெடுக்கும் தங்களது ஊழியர்களின் குணநலன்கள், அவர்களது கூடுதல் திறமைகள் போன்றவற்றை அறிந்துகொள்ளவும் அவர்களது பேஸ்புக் தளத்தையே நாடுவதாகவும், இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாது அவ்வாறு வேலைக்கு எடுத்த பின்னர், அந்த ஊழியர்களின் திறன் மேம்பட்டுள்ளதா, தங்களது நிறுவனம் மற்றும் தாங்கள் பார்க்கும் வேலையை பற்றிய அபிப்பிராயம் என்ன?, கூடுதல் திறமைகள் எதையும் வளர்த்துக்கொண்டுள்ளனரா போன்ற விவரங்களை அறியவும் அவர்களது பேஸ்புக் தளத்தையே நாடுவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

வழக்கமாக பல பன்னாட்டு நிறுவனங்கள், குறிப்பாக தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தாங்கள் பணிக்கு தேர்ந்தெடுக்க நினைக்கும் ஊழியர்களின் உண்மையான குணநலன்கள், ஆளுமை திறன், தலைமை பண்பு, கலந்துரையாடல் திறன், குழுவினரோடு இணக்கமாக செல்லும் பண்பு போன்றவை உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள பல வகையான தேர்வுகளை நடத்தி படாதபாடுபடுவது வழக்கம். இனிமேல் இந்த நிறுவனங்களுக்கு பேஸ்புக் கை கொடுக்கும் என்றால் அது மிகையில்லை என்றே சொல்லலாம்!

எனவே இளைய தலைமுறையினர்,குறிப்பாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள், பேஸ்புக்-கில் தங்களை பற்றிய விவரங்களையும், திறமைகளையும், விருப்பு வெறுப்புகளையும் பதிவேற்றும்போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது!

சன் பிக்சர்ஸ் பாக்ஸ் ஆபிஸில் மண்ணை கவ்வியிருக்கிறது.


ஒரு நாள் ஊரை ஏமாற்றலாம் பல நாள் ஏமாற்ற முடியாது என்ற படிப்பினையை தாமதமாக புரிந்து கொண்டிருக்கிறது சன் பிக்சர்ஸ்.

அரைவேக்காடு படங்களை அதீத விளம்பரங்கள் மூலம் வெற்றி பெறச் செய்ய முடியும் என்பதை முதலில் உலகுக்கு நிரூபித்ததே சன் பிக்சர்ஸ்தான். இந்த அதீத விளம்பரங்கள் காதலில் விழுந்தேன் போன்ற மிகச் சுமாரான படங்களை வெற்றிப் படங்களாக்கின. இதன் காரணமாக, எங்களிடம் படத்தை விற்றால் அதை ஓட்டிக் காட்டுவோம் என வெளிப்படையாக இறுமாந்து நடந்து கொண்டது சன் பிக்சர்ஸ்.

ஆனால் எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாதில்லையா?

சன் பிக்சர்ஸ் கடைசியாக வெளியிட்ட மாப்பிள்ளை, எங்கேயும் காதல் இரண்டும் பாக்ஸ் ஆபிஸில் மண்ணை கவ்வியிருக்கின்றன. இதில் எங்கேயும் காதல் அட்டர் பிளாப். முன்பெல்லாம் சன் பிக்சர்ஸிடமிருந்து படத்தை வாங்கும் திரையரங்கு உரிமையாளர்கள் நஷ்டத்தை வேறு வழியில்லாமல் தாங்கிக் கொண்டார்கள். ஆட்சி மாறியதால் அவர்களும் முணுமுணுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது கோரிக்கையாகவும், எச்சரிக்கையாகவும் விரைவில் மாறும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழினத்திற்கு செய்த துரோகத்திற்கு கருணாநிதி தண்டிக்கப்பட்டார்: சீமான்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி சந்தித்த படுதோல்வி, அவர் தமிழினத்திற்கு செய்த துரோகத்திற்கு கிடைத்த தண்டனை என்று நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.முள்ளிவாய்க்கால் படுகொலையின் இரண்டாவது நினைவு தினத்தையொட்டி, வேலூரில் நாளை நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக் கூட்டமும், அதற்கு முன்பு, ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை வரவேற்று பேரணியும் நடைபெறவுள்ளது.

பேரணி, பொதுக்கூட்டத்தின் நோக்கும் பற்றி இன்று வேலூரில் செய்தியாளர்களிடம் விளக்கிய சீமான், “தமிழ் ஈழப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கரையில் தமிழின ஒழிப்பு கோரச் சம்பவங்கள் நடைபெற்றன. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி அந்த கொடிய படுகொலை நடந்தது. அதில் நிராயுதபாணியாக இருந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த நாளை உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் தமிழ் தேசிய துக்க தினமாக கடைபிடித்து வருகிறார்கள். நாளை 2வது துக்க தினம் ஆகும். அதையொட்டி இங்கு வேலூரில் பேரணியும் பொதுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் துக்க தினத்தையொட்டி அழுவதற்காக அல்ல, எழுவதற்காக நடக்கப் போகும் கூட்டம்” என்று கூறியுள்ளார்.
தமிழர்களின் நிலையில் மாற்றம் வேண்டும் என்பதற்காகவே மக்கள் நம்பிக்கையுடன் ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஜெயலலிதாவும் இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க் குற்றவாளி என்றும், அவரை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்றும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார் என்று கூறிய சீமான், இந்தியாவின் அயலுறவுக் கொள்கையில் மாற்றம் வேண்டும் என்று கூறினார்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட சீமான், சோனியா காந்தி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவை தேனீர் விருந்திற்கு அழைத்ததை தவறாகக் கருதவில்லை என்று கூறினார்.

பில்லா 2 பாகத்துக்காக எடை குறைக்கும் அ‌‌ஜீத்.

அப் இன் தி ஏர் படத்தில் வரும் ஜார்‌ஜ் குளூனியின் தோற்றத்தில் மங்காத்தா அ‌‌ஜீத்தைப் பார்ப்பதே அமர்க்களமாக உள்ளது. குளோஸ் கட் ஹேர் ஸ்டைலில் நரை முடிகள்... அ‌‌ஜீத்துக்கு துணிச்சல் ஜாஸ்தி.மங்காத்தா ஏறக்குறைய முடிந்த நிலையில் பில்லா இரண்டாம் பாகத்துக்காக தயாராகி வருகிறார் தல. பில்லா இரண்டாம் பாகத்தில் பில்லாவின் இளமைப் பருவத்தை சொல்லவிருக்கிறார்கள். அதாவது சாதாரண ஒரு இளைஞன் எப்படி பில்லாவானான் என்ற கதையை.

கதைப்படி பில்லா முதல் பாகத்தில் வரும் அ‌‌ஜீத்தைவிட ஸ்லிம்மாக, இளமையாக பில்லா இரண்டாம் பாக அ‌‌ஜீத் தெ‌ரிய வேண்டும். இதற்காக இப்போதே உடற்பயிற்சியில் தீவிரமாகியுள்ளார் அ‌‌ஜீத். கணிசமான அளவு உடல் எடையை குறைக்கவும் திட்டமிட்டுள்ளார்.

உன்னைப்போல் ஒருவன் சக்‌ரி பில்லா இரண்டாம் பாகத்தை இயக்குகிறார்.

புத்துயிர் பெறுமா தமிழ்‌த் திரையுலகம்?


தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அரசியல்வாதி என்பதைவிட சினிமாக்காரன் என்று சொல்லிக் கொள்வதையே விரும்புகிறேன் என்று அறிவித்த கலைத்தாகம் கொண்ட கருணாநிதி பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டிருக்கிறார். நியாயமாக கருணாநிதியின் பின்னடைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும். மாறாக 90 சதவீத திரையுலகினர் இதனை பெரும் உவகையுடன் கொண்டாடி வருகின்றனர். கருணாநிதியின் கலைத்தாகம் அவரது குடும்பத்துக்கு - குறிப்பாக பேரன்களின் சுயநல அறுவடைக்கே பெரும்பாலும் பயன்பட்டது.

பேரன்களை பற்றிய பேச்சு வரும் போதெல்லாம் கருணாநிதி உதாரணங்கள் காட்டினார். மெய்யப்ப செட்டியா‌ரின் பிள்ளைகள் சினிமா தயா‌ரிக்கவில்லையா? சிவகுமா‌ரின் பிள்ளைகள் நடிக்கவில்லையா? ர‌ஜினியின் மகள் தயா‌ரிப்பாளராகவில்லையா... ? என் பேரன்கள் சினிமாவுக்கு வந்தால் மட்டும் சிலருக்கு ஏன் இந்த நெஞ்செ‌ரிச்சல்?

எதி‌ரியை புன்னகையுடன் எதிர்கொள்வதாக தம்பட்டம் அடித்தவரால் இந்த வாரிசு பிரச்சனையில் புன்னகைக்க முடியவில்லை. மனக்கசப்பும், வெறுப்புணர்வும் அவரது பதில்களில் வழிந்தோடியது. அவருக்கே தெ‌ரியும், நாம் சொல்லும் உதாரணங்கள் எத்தனை அபத்தமானவை என்று. அதுதான் இந்த கோபம், நெஞ்செ‌ரிச்சல்.

வா‌ரிசுகள் சினிமாவுக்கு வருவது தவறல்ல. அது தடுக்கக் கூடியதும் அல்ல. கருணாநிதியின் பேரன்கள் சினிமாத்துறைக்கு வந்ததல்ல பிரச்சனை. அதிகார பின்புலத்தில் தங்களைத் தவிர வேறு யாரும் தொழில் செய்ய முடியாதபடி அவர்கள் திரைத்துறையை முடக்கினார்கள். கருணாநிதி குறிப்பிடும் வேறு எந்த வா‌ரிசுகளும் இந்த சர்வாதிகார பாதையில் சஞ்ச‌ரித்ததில்லை. ஆட்சி அதிகாரம் என்ற பிரம்பு கருணாநிதியின் பேரன்களுக்கு மட்டுமே வாய்த்திருந்தது.

கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் ஏறக்குறைய 240 திரையரங்குகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் கைவசம் ஏறக்குறைய 170 திரையரங்குகள். தயாநிதி அழகி‌ரியின் கிளவுட் நைன் கைவசம் சுமார் 140 திரையரங்குகள். இந்த மூன்று நிதிகளில் ஏதேனும் ஒருவ‌ரின் ஆசி இன்றி ஒருவர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட முடியாது. மீறி வெளியிட்டவர்களுக்கு எல்லாவகையிலும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன.

கருணாநிதியின் பேரன்கள் ஒரு படத்தை விரும்பினால் அவர்கள் விரும்பும் விலைக்கு அந்தப் படம் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். மீறி திரையரங்குகளில் நேரடியாக திரையிட்ட போதெல்லாம் திரையரங்கு உரிமையாளர்கள் மிரட்டப்பட்டார்கள். லாபம் ஈட்ட முடியும் என்று நம்பக்கூடிய படங்கள் அனைத்தும் நிதிகளால் வாங்கப்படும் சூழலில் திரையரங்கு உ‌ரிமையாளர்கள் இந்த மிரட்டலுக்கு அடிபணிவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

தங்களுக்கு உடன்படாதவர்களை மிரட்டுதல், அவர்களின் படங்களை இருட்டடிப்பு செய்தல், நடிகர்களுக்கு கால்ஷீட் நெருக்கடியை உருவாக்குதல், சங்கத்தின் விதிகளை தேவைக்கேற்ப வளைத்தல் என்று முன்னாள் முதல்வ‌ரின் பேரன்கள் நடத்திய சர்வாதிகார சூதாட்டம், ஆட்சி மாற்றத்தால் காலாவதியாகியிருக்கிறது. நிதிகளின் ஆதிக்கம் தமிழ்‌த் திரைத்துறையில் முழுமையாக ஒழிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.

சினிமாவுக்கு சவாலாக இருக்கும் திருட்டு டிவிடி பிரச்சனையும் கட்டுக்குள் வரும் என்பது பல‌ரின் நம்பிக்கை. பேரன்களின் படங்களின் டிவிடிகள் மட்டும் விற்கக்கூடாது, மற்றவற்றுக்கு தடையில்லை என்பதான ஆபாச உடன்படிக்கைக்கு இனி வழியிருக்காது. இப்படி சொல்வதன் பொருள் புதிய ஆட்சியில் திரைத்துறையில் சர்வாதிகாரமோ, சுயநலச் சுரண்டல்களோ இருக்காது என்பதல்ல. ஆட்சி மாற்றத்தின் மூலம் அதிகாரமும், ஆட்களும் மாறியிருக்கிறார்கள் அவ்வளவே.
ஆட்சி மாறிய அடுத்த நாளே தயா‌ரிப்பாளர்கள் சங்கத்தில் வேடிக்கைகள் அரங்கேறின. ராம.நாராயணன் பதவி விலகினார். அவருக்குப் பதில் ஜெயலலிதாவின் திடீர் விசுவாசி எஸ்.ஏ.சந்திரசேகரன் தயா‌ரிப்பாளர்கள் சங்கத் தலைவராக முடிசூட்டப்பட்டிருக்கிறார். இதன் மூலம் அதிமுக-வுக்கு ஆதரவு தெ‌ரிவித்து பிரச்சாரம் செய்ததற்கான உடனடிப் பலன் அவருக்கு அருளப்பட்டிருக்கிறது.

இதுவரை சங்கத்தால் ஒதுக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் பழைய விசுவாசிகள் புதிய பலத்துடன் திரும்பியிருக்கிறார்கள். வசைபாடுதல், குற்றம் சுமத்துதல், எச்ச‌ரிக்கை விடுத்தல் என முன்பு ஆட்சி மாறிய போது நடந்த அதே காட்சிகள் மறு ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. நடிகர்கள் வேறு, காட்சிகள் அதேதான்.

முந்தைய ஆட்சி அளவுக்கு இல்லையென்றாலும் தங்களுக்கு உடன்படாதவர்களை மிரட்டும், நெருக்கடி கொடுக்கும் சர்வாதிகாரப் போக்கு இனியும் தொடரும் என்பதையே கடந்த சில தினங்களாக தயா‌ரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்துவரும் கூத்துகள் தெ‌ரிவிக்கின்றன. ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சி காலத்தில் அவருடன் நட்புடன் இருந்த சரத்குமார் அவரைவிட்டு விலகி திமுக-வில் இணைவதற்கு காரணம், சரத்குமா‌ரின் நாட்டாமை திரைப்படம் அனுமதியின்றி ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதுதான் என்பதையும் இந்த நேரத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டும்.

மேலும், உள்ளூர் படப்பிடிப்பு கட்டணங்களை உயர்த்தி வெளி மாநிலங்களுக்கும், வெளிநாட்டிற்கும் திரைத்துறையினரை துரத்தியதும் இப்போதைய ஆளும் கட்சிதான் என்பதையும் மறக்கலாகாது.

முக்கியமான இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த ஆட்சி மாற்றங்களும், நெருக்கடிகளும், நம்பிக்கைகளும், சலுகைகளும் சினிமா என்ற கலை ஊடகத்தின் வியாபாரம் என்ற ஒரு பக்கத்தை பாதிக்கக் கூடியது. சினிமாவின் தரத்தை இவை நிர்ணயிப்பதில்லை, உயர்த்துவதுமில்லை.

தமிழ் சினிமாவின் தரம் சினிமா என்ற கலைப்படைப்பின் மீது தீராக் காதல் கொண்ட தனி மனிதர்களின் கையில்தான் உள்ளது. குறிப்பாகச் சொல்வதென்றால் சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தத் துடிக்கும் இயக்குனர்களின் கைகளில். பிதாமகன் பாலா, பருத்திவீரன் அமீர், சுப்பிரமணியபுரம் சசிகுமார், அழகர்சாமியின் குதிரை சுசீந்திரன், ஆடுகளம் வெற்றிமாறன், அஞ்சாதே மிஷிகின் போன்றவர்கள்தான் சினிமாவின் தரத்தை நிர்ணயிப்பவர்கள். அரசியல்வாதிகள், ஆட்சி மாற்றங்கள், பதவியைவிட்டு ஓடிப் பதுங்கியவர்கள், திடீர் விசுவாசிகள் இவர்களுக்கும் சினிமாவின் தரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவர்கள் வியாபா‌ரிகள் அல்லது அவர்களின் பங்காளிகள்.

நல்ல சினிமா கலைஞர்களை நம்பியிருக்கிறதே அன்றி வியாபா‌ரிகளை அல்ல. என்றாலும், சினிமா ஒரு வியாபாரமும்கூட என்பதால் திரைத்துறையில் நடக்கும் சர்வாதிகாரப் போக்கும் சுரண்டல்களும் நல்ல சினிமாவின் வே‌ரிலும் நஞ்சை பாய்ச்சக் கூடியது.

விஞ்ஞான ஊழல்வாதிகள் அளவுக்கு இந்த ஆட்சியில் திரைத்துறைக்கு அப்படியான நெருக்கடிகள் இருக்காது என்றாலும், அரசியல் ஆதிக்கத்திலிருந்து திரைத்துறை முற்றாக தன்னை விடுவித்துக் கொள்வது ஒன்றே இதற்கான நிரந்தர தீர்வாக இருக்க முடியும்.

செவ்வாய், 10 மே, 2011

7 வழிகள்! எடையைக் குறைக்க.


உங்கள் எடை கூடிவிட்டதா? எப்படிக் குறைப்பது? எந்த முறையைப் பின்பற்றுவது? இப்படி யோசனையிலேயே நேரம் வீணாகிக் கொண்டு இருக்கிறதா?

இதோ, உங்களுக்காக எடையை குறைக்கும் 7 எளிய வழிகள்:

1. உடற்பயிற்சி:
வாரம் 5 முறையாவது தவறாமல் செய்ய வேண்டும். உடற்பயிற்சியால் கொழுப்பு கறைகிறது. இதனால் எடை குறைவதோடு, பல நோய்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது.

2. பசித்தால் மட்டுமே சாப்பிடவும்:
"அப்படித்தான் செய்கிறேன்" என்று கூறுவதற்கு, முன் யோசிக்கவும். எத்தனை முறை வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம், இனிப்பு என்று சாப்பிட்டிருப்பீர்கள்? எடையை மேலும் கூட்டவே இது உதவுகிறது!

3. எதைச் சாப்பிடலாம் என்று தெரிந்து கொள்ளவும்:
"நான் 4 பிஸ்கெட்டும் ஒரு கிளாஸ் ஜூஸ் மட்டும் குடிச்சேன்" என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் சாப்பிட்ட பிஸ்கெட்டுகளிலும் ஜூஸிலும் எத்தனைக் கலோரிகள் இருந்தன என்று தெரியுமா? எதைச் சாப்பிட்டால் நல்லது என்பதை அறிந்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

4. தண்ணீர் தண்ணீர்:
ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் சாப்பிடும் அளவும் குறையும். அத்தோடு உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும் இது சுத்தம் செய்கிறது.

5. உட்கொள்ளும் அளவு:
மதியம் அதிகமாக சாப்பிட்டுவிட்டால், இரவில் உட்கொள்ளும் அளவை குறைக்கவும். காலையில் சாப்பிட்டதைவிட, மதியம் சற்று குறைவாகவும், இரவில் அதைவிட குறைவாகவும் சாப்பிடுவது நல்லது.

6. ரிலாக்ஸ் ப்ளீஸ்:
தினமும் நாம் சந்திக்கும் பிரச்சனைகள், சில சமயங்களில் நம்மை அளவுக்கு அதிகமாக சாப்பிடத் தூண்டலாம். அதனால் தினமும் 15 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்ய எடுத்துக் கொள்ளவும்.

7. "நான் குண்டு" என்று யோசிப்பதை தவிர்க்கவும்:
நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பற்றிய நினைப்பை விட்டு, மேற்கண்ட வழிகளைப் பின்பற்றினால் எப்படி மாறுவீர்கள் என்பதை யோசிக்கவும்.

இன்னும் என்ன தாமதம்? உங்கள் எடைக் குறைப்பை இப்போதே ஆரம்பியுங்கள்!

சீன மூலிகை மருத்துவம்.


நோய்களைத் தடுப்பது, நோய்க் கூறுகளைக் கண்டறிவது, நோய்களுக்கு சிகிச்சை தருவது ஆகியன சீன மூலிகை மருத்துவத்தின் நோக்கமாகுகம். இதில் இயற்கை மருந்துகளும் தயாரிக்கப்பட்ட மருந்துகளும் உள்ளன. அதாவது மூலிகைகள் மிருகங்கள், கணிமப் பொருட்கள்., சில ரசாயனப் பொருட்கள், உயிரி பொருட்கள் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளாகும். சீன தயாரிக்கப்படும் மருந்துகளாகும். சீன மருந்தின் கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு ஆயிரம் ஆண்டுகள் வரலாறு உண்டு. எனினும் “சீன மருத்துவம்”என்ற சொல் சீனாவில் மேலை மருத்துவம் அறிமுகமான பின்னரே உருவாக்கப்பட்டது. மேலை மருத்துவத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக சீன மருத்தும் என்று பெயரிடப்பட்டது.


சீன மூலிகை மருத்துவத்தின் வரலாறு

ஷென் நோங் என்பவர் ஒரே நேரத்தில் பல மூலிகைகளை உட்கொண்டு கடைசியில் நச்சூட்டப்பட்ட ஒரு கதை சீன வரலாற்றில் காணப்படுகின்றதது. பழங்காலச் சீன மக்களுக்கு மருந்துகளை கண்டறிவதில் என்னெனஅன கிடையூறுகள் ஏற்பட்டன என்பதையும் அது விவரிக்கின்றது.

சீனாவில் ச்சியா, ஷாங் சூ வம்சங்கள் ஆட்ச்செய்த கி.மு.22 முதல் கி.பி.256 வரை எரிசாராய மருந்தும், சூப்(சாறு)மருந்தும் பயன்படுத்தப்பட்டது. சூ வம்ச காலத்தில் (கி.மு 11 முதல் கி.பி771)எழுதப்பட்ட பாடல் புத்தகத்தில் (ஷி ஜிங்)மருந்து பற்றி சில சகவல்கள் இடம் பெற்றுள்ளன. பண்டைய சீன மருத்துவம் பற்றி பதிவு செய்யப்பட்ட ஆவணம் இது தான். மற்றொரு புத்தகம் நெய் ஜிங் என்பது சீன மருத்துவக் கோட்பாடு பற்றிய ஆரம்பகால புத்தகமாகும். இதில் காய்ச்சலினால் உடல் வெப்பம் அதிகமாக உள்ள நோயாளியைக் குளரிவிக்க வேண்டும். குளிர்காய்ச்சல் கண்ட நோயாளியின் உடம்பைச் சூடாக்க வேண்டும் என்பது போன்ற கோட்பாடுகள் இதில் எழுதப்பட்டுள்ளன. மேலும் மருந்தில் ஐந்து சுவைகளைச் சேர்க்கும் போது வயிற்றுக்குள் கசப்பு ஏற்பட்டு வயிற்றுப் போக்கு ஏற்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இவையாவும் சீன மருத்துவக் கோட்பாட்டுக்கு அடிப்படையாக அமைந்தன.

சீன மூலிகை மருத்துவம் பற்றிய ஆரம்பகாலப் புத்தகம் எஷன் நோங் பெண் காவ் ஜிங் என்பது. இதில் பென் என்றால் வேர், வாவ் என்றால் குருத்து. இந்தப் புத்தகம் கி.மு.221 முதல் கி.பி.220 வரை இருந்த ச்சின் மற்றும் ஹான் வம்சங்களின் கால்தில் எழுதப்பட்டது. இதற்கு அடிப்படையான ஏராளமான தகவல்களை ச்சின் வம்ச காலத்திற்கு கின்ற மருத்துவ நிபுணர்கள் திரட்டினர். இந்தப் புத்தகத்தில் 365 வகை மருந்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் சில இன்றைக்கும் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் புத்தகம் தான் கீழை மருத்துவத்தின் தோற்றத்திற்கு ஒரு தொடக்கம் என்று கூறலாம்.

தாங் வமிச காலத்தில் (கி.மு618-கி.பி907)பொருளாதார வளம் கொழித்ததால் கீழை மருத்துவத்திற்கு ஊக்கம் கிடைத்தது. தாங் அரசு மருத்துவம் பற்றிய ஒரு செய்யுள் நூலை எழுத வைத்தது. அதன் பெயர் தாங் பென் காங். இது மருத்துவ சாத்திரத்தில் இப்போது கிடைக்கும் மிகவும் ஆரம்பகால நூலாகும். இந்தப் புத்தகத்தில் 850 வகை மருந்து மூலிகைகளும் அவற்றின் படங்களும் உள்ளன. இந்தப் புத்தகத்தால் கீழை மருத்துவத்தின் மதிப்பு உயர்நதது.

மிங் வம்சகாலத்தில் (கி.பி1368-கி.பி1644)மூலிகை மருந்தில் நிபுணரான லி ஷிசென் 27 ஆண்டுகள் அரும்பாடுபட்டு பென் சாவ் க்காங்மு என்ற புத்தகம் எழுதினார். 1892 வகை மூலிகை மருந்துகள் பர்றிய விவரங்களைக் கொண்டுள்ள இந்தப் புத்தகம் சீன வரலாற்றிலேயே மகத்தான படைப்பாகக் கருதப்படுகின்றது.

1949ல் நவசீனா தோற்றுவிக்கப்பட்ட பிறகு தாவரவியல், நோய்கண்டறியும் அறிவியல், வேதியியல், மருந்துத் தயாரிப்பியல், மருந்தக மருந்துகள் போன்ற பல்வேறு துறைகளில் ஏராளமான ஆராய்ச்சிகளைச் செதுளல்ளனர். இந்த ஆராய்ச்சிகள் மூலிகை மருந்துகளின் மூலத்தையும் அவை சரியானவைதானா என்பதையும் அவை செயல்படும் முறையையும் கண்டறி. ஒரு அறிவியல் அடிப்படையை வழங்குகின்றன. பின்னர், மூலிகைமருந்தின் மூலம் பற்றி நாடு தழுவிய ஆய்வு நடத்தப்பட்டு 1961லி ஸோன் யாவ் ச்சி என்ற புத்தகம் எழுதப்பட்டது. 1977இல் மூலிகை மருந்து அவராதி வெளியிடப்பட்டது. அதன் மூலம் பதிவு பெற்ற மூலிகை மருந்துகளின் எண்ணிக்கை 5767 ஆர உயர்ந்தது. கூடவே குறிப்புப் புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், செய்தி ஏடுகள் மற்றும் பத்திரிகைகள் சீன மருத்துவம் பற்றி வெளியிடப்பட்டன. சீன மருந்துவம் பற்றி அறிவியல் ஆராய்ச்சிகளை நடத்தவும் கற்பிக்கவும் மருந்துகளைத் தயாரிக்கவும் நிறுவனங்களும் ஏற்படுத்தப்பட்டன.

சீன மூலிகை மருந்துகளின் இயற்கை வளங்கள்

சீனாவின் பிரதேசம் மிகப் பெரியது. பல்வேறு புவியியல் அம்சங்களும், வேறுபட்ட கால நிலைகளும் உள்ளன. இதன் காரணமாக வெவ்வேறு இயற்கைச் சூழல்கள் உண்டாகி பலவகையான மூலிகைச் செடிகளை வளர்்க்க முடிகிறது. தற்போது சீனாவில் 81000க்கும் அதிகமான மூலிகைச் செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. அவற்றில் 600 மூலிகை மருந்துகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. உலகிலேயே சீனாவில் தான் அதிக மூலிகை மருந்துகள் உள்ளன என்ற பெருமையும் கிடைத்துள்ளது. இந்த மருந்துகள் உள்நாட்டு மக்களின் தேவைகளை நிறைவு செய்வதோடு 80 நாடுகளுக்கும் வட்டாரங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு பெரும் புகழ் பெற்றுள்ளன.

சீன மருந்துகளைப் பயன்படுத்துவது

சீன மருந்துகள் பயன்படுத்தப்படுவதற்கு நீண்ட நெடும் வரலாறு உண்டு. மக்களின் வாழ்க்கையில் சீன மூலிகை மருந்துகள் முக்கிய பங்காற்றியுள்ளன. இவை ஓரழவுக்கு சீனப் பண்பாடு போன்றவை. சீன மூலிகை மருந்துகளின் பெரும்பாலான மூலப் பொருட்கள் இயற்கை வளங்களில் இருந்து கிடைக்கின்றன. இதனால் பக்க விளைவுகள் அவ்வளவாக ஏற்படுவதில்லை. மருந்தின் உள்ளே பல்வகை மூலப்பொருட்கள் இருப்பதால் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த முடிகின்றது. சீன மூலிகை மருந்துகளின் மற்ற1ரு அம்சம் என்ன வென்றால் அவை பெரிதும் கூட்டுப் பொருட்களாக உள்ளன. வெவ்வேறு மூலப் பொருட்களை உரியான அளவில் எடுத்து தயாரிப்பதால் சிக்கலான நோய்கள் கூடக் குணமாகின்றன. அதேவேளையில் பக்கவிறைவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

சீன மருந்துகள் அதனுடைய கோட்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றன. மனிதனுடைய உடம்பில் மருந்து என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதில் கவனம் செலுத்தி மருந்து பயன்படுத்தப்படுகின்றது. மருந்தினுடைய வீர்யம் மூலிகைச் செடியின் தன்னையினால் தீர்மானிக்கப்படுகின்றது. மருந்தை பாதுகாப்பாகவும் பயனுள்ள முறையிலும் பயன்படுத்துவதற்காக என்னென்ன கூட்டப் பொருட்கள் மருந்தில் உள்ளன. எதிர் அறிகுறிகள் மருந்து தரவேண்டிய அளவு எவ்வாறு மருந்தை உட்கொள்வது, மருந்தை எவ்வாறு பரிந்துரைப்பது என்பது போன்ற விஷயங்களை மருத்துவர்கள் தெலிந்திருக்க வேண்டியுள்ளது. சில சமயங்களில் நோயாளிகளின் வேறுபட்ட நிலைமையைப் பொறுத்து வெவ்வேறு கூட்டுப் பொருட்களை மருந்துத் தயாரிப்புக்காகத் தெரிவு செய்ய வேண்டியுள்ளது. எதிர் அறிகுறிகளைப் பொருத்தமட்டில் மருந்திலுள்ள கூட்டுப் பொருட்களினால் ஏற்படக் கூடிய எதிர் அறிகுறி கருத்தலிப்பால் ஏற்படக் கூடிய எதிர் அறிகுறி, உணவு நச்சால் ஏற்படும் எதிர் அறிகுறி, நோயினால் உண்டாகும் எதிர் அறிகுறி போன்றவற்றை மருத்துவர்கள் கவனிக்க வேண்டியுள்ளது. மருந்தின் அளவை(டோஸ்)பொறுத்தமட்டில் ஒரு நாளில் நோயாளி எவ்வளவு மருந்து உட்கொள்ள வேண்டும். மருந்தைத் தயாரிக்கும் போது ஒவ்வொரு கூட்டுப் பொருகளும் சேர்க்கப்பட வேண்டிய சரியான அளவு என்ன என்பதையும் மருத்துவர்கள் அறிந்திருக்க வேண்டும்.


சீன மருத்துவத்தின் எதிர்காலப் போக்கு

எதிர்காலத்தில் சீனா மூலிகை மருந்துகளை தொடர்ந்து உற்பத்தி செய்வதோடு மேலும் பிறப்பான மூலிகைச் செடிகளின் வகைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும். இதற்காக ஐஸோடோப்பு மற்றும் உயிரி பொறியியல் நுட்பங்கள் பயன்படுத்தப்படும். இதனிடையே அதிமதுர வேர், மண்டையோட்டு மலர் செடியின் வேர், காய்ச்சலைக் குணப்படுத்தக் கூடிய காய் ஹு எனப்படும் சீன மூலிகை போன்ற மிகவும் தேவைப்படக் கூடிய மீலிகைகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 வகை மூலிகைகளின் உறர்பத்தியை சீனா விரிவுப்படுத்தும். அதே வேளையில் விதைகள் மக்கிப் போகாமல் தடுக்கவும் மேலும் புதிய வகை மூலிகைகளைப் பயிலிடவும் சீனா மேலும் பல ஆராய்ச்சிகளில் ஈடுபடும்.

வியாழன், 5 மே, 2011

சீனா வுக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான அதி விரைவு ரயில் போக்குவரத்து

சீனாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான அதி விரைவு ரயில் போக்கு வரத்துக்கான முதற்கட் டப் பணிகள் துவங்கி யுள்ளன.


தெற்காசிய நாடு களை ரயில் போக்குவ ரத்து மூலம் இணைக் கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சீனாவும் சிங்கப்பூரும் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண் டன. இந்த ஒப்பந்தப் படி, சீனாவின் யுனான் மாகாணத்தையும் சிங் கப்பூரையும் இணைக் கும் ரயில் போக்குவரத் துக்கான பணிகள் துவக் கப்பட்டுள்ளன. வரும் 2020இல், இந்த ரயில்பாதை பணிகள் முடிந்து, ரயில் போக்கு வரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், சீனாவி லிருந்து, 10 மணி நேரத் தில், சிங்கப்பூரை சென்ற டைய முடியும். இந்த ரயில் பாதை பணி முடிந் ததும், அடுத்த கட்ட மாக, தாய்லாந்து தலை நகர் பாங்காக்கையும், மலேசியாவின் கோலா லம்பூர் நகரையும் இணைக் கும் ரயில் பாதை பணி ஆரம்பமாக உள்ளது. இந்த பணி நிறைவு பெற் றதும், வியட்நாமுக்கும் கம்போடியாவுக்கும் இடையே ரயில்பாதை போடப்பட உள்ளது.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதாக் காட்டப்பட்ட படங்கள் போலியானவை


அல்குவைதா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதாக் காட்டப்பட்ட படங்கள் போலியானவை என்று Agence France Press தமது சிறப்புக் கணினி மென்பொருள் மூலம் நிரூபித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி  மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த இணையத்தள பத்திரிகையில் பிரசுரமான படத்தைக் கொண்டு கணினியில் Photo shop  மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக AFP புகைப்படங்களுக்கான தலைமை ஆசிரியர் மெலடன் அன்டனோவ் தெரிவித்துள்ளார்.


எனினும் பின்லேடனின் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதால் பின்லேடனைக் கொல்ல நேர்ந்த்தாக அறிவித்தனர். அத்துடன் கொல்லப்பட்டபின்னர் அவரது உடல் கைப்பற்றப்பட்டதாகவும் அறிவித்திருந்தனர்.
பின்லேடனின் உடலை இஸ்லாமிய முறைப்படி  சடங்குகள் நடத்தப்பட்டு கடலில் வீசப்பட்டதாக அறிவித்தனர். உடலைக் கைப்பற்றி அமெரிக்க உடனடியாக கடலில் வீசியது குறித்து  பல்வேறு  அய்யங்கள் எழுப்பியுள்ளது. இறந்த்தாக காட்டப்பட்டுள்ள பின்லேடனின் படத்தில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதும்  சந்தேகத்தை மேலும் உறுதியடைய  செய்துள்ளது.

திங்கள், 2 மே, 2011

பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்!


தமிழ் சினிமா நடிகரும் பிரபல மேஜிக் நிபுணருமான அலெக்ஸ் சென்னையில் இன்று (01-05-11) காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 24 மணி நேரம் மேஜிக் நிகழ்ச்சி நடத்தி கின்னஸ் சாதனை படைத்த நடிகர் அலெக்ஸ், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமால் பாராட்டப்பட்டவர்.
திருச்சி துரைசாமிபுரத்தை சேர்ந்த இவர் வள்ளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து மிட்டா மிராசு, கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தமிழ்சினிமாவில் வித்தியாசமான வில்லன் மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து புகழ் பெற்றவர். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு வாரமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அலெக்ஸ் இன்று மாலை 4.30 மணியளவில் காலமானார்.
இதுபற்றி கேள்விப்பட்ட திரையுலக நண்பர்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அலெக்ஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். அலெக்சிற்கு சொந்த ஊரான திருச்சியில் இறுதிச் சடங்குகளை செய்ய உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். நாளை திருச்சியில் இறுதிசடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அலெக்ஸ் கடந்த ஆண்டு திருச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் தொடர்ந்து 24 மணி நேரம் மேஜிக் நிகழ்ச்சியை நடத்தி கின்னஸ் சாதனை படைத்தார். அதற்கு முன்பு, 600 மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து 12 மணி நேரம் மேஜிக் செய்ததற்காக லிம்கா புத்தகத்தில் இடம்பெற்றார். இலங்கையில் நடத்திய மேஜிக் நிகழ்ச்சிக்காக அங்குள்ள திறந்தவெளி பல்கலைக்கழகம் அலெக்சுக்கு 2004ம் ஆண்டுக்கான அல்பிரட் நோபல் பரிசை வழங்கி கவுரவித்துள்ளது. அமெரிக்க பல்கலைக்கழகம் அலெக்சுக்கு டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. அபுதாபியில் நடந்த விழாவில் அலெக்சுக்கு செவாலியே விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. இதுதவிர ஏராளமான பட்டங்கள் மற்றும் விருதுகளுக்கு சொந்தக்காரராக இருந்த அலெக்ஸின் மறைவு அவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல… லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.
நடிகராக வெள்ளித்திரையில் பளிச்சிட்டாலும், மேஜிக்கில் ஏராளமான சாதனைகளை படைத்த அலெக்சுக்கு கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பம், மல்யுத்தம், நாடகம் என பல துறைகளில் ஆர்வம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 1 மே, 2011

ரானாவாவது… காணாவாவது…! வடிவேலு பரபரப்பு பேட்டி!!


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற நடிகர் வடிவேலு சென்னையில் இன்று முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்தார். சிறிது நேரம் முதல்வரிடம் பேசிய வடிவேலு, பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது, தேர்தல் முடிவு திமுகவுக்கு சாதகமாக இருக்கும்; திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தனியார் தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு தெரிவித்திருக்கிறது. அந்த மகிழ்ச்சியை முதல்வர் ஐயாவுடன் பகிர்ந்து கொள்வதற்காக வந்தேன். அவரும் சந்தோஷமாக இருக்கிறார். இந்த தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களில் அமோக வெற்றி பெறும். மக்கள் திமுகவை ஆதரித்திருப்பார்கள் என நம்புகிறேன். ஏனென்றால் திமுக அரசின் திட்டங்களால் எல்லோருமே பயனடைந்திருக்கிறார்கள். பயனாளிகளின் ஓட்டு திமுகவுக்கு கண்டிப்பாக விழுந்திருக்கும். அப்படி விழுந்தாலே திமுக வெற்றி பெறும், என்றார்.
ரானா படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த வடிவேலு, ரானாவாவது… காணாவாவது… அதையெல்லாம் நான் பொருட்படுத்தல என்றார். மேலும் அவர் கூறுகையில், என்னை சினிமா துறையில் இருந்தே தூக்கினாக்கூட கவலைப்பட மாட்டேன். கலைஞர் ஐயா செஞ்ச நல்ல திட்டங்களை மக்கள் மத்தியில சேர்த்திருக்‌கேன். அதுக்காக பெருமைப்படுறேன். மே 13ம்தேதிக்கு பிறகு காட்சிகள் மாறும்; பொறுத்திருந்து பாருங்க… என்று சிரித்தபடியே கூறினார்.

வைகைப் புயலுக்கு சனி திசை.

.


தேர்தல் பிரச்சாரத்தால் திமுகவை குளிரச் செய்தாலும் தொழில் விஷயத்தில் குளிரடித்துப் போய் கிடக்கிறார் வடிவேலு. இன்றைய தேதியில் இவர் கைவசம் எந்தப் படங்களும் இல்லை
அது மட்டுமா... தனது படத்தில் வடிவேலு இருந்தேயாகணும் என்று விரும்பும் ர‌ஜினிகூட இவரை வேண்டாம் என்று கஞ்சா கருப்பு பக்கம் கை நீட்டியிருக்கிறார். சந்திரமுகியின் வெற்றியில் வடிவேலுவின் பங்கு அதிகம் என மனசுவிட்டு பாராட்டிய ர‌ஜினி குசேலனிலும் வடிவேலுக்கு வாய்ப்பு கொடுத்தார். ரானாவிலும் இவர்தான் நடிப்பதாக இருந்ததாம்.

தேர்தல் பிரச்சாரத்தில் வடிவேலு தாறுமாறாக பேசியது ர‌ஜினியை அப்செட்டாக்கியிருக்கிறது. இதனால் வடிவேலுக்குப் பதில் கஞ்சா கருப்புக்கு வாய்ப்பளித்திருக்கிறாராம்.

வைகைப் புயலுக்கு இது சனி திசை.