வியாழன், 29 செப்டம்பர், 2011

வெங்கட்பிரபுவின் மறுப்பு அ‌‌‌‌‌ஜீத், சிம்பு காம்பினேஷன்.


மொட்டைத் தலைக்கும் முழுங்காலுக்கும் முடிச்சுப் போடுவதில் நம்மை மிஞ்ச ஆளில்லை. அ‌‌ஜீத்தின் ரசிகர் சிம்பு என்பதற்காக, அ‌ஜீத்தும், சிம்பும் இணைந்து நடிக்கிறார்கள், இந்தப் படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார் என்றொரு தகவலை கசியவிட்டது ஒரு குரூப்.

இதனை வெங்கட்பிரபு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அடுத்தது என்ன படம் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் அ‌ஜீத்தையும், சிம்புவையும் வைத்து இயக்கப் போவதாக வந்த செய்தியில் உண்மையில்லை. அப்படியொரு எண்ணமே எனக்கில்லை என‌த் தெ‌ளிவாக விளக்கியுள்ளார்.

வேங்கை தெலுங்கில்.

தமிழில் வெற்றி பெற்ற, பெறாத படங்கள் அனைத்தும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. இதில் புது வரவு ஹ‌ரி இயக்கத்தில் தனுஷ் நடித்த வேங்கை.தமிழில் தோல்வியை தழுவிய இந்தப் படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். படத்தில் தமன்னா இருக்கிறார் என்பதால் ஆந்திர ரசிகர்களை திரையரங்குக்கு இழுக்கலாம் என்று நம்பி மொழிமாற்றத்தை செய்கிறார்கள். விரைவில் வெளிவரவிருக்கும் இந்தப் படத்துக்கு சிம்க புத்ருடு என்று பெயர் வைத்துள்ளனர்.