செவ்வாய், 25 அக்டோபர், 2011

தீபாவளி வாழ்த்துக்கள்..!

தீபாவளி திருநாளில் அனைவருக்கும் எனது தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்நாளில் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட எனது வாழ்த்துக்கள்.
தொடரும் நினைவுகளுடன் உங்கள்

                                                                       A.S.ராஜ்குமார்

புதன், 19 அக்டோபர், 2011

மங்காத்தா எட்டு கோடியை‌த் தாண்டியது.


மங்காத்தா வெளியான போது சென்னையில் இப்படம் எட்டு கோடியை‌த் தாண்டும் என்று குறிப்பிட்டிருந்தோம். நமது வாக்கை மெய்ப்பித்திருக்கிறது இந்தப் படம்.

ஐந்து வாரங்கள் முடிந்த நிலையில் மங்காத்தா சென்னையில் 8.19 கோடிகளை வசூலித்துள்ளது. இது சிங்கம், சிறுத்தை, தெய்வத்திருமகள் படங்களின் வசூலைவிட அதிகம். அதேநேரம் எந்திரன், தசாவதாரம் படங்களின் வசூலைவிட குறைவு.

அ‌‌ஜீத் படங்களில் சென்னையில் அதிகம் வசூலித்தப் படமும் மங்காத்தாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 6 அக்டோபர், 2011

நயன்தாரா புனிதவதியா ?

நயன்தாரா குறித்து மௌனம் சாதித்து வந்த பிரபுதேவா அவர் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நயன்தாராவுடனான திருமணம் பற்றி சில ஊடகங்களில், நாள் தேதியுடன் செய்தி வந்ததால் அது குறித்து வெளிப்படையாக பேச முன் வந்ததாக அந்த அறிக்கையில் பிரபுதேவா குறிப்பிட்டுள்ளார். மேலும் இருவ‌ரின் பெற்றோர்களின் சம்மதத்துடன் முறையாக தேதி அறிவித்தே தங்களது திருமணம் நடக்கும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நயன்தாரா தன் மீதான காதலால் நடிப்பையே துறந்ததாக கூறியிருப்பவர் ஸ்ரீ ராம ரா‌ஜ்‌ஜியம் படத்தில் சீதையாக நயன்தாரா நடித்திருப்பது போல் புனிதமான வேடங்கள் கிடைத்தால் திருமணத்துக்கு முன் நயன்தாரா நடித்துக் கொடுப்பார் என்றும் அந்த அறிக்கையில் பிரபுதேவா தெ‌ரிவித்துள்ளார்.

புனிதவதி நயன்தாராவுக்கு புனிதமான வேடங்கள் கிடைக்க கடவுள் அருள்பு‌‌ரியட்டும்.

இடுகைத் விரைவில் மங்காத்தா இரண்டாம் பாகம் பற்றி அறிவிப்பு வரலாம்.தலைப்பு

ஒரு படம் வெற்றி பெற்றால் அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதில் அப்படம் சம்பந்தப்பட்டவர்கள் முனைப்பு காட்டுவதில் ஆச்ச‌ரியமில்லை. அ‌‌ஜீத் கூட இப்போது பில்லா படத்தின் இரண்டாம் பாகத்தில்தான் நடித்து வருகிறார்.மங்காத்தா படத்தின் அபி‌ரிதமான வெற்றி, அப்படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றி இயக்குனர் வெங்கட்பிரபுவை யோசிக்க வைத்திருக்கிறது.

சென்னை 28, சரோஜா போன்ற ஹிட்கள் கொடுத்தாலும் மாஸ் ஹீரோவை வைத்து வெங்கட்பிரபு வெற்றியை கொடுத்த முதல் படம் மங்காத்தா. இப்படம் அவரது மார்க்கெட்டை ரொம்ப உயரத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. படத்தில் அ‌‌ஜீத்தின் நெகடிவ் கேரக்டர் அனைவருக்கும் பிடித்திருப்பதால் மங்காத்தா இரண்டாம் பாகத்தை உருவாக்கும் யோசனை அவருக்குள் உதித்திருக்கிறது.

விரைவில் மங்களகரமான அறிவிப்பு வரலாம்.

பா‌லிய‌ல் ப‌ஞ்சாய‌த்து முடிவு‌க்கு வ‌ந்தது.தன்னை மானபங்கப்படுத்த முயன்ற எஸ்.பி.பி.சரணை மன்னித்துவிட்டதாக நடிகை சோனா தெ‌ரிவித்துள்ளார்.
நடிகர் வைபவ் வீட்டில் நடந்த மது விருந்தில் எஸ்.பி.பி.சரண் தன்னிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக நடிகை சோனா அவர் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். சரண் மன்னிப்பு கேட்டால் வழக்கை வாபஸ் பெறுவதாகவும் தெ‌ரிவித்திருந்தார். சரண் மன்னிப்பு கேட்காததுடன், சோனாதான் தன்னிடம் முறைகேடாக நடந்து கொண்டார் என்று குற்றம்சாற்றினார். மேலும் முன் ஜா‌மீனும் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் எஸ்.பி.பி.சரண் கடிதம் மூலம் வருத்தமும், மன்னிப்பும் கேட்டுக் கொண்டதால் அவரை மன்னித்துவிட்டதாக சோனா திடீரென அறிவித்துள்ளார். இதன் மூலம் பல நாட்களாக நடந்து கொண்டிருந்த பாலியல் பஞ்சாயத்து முடிவுக்கு வந்துள்ளது.

ராணாவை கைவிட மாட்டோம் ஈராஸ் நிறுவனம்.

ரஜினிகாந்த் உடல்நிலை இன்னும் வலுவான பிறகு ராணா படப்பிடிப்பை வைத்துக் கொள்‌கிறோ‌ம் என்று‌ம் எந்த காரணத்தை கொண்டும் படத்தை கைவிட மாட்டோம் எ‌ன்று பட தயாரி‌ப்பு ஈராஸ் நிறுவனம் கூ‌றியு‌ள்ளது.கட‌ந்த ஏ‌ப்ர‌ல் மாத‌ம் 29ஆ‌ம் தே‌தி ராணா பட‌ப்‌பிடி‌ப்பு தொட‌க்க ‌விழா ஏ‌விஎ‌ம் ‌ஸ்டூடியோ‌வி‌ல் நட‌ந்தபோது ரஜினிகாந்து‌க்கு ‌‌திடீரென உட‌ல்‌நிலை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

இதை‌த் தொட‌ர்‌‌ந்து ம‌யிலாப்பூரில் உள்ள இசபெல்லா மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்ட ர‌ஜி‌னிகா‌ந்‌த், பின்னர், போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனை‌வி‌ல் சேர்க்கப்பட்டார்.

அவரு‌க்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பதை க‌ண்டு‌‌பிடி‌த்த டாக்டர்கள் உடனடியாக 'டயாலிசிஸ்' செய்யப்பட்டது. இதை‌த் தொட‌ர்‌ந்து உயர் சிகிச்சை‌க்காக சிங்கப்பூர் செ‌ன்ற ர‌ஜி‌னிகா‌ந்‌த், அங்குள்ள மவுன்ட் எலிசபெத் மரு‌‌த்துவமனை‌யி‌ல் அனுமதிக்கப்பட்டார்.

2 மாத‌ம் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வ‌ந்த ரஜினிகா‌ந்து‌க்கு உடல் நிலை ச‌ரியானது. இதை‌த் தொட‌ர்‌ந்து சென்னை திரும்பி ‌ர‌‌ஜி‌னிகா‌ந்‌த், 'ராணா' படத்தில் நடிப்பாரா? என்ற கேள்வி ர‌‌சிக‌ர்க‌ள் ம‌த்‌தி‌யி‌ல் எழுந்தது.

ஆனா‌ல் இய‌க்குன‌ர் கே.எஸ்.ரவிகுமாரோ, ராணா படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் எ‌ன்று‌ம் ரஜினிகாந்த் நிச்சயமாக நடிப்பார் என்று‌ம் கூ‌றினா‌ர். ரஜினிகாந்தின் உடல்நிலையை கருதி, கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக ர‌வி‌க்குமா‌ர் தெ‌ரி‌‌வி‌த்தா‌ர்.

இ‌‌ந்த ‌நிலை‌யி‌ல் 'ராணா' படம் கைவிடப்பட்டு விட்டதாக ஒரு தகவல் பரவியதா‌ல் ர‌சிக‌ர்க‌ள் ம‌த்த‌ி‌‌யி‌ல் பெரு‌ம் பரபரப்பை ஏற்படுத்தியது 3 வேட‌ங்க‌ளி‌ல் நட‌க்கு‌ம் ர‌ஜி‌னிகா‌ந்‌த், வரலாற்று படம் எ‌ன்பதா‌ல் குதிரை சவாரி செய்வது போல் பல காட்சிகள் வருகின்றன. ஆனா‌ல் ரஜினிகாந்தின் இப்போதைய உடல்நிலை குதிரை சவாரிக்கு இடம் கொடுக்காது என்பதால், 'ராணா' கைவிடப்பட்டுவிட்டதாகவும், அதற்கு பதில் வேறு ஒரு படம் தொடங்கப்படுவதாகவும் சினிமா வட்டாரத்தில் தகவல் பர‌வியது.

ஆனால், 'ராணா' பட‌‌த்தை கை‌விட‌வி‌ல்லை எ‌ன்று பட தயா‌ரி‌ப்பு ‌நிறுவனமான ஈராஸ் மறுத்‌து‌ள்ளது. ''ரஜினிகாந்தின் உடல்நிலையை கருதி, 'ராணா' படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது உண்மை. ரஜினிகாந்த் இப்போது நன்றாக இருக்கிறார். அவருடைய உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறது. தினமும் நடைபயிற்சி செய்கிறார்.

எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை. ரஜினிகாந்த் உடல்நிலை இன்னும் வலுவான பிறகு படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறோம். எந்த காரணத்தை கொண்டும் `ராணா' படத்தை கைவிட மாட்டோம்'' என்று ஈராஸ் நிறுவனம் கூ‌றியு‌ள்ளது.

எ‌ப்படி இரு‌ந்த நா‌‌ன் இ‌ப்படி ஆ‌யி‌ட்டே‌ன் மீ‌ண்டு‌ம் வடிவேலு.

திரை‌ப்பட‌த்துறை‌யினரா‌ல் ஒது‌க்‌கி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த நகை‌க் சுவை நடிக‌ர் வடிவேலுவு‌க்கு த‌ற்போது இய‌க்குன‌ர் சு‌ந்த‌ர் ‌சி வா‌ழ்வு கொடு‌த்து‌ள்ளா‌ர். த‌ா‌ன் இய‌க்கு‌ம் பு‌திய பட‌த்த‌ி‌ல் நடி‌க்க வடிவேலுவை ஒ‌ப்ப‌ந்‌த‌ம் செ‌ய்து‌ள்ளா‌ர்.

கட‌ந்த ச‌ட்ட‌ப்பேரவை தே‌ர்த‌லி‌ல் ‌தி.மு.க.வு‌‌க்கு ஆதரவாக‌வு‌ம், அ.‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி‌க்கு எ‌திராகவு‌ம் ‌பிரசார‌ம் செ‌ய்தா‌ர் நடிக‌ர் வடிவேலு.

அ.‌தி.மு.க. ஆ‌ட்‌சியை கை‌ப்ப‌ற்‌றிய‌தை தொட‌ர்‌ந்து த‌மி‌ழ் ‌திரை‌ப்பட‌த்துறை‌‌யி‌ல் இரு‌ந்து ஓர‌ம் க‌ட்ட‌ப்ப‌ட்டா‌ர் நடிவ‌ர் வடிவேலு.

ஆனா‌ல் வடிவேலுவோ, ''நானாகத்தான் சினிமாவை விலக்கி வைத்துள்ளேன். என்னை யாரும் விலக்கவில்லை'' என்று கூறி வந்தார்.

இந்த நிலையில் வடிவேலுவை தனது பு‌திய பட‌த்த‌ி‌ல் ஒ‌ப்ப‌ந்த‌ம் செ‌ய்து‌ள்ளா‌ர் நடிகை கு‌ஷ்பு‌வி‌ன் கணவ‌ர் சு‌ந்த‌ர‌் ‌சி. இதன‌ா‌ல் ‌திரையுல‌கி‌ல் தனது 2வது இ‌ன்‌னி‌ங்சை ஆர‌ம்‌பி‌க்க உ‌‌ள்ளா‌ர் வடிவேலு.

எ‌ப்படி இரு‌ந்த நா‌‌ன் இ‌ப்படி ஆ‌யி‌ட்டே‌ன் எ‌ன்று இரு‌ந்த வடிவேலு, ‌மீ‌ண்டு‌ம் நடி‌க்க வ‌ந்‌திரு‌க்‌கிறா‌ர்.

இய‌க்குன‌ர் சு‌ந்த‌ர் ‌சி நடிகை கு‌ஷ்பு‌வி‌ன் கணவராவா‌ர். நடிகை கு‌ஷ்பு ‌தி.மு.க.‌வி‌ல் மு‌க்‌கிய பொறு‌ப்‌பி‌ல் இரு‌க்‌கிறா‌ர் எ‌‌ன்பது கு‌றி‌ப்‌பி‌ட‌த்த‌க்கது.