புதன், 30 நவம்பர், 2011

2011 உலக கோப்பை கிரிக்கெட் ஒரு கண்ணோட்டம்


உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் பிப்ரவரி 19ந் தேதி முதல்  ஏப்ரல் 2ந் தேதி வரை  நடக்கிறது. 
இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்களைப் பற்றிய  விவரத்தைப் 

பார்ப்போம்.

இந்திய அணி

டோனி (கேப்டன்), ஷேவாக் (துணை கேப்டன்), தெண்டுல்கர், கவுதம் கம்பீர், விராட் கோக்லி, யுவராஜ்சிங், சுரேஷ்ரெய்னா, யூசுப் பதான், ஹர்பஜன்சிங், ஜாகீர்கான், நெஹ்ரா, பிரவீன்குமார், முனாப் பட்டேல், ஆர்.அஸ்வின், பியுஷ்சாவ்லா.

தமிழக வீரர் அஸ்வினுக்கு இடம்
தமிழக சுழற்பந்து வீச்சாளரும், பேட்ஸ்மேனுமான ஆர்.அஸ்வின் அணியில் இடம் பிடித்துள்ளார். 22 வயதான சுழற்பந்து வீச்சாளர்  பியுஷ்சாவ்லா ஆச்சரியம் அளிக்கும் வகையில் அணியில் இடம் பெற்றுள்ளார். முக்கிய சுழற்பந்து வீச்சாளராக ஹர்பஜன்சிங் இருப்பார். 6  பேட்ஸ்மேன்கள், 4 வேகப்பந்து வீச்சாளர்கள், 3 சுழற்பந்து வீச்சாளர்கள், ஒரு ஆல்&ரவுண்டர் (யூசுப் பதான்), ஒரு விக்கெட் கீப்பர்  (கேப்டன் டோனி) ஆகியோர் அணியில் 
இடம் பெற்றுள்ளனர். 

இடம் பெறாதவர்கள்

 சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா, வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, தமிழக பேட்ஸ்மேன் எம்.விஜய், ரவீந்திர ஜடேஜா,  அமித்மிஸ்ரா, புஜரா, தினேஷ் கார்த்திக். விக்கெட் கீப்பர்கள் பார்த்தீவ் பட்டேல், தினேஷ் கார்த்திக், விரித்திமான் சஹா, இளம் பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா, வேகப்பந்து வீச்சாளர்  ஸ்ரீசாந்த்.

இங்கிலாந்து அணி

 ஸ்டிராஸ் (கேப்டன்), ஆண்டர்சன், இயான் பெல், பிரிஸ்னன், ஸ்டூவர்ட் பிராட், காலிங்வுட், மோர்கன், கெவின் பீட்டர்சன், மேத்  பிரையர், அஜ்மல், ஷாஸத், ஸ்வான், ஜேம்ஸ் டிரிட்வெல், ஜோனதன் டிராட், லுக் ரைட், மைக்கேல் யார்டி.


நியூசிலாந்து அணி

டேனியல் வெட்டோரி (கேப்டன்), ஹாமிஸ் பென்னட், ஜேம்ஸ் பிராங்ளின், மார்ட்டின் கப்தில், ஜேமி ஹாவ், பிரன்டன் மெக்கல்லம்,  நாதன் மெக்கல்லம், மில்ஸ், ஜேக்கப் ஓரம், ஜெஸ்ஸி ரைடர், டிம் சவுதி, ஸ்காட் ஸ்டைரிஸ், ராஸ் டெய்லர், கனே வில்லியம்சன், லுக்  உட்காக்.


வங்காளதேசம்
ஷகிப் அல்&ஹசன் (கேப்டன்), தமிம் இக்பால், இம்ருல் கேயஸ், ஜூனைட் சித்திக், ஷாரியார் நபீஸ், ரஹிபுல் ஹசன், முகமது அஷ்ரபுல்,  முஷ்பிகிர் ரகிம், நயீம் இஸ்லாம், மக்முதுல்லா, அப்துர் ரசாக், ருபெல் ஹூசைன், ஷபியுல் இஸ்லாம், நஸ்முல் ஹூசைன், சுரவாடி  ஷூவோ.


கோப்பையை வெல்வோம் - ஸ்ரீகாந்த்

இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில்...
வெற்றிக்கான அதிக வாய்ப்புகளை கொண்டுள்ள சிறந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி உலக கோப்பையை வெல்லும்.  தேர்வு குழு 
கூட்டத்தில் எல்லா கோணங்களிலும் ஆலோசித்து அணியை முடிவு செய்தோம். பிட்ச் மற்றும் எதிரணிகளையும் கருத்தில்  கொண்டு, 
எல்லாவற்றையும் சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய அணியை தேர்வு செய்து இருக்கிறோம். 

இந்தியாவில் விளையாடுகிறோம் என்பதை மறக்கவில்லை. இங்குள்ள பிட்ச்களில் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு முக்கியமானதாக  இருக்கும். 
பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகியவற்றில் சமமான திறமையுடன் டோனி தலைமையிலான இந்திய அணி விளங்குவதால் உலக  கோப்பை 
போட்டியில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.


நெருக்கடி


தற்போதைய இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கடந்த 2 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில்  
மட்டுமின்றி வெளிநாடுகளில் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை அளித்து வருகிறது. உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் இந்த அணி சிறப்பாக  செயல்பட்டு 
உலக கோப்பையை வெல்லும் என்று நம்புகிறோம்.

இந்தியா மற்றும் துணை கண்டத்தில் விளையாடும் போது அணிக்கு கடும் நெருக்கடி இருக்கும். அணி தேர்வாளர்கள் மற்றும் வீரர்கள்  மத்தியில் இனிமேல் நெருக்கடி நிலவும். 1983&ம் ஆண்டு போல் இந்த அணி மீண்டும் உலக கோப்பையை வெல்லும்.

 ஏப்ரலில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் இந்தியா வென்றால் அது தேர்வாளர்களுக்கும் என்றுமே மறக்க முடியாத  மகிழ்ச்சியான தருணமாக அமையும். கிரிக்கெட் போட்டியில் எந்த வெற்றி கிடைத்தாலும் அது நமது நாட்டுக்கு பெருமை தான். அது ஏன்  இந்த உலக கோப்பை போட்டியாக இருக்கக்கூடாது. இந்த நம்பிக்கை வீரர்களிடம் மட்டுமல்லாமல் நாட்டு மக்களிடமும் இருக்க  வேண்டும். 

தொடக்க ஆட்டம்


உலக கோப்பை போட்டியில் இந்திய அணி பி பிரிவில் இடம் பிடித்துள்ளது. வங்காளதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட்  இண்டீஸ், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். மிர்புரில் பிப்ரவரி 19&ந் தேதி நடைபெறும்  தொடக்க ஆட்டத்தில் 
இந்திய அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது.  

 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணை

வருகிற 2011ம் ஆண்டு இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகியவை இணைந்து நடித்தவுள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

முதல் போட்டியில் இந்தியாவும், வங்கதேசமும் மோதுகின்றன. உலக கோப்பைப் போட்டியில் 14 அணிகள் பங்கேற்கின்றன.

ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே, கனடா, கென்யா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்தியா பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இப்பிரிவில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், வங்கதேசம், அயர்லாந்து, ஆலந்து ஆகியவை இடம் பெற்றுள்ளன. 

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.
இந்தியாவில், இறுதிப் போட்டி, ஒரு அரை இறுதி, ஒரு கால் இறுதி உள்பட 29 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஒரு அரை இறுதி, ஒரு கால் இறுதி 
உள்பட 12 ஆட்டங்கள் இலங்கையிலும், தொடக்க விழா, இரு கால் இறுதி உள்பட 8 ஆட்டங்கள் வங்காளதேசத்திலும் நடைபெறும்.

43 நாட்கள் நடைபெறும் போட்டிகள் மொத்தம் 13 மைதானங்களில் நடைபெறவுள்ளது. போட்டிக்கான கால அட்டவணை நேற்று மும்பையில் 
வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஐசிசி துணைத் தலைவரும், மத்திய ஒருங்கிணைப்புக் கமிட்டியின் தலைவருமான சரத் பவார், ஐசிசி செயல் 
தலைவர் ஹாரூன் லோர்காட், போட்டி இயக்குநர் ரத்னாகர் ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

போட்டி அட்டவணை

முதல் போட்டி பிப்ரவரி 19ம் தேதி மிர்பூர் நகரில் நடைபெறும். இதில் இந்தியாவும், வங்கதேசமும் மோதவுள்ளன.

பிற போட்டிகள் விவரம்..

பிப்.20- இலங்கை - கனடா (ஹம்பன்தோடா-இலங்கை)
பிப்.20 - கென்யா - நியூசிலாந்து (சென்னை)
பிப்.21 - ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே (அகமதாபாத்)
பிப்.22 - இங்கிலாந்து - ஆலந்து (நாக்பூர்)

பிப்.23 - கென்யா - பாகிஸ்தான் (ஹம்பன்தோடா)
பிப்.24 - தென்ஆப்பிரிக்கா - மே.இ. தீவுகள் (டெல்லி)
பிப்.25 - வங்காளதேசம் - அயர்லாந்து (மிர்பூர்)
பிப்.25 - ஆஸ்திரேலியா நியூசிலாந்து (நாக்பூர்)
பிப்.26 - பாகிஸ்தான் - இலங்கை (கொழும்பு)
பிப்.27 - இந்தியா - இங்கிலாந்து (கொல்கத்தா)
பிப்.28 - ஆலந்து - மே.இ. தீவுகள் (டெல்லி)
பிப்.28 - கனடா - ஜிம்பாப்வே (நாக்பூர்)
மார்ச் 1 - கென்யா - இலங்கை (கொழும்பு)
மார்ச் 2 - இங்கிலாந்து -அயர்லாந்து (பெங்களூர்)
மார்ச் 3 - கனடா - பாகிஸ்தான் (கொழும்பு)
மார்ச் 3 - ஆலந்து - தென்ஆப்பிரிக்கா (மொஹாலி)
மார்ச் 4 - வங்காளதேசம் - மே. இ. தீவுகள் (மிர்பூர்)
மார்ச் 4 - நியூசிலாந்து - ஜிம்பாப்வே (அகமதாபாத்)
மார்ச் 5 - ஆஸ்திரேலியா - இலங்கை (கொழும்பு)
மார்ச் 6 - இந்தியா - அயர்லாந்து (பெங்களூர்)
மார்ச் 6 - இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா (சென்னை)
மார்ச் 7 - கனடா - கென்யா (டெல்லி)
மார்ச் 8 - நியூசிலாந்து - பாகிஸ்தான் (பல்லிகேலே)
மார்ச் 9 - இந்தியா - ஆலந்து (டெல்ல)
மார்ச் 10 - இலங்கை - ஜிம்பாப்வே (பல்லிகேலே)
மார்ச் 11 - வங்காளதேசம் - இங்கிலாந்து (சிட்டகாங்)
மார்ச் 11 - அயர்லாந்து - மே. இ. தீவுகள் (மொஹாலி)
மார்ச் 12 - இந்தியா - தென்ஆப்பிரிக்கா (நாக்பூர்)
மார்ச் 13 - கனடா - நியூசிலாந்து (மும்பை)
மார்ச் 13 - ஆஸ்திரேலியா - கென்யா (பெங்களூர்)
மார்ச் 14 - வங்காளதேசம் -ஆலந்து (சிட்டகாங்)
மார்ச் 14 - பாகிஸ்தான் - ஜிம்பாப்வே (பல்லிகேலே)
மார்ச் 15 - அயர்லாந்து - தென்ஆப்பிரிக்கா (கொல்கத்தா)
மார்ச் 16 - ஆஸ்திரேலியா - கனடா (பெங்களூர்)
மார்ச் 17 - இங்கிலாந்து - மே.இ. தீவுகள் (சென்னை)
மார்ச் 18 - நியூசிலாந்து - இலங்கை (மும்பை)
மார்ச் 18 - அயர்லாந்து - ஆலந்து (கொல்கத்தா)
மார்ச் 19 - வங்காளதேசம் - தென்ஆப்பிரிக்கா (மிர்பூர்)
மார்ச் 19 - ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் (கொழும்பு)
மார்ச் 20 - கென்யா - ஜிம்பாப்வே (கொல்கத்தா)
மார்ச் 20 - இந்தியா- மே.இ. தீவுகள் (சென்னை)

மார்ச் 23 - முதல் காலிறுதிப் போட்டி- மிர்பூர்
மார்ச் 24 - 2வது காலிறுதிப் போட்டி- கொழும்பு
மார்ச் 25 - 3வது காலிறுதிப் போட்டி- மிர்பூர்
மார்ச் 26 - 4வது காலிறுதிப் போட்டி - அகமதாபாத்.

மார்ச் 29 - முதல் அரை இறுதிப் போட்டி- கொழும்பு.
மார்ச் 30 - 2வது அரை இறுதிப் போட்டி- மொஹாலி

ஏப்ரல் 2 - இறுதிப் போட்டி - மும்பை

Kola Kuthu - Yuvan Yuvathi [ 2011 ] Song ~ Bharath & Rima

வெயிலை சமாளிக்க...


உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாய்ங்களான்னு தமிழ்சினிமாவில் ஒரு பாடலில் வெயிலின் கொடுமையைப் பற்றியும், கதாநாயகியின் அழகைப் பற்றியும் வர்ணித்து இருப்பார்கள். அப்படிப்பட்ட வெயில் உங்களையும் வாட்டி வதைக்கிறதா? இதோ...உங்களுக்கான டிப்ஸ்...


நம் உடலிலேயே மிகப் பெரிய உறுப்பு தோல். தலை முதல் கால் வரை போர்வை போல் சுற்றியுள்ள இந்த தோல் 2 சதுரமீட்டர் பரப்பளவை உடையது. மென்மையானது. மனிதனின் முதல் அடையாளம் தோல்தான். கோடையில் ஏராளமான சருமநோய்கள் வரக்கூடும் என்பதால், கொளுத்தும் வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

சிலருக்கு வீட்டை விட்டு வெளியே வெயிலில் போய்விட்டு வந்தால், உடல் முழுவதும் தடிப்பு தடிப்பாகவும், கொப்புளங்களாகவும் வந்துவிடும். இதுதான் போட்டோ அலர்ஜி எனப்படும் சூரிய ஒளி ஒவ்வாமை. இன்னும் ஒரு சிலருக்கு உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து சருமம் வறண்டு மயக்கம் அடையும் நிலை ஏற்படும். வியர்க்குரு, வேனற்கட்டி போன்றவை குழந்தைகளுக்கு உண்டாகும்.

உடைகள் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். கோடைகாலத்தில் தான் உடலில் அதிகமாக வியர்வை உண்டாகும். அப்போது செயற்கை இழையால் ஆன உடைகளை அணியும்போது சருமத்தில் இருந்து உண்டாகும் வியர்வை வெளியேற வழியில்லாமல், உடல் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். அந்த வியர்வைக்கழிவுடன், வெளியில் இருந்து வரும் தூசி, துகள்கள் சேர்ந்து சருமத்தில் பாதிப்புகளை உண்டாக்கி விடும். இதனால் தான் படர்தாமரை போன்ற நோய்கள் உண்டாகின்றன.

கோடைகாலத்தில் பெரும்பாலானவர்களைத் தாக்கும் மற்றொரு நோய், சின்னம்மை. வேரிசெல்லா ஜோஸ்டர் என்னும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலால் சின்னம்மை வருகிறது. 

சமாளிப்பது எப்படி?
* தூய பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். தூய வெண்ணிற பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.
* காரம் குறைந்த உணவுகளையே சாப்பிட வேண்டும்.
* தினமும் காலை வேளையில் இரண்டு கப் தண்ணீரும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு கப் தண்ணீரும் அருந்துவது நல்லது.
* தினமும் காலையில் உணவுடன் ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடிக்க வேண்டும்.
* நீர்ச்சத்து மிகுந்த தர்பூசணி, அன்னாசி, திராட்சை, ஆரஞ்சு, மாம்பழம் போன்ற பழங்கள் சருமத்திற்கு நன்மை தரும் சத்துக்களை கொண்டவை. உடலில் ஏற்படும் நீர் இழப்பைத் தடுக்க பழச்சாறுகளே சிறந்த மருந்து.
* ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சியும், ஆன்டி ஆக்சிடெண்களும் அதிகம் உள்ளன.
* அன்னாசி பழத்தில் வைட்டமின் சி இருக்கிறது. செரிமானத்திற்கு உகந்தது.
* பிராடு ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீன் லோஷன்கள் வெயிலின் கொடுமையில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். முகமே வறண்டு போயிருந்தால் அகம் எப்படி மலரும். அகம் மலர முகம் மலர வெயிலை கூலாக்கும் மேற்கண்ட ஐடியாக்களை கடைபிடிப்பீர்களாக..!

இது தானா....சந்திர கிரகணம்?”

சூரியன், சந்திரன், பூமி இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனில் விழும் நிகழ்வுக்கு சந்திரகிரகணம் என்று பெயர்.
அந்த காலத்தில் கிராமங்களில் கிரகணம் என்றாலே, சந்திரனை பாம்பு விழுங்கும் நிகழ்ச்சி என்று மூடநம்பிக்கையில் ஊறிப்போய் கிடந்தனர். இதுமட்டும் போதாது என்று, அதை நிரூபிக்கும் வகையில், மேலும் சில மூடநம்பிக்கைகள் வலம் வந்தன. அவற்றுள் சில.

கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது.
கிரகணத்தி

ன் போது, ஒரு வாயகன்ற பாத்திரத்தில், நீரை ஊற்றி, அதில் உலக்கையை செங்குத்தாக நிற்க வைப்பர். அப்போது உலக்கை நின்று விட்டால், சந்திரகிரகணத்தால் தான் நிற்கிறது என்று ஆச்சரியத்துடன் அனைவரையும் மூக்கின் மேல் விரலை வைக்கச் செய்வார்கள்.
கர்ப்பிணிப்பெண்கள் கிரகணத்தைப் பார்த்தால், கருவில் வளரும் குழந்தைக்கு ஆபத்து.
இதைப் படித்ததும் போதும்பா...சாமி என்கிறீர்களா, இப்போதும் கூட இந்த மூடநம்பிக்கை எத்தனையோ கிராமங்களிலும் உள்ளன. அதை விட்டு விடுவோம்.

பாட்டி வடை சுட்டுக்கொண்டிக்கிறாள் என்பதை நிலவு வரை எடுத்துச் சென்று மூடத்தனத்திற்கு வித்திடுவார்கள், நம் முன்னோர்கள்.
இரவில் தெரியும் எந்த வானியல் நிகழ்வுகளையும் வெறும் கண்ணால் பார்க்கலாம். பகலில் தான் பார்க்க கூடாது. ஏனென்றால், சூரிய கிரகணத்தின் போது நம் கண்களில் உள்ள விழித்திரைக்கு அதிக வேலை கொடுக்க வேண்டியிருக்கும்.

சூரிய கிரகணத்தின் போது அதன் ஒளியின் பிரகாசம் திடீர் என்று அதிகரிப்பதால் கண்கள் விழித்திரையின் அளவை சரிசெய்ய மெனக்கெடும் நிலை ஏற்படும். அப்போது கண்வலி உண்டாகும். தொடர்ந்து இந்த நிலை ஏற்படும்போது கண்பார்வைத்திறன் குறைவு ஏற்படும்.தேவையில்லாத விஷயத்தைப் பற்றி ஆராய்வதை விட, தேவையான விஷயத்தைப் பற்றி ஆராய்வது நம் எதிர்கால வாழ்வை மேம்பட வைக்கும். அந்த நல்லெண்ணத்துடன் இப்போது விஷயத்திற்கு வருவோம்.
15.6.2011 அன்று நள்ளிரவு 11.53 முதல் 16.6.2011&ம் தேதி அதிகாலை 3.33 வரை நீடித்தது, இந்த நீண்ட சந்திரகிரகணம். இதில் முழுமையாக சந்திரனை மறைத்த நிகழ்வு சுமார் 100 நிமிடங்களுக்கு நீடித்தது. இதேபோன்ற கிரகணம் 130 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் வருகிறது என்று கூற முடியாது. 2018ல் இதேபோன்ற முழுமையான சந்திரகிரகணத்தைப் பார்க்கலாம்.
ஜூன் முதல் தேதி பகுதி நேர சூரியகிரகணம் ஏற்பட்டது. இப்போது முழு நேர சந்திரகிகரணம் வந்துள்ளது. ஜூலை முதல் தேதியில் பகுதி நேர சூரியகிரகணம் வரப்போகிறது. இதனால், மக்கள் மத்தியில் உலகம் அழிந்துவிடுமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது.

இளஞ்சிவப்பு நிறமாக வானத்து நிலா தகதகத்தது. கருமையான மேகங்கள் சூழ்ந்தபோதும் அவை மறையும் போது, புவியின் நிழல் நிலாவின் மீது படும் போது இளஞ்சிவப்பு நிறத்தில் இருள் சூழ்ந்த அந்த ரம்மியமாக இருந்தது.
நிலா இளஞ்சிவப்பு நிறமாக மாறக் காரணம், பூமியின் நிழல் அதன் மீது விழுவதுதான்.
புவியில் வளிமண்டலம் முழுவதும் தூசி துகள்களால் நிரம்பியுள்ளது. மேலும் சமீபத்தில் சிலி நாட்டில் நிகழ்ந்த எரிமலை சீற்றத்தால், உண்டான புகை முழுவதும் வளிமண்டலத்தில் சூழ்ந்துள்ளன. இந்த நிலையில் சூரிய ஒளி புவியின் மீது படுகிறது. அப்போது சூரிய ஒளியில் உள்ள நீல நிறம் வீணாகப் போகிறது. மீதமுள்ள நிறத்தில் அலைநீளம் அதிகமாக இருப்பது சிவப்பு நிறம்தான். அதுவும் வளிமண்டலத்தில் சூழ்ந்துள்ள தூசி, துகள்களால் மங்கலாகி, இளஞ்சிவப்பு நிறத்தில் புவியின் மீது படுகிறது. அந்த நிறத்தையே பூமியும் சந்திரனின் மீது பிரதிபலிக்கிறது. அதனால்தான் சந்திரன் இளஞ்சிவப்பு நிறத்தில் ஜொலிக்கிறது.

பிறைநிலாவில் பள்ளம் தெளிவாகத் தெரியும். பவுர்ணமி அன்று வரும் முழுநிலாவில் பள்ளங்கள் தெளிவாகத் தெரியாது. ஏனென்றால்,அப்போது சூரிய ஒளி நிலவில் செங்குத்தாக விழுவதால், பள்ளங்கள் மறைக்கப்படும். தலை உச்சியில் இருந்து லைட் அடிக்கும்போது, நமது நிழல் கீழே விழுவதில்லை. அதுபோல்தான் இந்த நிகழ்வும்.
சூரிய ஒளி நிலாவின் பக்கவாட்டில் விழுவதால் தான் நிலாவில் உள்ள பள்ளம் டெலஸ்கோப்பின் மூலம் பார்க்கும்போது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. கிரகணம் ஏற்படும்போதும் இருள் சூழ்ந்து விடுவதால், நிலாவில் உள்ள பள்ளங்களை நாம் பார்க்க முடிவதில்லை. நிலாவில் உள்ள பள்ளங்களை மூன் கிரியேட்டர்ஸ் எனப்படுகிறது. கிரகணம் விடும் பகுதியில் பள்ளங்கள் மீண்டும் தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கிறது. அப்போது சூரியனின் பிரகாசமான கதிர்கள் நிலவில் சுள்ளென்று விழுவதை டெலஸ்கோப்பின் மூலம் தரிசிக்க முடிந்தது.
சந்திரனில் பூமியின் நிழல் ஒரு லட்சத்து 85 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு விழுகிறது.

சந்திரன் பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
ஒரு வருடத்திற்கு 5 சூரியகிரகணம் உண்டாகும். அடுத்த சூரியகிரகணம் டிசம்பர் 1 அன்று ஏற்படும்.

இதற்கு முன்பு, 2000ல் முழு நேர சந்திரகிரகணம் 107 நிமிடங்கள் நீடித்தது.
பவர்ணமி அன்று கடலில் அலைகள் அதிகமாக இருக்க காரணம், சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசைகள் பூமியில் படுவதுதான் காரணம்.
இந்த அற்புத காட்சியைக் காண, மக்கள் நள்ளிரவிலும் தூக்கத்திற்கு விடுதலை கொடுத்து விட்டு சென்னை பிர்லா கோளரங்கிற்கு படையெடுத்தனர்.

பிரத்யேகமாக வைக்கப்பட்டிருந்த டெலஸ்கோப்களில் ஆர்வம் குறையாமல் கிரகணம் முடியும் வரை காத்திருந்து அடிக்கடி பார்த்து ரசித்தனர்.

வியாழன், 17 நவம்பர், 2011

தமிழக மீனவர் விவகாரம்! மீண்டும் ஒருமுறை ஜெயலலிதா மன்மோகன் சிங்குக்கு கடிதம்

இலங்கை கடற்படையினருக்கு எதிராக அந்த நாடு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரியுள்ளார்.


தமிழக மீனவர்கள் இலங்கையின் கடற்படையினரால் தாக்கப்பட்டமை தொடர்பில் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள ஜெயலலிதா இதனை வலியுறுத்தியுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில் இவ்வாறான ஐந்தாவது கடிதத்தை ஜெயலலிதா, மன்மோகன் சிங்குக்கு அனுப்பியுள்ளார்.
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விடயத்தை இந்திய மத்திய அரசாங்கம் தேசியப்பிரச்சினையாக பார்க்கவேண்டும் என்று அவர் தமது கடிதத்தில் கோரியுள்ளார்.
நேற்று முன்தினம் கச்சத்தீவு கடற்பகுதியில் வைத்து தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டமை குறித்து தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா, இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கையின்மையே இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு உந்துதல் அளித்துள்ளது என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில் இவ்வாறான தாக்குதல்கள் நாளுக்கு நாள் நிலைமையே மோசமடையவே செய்யும் என்றும் ஜெயலலிதா மன்மோகன் சிங்கிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
இலங்கை கடற்படை அயோக்கியர்களை ஒடுக்க நடவடிக்கை எடுங்கள்- பிரதமருக்கு ஜெ. கோரிக்கை
தங்களது வாழ்வாதாரத்திற்காக, பாக் ஜலசந்தியில் காலங்காலமாக மீன்பிடித்து வரும் அப்பாவி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையில் உள்ள அயோக்கியர்களின் செயல்களை இலங்கை அரசாங்கம் தடுக்க வேண்டும்.
அதனை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்தில், தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
இதுதொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம்:
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, துன்புறுத்தப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்பாக நான் உங்களுக்கு 7-6-2011, 21-6-2011, 10-10-2011, 7-11-2011 ஆகிய நான்கு முறை கடிதம் எழுதியுள்ளேன். தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல், தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலமுறை கடிதம் எழுதியும் பயனில்லை
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தமிழ்நாட்டு பிரச்சினையாகப் பார்க்காமல், தேசிய பிரச்சினையாகவும், இந்திய மீதான தாக்குதலாகவும் கருத வேண்டும் என்று ஏற்கனவே உங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
மேலும், இந்த பிரச்சினை தொடர்பாக நான் உங்களுக்கு பல முறை கடிதம் எழுதியும், நீங்கள் இந்தப் பிரச்சினையை இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும், இதுபோன்ற தாக்குதல்கள் இனிமேல் நடக்காது என்று அவர்கள் உறுதி அளித்த பிறகும், தொடர்ந்து தாக்குதல் நீடித்து வருவதை மிகுந்த கவலையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதால், நிலைமை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருகிறது.
கடந்த 15-11-2011 அன்று கச்சதீவு அருகே சர்வதேச கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் மீது இலங்கை கடற்படையினர் தாக்கல் நடத்தியதில், அவர் படுகாயம் அடைந்துள்ளார். ஒரு அதிவேக ரோந்துப் படகில் வந்த 15 இலங்கை கடற்படையினர் இராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள் வீசி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், செல்வராஜ் என்ற மீனவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
கொந்தளிப்பில் மீனவர்கள்
இரத்தம் சொட்டச் சொட்ட இருந்த நிலையில் அவரை உடன் வந்த மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து, பின்னர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த தாக்குதல் சம்பவம் பல்வேறு ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தது. தங்களது பிழைப்பிற்காக எல்லா துன்பங்களையும் தாங்கிக் கொண்டு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் இராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில், இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்று தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவது, மீனவ சமுதாயத்தினர் மத்தியில் பாதுகாப்பின்மை உணர்வையும், பல முறை வேண்டுகோள் விடுத்தும், இந்த தாக்குதலை தடுக்கத் தவறிய மத்திய அரசின் செயல்படா தன்மை மீது நம்பிக்கையின்மையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்தில் இலங்கை அரசாங்கம் இரட்டை வேடம் போடுவது பற்றி தங்களிடம் நான் ஏற்கனவே கவலை தெரிவித்திருக்கிறேன். கடலில், வழிதவறிச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு மனிதாபிமான முறையில் உதவி செய்ய வேண்டும் என்று ஒருபுறம் அறிக்கை வெளியிடும் இலங்கை அரசாங்கம், மறுபுறம் தனது நாட்டு கடற்படை, தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
தங்களது வாழ்வாதாரத்திற்காக, பாக் ஜலசந்தியில் காலங்காலமாக மீன்பிடித்து வரும் அப்பாவி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையில் உள்ள அயோக்கியர்களின் செயல்களை இலங்கை அரசாங்கம் தடுக்க வேண்டும். அதனை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்தில், தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
4 முறை கடிதம் எழுதியும் அசையாத பிரதமர்
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக சமீப மாதங்களில் 4 முறை பிரதமருக்கு கடிதம் மூலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் இதுவரை பிரதமர் தரப்பிலிருந்து உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. தற்போது 5வது முறையாக அவர் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார். இப்போதாவது பிரதமர் அசைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இலங்கை கடற்படையின் தொடரும் அட்டூழியம்!- இராமேஸ்வரம் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்


தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதிய நிலையில் மீண்டும் ஒரு தாக்குதல் அரங்கேறியுள்ளது.
இராமேஸ்வரத்தில் இருந்து புதன்கிழமை அதிகாலை 650-க்கும் மேற்பட்ட படகுகளில் 2 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
நேற்று புதன்கிழமை நள்ளிரவு கச்சதீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது கற்களையும், கட்டைகளையும் வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் சகாயம், ஆரோக்கியராஜ் ஆகிய இரு மீனவர்கள் பலத்த காயமடைந்தனர்.
விடிய விடிய கனமழை கொட்டிய போதும் இலங்கை கடற்படையினர் விடாது தாக்குதல் நடத்தியதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
50க்கும் மேற்பட்ட படகுகளை சேதப்படுத்தியதுடன், வலைகளை அறுத்துவிட்டு மீன்களையும் கொள்ளையடித்து சென்றுவிட்டதாக இராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாநில அரசு கடிதம் எழுதுவதோடு நின்றுவிடாமல் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 16 நாட்களில் மட்டும் 5 முறை இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 2 நவம்பர், 2011

கடலோர மாவட்டங்களில் அமைச்சர்கள் ஆய்வு


சென்னை : தமிழகத்தில் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால், 12 கடலோர மாவட்டங்களுக்கு 15 அமைச்சர்கள் நேரில் சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும், மறைந்த அமைச்சர் கருப்பசாமி மறைவுக்கு ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் எழுந்து நின்று இரண்டு மணித்துளிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்தி, அச்சமின்றி மக்கள் வாக்களிக்க வகை செய்த மாநில தேர்தல் ஆணையத்திற்கும், அதன் கீழ் பணியாற்றியவர்களுக்கும் தமிழக அமைச்சரவை தனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களை யும் தெரிவித்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் பருவ மழை குறித்தும், கடலோர மாவட்டங்களில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அமைச்சரவை கூட்டத்தின் முடிவில், தமிழகத்தில் பருவமழை காரணமாக ஒரு வார காலத்திற்கு கடும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் பன்னிரெண்டு கடலோர மாவட்டங்களிலும் பருவமழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 15 அமைச்சர்களை உடனடியாக அனுப்பி வைத்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு கைத்தறித்துறை அமைச்சர் பி.வி. ரமணா, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சின்னையா, கடலூர் & சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம், விழுப்புரம் & பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நாகப்பட்டினம் & மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்கு வீட்டுவசதித்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், புதுக்கோட்டை & ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.சுப்பிரமணியன்,

ராமநாதபுரம் & கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதய குமார், தூத்துக்குடி & இந்து அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முக நாதன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன், திருநெல்வேலி & கதர் துறை அமைச்சர் பி.செந்தூர்பாண்டியன், கன்னியாகுமரி & வனத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால் ஆகிய 15 அமைச்சர்கள் சென்று கடலோர மாவட்டங்களில் எடுக்கப்பட உள்ள முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இளையராஜா மனைவி உடல் சொந்த ஊரில் அடக்கம்

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவி ஜீவா (60) உடல் பண்ணைபுரத்தில் இன்று காலை அடக்கம் செய்யப்படுகிறது. இளையராஜாவின் மனைவி ஜீவா. இவருக்கு நேற்றுமுன்தினம் இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் சென்னை தி.நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, தென்சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ. அன்பழகன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சமக தலைவர் சரத்குமார், ஆர்.எம். வீரப்பன், கவிஞர் வைரமுத்து, லதா ரஜினிகாந்த், கமல்ஹாசன், குஷ்பு, சுகாசினி, உதயநிதி ஸ்டாலின், ராம நாராயணன், இயக்குனர்கள் மகேந்திரன், பாலசந்தர், பாரதிராஜா, கே.பாக்யராஜ், அமீர், ஹரி, எம்.எஸ்.விஸ்வநாதன், தேவா, ஸ்ரீகாந்த் தேவா உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். 

மேலும் தமிழக கவர் னர் ரோசய்யா, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இளையராஜாவின் அக்கா கமலத்தின் மகள் ஜீவா. 1970ல் இளையராஜா& ஜீவா திருமணம் நடந்தது. அவர்களது மகன்கள் இசையமைப்பாளர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, மகள் பவதாரிணி. 

தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் லோயர் கேம்ப் பகுதியில் இளையராஜாவின் அம்மா சின்னத்தாயின் சமாதி உள்ளது. அதன் அருகே ஜீவாவின் உடல் இன்று காலை அடக்கம் செய்யப்படும் என இளையராஜாவின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

பெண் வயிற்றில் இருந்த 10 கிலோ கட்டி அகற்றம்


உளுந்தூர்பேட்டை : விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆத்தூர்பிள்ளையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி, விவசாயி. இவருடைய மனைவி வசந்தா(45). 
 இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. கடந்த ஒரு வருடமாக வசந்தாவின் வயிறு பெரிதாகி வந்துள்ளது. இதனால் வசந்தாவுக்கு அஜீரனம் மற்றும் சுவாச கோளாறு இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வசந்தாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. 

கணவர் பழனி, உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் கிளினிக்கில் வசந்தாவை சேர்த்தார். டாக்டர் எழிலரசி ஸ்கேன் செய்து பார்த்ததில் வசந்தாவின் வயிற்றில் பெரிய கட்டி இருப்பது தெரிந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. டாக்டர் எழிலரசி தலைமையில் விழுப்புரத்தை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் வெங்கடேசன், மயக்க மருந்து நிபுணர் நித்யானந்தம், டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர், 2 மணி நேரம் போராடி 10 கிலோ கொண்ட சினை பை கட்டியை அகற்றினர்.