செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

உலகின் மிக குள்ளமான மனிதராக கின்னஸ் சாதனை - படங்கள்


நேபாள நாட்டை சேர்ந்த சந்திரபகதூர் டான்ஜி என்பவரே உலகில் வாழும் மிக குள்ளமான மனிதர் என கின்னஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
72 வயதாகும் இவர் வெறும் 21.5 இஞ்ச் கள் தான் (54.60 Cm).
இப்பட்டம் பெற்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறும் சந்திரபகதூர் டான்ஜி, தான் குள்ளமாக இருப்பதால் ஒரே ஒரு குறைதான். தனக்கு ஏற்ற மணப்பெண் கிடைக்கவில்லை ஆனால் இப்பட்டம் பெற்று தான் பிரபலமாகியுள்ளதால் தனக்கு ஏற்ற பெண் நிச்சயம் கிடைத்துவிடுவாள் என்கிறார் நம்பிக்கையுடன்.

ரஜினிக்காக உயிருடன் வருகிறார் நாகேஷ்!


திரை நடிப்பை உயிராக நேசித்து சாதனை படைத்த கலைஞர்களை மீண்டும் திரையில் உயிருடன் கொண்டு வரும்
அனிமேஷன் தொழில் நுட்பம், 3டி தொழில் நுட்பம் ஆகியவற்றின் மூலம் சாத்தியமாகியிருகிறது.
தற்போது ரஜினி மோசன் கேப்சரிங் தொழில் நுட்பத்தில் நடிக்கும் ‘கோச்சடையன் படத்தில், தமிழ்சினிமாவின் தன்னிகரற்ற கலைஞன் ‘நாகேஷுக்கு மீண்டும் உயிர்கொடுக்கிறது சௌந்தர்யா ஆர். அஸ்வின் தலைமியிலான அணி.

சச்சினுக்கு ஒரு நியாயம், ஹஸிக்கு ஒரு நியாயமா! என்ன அநியாயமிது : தோனி (வீடியோ)


இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இறுதியாக (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஒரு நாள் போட்டியில், சச்சின் டெண்டுல்கர் ரன் அவுட்டில் ஆட்டமிழந்தமைக்கு, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர் பிரெட் லீ குறுக்கே வந்ததும் ஒரு காரணமென, இந்திய அணியின் கேப்டன் தோனி நிருபர் சந்திப்பில் குற்றம் சுமத்தினார்.
எனினும் இதற்கு பிரெட் லீ மறுப்பு தெரிவித்துள்ளார். இது எதேச்சையாக நடைபெற்ற சம்பவம் தான். டெண்டுல்கரை வேண்டுமென்றே தடுக்க வேண்டுமென நான் இதை செய்யவில்லை என டுவிட்டரில் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை அந்நிருபர் சந்திப்பில் தோனி மேலும் தெரிவிக்கையில், அப்போட்டியில் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியா துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த போது டேவிட் ஹஸியின் ரன்வுட் முறையிலான ஆட்டமிழப்பு எமக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்படவில்லை. முகத்தில் காயமேற்படாமல் இருப்பதற்காகவே அவர் பந்தை தடுத்ததாக நடுவர்களால் தெரிவிக்கப்பட்டது. ஆனால் முகத்தின் உயரத்திற்கு பந்துவரவில்லை.இதே போன்றதொரு சூழ்நிலையில், இன்ஸ்மாம் ஹுல் ஹக் ஒரு போட்டியில் பந்தை துடுப்பாட்ட மட்டையால் தடுத்தார் என அவரை நடுவர்கள் ஆட்டமிழக்க செய்தனர். காற்பந்து போட்டிகளில் வேண்டுமென்றே தடுக்காவிடினும் கைகளில் பந்து பட்டால் நியாயமாக பெனால்டி கொடுக்கிறார்கள் என்றார்.

திமுகவிலிருந்து அதிமுகவுக்கு நடிகர் பாக்யராஜ்?


பிரபல தமிழ்நடிகரும், கதாசிரியருமான பாக்யராஜ் திமுகவில் இருந்து விலகவுள்ளதாகத்
தெரிய வருகிறது. திமுகவில் இருந்து விலகும் இவர் அதிமுகவில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் அறியப்படுகிறது.
தனது விருப்பத்தினை தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவிற்கு பாக்கியராஜ் அறிவித்திருப்பதாகவும், ஆயினும் ஜெயலலிதாவிடம் இருந்து இதுவரை அழைப்பு ஏதும் வரவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பகாலங்களில் எம்.ஜீ.ஆரின் விசுவாசியாக இருந்த இவர், எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியற்கட்சியை தொடங்கி முழுநேர அரசியலில் ஈடுபட்டார். ஆயினும் அக் கட்சியின் மூலம் அரசியலில் பெரிதும் சாதிக்க முடியாதிருந்த நிஜலையில், 2006ல் அக் கட்சியைக் கலைத்து விட்டு தி.மு.க.வில் இணைந்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, தமிழக மெங்கும் அ.தி.மு.க.வுக்காக தேர்தற் பிரச்சாரத்தில் ஈடுபட்டடிருந்தார். ஆயினும் அன்மைக்காலமாக திமுகவின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி அடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்வார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயினும் இத் தகவலை அவரோ அல்லது அதிமுக தரப்போ உறுதி செய்யவில்லை என்பதும் திமுகவில் இருந்து நடிகர் தியாகுவும் இதுபோன்ற கருத்தில் விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பிந்திக் கிடைத் தகவல்களின் படி, திமுகவிலிருந்து விலகுவது தொடர்பான  செய்தியினை நடிகர் கே. பாக்யராஜ் மறுத்திருப்பதாகத் தெரிய வருகிறது.

இந்தியா முழுவதிலும் இன்றைய வேலைநிறுத்தப் போராட்டத்தில் 10 கோடி தொழிலாளர்கள்


மத்திய அரசை கண்டித்து இன்று நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்படும் வேலை நிறுத்தப் போராட்டத்தில்,
சுமார் 10 கோடி தொழிலாளர்கள் பங்கெடுப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.  11 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளன.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை 10,000 ஆக உயர்த்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். என்னும் கோரிக்கைகள் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடாளவிய ரீதியில் இந்த வேலை நிறுத்த போராட்டம் இன்று நடக்கிறது.
இன்றைய போராட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் கலந்து கொண்ட போதும், அதிமுக தொழிற்சங்கம் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் இந்த வேலை நிறுத்தம் சென்னையில் பாரிய தாக்கம் எதனையும் செலுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கி வருவதாகவும், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இவ் வேலை நிறுத்தம் காரணமாக, கோவை மற்றும் திருப்பூரில் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்துச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தப் பகுதிகளில் உள்ள 45 லட்சம் தொழிலாளர்கள் நிரந்தர வேலை இழப்பு அடைந்துள்ளதாகவும், தொழிலாளர் சட்டங்கள் சரிவர நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும் இப் பகுதித் தொழிலாளர்கள் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
வங்கித்துறை ஊழியர்களும், இன்சூரன்ஸ் துறைசார்ந்தவர்களும், இந்தப் போராட்டத்தில் இனைந்திருப்பதால், வங்கிச் சேவைகள் முற்றாகப் பாதிப்படைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

பள்ளி ஆசிரியை கொலை செய்த மாணவன், சீர்திருத்த பள்ளியில் பெற்றோரை சந்திக்க மறுப்பு


சென்னையில் பள்ளி ஆசிரியை குத்தி கொன்ற மாணவர், தம்மை சந்திக்க சிறைக்கு வந்த பெற்றோரை பார்க்க மறுத்துள்ளார்.
சென்னை ஆங்கிலோ இந்தியன் பள்ளியொன்றின் ஆசிரியை  வகுப்பறையில் வைத்து குத்திக்கொண்டதாக குற்றம் சுமத்தபட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் குறித்த சிறுவன் அனுமதிக்கப்பட்டான்.
அங்கு முதல் நாள் மட்டும் மன இறுக்கத்துடன் காணப்பட்டதாகவும், பின்னர் அங்குள்ள சிறுவர்களுடன் சேர்ந்து விளையாட தொடங்கிவிட்டதாகவும் சீர்திருத்த பள்ளி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 'இன்று அவனை பார்க்க வந்த அவனது பெற்றோர் மற்றும் சகோதரிகளை அம்மாணவன் பார்க்க மறுத்துவிட்டதாகவும், குற்ற மனப்பான்மையினாலா அல்லது பெற்றோர் மீதுள்ள கோபத்தினாலா அவன் பார்க்க மறுத்துவிட்டான் என்பது தெரியவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 
தொடர்ந்து வன்முறைப்போக்கான சினிமா படங்களை பார்த்தமையும் இம்மாணவன் கொலை செய்யும் அளவுக்கு சென்றதற்கு ஒரு காரணம் என அவனது வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
கொலை செய்வதற்கு முன் ஒரு நில நாட்களில் அக்னி பாத் எனும் புதிதாக  வெளிவந்த ஹிந்தி படத்தை 30க்கு மேற்பட்ட தடவை அம்மாணவன் பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படத்தில் இதே போன்று கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் ஆலுக்காஸில் பாரிய கொள்ளை


பிரபலமான ஆலுக்காஸ் நகைக்கடையின் திருப்பூர் கிளையில் பாரிய கொள்ளைச் சம்பவம் இடம் பெற்றிருப்பதாகத்
தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு திருப்பூர் குமரன் சாலையில் அமைந்துள்ள மேற்படி கடையின் சுவரைத் துளைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பல இலட்சம் மதிப்புடைய நகைகளைக் கொள்ளை அடித்துள்ளதாகத் தெரிய வருகிறது.
இன்று காலை கடமைக்கு வந்த கடை ஊழியர்கள் கடையைத் திறந்த போது, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது தெரியவந்தது. இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் செய்யப்பட்ட புகாரினைத் தொடர்ந்து காவற்துறையினர் விசாரணைகளை மெற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணைகளில் மொத்தம் சுமார் 45 கிலோ தங்க நகைகள், 2 கிலோ வைர நகைகள் திருடு போயிருப்பதாகவும், இவற்றின் பெறுமதி பல இலட்சங்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது, தமிழகத்தில் ஆலுக்காஸ் நகைக்கடைகளின் முன்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிமுகவின் திட்டங்களற்ற ஆட்சியில் தமிழகம் இருண்டுபோய் கிடக்கிறது: விஜயகாந்


அதிமுகவின் திட்டங்களற்ற ஆட்சியால் தமிழகம் இருண்டுபோய் கிடக்கிறது  என தேமுதிக தலைவர் விஜயகாந் தெரிவித்துள்ளார்.
செ‌ன்னை‌யி‌ல் தே.மு.தி.க.வின் 7-வது செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இ‌ன்று நடைபெ‌ற்ற பொது‌க்குழு கூ‌ட்‌ட‌த்த‌ி‌ல் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்; தமிழக முதல்வர் ஜெயல‌லிதா பு‌திய ‌தி‌ட்ட‌ங்களை வகு‌த்து செய‌ல்படு‌த்தாததா‌ல் த‌மிழக‌ம் இரு‌‌ண்டு ‌கிட‌க்‌கிறது. மி‌ன்சார உ‌ற்‌ப‌த்‌தியை அ‌திக‌ரி‌க்க த‌மிழக அ‌ர‌சிட‌ம் ‌முறையான தி‌ட்ட‌ம் ஏது‌மி‌ல்லை. இது ப‌ற்‌றி கே‌ட்டா‌ல் ‌மு‌ந்தைய ஆ‌ட்‌சியை ஜெய‌ல‌லிதா குறை கூ‌று‌கிறா‌ர். இதுபோலவே கூட‌ங்குள‌ம் ‌விவகார‌த்‌தி‌லும் தமிழக அரசிடம் உருப்படியான யோசனை ஏதுமில்லை. இந்த விவகாரத்தில் ம‌த்‌திய மா‌நில அரசுக‌ள் நாடகமாடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நதிகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் 7வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமை வகிக்க, அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொருளாளர் சுந்தர்ராஜன், மாநில இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், மாநில அணி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 58 மாவட்ட செயலாளர்கள், 385 ஒன்றிய செயலாளர்கள், 125 நகர செயலாளர்கள், 529 பேரூராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். இப் பொதுக் கூட்டத்தில் 27 தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இனிக்க இனிக்கப் பேசியே தமிழக மக்களை திமுக ஏமாற்றிவிட்டது : ராமதாஸ்


இனிக்க இனிக்கப் பேசியே தமிழக மக்களை திமுக ஏமாற்றிவிட்டது என பாமக தலைவர் ராமதாஸ்
தெரிவித்துள்ளார். 'பாமகவின் புதிய அரசில் புதிய நம்பிக்கை' என்ற நூலை திருச்சியில் வெளியிட்டு வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்; 45 ஆண்டுகாலமாக திராவிடக் கட்சிகள் தமிழகத்தை சீரழித்துவிட்டன. அதை நாங்கள் இந்த அறிக்கையில் பட்டியலிட்டுக் காட்டியுள்ளோம். அதேவேளை தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களையும் பட்டியலிட்டுள்ளோம்.
இந்தி எதிர்ப்பு பேரலையை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் திமுகவினர். ஆனால் தமிழை வளர்ப்பதற்கு இதுவரை உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 23 ஆண்டுகளில் 6 ஆண்டுகளைத் தவிர மற்ற ஆண்டுகளில் மத்திய அரசுடன் கூட்டணி வைத்திருக்கிறது திமுக. ஆனால் மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனிக்க இனிக்க பேசி மக்களை ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள். அவ்வாறே மக்களை ஏமாற்றி வருகின்றார்கள்.
கூடங்குளம் பிரச்சினை தொடர்பில் தமிழக அரசு நிபுணர் குழுவை அனுப்பியுள்ளது. அங்கு போயுள்ள அவர்கள் அணு உலை பாதுகாப்பாக உள்ளது என்று புதிதாகச் சொல்லத் தேவையில்லை. அதனை அப்துல் கலாம் சொல்லிவிட்டார். ஆகவே அந்த நிபுணர் குழு மக்களையும், எதிர்ப்புக் குழுவினரையும் சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்க வேண்டியதே முக்கியம். அவ்வாறு கேட்டுக் கொண்டதின் பின் அவர்களுக்கு இருக்கும் அச்சத்தைப் போக்க வேண்டியதே தற்போதைய தேவை. அது தவிர்ந்த தமிழக அரசின் நடவடிக்கைகள் சரியாக அமையாது எனவும் குறிப்பிட்டார்.

ஸ்டாலினின் காதல் மொழி!


 பெப்ரவரி 14, காதலர் தினம்.  காதலர் தினை முன்னிட்டு, ஸ்டாலின் வெளியிட்டிருக்கும்
இசைப் பாடலின் தலைப்பு காதல்மொழி.
யாழ்ப்பாணத்திலிருந்து யாழ் மியூசிக் நிறுவனத்தின் மற்றுமொரு இசைவெளியீடாக  வெளிவந்திருக்கிறது இப்பாடல். இப்பாடலின் வரிகளை எழுதி இசையமைத்துப் பாடியிருக்கிறார் இசையமைப்பாளர் எஸ்.ஜே.ஸ்டாலின். இப்பாடலுக்கான ஒளிப்பதிவினை வர்ணனும், காட்சித் தொகுப்பை அமலனும் செய்திருக்கின்றார்கள்.
இளம் இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில், நடிகர் தனுஷ் பாடி, youtube மூலம் உலகப் புகழ் பெற்ற கொலவெறி பாடலுக்கு, உலகெங்கிலுமிருந்து பல்வேறு மொழிகளில், பல இசைக் கோப்பு வடிவங்கள் வெளிவந்தன. தமிழிலும் பல்வேறு வடிவங்கள் வெளிவந்தன.
அப்போது யாழ்ப்பாணத்திலிருந்து   தமிழ்மொழி மீதான பற்றுணர்வோடு ஒரு வித்தியாசமான பாடலாக இவர்களால் வெளியிடப்பட்ட பாடலான 'என் தமிழ்மொழி மேல் ஏன் உனக்கிந்த கொலைவெறிடா...  'எனும் பாடல். பலரது பாராட்டுக்களையும் பெற்ற அதே வேளையில், பல மாறுபட்ட கருத்துக்களையும் எதிர்கொண்டிருந்தது.
இந்தப் பாடல் மூலம் பரவலாக இவர்கள் அறியப்பட்ட போதும், ஏற்கனவே யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான  'தண்ணீர் ' குறும்படத்திற்கு இசையமைத்திருந்த ஸ்டாலினுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காதல் மொழியின்  இனிய இசையும், தரமான காட்சிப் பதிவும், தொகுப்பும்,  அவர்களது திறமைகளின் மற்றுமொரு வெளிப்பாடு.

இச்செய்தியை அனைவருடனும் பகிருங்கள்!