சனி, 31 மார்ச், 2012

உங்கள் நலனுக்காக உங்கள் நண்பன்

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதல் .......இந்த பொண்ணுகளே இப்படித்தான் ( கண்ணா கலங்கவைக்கும் பொன்னு வேணாண்ட எனக்கு கண்ணீர்அஞ்சலி போஸ்டர் ஓடும் நண்பன் போதுண்ட ) இப்படிக்கு உங்கள் நலனுக்காக உங்கள் நண்பன் A.S.ராஜ்குமார் (நல்லவன் ) தரங்கம்பாடி

நீர்யானை குட்டிக்கு பால் கொடுக்கும் பருவ பெண்! (காணொளி இணைப்பு)


பொதுவாக மனிதர்கள் செல்லப்பிராணிகள் என்று ஒரு குறிப்பிட்ட விலங்கினத்தையே வளர்த்து பயிற்சியும் கொடுப்பதுண்டு. இங்கு அவற்றிற்கு மாறாக தென்னாப்பிரிக்காவில் பிறந்து 6 நாட்களே ஆன நீர்யானைக்குட்டி ஒன்றை அதன் தாய் நீர்யானை புறக்கணித்து விட்டதால் பெண் ஒருவர் எடுத்து வளர்க்கின்றார்.
தனது சொந்தக் குழந்தையைப் போன்று கண்காணித்து வரும் குறித்த பெண் தினந்தோறும் குளிப்பாட்டுவது மட்டுமின்றி இக்குட்டி 3 மணித்தியாலங்களுக்கு ஒரு முறை 125 மில்லி லிற்றர் பாலையும் கொடுக்கின்றார்.


இளம் குடும்பப் பெண் மீது சிப்பாய் வல்லுறவு முயற்சி! நெடுங்கேணியில் சம்பவம்!

நெடுங்கேணி கீரிசுட்டான் சந்திப்பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் இராணுவ சிப்பாய் ஒருவரினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முற்பட்ட சம்பவம் ஒன்று நேற்று முற்பகல் நடந்துள்ளது. வீட்டில் தனியாக இருந்த 22வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் மீதே இராணுவச் சிப்பாய் இச் செயற்பாட்டினை மேற்கொள்ள முற்பட்டதாகத் தெரியவந்திருக்கின்றது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கணவர் தோட்டத்துக்கு சென்றவுடன் குறித்த பெண்ணும் அவரின் ஆறு மாதக் குழந்தையும் தனித்திருக்கையில், கீரிசுட்டான் சந்திப் பகுதியில் உள்ள காவலரணில் இருக்கும் சிப்பாய் ஒருவர் அப் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை விசாரித்த சிப்பாய் முதலில் குடும்ப அட்டை மற்றும் இராணுவப் பதிவுப் பத்திரங்களை எடுத்து வரும்படி கூற அவர் உள்ளே சென்றிருக்கின்றார். அவருக்கு தெரியாமல் வீட்டுக்குள் நுழைந்த சிப்பாய் பெண்ணின் வாயைப்பொத்தி பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார்.

இதிலிருந்து தப்பிக்க அந்தப் பெண் கூக்குரலிடவே அயலில் உள்ளமக்கள் திரண்டனர்.இராணுவத்தினன் காட்டுக்குள் ஓடி தலைமறைவாகிவிட்டார். மக்கள் அருகில் உள்ள இராணுவ காவலரணில் சம்பவம் பற்றி முறையிட்டபோது இச் சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டாமெனவும் அதனை வெளியில் யாருக்கும் சொல்ல வேண்டாமெனவும் அந்தப் இராணுவத்தினன் இனி அப்படி செயற்பட எனவும் தெரிவித்த படையினர் சம்பவம் குறித்து வெளியே தெரிவித்தால் நடவடிக்கை எடுப்போம் என்றும் மிரட்டியிருக்கின்றனர்.

குண்டாக இருந்ததால் யாரும் சைட் அடிக்கல : சமீரா ரெட்டி

சிறுவயதில் குண்டாக இருந்த என்னை யாரும் திரும்பி பார்க்கவில்லை. தாமதமாகத்தான் ஆண்கள் என்னை சைட் அடித்தார்கள் என சமீரா ரெட்டி கூறினார். வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சமீரா ரெட்டி.

அவர் கூறியதாவது: எனக்கு 19 வயது இருந்தபோது உடல் எடை 105 கிலோ. குண்டாக உடல் பெருத்து பார்ப்பதற்கே ஒரு ஷேப் இல்லாமல் இருந்தேன். என்னை கிண்டல் செய்யாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். இதனால் வெளியில் செல்வதே எனக்கு சோதனையாக இருக்கும். என் தங்கை மேக்னா ஒல்லியாக, அழகாக இருப்பாள்.

 அவளிடம் பேசுபவர்கள் என்னிடம் பேச மாட்டார்கள். அவளது இடுப்பளவு 22 இன்ச். எனக்கு டவுள் சைஸ். கல்லூரி நாட்களில் இந்த வேதனையை நிறைய அனுபவித்திருக்கிறேன். போராட்டமே எனது வாழ்க்கையாகி விட்டது. இந்த போராட்டத்தை நடிகைகள் மட்டுமல்ல, குடும்ப பெண்களே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நடிகைகள்போல் அவர்களும் ஒல்லியாக அழகாக இருக்க வேண்டும் என்று அவர்களது கணவன்மார்கள் விரும்புகிறார்கள். 

அப்போதெல்லாம் உடல் எடையை குறைக்க தினமும் ஒரு இட்லிதான் சாப்பிடுவேன். இதனால் மயக்கம் அடைந்து விழுந்ததுதான் மிச்சம். இதைப்பார்த்து கோபம் அடைந்த அம்மா, ‘இந்த முட்டாள்
தனத்தை கைவிடாவிட்டால் வீட்டிலேயே பூட்டி வைத்துவிடுவேன் என்றார். பிறகுதான் உணவு என்பது உடல் எடைக்கு எதிரி அல்ல என்பதை புரிந்துகொண்டேன்.

முறையான உணவு பழக்கத்தை மேற்கொண்டேன். யோகாசனம், உடற்பயிற்சி மூலம் எடையை குறைத்தேன். நடிகையானபிறகு எனது பள்ளி, கல்லூரி தோழிகள் என்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். ‘நீ புதுபிறவி எடுத்ததுபோல் இருக்கிறது’ என்றார்கள். என்னை கண்டாலே கிண்டல் செய்த ஆண்களும் காலதாமதமாகவே என்னை ரசிக்க ஆரம்பித்தார்கள். இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.

சரண்யாவின் நிர்வாணக்காட்சி படமாக்கப்பட்டது எப்படி..?

ஸ்ரீராம், சரண்யா ஜோடியாக நடிக்கும் படம் மழைக்காலம். இதன் இயக்குனர் தீபன் கூறியதாவது: ஓவியக்கல்லூரி மாணவர்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது மழைக்காலம். இப்படத்தின் கிளைமாக்ஸில் நிர்வாண போஸ் தரும் சரண்யாவின் தோற்றத்தை மாணவர்கள் வரைவதுபோல் காட்சி அமைக்கப்பட்டது.


இக்காட்சி படமாக்கப்பட்டபோது காட்சி யில் நடித்தவர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை. அவர்கள் யாராவது செல்போனில் அதை படமாக்கக்கூடாது என்பதற்காக எல்லோரது செல்போன்களும் செட்டுக்கு வெளியிலேயே வாங்கி வைக்கப்பட்டது. இப்படத்துக்கு தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் கொடுத்தனர். 

மது குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் வந்தாலே ஏ சான்றிதழ் தரும் சென்சார், நிர்வாண காட்சி இடம்பெற்ற படத்துக்கு யு சான்றிதழ் கொடுத்தது எப்படி?’ என்கிறார்கள். இக்காட்சியில் எந்தவிதமான ஆபாசமும் இருக்காது. 20 நிமிடம் வசனமே இல்லாமல் ரீ ரிக்கார்டிங் மட்டுமே இடம்பெறுகிறது. ஒரு பெண்ணின் மனவலியை உணர்த்தும் காட்சியாக இருக்கும்.

இதைபார்த்தபிறகு அதிலிருந்து மீண்டுவர சில மணி நேரங்களாவது ஆகும். இந்த பாராட்டை எனக்கு சென்சார் குழுவினர் அளித்தனர். அதேபோல் வரிச்சலுகைக்காக படம் பார்த்த ஆர்.பி.சவுத்ரி, எல்.ஆர்.ஈஸ்வரி உள்ளிட்டவர்களும் இதே கருத்தைசொல்லி வரி சலுகை அளித்தனர். ஒளிப்பதிவு அகிலன். இசை பிரேம் ஆன

இங்கிலாந்தில் ஆச்சரியம் : எமர்ஜென்சி கால் செய்து உயிர் பிழைத்த நாய்

இங்கிலாந்தின் வெஸ்ட் யார்க்ஷயர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து எமர்ஜென்சி உதவி சேவை மையத்துக்கு ஒரு அழைப்பு வந்தது. போனை எடுத்து அங்கிருந்த ஊழியர் பேசினார். ஆனால், மறுமுனையில் இருந்து வெறும் மூச்சு சத்தம் மட்டுமே தொடர்ந்து கேட்டது.

பேச முடியாத அளவுக்கு யாரோ ஆபத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்த ஊழியர், உடனடியாக போலீசாரை அந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அங்கு சென்ற போலீசார் வீடு பூட்டியிருந்ததை பார்த்து குழப்பம் அடைந்தனர். எனினும் வீட்டை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். அதை பக்கத்து வீட்டுக்காரர் பால் வாக்கர் என்பவர் பார்த்துவிட்டு, வீட்டு சாவியை எடுத்துக் கொண்டு ஓடினார். பின்னர் அனைவரும் வீட்டுக்குள் சென்றனர். 

அங்கு ஒரு அறையில் போன் வயர்கள் கழுத்தில் சிக்கி காயத்துடன் வளர்ப்பு நாய் ஜார்ஜ் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. உடனே வயர்களை பிரித்து எடுத்தார் பால் வாக்கர். பசட் ஹூண்ட் வகையை சேர்ந்த ஜார்ஜுக்கு 2 வயதுதான். கழுத்தில் இடியாப்ப சிக்கலாக போன் வயர் சிக்கியதும், டயல் எண்களை பிராண்டி தள்ளியிருக்கிறது. அதில் அதிர்ஷ்டவசமாக "999" என்ற எமர்ஜென்சி உதவி மையத்துக்கு போன் அழைப்பு சென்றுள்ளது தெரிய வந்தது

ரிமோட் கன்ட்ரோல் மூலம் நடக்கக்கூடிய கால்கள் அறிமுகம்

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், விபத்தில் கால்களை இழந்தவர்களுக்கு உதவும் நோக்கில் புதிய ரிமோட் கன்ட்ரோல் சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. துருக்கியை சேர்ந்த ஏஎம்எஸ் மெக்கட்ரோனிக் நிறுவனத்தை சேர்ந்த நெகாடி ஹசிகாடிரோகுலு என்ற ஆராய்ச்சியாளர் தலைமையில் நடந்த தீவிர ஆராய்ச்சிக்கு பிறகு ‘டெக்’ என்ற சாதனத்தை வடிவமைத்துள்ளனர்.

இது பேட்டரி உதவியுடன் இயங்குகிறது. 3 நாட்களுக்கு ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும். ஒரு அடி உயரம், 2 அடி நீளத்தில் மிக கச்சிதமாக உருவாக்கப்பட்டுள்ளது. கால்களை இழந்து அவதிப்பட்டு வரும் யூசுப் அக்தர்கோக்லு (27) என்பவரை கொண்டு இதன் செயல்பாடுகள் சோதிக்கப்பட்டது. மிகவும் உதவிகரமாக இருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:
5 ஆண்டுகளுக்கு முன்பு குதிரையில் இருந்து விழுந்ததில் கால்களை இழந்தேன். அது முதல் வீல்சேர்தான் என் வாழ்க்கை என்றாகிவிட்டது. என்னை போன்றவர்கள் எப்போதும் உட்கார்ந்தே இருப்பதால் உடல்பருமன், சர்க்கரை நோய், பெட்சோர் ஆகியவற்றால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம். அது மட்டுமின்றி, உட்கார, நடக்க, வெளியே சென்று வர, சொந்த காரியங்களை செய்துகொள்ளக்கூட மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை.

அத்தனை கஷ்டங்களையும் போக்கும் வகையில் இருக்கிறது ‘டெக்’ சாதனம். நினைத்த நேரத்தில் எழுந்திருக்க முடிகிறது. மற்றவர் துணையின்றி வெளியே செல்கிறேன். எளிதாக குனிந்து நிமிர முடிகிறது. அயர்ன் செய்வது, வாக்வம் கிளீனர் வைத்து வீட்டை சுத்தம் செய்வது, கடைக்கு சென்று ஷாப்பிங் செய்வது என எல்லா வேலையும் செய்ய முடிகிறது. ரிமோட் மூலம் இயக்க முடியும் என்பது கூடுதல் வசதி. ஆக மொத்தம், கால்கள் இல்லை என்பதே மறந்துவிடுகிறது. இவ்வாறு யூசுப் கூறினார். இறுதிக்கட்ட ஒப்புதலுக்கு பிறகு இந்த சாதனத்தை மெக்கட்ரோனிக் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

குதிரைகள் களைப்படையாத வகையில் பிரத்யேக ஆடை தயாரிப்பு!

நீண்ட தூரம் ஓடினாலும், வெகு நேரம் பயிற்சி செய்தாலும் குதிரைகள் களைப்படையாத வகையில் பிரத்யேக ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 27,ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12,ம் தேதி வரை நடக்கின்றன. இதில் பங்கேற்க உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உற்சாகமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள குதிரைகளும் வித்தியாசமாக தயாராகி வருகின்றன. ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஈக்வெஸ்ட்ரியன் பிரிவில் டிரெஸ்சேஜ் (பழக்குதல் திறன்), தடை தாண்டும் போட்டிகளான ஈவென்டிங், ஜம்பிங் ஆகிய போட்டிகளில் குதிரைகள் பங்கேற்கின்றன.

இந்த குதிரைகளுக்கு கடுமையான பயிற்சிகள் அளிப்பதில் உரிமையாளர்கள் மிகவும் பிசியாக உள்ளனர். பொதுவாக கடுமையான பயிற்சி, விளையாட்டு, நீண்ட தூர பயணத்துக்கு பிறகு குதிரைகள் மிகவும் களைத்து விடும். இந்த களைப்பை போக்க குதிரை பழக்குனர்கள் வித்தியாசமான அணுகுமுறையை தற்போது பின்பற்றுகின்றனர். டைட் ஃபிட் ஆடைகளை குதிரைக்கு அணிவிக்கின்றனர்.

குதிரை டிஷர்ட், பேன்ட் போட்டிருப்பது போல இருப்பது அழகாகவும் இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் ஹைட்ஸ் நிறுவன அதிகாரி மாத்யூ ஸ்பைஸ், தங்கப்பதக்கம் வென்ற ஒலிம்பிக் வீரர் ஸ்டூவர்ட் டின்னே இணைந்து குதிரைகளுக்கான இந்த பிரத்யேக உடையை வடிவமைத்துள்ளனர். உடம்பை உடை சிக்கென்று பிடிப்பதால் குதிரையின் ரத்த ஓட்டம் சீராகிறது. நீண்ட நேரம் பயிற்சி செய்தாலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

நீண்ட தூரம் பயணித்தாலும் களைப்பு அடையாது. வலி ஏற்படாது. இந்த உடை 2,வது சருமமாக செயல்பட்டு பாதுகாக்கிறது. ஜிப் வைத்து தைக்கப்பட்டிருப்பதால், போட்டு கழற்றுவது எளிது என்கின்றனர். சிவப்பு, நீலம், பச்சை, கருப்பு என பல வண்ணங்களில் தயாராகியுள்ள இந்த உடை வரும் ஜூனில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பயிற்சியின்போது மட்டும்தான் இதை பயன்படுத்த முடியும். ஒலிம்பிக் போட்டியின்போது பயன்படுத்த அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் கல்வியங்காட்டில் கணவன் மனைவி காமச்சண்டை!

கணவன் தனது ஆடைகளைக் கிழித்து தன்னைக் கடுமையாகத் தாக்கியதாக யாழ் நீதிமன்றத்தில் குடும்ப நலஉத்தியோகத்தரான பெண் ஒருவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். கல்வியங்காட்டைச் சேர்ந்த இப் பெண் கணவன் தன்னைத் தாக்கியதாகக் கூறி கோப்பாய்ப் பொலிசில் முறையிட்டதாகவும் ஆனால் கோப்பாய்ப் பொலிசார் முறைப்பாட்டை ஏற்கவில்லை எனவும் தெரிவித்து சட்டத்தரணியூடாக யாழ் நீதிமன்றில் முறையிட்டார். இம் முறைப்பாட்டை விசாரித்த யாழ் நீதவான், கணவன் மனைவி இருவரையும் குடும்பநல ஆலோசகரைச் சந்திக்குமாறு கூறி வழக்கை எதிர்வரும் 2ம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

வியாழன், 29 மார்ச், 2012

புலிகளை தோற்கடிக்க அமெரிக்கா செய்த உதவி என்ன.? உண்மை அம்பலம்!

விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு அமெரிக்கப் பாதுகாப்பு பிரிவுகள் எவ்வாறான உதவிகளை செய்தன குறித்த இரகசியங்களை, இறுதிகட்டப் போரின் போது இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினால் உருவாக்கப்பட்ட ‘முக்கியமான படை‘ ஒன்றின் உறுப்பினர் வெளியிட்டுள்ளார்.

வெளிநாடுகளின் எந்த உதவியும் இன்றியே விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து போரை முடிவுக்குக் கொண்டு வந்ததாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மையில் கூறியிருந்தார்.
அவரது இந்தக் கருத்தை நிராகரிக்கும் வகையிலேயே, இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா எவ்வாறான உதவிகளை செய்தது என்ற தகவலை சரத் பொன்சேகாவினால் உருவாக்கப்பட்ட முக்கிய படை ஒன்றைச் சேர்ந்தவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வெளியிட்டுள்ளார்.

2006ம் ஆண்டில் அப்போதைய இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்க இராஜாங்கச் செயலர் கொன்டலிசா ரைசிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து அமெரிக்காவில் விடுதலைப் புலிகளின் எல்லாச் செயற்பாடுகளை தடுப்பதற்கு, ஒரு செயலணிக்குழு அமைக்கப்பட்டது.
இதன்படி, கனேடிய எல்லை வழியாக அமெரிக்காவில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்ய வந்த விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டனர்.

2007 ஜனவரியில் இவர்கள் கைது செய்யப்பட்டவுடன், புலிகளின் ஆயுத வலையமைப்பின் செயற்பாடுகளைத் தடுக்க முடிந்தது. அமெரிக்காவுடன் மங்கள சமரவீர கொண்டிருந்த நல்லுறவினால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, அமெரிக்க அரசாங்கம் ஹவாயில் உள்ள பசுபிக் கட்டளைப்பீடத்தின் கீழ் உள்ள, 7வது கடற்படை அணியின் போர்க்கப்பலான ‘யுஎஸ்எஸ். புளூ றிட்ஜ்‘ இல் இருந்து, விடுதலைப் புலிகளின் கப்பல்களின் நடமாட்டம் பற்றிய, குறிப்பாக ஆயுதக் கப்பல்களின் நகர்வுகள் பற்றிய செய்மதிப் படங்கள் இலங்கை அரசுக்குத் தொடர்ச்சியாக வழங்கப்பட்டன.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஊடாக, இந்தச் செய்மதிப் படங்கள் இலங்கை இராணுவத்திடம் கொடுக்கப்பட்டன. இந்த செய்மதிப் படங்களை கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் மிக்க அதிகாரிகள் எவரையும் இலங்கை இராணுவம் அப்போது கொண்டிருக்கவில்லை.

இதையடுத்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், மேஜர் கெலும் மத்துமகே என்ற இலங்கை இராணுவ அதிகாரிக்கு புலமைப்பரிசில் வழங்கி, கொலராடோவில் உள்ள இராணுவ அக்கடமியில் இது பற்றிய பயற்சிநெறியை மேற்கொள்ள உதவியது.

அதன்பின்னர், இலங்கை கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட பேர்ல் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கான சிறப்பு பயிற்சிகள், கரையில் இருந்த 700 கடல்மைல் தொலைவில் வைத்து அளிக்கப்பட்டன.

இந்த சிறப்புப் பயிற்சியை அடுத்து அமெரிக்காவின் 7வது கடற்படை அணியின் ‘யுஎஸ்எஸ் புளூ றிட்ஜ்‘ தொழில்நுட்ப உதவிகளை வழங்கியதுடன், இலங்கை இராணுவத்தினால் பெறப்பட்ட செய்மதிப் படங்களின் அடிப்படையில் ஆழ்கடலில் விடுதலைப் புலிகளின் கப்பல்களை அழிக்க இலங்கை கடற்படை மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்து வந்தது.

அமெரிக்க இராணுவத்திடம் இருந்து பெறப்பட்ட உதவியின் மூலம் உயர்திறன் கொண்ட ஆயுதங்கள் மற்றும் கருவிகளை ஏற்றி வந்த விடுதலைப் புலிகளின் எல்லாக் கப்பல்களையும் இலங்கை கடற்படை ஆழ்கடலில் தாக்கியழித்தது.

தாக்கியழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் 7-8 கப்பல்களில் இருந்த ஆயுதங்கள் வடக்கைச் சென்றடைந்திருந்தால், போரின் இறுதி முடிவு வேறுமாதிரியாக அமைந்திருக்கும்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். அதேவேளை எதிர்காலத்தில் தாம், இந்தப் போரின் போது இஸ்ரேல் மற்றும் பிரித்தானியா என்பன இலங்கைக்கு எவ்வாறான உதவிகளை வழங்கின என்ற தகவலையும் வெளியிடப் போவதாகவம் அவர் தெரிவித்துள்ளார்.

இணுவிலில் நிலத்தின் கீழ் புதையுண்ட நிலையில் யானை முகத் தோற்றத்தில் கல்

இணுவில் காரைக்கால் பகுதியில் உள்ள தோட்டக் காணியில், நிலத்தின் கீழ் புதையுண்ட நிலையில் யானை முகத் தோற்றத்தில் கல் உருவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் புகழ்மிக்க காரைக்கால் சிவன் கோவிலில் இருந்து சுமார் முன்னூறு மீற்றர் தூரத்தில் உள்ள காணி ஒன்றில் காணியில் நேற்று மாலை, மலசல கூடம் அமைப்பதற்காக நான்கு முதல் நான்கரை அடி ஆழத்திற்கு வெட்டப்பட்ட குழியில் தும்பிக்கையுடனான யானைமுக வடிவம் கொண்ட உருவம் காணப்பட்டுள்ளது.


இந்த உருவம் தொடர்பில் தெளிவான முடிவுகள் அறியப்படாதபோதும், பெரும் எண்ணிக்கையான மக்கள் நேற்று மாலை முதல் பார்த்து வருகின்றனர். அதேநேரம் இப் பகுதியில் உள்ள ஒரு சில முதியவர்கள், காரைக்கால் சிவன்கோவில் வரலாற்றுக் காலத்திற்கு உட்பட்ட கோயில் எனவும் அந்நியர் ஆட்சியில் இந்தக் கோயிலில் இருந்த சிலைகள் அந்நியர்களால் அழிக்கப்படலாம் எனப் பயந்து மக்களால், அவை புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை குறிப்பிட்ட பகுதியில் கற்பார்கள் காணப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லையெனவும், அவ்வாறான கற்பார்கள் சுமார் எட்டடி முதல் பத்தடி ஆழத்திற்கு கிடங்கு வெட்டப்படும் சந்தர்ப்பத்திலேயே காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


குறித்த உருவமடைய கல்லை தோண்டி எடுப்பதாயின் மிகப் விசாலமான பகுதி அகழப்பட வேண்டும் என்பதால் தற்போது, குழி அகழும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இது கோயில் சிலையாக இருக்கக்கூடும் என்ற கருத்தும் எழுந்துள்ளதால், தொல்பொருள் திணைக்களத்தினது உதவியை நாடவுள்ளதாகவும் அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிருள்ள மீன்குஞ்சுகளை விழுங்கும் இளைஞன்! (காணொளி இணைப்பு)

இளைஞர்களின் திறமைகளை வெளி உலகுக்கு கொண்டுவருவதற்கான நிகழ்ச்சி ஒன்று வியட்நாம் தொலைக்காட்சி ஒன்றினால் நடாத்தப்படுகிறது. அந் நிகழ்ச்சியில் பங்குபற்றிய இரு இளைஞர்கள் ஒவ்வொன்றும் 7 -8 இஞ்ச் இருக்கக்கூடிய உயிருள்ள மீன்களை தண்ணீர் நிரப்பப்பட்ட ஜாடிக்குள் அடைத்து கொண்டுவந்து ஒவ்வொன்றாக விழுங்க தொடங்கினர். நடுவர்கள் முதல் பார்வையாளர்கள் வரை அதை பார்க்க முடியாமல் முகம் கூசியதை அவதானிக்க முடிந்தது. நீங்களும் பாருங்களேன்…!நாங்களும் குதிப்போம்ல..: பூனைக்குட்டிகளின் லொல்ளு (வீடியோ)


செல்லப்பிராணி என்றதும் அனைவரும் விரும்பும் விலங்கு பூனை அல்லது நாய்.  மேலைத்தேய நாடுகளில் வீட்டுக்கு ஒரு பூனைக்குட்டி அல்லது நாய்குட்டி கட்டாயம் இருக்கும். இவர்களுக்கு அப்படி ஒரு அலாதி பிரியம்.  இந்த செல்லப்பிராணிகளின் குறும்புகளை பார்த்து ரசித்தாலே நேரம் போவது தெரியாது. அப்படித்தான் இங்கே உள்ள காணொளியும்.  வீட்டில் வளர்க்கப்படும் இரு பூனைக்குட்டிகள் சுவரில் ஏற எவ்வளவோ முயற்சி செய்கின்றன: இந்த சுவாரசியத்தை வீட்டின் உரிமையாளர் படம்பிடித்துள்ளார். பூனைக்குட்டிகள் துள்ளிக்குதிக்கும் அழகை நீங்களும் ரசியுங்களேன். என்ன நாங்களும் ஏறுவோம்ல... என்கிற மாதிரியே குதிக்கிறது குட்டிகள்.

செம ஹிட்டான 3 ட்ரெய்லர்! (வீடியோ இணைப்பு)


பட்டி தொட்டியெல்லாம் வெற்றிக்கொடி கட்டிய கொலைவெறிப்பாடல் இடம்பெற்ற திரைப்படமான 3 படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ட்ரைலரும் கொலைவெறி பாடலைப்போல யூ டியூப்பில் செம ஹிட்டாகியுள்ளது. கடந்த வாரம் யூடியூப்பில் அதிகம் பார்வையிடப்பட்ட இந்திய வீடியோக்களில் 3வது 4வது இடங்களைப் பிடித்துள்ளது இந்த ட்ரெயிலர்கள்.

ஜெனீவாவில் இலங்கை பெற்றது அமோக வெற்றி - வாசுதேவ நாணயக்கார

அமெரிக்கா போன்ற பலம் வாய்ந்த நாட்டின் அழுத்தங்களுக்கு மத்தியில், இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு, ஆதரவாக, மனித உரிமை பேரவையில் பல நாடுகள் வாக்களித்தமையானது பாரிய வெற்றி என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும் பல நாடுகள் வாக்களிப்பில் கலந்துக்கொள்ளாமல், ஒதுங்கியதும் இலங்கைக்கு கிடைக்க வெற்றியெனவும் அவர் கூறியுள்ளார். உலகில் சகல நாடுகளுடனும் நட்புறவாக செயற்பட்டு, எந்த அணிக்கும் சாராது இருப்பது, தொடர்பில் இலங்கை பெற்றுள்ள பலத்தை ஜெனிவா மனித உரிமை பேரவையில் உலகத்திற்கு எடுத்துக்காட்டப்பட்டது.

இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் ஏற்படும் செயற்பாடுகள் தொடர்பில் கட்சி என்ற வகையில் ஜனநாயக இடதுசாரி முன்னணி தயார் நிலையில் இருக்கும் எனவும் அந்த கட்சியின் செயலாளருமான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

புதன், 28 மார்ச், 2012

கொதிக்கும் பாலில் குளிக்கும் சாமியார் : அதிர்ச்சி காணொளி


இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது வரனாசி. கங்கை நதி பாய்ந்தோடும் இங்கு தான் புகழ்பெற்ற பல இந்து ஆலயங்கள் உள்ளன. இங்குள்ள பிரசித்தி பெற்ற துர்க்கா கோவில் ஒன்றில் தான் மேற்படி வித்தியாசமான மெய்சிலிர்க்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.


பொதுவாக அம்மன் ஆலயங்களில் தீ மிதிப்பு வைபவம் இடம்பெறுவது பற்றி நாங்கள் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு அதையும் விட ஒரு படி தாண்டி கொதிக்கும் பாலை உடலில் ஊற்றிக் கொள்ளும் அதிர்சிகரமான நிகழ்வு இடம்பெறுகின்றது. கோயிலின் முன்பு பெரிய பானைகளில் பக்தர்கள் பால் காய்ச்சுகிறார்கள்.


பால் நன்றாக கொதித்து வந்ததும் ஆவி பறக்க கொதிச்சுக் கொண்டிருக்கும் பாலை அப்படியே தூக்கி தனது உடலில் ஊற்றுகிறார் சாமியார். கொதிக்கிற பாலில் சிறு துளி பட்டாலே நாங்கள் துடிதுடித்துப் போவோம். ஆனால் இந்த சாமியாரின் செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதையும் விட எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் மேலும் நின்று ஆச்சர்யம் காட்டுகிறார் இந்த வினோத சாமியார்.

CLICK TO VIEW VIDEO/ அதிர்ச்சி  காணொளி பார்க்க இங்கே சொடுக்கவும்

அட பாவி என்னமா தண்ணியடிக்கிறாய்யா...! (வீடியோ இணைப்பு)


ஜப்பானிய தொலைக்காட்சி அலவரிசை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட யார் வேகமாக தண்ணீரைக்குடிப்பது என்ற போட்டியில் இளைஞன் ஒருவன் 1.5 லீட்டர் தண்ணீரை நான்கே செக்கன்களில் குடித்து முடித்து சாதனையே நிகழ்த்திவிட்டார்.இதில் அழுத்தி காணொளி பாருங்கள் !

நீல நிறத்தில் வாழும் அதிசய மனிதன் (காணொளி இணைப்பு)

நீல மனிதர்கள் இவர்களைப்பற்றி சிலர் ஏற்கனவே கேள்விப்பட்டிருப்பீர்கள், மேலதிக உண்மையான தகவல்களுடன் தருகின்றோம்.1960 ஆம் ஆண்டளவில் Kentucky எனும் நகரின் மலைப்பகுதியில் இணங்கானப்பட்ட இவர்களின் குடும்பத்தார் அனைவருமே நீல நிறத் தோலை உடையவர்கள். 

உடலில் உள்ள மெலனின் எனும் பதார்த்தமே நமது உடலிற்கு நிறத்தைக்கொடுக்கின்றது. அவ் மெலனினின் ஜீன் கட்டமைப்பில் ஏற்பட்ட மரபணுக்குறைப்பாடே இந்த வகையான மனிதர்கள் தோன்றக்காரணம். 

சாதாரணமாக இப்படியான பிரச்சனை எவராவது ஒருவருக்கு வருவதுண்டு. ஆனால் இவர்களைப்பொறுத்தவரை சற்றுவித்தியாசமாக இந்த ஜீன் மாற்றம் அவர்களின் வம்சத்தை தொடர்கிறது. ( இன்றுவரை அவர்களின் வம்சத்தில் பிறந்த ஒருவருக்கேனும் இவ் நீலத்தோல் இருக்கின்றதாம். )

தோல் நீல நிறமாக இருக்கின்றபோதிலும் இவர்களிற்கு எவ்விதமான நோய்களோ உடல் பலவீனங்களோ இல்லை. சாதாரண நம்மைப்போன்றே இவர்களும் வாழ்கிறார்கள். ஒருபடி மேலே சொல்லவேண்டும் எனின் 80 வயதுவரை வாழ்கிறாரகள்.
கிருஸ்ணரும் இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்குமோ???

இதில் அழுத்தி காணொளி பாருங்கள் ! (VIDEO CLICK HERE)

செவ்வாய், 27 மார்ச், 2012

நாக்கால் ஓவியங்கள் வரையும் இந்திய கலைஞன்! (video)


இந்தியாவின் கேராளா மாநிலத்தைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் ஒருவர் நாக்கால் சித்திரங்களை வரைந்து அசத்தி வருகின்றார். இவரின் பெயர் கே. அனி. சித்திர பாட ஆசிரியராக கடமை ஆற்றி வருகின்றார்.

காலால் ஓவியங்களை வரைகின்ற கலைஞர்கள் குறித்து அறிந்து ஆச்சரியப்பட்டார். இக்கலைஞர்களைப் போல வித்தியாசமான சாதனையை புரிதல் வேண்டும் என்று தீர்மானித்தார்.

முதலில் மூக்கால் ஓவியங்களை வரைய முயற்சித்தார். ஏற்கனவே பலரும் மூக்கால் ஓவியங்கள் வரைந்து இருக்கின்றனர் என்று அறிந்தபோது நாக்கால் ஓவியங்களை வரைகின்ற முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டு உள்ளார். இவரால் மிக அழகாக ஓவியங்களை நாக்கால் வரைய முடிகின்றது.

அமெரிக்கா பெண்கள் நீச்சலுடையில் புதிய சாதனை! (video)


அமெரிக்காவில் நடைபெற்ற நீச்சலுடை அணி வகுப்பு நிகழ்வொன்றில் 450 பெண்கள் கலந்துகொண்டு புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளனர். புளோரிடா மாநிலத்தின் பனாமா சிட்டி கடற்கரையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. நீச்சலுடை அணிந்த 357 பெண்கள் ஒன்றுகூடி முன்னர் சாதனை நிலைநாட்டியிருந்தனர். இப்போது 450 பேர் இணைந்து அச்சாதனையை முறியடித்துள்ளனர்.
இவ் அணிவகுப்பு நிகழ்வில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெண்கள் ஒன்று கூடி சுமார் ஒரு மைல் தூரம் அணிவகுப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது ஒவ்வொருநாளும் பார்க்கக்கூடிய ஒரு விடயமல்ல இந்த அணிவகுப்பு சாதனையை நம்ப முடியாமல் உள்ளது என கின்னஸ் உலக சாதனை பதிவுகளின் தீர்ப்பாளரான பிலிப் ரொபர்ஸ்டன் தெரிவித்துள்ளார்.


ஒற்றை விரலால் ஓர் உலகசாதனை : காணொளி இணைப்பு


உடற்பயிற்சிகளின் போது இரு கைகளிலுள்ள விரல்களை பலப்படுத்தும் பொருட்டு உடலின் பாரம் முழுவதையும் விரல்களில் தாங்கி செய்யப்படும் உடற்பயிற்சியை கொண்டு ஒருவர் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

பத்து விரல்களையும் பயன்படுத்தி குறித்த உடற்பயிற்சியை மேற்கொள்வதே கடினமாக காணப்படும் வேளையில் ஒரே ஒரு விரலை பயன்படுத்தி 30 செக்கன்களில் அதிகதடவைகள் குறித்த பயிற்சியை மேற்கொண்டு உலகசாதனை நிகழ்த்தியுள்ளார். 

முட்டை உருவாகும் விதம் ; உங்களுக்கு தெரியுமா?


தெரியுமா?

முட்டை உருவாகும் விதம் ; உங்களுக்கு தெரியுமா?. முட்டை அமைப்பு மிகவும் சிக்கலானது. ஆனால் சீரானது. கருப்பையிலும், முட்டைக் குழாயிலும் முட்டை உருவாகிறது. கோழிக்கு இடதுபுறத்தில் ஒரே ஒரு கருப்பையே உள்ளது. சில நாட்டுப் பறவைகளுக்கு இரு கருப்பைகளும் முட்டைக் குழாய்களும் இருப்பதுண்டு. கோழியில் கருப்பை திராட்சை பழக் கொத்தை போல இருக்கும். ஒரு கோழி தனது ஆயுளில் எட்டு வருட காலத்தில் சுமார் 1515 முட்டைகளை இடுவதாக கூறப்படுகிறது.

ஒரு கோழியின் முட்டை உற்பத்தியாகும் நடைமுறை இரண்டே முக்கால் மணி நேரத்தில் பூர்த்தியாகிறது. கோழி முட்டையிட்டு ஒரு மணி நேரத்துக்குள்ளாக மற்றோர் மஞ்சள் கரு முழுமையாக முற்றி விடுகிறது. அப்போது, அதில் 6 அடுக்குகள் அடங்கியிருக்கும்.

மஞ்சள் கரு முழுமையாக முதிர்ச்சி அடைந்ததும் முட்டைக் குழாய்க்குள் விழுந்து விடுகிறது. முட்டைக் குழாயில் பல பிரிவுகள் உள்ளன. முதிர்ச்சியடைந்த மஞ்சள் கரு முதல் பிரிவில் வளர்த்தப்படுகிறது. இந்தப் பிரிவில் முட்டை சிலநிமிடங்களே தங்குகிறது. பிறகு அடுத்த பிரிவிற்கு செல்கிறது. அங்கு வெளிப்புறத்தில் ஒன்றும் உட்புறத்தில் ஒன்றுமாக இரண்டு மெல்லிய தோல்கள் அல்லது சவ்வுகள் கருப்புறத்தை ஓடாக்குவதற்காக உறைகளைப் போல சேர்க்கப்படுகின்றன.

இந்த நடை முறை முடிவதற்கு 1 மணி 10 நிமிடம் ஆகிறது. பிறகு முட்டை கருப்பை அமைந்திருக்கும் சுரபிக்குச் செல்கிறது. அங்கு 19 மணி நேரம் தங்குகிறது. அடுத்த 14 மணிநேரத்தில் முட்டை ஓட்டின் பல அடுக்குகள் சேர்க்கப்படுகின்றன. பின்னர் முட்டைக்கு மெல்லிய தோல் வழங்கப்படுகிறது. இந்தத் தோல் தான் முட்டைக்கு உரிய நிறத்தை தருகிறது. இப்படியாக கோழியின் வயிற்றில் முட்டையின் வளர்ச்சி நடைபெறுகிறது.

திங்கள், 26 மார்ச், 2012

நாய் ஆழ்கடலுக்குள் சுழியோடி பார்த்ததுண்டா.? (வீடியோ)


நாய்களின் உடல் வடிவமைப்பானது நீர்நிலைகளில் நீந்துவதற்கு ஏற்றாற்போல் காணப்படும். எனினும் இவை பொதுவாக நீரின் மேற்பரப்பிலேயே நீந்தும். ஆனால் அதிசய நாய் ஒன்று நீர் நிலையின் அடிப்பகுதி வரை சென்று மிகவும் குஷியாக நீச்சல் போடுகின்றது.

இவ்வாறு நீரின் அடிப்பகுதியில் நீந்தும் போது சுவாசிப்பதற்கான ஆக்சிஜனை நாயால் பெற முடியாத போதிலும் சிறப்பான பயிற்சிகளின் அடிப்படையில் குறிப்பிட்ட நேரத்திற்கு சுவாசம் இன்றி நீச்சலில் சாகசம் செய்கின்றது.

மனித முகத் தோற்றத்தில் பிறந்தது ஆட்டுக்குட்டி!

மனிதனின் தலை போன்ற தோற்றத்தில் வினோதமான முறையில் ஆட்டுக்குட்டி பிறந்தது கோவை யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை கெம்பட்டி காலனி உப்பு மண்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர், ஆடு ஒன்றை வளர்த்து வருகின்றார். சினையாக இருந்த இந்த ஆடு, நேற்று இரவு 11 மணி அளவில் குட்டி ஒன்றை ஈன்றது. குட்டியின் உடல் முழுவதும் வெளியே வந்த நிலையில், தலை மட்டும் வெளியே வரவில்லை. இதனால் ஆடு, குட்டியை ஈன மிகவும் சிரமப்பட்டது. இதனால் ஆடு இறந்து விடும் என கருதி முத்துசாமி, ஆட்டுக்குட்டியை வெளியே இழுத்தார்.

அப்போது குட்டியின் தலை உருண்டை வடிவில், வினோதமாக மனித தலைபோல் வெளிப்பட்டது. வழக்கமாக இருக்கும் ஆட்டுக்குட்டியை போல் அல்லாமல் கண்கள், வாய், மூக்கு மனிதருக்கு இருப்பதை போன்று இருந்தன. சிறிது நேரத்தில் ஆட்டுக்குட்டி இறந்தது. இது குறித்து முத்துசாமி கூறியதாவது:

எங்கள் ஆடு, முதல்முறையாக குட்டி ஈன்றது. ஆனால் அது முற்றிலும் வினோதமான முறையில் காணப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதே பகுதியில் ஒரு ஆடு, தலையில்லாத ஆட்டுக்குட்டியை ஈன்றது. தற்போது மனித முகத் தோற்றத்துடன் ஆட்டுக்குட்டி ஈன்றது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆட்டுக் குட்டியை உடனடியாக புதைத்து விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

நடிகைக்கு திடீர் சுளுக்கு ஹீரோ டென்ஷன்

பெல் ஹீரோயினுக்கு திடீர்னு இடுப்புல சுளுக்கு ஏற்பட வலியால் துடிச்சி போனாராம்... போனாராம்... சுளுக்கு வந்தது எப்படின்னு நிறையபேர் கேட்டாங்களாம். பட ஷூட்டிங்ல பெண்டு நிமித்துற சில நடன அசைவுகளை ஏடாகூடமாக செஞ்சப்போ இப்படி ஆயிடுச்சின்னு சொன்னாராம். இதுக்கிடையில மூணுஷா ஹீரோயினுக்கு வாந்தியாம். கடும் காய்ச்சலால வந்த வாந்தி இது. ரெஸ்ட் எடுக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்காராம்... சொல்லியிருக்காராம்...

அலைபாயுற இயக்கம் படத்துல நடிக்க¤ற சமந்த ஹீரோயின் புதுசா பட வாய்ப்பு வந்தா கால்ஷீட் இல்லைன்னு கையை விரிக்க¤றாராம்.. விரிக்க¤றாராம்... பெரிய படத்துல நடிக்க¤றதால சின்ன படங்களை ஒத்துக்காதேன்னு பிரெண்ட்ஸ் குரூப் கொடுத்த ஐடியாதான் இதுக்கு காரணமாம்... காரணமாம்... பட ரிலீஸ் நெருங்க நெருங்க உன்னோட பேமென்ட்டும் உயரும். அதனால இப்போதைக்கு புதுபடம் கமிட் பண்ணிக்காதேன்னும் அதே குரூப் அட்வைஸ் கொடுத்திருக்காம்... கொடுத்திருக்காம்...

பாய்ஸ் ஹீரோவோட சொதப்பல் படம் பேசப்பட்டதால, அவரோட தெலுங்கு படங்களை தமிழ்ல டப் பண்ண ஒரு குரூப் ரெடியா இருக்காம்... இருக்காம்... ஆனா இது நடிகருக்கு பிடிக்கலையாம்... பிடிக்கலையாம்... தமிழ்ல எனக்குன்னு ஒரு மார்க்கெட் பிடிக்க விரும்புறேன். ஓடாத படங்களையெல்லாம் டப் பண்ணி அதை கெடுத்துடுவாங்க போலிருக்கேÕன்னு நடிகரு டென்ஷன் ஆகுறாராம்... ஆகுறாராம்...

பிரான்சில் வினோதம் இறந்த காதலனை மணக்க கர்ப்பிணி காதலி முடிவு

துப்பாக்கிச் சண்டையில் மரணம் அடைந்த வீரரை, அவரது கர்ப்பிணி காதலி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார். இதனால் பிரான்சில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்சில் கடந்த வாரம் முகமது மெரா என்ற 23 வயது தீவிரவாதி ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை அடிக்க முயன்றார். அதை தடுக்க சென்ற துணை ராணுவத்தினர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

பின்னர் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த 2 சம்பவங்களிலும் துணை ராணுவ வீரர் அபெல் சென்னூப், 3 பள்ளி குழந்தைகள், ஆசிரியை உள்பட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். பின்னர் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த முகமதுவை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில் வக்கீல் கில்பர்ட் கொலார்ட் என்பவர் கூறியதாவது:
துப்பாக்கிச் சூட்டில் இறந்த வீரர் அபெல் சென்னூப்பின் 21 வயது காதலி கரோலின் மோனெட். இப்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். இறந்த தனது காதலனை சட்டப்படி திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

இறந்த ஒருவருடன் திருமணம் செய்து கொள்வது வழக்கத்தில் இல்லாதது. ஆனால், சில அசாதாரண சூழ்நிலையில் இதுபோன்ற திருமணத்துக்கு அனுமதி அளிப்பது அதிபரின் முடிவை பொறுத்தது.

இதற்கு முன் இறந்த போலீஸ்காரர்கள் 2 பேரின் காதலிகளுக்கு இதுபோல் திருமணம் நடந்துள்ளது. இதுபோன்ற திருமணத்தின் போது மணமகள் இருக்கைக்கு அருகில் மற்றொரு இருக்கை அமைக்கப்படும். அதில் மணமகன் இருப்பது போல் நினைத்து திருமண சடங்குகள் நடக்கும். இதன்மூலம் பிறக்க போகும் குழந்தைக்கு சட்டப்பூர்வமான தந்தையாக சென்னூப் கருதப்படுவார்.

விண்ணில் இருந்து விழுந்த 200 கிலோ மர்ம பொருள் :சைபீரிய மக்கள் பீதி!

விண்ணில் இருந்து 200 கிலோ எடை கொண்ட மர்ம பொருள் சைபீரியாவில் விழுந்ததால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். சைபீரியாவில் உள்ள ஓட்ராட்நெஸ்கி என்ற கிராமத்தின் அடர்ந்த காட்டு பகுதியில், விண்ணில் இருந்து திடீரென மர்ம பொருள் சமீபத்தில் விழுந்தது. அதை பகுதியில் இருந்த கிராமவாசிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அருகில் சென்று பார்த்தனர். முதலில் அது இறந்த பறவையாக இருக்கலாம் என்று எண்ணினர். ஆனால், பறவை எதுவும் இல்லை என்று தெரிந்ததும் போலீசாருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், யு வடிவத்தில் இருந்த அந்த பொருள் ஏதோ ஒரு சாதனத்தின் உடைந்த பொருள் என்பதை அறிந்தனர். இதுகுறித்து ரஷ்ய ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் அளித்தனர்.

வெள்ளியை போல் பளபளப்பாக உள்ள அந்த மர்ம பொருளை ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், "விண்ணில் இருந்து விழுந்த பொருள் 200 கிலோ எடை உள்ளது. உலோகத்தால் ஆனது. ராக்கெட், ஏவுகணை அல்லது விண் கல்லாக இருக்க வாய்ப்பில்லை என்பது முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. மர்ம பொருள் குறித்த தொடர் ஆய்வு நடைபெறுகிறது என்றனர்.

கத்தி முனையில் ஆண்களை பலாத்காரம் செய்யும் ஜிம்பாப்வே பெண்கள்

அதிர்ஷ்டம், அதிசய சக்தி, செழிப்பை பெறுவதற்காக ஜிம்பாப்வேயில் ஒரு பிரிவினர் ஜுஜு என்ற மந்திர பூஜை நடத்துகின்றனர். பில்லி சூனியம் போன்ற இந்த பூஜைக்காக, ஆண்கள் உயிரணுக்களை பெண்கள் திருடுகின்றனர். இதற்காக ஆண்களை கத்திமுனையில் அல்லது துப்பாக்கி முனையில் பெண்கள் பலாத்காரம் செய்கின்றனர் என்று பரபரப்பாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜிம்பாப்வேயில் ஹாராரேவில் கடந்த சில மாதங்களுக்கு சாலையில் சென்ற வாலிபர்களை, காரில் வந்த பெண்கள் கும்பல் கத்திமுனையில் கட்டாய உறவு கொள்ள வைத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் 3 சகோதரிகள், ஒரு ஆண் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், சாலையில் நடந்து செல்லும் வாலிபர்களை கும்பலாக வரும் பெண்கள் தொடர்ந்து பலாத்காரம் செய்து, அவர்களின் உயிரணுக்களை எடுத்துச் செல்வதாக லண்டனில் இருந்து வெளியாகும் டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஜிம்பாப்வே அதிகாரிகள் கூறுகையில், இதுகுறித்து சில புகார்கள் வருகின்றன. ஆனால், விசாரணையில் தாங்கள் பாலியல் தொழிலாளிகள் என்று கூறி பெண்கள் தப்பிவிடுகின்றனர். மேலும், ஆண்களை பெண்கள் பலாத்காரம் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எடுபடுவதில்லை. அப்படியே இருந்தாலும் அது கிரிமினல் குற்றமாக ஜிம்பாப்வேயில் கருதப்படுகிறது என்றனர்.

ஸ்ரீதேவி இன்னும் சின்னப்புள்ள தனமாவே இருக்காங்க..!


யானை எடை மிஷின்ல ஏறிய மாதிரி, மனசு கொள்ளாத வெயிட்டோடுதான் நடந்து கொள்கிறார் 'அந்தகால' ஸ்ரீதேவி. (மயிலு ஆற்றை கடக்குற சீனை இப்ப பார்த்தாலும், பாக்குறவாளுக்கு மூச்சு பிடிப்பே வரும் தெரியுமோ?) 

முன்பெல்லாம் மும்பையை சுற்றியே ரவுண்டடித்து வந்த இந்த சிவகாசி பொண்ணு(?) இப்ப அடிக்கடி சென்னை பக்கமும் ரவுண்ட் வர ஆரம்பித்திருக்கிறார். எப்படியாவது மகளை பெரிய ஹீரோயினாக்கிவிட வேண்டும் என்ற சிந்தனையோடு.

பொண்ணு மேலே வரணும்னு ஆசைப்படுறது எல்லா அம்மாக்களுக்கும் பொதுவான விஷயம்தான். ஆனால் இவரும் ஒரு பொண்ணு மாதிரியே டிரஸ் கோடுடன் வருவதுதான் ஒரு அடங்காத லுக்கை கொடுக்கிறது. 

இதை மேலோட்டமாக ரசித்துவிட்டு போகாமல் ஒரு பெரிய பிரச்சனையாக்கிக் கொண்டிருக்கின்றன சில அமைப்புகள். மும்பையை சேர்ந்த சில பெண்கள் அமைப்பினர், 'இனிமேல் அவர் எந்த விழாவுக்கு வந்தாலும் அடக்க ஒடுக்கமா டிரஸ் பண்ணிட்டு வரணும். அவர் போடுற மிடி தொடை வரைக்கும் காட்டுது. அவரு வயசுக்கு இது சரியல்ல' என்கின்றன. மயிலு... ஒரு தடவ பழைய படத்தை காட்டும்மா அவங்களுக்கு.

அண்டார்டிகா கடல் நீர் வற்றிக் கொண்டிருக்கும் மர்மம்


அண்டார்டிகாவின் ஆழ் கடல் நீர் மர்மமான முறையில் வற்றி வருகிறது. உலகில் உள்ள ஆழ்கடல்களில் இருந்து வெப்பத்தின் மூலம் வெளியேறும் தண்ணீர் பூமியின் மேற்பரப்பை சென்றடைந்து மேகமாக மாறி மழையாக பொழிகிறது. இதன் மூலம் பூமியின் பருவ நிலை மாற்றம் சமநிலை படுத்தப்படுகிறது.

ஆனால், பனிக்கட்டிகளால் ஆன அண்டார்டிகா கடலின் தென் பகுதியில் உள்ள ஆழ்கடல் நீர் வற்றி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் வினாடிக்கு 8 மில்லியன் மெட்ரிக் டன் தண்ணீர் வற்றி மாயமானதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது அமெரிக்காவின் மிசிசிப்பி ஆற்றின் தண்ணீரை விட 50 மடங்குகளாகும். இந்த கடல் நீர் வற்றுவதற்கான காரணம் மர்மமாக உள்ளது. இது குறித்து ஆய்வாளர்கள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

உலகிலேயே மிகவும் குளிர்ந்த நீரைக் கொண்டுள்ள கடல் அண்டார்டிக்கா கடல் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கடலின் நீர் வற்றிப் போவதற்கு அதிகரிக்கும் புவி வெப்பமும், ஓசோனில் விழுந்த ஓட்டையும்தான் காரணம் என புவி ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.