வியாழன், 3 ஜனவரி, 2013

வீடியோ கேம் வசதியுடன் தோஷிபாவின் புதிய நோட்புக்குகள்!


Maingear Vybe
மெயின் கியர் நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய கேமிங் நோட்புக்கைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய கேமிங் நோட்புக்கிற்கு மெயின் கியர் வைபி 15 நோட்புக் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
வீடியோ கேம் பிரியர்களுக்காகவே இந்த நோட்புக் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய நோட்புக் சாதாரண, சிறந்த,மிகச் சிறந்த மற்றும் அல்டிமேட் என 4 மாடல்களில் வருகிறது.
இந்த நோட்புகின் சாதாரண மாடலில் கோர் ஐ5 3360எம் ப்ராசஸர், 8ஜிபி டிடிஆர்3-1333 ரேம் ஆகியவை உள்ளதால் இந்த நோட்புக் மிக உறுதியாக இருக்கும். அதோடு இந்த நோட்புக்கில் 2ஜிபி ரேமோடு கூடிய கெப்ளரி ரன்னிங் ஜிஇபோர்ஸ் 650எம் உள்ளதால் க்ராபிக்ஸ் வேலைகளை இதில் அருமையாகச் செய்ய முடியும். மேலும் இந்த நோட்புக் 500ஜிபி சேமிப்புடன் வருகிறது.
சிறந்த மாடலில் வரும் நோட்புக், கோர் ஐ7 3520எம் ப்ராசஸர் மற்றும் 8ஜிபி டிடிஆர்3-1333 ரேம் கொண்டிருக்கிறது. அதோடு முந்தைய மாடலின் க்ராபிக்ஸ் ஹார்ட்வேரையே இதுவும் கொண்டுள்ளது. ஆனால் சேமிப்பைப் பொருத்தவரை இந்த நோட்புக் 750ஜிபி அளவைக் கொண்டுள்ளது.
மிகச் சிறந்த மாடலில் வரும் நோட்புக் கோர் ஐ7 3720க்யுஎம் ப்ராசஸர் மற்றும் 8ஜிபி டிடிஆர்3-1600எம்முடன் வருகிறது. சேமிப்பு வசதியை எடுத்துக் கொண்டால் இந்த மாடல் 750ஜிபி சட்டா மற்றும் 128ஜிபி எஸ்எஸ்டியுடன் வருகிறது.
இறுதியாக அல்டிமேட் மாடல் மிகவும் சூப்பராக வருகிறது. குறிப்பாக இந்த நோட்புக் கோர் ஐ7 3820க்யுஎஸ் ப்ராசஸருடன் வருகிறது. இதில் இருக்கும் 16ஜிபி டிடிஆர்3-1600 ரேம் எச்டி வீடியோ எடிட்டிங் மற்றும் எச்டி கேமிங் ஆகியவற்றை சப்போர்ட் செய்யும். மேலும் இந்த உயர்தர மாடல் 750 ஜிபி சட்டா எச்எச்டி மற்றும் 256 எஸ்எஸ்டியுடன் வருகிறது.
க்ராபிக்ஸ் வேலைகளுக்கா மிகச் சிறந்த மற்றும் அல்டிமேட் ஆகிய இரண்டு மாடல்களும் 2ஜிபி ரேமுடன் கூடிய கெப்ளர் ரன்னிங் ஜிஇபோர்ஸ் 660எம் கொண்டு வருகின்றன. அதனால் இந்த நோட்புக்குகளில் மிக சூப்பராக வீடியோ கேம்களை விளையாட முடியும். அதே நேரத்தில் க்ராபிக்ஸ் வேலைகளையும் மிக சூப்பராக செய்ய முடியும்.
மேற்சொன்ன 4 நோட்புக் மாடல்களின் டிஸ்ப்ளே மிகத் தெளிவாக இருக்கும். அதோடு இதில் ட்ரூஸ்டூடியோ ப்ரோ சவுண்ட் வசதி கொண்ட 4 ஸ்பீக்கர்கள் உள்ளதால் இதில் இனிமையான பாடல்களையும் கேட்கலாம். மேலும் வீடியோ உரையாடலுக்கான வெப்காம் மற்றும் இணைப்பு வசதிகளுக்காக எச்டிஎம்ஐ மற்றும் விஜிஎ போர்ட்டுகளும் உள்ளன.
விலையைப் பார்த்தால் சாதாரண மாடல் 1099 அமெரிக்க டாலர்களுக்கும், சிறந்த மாடல் 1299 அமெரிக்க டாலர்களுக்கும், மிகச் சிறந்த மாடல் 1599 அமெரிக்க டாலர்களுக்கும் மற்றும் அல்டிமேட் மாடல் 1999 அமெரிக்க டாலர்களுக்கும் விற்கபடுகின்றன.

2012-ன் சிறந்த ஐபோன் அப்ளிகேசன்கள்


அப்ளிகேசன்கள் இல்லாமல் ஐபோனை பயன்படுத்துவது சத்தமில்லாமல் இளையராஜா பாடல்களை கேட்பதைப்போன்றதாகும். கேட்கவும் முடியாது, ரசிக்கவும் முடியாது. ஐபோனில் பயன்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கில் சிறந்த அப்ளிகேசன்கள் கிடைக்கின்றன.

பணம் கொடுத்து வாங்கும் வகையிலோ அல்லது இலவசமாகவோ கிடைக்கின்றன என்பது சிறப்பு. நாங்கள் இங்கே 2012-ன் சிறந்த ஐபோன் அப்ளிகேசன்கள் சிலவற்றை வரிசைப்படுத்தியுள்ளோம்.

2012ல் வெளியான டூயல் சிம் பேப்லெட்கள்



மிகப்பெரிய திரையைக்கொண்ட மொபைல் போன்களே “பேப்லெட்கள்” என அழைக்கப்படுகின்றன. ஸ்மார்ட்போன்களே பெரிய திரைகளை கொண்டுள்ளன. விற்பனை யுக்திகளுக்காக தயாரிப்பு நிறுவனங்களால் வகைப்படுத்தப்பட்டதே இந்த பேப்லெட்கள் ஆகும்.

அண்மைக்காலங்களில் அனைத்து மொபைல் போன்கள் தயாரிப்பு நிறுவனங்களும் இந்த பேப்லெட்கள் தயாரிப்பில் இறங்கியுள்ளன. உதாரணத்திற்கு சாம்சங், எல்ஜி மற்றும் ஹெச்டிசி ஆகியவை.

நாங்கள் இங்கே 2012ல் வெளியான டூயல் சிம் மற்றும் ஆன்ட்ராய்டு இயங்குதள வசதியைக்கொண்ட பேப்லெட்கள் சிலவற்றை இங்கே வரிசைப்படுத்தியுள்ளோம்.

படங்கள் மற்றும் வீடியோக்களை பாதுகாக்க உதவும் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்!


நம்மில் பெரும்பாலானோர் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகிறோம். அவற்றில் அதிக அளவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சேமித்துவைத்திருப்போம். ஆனால் அவை பெரும்பாலும் அனைவரின் பார்வையிலும் படும்வகையில் இருக்கும்.

உதாரணத்திற்கு யாராவது நமது போன்களை பயன்படுத்தினால் அவர்களால் நமது “பர்சனல்” புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பார்க்க முடியும். இதைத்தடுக்க ஆன்ட்ராய்டில் பல்வேறு அப்ளிகேசன்கள் கிடைக்கின்றன. அவற்றில் சிறந்த சிலவற்றை நாங்கள் உங்களுக்காக தருகிறோம்.

ஹலோ…சாரி ராங் நம்பர்!


How to Trace Wrong calls from Mobilephone
தெரியாத மொபைல் நம்பரில் இருந்து போன்கால்கள் வந்தால் கண்டு பிடிக்க எளிய வழிமுறைகள்!
தெரியாத மொபைல் எண்களில் இருந்து அடுத்தடுத்து போன்கால்கள் வருவது வாடிக்கையான ஒன்றாகிவி்ட்டது.இதற்கு அதிகபட்சம் நாம் செய்வது ‘சாரி, ராங் நம்பர்’ என்று சொல்வதாகத் தான் இருக்கிறது. அப்படியும் அடிக்கடி போன்கள் வந்தால் அந்த நம்பரில் இருந்து வரும் போது கட் செய்வது. இதையும் மீறி அதிக தடவை தெரியாத மொபைல் நம்பரில் இருந்து போன்கால்கள் வந்தால் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். ஆனால் மொபைல் நம்பர்களை ட்ரேஸ் செய்ய ஒரு எளிய வழி உள்ளது.
மொபைல் நம்பரை ட்ரேஸ் செய்ய நிறைய வலைத்தளங்கள் உள்ளன. உதாரணத்திற்கு மொபைல் டிரெக்ட்ரி இன்டியா என்ற வலைத்தளத்திற்குள் நுழைய வேண்டும். இதில் ட்ரேஸ் மொபைல் நம்பர், ட்ரேஸ் ஐபி அட்ரஸ், ட்ரேஸ் வெகிக்கல் நம்பர், ட்ரேஸ் லேண்டுலைன் நம்பர் என்று பல வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
How to Trace Wrong calls from Mobilephone
இதில் ட்ரேஸ் மொபைல் நம்பர் என்ற வசதியை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு ஒரு விண்டோ திறக்கப்படும். அந்த விண்டோவில் டைப் மொபைல் நம்பர் என்ற கேட்கப்படும். இதில் எந்த மொபைல் நம்பரில் இருந்து போன்கால் வருகிறதோ அந்த மொபைல் எண்ணை டைப் செய்ய வேண்டும். பிறகு சமர்ப்பிக்க (சப்மிட்) வேண்டும்.
How to Trace Wrong calls from Mobilephone
இப்படி செய்தால் நாம் டைப் செய்த மொபைல் எண் எந்த தொலை தொடர்பு சேவை கொண்டது, ஜிஎஸ்எம் அல்லது சிடிஎம்ஏ மற்றும் எந்த இடம் என்பது போன்ற தகவல்களை எளிதாக பெறலாம்.
How to Trace Wrong calls from Mobilephone
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை படித்த பின் இதை நீங்களும் செயல்படுத்தி பார்த்து தெரிந்து கொள்ளலாம்

மொபைல் போன் ஆபத்துக்கள்


மொபைல் போன்களால் உயிருக்கு ஆபத்தான பல வியாதிகள் தாக்குவது உண்மைதான் என மத்திய அரசின் தொலைத் தொடர்பு அமைச்சக நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் மொபைல் போன்களைப் பயன்படுத்துவது குறித்து புதிய நெறிமுறைகளை மத்திய அரசு கமிட்டி அறிவித்துள்ளது.

கொடிய நோய்கள்…
செல்போன்கள் மற்றும் செல்போன் டவர்களால் மிக பயங்கரமான நோய்கள் தாக்குவதாக மருத்துவ நிபுணர்கள் பல முறை எச்சரித்துள்ளனர். நினைவிழப்பு, கேன்சர்..., மூளைக்கட்டி, கவனமின்மை, பார்வைக் கோளாறு, தூக்கமின்மை உள்ளிட்ட ஏராளமான வியாதிகள் தாக்குவதாக எச்சரித்து வந்தனர்.


மேலும் செல்போன் டவர்கள் அமைந்துள்ள இடங்களைச் சுற்றி வாழும் மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், பூச்சியினங்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் எச்சரித்தனர். அன்றாட வாழ்க்கையில் நாம் பார்த்து வந்த சிட்டுக் குருவிகள், பட்டாம் பூச்சிகள், தும்பிகள் போன்றவை, செல்போன் டவர்கள் உள்ள ஏரியாவில் அடியோடு ஒழிந்து விட்டதாக ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். காரணம், செல்போனிலிருந்து வெளியாகும் கொடிய கதிர்வீச்சு.
ஆனால் இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் கொடுமை. மொபைல் போன்களால் வரும் ஆபத்து குறித்து எவ்வளவோ எச்சரித்தாலும், மொபைல் போன்களின் விற்பனை மட்டும் நாளுக்கு நாள் இரண்டு மூன்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் இன்றைய தேதிக்கு 76 கோடி பேர் மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர். பலர் இரண்டு அல்லது மூன்று செல்போன்கள் கூட வைத்துள்ளனர்.
அதே நேரம், மிக சிக்கலான நரம்புக் கோளாறு நோய்கள் பாதிப்பால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

join rajkumarlove@live.com
மத்திய நிபுணர் குழு
இந்தப் போக்கு குறித்து கவலையடைந்த மத்திய அரசு, தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் மற்றும் சுகாதார ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த 8 அதிகாரிகளைக் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்து, செல்போன்களால் உண்டாகும் நோய் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தரக் கேட்டுக் கொண்டது. தொலைத் தொடர்புத் துறை தொழில்நுட்ப ஆலோசகர் ராம்குமார் இந்தக் குழுவுக்குத் தலைமை வகிக்கிறார். இந்திய விஞ்ஞானக் கழகத்தின் விஞ்ஞானி டாக்டர் எஸ்கே சர்மா உள்ளிட்டோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, “குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரேடியோ கதிர்களை உமிழும் மட்டமான செல்போன்களை அனுமதிக்கக் கூடாது. அதற்கு அனைத்து வகை செல்போன் கருவிகளும் தொலைத் தொடர்புத் துறையின் தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
மொபைல் கருவிகளின் தரம் குறித்து தெளிவான வரையறையை தேசிய அளவில் உருவாக்க வேண்டும்.
செல்போன் டவர்களின் மின்காந்த அலைவரிசை (electromagnetic frequency -EMF) கதிர்வீச்சின் அளவு எந்த அளவு இருக்க வேண்டும் என்பது குறித்து வரையறை நிர்ணயிக்க வேண்டும்…” என பரிந்துரைத்துள்ளது.
மேலும் செல்போன் கருவிகளால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் குறித்தும் இந்தக் கமிட்டி பலமாக எச்சரித்துள்ளது.

இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
செல்போன்கள் உபயோகிக்கும் போது, அதில் ஏற்படும் வெப்பத்தில் ஒரு டிகிரியின் சிறுபகுதி தலையைத் தாக்கினாலும், ரத்த ஓட்டத்தையே பாதிக்கும் அளவு ஆபத்து ஏற்படுகிறது. ரத்தத்தில் பரவும் இந்த வெப்பம் உடல் முழுவதும் பயணப்படுகிறது. ரத்தத்தில் உள்ள செல்களைச் சிதைக்கும் அளவுக்கு இது மோசமானது.
மேலும் செல்போன்களின் மின்காந்த அலைகள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் உயிரைப் பறிக்கும் அளவு ஆபத்தானவை.
அதிக கதிர்வீச்சு கொண்ட மொபைல்கள் காரணமாக, தலைப்பகுதியின் தோல் பொசுங்கிவிடுகிறது. இதனால் தொடு உணர்வையே அது இழந்துபோய், தலையின் ஒரு பகுதி மட்டும் மரத்துப் போகும் அபாயம் ஏற்படுகிறது. இத்தகைய நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீப மாதங்களில் அதிகரித்திருப்பது கவனிக்கத்தக்கது.
நினைவிழப்பு, கேன்சர், மூளைக்கட்டி, கவனமின்மை, பார்வைக் கோளாறு, தூக்கமின்மை, காதுகளில் எப்போதும் சத்தம் கேட்பது போன்ற உணர்வு, ஜீரணக் கோளாறு, இதயத் துடிப்பு சீரற்றுப் போதல் என கொடிய நோய்களுக்கு செல்போன் கதிர்வீச்சு பாதிப்பு காரணமாகிறது.
இவற்றை ஒரேயடியாக இனி தடுக்க முடியுமா என்பது தெரியவில்லை. அதே நேரம் கட்டுப்படுத்தும் ஒருவழியாக ‘இந்திய டெலிகிராப் சட்டம் 1885′-ஐ திருத்தலாம். அதன்படி, மொபைல் போன்களைத் தரப்படுத்தலாம். தரமற்ற மொபைல் போன்கள் இந்திய சந்தைக்குள் வருவதையும் அடியோடு தடுக்கலாம்.

மக்களுக்கு எச்சரிக்கை…
இந்த ஆபத்துக்களிலிருந்து ஓரளவு தப்பிக்க சில வழிகள் உள்ளன.
குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் கருவுற்ற பெண்கள் செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்… அல்லது முடிந்தவரை குறைக்கலாம்.
மற்றவர்கள் செல்போனை காதில் வைத்துப் பேசுவதைக் குறைத்துவிட்டு ஸ்பீக்கர்களை ஆன் செய்து பேசலாம்.
உடலில் ஏற்கெனவே மருத்துவ காரணங்களுக்காக கருவிகளைப் பொருத்தியிருப்போர் அடியோடு செல்போன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
-இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக அறிக்கை

மொபைல் போன்களின் கதிரியக்கம் குறித்து இரண்டாவது ஆய்வொன்றை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மூலம் மத்திய அரசு மேற்கொண்டது.
இந்த ஆய்வின் அறிக்கையும் இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் வலியுறுத்தப்பட்டுள்ள முக்கிய விஷயம், செல்போன் கருவிகளின் கதிரியக்கத்தால் ஆண்மை பறிபோகும் என்பதுதான்.
இதுதவிர, உடலின் நோய் எதிர்ப்பு செல்களையும் மெல்ல மெல்ல இந்த கதிரியக்கம் கொல்ல ஆரம்பித்து விடுவதாக அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.
இதுவரை தனியார் அமைப்புகள் மட்டுமே செல்போன் ஆபத்துக்கள் பற்றி எச்சரித்து வந்தன. ஆனால் இப்போதுதான் முதல் முறையாக, அரசு சார்ந்த நிபுணர் குழுக்கள் இதுகுறித்த ஆதாரப்பூர்வமான, அதிகாரப்பூர்வமான அறிக்கையை தெளிவாக அளித்துள்ளன.
இந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றே தெரிகிறது. அரசு நடவடிக்கையைவிட தனிப்பட்டோர் ஒத்துழைப்புதான் இதில் முக்கியம் என்று இந்த ஆராய்ச்சிக் குழுக்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

நல்லவன்


nallavan