செவ்வாய், 23 செப்டம்பர், 2014

இளம் நடிகைகளுக்கு எதிராக மனு ??!!


தமிழ் சினிமாவில் 18 வயது கூட நிரம்பாத இளம்பெண்கள் நடிப்பதை தடை செய்ய வேண்டுமென, நேற்று சென்னை உயர் நீதி மன்றத்தில் முத்துலக்ஷ்மி என்ற பெண், பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். பெண்களை தவறாக சித்தரிக்கும் இந்த விடயத்திற்கு உடனடியாக ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த மனுவில் இளம் பெண்கள், 18 வயது கூட நிரம்பாத பெண்கள் தமிழ் சினிமாவில் நடிக்கின்றனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம். இவர்கள் கவர்ச்சியாகவும், முத்தக்காட்சிகளிலும் நடிக்க வைக்கப்படுகின்றனர். குறிப்பாக லக்ஷ்மி மேனன், துளசி, கார்த்திகா, போன்றோர் பராயம் வராத இளம்பெண்கள், இவர்கள் இவ்வாறு நடிக்க வைக்கப்படுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 


இதற்கு முதல் இவ்வாறான ஒரு மனு தாக்கல் செய்யப்படவில்லை, இது தான் முதல் தடவையாகையால், திரையுலகினரின் கவனத்தை இது ஈர்த்துள்ளது. இவர் பெயர் குறிப்பிட்ட நடிகைகளில் பிரபல நடிகை ராதாவின் இரு மகள்களும் அடங்குகின்றனர். 
மேலும் முத்துலக்ஷ்மி பொது நலம் கருதியே இதனை செய்தார் என தெரிவித்துள்ளார். இந்த மனு சென்னையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது. 
 
நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது நடப்பதே நடக்குமா எனப் பார்ப்போம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக