செவ்வாய், 23 செப்டம்பர், 2014

விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி -'கத்தி' பற்றி

சர்ச்சைக்கு மேல் சர்ச்சையில் சிக்கி தவிக்கும் கத்தி திரைப்படம் வருமா..? வராதா..? என்று காத்திருக்கும் விஜய் ரசிகர்களுக்கு இது காதில் தேன் வார்த்தது போல,சந்தோசமான செய்தி என்று தான் சொல்லணும்.

                 ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தநிலையில் இளையதளபதி விஜய் நடிக்கும் படம் என்பதால் இந்தப்படத்தின் பாடல்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பும், இசை உரிமையை வாங்குவதற்கான போட்டியும் அதிகரித்திருக்கிறது.

                                                இந்த போட்டியில், இந்தியில் முன்னணி நிறுவனமான "Eros" கத்தி படத்தின் இசைக்கு பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது. இது வரையில் தமிழில் மாற்றான், கோச்சடையான் படங்களை மட்டுமே வெளியிட்டு வந்த இந்த நிறுவனம், முதன்முறையாக தமிழ்த்திரையுலகில்  இசை வெளியீட்டிலும் கால் பதித்திருக்கிறது. 

      இந்தநிலையில் தற்போது இந்த நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளராக பொறுப்பேற்றிருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் இந்த சந்தோசமான செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

                                   செப்டம்பர் மாதம்(இம்மாதம்) 18ம் திகதி இந்தப்படத்தின் இசை வெளியீடு  இடம்பெறும் எனவும் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறார். அத்தோடு இன்னுமொரு இனிக்கும் விசயத்தையும் சொல்லியிருக்கிறார் ஐஸ்வர்யா. 
                                          லைக்கா நிறுவனத்தை கழற்றிவிட்டு "Eros" நிறுவனத்தின் மூலம் கத்தி படத்தை வெளியிட பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.  

#எது எப்டியோ.... யார் குத்தினாலும் அரிசி ஆனால் சரி எண்டது  போல, யார் வெளியிட்டாலும் படம் வந்தா சரி எண்டு ரசிகர்கள் முணுமுணுக்கிறது எங்களுக்கும் கேட்குது....#

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக