செவ்வாய், 20 மே, 2014

இலங்கை மீன் வளத்தை இந்தியா சுரண்டினால் சர்வதேச உதவியை நாடுவோம்

கொழும்பு : இலங்கை மீன் வளத்தை இந்தியா சுரண்டினால், இப்பிரச்னையை சர்வதேச அமைப்பின் உதவியை நாடுவோம் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜீதா சினரத்னே கூறியுள்ளார்.  மீனவர் பிரச்னை தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே நடந்த பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இலங்கை கடற்பகுதியில் ஆண்டுக்கு 70 நாள் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற தமிழக மீனவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால், இரு தரப்பினரும் அடுத்த மாதம் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்நிலையில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜீதா சினரத்னே கொழும்புவில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இலங்கையின் மீன்வளத்தை யாராவது சுரண்ட முயற்சித்தால், இப்பிரச்னை தீர்க்க சர்வதேச நாடுகளின் உதவியை இலங்கை நாடும். இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதால், வெளியுறவுக் கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது என நம்புகிறேன்.’’ என்றார்.

ஜெயலலிதா பங்கேற்காதது மகிழ்ச்சி
இலங்கை அரசின் செய்தி தொடர்பாளரும், ஊடக அமைச்சருமான கெகலியா ராம்புக்வெல்லா கொழும்பில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்தியாவில் பா.ஜ கட்சி தனிப்பெரும்பான்மையுடன், எந்த கட்சியையும் சாராமல் வலுவான ஆட்சி அமைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கட்சி 37 இடங்களில் வென்றாலும், மத்தியில் எந்த நிர்பந்தமும் கொடுக்க முடியாத நிலையில் இருப்பார். இதனால் தமிழகத்தின் வற்புறுத்தல் இல்லாமல் மத்திய அரசால் முடிவெடுக்க முடியும்’’ என்றார்.

Tharangambadi

Friends Poongaatre Konjam Google Chrome

ஞாயிறு, 11 மே, 2014

Vidai Kodu Vidai Kodu Video Song.

Kaadhal Thantha Vali

கயிற்றால் கட்டி இழுத்து சென்று மோடியை சிறையில் அடைத்திருப்பேன் : மம்தா ஆவேசம்

கொல்கத்தா: மத்தியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்திருந்தால், மோடியை இந்த அளவுக்கு பேச விட்டிருக்க மாட்டேன். மோடியை கயிற்றால் கட்டி இழுத்து சென்று சிறையில் அடைத்திருப்பேன். காங்கிரஸ் கட்சி மோடியை பார்த்து பயப்படுகிறது. பா.ஜ.வின் வளர்ச்சிக்கு காங்கிரஸ்தான் காரணம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மேற்குவங்கத்தில் நாளை தேர்தலை சந்திக்க உள்ள பேரம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பிரசாரம் மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற பொது கூட்டத்தில் அவர் பேசியதாவது:

நரேந்திர மோடியை கண்டு காங்கிரஸ் அஞ்சி நடுங்குகிறது. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதற்கு துணிவு இல்லை. மோடிக்கு எதிராக இதுவரை ஒரு வார்த்தையை கூட காங்கிரஸ் மேலிடம் தெரிவிக்கவில்லை. ஆரம்ப கட்டத்திலேயே மோடிக்கு நெருக்கடி கொடுத்திருந்தால் அவர் இந்த அளவுக்கு அதிகமாக பேசியிருக்க மாட்டார். மோடி ஏற்கனவே பிரதமர் ஆகிவிட்டார் என்பது போன்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தையே பிறக்கவில்லை. அதற்குள் அந்த குழந்தைக்கு திருமண தேதி நிச்சயிக்கப்பட்டு விட்டது. காங்கிரசுக்கு பதிலாக டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்திருந்தால் மோடியை கயிற்றால் கட்டி இழுத்து சென்று சிறையில் அடைத்திருப்பேன். பாஜ வளர்ச்சிக்கு காங்கிரஸ் தான் காரணம். மத்தியில் அடுத்த அரசு அமைவதில் திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு மம்தா ஆவேசமாக பேசினார். மம்தாவின் இந்த ஆவேச பேச்சு அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் நடிகையுடன் குடும்பம் நடத்திய துணை நடிகர் கொன்று புதைப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம், பரப்பாடியை சேர்ந்தவர் ரெனால்ட் பீட்டர் பிரின்சோ (35). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் நடத்தி வந்த கம்ப்யூட்டர் சென்டரை மூடிவிட்டு சென்னைக்கு சென்றார். பின்னர் இவர் கடந்த ஜனவரி மாதம் மாயமா னார். இது குறித்து, அவரது சகோதரர் ஜஸ்டின் பிரின்சோ பாளையங்கோட்டை போலீசில் புகார் செய்தார். விசாரணையில் பீட்டர் பிரின்சோ கொலை செய்யப்பட்டு பாளை அருகே புதைக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து, போலீஸ் தரப்பில் கூறியதாவது: சென்னையில் வசித்த பீட்டர் பிரின்சோ, அங்கு நெல்லையை சேர்ந்த அவரது நண்பர்கள் உமாச்சந்திரன், ஜான் பிரின்சன் ஆகியோருடன் சேர்ந்து ஆன்லைன் வர்த்தகம் செய்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து, பெங்களூர் சென்று சட்டவிரோத தொழில்கள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார்.
இந்த பணத்தின் மூலம் சினிமா எடுக்க பைனான்ஸ் செய்தார். மேலும் `காகிதபுரம்‘ என்ற திரைப்படத்திலும் நடித்தார். அப்போது ‘சாம்பவி‘ என்ற படத்தில் நடித்த நடிகை ஸ்ருதி சந்திரலேகாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கணவன், மனைவியாக வசித்தனர்.

பிரின்சோவுக்கு மேலும் சில பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், ஸ்ருதிக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதற்கிடையில், பீட்டர் பிரின்சோவிடம் கோடிக்கணக்கில் பணம் இருப்பதையறிந்த அவரது நண்பர்கள் உமாச்சந்திரன், ஜான் பிரின்சன் ஆகியோர் தாங்கள் ஏற்கனவே அவரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டனர். அதற்கு பீட்டர் மறுக்கவே, தகராறு ஏற்பட்டது.

ஏற்கனவே பீட்டர் மீது ஆத்திரத்தில் இருந்த ஸ்ருதியும், அவரது நண்பர்களுடன் சேர்ந்து பீட்டரிடம்  இருக்கும் பணத்தை பறிக்க திட்டமிட்டார். இதற்காக அவருக்கு பாலில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்தனர். இதனால், பீட்டர் உடல் நலிந்து படுத்த படுக்கையானார். பின்னர் உமாச்சந்திரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த ஜனவரி 18ம் தேதி பீட்டர் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்துவிட்டு, காரில் சடலத்தை நெல்லை பாளையங்கோட்டை கொண்டு வந்து பைபாஸ் சாலையோரம் காட்டுப்பகுதியில் குழிதோண்டி புதைத்துள்ளனர். இந்த நிலையில், பீட்டரின் காரை மதுரையில் ஜான் பிரின்சன் ஓட்டிச் செல்வதை , அவரது அண்ணன் ஜஸ்டின் அண்மையில் பார்த்து போலீசிடம் பிடித்து கொடுத்தார். அவரிடம் விசாரித்தபோது, பீட்டர் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இது தொடர்பாக, உமா சந்திரனின் நண்பர்கள் ஆனஸ்ட் ராஜ், காந்திமதிநாதன், ரபீக் உஸ்மான் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

நடிகை ஸ்ருதி சந்திரலேகா மற்றும் பீட்டர் பிரின்சோவின் நண்பர்கள் 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பீட்டரிடம் இருந்த ஸீ3 கோடியை அவர்கள் பங்கு போட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.  இதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனவும், அப்போது மேலும் 4 பேர் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர். பீட்டர் பிரின்சோவின் உடல் நாளை தோண்டி எடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது.

அரக்கோணத்தில் வெடி பொருளுடன் பிடிபட்ட நபரை மடக்கி போலீஸ் விசாரணை

தமிழகத்தில் வெடிப்பொருட்களுடன் ஊடுருவிய தீவிரவாதிகள் பிடிபட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் மேம்பாலம் ஏறும் படிக்கடிகளில் சந்தேகம் படும் படி வேகமாக சென்ற நபரை போலீஸார் மடக்கி பிடித்தனர். அந்த நபர் வைத்திருந்த மஞ்சள் நிற பையில் 2 கிலோ சிவப்பு பாஸ்பரஸ் உள்ளிட்ட வெடி பொருட்களும் சந்தேகிக்கும் படி பொருட்களும் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் அந்த நபரை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர். 

மற்றொரு நபர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. உடனே வேலூர் டி.ஐ.ஜி. தமிழ்சந்திரன் காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று பிடிப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். வெடிகுண்டு நிபுணர்களும் வரவைக்கப்பட்டுள்ளனர். பிடிபட்ட நபரின் பெயர் மொபி புல்லா என்பதும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிடிபட்டவன் சதிசெயலை அரங்கேற்றும் திட்டத்துடன் வந்தவனா? செல் போன் மூலம் யார் யாரிடம் தொடர்பு கொண்டிருக்கிறான் என்று விசாரணை நடத்திக்கொண்டு வருகின்றனர். 

சி.பி.சி.ஐ.டி போலீசாரும் அங்கு விரைந்துள்ளனர். இதனிடையே சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே மர்ம நபரை தொழில் பாதுகாப்பு படையினர் பிடித்தனர். விசாரணையில் பிடிப்பட்ட நபரின் பெயர் அஷ்ரப் என்பதும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.                 

அன்னையர் தினம் வாழ்த்துக்கள்

அன்னையர் தினம் வாழ்த்துக்கள

அன்னையர் தினம் வாழ்த்துக்கள்

சனி, 10 மே, 2014

பிளஸ் 2 தேர்வு: கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி முதலிடம்

சென்னை : சென்னை : பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இதில் கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி 1193 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தாள். தர்மபுரி பள்ளி மாணவி அலமேலு 1192 மதிப்பெண்கள் எடுத்து 2வது இடத்தைப் பிடித்தார். மேலும் 3ம் இடத்தை இரண்டு மாணவர்கள் பிடித்தனர், நாமக்கல் போதுப்பட்டியைச் சேர்ந்த டி.துளசிராஜன் 1191 பதிப்பேன் பெற்று 3ம் இடம் பெற்றார்  மேலும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த எஸ்.நித்யாவும் 1191 மதிப்பெண் பெற்று 3ம் இடத்தைப் பிடித்தார்.  மூன்றாவது இடத்தை நாமக்கல் துளசிராஜன், சென்னை நித்யா ஆகிய இரண்டு மாணவர்கள் பிடித்துள்ளனர். 

ப்ளஸ் 2 தேர்வில் ஒட்டுமொத்தமாக 90.6 சதவீதம் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 4 லட்சத்து 14 ஆயிரத்து 211 மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். தமிழில் கிருஷ்ணகிரியை சேர்ந்த சுஷாந்தி 200க்கு 198 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தார். ஆங்கிலத்தில் ஓசூரைச் சேர்ந்த பவித்ரா 198 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தை பிடித்தார். 

மர்ம பொருட்கள் மறைத்து வைப்பதை கண்டுபிடிக்க சென்டிரல் ரெயில் நிலையத்தில் புதுரக குப்பை தொட்டிகள்

சென்னை,
மர்ம பொருட்களை குப்பைக்குள் மறைத்து வைப்பதை கண்டுபிடிக்க சென்டிரல் ரெயில் நிலையத்தில் புதுரக குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான குப்பை தொட்டிகள்
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடந்த 1-ந்தேதியன்று பெங்களூர்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் சுவாதி என்ற இளம்பெண் பலியானார். குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின்னர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் ரெயில்வே நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் அறை, பிளாட்பாரங்கள், பயணிகள் ஓய்வு அறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த குப்பை தொட்டிகளின் உள்ளே இருக்கும் பொருள் வெளியே தெரியாது. இதனால் சமூகவிரோதிகள் ‘மர்ம’ பொருட்களை இதில் வைத்துச் செல்லும் சாத்தியங்கள் இருந்தது.
புதுரக குப்பை தொட்டி
இதனையடுத்து இந்த குப்பை தொட்டிகளை தெற்கு ரெயில்வே அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக துருப்பிடிக்காத இரும்பினால் செய்யப்பட்ட புதுரக குப்பை தொட்டிகளை வைத்துள்ளது. இந்த குப்பை தொட்டிகளின் உள்ளே இருக்கும் பொருட்கள் வெளியில் இருந்து பார்த்தேலே தெரியும்.
அதற்கு வசதியாக தொட்டிகள் முழுவதும் துளைகள் இருக்கிறது. இதனால் வெடிகுண்டு உள்ளிட்ட மர்ம பொருட்களை குப்பை தொட்டிக்குள் மறைத்து வைத்து வெடிக்கச் செய்யமுடியாது.

பிளஸ்-2 தேர்வில் மடிப்பாக்கம் மாணவி நித்யா, மாநில அளவில் 3-வது இடம் பெற்று சாதனை

ஆலந்தூர்,
பிளஸ்-2 தேர்வில் மடிப்பாக்கம் மாணவி நித்யா, மாநில அளவில் 3-வது இடத்தை பெற்று சாதனை படைத்து உள்ளார். அவர் கலெக்டராகி பொதுமக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக கூறினார்.
மாநிலத்தில் 3-வது இடம்
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மடிப்பாக்கம்-புழுதிவாக்கம் பிரின்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி எஸ்.நித்யா 1,191 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே 3-வது இடத்தை பெற்றார். இவர், காஞ்சீபுரம் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று உள்ளார்.
மாணவி நித்யா, பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-
தமிழ்-195, ஆங்கிலம்-197, கணிதம்-200, இயற்பியல்-200, வேதியியல்-199, கம்ப்யூட்டர் சயின்ஸ்-200.
மாணவி நித்யாவுக்கு பள்ளி தாளாளர் டாக்டர் கே.வாசுதேவன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், சக மாணவ-மாணவிகள் இனிப்பு வழங்கி பாராட்டினர். இவருடைய தந்தை சண்முகசுந்தரம். தாயார் விஜயகல்யாணி. சண்முகசுந்தரம், சென்னை மத்திய கலால் மற்றும் சுங்கத்தீர்வை பிரிவில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.
கலெக்டராக விருப்பம்
மாநிலத்தில 3-வது இடத்தை பிடித்த மாணவி நித்யா, நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் 10-ம் வகுப்பு தேர்வில் 488 மதிப்பெண்கள் பெற்றேன். பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் வரவேண்டும் என எனது பெற்றோரும், பள்ளி நிர்வாகமும், எனது தோழிகளும் எனக்கு ஊக்கம் கொடுத்தனர். ஆசிரியர், பெற்றோர் உதவியுடன் படித்தேன்.
இங்குள்ள ஆசிரியர்கள், நண்பர்கள் போல் பழகி எங்களுக்கு படிக்க சொல்லி கொடுத்தார்கள். நான் தினமும் நடத்தப்படும் பாடங்களை அன்றே படித்துவிடுவேன். பள்ளியில் நடத்தப்பட்ட தேர்வுகளும் எனக்கு உறுதுணையாக இருந்தது. தினமும் அதிகாலையில் எழுந்து தான் படிப்பேன். டி.வி. பார்ப்பேன். பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்வேன். படிக்கும் போது எந்தவித சிந்தனையும் இன்றி கவனத்துடன் படித்தேன்.
எனக்கு கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் மிகவும் பிடிக்கும். நான் தற்போது என்ஜினீயராக படிக்க இருக்கிறேன். வருங்காலத்தில் கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எனது ஆசை.
இவ்வாறு அவர் கூறினார்.
மகிழ்ச்சி கடலில் தள்ளிவிட்டாள்
மாணவியின் பெற்றோர் கூறுகையில், “எங்கள் மகள் அதிக மதிப்பெண் பெறுவாள் என நினைத்து இருந்தோம். ஆனால் மாநில அளவில் 3-வது இடத்திற்கு வந்து எங்களை மகிழ்ச்சி கடலில் தள்ளிவிட்டாள். இந்த சாதனை படைக்க உதவிய பள்ளி நிர்வாகிகளுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என்றனர்.
பள்ளி தாளாளர் டாக்டர் கே.வாசுதேவன் கூறும்போது, “எங்கள் பள்ளியில் மாணவ- மாணவிகள் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக நாங்கள் பல்வேறு கட்ட பயிற்சிகளை தருகிறோம். நித்யா, அதிக மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 3-வது இடம் வந்து எங்கள் பள்ளிக்கு பெருமை சேர்த்ததற்கு பாராட்டுகிறோம்” என்றார்.
மேலும் இந்த பள்ளியை சேர்ந்த மாணவி கார்த்திகா, 4 பாடங்களில் 200-க்கும் 200 எடுத்திருந்தார். அவரையும் சக மாணவ-மாணவிகள் பாராட்டினார்கள்.

சந்திரபாடி பத்திரகாளியம்மன் கோயில் தீமிதி விழா கோலாகலம்

தரங்கம்பாடி : தரங்கம்பாடி அருகே உள்ள சந்திரபாடி மீனவர் கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோயில் தீமிதி விழா நடைபெற்றது. 
இக்கோயில் தீமிதி உற்சவம் கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. முக்கிய விழாவான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது.  இதில் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் ஆண்களும் பெண்களும் கோயிலுக்கு முன்புறம் அமைக்கப்பட்டு இருந்த அக்னிகுண்டத்தில் இறங்கி வந்து அம்மனை வழிபட்டனர். சிலர் தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்தபடி அக்னியில் நடந்து வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தீமிதி விழாவை தொடர்ந்து அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை மீனவர் பஞ்சாயத்தார்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர். 

முல்லை பெரியாறு தீர்ப்பு பொறையாரில் அதிமுகஇனிப்பு வழங்கி மகிழ்ச்சி

தரங்கம்பாடி, : முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர் த்த தமிழகத்தின் கோரிக் கையை ஏற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அதிமுகவினர் பொறையார் கடை வீதியில் இனிப்பு வழங்கியும் வெடிவெடித்தும் கொண்டாடினர்.
பொறையார் கடைவீதியில் பூம்புகார் எம்எல்ஏ. பவுன்ராஜ் தலைமையில்  பேரூராட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தரங்கம்பாடி வீட்டு கட்டும் கூட்டுறவு கடன் சங்க  தலைவர்  மாசிலாமணி, பேரூ. உறுப்பினர்கள் விஜயகுமார், வீரசேகர், மாறன், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கடை கடையாக சென்று இனிப்பு வழங்கினர். முன்னதாக பழைய பேருந்து நிலையம் எதிரே வெடி வெடித்து கொண்டாடினர்.

மருத்துவம், பொறியியல் அட்மிஷன் கட்ஆப் மதிப்பெண் உயர்கிறது...

சென்னை: பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் மற்றும் சென்டம் எண்ணிக்கை அதிகரிப்பால், பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பில் சேர கட்ஆப் மதிப்பெண் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பிளஸ்2 தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி முடிவுற்றது. இதில், 8 லட்சத்து 21 ஆயிரத்து 671 மாணவ, மாணவிகள் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதினர். இதில், 7 லட்சத்து 44 ஆயிரத்து 698 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள 554 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 70 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதில் 1 லட்சத்து 60 ஆயிரம் இடங்கள் கவுன்சலிங் மூலம் நிரப்பப்படும். மே 3ம் தேதி தொடங்கி, மே 20ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. இதற்காக சென்னையில் 4 மையங்கள் உள்பட தமிழகத்தில் 60 மையங்கள் இயங்கி வருகின்றன.

மேலும், தமிழகத்தில் 18 அரசு மருத்துவ கல்லூரிகளில் மத்திய அரசுக்கு ஒதுக்கீடு போக 1,823 இடங்கள் உள்ளன. ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரியில் மத்திய அரசு ஒதுக்கீடு போக 85 இடங்கள் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் உள்ள 11 சுயநிதி கல்லூரிகளில் 839 இடங்கள் அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 17 சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் 878 இடங்கள் அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான கவுன்சிலிங் விண்ணப்பம் வரும் 14ம் தேதி முதல் விநியோகிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் பிஇ படிப்புக்கு உரிய கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண்ணை 300க்கும் குறைவான மாணவர்களும், எம்பிபிஎஸ் படிப்புக்கு உரிய உயிரியல், வேதியியல், இயற்பியல்  பாடங்களில் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண்ணை 100க்கும் குறைவான மாணவர்களும் எடுத்திருந்தனர்.

அதேநேரம், இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில், பிஇ படிப்புக்கு உரிய கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண்ணை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும், எம்பிபிஎஸ் படிப்புக்கு உரிய உயிரியல், வேதியியல், இயற்பியல்  பாடங்களில் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண்ணை 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களும் எடுத்துள்ளனர். 

இதன்படி பார்த்தால், பிளஸ் 2 பொது தேர்வில் சென்ற ஆண்டைவிட, இந்த ஆண்டு மாணவர்களின் மதிப்பெண் அதிகரித்துள்ளது. அனைத்து பாடங்களிலும் சென்டம் எடுத்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்கு 1 மதிப்பெண்ணும், மருத்துவத்திற்கு 0.5 மதிப்பெண்ணும் கட்ஆப் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்தில் முதல் இடம் கடந்த ஆண்டை விட 4 மார்க் அதிகம்

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு தேர்வில் தமிழை முதன்மை பாடமாக எடுத்து படித்தவர்களில் நாமக்கல் மாவட்டம் வரகூராம்பட்டி வித்யாவிகாஸ் பள்ளியை சேர்ந்த மாணவர் எஸ்.ஜெயசூர்யா, நாமக்கல் கீரீன்பார்க் பள்ளி மாணவர் எஸ்.அபினேஷ் ஆகியோர் 1189 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்தனர். 

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் முதலாவதாக வந்த ஊத்தங்கரை மாணவி சுஷாந்தி 1193 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழை முதன்மை பாடமாக எடுக்காத ஈரோடு மாணவி விஷ்ணுபிரியா, திருச்சி மாணவி ஆனந்தி ஆகியோரும் தலா 1193 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு முதல் மதிப்பெண் 1189 ஆக இருந்தது. இந்த ஆண்டு 1193. கடந்த ஆண்டை விட 4 மதிப்பெண் கூடுதலாகி உள்ளது.

நாமக்கல் மற்றும் சேலத்தில் மறுவாக்குப்பதிவு முகவர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடியால் 50 நிமிடம் தாமதம்

சேலம்: சேலம் மற்றும் நாமக்கல் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. கடந்த 24-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் மின்னனுவாக்ககுப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு ஏற்பட்டது.  இதன் காரணமாக சேலம் பொன்னம்மா பேட்டை 213-வது வாக்குச்சாவடியிலும், இதே போன்று நாமக்கல் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு இன்று தொடங்கியது. ஆனால் 6 மணிக்கு வாக்குச்சாவடிக்கு முகவர்கள் வந்த போது அவர்களது பட்டியல் சரியாக இல்லை என்பதால் ஏஜெண்டுகளை உள்ளே அனுப்புவதில் தாமதம ஏற்பட்டது. இதனால் வாக்குச்சாவடி அலுவரை முற்றுகையிட்டு  வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனால் காலதாமதம் ஏற்படட்து. மாதிரி வாக்குப்பதிவு 6 மணி முதல் 7 மணிக்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். மாதிரி வாக்குப்பதிவு தொடங்குவதிலேயே காலதாமதம் ஏற்பட்டது.  இதனால் சுமார் 50 நிமிடத்திற்கு மேலாக வாக்குப்பதிவு  தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு 7.50-க்கு தான் தொடங்கியது. இந்த வாக்குச்சாவடியில் 746 வாக்காளர்கள் மொத்தம் உள்ளனர். 

கடந்த 24-ம் தேதி நடந்த தேர்தலில் 74 சதவீத வாக்குகள் பதிவாகின. ஏற்கனவே அவருக்கு ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டிருந்ததால் தற்போது நடு வரலில் மை வைக்கப்பட்டு வாக்குகளை செலுத்தி வருகின்றனர். 

புதன், 7 மே, 2014

நாகையில் நடந்தது சிங்கப்பூருக்கு சைக்கிளில் செல்ல வீரர், வீராங்கனைகள் தேர்வு

நாகை,:சைக்கிளிலேயே சிங்கப்பூருக்கு செல்வதற்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு நேற்று நாகையில் நடைபெற்றது.  
நாகை டேக்வாண்டோ சங்கம், தமிழ்நாடு சிறப்பு ஒலிம்பிக் சங்கம் ஆகியவற்றின் சார்பில் நாகப்பட்டினத்திலிருந்து சீனா வழியாக சிங்கப்பூருக்கு சைக்கிளில் செல்ல உள்ள னர். இதற்காக 15 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கடந்த 45 நாட்களாக சைக் கிள், ஓட்டம் உள்ளிட்ட உடற்திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டது.  காடம் பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று ஆட்கள் தேர்வு நடைபெற்றது. இதில் நெக்கால்டு இராஸ் (வயது 26), விக்னேஷ் (19), சிராஜு தீன் (19), திவ்யா (19), ஐஸ் வர்யா (19) ஆகியோரை தமிழ்நாடு சிறப்பு ஒலிம்பிக் சங்க இயக்குனர் தேவசகாயம் தேர்வு செய்தார். இக்குழுவினர் வருகிற ஜுன் மாத இறுதியில் சைக்கிள் பயண த்தை தொடங்க இருப்பதாகவும், 3 மாதத்தில் சிங்கப்பூரை சென்று அடைய இருப்பதாகவும், இக்குழுவிற்கு தானே தலைமையேற்பதாகவும் நாகை டேக் வாண்டோ சங்க தலைவர் நசீர் அலி தெரிவித்துள்ளார். 

காரைக்காலில் பைக் மீது பஸ் மோதி வாலிபர் பரிதாபபலி

காரைக்கால், : காரைக்காலில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் மீது பஸ் மோதி வாலிபர் பலியானார்.
காரைக்காலை அடுத்த தமிழகப் பகுதியான தரங்கம்பாடியைச் சேர்ந்தவர் சுந்தரம்.இவரது மகன் அஸ்வின்குமார்(18). இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் தினேஷ் என்பவருடன், காரைக்காலுக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். காரைக்கால் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகில் வந்தபோது, சிதம்பரத்தில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த தமிழக அரசு பேருந்து இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது  மோதியது. இதில் இருவரும் தூக்கியெறியப்பட்டனர். இதில் ரோட்டில் விழுந்த அஸ்வின்குமார் மீது பஸ் சக்கரம் ஏறியதில், அதே இடத்தில் உடல் நசுங்கி பலியானார். தினேஷ் படுகாயம் அடைந்தார்.
இது குறித்து காரை க்கால் நகர போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தினேஷை காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பஸ் டிரைவர் திருவையாறைச் சேர்ந்த வளையாபதியை தேடி வருகின்றனர்.

மக்களவைத் தேர்தலுக்கான 8-வது கட்ட வாக்கு பதிவு தொடங்கியது.

  1. Lok Sabha elections - the eigth phase of voting began.மக்களவைத் தேர்தலுக்கான 8-வது கட்ட வாக்கு பதிவு 7 மாநிலங்களில் உள்ள 64 தொகுதிகளில் தொடங்கியது. 8வது கட்ட மக்களவைத் தேர்தலில் 900 வேட்பாளர்கள்  களத்தில் உள்ளனர். சீமாந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதியிலும் வாக்குபதிவு தொடங்கியது. 25 மக்களவைத் தொகுதிகளில் 333 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். மேற்குவங்கத்தில் 6 மக்களவைத் தொகுதியில் 72 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பீகார் மாநிலத்தில் 7 தொகுதிகளில் 118 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  

காரைக்காலில் கொடூரம் பெண்ணை கடத்தி பலாத்காரம்

காரைக்கால் : திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், காரைக்கால் திருநள்ளாற்றை சேர்ந்த வாலிபர் மதனை காதலித்தார். மதனின் ஆசைவார்த்தையை நம்பி கடந்த 24ம் தேதி இரவு காரைக்கால் வந்தார். இளம்பெண்ணுக்கு துணையாக திருமணமாகி தனியாக வசிக்கும் அவரது தோழியும் காரைக்கால் வந்தார். காரைக்கால் பிரதான சாலையான பாரதியார் வீதியில் திருமணமான பெண்ணை காத்திருக்க வைத்துவிட்டு திருநள்ளாறுக்கு காதலர்கள் சென்றுவிட்டனர்.நீண்ட நேரம் தனியாக நின்ற பெண்ணை சில வாலிபர்கள் நோட்டமிட்டனர். அப்போது இரவாகி விட்டது. அந்த நேரத்தில் அந்த பெண்ணிடம் 3 வாலிபர்கள் தங்களை போலீசார் என்று அறிமுகம் செய்து கொண்டு விசாரித்தனர். இங்கு தனியாக நின்றால் ஆபத்து, காவல் நிலையத்திற்கு வா என்று கூறி லெமேர் வீதியில் உள்ள ஒரு வீட்டு மாடி அறைக்கு அந்த பெண்ணை அழைத்து சென்றனர். 

பின்னர் கூல்ட்ரிங்சில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். மாடியில் சத்தம் வந்ததை கவனித்த மேலும் 7 வாலிபர்கள் அங்கு சென்று பார்த்தனர். பின்னர் அங்கிருந்த 3 வாலிபர்களை அடித்து விரட்டினர். இதையடுத்து இங்கே வந்து மாட்டி கொண்டாயே என்று ஆறுதலாக பேசி, எங்களுடன் வா உன்னை பாதுகாப்பான இடத்தில் விடுகிறோம் என்று தருமபுரம் சுடுகாட்டு பகுதிக்கு கடத்தி சென்று அங்கு அனைவரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர். பிறகு அவர்களின் நண்பர்கள் சிலருக்கு தகவல் தெரிவித்து மேலும் 5 பேரை வரவழைத்தனர். அவர்கள் அந்த பெண்ணை திருநள்ளாறு பகுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்து விட்டு அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

மறுநாள் காலையில் காதல் ஜோடிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு காரைக்கால் நகர போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தார். அப்போது பணியில் இருந்த எஸ்.ஐ வெங்கடாஜலபதி, ஏட்டு சபாபதி ஆகியோர் புகாரை பதிவு செய்யாமல் கட்ட பஞ்சாயத்து செய்தனர்.இதுபற்றி அறிந்ததும் காவல் நிலையத்துக்கு வந்து மாவட்ட எஸ்.எஸ்.பி மோனிகா பரத்வாஜ் விசாரணை நடத்தினார். இதையடுத்து புதுச்சேரி ஐஜி காமராஜ் சம்பந்தப்பட்ட 2 போலீசாரையும் தற்காலிக பணிநீக்கம் செய்தார். இதையடுத்து, கற்பழிப்பு வழக்கில் தொடர்புடைய பெண்ணுக்கு முதலுதவி செய்து அவர் கூறிய இடம் மற்றும் அடையாளங்களை வைத்து ஒரு சிறுவன் உட்பட 11 பேரை நகர போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.