வியாழன், 7 ஆகஸ்ட், 2014

நீ என்னை நன்கு ஏமாற்றுகின்றாய் என தெரிந்தும்
இறைவனிடம் வேண்டுகிறேன்...
நீ வேறு எங்கும் ஏமாந்து விட கூடாது என்று...!

நான் விலகி இருந்த போது

நான் விலகி 
இருந்த போது 
நீ நெருங்கி வந்தாய் 
இப்பொழுது
நான் நெருங்கி 
வருகிறேன் 
நீ விலகி
செல்கிறாய்
ஆரம்பத்திலேயே
நீ விலகி
நடந்திருந்தால்
இவளவு அன்பை
பொழிந்திருக்க
மாட்டேனடா

காதல் கவிதைகள்

அழுவதற்கு உன் மடிவேண்டும் 
அணைப்பதற்கு உன் கைகள் வேண்டும்
அள்ள அள்ளக் குறையாத உன் அன்பு வேண்டும்
எல்லாவற்றையும் விட
எனக்கு நீ வேண்டும்
உன் அன்புக்காய்
ஏங்கும் நானும்
அநாதையில்லை என்று
சொல்ல நீ எனக்கு என்றும் வேண்டும்...!