செவ்வாய், 23 செப்டம்பர், 2014

இளம் நடிகைகளுக்கு எதிராக மனு ??!!


தமிழ் சினிமாவில் 18 வயது கூட நிரம்பாத இளம்பெண்கள் நடிப்பதை தடை செய்ய வேண்டுமென, நேற்று சென்னை உயர் நீதி மன்றத்தில் முத்துலக்ஷ்மி என்ற பெண், பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். பெண்களை தவறாக சித்தரிக்கும் இந்த விடயத்திற்கு உடனடியாக ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த மனுவில் இளம் பெண்கள், 18 வயது கூட நிரம்பாத பெண்கள் தமிழ் சினிமாவில் நடிக்கின்றனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம். இவர்கள் கவர்ச்சியாகவும், முத்தக்காட்சிகளிலும் நடிக்க வைக்கப்படுகின்றனர். குறிப்பாக லக்ஷ்மி மேனன், துளசி, கார்த்திகா, போன்றோர் பராயம் வராத இளம்பெண்கள், இவர்கள் இவ்வாறு நடிக்க வைக்கப்படுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 


இதற்கு முதல் இவ்வாறான ஒரு மனு தாக்கல் செய்யப்படவில்லை, இது தான் முதல் தடவையாகையால், திரையுலகினரின் கவனத்தை இது ஈர்த்துள்ளது. இவர் பெயர் குறிப்பிட்ட நடிகைகளில் பிரபல நடிகை ராதாவின் இரு மகள்களும் அடங்குகின்றனர். 
மேலும் முத்துலக்ஷ்மி பொது நலம் கருதியே இதனை செய்தார் என தெரிவித்துள்ளார். இந்த மனு சென்னையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது. 
 
நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது நடப்பதே நடக்குமா எனப் பார்ப்போம்..

Facebook முதலிடத்தில்...

இப்போதைய நிலையில் சமூக வலைத்தளங்கள் மக்கள் மனங்களை ஆட்கொண்டிருக்கிறது.
இதன் பின்னால் அதிகமானவர்கள் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் இதனை யாராலும் மறந்து அன்றாட வேலைகளை செய்யமுடியாதுள்ளது. 

இப்படியிருக்கின்ற போது இதற்கு அண்மைய நாட்களில் இளைஞர்கள் பலர் அடிமையாக மாறிவிட்டமையும் உண்மையானதே . நீங்கள் பயன்படுத்தும் இவ்வாறான தளங்கள்,APPS பற்றிய ஆய்வுகள் அடிக்கடி வெளிவருகின்றன. 

இந்தநிலையில் அமெரிக்காவை சேர்ந்த இணையத்தை ஆய்வு செய்கின்ற ComScore என்ற நிறுவனம் ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளது. 
ஒரு மாதத்தில் எந்த APPS அதிக பயனர்களால் பயன்பாட்டில் உள்ளது என்பதே அதுவாகும். 

அதன்படி அந்த பட்டியலில் Facebook முதலிடத்தை பிடித்துள்ளது.
குறித்த ஒரு மாதத்தில் 115 மில்லியன் பயனர்களால் இந்த APPS பயன்படுத்தப்படுகிறது என்று அந்த கணிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

Youtube -83.4 மில்லியன் பயனர்களாலும் ,Google Play App -72 மில்லியன் பயனர்களாலும் பயன்பாட்டில் உள்ளது. 
இந்த பட்டியலில் 4 ம் இடத்தை பிடித்துள்ள Google Search -70 மில்லியன் பயனர்களாலும் Google Maps 64.5 -மில்லியன் பயனர்களாலும் பயன்படுத்தபடுகிறது. Gmail -60 மில்லியன் பயனர்களாலும் ,புகைப்படப் பிரியர்களின் விருப்பிற்குரிய தளமான Instragram 46.6 மில்லியன் பயனர்களாலும் பயன்படுத்தப்பட்டு அடுத்த இடத்தை பிடித்துள்ளதன. 
Apple maps,Yahoo Finance ஆகிய APPS அடுத்த இடங்களையும் பிடித்துள்ளன. 

இதேவேளை இன்னுமொரு கருத்துக் கணிப்பில் வேலை செய்வதற்கு மிக சிறந்த இடங்கள் என்கின்ற ஆய்வின் அடிப்படையில் Twiitter தளம் முதலிடத்தை பிடித்துள்ளது. கூகிள் நிறுவனம் இரண்டாம் இடத்திலும் Facebook நிறுவனம் 3 ம் இடத்தையும் பிடித்துள்ளன. 

இலவச உணவு,யோகா மற்றும் கணக்கற்ற விடுமுறை ஆகியனவே Twitter நிறுவனம் வேலை செய்வதற்கான மிக சிறந்த நிறுவனம் எனும் கணிப்பில் முதலிடம் பிடிப்பதற்கான காரணமாகும்

அஜித்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்


தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி இடம் பிடித்து, ரசிகர்களைத் தன் வசப்படுத்தி, அவர்களால் செல்லமாக 'தல' என அழைக்கப்படும் அஜித்திற்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னர், இனம்தெரியாத நபர் ஒருவரால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது, 
 
இதனையடுத்து ஒன்றரை மணித்தியாலத்திற்கு மேல் பொலிசார் சோதனை செய்து பார்த்து வெடிகுண்டு இல்லை என்பதை உறுதிசெய்திருந்தனர். இது தொடர்பில் மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில், மிரட்டல் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரி, மதுரையிலுள்ள 'தல' யின் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். ' வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்....' என்று ஆரம்பிக்கும் இந்த சுவரொட்டிகள் அந்த பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
இதே மாதிரி ஒரு வெடிகுண்டு விஷயம் தான் 'பாட்ஷா' திரைப்படத்தின் வெற்றி விழாவின் பின்னர் ரஜினியை அரசாங்கத்தோடு மோத வைத்து, அரசியல் சாயத்தை ரஜினி மேல் பூச ஆரம்பித்தது.
இப்போது அமைதியாக இருக்கும் அஜித்...
ஏதோ பார்த்து நடந்துகொள்ளட்டும்.

தல 55 - புத்தம்புதிய படங்கள்

கொடூரக் காதல் கடி - உதட்டைத் துண்டாக்கிய காதலன் - பகீர் சம்பவம்


வரதட்சணை கொடுமை, மனைவியை துன்புறுத்தல், அடித்தல், சூடு வைத்தல் என பல கொடுமைகளைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் இப்படி ஒரு கொடுமை ஐக்கிய ராஜ்ஜியத்தில் நிகழ்ந்துள்ளது, இது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. 
 
Chanttelle Ward என்னும் 18 வயது பெண்ணின் 23 வயதான காதலன் Rhys Culley, அந்த பெண் மீது சந்தேகம் கொண்டதாலும், அவள் மேலுள்ள பொறாமையின் காரணமாகவும் , அதையும் விட அவள் மீது மற்றவர்கள் ஆசை கொள்ளக் கூடாது என்ற பாதுகாப்பின்மை உணர்வினாலும், முத்தமிடுவதை போல் அருகில் சென்று அப்பெண்ணின் மேலுதட்டை கடித்து துப்பியுள்ளார். 

    

 


ஆழமான இந்தக் கடியானது மிக ஆக்ரோஷமான ஒன்று என வைத்தியர்கள் சொல்லியுள்ளார்கள்.
 
இந்த அமானுஷ்ய செயல் தொடர்பில்; Chanttelle பொலீசிடம் முறையிட்டதாகவும், அந்த இளைஞன் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 

விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி -'கத்தி' பற்றி

சர்ச்சைக்கு மேல் சர்ச்சையில் சிக்கி தவிக்கும் கத்தி திரைப்படம் வருமா..? வராதா..? என்று காத்திருக்கும் விஜய் ரசிகர்களுக்கு இது காதில் தேன் வார்த்தது போல,சந்தோசமான செய்தி என்று தான் சொல்லணும்.

                 ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தநிலையில் இளையதளபதி விஜய் நடிக்கும் படம் என்பதால் இந்தப்படத்தின் பாடல்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பும், இசை உரிமையை வாங்குவதற்கான போட்டியும் அதிகரித்திருக்கிறது.

                                                இந்த போட்டியில், இந்தியில் முன்னணி நிறுவனமான "Eros" கத்தி படத்தின் இசைக்கு பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது. இது வரையில் தமிழில் மாற்றான், கோச்சடையான் படங்களை மட்டுமே வெளியிட்டு வந்த இந்த நிறுவனம், முதன்முறையாக தமிழ்த்திரையுலகில்  இசை வெளியீட்டிலும் கால் பதித்திருக்கிறது. 

      இந்தநிலையில் தற்போது இந்த நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளராக பொறுப்பேற்றிருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் இந்த சந்தோசமான செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

                                   செப்டம்பர் மாதம்(இம்மாதம்) 18ம் திகதி இந்தப்படத்தின் இசை வெளியீடு  இடம்பெறும் எனவும் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறார். அத்தோடு இன்னுமொரு இனிக்கும் விசயத்தையும் சொல்லியிருக்கிறார் ஐஸ்வர்யா. 
                                          லைக்கா நிறுவனத்தை கழற்றிவிட்டு "Eros" நிறுவனத்தின் மூலம் கத்தி படத்தை வெளியிட பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.  

#எது எப்டியோ.... யார் குத்தினாலும் அரிசி ஆனால் சரி எண்டது  போல, யார் வெளியிட்டாலும் படம் வந்தா சரி எண்டு ரசிகர்கள் முணுமுணுக்கிறது எங்களுக்கும் கேட்குது....#

இறந்த மூதாதையருக்கு புத்தாடை !!! - அதிர்ச்சி தரும் நினைவுகூரல்

நம்மோடு வாழ்ந்து நம்மை விட்டும், இவ்வுலகத்தை விட்டும் பிரிந்த நம் உறவுகளுக்காக நாம் என்ன செய்கிறோம்?? 

ம்ம் யோசித்து பார்த்து நாம் சொல்லும் பதில்....
பிரார்த்தனை செய்கிறோம், தான தர்மங்கள் செய்கிறோம், வருடா வருடம் அவர்கள் நம்மை விட்டு பிரிந்த நாளை உறவுகளோடு இணைந்து நினைவு கூறுகிறோம், முடிந்தால் அவர்களின் கல்லறைக்குச் சென்று ஒரு மெழுகுவர்த்தியோ, அல்லது ஒரு தீபமோ ஏற்றிவைப்போம். ஆம் நாம் இவற்றைத் தான் செய்கிறோம். 
ஆனால் மரித்தவரை மிக வித்தியாசமாக நினைவு கூரும் இவர்களைப் பாருங்கள்.... இந்தோனெஷியாவின் டொராஜா எனும் கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் தங்கள் மூதாதையரை எவ்வாறு நினைவு கூறுகிறார்கள் தெரியுமா? ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் தங்கள் மரித்த உறவுகளின் கல்லறைகளுக்குச் சென்று அவர்களின் உடல்களை எடுத்து சுத்தம் செய்து, புது ஆடைகளை அணிவிக்கின்றனர், குழந்தைகள் எனின் புது ஆடைகள் அணிவிப்பதோடு, விளையாட்டு பொருட்களையும் அருகில் வைத்து மீண்டும் புதைக்கிறார்கள். 

இதனை இவர்கள் வழக்கப்படுத்தி கொண்டுள்ளனர். வியக்கவைக்கும் இந்த பழக்கவழக்கத்தை இவர்கள் தங்களின் கடமை என கருதுகின்றனர். இந்த படங்களையும் பாருங்கள்...

சிறுவர்களுடன் விளையாடும் ஒபாமா மாமா

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எல்லோரோடும் சகஜமாக பழகுபவர். சிறுவர்கள் என்றால் இவருக்கு மிகவும் பிடிக்குமாம்......
இவர் குழந்தைகளோடு செய்த செல்லச் சேட்டைகளை வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக பிளிக்கர் தளத்தில் பதிவேற்றியுள்ளது. அவற்றுள் சில உங்களுக்காக..... 
 

 

 

அஜித் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ள அனுஷ்கா

தமிழ் சினிமாவில், தற்போது வெளிவரவிருக்கும் மாஸ் ஹீரோக்களின் படங்கள் பற்றியே தான் பேச்சாக இருக்கும் நிலையில், நம்ம தல அஜித்நடிக்கும் புதிய படத்தில்,நாயகிகளாக திரிஷா மற்றும் அனுஷ்கா ஆகியோர் நடிக்க,இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் இடம்பெற்று வருகின்றது.  . இதன் வெளியீட்டுக்கான வேலைகளும், முன்னோட்ட காட்சி அமைக்கும் பணிகளும் தொழில்நுட்பகுழுவினால் வேகமாக மேற்கொள்ளபடுகின்றது. 

                                                               இந்தநிலையில் தான், தல ரசிகர்களை கோபப்படுத்தும் விதமாக, அஜித் உடன் அடுத்த படத்தில் நடிக்க மாட்டேன் என சொல்லியிருக்கிறார் இந்த படத்தின் நாயகி அனுஷ்கா.

                  அண்மையில் இந்த படத்தின் இயக்குனர் கெளதம்மேனன் ஆங்கிலப்பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளிக்கும்போது, இந்தப் படத்தில் "தல" இன் கேரக்டர் எல்லாரும் பேசும்படியாக இருக்கும் என்றும், அதனால் இந்த படத்துடன் அவரது கேரக்டரை முடிக்காமல் அஜித்தின் அனுமதியுடன், இதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்கும் எண்ணத்தில் இருப்பதாகவும் கூறியிருந்தார். 

                                  இந்த செய்தி வெளியான நிலையில் அனுஷ்கா அவசர அவசரமாக தனது மறுப்பை வெளியிட்டிருக்கிறார்.
அடுத்த பகுதியில் அஜித்துடன் தான் நடிக்க மாட்டேன் என்று பட்டுத் தெறித்ததுபோல சொல்லிவிட்டார் அனுஷ்கா.

இந்த நிலையிலேயே அஜித் ரசிகர்கள் ரொம்பவும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளார்களாம்.

ஆனால்,  இதுவரை தான் ஒப்பந்தமாகியிருக்கும் படங்களை  முடித்து கொடுத்ததும், திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் அதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து கொடுக்க முடியாது எனவும் தன்னிலை விளக்கம் சொல்லியிருக்கிறார் நாயகி அனுஷ்கா.    

தல ரசிகர்கள் அமைதியாகினார்களா?

4 வருடங்களுக்கு பிறகு ஜி.வியுடன் ஸ்ரேயா கோஷல்


தலைப்பை பார்த்து தப்பு தப்பா கணக்கு போடும் அன்பர்களே!
அப்பிடி இப்பிடி .. அந்த மாதிரி இந்த மாதிரி எல்லாம் யோசிக்கிறதை நிறுத்துங்கப்பா. 

விஷயம் இதுதான், பொறுமையா படிங்க புரியும்!
கடந்த 2010இல் ஜி.வியுடன் ஸ்ரேயா கோஷல் இணைந்து அங்காடித்தெரு படத்தில் வரும் ' உன்பேரைச் சொல்லும் போதே' பாடலை நமக்கு கொடுத்திருந்தார். 
அதன்பிறகு, இந்த குயிலும் பிஸி, ஜி.வியும் பிஸி!
இப்பொழுது இதே டீம் மீண்டும் களமிறங்கி இருக்கிறது. 
கார்த்தி நடித்து வரும் கொம்பன் படத்தில் ஜி.வியின் இசையில் ஒரு பாடலும் , ஜி.வி பிரகாஷ் தானே இசையமைத்து நடித்துவரும் டார்லிங் படத்தில் ஒரு பாடலுமாய் இரு பாடல்களை நான்கு வருடங்கள் கழித்து ஜி.வியின் இசையில்  பாடி இருக்கிறார் ஸ்ரேயா கோஷல் !
அத்தோடு, இருவரும் இணைந்து ஒரு செல்பியும் க்ளிக் பண்ணிருக்காங்க.. 

இதை மகிழ்ச்சியுடன் GV பிரகாஷ் தனது ட்விட்டரில் பகிர, குயில் ஷ்ரேயாவும் பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

நீதிமன்றம் சென்ற ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தானே நீதிமன்றத்துக்கு சென்று ஒரு படத்துக்கு தடை விதிக்க சொல்லியுள்ளார். 
அது ஒரு ஹிந்தி படம்..

‘மே ஹூன் ரஜினிகாந்த்’ (நான் தான் ரஜினிகாந்த்) என்னும் ஹிந்தி படம் ஆகும். 
ரஜினிகாந்த் பெண் பித்தர் போலவும், பாலியல் தொழிலாளிகளுடன் தொடர்பு உள்ளவர் போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் வந்துள்ளது. 
இது ரஜினிகாந்தின் நல்ல பெயரை கெடுக்கும் என்று அவர் நினைக்கிறார். 
வட இந்திய ஊடகங்கள், இணையங்கள், சமூக வலைத்தளங்களில்ரஜினி பற்றிய கேலிகள், நகைச்சுவைகள் பரவலாக இடம்பெறுவதுண்டு.
ஹிந்தி திரைப்படங்களிலும் ரஜினியைக் கிண்டல் செய்வதும் உண்டு.

எனினும் இப்போது தான் முதன்முறையாக ரஜினி இப்படி ஒரு நடவடிக்கை எடுத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை பெற்று தக்க வைப்பதற்காக அவர் 35 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் தனது திறமையை நிருபித்து உள்ளார். இப்படிபட்ட தனது உழைப்பை இந்த படம் வீணாக்கி விடும் என்று ரஜினிகாந்த் நினைக்கிறார். 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த படத்தை இந்த மாதம் 25 ஆம் தேதி வரை வெளியிட தடை விதிக்கிறேன் என்று தீர்ப்பு கூறினார்

ஐ படத்தை நட்புக்காக விளம்பரம் செய்யும் நடிகர் - தமிழ் சினிமாவின் ஆச்சரியம்

நடிகர் சூர்யா தனது நண்பர் விக்ரமின் ஐ பட போஸ்டரை தனது வாட்ஸ் ஆப் - Whatsapp ப்ரொபைல் படமாக வைத்துள்ளார். 

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஐ படத்தின் ட்ரெய்லரை யூடியூப்பில் ஏராளமானோர் பார்த்துள்ளனர், பார்த்து வருகின்றனர். 

ஐ பட டிரெய்லர், பாடல்கள் பற்றி தான் ஃபேஸ்புக், ட்விட்டரில் ரசிகர்கள் பேசி வருகிறார்கள். 

இப்போது மற்றொரு முன்னணி நடிகரான சூர்யாவின் 'வாட்ஸ்ஆப் ப்ரொபைல்' படம் என்ன தெரியுமா? I ADVERTISEMENT !!!

இந்நிலையில் சூர்யாவின் வாட்ஸ்ஆப் ப்ரொபைல் படம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காரணம் சூர்யா தனது ப்ரொபைல் படமாக ஐ படத்தின் போஸ்டரை வைத்துள்ளார். சூர்யாவும், விக்ரமும் நெருங்கிய நண்பர்கள் என்பதை அனைவரும் அறிவர். எனவே தனது நண்பரின் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் அவர் இதை செய்துள்ளார். 

ஐ பட போஸ்டரை மட்டும் சூர்யா பயன்படுத்தவில்லை. மேலும் ஐ படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

ஐ என ஆச்சரியப்பட்டுக்கொண்டே இன்னொரு விஷயத்தையும் நினைவுபடுத்திக் கொள்வோம்...
சூர்யா இன்னமும் ஷங்கரின் இயக்கத்தில் எந்தவொரு படத்திலும் நடிக்கவில்லை.
(இது எப்பிடி இருக்கு?)

குடிசை வீட்டு கோடீஸ்வரர் !!!

கொடுக்க மனசு உள்ளவர்களுக்கு கையில் பணம் இல்லை, கை நிறைய பணமுள்ளவர்கள் பலருக்கு கொடுக்க மனசு இல்லை. மாதாந்த வருமானத்தைக் கொண்டு, வாழ்க்கை வண்டியை ஓட்டிக்கொடிருப்பவர்கள் மத்தியில், உள்ளவரிடம் வாங்கி இல்லாதவருக்கு கொடுக்கும், குடிசை வீட்டு கோடிஸ்வரர் இவர்.

சீனாவில் பீஜிங் நகரிலுள்ள புகையிரத நிலையமொன்றில் யாசகராக இருக்கும் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், மாதம் ஒன்றிற்கு, இந்திய ரூபாவில் 99,000 ரூபாய் உழைக்கிறார் எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

இவர் யாசகம் செய்யும் பணத்தை, மாத இறுதியில் பிலாஸ்டிக் பையில் போட்டு தபால் நிலையத்திற்கு கொண்டு வந்து கொட்டி எல்லா பணத்தையும் தபால் நிலைய ஊழியர்களுடன் எண்ணி, முழுப்பணத்தையும் தன் சொந்த ஊருக்கு அனுப்புகிறார். தன் ஊரில் தனக்கென ஒரு வீடு கட்டியுள்ள இவர், அது தவிர 3 கல்லூரி மாணவர்களின் படிப்பு செலவுகளையும் கவனித்து வருகிறார். தன்னிடமுள்ள பணத்தை அப்படியே ஊருக்கு அனுப்பும் இவரின் மனசை பாருங்கள்.